R4939 – இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4939 (page 457)

இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்

PREPARING FOR THE KINGDOM

லூக்கா 1:5-23

“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்.” – எபிரெயர் 11:6.

இன்றைய பாடத்தில் நாம் மீட்பரின் முன்னோடியும், அவரைக் குறித்து அறிவிக்கிறவருமாகிய யோவான் ஸ்நானன் பிறக்கும் வரையிலான காலப்பகுதியில், தேவன் கொடுத்திட்ட வாக்குத்தத்தங்களையும், தேவனுடைய செய்கைகளையும் (வழி நடத்துதல்களையும்) ஆராயப்போகிறோம்.

இயேசு பிறப்பதற்கு 4000 வருடங்களுக்கு முன்பாக, ஸ்திரீயின் வித்து, சர்ப்பத்தின் தலையை நசுக்கும் என்று தேவன் அறிவித்தார். உரைக்கப்பட்ட இந்தப் மறைப்பொருளானது, உலகத்திலுள்ள பாவமும், அதன் சகல தீமையான விளைவுகளும் ஏற்ற காலத்தில் அழிக்கப்படும் என்பதையும், இவைகளைத் தேவனுடைய வல்லமையானது, கீழ்ப்படியாத ஏவாளிடமிருந்து தோன்றிய ஓர் அருமையான குமாரன் வாயிலாக செய்யும் என்பதையும் சுட்டிக் காட்டுகின்றது என்பதை நாம் இப்பொழுது உணர்ந்துக் கொள்கின்றோம். இவ்வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலுக்குரிய அடையாளம் இல்லாமல், பல நூற்றாண்டுகள் கடந்தோடிவிட்டன. நம்முடைய இனமானது மிகுந்த சீர்க்கேட்டிற்குள்ளும், மிகுந்த அவநம்பிக்கையான நிலைக்குள்ளும் கடந்து போய்விட்டது. இப்படியாக இருக்கையில் சேத்தின் வம்ச வழியில் ஏனோக்கு பிறந்தார். “இவர் தேவனோடு சஞ்சரித்தார்,” மேலும் இவர் தெய்வீக வாய்த்தலமாகப் பயன்படுத்தப்பட்டு மற்றுமொரு தீர்க்கத்தரிசனத்தை உரைத்தார். அதாவது, “இதோ எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும் அவர்களில் அவபக்தியுள்ளவர்கள்… பரிசுத்தவான்களோடும் கூட கர்த்தர் வருகிறார் என்றும் முன்னறிவித்தார்” (யூதா 14,15).

உலகத்திற்கு மீண்டும் ஒரு புதிய நியாயத்தீர்ப்பின் வாய்ப்பைக் கொடுக்கப்போகிறதற்கான தேவனுடைய பெருந்தன்மையான/இரக்கம் நிறைந்த நோக்கத்தைக் குறித்து அவர் இன்னும் வெளிப்படுத்த சித்தம் கொள்வதற்குள், இன்னும் ஓராயிரம் வருடங்கள் கடந்துவிட்டது. இப்படியாக இருக்கையில் உலகத்திற்கான (சுவிசேஷத்தை) நம்பிக்கையைக் குறித்து இன்னும் வெளிப்படையாக/அதிகமாக தேவன் தம்முடைய நண்பனாகிய ஆபிரகாமுக்கு வெளிப்படுத்தினார். தேவன் ஆபிரகாமிடம் பூமியின் குடிகளை ஆசீர்வதிப்பதற்கான தம்முடைய நோக்கத்தையும், மனுக்குலத்தின் மீதான இவ்வாசீர்வாதம் ஆபிரகாமின் சந்ததி மூலமாகவே வரும் என்பதையும் அறிவித்தார். “பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” (ஆதியாகமம் 12:3).

ஆபிரகாமுக்கு அறிவிக்கப்பட்ட இவ்விஷயங்களைப் பரிசுத்தவானாகிய பவுல், முதலாம் சுவிசேஷ செய்தி என்றார்; காரணம், மற்றவர்கள் மூலம் அறிவிக்கப்பட்ட தீர்க்கத்தரிசனங்கள் மனிதனுக்குரிய மீட்பைத் தெளிவாகக் காட்டவில்லை. ஏனோக்கின் மூலம் கொடுக்கப்பட்ட விஷயங்கள் மனுக்குலத்திற்கு ஆசீர்வாதம் வரும் என்பதைத் தெளிவாகக் காட்டவில்லை. ஆனால் ஆபிரகாமின் மூலம் கொடுக்கப்பட்ட செய்தியோ மிகத் தெளிவாக இருந்தது; அதாவது, “உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும்” என்பதாகும் (கலாத்தியர் 3:8).

தேவன் தாம் கொடுக்கப்போகிற ஆசீர்வாதத்தை மாத்திரம் அறிவிக்காமல், தேவன் அதற்கு ஆணையிட்டும் கொடுத்தார் என்பதைப் பரிசுத்தவானாகிய பவுல் நமக்கு நினைப்பூட்டுகின்றார். தேவன் ஆணையிட்டுக் கொடுக்க வேண்டும் என்பது ஆபிரகாமுக்குத் தேவையில்லை. ஆபிரகாம் முழுமையாக விசுவாசித்தார். ஆனால் பரிசுத்தவானாகிய பவுல் சொல்வது போன்று தேவன் நமக்காகவே ஆணையிட்டுக் கொடுத்தார். இவ்வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலானது நீண்டகாலம் தாமதிக்கப்போவதினால், இதன் மேல் விசேஷித்த கவனம் கொண்டுள்ள நாம், தெய்வீக ஏற்பாட்டில் ஏதோ சில மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டதோ என்று அஞ்சக்கூடும். ஆகையால், “நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் (நற்செய்திகள், வாக்குத்தத்தங்கள்) பற்றிக் கொள்ளும்படி, அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு (சபை), இரண்டு மாறாத விசேஷங்களினால் (தேவனுடைய வார்த்தை மற்றும் தேவனுடைய ஆணையிடுதல்கள்) நிறைந்த ஆறுதல் உண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார்” என்று ஆணையிட்டுக் கொடுத்ததற்கான நோக்கத்தைக் கூறி பரிசுத்தவானாகிய பவுல் நமக்கு உறுதியளிக்கின்றார் (எபிரெயர் 6:18-20). ஆகையால் அப்போஸ்தலனின் வார்த்தைகளிலிருந்து ஆபிரகாமின் வாக்குத்தத்தம் அல்லது உடன்படிக்கை இன்னும் நிறைவேறவில்லை என்பதை நாம் காண்கின்றோம்; என்றாலும் அந்த வாக்குத்தத்தமே நம்முடைய விசுவாசத்திற்கான நங்கூரமாகவும் காணப்படுகின்றது.

ஆபிரகாமின் சந்ததிக்கான தேடல்

இஸ்மயேல் வாக்குத்தத்தின் சந்ததியாயிராமல், ஈசாக்கே சந்ததியாக இருந்தார். மேலும், ஏசாவும் வாக்குத்தத்தத்தின் சந்ததியாய் இராமல், யாக்கோபே சந்ததியாக இருந்தார். இறுதியாக யாக்கோபின் குடும்பம் முழுவதும் ஆபிரகாமின் சந்ததியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஏற்ற வேளையில் அவர்கள் எல்லோரும் மோசேக்குள்ளாகக் கடலிலும், மேகத்திலும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டார்கள். மேலும், சீனாய் மலையில் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் வாக்குத்தத்தத்தின் சுதந்தரர்கள் ஆனார்கள். நியாயப்பிரமாணத்திற்கு அவர்கள் கீழ்ப்படிந்தால், இவர்கள் நித்திய ஜீவன் பெற்றுக்கொள்வார்கள். மேலும், இதன் மூலம் இவர்கள் பூமியின் குடிகளை ஆசீர்வதிப்பதற்கான வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் வேலைக்கு தேவனுடைய கருவிகளாக இருக்கமுடியும்.

மரணத் தீர்ப்பின் கீழ்ப்பரிபூரணமற்றவர்களாக இருக்கும் மற்றவர்களைப் போன்று இவர்களும் (இஸ்ரயேலர்களும்) பூரணமற்றவர்களானபடியால், இவர்களால் தேவனுடைய பூரணமான நியாப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முடியாமல் போனதால், மீதமான மனுக்குலத்தைப் போன்று இவர்களும் மரித்தார்கள்; காரணம், இவர்களும் பாவிகளே. “உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை” என்று இயேசு கூறினார். மேலும், “எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை” என்று அப்போஸ்தலர் பவுல் கூறுகின்றார் (ரோமர் 3:20). எனினும், நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்படிய முயற்சித்த யூதர்கள் மாபெரும் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்கள். எப்படியெனில், சிலர் மாயக்காரர்களாய் இருந்து, இருதயத்திலிருந்து ஜெபம் ஏறெடுக்காதவர்களாய் இருந்தாலும் கூட, சிலர் கபடற்ற உண்மையான இஸ்ரயேலர்களாகவே இருந்தார்கள்.

“கபடற்ற உத்தம இஸ்ரயேலர்களின்” இருதயப்பூர்வமான நேர்மையைத் தேவன் அங்கீகரித்து, பெந்தெகொஸ்தே நாளன்று, உண்மையுள்ள ஊழியக்காரராகிய மோசேயின் வீட்டாரிலிருந்து, உண்மையுள்ள புத்திரராகிய கிறிஸ்துவின் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் சிலாக்கியத்தினைத் தேவன் இவர்களுக்குக் கொடுத்தார் (எபிரெயர் 2:5,6). “(கிறிஸ்துவின்) அவருடைய நாமத்தின் மேல் விசுவாசம் வைத்து… தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்” (யோவான் 1:12). இயேசு, தமது ஜீவனை பலிச் செலுத்தி மரணத்திலிருந்து தெய்வீகச் சுபாவத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டு தூதர்களுக்கும், கர்த்தத்துவங்களுக்கும், வல்லமைகளுக்கும் மேலாக, தேவனுடைய வலது பாரிசத்தின் இடத்திற்கும் உயர்த்தப்பட்டு, தம்முடைய அடிச்சுவட்டில் நடக்க விரும்பும், “உண்மையுள்ள இஸ்ரயேலர்கள்” யாவருக்கும் பரிந்துப் பேசும்படி இயேசு வந்த பின்னர்தான், இவர்கள் புத்திரசுவிகாரத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள்.

கிருபை நிறைந்த மற்ற வாக்குத்தத்தங்கள் – SUB HEADING

தேவனுடைய வாக்குத்தத்தங்கள் அனைத்தும் ஆபிரகாமுக்கும், அவருடைய சந்ததிக்கும் (பிரதானமாக மாம்ச சந்ததிக்கும்) உரியதாகும். இதன் காரணமாக, யூத யுகம் முழுவதும் இவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்வதன் மூலம் தங்களை ஆபிரகாமின் வித்தாகும்படி தகுதிபடுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, இவர்களிடம் தீர்க்கத்தரிசனத்தின் வாயிலாக தேவன் பேசிக் கொண்டிருந்தார். மோசே மத்தியஸ்தராக இருந்த உடன்படிக்கையைக் காட்டிலும் மேலான உடன்படிக்கையை இவர்களோடு இறுதியில் தாம் பண்ண சித்தம் கொண்டுள்ளார் என்பதைத் தேவன் இவர்களுக்கு வெளிப்படுத்தினார். புதிய உடன்படிக்கையின் கீழ்த் தேவன் இவர்களின் பாவங்களையும், மீறுதல்களையும்/அக்கிரமங்களையும் எடுத்துப்போடுவார் என்பதை இவர்களிடம் கூறினார். ஆனால், அவைகளை எப்படி எடுத்துப் போடுவார் என்பதைக் கூறவில்லை; அதாவது, இவர்கள் வருடந்தோறும் செலுத்தி வருகிற பலிகளைக் காட்டிலும், “விசேஷித்த பலிகளின்” புண்ணியத்தினால் பாவங்கள் எடுத்துப் போடப்படும் என்பதைக் கூறவில்லை.

இந்தப் புதிய உடன்படிக்கைக்கு மோசேயைக் காட்டிலும் பெரிய ஒரு மத்தியஸ்தர் இருப்பார் என்பதையும், தேவன் அவர்களுக்குக் கூறி உறுதியளித்தார். இந்த மத்தியஸ்தரைக் குறித்து மோசே தீர்க்கத்தரிசனம் உரைத்ததாவது, “உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு [R4940 : page 458] தீர்க்கத்தரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார் அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. அந்தத் தீக்கத்தரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்முலமாக்கப்படுவான்” (அப்போஸ்தலர் 3:22,23). இஸ்ரயேலர்கள் தெய்வீகப் பிரமாணங்களைப் பரிபூரணமாய்க் கைக்கொள்ளும் நிலைக்குக் கொண்டுவரப்படுவதற்கும், பூமி அனைத்தையும் ஆசீர்வதிக்கத்தக்கதாக இவர்களைத் தேவன் பயன்படுத்தக்கூடிய நிலைக்குக் கொண்டுவரப்படுவதற்கும், இவர்களுக்கு அந்த மாபெரும் மத்தியஸ்தரே உதவுவார் (எரேமியா 31:31).

இஸ்ரயேலர்கள் புதிய உடன்படிக்கைக்காகவும், அதன் மேலான மத்தியஸ்தருக்காகவும் ஏங்கினார்கள். அந்த மத்தியஸ்தரை மேசியா அல்லது தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று அழைத்தனர். இந்த மகிமையான மேசியாவைக் குறித்த அதாவது, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தரைக் குறித்த தேவனுடைய செய்தியை மீண்டும் கவனியுங்கள். அவர் கூறுவதென்னவெனில், “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான். அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார், அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார்” (மல்கியா 3:1-3).

இவ்விதமாக வரவிருக்கிற மேசியாவைக் குறித்து, விலையேறப்பெற்ற வாக்குத்தத்தங்களை மாத்திரமல்லாமல், இன்னுமாக அவர் வரும் காலங்களில் வாழ்பவர்களுக்கு விசேஷமான சோதனைகள், இடர்பாடுகள் இருக்கும் என்பகைவள் குறித்த அறிவிப்புகளையும் இஸ்ரயேலர்கள் பெற்றிருந்தார்கள். லேவியின் புத்திரர் மீதும், இஸ்ரயேலின் மீதும், மற்றும் இவர்கள் வாயிலாக பூமியின் சகல ஜாதிகள் மேல் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரப் போகிற ஆபிரகாமின் வித்திலுள்ள மகா பெரியவரைப் பெற்றெடுக்க அதாவது, சர்ப்பத்தின் தலையை நசுக்கப்போகிற ஸ்திரீயின் வித்தைப் பெற்றெடுக்கும் கனத்திற்காக இஸ்ரயேலர்களில் உள்ள ஒவ்வொரு தாய்மாரும் ஏங்கினார்கள்.

இந்த வாக்குத்தத்தங்கள் தொடர்ந்துக் கொண்டிருந்து, யோவான் ஸ்நானனின் பிறப்பில் உச்ச நிலையை அடைந்தது. யோவான் ஸ்நானன் மேசியாவாய் இராமல், மேசியாவைக் குறித்து முன்னறிவிக்கிறவராகவே இருந்தார். யோவான் ஸ்நானன் மனித தகப்பன் இல்லாமல் அற்புதவிதமாகப் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர் அல்ல. மாறாக, இவருடைய பிறப்பு விசேஷித்த தேவதூதரால் அறிவிக்கப்பட்டது. சகரியாவின் விசுவாசம் ஒருவேளை சோதிக்கப்பட்டிருந்தாலும், ஒன்பது மாத அளவு ஊமையாக இருந்த அனுபவம், அவருடைய விசுவாசத்தைப் பெலப்படுத்துவதற்கு அவருக்கு உதவிற்று. இவ்விதமாக, மனுஷர்களுடைய மீட்பராக தம்முடைய ஒரே பேறான குமாரனை அனுப்புவதற்கு முன்பு, தேவன் வழியை ஆயத்தம் பண்ணினார்.