R5096 – தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5096 (page 282)

தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல

GOD’S WORD NOT MAN’S

மாற்கு 7:1-13

“தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.” – ரோமர் 14:17

பதினெட்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர், தெய்வீக நியாயப்பிரமாணங்களைக் கவனமாகக் கைக்கொள்வதாக அறிக்கைப் பண்ணிக்கொண்டும், கைக்கொள்ளும் விஷயத்தில் காணப்படும் தங்களது உண்மைத் தன்மையைக்குறித்துத் தற்பெருமையடித்துக் கொண்டும் இருந்த பரிசேயர்கள், படிப்படியாக, தேவனுடைய வார்த்தைகளிடமிருந்து விலகிப்போய், மனித பாரம்பரியத்தைப் பின்பற்றுகிறவர்களுமானார்கள் என்பதையே இன்றைய நமது பாடம் காட்டுகின்றது. இப்படியாகவே இன்றைய யூதர்களும் காணப்படுகின்றனர். பழைய ஏற்பாட்டின் பரிசுத்தமான வேதவாக்கியங்களை இன்றைய யூதர்கள் வாசித்தாலுங்கூட, அது அவர்கள் புரிந்துக்கொள்ள முடியாத முத்திரிக்கப்பட்ட புஸ்தகமாகக் கருதப்படுகின்றது. மேலும், இதைப் புரிந்துக்கொள்வதற்கு முயற்சி எடுப்பதற்குப் பதிலாக, இவர்கள் தல்மூது (Talmud) என்ற யூத வேதாகமத்தைப் படித்துக்கொண்டு, இதன்படித் தங்களது வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர். இந்த Talmud எனும் யூத வேதாகமமானது, ஞானம் மற்றும் ஞானமற்ற வாக்கியங்களைக் கொண்டுள்ளது; புத்தியுள்ள மற்றும் மடத்தனமான அறிவுரைகளைக் கொண்டுள்ளது; இதன் அடிப்படையிலேயே ஆச்சாரமான யூதர்கள் தங்களுடைய மதசம்பந்தமான உணர்வுகளை வனையப்பெற்றிருக்கின்றனர்.

இன்றைய கிறிஸ்தவர்களுடைய விஷயத்திலும் இப்படியாகவே உள்ளது. வேதாகமம்தான் அங்கீகரிக்கப்பட்ட மாதிரியாக அங்கீகரிக்கப்பட்டாலும், ஒவ்வொரு கிறிஸ்தவப் பிரிவுகளுக்கும், சொந்த கொள்கைகளும், சொந்த புஸ்தகங்களும், சொந்த வினாவிடை புஸ்தகங்களும் உள்ளது. வேதாகமம் வாசிக்கப்பட்டாலுங்கூட, அவரவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விசுவாசப் பிரமாணத்தின் விளக்கங்களே கிறிஸ்தவர்களின் மனதில் காணப்பட்டு, வேதாகமத்தைத் திரையிட்டு மூடிவிடுகின்றது. ஆகவேதான் வேதாகமத்தை நமது கரங்களில் கொண்டிருந்த போதிலும், பயபக்தியை நமது இருதயங்களில் கொண்டிருந்த போதிலும், ஒன்று சேர்வதற்கு வாய்ப்பற்ற நிலையில், 600 பல்வேறு பிரிவினர்களாகக் கிறிஸ்தவர்களாகிய நாம் பிரிந்திருக்கின்றோம். காரணம், ஒவ்வொரு பிரிவினரும், வேதாகமத்தை ஆராயும் விஷயத்தில் தங்கள், தங்கள் சொந்த விசுவாசப் பிரமாணம் எனும் மூக்குக் கண்ணாடியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்று விடாப்பிடியாய்க் காணப்படுகின்றனர். கிறிஸ்தவர்கள் உண்மையாய் ஞானமுள்ளவர்கள் என்றால், அவர்களை நீண்ட காலமாகப் பிரித்து வைத்ததும், தேவனுடைய வார்த்தைகள் அநேகவற்றிற்குத் தவறான அர்த்தம் கொடுத்ததும், நமது மனங்களைக் குழப்பி வைத்திருந்ததுமான இந்த விசுவாச பிரமாணம் எனும் மூக்குக் கண்ணாடிகளைக் கிறிஸ்தவர்கள் தள்ளி வைத்துவிடவும், அழித்து விடவும் முற்படுவார்கள் அல்லவா?

கிறிஸ்தவர்கள் உண்மையாய் ஞானமுள்ளவர்கள் என்றால், அவர்கள் பரம ஆலோசனைகளையும், பரம ஞானத்தையும் எடுத்துக்கொண்டு, வேதாகமத்தின் ஒவ்வொரு பக்கங்களிலும் பிரகாசிக்கும் ஒளியில், தேவனுடைய வார்த்தைகளைப் புதிதாய்ப்படிக்க/ஆராய ஆரம்பிக்க முற்படுவார்கள் அல்லவா? இதனை கோட்பாடு/வார்த்தை அளவில் அனைவரும் நிச்சயமாய் ஒத்துக்கொள்வோம்; இந்த நமது தீர்மானத்தை நாம் நடைமுறையிலும் செயல்படுத்தலாம் அல்லவா?

கழுவப்படாத கைகளினால் புசித்தல்

இயேசுவைப் போன்ற ஒரு திறமிக்க நபரைத் தங்களுடைய கூட்டத்தில் சேர்த்துக்கொள்வதிலும் அதாவது, தங்களுடைய செய்கைகளுக்கு ஒத்த செய்கை செய்பவராக, தங்களுடைய கூட்டத்தில் ஒருவராகச் சேர்த்துக்கொள்வதிலும், இப்படியாக அவராலும் தாங்கள் அங்கீகரிக்கப்பட்டவர்கள் என்று காண்பித்துக்கொள்வதிலும் பரிசேயர்கள் பிரியப்பட்டிருப்பார்கள். நீதி, இரக்கம் மற்றும் அன்பின் அடிப்படையிலுள்ள, அவருடைய போதனைகளிலுள்ள உயர்வான தன்மையை அவர்கள் கவனிக்காமலும் இருக்கவில்லை. ஒருவேளை அவர் அவர்களது சடங்காச்சாரங்களுக்கும் ஆதரவு கொடுத்திருப்பாரானால், ஒருகாலத்தில் அவர்களை நடுங்கச் செய்யும் அளவுக்கு அவர் பேசின உண்மைகளைக்கூட அவருக்கு மன்னித்து விட்டிருப்பார்கள். அவருக்கு நிகராக யாரும் இருக்கவில்லை. அசுத்தத்துடன் காணப்பட்டவர்களுக்கு அவர் மிதமிஞ்சின பரிசுத்தத்தை கொண்டவர் போன்று தோன்றினார்; மாய்மாலமாய் அறிக்கைப் பண்ணிக்கொண்டு திரிந்தவர்களின் பார்வையில், அவர் மிதமிஞ்சின நேர்மையைக் கொண்டவர் போன்று தோன்றினார்; உலக ஞானிகளென இருந்தவர்களுடைய பார்வையில், அவர் வெளிப்படையாய்ப் பேசும் தன்மையை மிதமிஞ்சின அளவில் கொண்டவராகவும், மிதமிஞ்சின உண்மையுள்ளவர்போன்றும் தோன்றினார்.

இயேசுவின் பின்னடியார்கள் ஏன் தல்மூது (Talmud) எனும் யூத வேதாகமத்திற்கு இசைவாகப் போதிக்கப்படவில்லை. அதாவது, புசிப்பதற்கு முன்னதாக, மத ரீதியான கடமையாக/சடங்காக எப்பொழுதும் கைகளைக் கழுவிக்கொள்ளும் விஷயத்தில் ஏன் மிகவும் கவனமாய் இருக்கும்படிக்குப் போதிக்கப்படவில்லை என்று பரிசேயர்கள் கேள்வி கேட்கும் விஷயமே இப்பாடத்தில் காணப்படுகின்றது. அசுத்தமாக இருப்பது தொடர்பான எந்த மாதிரியையும், இயேசு தம்முடைய பின்னடியார்களுக்கு முன்பாக வைக்கவில்லை என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை. எந்தளவுக்கு ஒருவருடைய இருதயத்திற்குள் சத்தியம் பிரவேசிக்கின்றதோ, அவ்வளவாக அச்சத்தியமானது, முழு வாழ்க்கையின் மீது மனரீதியிலும், ஒழுக்க ரீதியிலும், சரீர ரீதியிலும் சுத்திகரிப்பிற்கு ஏதுவான தாக்கத்தை உண்டுபண்ணும் என்பதை நாம் அறிவோம். பரிசேயர்கள் இங்குக் குறிப்பிடுவது, கைகள் சுத்தமாகவோ (அ) சுத்தமில்லாமலோ காணப்பட்டாலும், சடங்காச்சாரமாகக் கைகளைக் கழுவுதல் என்ற மதத்தின் அம்சத்தையே ஆகும். இதையே இயேசு மறுத்தார். இப்படியாக, அவரால் போதிக்க முடியாது. ஏனெனில், இப்படிச் செய்வது என்பது, சடங்காச்சாரமான மாய்மாலமாகிவிடும். வேறு ஒரு தருணத்தில், இப்படியாகப் பரிசேயர்கள் தங்களையும், தங்களது பாத்திரங்களையும், கடமையானவிதத்திலும், சடங்காச்சாரமானவிதத்திலும் அருமையாகக் கழுவிக்கொள்வது என்பது, அவர்களுடைய அதிகப்படியான நேரத்தை எடுத்துக்கொள்கின்றது என்றும், இம்மாதிரியாக ஏழைகள் தங்களைக் கழுவிக்கொள்வதற்கு, வேலையாட்களைக் கொண்டிராததால், இவ்விஷயம் ஏழைகளுக்குப் பாரமாக உள்ளது என்றும் இயேசு கூறியுள்ளார். இப்படியாகக் கழுவிக்கொள்ளாதவர்கள் அசுத்தமாய், பரிசுத்தமில்லாமல் இருக்கின்றார்கள் எனவும், தெய்வீக ஒழுங்குகளுக்கு எதிராக இருக்கின்றார்கள் எனவும், உண்மையான யூதர்களல்ல எனவும் (யூதர்களால்) கருதப்படுகின்றனர்.

இவ்விஷயம் தொடர்பாக இயேசு, பரிசேயர்களுக்கு “”இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது [R5096 : page 283] என்றும், மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கத்தரிசனம் சொல்லியிருக்கிறான். நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டு வருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார்” (மாற்கு 7:6-8).

தேவனால் கட்டளையிடப்படாமல், மனிதனால் கட்டளையிடப்பட்டுள்ள தல்மூது (Talmud) எனும் யூத வேதாகமத்தின் சடங்காச்சாரமான கழுவுதல்களுக்கு, ஸ்நானம் பண்ணுவதற்கு அதிக கவனம் செலுத்திக்கொண்டு, பரிசேயர்கள் எப்படி, தெய்வீகக் கட்டளைகளைப் புறக்கணிக்கின்றார்கள் என்பதற்கான உதாரணத்தை, இயேசு அவர்களுக்குக் கூறினார். தாய், தகப்பனைக் கனம் பண்ண வேண்டும் என்பதும், இவர்களில் எவரையேனும் நிந்திக்கிறவன் கொல்லப்பட வேண்டும் என்பதும், மோசேயின் நியாயப்பிரமாணம் கட்டளையிட்ட காரியமாகும். ஆனால், தல்மூது (Talmud) மூலம் இந்தக் கட்டளை மாற்றப்பட்டுள்ளது; தேவனுக்கும், மத அனுசரிப்பிற்கும் சில பொருள்களையும், தன்னையும் காணிக்கையாக்குவதன் வாயிலாக ஒரு மனுஷன், தனது பெற்றோர்களிடமிருந்து விடுதலையாகின்றான் என்று தல்மூது கூறுகின்றது. இப்படியாகச் செய்வதன் மூலம், ஒருவன் தனது பெற்றோருக்கான சகல கடமைகளிலிருந்தும் விடுதலையாகின்றான். இப்படியாக பெற்றோருக்கான கடமை தொடர்புடைய தேவனுடைய நேரடியான கட்டளையை, தல்மூது வீணானதாக்குகின்றது; இதைச் செய்வதற்கு இவர்களுக்கு அதிகாரம் இல்லை.

இதுவே இயேசுவின் போதனைகளுக்கும், பரிசேயர்களின் போதனைகளுக்குமிடையேயுள்ள முரண்பாடாகும். இவர்கள் இருவருமே பரிசுத்தமுள்ளவர்களாய் இருக்கிறார்கள் என்றும், தெய்வீகப் பிரமாணங்களைக் கவனமாய்க் கடைப்பிடிக்கின்றார்கள் என்றும், உரிமை கோரிக்கொண்டார்கள்; ஆனால், இயேசுவோ தேவனுடைய வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டவராகவும், முன்னோர்களுடைய பாரம்பரியங்களையும், தல்மூதையும் (Talmud) புறக்கணித்தவராகக் [R5097 : page 283] காணப்பட்டார். மேலும், பரிசேயர்களோ தேவனுடைய வார்த்தைகளைப் புறக்கணித்துப்போட்டு, பாரம்பரியங்களைப் பிடித்துக் கொண்டிருந்தவராகக் காணப்பட்டனர். கிறிஸ்தவர்களாகிய நாம் இன்று என்ன செய்கின்றோம்? “”உண்மையுள்ள வார்த்தைகளை நாம் பற்றிக்கொள்வோமாக.” நம்மை ஞானமுள்ளவர்களாக்கும், “”தேவனுடைய வசனத்தை” பற்றிக்கொள்வோமாக. வேத வாக்கியங்களைத் தினந்தோறும், கருத்தாக ஆராய்வோமாக, மற்றும் வேதவாக்கியத்திற்கு முரண்பாடாயுள்ள அனைத்தையும் நாம் புறக்கணித்து விடுவோமாக.

தேவனுடைய இராஜ்யம் எது?

நம்முடைய பாடத்தின் ஆதார வசனமானது, தவறாய்ப் புரிந்துக்கொள்ளப்பட்டு, நீதியும், சமாதானமும், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமும்தான் தேவனுடைய இராஜ்யம் என்று அர்த்தம் கொள்ளப்படுகின்றது. இது முற்றிலும் தவறான கருத்து என்று இவ்வசனத்தில் உரைக்கப்பட்ட சந்தர்ப்பமானது காட்டுகின்றது. இதை நாம் பார்க்கலாம்.

வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இராஜ்யம் தொடர்பாக, நாம் ஏற்கெனவே பார்த்துள்ளதை, அதாவது மனுக்குலத்தைச் சீர்த்தூக்குவதற்குரிய, மேசியாவின் ஆயிரம் வருஷம் ஆளுகையே அந்த இராஜ்யம் என்பதையும், அந்த இராஜ்யத்தில் சபை, இயேசுவுடன் அவருடைய இராஜ்யத்தின் மகிமையிலும், வல்லமையிலும், கனத்திலும் பங்கடைந்திருப்பார்கள் என்பதையும் நாம் நினைவில் கொண்டிருப்போமாக. இந்தச் சுவிசேஷ யுகத்திற்கான அழைப்பானது, இந்த மணவாட்டி வகுப்பாரைத் தெரிந்தெடுத்துக் கொண்டு, அவர்களை வளரச்செய்து, “”ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, அவர்களைத் தகுதியுள்ளவர்களாக்குவதற்குமே” ஆகும்.

இந்தக் காலத்தில் இப்படியாக அழைக்கப்படுபவர்கள், மணவாட்டியாக, ஆட்டுக்குட்டியானவரின் மனைவி ஆகத்தக்கதாகவே அழைக்கப்படுகின்றனர்; இவர்கள் கருநிலையில் அல்லது முழுவதும் வளர்ச்சியடையாத நிலையிலுள்ள இராஜ்யமாக இருக்கின்றனர். இராஜ்யத்தின் இந்தத் தேர்வுக்கு உட்பட்டிருக்கும் அங்கங்களைக்குறித்து வேதவாக்கியங்கள், இவர்கள் பத்துக் கற்பனைகளில் வெளிப்படும் மோசேயின் நியாயப்பிரமாணத்தின் கீழ் இல்லை என நமக்குக் கூறுகின்றது; இவர்கள் நியாயப்பிரமாணத்தின் வாயிலாக நித்தியஜீவளை எதிர்ப்பார்க்கவில்லை. மாறாக, கிருபையின் கீழே இவர்கள் காணப்படுகின்றனர்; கிறிஸ்துவின் மரணத்தினுடைய புண்ணியத்தின் வாயிலாக, தேவன் இவர்களுக்கு ஏற்படுத்தியுள்ள ஒரு கிருபையான ஏற்பாட்டின் கீழாகவே இவர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் யூதர்களுடைய நியாயாப்பிரமாணத்தினுடைய பல்வேறு கட்டளைகளிலிருந்து விடுவிக்கப்பாட்டாலும், இவர்கள் பிரமாணம் கொண்டிராமல் இல்லை என்றும், இவர்கள் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கங்களாக மாபெரும் திவ்விய பிரமாணத்தின் கீழேயே காணப்படுகின்றனர் என்றும் பரிசுத்தவானாகிய பவுல் சுட்டிக்காட்டியுள்ளார். நம்முடைய மாம்சத்தின் பெலவீனம் காரணமாக, நம்மால் பிரமாணத்தின் ஆவிக்கேற்ப முழுமையாக நடக்க முடியாவிட்டாலுங்கூட, நாம் “”மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடக்கும்” போது, புதுச் சிருஷ்டிகளாக நாம் திவ்வியப் பிரமாணத்தின் உண்மையான அர்த்தத்தை நிறைவேற்றுகின்றவர்களாக இருப்போம் என்று பரிசுத்தவானாகிய பவுல் கூறுகின்றார். புதிய சிந்தை அதாவது, வாஞ்சைதான் நியாயந்தீர்க்கப்படுகின்றதே ஒழிய, மாம்சம் அல்ல.

இப்படியாக, கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அங்கத்திற்குள் வந்திட்ட புறஜாதிகளுக்கு, யூதர்களுடைய நியாயப்பிரமாணம் கேட்கும் விஷயங்களுக்கு ஒத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. உதாரணத்திற்கு, யூதனைப் பொறுத்தமட்டில், நியாயப்பிரமாணத்தின்படி அவன், செதிள் இல்லாத மீன்கள், முயல், பன்றி முதலானவற்றின் மாம்சத்தைப் புசிக்கக்கூடாது. மேலும், அவன் புசிக்கும் மற்றும் பானம் பண்ணும் விஷயங்களில் பல்வேறு விதங்களில் அவனுக்குக் கட்டுப்பாடு உள்ளது. ஆனால், இந்தக் கட்டுப்பாடுகளில் எதுவும் நியாயப்பிரமாண உடன்படிக்கையின் கீழ் ஒருபோதும் இராமல், கிறிஸ்தவர்களாக மாறியுள்ள புறஜாதியினருக்குப் பொருந்தாது.

நம்முடைய பாடத்தின் ஆதார வசனத்தில், புசிப்பதிலும், பானம் பண்ணுவதிலும் கிடைத்துள்ள இந்தச் சுயாதீனங்கள் என்பது, இந்தக் கருநிலை இராஜ்ய வகுப்பாருக்கு தற்காலத்து ஜீவியத்திற்குரிய உண்மையான ஆசீர்வாதங்களாகக் கருதப்படக்கூடாது என்பதையே பரிசுத்த பவுல் வலியுறுத்துகின்றார். இவைகளுக்கும் மேலாக, இவ்வகுப்பாருக்குரிய உண்மையான ஆசீர்வாதங்கள் என்பது, நீதியிலும், சமாதானத்திலும், பரிசுத்த ஆவியின் சந்தோஷத்திலுமுள்ள இவர்களது களிகூருதலிலேயே அடங்குகின்றது. இவர்களுடைய மனங்கள் புதிதாகிறதினாலே, மறுரூபமடைந்த இவர்கள் நீதியையும், சத்தியத்தையும் உணர்ந்துக்கொண்டு, அதை விரும்பும் நிலைக்கு வந்துள்ளனர்; தீமையைப் பார்க்கிலும் நல்லவைகளையும், அசுத்தத்தைப் பார்க்கிலும் சுத்தமானதையும், பூமிக்குரியவைகளைப் பார்க்கிலும் ஆவிக்குரியவைகளை விரும்பும் நிலைக்கு இவர்கள் வந்துள்ளனர்; பூமிக்குப்பதிலாக இவர்களுடைய குடியுரிமை இன்று பரலோகத்தில் காணப்படுகின்றது. “”எல்லா புத்திக்கும் மேலான தேவனுடைய சமாதானத்தை” இவர்கள் உணரும் நிலைக்குள் வந்துள்ளனர்; மேலும், இந்தச் சமாதானம், இவர்களுடைய இருதயத்தில் ஆளுகை செய்வது என்பது, கருநிலையிலுள்ள இராஜ்ய வகுப்பாரின் அங்கங்களாக, இவர்கள் அனுபவிக்கும் பிரம்மாண்டமான ஆசீர்வாதங்களில் ஒன்றாகும்.

“”துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.” “”துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக்கூடாமல்….” (ஏசாயா 48:22; 57:20). கிறிஸ்துவுடன், அவருடைய இராஜ்யத்தின் வகுப்பாருக்குரிய அங்கங்களாக நாம் இணைந்ததின் விளைவே, நமக்கான பரம சமாதானமும், தேவனிடத்திலுமான நம்பிக்கையுமேயாகும். இதையே நாம் உயர்வாகக் கருதுகின்றோமே ஒழிய, பன்றியின் மாம்சத்தைப் புசிக்கும் சிலாக்கியத்தை அல்லது யூதர்களுக்குத் தடைப்பண்ணப்பட்ட ஏதோ ஒன்றைப் புசிக்கும் சிலாக்கியத்தை நாம் விசேஷமானதாகக் கருதுவதில்லை. பரிசுத்த ஆவியால் உண்டாகும் சந்தோஷம், அதாவது பிதாவுடனும், குமாரனுடனும், நீதியின் ஆவியையுடைய அனைவருடனுமுள்ள ஐக்கியம் என்பது கரு நிலையில் இருக்கும் இராஜ்ய வகுப்பாரிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினருக்கும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் ஒவ்வொரு அங்கத்தினருக்குக் கிடைத்திட்ட ஆசீர்வாதமான சிலாக்கியமாகும்.

இப்படியாக, இவ்வகுப்பார் பெற்றுள்ள பல்வேறு தயவுகளுக்குரிய தகுந்த மதிப்பை, அப்போஸ்தலர் முன்வைக்கின்றார். ஆகையால், கர்த்தருடைய நோக்கத்தினுடைய நலனுக்கடுத்த காரியங்களுக்காக அல்லது கிறிஸ்துவுக்குள்ளான சகோதரருடைய நலனுக்கடுத்தக் காரியங்களுக்காக, இவர்கள் உணவு மற்றும் பானம் சம்பந்தமான விஷயங்களில் தங்களது சுயாதீனத்தை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் ஏற்படும் பட்சத்தில், இவர்கள் கிறிஸ்துவினிமித்தமாகவும், சகோதரர்களினிமித்தமாகவும் செய்யும்/மேற்கொள்ளும் இப்படியான சுயத்தில் வெறுத்தல்கள், ஒரு பெரிய விஷயமாகக் (இவர்கள்) கருதக்கூடாது; அதாவது, சந்தோஷத்துடன் ஏறெடுக்கும் தியாகங்களாகக் கருதப்பட வேண்டும். ஏனெனில், இப்படியான தியாகங்கள் எவ்விதத்திலும் கிறிஸ்துவுக்குள்ளான நமது ஆசீர்வாதங்களின் மற்றும் சிலாக்கியங்களின் உண்மையான மதிப்பைக் குறிக்கிடவோ அல்லது தொந்தரவோ செய்வதில்லை.