R3374 – இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3374 (page 167)

இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்

IMPORTANCE OF JESUS’ RESURRECTION

மத்தேயு 28:1-15

“”கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.”- 1 கொரிந்தியர் 15:20

நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதல் மற்றும் முழுச்சுவிசேஷ செய்தியின் மீதான அதன் செல்வாக்கினுடைய முக்கியத்துவத்தைச் சிலர் மாத்திரமே உணர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். “”கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. . . . கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே” (1 கொரிந்தியர் 15:14-18) என்று அப்போஸ்தலர் எழுதினபோது, உயிர்த்தெழுதல் எவ்வளவு முக்கியமானது எனச் சுட்டிக்காண்பிக்கின்றார். உயிர்த்தெழுதலை உணர்ந்துக்கொள்ள தவறுபவர்களும், அதை உண்மையில் விசுவாசிக்காதவர்களுமான, கர்த்தருடைய பின்னடியார்களெனத் தங்களை அறிக்கைப் பண்ணிக்கொள்ளும் மதத் தலைவர்கள் (clergy) மற்றும் கிறிஸ்தவ பொதுமக்களுடைய (laity) எண்ணிக்கை மிகவும் திரளாய் உள்ளது. உண்மையிலேயே விசுவாசிக்கிறவர்களுடைய எண்ணிக்கை மிகவும் சொற்பமேயாகும். பெரும்பான்மையானவர்கள், இருண்ட யுகத்தினின்று நமக்குக் கடந்து வந்திருக்கும் போதனைகளின் கீழ்க் காணப்படுவதினால், மரணம் என்பது ஜீவன் நின்றுவிடும் நிலைமை என்பதையும், “”அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்” என்று வேதவாக்கியங்கள் தெரிவிப்பதையும் உணர்ந்துக்கொள்வதற்கு முற்றிலுமாகத் தவறிவிடுகின்றனர். மாறாக கிறிஸ்தவ மண்டலத்தாரோ, மரணம் என்பது இல்லை என்றும், மரித்தவர்கள் மரிப்பதற்கு முன்னதாக இருந்ததைக்காட்டிலும் மிகுந்த ஜீவனுடையவர்களாய் இருக்கின்றனர் என்றும், நம்பும்/விசுவாசிக்கும் நிலைக்கு வந்துள்ளனர். மேலும் இந்த ஒரு கருத்தை இவர்கள், நமது கர்த்தரின் விஷயத்திலும், மற்றவர்களின் விஷயத்திலும் பொருத்துவதினால், “”கிறிஸ்துவானவர் நமது பாவங்களுக்காக மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார்” என்று வேதவாக்கியங்கள் கூறும் காரியத்தை உணர்ந்துக்கொள்வதில்லை. இவர்கள் இயேசு மரித்தபோது, அவர் உயிரோடுதான் இருந்தார் என்றும், அவருடைய மாம்ச சரீரம் மாத்திரமே கல்லறையில் உயிரற்று இருந்தது என்றும், மூன்றாம் நாளில் நடந்திட்ட உயிர்த்தெழுதலானது, ஜீவனுக்கேதுவான அவருடைய உயிர்த்தெழுதலாகக் காணப்படாமல், மாறாக அவருடைய மரித்துப்போன சரீரத்தினுடைய உயிரடைதலே என்றும் எண்ணிக்கொள்கின்றனர்.

குழப்பத்திற்கு வழிநடத்தும் தப்பறைகள்

இப்படியாகச் சீர்த்திருத்தவாதிகளினால், இடைப்பட்ட காலங்களிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டதும் மற்றும் இன்றைய நவீன உலகத்தாருடைய மனங்களில் ஒட்டி வைக்கப்பட்டதுமான தவறான உபதேசங்களுடைய குழப்பத்தினால், நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவத்தைப் பெரும்பாலான கிறிஸ்தவ ஜனங்கள் உணர்ந்துக்கொள்ள முடியாமல் காணப்படுகின்றனர். ஒருவேளை இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழவில்லையெனில், நமது விசுவாசமும் விருதாவாக இருக்கும் எனவும், நமது பிரசங்கமும் விருதாவாக இருக்கும் எனவும் அப்போஸ்தலர் குறிப்பிட்டுள்ளதை நம்புவதற்குப்பதிலாக, இதற்கு நேர்மாறாக பெரும்பாலான கிறிஸ்தவ மண்டலத்தார் கூறுபவர்களாய் இருக்கின்றனர்; அதாவது “”ஒருவேளை இயேசுவின் சரீரமானது, கல்லறையிலேயே காணப்பட்டால், இதனால் நம்முடைய மரித்த அன்புக்குரியவர்களின் விஷயத்திலும், நாம் பிரசங்கிக்கும் விஷயத்திலும், நமது விசுவாசத்தின் விஷயத்திலும் அப்படி என்னத்தான் மாற்றங்கள் நடந்துவிடும்?” என்று கூறுகின்றனர். ஆகவே மரித்தவர்கள், மரித்துப்போய் இருக்கின்றார்கள் என்றும், மரணம் எனும் நித்திரையினின்று எழுப்பப்படுவது வரையிலும், மரித்தவர்கள் உயிரோடு இருப்பதில்லை என்றும் உணர்ந்துக்கொள்பவர்களால் மாத்திரமே, உயிர்த்தெழுதலுடைய முக்கியத்துவத்தை உண்மையாய் உணர்ந்துகொள்ள முடியும்.

ஒருவேளை இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடே எழுந்திருக்கவில்லையெனில், சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு நமக்கு எந்த அடிப்படையும் இருந்திருக்காது, ஏனெனில் [R3374 : page 168] தேவனுடைய கிருபையினால் இயேசுவின் மரணமானது, தகப்பனாகிய ஆதாமுக்கும், அவருடைய சந்ததிக்குமான ஈடுபலியாகக் காணப்படுகின்றது என்பதாகவும் மற்றும் இயேசு இப்படியாக முழுச் சந்ததிக்குமான தண்டனையைச் சந்தித்து, தம்முடைய மரணத்தின் மூலமாக, மரணத் தீர்ப்பிலிருந்து அனைவரையும் மீட்டுக்கொண்டபடியினால், ஏற்றவேளையில், அதாவது தேவனுடைய நியமிக்கப்பட்டுள்ள வேளையில் ஆதாமும், அவருடைய சந்ததியும், மரணத் தீர்ப்பிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்பதாகவும், கிறிஸ்து மாபெரும் இராஜாவாக தம்முடைய இராஜ்யத்தை உலகத்தில் ஸ்தாபித்து, அதன் வாயிலாக மனுக்குலத்தின் மீதிருந்த பாரமாகிய, மரணத் தண்டனையை எடுத்துப்போடுவார் என்பதாகவும், அப்போது கல்லறைகளில் இருப்பவர்கள் அனைவரும் மனுஷக்குமாரனுடைய சத்தத்தைக் கேட்டு, ஆயிர வருட இராஜ்யத்தின் மகிமையான வாய்ப்புகளாகிய தேவனோடு ஒப்புரவாகுவதும், விழுகையின் அனைத்துப் பூரணமின்மைகளிலிருந்து விடுவிக்கப்படுவதுமான வாய்ப்புகளினிடத்திற்கு வருவார்கள் என்பதாகவும்தான், சுவிசேஷ செய்தி காணப்படுகின்றது. இப்படியான ஒரு சுவிசேஷத்தை, இயேசு மரித்தார் என்ற உண்மையை, அதே நேரம் அவர் உயிர்த்தெழுந்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாமல் பிரசங்கிப்பது என்பது விருதாவாகவும், அறிவீனமான பிரசங்கமாகவும், ஜனங்களை வஞ்சிக்கத்தக்கதாகவும் காணப்படும். இப்படியான சுவிசேஷத்தை, உயிர்த்தெழுதலின் ஆதாரங்கள் இல்லாமல் நம்புவது என்பது, நம்மை அறிவீனமான பேதையினராக காண்பித்துவிடும்; மேலும், மரித்த நிலைமையிலேயே இருக்கும் கிறிஸ்துவினால், நம்முடைய மரித்த நண்பர்களுக்கு நன்மையுண்டாகும் என்று நம்புவது என்பது நகைப்புக்குரியதாகவே காணப்படும்.

இப்படியாகக் கர்த்தருடைய உயிர்த்தெழுதலுடைய முக்கியத்துவத்தையும், எப்படி இந்த மாபெரும் உண்மையின் மீது, சுவிசேஷத்தினுடைய ஒவ்வொரு அம்சமும் சார்ந்துள்ளது என்பதையும் நாம் காணும்போதுதான், இயேசு நம்முடைய பாவங்களுக்கான ஈடுபலியாக மாத்திரம் மரிக்காமல், நாம் நீதிமான்களாக்கப்படத்தக்கதாகவும், மனித குடும்பத்தின் மீது காணப்படும் மரணத் தண்டனை மற்றும் குற்றத்திலிருந்தும் நம்மை விடுவிக்கத்தக்கதாகவும், அவர் உயிர்த்தெழவும் செய்தார் எனும் உண்மையின் அடிப்படையிலேயே, ஏன் அப்போஸ்தலர்கள் பாவங்களுக்கான மன்னிப்பைக் குறித்தும், எதிர்க்கால ஆசீர்வாதத்தைக் குறித்தும் பிரசங்கித்தார்கள் என்பதையும் நம்மால் புரிந்துக்கொள்ள முடிகின்றது. நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதல் தொடர்புடைய அனைத்து அம்சங்கள் பற்றின விரிவான வசனங்கள் காணப்படத்தக்கதாகவும், மிகவும் விரிவான பதிவு விவரங்கள் காணப்படத்தக்கதாகவும், நமது பரம பிதா ஏற்பாடு பண்ணினதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; சுவிசேஷகர்களும் விவரங்களை நுணுக்கமாக பதிவு செய்திருப்பதிலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை; தேவனிடத்திலான அப்போஸ்தலர்களுடைய விசுவாசத்திற்கு அடிப்படையாக இருந்த உயிர்த்தெழுதல் பற்றின இந்த மாபெரும் அடிப்படையான சத்தியமானது, மிகவும் முக்கியமானதாக சபைக்கு முன்பு, அப்போஸ்தலர்களுடைய பிரசங்கங்கள் அனைத்திலும் முன்வைக்கப்பட்டதில் ஆச்சரியப்படுவதற்கும் ஒன்றுமில்லை. இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப்படும்போது, இந்தப் பாடமானது, அனைத்துக் காலக்கட்டங்களிலுமுள்ள கர்த்தருடைய ஜனங்களுடைய ஆழமான கவனத்தை ஈர்க்கின்றதாய் இருக்கவேண்டும்; அதாவது, இப்பொழுது இந்தச் சாட்சியை விசுவாசத்தினால் ஏற்றுக்கொண்டுள்ள விசுவாச வீட்டாருக்கு, இந்தச் சாட்சியை, இராஜ்யத்தின் வெளியரங்கமான வெளிப்படுத்தல்கள் உறுதிப்படுத்துவது வரையிலும் இந்தப் பாடம், ஆழமாய் அவர்களின் கவனத்தை ஈர்க்கின்றதாய் இருக்க வேண்டும்.

அவர் மூன்றாம் நாள் எழுந்தார்

நமது கர்த்தர் நீசான் மாதம் பதினான்காம் தியதியில் சிலுவையில் அறையப்பட்டார்; அதாவது, யூதர்களுடைய கணக்கின்படி வாரத்தின் ஆறாம் நாளில், அதாவது நாம் இன்று வெள்ளிக்கிழமை என்று அழைக்கும் நாளில் அறையப்பட்டார். பதிவுகளின்படி, நமது காத்தர் பிற்பகல் மூன்று மணிக்கு மரித்தார். எருசலேமின் வாயிலிருந்தும், ஆலயத்திலிருந்தும் பிலாத்துவின் அரண்மனையிலிருந்தும், கல்வாரி சிறு தொலைவில் காணப்பட்டது. ஆகையால் இயேசு மரித்ததைக் கண்ட பிற்பாடு, அவரை அடக்கம் பண்ண உத்தரவு பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஆலோசனை சங்க அங்கத்தாராகிய நிக்கொதேமுவுக்கும், யோசேப்பிற்கும், அதிக தூரம் பிரயாணம் பண்ண வேண்டியிருக்கவில்லை; இவர்கள் இயேசுவுடன் சிநேகமாக இருந்ததாலும், இவர்கள் இயேசுவின் உரிமைப்பாராட்டுதல்களிலுள்ள உண்மையினைப் போதுமானளவுக்கு நம்பாதவர்களாய்க் காணப்பட்டனர்; அல்லது, அவரோடு கூட, தங்கள் ஜீவனையும் ஒப்புக்கொடுக்கத்தக்கதாக போதுமானளவுக்குத் தைரியம் இல்லாதவர்களாய்க் காணப்பட்டனர்; மேலும், இயேசு அடக்கம் பண்ணப்பட்ட கல்லறையானது சிலுவையிருந்த இடத்திலிருந்து கல்லெறியும் தொலைவில்தான் காணப்பட்டது. ஆகையால் நமது கர்த்தர் சிலுவையில் அறையப்பட்ட அந்நாளில் தானே, அதாவது வெள்ளிக்கிழமை அன்றே பிற்பகல் நான்கு மணியளவில் அடக்கம் பண்ணப்பட்டதாக அனுமானிக்கப்படுகின்றது. நாம் சனிக்கிழமை என்று அழைக்கிறதும், யூதர்களால் ஏழாம் நாள் (அ) ஒய்வுநாள் என்று அழைக்கப்படுகிறதுமான அடுத்த நாள், யூதர்களுடைய கால அளவின்படி, வெள்ளிக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்துடன் ஆரம்பித்து, சனிக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்துடன் நிறைவடைந்தது; நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலானது, [R3375 : page 168] நம்மால் ஞாயிற்றுகிழமை என்று அழைக்கப்படும், யூதர்களுடைய வாரத்தின் முதல் நாளன்று அதிகாலமே நடைப்பெற்றது.

இவ்விதமாக நமது கர்த்தர், “”மூன்றாம் நாளில்” மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் வெள்ளிக்கிழமை அன்று மூன்று மணி முதல் ஆறு மணி வரைக்கும், பின்னர் தொடர்ந்த முழு இரவிலும், அடுத்த நாளாகிய சனிக்கிழமையின் பகற்பொழுது முழுவதும், பின்னர் வந்த முழு இரவிலும், அதாவது யூதர்கள் வழக்கத்தின்படி, வாரத்தின் முதலாம் நாளின் முதல் பாகமாகிய இரவிலும் மரண நிலையிலேயே காணப்பட்டார். இப்படியாகப் பார்க்கும்போது மூன்று பகற் பொழுதும், மூன்று முழுமையான இரவு பொழுதும், அதாவது எழுபத்திரண்டு மணி நேரப்பொழுது இல்லை என்றாலும், இது அவர், தாம் மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து எழும்பப் பண்ணப்படுவார் என்று அவரால் கூறப்பட்ட காரியத்திற்கு இசைவாகவே உள்ளது. சிலர் மூன்று முழுப்பகற் பொழுதையும், மூன்று முழு இரவு பொழுதையும் எண்ணிக்கொள்ள வேண்டுமென்ற ஆசையில், நமது கர்த்தர் வியாழக்கிழமை அன்று மரித்ததாகக் கூறுவதற்கு வழிநடத்தப்படுகின்றனர்; இப்படிக் கணக்குப் போட்டாலுங்கூட மூன்று பகற்பொழுதும், மூன்று இரவு பொழுதுமாகிய எழுபத்திரண்டு மணி நேரங்களின் கணக்கு வருவதில்லை. ஒருவேளை மூன்று முழுப்பகற்பொழுதும், மூன்று முழு இரவு பொழுதின் கணக்கு வரவேண்டுமாயின், நாம் இயேசு புதன்கிழமை அன்று மரித்ததாக எண்ண வேண்டியிருக்கும். இப்படிப்பட்டதான அனுமானங்களுக்கு எதிராகவும், வெள்ளிக்கிழமை அன்றுதான் மரித்தார் என்பதற்கு ஆதரவாகவுந்தான் அனைத்துச் சாட்சியங்களும் காணப்படுகின்றன. இந்த விஷயம் தொடர்புடைய காரியங்களில், எங்கள் கருத்திலிருந்து வேறுபட்ட ஒரு கருத்தை எவராகிலும் கொண்டிருந்தாலுங்கூட, நாம் அவர்களோடு பேராடாப் போவதில்லை; இவ்விஷயம் என்பது முக்கியத்துமற்ற சிறிய விஷயமேயாகும்; நமது கர்த்தர் எத்தனை நாட்கள் மரண நிலையில் காணப்பட வேண்டுமென்ற காரியத்தைச் சார்ந்ததாக எந்தக் காரியமும் இருக்கவில்லை. அவர் நிஜமாக மரிக்க வேண்டும் என்பதும், அவர் மரித்துள்ளார் என்ற உறுதி காணப்படும்படி போதுமான காலம் அவர் மரண நிலையில் காணப்பட வேண்டும் என்பதும், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழும்ப வேண்டும் என்பதும்தான் முக்கியமான காரியமாகும்.

ஆலயத்தை இடித்துப்போட்டு, அதை எழுப்புதல்

“”இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்;” “அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக் குறித்துப் பேசினார்” (யோவான் 2:19-21). அவர் எந்தச் சரீரத்தைக் குறித்துப் பேசினார்? அவரது மாம்ச சரீரத்தையா? பாவத்திற்காக பலிச்செலுத்தத்தக்கதாக, அவர் கொண்டிருந்த சரீரமா? அவர் மரணம் வரை அர்ப்பணித்துக் கொண்ட சரீரமா? இந்தச் சரீரத்தைத்தான் அவர் மூன்றாம் நாளில் எழுப்பப்படும் என்று குறிப்பிட்டாரா? இந்த மாம்ச சரீரம் என்பது அவரது ஆலயமாக இராமல், மாறாக அவரது கூடாரமாக மாத்திரமே காணப்பட்டது. நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் சரீரத்தை யூதர்கள் அழிக்கவில்லை/இடித்துப்போடவில்லை; கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் சரீரம் என்பது ஓர் ஆவிக்குரிய சரீரமாகும்; இதை யூதர்கள் ஒருபோதும் கண்டதில்லை; இந்தச் சரீத்தில் இயேசு, “”அகாலப்பிறவிப்போன்ற பவுல் தமஸ்குவுக்குப் போகிற வழியில், மத்தியான வேளையில் சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளியாக” வெளிப்பட்டார்.

நமது கர்த்தர், தாம் தலையாக இருக்கின்ற சபையைத்தான் தம்முடைய சரீரமாகக் குறிப்பிட்டார் என்று நாம் எடுத்துக்கொள்வது நியாயமானதாக இருக்கும். யூதர்கள் தலையை அழித்து/இடித்துப் போட்டார்கள் மற்றும் சுவிசேஷ யுகம் முழுவதிலும், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் பல்வேறு அங்கத்தினர்கள், “”அவரோடுகூடப் பாடுபடுவதற்கும்,” “”அவரோடுக்கூட மரிப்பதற்கும்,” “”சகோதரர்களுக்காக தங்கள் ஜீவனை ஒப்புக்கொடுப்பதற்கும்”” அழைக்கப்படுகின்றனர். இயேசுவின் [R3375 : page 169] நாட்கள் துவங்கி இன்றுவரையிலும், சரீரத்தின் இந்த அழித்து/இடித்துப்போடும் பணியானது நடைபெற்றுக்கொண்டு வருகின்றது; மேலும் வெகு சீக்கிரத்தில், இந்தச் சரீரத்தின் கடைசி அங்கத்தினனும் தன்னை, “”மரணம் வரையிலும் உண்மையுள்ளவனாக” நிரூபித்துக் காட்டி முடித்துவிடுவான் என்று நாம் நம்புகின்றோம். இப்பொழுது கர்த்தர் தாமே மாபெரும் அஸ்திபாரக் கல்லாகக் காணப்படும் இந்த ஆலயத்தை, கர்த்தர் எப்படி எழுப்புவார் என்று பார்க்கலாம்; இந்த ஆலயத்தில் கர்த்தருடைய உண்மையுள்ள பின்னடியார்கள் ஒவ்வொருவரும், ஜீவனுள்ள கற்களாக இருப்பார்கள் என்று அப்போஸ்தலனாகிய பேதுரு குறிப்பிடுகின்றார் (1 பேதுரு 2:4). கர்த்தருடைய கால கண்ணோட்டத்தை வைத்துப் பார்க்கப்படும்போது, “”கர்த்தருக்கு ஒரு நாள் என்பது ஆயிரம் வருஷம்போல” இருப்பதினால், நமது கர்த்தர் 4161-ஆம் வருடம், உலகத்தினுடைய வருட கணக்கின்படி மரித்தார்; நான்கு நாட்கள் கழிந்த பிற்பாடு, ஐந்தாம் நாள் ஆரம்பித்தது.

ஆலயத்தின் பிரதான மூலைக்கல்லாகிய கர்த்தர் அழிக்க/இடிக்கப்பட்டது முதல், தேவனுடைய ஆலயமாகிய சபையின் அழித்து/இடித்துப்போடுதல் ஆரம்பமாகி, இதுவரை நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது; அதாவது, ஐந்தாம் நாளின் மீதி பகுதியிலும், ஆறாம் நாள் முழுவதிலும் நடைப்பெற்றது; இப்பொழுது நாம் ஏழாம் நாளின் ஆரம்பத்தில், “”அதிகாலை வேளையில்” காணப்படுகின்றோம். இந்தக் காலப்பகுதியில் கிட்டத்தட்ட கர்த்தருடைய உயிர்த்தெழுதல் முழுமை அடைந்திருக்கும் என்பதாக தேவனுடைய வாக்குத்தத்தம் காணப்படுகின்றது. “”அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்” (சங்கீதம் 46:5). இப்படியாகக் கர்த்தர் மூன்று நாட்கள் மரித்திருந்து, மூன்றாம் நாளில், அதிகாலையில் உயிர்த்தெழுந்ததுபோல, முதலாம் உயிர்த்தெழுதலும் நிறைவேறித் தீரும்; கிறிஸ்துவின் முழுச்சரீரமும், மூன்றாம் நாளின் அதிகாலை வேளையில் உயிரோடு எழுப்பப்படும்.

கர்த்தருடைய உயிர்த்தெழுதல் சம்பவித்தபோது, உயிர்த்தெழுதல் பற்றின விஷயமானது அப்போஸ்தலர்களும் புரிந்துக்கொள்வதற்கு எட்டாத காரியமாகவே காணப்பட்டது. இயேசு தாம் மூன்றாம் நாளிலே மீண்டும் உயிரோடு எழுந்தருள்வார் என்று முன்கூட்டியே கூறியிருந்தபோதிலும், அவருடைய வார்த்தைகளின் அர்த்தத்தை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியாமலேயே காணப்பட்டனர். அவர்களில் ஒருவர்கூட, அவரது உயிர்த்தெழுதலைக் குறித்துக் கொஞ்சமும் எண்ணவே இல்லை; மாறாக அவர்கள் தங்களுடைய இறந்துப் போன அன்புக்குரிய நண்பன் (அ) சகோதரன் (அ) சகோதரியுடைய சரீரத்திற்கு காண்பிப்பதுபோலவே, இயேசுவினுடைய சரீரத்திற்குத் தங்கள் அனுதாபத்தையும், அன்பையும் காண்பிக்கத்தக்கதாக, எப்படி அவருடைய சரீரத்திற்குத் தைலம் பூசலாம் என்று மாத்திரமே எண்ணினவர்களாக இருந்தார்கள். யூதர்களுடைய நியாயப்பிரமாணத்தின்படி ஓய்வுநாளன்று எவ்விதமான வேலையும் செய்யக்கூடாது என்பதினால், அவர்களால் கல்லறைக்குப்போக முடியாமல் இருந்த காரணத்தினால், முன்கூட்டியே கர்த்தருடைய நண்பர்கள் அவர்களுக்குள்ளாகவே தீர்மானித்து வைத்திருந்தபடியே, ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாளில், அதிகாலையில், அவர்கள் கல்லறையினிடத்திற்கு வந்து கூடினர். கலிலேயாவிலிருந்து அநேகர் வந்தனர். அவர்கள் அநேகமாக பட்டணத்தினுடைய பல்வேறு பாகங்களிலுள்ள மற்ற நண்பர்களுடைய வீடுகளில் தங்கியிருந்திருக்க வேண்டும்; சிலர் பெத்தானியாவிலும் தங்கியிருந்திருக்க வேண்டும்; ஆகையால் பல்வேறு வழிகள் வழியாய்க் கல்லறையினிடத்திற்கு வந்தடைந்தர்கள். பதிவு வெவ்வேறாகக் காணப்பட்டாலும், அனைத்துமே உண்மையானதாகவும், முழுக்க இசைவானதாகவும் காணப்படுகின்றது. ஒவ்வொரு சுவிசேஷத்தின் எழுத்தாளர்களினாலும் பல்வேறு கோணங்களிலிருந்து கூறப்பட்டு, பதிவு செய்யப்பட்டுள்ளது; மேலும், அனைத்துமே சுவிசேஷ புத்தகங்களுடைய எழுத்தாளர்களுக்கிடையே எவ்விதமான கூட்டுச்சதியும் இல்லை என்பதை நமக்கு தெளிவுப்படுத்துகின்றது; அதாவது, அனைவரும் ஒன்றுபோலவே காரியங்களைத் தெரிவிப்பதற்கு, எவ்விதமான முயற்சியும் எடுக்கவில்லை என்பது தெளிவாகுகின்றது; ஒருவேளை, அனைத்துச் சுவிசேஷகர்களும் அப்படியே ஒன்றுபோல் பதிவு பண்ணியிருந்திருப்பார்களானால், பதிவானது கட்டுக்கதையாகப் போயிருந்திருக்கும்.

உண்மைக்கு எதிரான விவாதங்கள், பலமற்றதாகவேயிருக்கிறது

சீஷர்கள் வருவதற்கு முன்பாகவும், உரோம சேவகர்கள், கல்லறையைக் காக்கும் வேலையில் நின்று கொண்டிருக்கும்போதும், கர்த்தருடைய தூதனானவர் அவ்விடத்தில் தோன்றினார்; பூமி அதிர்ச்சிப் போன்றதான அதிர்ச்சி ஏற்பட்டது; காவல் காத்தவர்கள் செத்தவர்கள் போலானார்கள், அதாவது கிட்டத்தட்ட மயங்கி போய்விட்டனர்; ஆனால் இவர்கள் மயக்கம் தெளிந்தவுடன், சம்பவம் நடந்த இடத்தைவிட்டு, தங்களை இவ்வேலைக்கென நியமித்திட்ட பிரதான ஆசாரியர்களிடம் விவரம் சொல்லப்போனார்கள். இவர்கள் நித்திரைப் பண்ணிக்கொண்டிருந்தபோது, இயேசுவின் சீஷர்கள் வந்து சரீரத்தைத் திருடிப்போய்விட்டார்களென இவர்கள் விஷயத்தைப் பரப்பி விடத்தக்கதாக, பிரதான ஆசாரியர்கள் இவர்களைத் தூண்டிவிட்டனர்; மேலும், இவர்களால் பரப்பப்பட்ட இந்தத் தகவலானது, ஒரு குறிப்பிட்ட நீண்ட காலம் நடப்பில் காணப்பட்டது; ஆகவேதான், “”இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது” என்று வசனத்தில் இடம்பெறுகின்றது (மத்தேயு 28:15); அதாவது, இச்சம்பவம் நடந்து ஒன்பது வருடங்களுக்குப் பின்பாக எழுதப்பட்டதாக அனுமானிக்கப்படும் மத்தேயு சுவிசேஷம் எழுதப்படும் காலம் வரைக்கும் இப்பேச்சுக் காணப்பட்டது. சத்தியத்திற்கு எதிரான அனைத்து வாதங்கள்போல, இந்த வாதமும் பெலவீனமானதாகவே காணப்பட்டது; ஆனால், இதுவே அவர்களால் முடிந்தமட்டும் சொல்ல முடிந்திட்ட பொய்யான வாதமாகும். தாங்கள் நித்திரைப் பண்ணிக்கொண்டிருக்கும்போது, நடந்தது என்ன என்று சொல்லக்கூடிய மனிதர்களுடைய சாட்சி எத்துணை முட்டாள்தனமாய் இருக்கும்! இப்படியான பொய்யான வாக்கைக்கூறின காவலாளிகளுக்குக் கூலியாக இலஞ்சமும் மற்றும் வேலையின் நேரத்தில், வேலை செய்யாமல் தூங்கிவிட்ட உரோம சேவகருக்குரிய தண்டனைக்கு எதிரான பாதுகாப்பு பற்றின வாக்குறுதியும் கொடுக்கப்பட்டன. ஆனால் இச்சம்பவம் நிகழ்ந்த போது, காவலாளிகள் உரோம அரசாங்கத்திற்காக வேலை புரியவில்லை; இந்தக் காவலாளிகள் ஆசாரியர்களின் நன்மைக்காகவும், ஆசாரியர்களுடைய வேண்டுகோளுக்கு இணங்கி மாத்திரமே காவல் புரிந்தவர்களாகக் காணப்பட்டனர்.

விவரங்களைத் தெரிவிக்கும்படிக்குக் காவலாளிகள் ஆசாரியர்களிடம் போய்க் கொண்டிருக்கையில், இதற்கிடையில் கர்த்தருடைய நண்பர்கள் தங்களுடைய அன்புகளுடனும், கந்தவர்க்கத்துடனும் ஒன்றுகூட ஆரம்பித்தனர். ஸ்திரீகள் கூட்டத்தினர் முதலாவதாக, இடத்தை வந்து அடைந்தனர்; இப்படியாக ஸ்திரீகள் முதலாவதாக வந்த காரியமானது, அவர்களுடைய இருதயங்களின் அன்பிற்கும், அனுதாபத்திற்கும் உறுதியளிக்கின்றதாகவும், அவர்கள் (பெண்) இனத்திற்கு மகிமைச் சேர்க்கின்றதாகவும் இருக்கின்றது.

அந்நாள் காலை முதல் ஆரம்பித்து, காத்தர் பரம் ஏறிச்சென்றதோடு முடிவடைந்த நாற்பது நாட்கள் காலப்பகுதியில், கர்த்தர் பதினொரு முறை காட்சியளித்தார்; சிலசமயம் ஒருவருக்கும், இன்னொரு சமயம் மற்றொருவருக்கும், இன்னெரு சமயம் ஒரே நேரத்தில் ஐந்நூறு சகோதர சகோதரிகளுக்கும் தோன்றிக் காட்சியளித்தார். ஆனால் பதினொரு முறைக்குப் பதிலாக அவர் அநேகமாக ஏழுமுறை மாத்திரமே தோன்றியிருந்திருக்க வேண்டும்; இந்த ஏழு முறைகளிலுள்ள, நான்குமுறை காட்சிப் பதிவுகளானது திரும்பத் திரும்ப, வெவ்வேறாக விவரிக்கப்பட்டவையே ஆகும்.

“”அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார்””
ஏழு பிசாசுகள் பிடியிலிருந்து நீங்கப் பெற்றவளும், அதுமுதல் நமது கர்த்தருடைய உண்மையான பின்னடியார்களில் ஒருவளுமான மகதலேனா மரியாளுக்கு, நமது கர்த்தர் முதலாவதாகத் தோன்றிக் காட்சியளித்தார். இவள் அதிகமாய் மன்னிக்கப்பட்டிருந்தாள்; இவள் அதிகமாய்க் கர்த்தரை அன்புகூர்ந்தாள்; இவளுடைய அன்பானது, கல்லறையினிடத்திற்கு இவளை அதிகாலமே இழுத்துக்கொண்டு வந்தது. மகதலேனா மரியாள்தான், ஸ்திரீகளிலேயே கல்லறையினிடத்திற்கு முதலாவதாக வந்து சேர்ந்ததாகத் தெரிகின்றது; மேலும் கல்லறையில் இயேசு இல்லாததைக் கண்ட மாத்திரத்தில், இவள் இக்காரியத்தை யோவான் மற்றும் பேதுருவினிடத்தில் சொல்வதற்குத் துரிதமாய்ப் போனாள். மற்ற ஸ்திரீகள் கல்லறையினிடத்திற்கு வந்து, அவ்விடத்தை விட்டு, தங்கள் வழியில் புறப்பட்டுப்போன பிற்பாடே, மகதலேனா மரியாள் மீண்டுமாக [R3375 : page 170] கல்லறையினிடத்திற்குத் திரும்பி வந்து சேருகின்றாள்; இப்படியாக இவள் கல்லறைக்கு அருகாமையில் காணப்படும் போதுதான், இயேசு அனைத்து ஸ்திரீகளிலும் இவளுக்கே காட்சியளித்துத் தோன்றினார்; இவைகள் யோவான் 20:11-18 வரையிலான வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிற்பாடு மற்ற ஸ்தீரிகள், காரியங்களை விசுவாச வீட்டாருக்கு அறிவிக்கத்தக்கதாக போய்க்கொண்டிருக்கும் வழியில், இவர்களுக்கு கர்த்தர் எதிர்ப்பட்டார். இவர்களிடம் “”வாழ்க” ( “”All hail!’) என்று கூறினார்; வாழ்த்துவதற்குரிய இந்தக் கிரேக்க வார்த்தைக்கான அர்த்தம் “”சந்தோஷப்படுங்கள்” என்பதாகும். இவர்கள் அவருடைய பாதத்தில் விழுந்து, அவரைத் தொழுது கொண்டு, எதுவாகிலும் அவரிடமிருந்து தங்களைப் பிரித்துவிடுமோ என்ற அச்சத்தில், அவருடைய பாதங்களைத் தழுவிப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். நமது கர்த்தர், இவர்கள் சகோதரருக்கு அறிவிக்கும் கடமையை/வேலையைப் பெற்றருப்பதை, இவர்களுக்கு நினைப்பூட்டினார்; அதாவது, தம்முடைய உயிர்த்தெழுதலின் நற்செய்தியினைப் பரப்ப வேண்டிய கடமையை இவர்களுக்கு நினைப்பூட்டினார். இதே படிப்பினை நமக்கும் உள்ளது; அதாவது நாம் கர்த்தரைக் கண்டுபிடித்து, சத்தியத்தை உணர்ந்துக்கொண்ட பிற்பாடு, சத்தியத்திற்காக ஊழியம் புரியும் மாபெரும் சிலாக்கியத்தினை நாம் பெற்றிட அனுமதிக்கப்பட்டிருக்கின்றோம்; அதாவது, நம்முடைய இருதயங்களைச் சந்தோஷிப்பித்தவைகளை, இன்னமும் அறிந்திராத சகோதர சகோதரிகளிடத்தில் (அறிவிக்கும்) ஒரு மாபெரும் கடமை நமக்கு உள்ளது. சத்தியம் நமக்கு மாத்திரமே உரியது என அதைக் கட்டிப்பிடித்து வைத்துக்கொள்ளலாமென நாம் எண்ணக்கூடாது; மாறாக, சத்தியம் மற்றவர்களுக்கும் உரியது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்; ஆகவே சத்தியத்தை மற்றவர்களுக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சிக்கொள்ள வேண்டும். இப்படியாகக் கர்த்தருக்கும், விசுவாச வீட்டாருக்கும் ஊழியம் புரிபவன், இறுதியில் நிச்சயமாய் மாபெரும் ஆசீர்வாதத்தை அடைவான்.

நமது கர்த்தர் சீஷர்களை மீண்டுமாக கலிலேயாவில் சந்திப்பார் என்று சீஷர்களிடம் சொல்ல வேண்டும் என்பதாகவே நமது கர்த்தருடைய செய்தி காணப்பட்டது. ஆகவே எருசலேமில் ஐந்து (அ) [R3376 : page 170] ஆறுமுறை காட்சியளிடத்திட்ட பிற்பாடு, நமது கர்த்தர் தம்முடைய பின்னடியார்களுக்குத் தோன்றிக் காட்சியளிக்கவில்லை; ஆகவே பின்னடியார்கள் தங்கள் சொந்த ஊராகிய கலிலேயாவிற்கு திரும்பி, அங்கே கர்த்தர் சொன்னதுபோலவே, அவரைக் கண்டார்கள். நமது கர்த்தருடைய பெரும்பான்மையான ஊழியம் கலிலேயாவில்தான் நடைப்பெற்றது என்றும், விசுவாசிகளில் பெரும்பான்மையானவர்கள் கலிலேயர்களாய் இருந்தார்கள் என்றும் நாம் நினைவிற்கொள்ள வேண்டும். விசுவாச வீட்டாரில் அனைவரும், நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்கான சாட்சியைப் பார்ப்பதற்குரிய, ஏதாகிலும் வாய்ப்பினை அடைய வேண்டியவர்களாய்க் காணப்பட்டனர்; ஆகையால்தான் அப்போஸ்தலனாகிய பவுல், கலிலேயாவில் கர்த்தர் காட்சியளித்துத் தோன்றிய காரியத்தைக் குறித்துப் பேசுகையில், “”அதன்பின்பு அவர் ஐந்நூறு பேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரே வேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள் வரைக்கும் (அப்போஸ்தலன் இவ்வசனத்தை எழுதும் காலம் வரைக்கும்) இருக்கிறார்கள், சிலர் மாத்தரம் நித்திரையடைந்தார்கள்” என்று நமக்குத் தெரிவிக்கின்றார் (1 கொரிந்தியர் 15:6).

கர்த்தர் தாம் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டதான உண்மை தொடர்புடைய விஷயத்தில், தம்முடைய பின்னடியார்களுக்குக் கொடுத்திட்ட பல்வேறு வெளிப்படுத்துதல் விஷயத்தில், இரண்டு நோக்கம் கொண்டிருந்தார் என்பதை நாம் கவனமாய்க் கவனிக்க வேண்டிய அவசியம் உள்ளது. முதலாவது நோக்கம் என்னவெனில், தம்முடன் சீஷர்கள் பழகி வந்த காலத்தில், தாம் மனித நிலைமையில் காணப்பட்டதுபோல, இனி ஒருபோதும் காணப்படுவதில்லை, மாறாக அனைத்து ஆவிக்குரிய ஜீவிகள்போன்று, தம்மால் காற்றைப்போல், கண்களுக்குப் புலப்படாத விதத்தில் வரலாம், போகலாம் என்பதாகும். ஜெயங்கொள்ளுபவர்களுக்கான உயிர்த்தெழுதலைக் குறித்து அப்போஸ்தலர், 1 கொரிந்தியர் 15:51-52 -ஆம் வசனங்களில் விவரிக்கின்றார்; நம்முடைய உயிர்த்தெழுதலானது, கர்த்தருடையது போன்று காணப்படும் என்றும், நாம் அவர் இருக்கிற வண்ணமாக அவரைக் காணலாம் என்றும், அவருடைய மகிமையில் பங்கடையலாம் என்றும் வேத வாக்கியங்கள் நிச்சயம் அளிக்கின்றது. நம்முடைய உயிர்த்தெழுலானது, அவருடைய உயிர்த்தெழுதலின், அதாவது முதலாம் உயிர்த்தெழுதலின் ஒரு பாகமாக உண்மையில் காணப்படுகின்றது என்றும், மகிமையான கிறிஸ்துவின் தலையாகிய இயேசு, மரணத்தின் வல்லமையினின்று எழுப்பப்பட்டு, அவர் மரித்த மூன்றாம் நாளில் மகிமைப்படுத்தப்பட்டார் என்றும், புதிய யுகத்தினுடைய அதிகாலை வேளையில், சபையும் மரணத்திலிருந்து, அவருக்கு ஒப்பான சாயலை அடைந்து, அவருடைய உயிர்த்தெழுலில் பங்கடைவார்கள் என்றும் வேதவாக்கியங்கள் நமக்கு உறுதிப்படுத்துகின்றது (பிலிப்பியர் 3:10).

நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் மாற்றம்

நமது கர்த்தர் தம்முடைய ஆவிக்குரிய சரீரத்தைத் தம்முடைய உயிர்த்தெழுதலின் போதுதான் பெற்றுக்கொண்டாரே ஒழிய, அதற்குப் பிற்பாடு அல்ல அப்போஸ்தலன் கூறுவதுபோல “”அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார்” (1 பேதுரு 3:18). நமது கர்த்தர் தாழ்த்தப்பட்டதையும், பிற்பாடு அவருடைய உயிர்த்தெழுதலின்போது அவர் உயர்த்தப்பட்டதையும் குறித்துப் பேசுகையில் அப்போஸ்தலன், நமது கர்த்தர் மனிதனாகக்தக்கதாக, தாம் பிதாவோடு காணப்பட்டிருந்தபோது பெற்றிருந்த மகிமையைத் துறந்து வந்தார் என்றும், ஏற்றவேளையில் கர்த்தர் தம்மை மரணப்பரியந்தம், அதாவது சிலுவையின் மரணப்பரியந்தம் தாழ்த்தினார் என்றும், பின்னர் தேவன் அவரை உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார் என்றும் நமக்கு உறுதியளிக்கின்றார். இந்த உயர்த்தப்படுதலானது, அவருடைய உயிர்த்தெழுதலின் மாற்றம் நடைப்பெற்றபோது அவருக்கு வந்தது. கர்த்தர் எப்படி ஜென்ம சரீரத்தில் விதைக்கப்பட்டு, ஆவிக்குரிய சரீரத்தில் எழுந்திருந்தாரோ, இப்படியே, அவருடைய சரீரத்தினுடைய அங்கத்தினர்களுடைய விஷயத்திலும் உண்மையாய் இருக்கும்.

நமது கர்த்தருடைய இந்த ஆவிக்குரிய சரீரமானது, அவருடைய உயிர்த்தெழுதலின் தருணத்திலேயே, இப்போதும், எப்போதும் காணப்படுவதுபோன்று மகிமையுடையதாகவே காணப்பட்டது. அவருடைய ஆவிக்குரிய சரிரம் . . . கர்த்தரோடு இசைவாய் இருக்கும் ஆவிக்குரிய ஜீவிகளுக்கு ஏற்றதென வழங்கப்படும் அனைத்து வல்லமைகளையும் உடையதாய் இருந்தது. இனிமேல் அவர் முன்பிருந்த மனிதனாகிய கிறிஸ்து இயேசுவல்ல, மாறாக இப்பொழுது மகிமையின் கர்த்தராக இருக்கின்றார். ஆபிரகாமுக்கும், மற்றவர்களுக்கும் அவர் முன்பு காட்சியளித்தது போன்று, தேவைக்கேற்ப அவரால் கண்ணுக்குப் புலப்படும் விதத்தில் (அ) கண்களுக்குப் புலப்படாத விதத்தில் (அ) எரிகிற முட்செடியாய் (அ) வழிப்போக்கனாகவோ தோன்ற முடியும். இந்த மகிமையடைந்த கர்த்தர்தான், தர்சு பட்டணத்தானாகிய சவுலுக்குப் பிரகாசமான வெளிச்சமாகத் தோன்றினார்.

ஏன் கர்த்தர் மகிமையான விதத்தில், அதாவது பிரகாசமான வெளிச்சத்துடன் ஸ்திரீகளுக்கும், அப்போஸ்தலர்களுக்கும் தோன்றி காட்சியளிக்கவில்லை? எனச் சிலர் கேள்வி கேட்கலாம். அப்படியாக அவர் செய்திருப்பாரானால், அது அவர் கொண்டிருந்த நோக்கத்திற்குத் தடையாக இருந்திருக்குமென நாம் பதிலளிக்கின்றோம். அதுவரையிலும் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படாத காரணத்தினால், ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துக்கொள்ள முடியாத நிலைமையில் காணப்பட்ட சீஷர்களினால், மிகவும் பிரகாசமாய்த் தேவதூதனைப்போல் தோன்றிக் காட்சியளித்துக் கொண்டிருப்பவர்தான், தாங்கள் மூன்று நாளுக்கு முன்னதாக சிலுவையில் அறையப்பட்டவராக கண்ட கர்த்தர் இயேசு என எப்படிப் புரிந்துக்கொள்ள முடியும்? (1 கொரிந்தியர் 2:14). ஒருவேளை அன்று சீஷர்கள், பிரகாசமான தேவதூதன் போன்று காட்சியளித்துக் கொண்டிருப்பவர்தான், கர்த்தர் இயேசு எனப் புரிந்துக்கொண்டுவிட்டாலும், அன்று முதல் இன்று வரையிலுமுள்ள மற்றவர்களுக்கும், நமக்கும் என்ன சாட்சி இருந்திருக்கும்? நமது கர்த்தர் இயேசுவினுடைய சடலம், கல்லறையினின்று எடுத்து மாற்றப்படுவது என்பது, அன்று இருந்த சீஷர்களுக்கும் மற்றும் அவர்களுடைய வார்த்தைகள் மூலம் அவரை விசுவாசிக்கும் நமக்கும் விசுவாசம் ஏற்படுவதற்கு அவசியமாய் இருக்கின்றது; மற்றும் அக்காரியமானது, அனைவருக்கும் அவர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதற்கான வெளிப்படுத்தலாகவும் இருக்கின்றது. அந்தக் குறிப்பிட்ட காலத்தின்போது நமது கர்த்தர் கொடுத்திட்டப் போதனைகளும், தீர்க்கத்தரிசனங்களுக்குக் கொடுத்திட்ட விளக்கங்களும், தீர்க்கத்தரிசனங்களைத் தமக்குப் பொருத்திக் கூறினவைகளும், விசுவாசத்திற்கு அவசியமான உறுதியான அஸ்திபாரங்களாகும். இந்தக் கர்த்தருடைய நோக்கங்கள் வேறு ஏதாகிலும் விதத்தில், அதாவது பிரகாசமான வெளிச்சத்துடன் கர்த்தர் காட்சியளித்திருந்தால் நிறைவேறியிருக்க முடியாது. நமது கர்த்தர் முதலாவதாக மரியாளுக்குத் தோட்டக்காரன் போன்று தோன்றிக் காட்சியளித்தார். இவள் அவரை அடையாளம் கண்டுக்கொள்ளவில்லை; இவள் முன்பு இயேசுவைப் பார்த்திருந்த பிரகாரமான, தோற்றத்தையோ, உடைகளையோ இவள் பார்க்கவில்லை. அவருடைய வஸ்திரங்கள் உரோம [R3376 : page 171] சேவகர்கள் மத்தியில் பங்குப் போடப்பட்டு எடுத்துக்கொள்ளப்பட்டது; கல்லறையில் அவரைச் சுற்றி வைத்திருந்த துணிகளானது, கல்லறையிலேயே காணப்பட்டது; ஆனால் மரியாள் அங்குக் கண்டதோ, இந்த விசேஷித்த தருணத்திற்கென்றே ஆயத்தம் பண்ணப்பட்டு, பயன்படுத்தப்பட்ட விசேஷித்த சரீரமாகவும், விசேஷித்த வஸ்திரமாகவும் இருந்தது. இவள் குரலை வைத்து அடையாளம் கண்டுகொள்வது வரையிலும், கர்த்தரை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் காணப்பட்டாள்.

இப்படியாகவே, அதே நாளில் எம்மாவு எனும் கிராமத்திற்குப்போன இரண்டு நபர்களின் விஷயத்திலும் காணப்பட்டது. இயேசு அவர்களோடுகூட நடந்து வந்தார்; ஆனால் அவர்களோ, அவரை அறிந்துக்கொள்ளவில்லை. அவருடைய வஸ்திரம் வித்தியாசமாய் இருந்தது; அவரது சாயல் வேறாக இருந்தது; அவர்களால் அவருடைய உள்ளங்கைகளிலோ (அ) பாதங்களிலோ ஆணியின் தடயங்களைப்பார்க்க முடியவில்லை. “”அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான்” (லூக்கா 24:18). இயேசு இந்த வாய்ப்பினை, தம்மைப் பற்றியதான தீர்க்கத்தரிசனங்களை அமைதியாகவும், கவனமாகவும், நிதானமாகவும், அழுத்தமாகவும், மிகத்தெளிவாகவும் அவர்களோடுகூட விவாதிக்கத்தக்கதாக/ஆராயத்தக்கதாகப் பயன்படுத்தினார்; இதினிமித்தம் அவர்கள் ஸ்தீரிகளினால் அறிவிக்கப்பட்ட காரியங்கள் உண்மையிலேயே மெய்யாக இருப்பதற்கு வாய்ப்புண்டு என்று எண்ண ஆரம்பித்தபோது, அவர்களுடைய இருதயங்கள் அவர்களுக்குள் கொழுந்துவிட்டு எரிந்தது. அவர்களுடைய பார்வையிலிருந்து மறைய அவர் ஆயத்தமாகுவது வரையிலும் நமது கர்த்தர், தம்மை கர்த்தர் என்று வெளிப்படுத்தவில்லை.

அவர் மறைந்து போனபோது, அவருடைய மாம்சமும், அவருடைய வஸ்திரங்களும்கூட மறைந்து போய்விட்டது. அன்றைக்கு மாலையில் கதவுகள் பூட்டப்பட்டிருக்கும்போதே, எருசலேமில் மாடி வீட்டிற்குள்ளாகக் காணப்பட்ட கூட்டத்தாருக்கு முன் கர்த்தர் தோன்றினார். அங்குக் கூடியிருந்த கூட்டத்தார், அநேகமாக அன்றைய நாளின் சம்பவங்களையும், முந்தின நாளின் சம்பவங்களையும்தான் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்; அப்பொழுது திடீரென இயேசு, அவர்கள் நடுவில் தோன்றினார். அவர் உருவம் எடுத்துக்கொண்டு அங்குத் தோன்றினார். அவர் ஆவிக்குரிய ஜீவியாக அவர்கள் நடுவில் வந்து, வஸ்திரம் உடுத்தின மாம்சமும், எலும்பும் கொண்ட முழுச்சரீரத்தை உருவாக்கிக்கொண்டு தோன்றினார். அவரால் இதை எப்படிச் செய்யுமுடியும் என்று யாராவது கேட்கின்றீர்களா? எங்களால் இதற்குப் பதில் சொல்ல முடியாதுதான்; ஆயினும், தண்ணீர் எப்படித் திராட்சரசமாக மாறியது என்ற அற்புதத்தை யாரால் புரிந்துக்கொள்ள முடியுமோ, அவர்களால் எப்படி நமது கர்த்தர், கதவுகள் பூட்டியிருக்க, மாடி அறைக்குள் தோன்றினார் என்பதைச் சுலபமாகப் புரிந்துக்கொள்ள முடியும்; மற்றும் சம்பாஷணை முடிந்த பிற்பாடு, அவர் இன்னமும் கதவுகள் பூட்டப்பட்டிருக்கவே, மர்மமான விதத்தில், அவர்கள் பார்வையிலிருந்து மறைந்து போனார் என்பதையும், மாம்சமும், எலும்பும், வஸ்திரமும்கூட மறைந்துபோனது என்பதையும் சுலபமாய்ப் புரிந்துக்கொள்ள முடியும். கூடி இருந்தவர்கள் யூதர்களுக்கு அஞ்சினதாலும், கர்த்தரை மரிக்கப்பண்ணுவதற்கு நாடின யூதர்களது பகைமையானது, அவருடைய பின்னடியார்கள் மீதும் திரும்பலாம் என்று எதிர்ப்பார்த்ததினாலும், கதவுகளை ஜாக்கிரதையாய்ப் பூட்டி வைத்திருந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

விசுவாசமற்றவர்களாய் இராதீர்கள்; மாறாக விசுவாசியுங்கள்

அநேகமாக ஒரு வாரம் கழித்து, மீண்டுமாக வாரத்தினுடைய முதல் நாளன்று, அதேமேல் வீட்டறையில் கர்த்தர் தோன்றிக் காட்சியளித்தார். அப்போது தோமாவும் காணப்பட்டார்; முந்தின தருணங்களின்போதெல்லாம், தோமா காணப்படவில்லை; மற்றும் இவர் மற்றவர்களுடைய சாட்சிகளை நம்பவுமில்லை. தோமா தனது சந்தேகங்களை மிகவும் அழுத்தமாக வலியுறுத்தினவராகவும், மற்றவர்கள் அனைவரும் மிகவும் சுலபமாக நம்பிவிட்டார்களெனக் கூறினவராகவும் காணப்பட்டார்; ஆனால் இறுதியாக, தோமா மற்றவர்களோடுகூடக் காணப்படும்போது, இயேசு தோன்றி, ஆணியினுடைய காயங்களில் தோமா தனது விரலை இட்டுப் பார்க்கும்படிக் கூறினபோது, தோமா திருப்தியடைந்தார். நமது கர்த்தர் சிலுவையில் தொங்க விடப்பட்டிருந்தபோது, ஆணியின் காயங்களைக் கொண்டிருந்த சரீரத்தையா தோமா உண்மையில் பார்த்து, தனது கையை இட்டு பார்த்தார்? நாம் இல்லை என்றே பதிலளிக்கின்றோம்; அந்த மாம்சமும், எலும்புகளும் உடைய சரீரமானது, கதவுகள் பூட்டப்பட்டிருக்க உள்ளே வர முடியாது. மேல் வீட்டறையில் தோன்றின சரீரமானது (அத்தருணத்தில்) உருவாக்கப்பட்ட சரீரமாகும்; அச்சரீரம் மாம்சத்தினாலும், எலும்புகளினாலும்தான் உருவாக்கப்பட்டது; “”நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொன்னார்” (லூக்கா 24:39). அவர்கள் பார்த்தது ஆவிக்குரிய சரீரமல்ல, அவர்கள் கண்ட சரீரம், மாம்சத்தையும் எலும்புகளையும் கொண்ட சரீரமாகும். கர்த்தர் ஆவிக்குரிய ஜீவியாக இருந்தார்; ஆகையால் அவர்களுடைய பார்வைக்கு மறைவாய் இருந்தார்; அவர் அவர்கள் நடுவில் இந்த மாம்சமும், எலும்புமுள்ள சரீரத்தையும் மற்றும் வஸ்திரத்தையும் உருவாக்கித் தோன்றினார்.

கர்த்தருக்கு மாம்சத்தையும், எலும்புகளையும் உருவாக்கும் வல்லமை இருப்பதை மறுப்பவர்களால், வஸ்திரங்களை அவர் உருவாக்கினார் என்பதைப் ஏற்றுக்கொள்வதிலும் சிரமப்படுவார்கள்; ஏனெனில், கதவுகள் பூட்டப்பட்டிருக்கும் அறைக்குள் வஸ்திரங்களை உருவாக்குவதை விட, சரீரத்தை உருவாக்குவது மிகவும் கடினமாக இருக்குமென யாரால் சொல்லக்கூடும்? இன்னுமாக மாம்சத்தையும், எலும்புகளையும் காற்றில் மறையப்பண்ணுவதைப் பார்க்கிலும், வஸ்திரத்தை காற்றுக்குள்ளாக மறையப்பண்ணுவது சுலபமானது என யாரால் சொல்லக்கூடும்? இப்படிப்பட்டக் காரியங்களைச் செய்வதற்கான வல்லமை என்பது நமக்கடுத்ததுமல்ல, இக்காரியத்தை நம்மால் முழுவதும் புரிந்துக்கொள்ளவும் முடியாது. இப்பொழுது நாம் கண்ணாடியின் வாயிலாக மங்கலாய்ப் பார்க்கின்றோம், ஆனால் போகப்போக கர்த்தர் தொடர்ந்து செய்துகொண்டு வரும் வியத்தகு காரியங்களையெல்லாம், எப்படிச் செய்து வருகின்றார் என்பதை நாம் புரிந்துக்கொள்வோம். நம்மைச் சுற்றிலும் இயற்கையின் விஷயத்தில் தினந்தோறும் அற்புதங்கள் நிகழ்வதை நாம் காண்கின்றோம் அல்லவா? கோதுமையின் விதைக்குள் இருக்கும் பருப்பை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள்; ஒரு சிறு விதைக்குள்ளாக இருந்து எப்படி முளைகள் வெளிவந்து, தண்டு வந்து, முழுமையான கோதுமை மணியும் வருகின்றது? இது ஓர் அற்புதம் அல்லவா? இதை நாம் செய்வதென்பது நமக்கு அப்பாற்பட்ட வல்லமையாகவும், நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின் வல்லமைக்கு அப்பாற்பட்ட வல்லமையாகவும் இருக்கின்ற காரியமாக இருக்கின்றது. நம்மால் பல தனிமங்களை ஒன்று சேர்த்து, கோதுமை மணியை உருவாக்கலாம், அதுவும் கோதுமை மணியினுடைய வடிவத்திலேயே நாம் செய்துவிடலாம்; ஆனால் இயற்கையான கோதுமை மணியுடன், நமது செயற்கையான கோதுமை மணியை ஒப்பிடுகையில், நாம் உண்டுபண்ணின கோதுமை மணிகளால் முளைக்கவோ, தண்டு விடவோ, கோதுமை மணிகளை விளையப்பண்ணவோ முடியாது.

அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லை

ஆணிகள் ஊடுருவப்பட்ட இயேசுவினுடைய மாம்ச சரீரத்திற்கு என்னவாயிற்று என்பதைக் கூறுவது நமக்கடுத்த காரியமல்ல. இவ்விஷயத்தைக் குறித்த காரியத்தில், அச்சரீரம் அழிவைக் காண்பதில்லை என்று மாத்திரமே சொல்லப்பட்டிருக்கின்றதே ஒழிய, மற்றபடி எதுவும் தேவனால் வெளிப்படுத்தப்படவில்லை. அச்சரீரம் எங்கு இருக்கின்றது? இது பற்றியும் எங்களுக்குத் தெரியாது; எனினும் யாருமே கண்டுபிடிக்க முடியாதளவுக்கு, மோசேயின் சரீரத்தை மறைத்து வைத்தவர், இயேசுவினுடைய சரீரத்தையும் மறைத்து வைக்க வல்லவராக இருக்கின்றார் (உபாகமம் 34:5,6). இயேசுவினுடைய இந்த அழிக்கப்படாத சரீரமானது, உலகத்திற்காக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின் உண்மைக்கான சாட்சியாக, எதிர்க்காலம் முழுவதிலும் காணப்படத்தக்கதாக, தேவனால் கொண்டு வரப்படலாம். இஸ்ரயேலர்களால் உண்ணப்பட்ட மன்னாவானது, ஓய்வுநாள் தவிர, மற்ற நாட்களில் மீதியிருக்கும் பட்சத்தில் அதற்கடுத்த நாளில் அழிந்துவிடும் என்பதை நாம் நினைவில்கொள்கின்றோம்; இன்னுமாக வனாந்தர பிரயாணத்தின் போதான மாபெரும் அற்புதத்திற்கான ஞாபகர்த்தமாக (அ) சாட்சியாக, உடன்படிக்கைப் பெட்டிக்குள் பொற்பாத்திரத்தில் வைக்கப்பட்ட மன்னாவானது, அழிந்து போகாமலேயே இருந்தது என்பதையும் நாம் நினைவில் கொள்கின்றோம். அப்படியானால், மன்னாவுக்கு ஒப்பிடப்பட்ட இந்த வானத்திலிருந்து இறங்கி வந்த அப்பத்தின் (இயேசுவின்) விஷயத்தில் நாம் என்ன சொல்லலாம்? தேவன் இயேசுவின் சரீரத்தையும் சாட்சியாக, பாதுகாக்க வல்லவராய் இருக்கின்றார் அல்லவா? மாம்ச சரீரங்கள் பொதுவாக அழியக்கூடியவைகளாக இருப்பினும், இயேசுவின் இந்த மாம்ச சரீரமானது, அழிவைக் காணாமல் பாதுகாக்க தேவன் வல்லவராய் இருக்கின்றார் அல்லவா? ஆணிகள் ஊடுருவப்பட்டதும், ஈட்டியினால் குத்தப்பட்டதுமான இச்சரீமானது எதிர்க்காலத்தில் அனைவரும் பார்க்கத்தக்கதாக வெளியே கொண்டுவருவதற்காக, எங்கோ வைக்கப்பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிற வேதவாக்கியமும் காணப்படுகின்றது. “”அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து” (சகரியா 12:10).

நமது கர்த்தர் காட்சியளித்த முதல் ஐந்து தருணங்களும், அவர் பூமியில் காணப்பட்ட நாற்பது நாட்களின் முதல் எட்டு நாட்களிலேயே சம்பவித்தது. ஆகையால் காட்சிகள் அளிக்கப்படுவதற்கு இடையே நீண்ட இடைவெளிகளும் காணப்பட்டது; மற்றும் அப்போஸ்தலர்களுக்கும் காரியங்களை எண்ணுவதற்கும், விவரமாய் ஆராய்வதற்கும் நிறைய காலமும் இருந்தது. சீஷர்களில் அநேகர் கலிலேயர்களாய் இருந்தபடியால், நமது கர்த்தர் எட்டாம் நாளில் கடைசியாக அவர்களுக்குக் காட்சியளித்த பிற்பாடு, இரண்டு வாரங்களான பின்னர், அவர்கள் எருசலேமிலேயே தங்காமல், [R3377 : page 172] அவரவர் தங்கள் வீடுகளுக்குத் திரும்பினார்கள்; ஆண்டவரை மீண்டும் பார்க்க முடியுமோ (அ) இல்லையோ என்றும், வீடுகளுக்குத் திரும்புகிற வழியில் அவர் காட்சியளித்துத் தோன்றுவாரோ (அ) இல்லையோ என்றும், அல்லது கலிலேயாவில் எதாவது மேல்வீட்டறையில் ஒன்றுகூடும்போது காட்சியளித்துத் தோன்றுவாரோ என்றும், எண்ணிக்கொண்டே வீடுகளுக்குத் திரும்பினர். இயேசு தங்களுக்கு முன்னதாக கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் செல்கின்றார் என்றும், அங்குத் தங்களைச் சந்திப்பார் என்றும், அவர் ஸ்திரீகள் மூலம் தங்களுக்கு அனுப்பின செய்தியினையும் நினைவுகூர்ந்தார்.

நம் கர்த்தராலும், அப்போஸ்தலர்களாலும் அடிக்கடி போகும் இடத்தில், நீண்ட காலம் சீஷர்கள் காத்துக் கொண்டிருக்கையில், ஜீவியத்தின் நடைமுறை சார்ந்த காரியங்கள் (தேவைகள்) இவர்களை அழுத்திட ஆரம்பித்தது. சீமோன் பேதுரு முதலாவதாக, மீண்டும் மீன்பிடிக்கும் தொழிலில் திரும்புவதற்கான தனது எண்ணத்தைத் தெரியப்படுத்தினார்; மற்ற அப்போஸ்தலர்களும் அதே தொழிலில் முன்னமே ஈடுபட்டிருந்தபடியால், இவர்களும் பேதுருவுடன் இணைந்து கொண்டார்கள்; இயேசு இவர்களை அப்போஸ்தலர்கள் ஆகும்படிக்கு அழைப்பதற்கு முன்பு, அதாவது இரண்டு வருடங்களுக்கு முன்பு, கொண்டிருந்த பழைய தொழில் ஏற்பாடு மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலைகளையே கர்த்தர் எதிர்ப்பார்த்தார்; மேலும் அவர் உயிர்த்தெழுந்தது முதல், பரத்திற்குப்போவது முன்னதாக, நாற்பது நாட்கள் அவர் பூமியிலேயே காணப்பட்டதற்கான காரணம், இத்தருணத்தின்போது அவர்களுக்கு அவர் கொடுத்திட்ட படிப்பினைகளைக் கொடுக்க வேண்டுமென்ற, மாபெரும் நோக்கத்திற்கேயாகும் என நாம் நம்புகின்றோம். அவர்கள் எவ்வளவு சோர்வடைந்தார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்; இராஜ்யம் தொடர்பாக அவர்கள் முன்பு கொண்டிருந்த நம்பிக்கைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகள் அனைத்தும், இப்பொழுதுள்ள இந்தப் புதிய சந்தர்ப்பத்தின் கீழ்க் குழப்பத்தில் காணப்பட்டது என்பதையும் அவர் அறிந்திருந்தார். தம்முடைய பின்னடியார்களுக்கு அறிவுரைகள் கொடுக்கப்படாதது வரையிலும், தாம் நோக்கம் கொண்டிருக்கும் வேலைக்குள்ளாக பின்னடியார்கள் செல்வதற்கு ஆயத்தமாக மாட்டார்கள் என்பதையும் கர்த்தர் அறிந்திருந்தார். அந்த வாரங்கள் முழுவதிலும், அவர் அவர்களோடுதான் கண்களுக்குப் புலப்படாத ஆவிக்குரிய ஜீவியாகக் காணப்பட்டார்; அவர்களுடைய கேள்விகளையும், அவர்களுக்குள்ளாக அவர்கள் கொடுத்திட்ட விளக்கங்களையும், அவர்கள் முன்வைத்திட்ட யோசனைகளையும், அவர்கள் இறுதியாக எடுத்திட்ட தீர்மானங்களையும் கர்த்தர் கேட்டுக்கொண்டு கவனித்துக் கொண்டிருந்தார்; மற்றும் ஏற்றவேளையில் உரிய படிப்பினைகளைக் கொடுப்பதற்கு ஆயத்தமாகவும் காணப்பட்டார்.

இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?

சீஷர்கள் மீண்டுமாக மீன் பிடிக்கும் தொழிலில் இறங்கி, அத்தொழிலைச் செய்வதற்குக் கர்த்தர் அனுமதித்துவிட்டார். அவர்கள் இராமுழுவதும் வேலை புரிந்தும், மீன் எதையும் அவர்களால் பிடிக்க முடியவில்லை; ஆவிக்குரிய காரியங்களிலும், பூமிக்குரிய காரியங்களிலும், தோல்வியே தங்களுக்கு ஏற்படுகின்றது என்று எண்ணி, அவர்கள் இன்னும் சோர்வடைந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. வாய்ப்பான தருணம் வந்தது; இயேசு வேறொரு மாம்சத்துடனான சரீரத்தில், வஸ்திரம் அணிந்தவராகக் கரையில் நின்று கொண்டிருந்தார்; இந்தச் சரீரமும், வஸ்திரமும் அவருடைய சொந்த சரீரமாகவும், அவர் வழக்கமாக அணியும் வஸ்திரமாகவும் இல்லை; மாறாக இத்தருணத்திற்கென்று விசேஷமாய் உருவாக்கப்பட்ட சரீரமாகவும், வஸ்திரமாகவும் இருந்தது. இயேசு இச்சரீரத்தில் கரையில் நின்றுகொண்டு, அப்போஸ்தலர்களிடம், மீன் இருக்கின்றதா எனக் கேட்டார்; அதற்கு அவர்கள் இராமுழுவதும் வேலை செய்தும், மீன் எதுவும் பிடிப்படவில்லை என்று கத்திக் கூறினார்கள். அவர்கள் படகின்மற்றப் பக்கமாய் வலையைப் போடும்படிக்கு அவர் யோசனைக் கூறினார். இந்த யோசனை அவர்களுக்கு அறிவீனமாய்த் தோன்றியிருந்திருக்கலாம்; ஏனெனில், அவர்களுக்கு வலையைப் போடும்படிக்குச் சொல்லப்பட்ட இடமானது, அவர்கள் ஏற்கெனவே வலை வீசின இடத்திலிருந்து, சில அடிகள் தொலைத் தூரத்தில்தான் இருந்தது. அந்த அந்நியன் (இயேசு), அவர்களை ஏதோ விதத்தில் ஈர்த்ததினால், அவர்கள் படகிற்கு மற்றப் பக்கத்தில் தங்கள் வலையினை வீசினார்கள்; உடனடியாக வலை பெரிய மீன்களினால் நிரம்பினது. பேதுருவைப் பொறுத்தமட்டில், அவர் படிப்பினையை ஏற்கெனவே கற்றிருந்தார். பேதுரு அப்போஸ்தலனாகும்படிக்கு, தான் கர்த்தரால் அழைக்கப்பட்டபோது, இதைப் போன்றதான அனுபவத்தை அடைந்திருந்ததை நினைவுகூர்ந்து, கரையில் நின்றுகொண்டிருப்பது, கர்த்தர் இயேசு என்று உடனடியாகப் புரிந்துக்கொண்டார்; இயேசு கரையில் காட்சியளிக்கத் தோன்றியுள்ளார் என உடனடியாக புரிந்துக்கொண்டார். படகுகளுக்கோ, வலைக்கோ (அ) மீன் தொடர்புடைய வேலைக்காக நின்று கொண்டிருக்காமல், பேதுரு உடனடியாகத் தண்ணீருக்குள் குதித்து, கர்த்தரிடம் சீக்கிரமாய்ப் போய்ச்சேர வேண்டுமென்ற ஆர்வத்தினாலும், மற்றச் சந்தர்ப்பங்களில் நடந்தது போன்று, இப்போதும் இயேசுவினுடைய காட்சி சடுதியாக மறைந்துவிடும் என்று உணர்ந்ததினாலும் கரைக்கு நீந்திச் சென்றார். இன்னுமாக தான் கர்த்தரை மறுதலித்ததை நினைவில் கொண்டிருந்த பேதுரு, தன்னுடைய அன்பையும், உண்மையையும் வெளிப்படுத்துவதற்கும் ஆவலாய்க் காணப்பட்டார்.

இந்த ஒரு சந்தர்ப்பத்தின் போதுதான், இயேசு பேதுருவிடம் விசேஷமாக, “”யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?” என்று கேட்டார்; அதாவது இந்தப் படகுகள், வலைகள், முதலானவைகளைக் காட்டிலும், அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா? என்று கேட்டார். பேதுருவிடம் கேட்கப்பட்ட கேள்வியானது, அனைவருக்கும் பொருந்துகின்றதாக இருப்பினும், இக்கேள்வியானது அனைவருக்கும் மூப்பனார் போன்றும், தலைவன் போன்றும் காணப்பட்டவரும், கொஞ்சம் நாட்களுக்கு முன்பதாக, “”அனைவரும் உம்மைக் கைவிட்டுப் போனாலும், நான் போகேன்” என்று கூறினவருமாகிய பேதுருவுக்கே விசேஷித்த அழுத்தம் கொண்டதாய்க் காணப்பட்டது. பேதுரு கர்த்தருக்கான தன்னுடைய அன்பைத் தெரிவிக்க, ஆடுகளையும், ஆட்டுக்குட்டிகளையும் போஷிக்கும்படிக்கும் கூறப்படுகின்றார். இப்பாடம் பொருத்தமான வேளையில் கொடுக்கப்பட ஏற்ற பாடமாகவும், மீண்டும் சொல்லப்படுவதற்கு அவசியப்படாததாகவும் இருந்தது. நாம் அறிந்திருக்கிற வரையில், பேதுருவும், மற்ற அப்போஸ்தலர்களும் பிற்பாடு, அப்போஸ்தலர்களெனத் தங்களுக்குரிய ஊழியத்தினுடைய முக்கியத்துவத்தை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை, மாறாக ஆடுகளையும், ஆட்டுக்குட்டிகளையும் போஷிக்கிற வேலையில் தங்கள் முழு நேரத்தையும், சக்தியையும் கொடுத்தவர்களாகவே காணப்பட்டனர். இந்த (மீனின்) அற்புதமானது, பூமிக்குரிய காரியத்தில் தங்களை ஆசீர்வதிப்பதற்குரிய (அ) தடைப்பண்ணுவதற்குரிய கர்த்தருடைய வல்லமையைக் குறித்து அவர்களுக்குச் சாட்சிப்பகர்ந்தது; இன்னுமாக அவருடைய அப்போஸ்தலர்களாகவும், பிரதிநிதிகளாகவும், தங்களுக்கான அனைத்துத் தேவைகளையும், அவர் சந்திப்பார் என்பதற்கும் சாட்சிப்பகர்ந்தது. படிப்பினையானது சரியான வேளையில் கொடுக்கப்பட்டது. ஒருவேளை இப்படிப்பினையானது முன்னதாகவே கொடுக்கப்பட்டிருக்குமாயின், இப்படிப்பினையானது அவ்வளவுக்குத் தாக்கமிக்கதாய் இருந்திருக்காது; அவர்கள் குழம்பிப்போய்க் காணப்படுவதற்கும், அவர்கள் மீன் தொழிலில் இறங்குவதற்கென முடிவு எடுப்பதற்கும், அனுமதி வழங்கப்பட்ட காரியமும், பின்னர் அவர்களின் மீன் பிடிக்கும் முதலாம் நாளிலேயே, இந்த ஆற்றல் மிக்கப் படிப்பினையைக்கொடுத்த காரியமும், (தெய்வீக) ஞானத்தினுடைய பங்காகும். அது நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதல் பற்றின ஒரு படிப்பினையாகும்; மற்றும் அது அவர் நிலைமையில் மாற்றம் அடைந்துள்ளார், அதாவது அவர் இனி ஒருபோதும் மனிதனாகிய கிறிஸ்து இயேசுவாகவும், மனித நிலைமைகளுக்குக் கீழ்ப்பட்டவராகவும் இல்லை என்பதை விவரித்துக் காண்பித்தது; மீண்டும் அவர் மறைந்து போய்விட்டார்; ஆனால் அடுத்ததாக அவர்களை ஒரு குறிப்பிட்ட இடத்தில் சந்திப்பதாகக்கூறி மறைந்தார்.

இந்த அடுத்த சந்திப்புதான், அப்போஸ்தலனாகிய பவுலால் குறிப்பிட்டுள்ளபடி, ஒரே நேரத்தில் ஐந்நூறு சகோதர சகோதரிகளுக்குக் கர்த்தர் காட்சியளித்துத் தோன்றின சம்பவமாக இருக்க வேண்டுமென்பதில் ஐயமில்லை. இந்தச் சந்திப்பின்போது, போதிக்கப்பட்ட பல்வேறு படிப்பினைகள் குறித்து, நமக்கு முழு விவரமும் தெரியாது என்றாலும், படிப்பினைகளானது வார்த்தைகளின் விதத்தைக் காட்டிலும், நடைமுறை விதத்தில்தான் காணப்பட்டிருக்க வேண்டும் என்று நாம் எண்ணுகின்றோம்; இந்தக் கர்த்தருடைய காட்சிகள், வெளிப்படுத்துதல்கள் அனைத்துமே, கர்த்தர் உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதையும், அவர் பூமிக்குரிய நிலைமையிலிருந்து ஆவிக்குரிய நிலைமைக்கு மாற்றம் அடைந்துள்ளார் என்பதையும் அவர்கள் நம்ப வேண்டும் என்ற நோக்கத்திற்கேயாகும்.””

இறங்கினவரே உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார்

அடுத்ததாக நமது கர்த்தர், தாம் பரம் ஏறிச்செல்லும்போது ஒலிவ மலையில் காட்சிளித்துத் தோன்றினார். அப்போஸ்தலர்கள் அனைவரும் மற்றும், அநேகமாக மற்றவர்களும் எருசலேமுக்கும், ஒலிவ மலைக்கும் வந்திருந்திருக்க வேண்டும்; மேலும், உன்னதத்திலிருந்து வரும் வல்லமையினால் தரிப்பிக்கப்படும் வரையிலும், அவர்கள் எருசலேமிலேயே தங்கியிருக்க வேண்டுமென்று கர்த்தர் அவர்களுக்குக் கூறியிருந்தார். இப்படியாகக் கர்த்தர் இறுதியான அறிவுரைகளைக் கூற அவர்கள் கேட்டுக்கொண்டிருக்கும்போது, அவர் அவர்களை விட்டுப் பிரிந்தார்; அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, இயேசுவின் உருவம் படிப்படியாக மேகங்களுக்குள்ளாக, அவர்களுடைய பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. இப்படியான முறைமையை அவர் கையாண்டதின் மூலமாக, இன்னமும் ஆவியினால் ஜெநிப்பிக்கப்படாததினிமித்தம், ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துக்கொள்ள முடியாமலிருந்த சீஷர்களுக்கு, முடிந்தமட்டுமான சிறந்த நன்மையையே அவர் செய்திருக்கின்றார். கண்களுக்குப் புலப்படாமல் ஆவியாய் இருந்த தம்மை, அவர் மாம்ச பிரகாரமாக [R3377 : page 173] வெளிப்படுத்தினார். இதை அப்போஸ்தலர்களால் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட பிற்பாடு புரிந்துக்கொள்ள முடியும். இப்படியாக அவர்கள் நமக்குப் பதிவு பண்ணினவைகள், மாம்ச மனிதனுடைய கண்ணோட்டத்தில் அல்லாமல், ஜெநிப்பிக்கப்பட்ட கண்ணோட்டத்திலேயே நமக்குக் கடந்து வந்துள்ளது.

இப்பாடத்தினுடைய சாரமானது, “”கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்” (1 கொரிந்தியர் 15:20) என்ற வசனத்தின் வார்த்தைகளில் அடங்கியவைகளேயாகும். அநேகர் மரணம் எனும் நித்திரையினின்று தற்காலிகமாக (இயேசுவின் அற்புதங்களினால்) எழுந்திருந்தும், பிற்பாடு மீண்டும் மரண நித்திரைக்குள்ளாகவே கடந்துச் செல்பவர்களாய்க் காணப்படுகின்றனர்; ஆனால் நமது கர்த்தரோ, மரித்தோரிலிருந்து முதலாவதாக எழும்பினவராகவும், நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானவராகவும் காணப்பட்டார்; மேலும் அப்போஸ்தலர் கூறியுள்ளது போன்று, “”மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராக” இருக்க வேண்டியுள்ளது (அப்போஸ்தலர் 26:23). அவருடைய உயிர்த்தெழுதல் என்பது ஜீவனுக்கேதுவான உயிர்த்தெழுதலாகும். அதாவது, ஆவிக்குரிய தளத்தில் பரிபூரணம்/நிறைவு அடைதலுக்கான உயிர்த்தெழுதலாகும். நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார் என்று சொல்லுகிறபோது, இப்படியாகவே மற்றச் சிலரும் நித்திரையடைந்துள்ளார்கள் என்பதையும், அப்படிப்பட்டவர்கள் இந்தப் பிரகாரமாகவே ஆவிக்குரிய ஜீவிகளாக, உயிர்த்தெழுதலில் வருவார்கள் என்பதையும் குறிப்பிடுகின்றதாய் இருக்கின்றது. முதற்பலன் என்கிறபோது, இதே வகையாக மற்றவர்களும் காணப்படுவதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலே, மற்ற அனைத்து உயிர்த்தெழுதலுக்கும் முன்னதாகச் சம்பவிக்கும் எனும் விதத்தில், நமது கர்த்தர் நித்திரையடைந்தவர்கள் அனைவரிலும் முதற்பலனானவராக மாத்திரம் இராமல், அவர் அவருடைய சரீரமாகிய சபை எனும் முதற்பலன்களிலும், முதற்பலனானவராகவும் காணப்படுகின்றார். இன்னொரு விதத்தில் பார்க்கும்போது, முழு உலகத்திலேயே, தலையும், சரீரமுமாகிய கிறிஸ்துதான் ஜீவனுக்குள் வரும் விஷயத்தில் முதற்பலன்களாக இருக்கின்றனர். “”அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார்” (யாக்கோபு 1:18).

இப்படியாக முதற்பலன்களை நாம் இரு கண்ணோட்டத்தில் பார்க்கின்றோம்; உதாரணத்திற்கு, வசந்த காலத்தில் விளையும் மற்றப் பழங்களுக்கு முன்னதாக செம்புற்றுப் பழம் (Strawberry) வருவதினால் நாம் செம்புற்றுப்பழங்களை முதற்பலன்கள் என்று கூறுவோம்; இப்படியாகவே சபை தேவனுடைய சிருஷ்டிகளிலேயே முதற்பலன் என்று சொல்லும்போது, சபையும், மீதமான உலகமனைத்தும் ஒரே சுபாவத்தில் காணப்படுவார்கள் என்பதாக இராது. இன்னுமாக முதலாவதாகப் பழுக்கும்/கனியும் செம்புற்றுப் பழங்கள், செம்புற்றுப் பழங்களிலேயே முதற்பலன்கள் என்றும் நாம் கூறுவோம். இப்படியாகவே நமது கர்த்தர், சபையில் முதற்பலனானவராக இருக்கின்றார்; மேலும் சபை, ஒட்டுமொத்த சிருஷ்டிகளிலுமே முதற்பலன்களாய் இருப்பதினால், கர்த்தர் சபையில் மாத்திரமல்லாமல், ஜீவனுக்கும், பரிபூரணத்திற்கும், மரணத்திலிருந்து எழுப்பப்படுபவர்கள் அனைவரிலும் இந்தத் தலைமையான இடத்தைக்கொண்டிருக்கின்றார்.