R1809 (page 111)
மாற்கு 15:1-15; மத்தேயு 27:1-30; லூக்கா 23:1-25; யோவான் 18:28-40; 19:1-16
“”இயேசுவோ, அப்பொழுது உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.”” மாற்கு 15:5
ஆலோசனைச் சங்கத்தாருடைய வழக்கமான முறைகளை மீறி கூட்டம் கூடின காரியமானது, சூரியன் விடிவதற்கு முன்னதாகச் சட்டப்பூர்வமான தீர்ப்பை வழங்கிட முடியாது; ஆகையால் அவர்கள் காலையில் கூட்டம் கூடினதும், கலந்து ஆலோசனை பண்ணினதும், இரவில் அவர்கள் எடுத்திட்ட முடிவுகளுக்கு அதிகாரப் பூர்வமாய் உறுதிப்படுத்தும் நோக்கத்திற்கு மாத்திரமாகவே கூடிய கூட்டமாகும். அவர்கள் இயேசுவைக் கட்டி, பிலாத்துவினிடத்திற்கு வந்தார்கள்; மேலும், தங்களுடைய நோக்கம் நிறைவேற்றப்படத்தக்கதாக முழுக் கூட்டத்தினரும் இயேசுவோடுகூட பிலாத்துவினிடத்திற்கு வந்தார்கள் (லூக்கா 23:1).
வசனங்கள் 2-5. ஆலோசனைச் சங்கத்தார், தாங்கள் நியாயப்பிரமாணத்திற்காக மிகவும் வைராக்கியம் பாராட்டுபவர்களெனத் தங்களைக் குறித்துக் காண்பித்திட விரும்பின ஜனங்களிடம், தாக்கத்தை ஏற்படுத்தத்தக்கதாக தேவதூஷணம் எனும் குற்றத்தை முன்வைத்ததிலும், மற்றும் தங்களுடைய மதக் கருத்துகளையெல்லாம் பொருட்படுத்தாத ரோம ஆளுநராகிய பிலாத்துவின் முன்னதாக முற்றும் வேறானதும், பொய்யானதுமான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததிலும் ஆலோசனை சங்கத்தாருடைய பொல்லாப்பான நுண்ணறிவு மிகவும் தெளிவாய் வெளிப்படுகின்றது. பிலாத்துவுக்கு முன்னதாகக்கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டானது, இராஜ துரோகம் பற்றின குற்றச்சாட்டாகும்; இது ரோம அதிகாரிகளுக்குக் கோபத்தையும், எரிச்சலையும் தூண்டக்கூடிய ஒரு குற்றச் சாட்டாகும். இயேசு கலகத்தைத் தூண்டிவிடுவதாகவும், வரிப்பணம் செலுத்துவதைத் [R1810 : page 111] தடைப்பண்ணுவதாகவும், யூதர்களுடைய இராஜா எனும் பட்டத்தைச் சூட்டிக்கொண்டதாகவும், இப்படியாக இராயனுக்கும் மற்றும் ரோம அரசாங்கத்திற்கும் எதிராக சதித்திட்டம் பண்ணுவதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.
இதிலுள்ள இரண்டாம் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானதாக இருப்பினும் (மத்தேயு 22:21), மற்ற இரண்டும் கொஞ்சம் உண்மையானது போன்று இருந்தது; மற்றும், இவைகளுடன் அநேகம் முக்கியமற்றத் தனித்தனி குற்றச்சாட்டுகளும் சேர்த்துக்கூறப்பட்டது. ஆனால் இவைகளில் எவற்றிற்கும் கர்த்தர் உத்தரவு சொல்லவில்லை; இப்படியான அபாயமான சூழ்நிலையில், கர்த்தர் தம்மைத் தற்காத்துக்கொள்ள எந்த முயற்சியும் எடுக்காதது குறித்துப் பிலாத்து ஆச்சரியமடைந்தார்.
லூக்கா 23:6-14 வரையிலான வசனங்கள். பொறாமையின் காரணமாகவே தன்னுடைய இந்தக் குற்றமற்றக் கைதிக் கையளிக்கப்பட்டுள்ளார் என்பதைப் பிலாத்துக் கண்டுபிடித்து, தன்னுடைய இந்தக் குற்றமற்றக் கைதியை விடுவிப்பதற்கு எடுத்திட்ட பல்வேறு பிரயாசங்களானது, மதத்தலைவர்களினால் தூண்டிவிடப்பட்டு, இயேசு மரிக்க வேண்டுமெனக் கூக்குரலிடும் மூர்க்கத்தனமான மக்கள் கூட்டத்திற்கு முன்பாக பயனற்றதாகக் காணப்பட்டது; இயேசுவைப் பற்றின நினைவுகள் அவமானத்தினால் மூடப்படத்தக்கதாக/ புதைந்துப்போகத்தக்கதாக, மிகவும் அவமானமான மற்றும் கொடூரமான முறையாகிய சிலுவையில் அறையப்படுதல் மூலமாக இயேசு மரிக்க வேண்டுமென, மதத்தலைவர்களால் தூண்டிவிடப்பட்ட ஜனக்கூட்டத்தார் கூக்குரலிட்டனர்.
லூக்கா 23:15-ஆம் வசனம். பின்னர் பிலாத்து, கொள்கைகளைக்காட்டிலும் விவேகமான நடத்தைக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தினால் தாக்கத்திற்குள்ளாக்கப்பட்டு, ஜனங்களைத் திருப்திப்படுத்த வேண்டுமென்று விரும்பி, இயேசு கசையடி அடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்படும்படிக்கு ஒப்புக்கொடுத்தார்; எனினும் அதே வேளையில் தனது கைதிக் குற்றமற்றவர் என்பதைத் தெரிவித்து, இந்த நீதிமானை அவர்களுக்குக் கையளித்த விஷயத்தில், தன்னுடைய குற்றமற்ற நிலையைத் தெரிவிக்கும் வண்ணமாக, தனது கைகளைத் தண்ணீரினால் கழுவினார். பிலாத்து ரோம அரசாங்கத்திற்கு எதிராக செயல்படுகின்றார் என்றும், ரோம அரசாங்கத்திற்கு எதிரான கலகங்களுக்கும், சதித் திட்டங்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதன் மூலம், இராயனுடைய நம்பிக்கைக்குத் துரோகம் புரிகின்றார் என்றும் இராயனுக்குத் தெரிவிக்கப்படுமெனக் கலக ஜனக்கூட்டத்தார், பிலாத்துவை மிரட்டுவது வரையிலும், பிலாத்து இயேசுவைக் காப்பாற்றும் தன்னுடைய பிரயாசங்களைக் கைவிடவில்லை. யோவான் 19:12-16; மத்தேயு 27:24,25