R5425 – சீஷத்துவத்திற்கான விலை

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5425 (page 90)

சீஷத்துவத்திற்கான விலை

THE COST OF DISCIPLESHIP

லூக்கா 14:25-35

“”தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான்.” (மத்தேயு 16:25).
அது மாபெரும் போதகருடைய ஊழியத்தின் நிறைவு காலமாய் இருந்தது. அவரைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த திரளான ஜனக்கூட்டத்தினர், நியாயப்பிரமாணத்தின்படி, பஸ்கா பண்டிகையைக் கைக்கொள்ளும்படிக்கு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தனர்; இயேசுவும் தாம் பஸ்கா பண்டிகையின்போது, நிஜமான பஸ்கா ஆடாக மரிக்கப்போவதையும் முன்கூட்டியே அறிந்தவராக இருந்தார். அவ்வப்போது பிரயாணத்தில் இயேசு திரும்பி, ஜனக்கூட்டத்தாரில் சிலருக்குப் போதகம் பண்ணினார். இன்றைய பாடத்தில் நாம் அவரால் இத்தருணங்களின் போது கொடுக்கப்பட்ட சில போதனைகளைப் பார்க்கப் போகின்றோம். அக்காலத்தில் போதகர்கள் மாணவர்களை (அ) சீஷர்களை ஏற்றுக்கொள்வது வழக்கமாய் இருந்தது; அதாவது தங்களை மாபெரும் போதகர்களாகக் கருதி, தங்களிடத்திலிருந்து கற்றுக்கொள்ள விரும்பும், தங்கள் அறிவுரைகளினால் நன்மையடைய விரும்பும் மாணவர்களை ஏற்றுக்கொள்வது அக்காலத்தில் போதகர்களின் வழக்கமாயிருந்தது. இன்றும் கூடக் கிறிஸ்தவர்கள் தங்களை இயேசுவின் பின்னடியார்கள் (அ) சீஷர்கள் எனக் கூறுகின்றனர்; இன்னுமாக அவருடைய வார்த்தைகளுக்குச் செவிசாய்ப்பதாகவும், அவர் தம்முடைய உண்மையுள்ள பின்னடியார்களுக்கு வாக்களித்துள்ள ஆசீர்வாதங்களை நாடுவதாகவும் கூறுகின்றனர்.

அவருடைய வாய்க்கருவிகள் என்றும், அவருடைய ஊழியர்கள் என்றும் தங்களைக் குறித்துக் கூறிக்கொள்பவர்கள் தெரிவிக்கும் காரியங்களிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டதாக, இயேசு முன்வைத்துள்ள சீஷயத்துவத்தின் நிபந்தனைகள் காணப்படுவது கவனிக்கப்படலாம். சபையில் எழும்பி நின்று ஒருவன், தான் தேவனுடைய ஜனங்களின் ஜெபத்தை விரும்புவதாகக் கூறுவதே, சீஷயத்துவத்திற்குப் போதுமான அடையாளமாக இருக்கின்றது எனச் சிலரால் சிலசமயம் கூறப்படுகின்றது. இன்னுமாக இப்படியாக தேவனுடைய ஜனங்களின் ஜெபங்களை விரும்புவதாகக் கூறுகின்றவன், கிறிஸ்தவனாக மனமாறியுள்ளான் என்று எண்ணப்படுகின்றான். இந்த ஒரு படியை அவன் அடியெடுத்து வைப்பதற்குக் கூடத் தூண்டுதல்கள் தேவைப்படுகின்றதாம். சிலசமயம் இத்தகைய தூண்டுதல்கள் வர்த்தக அடிப்படையில், அதாவது வியாபாரிக்கு, அதிகமான செழிப்பு, தொழிலில் ஏற்படுவதன் மூலம் அல்லது, வேலைக்காரனுக்கு, தன்னுடைய எஜமானிடத்தில் மாபெரும் தயவு கிடைப்பதன் மூலம் அல்லது அரசியல் வேலையில் நல்ல வாய்ப்புப் பெற்றுக்கொள்வதன் மூலம் தூண்டுதல்கள் ஏற்படுகின்றதாம்.

இவைகளையெல்லாம், நாம் இப்பாடத்தில் பார்க்கப்போகும் இயேசுவினுடைய வார்த்தைகளுடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, பெரும்பாலான பெயர்க் கிறிஸ்தவர்கள், [R5425 : page 91] தாங்கள் அறிக்கைப் பண்ணவேண்டும் என்று ஒருபோதும் நோக்கம் கொண்டிராதவைகளையே, நயமான தூண்டுதலினால் அறிக்கைப் பண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்பதை நாம் புரிந்துக்கொள்ள முடியும். சீஷயத்துவத்தற்கான ஆண்டவருடைய நிபந்தனைகளின்படி, ஒருபோதும் கிறிஸ்தவர்கள் ஆகாத அநேகரும், மற்றும் அவருடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுக்காத அநேகரும் கிறிஸ்தவத்தை அறிக்கைப்பண்ணத்தக்கதாகப் பொறியில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர். “”யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்” (லூக்கா 14:26-27). இப்படியான தெளிவான வார்த்தைகளையும், நிபந்தனைகளையும் தவறாய்ப் புரிந்துக்கொண்டுள்ளோம் என்று சொல்ல எந்தச் சாக்குப்போக்கும் இல்லை. அவருடைய சீஷர்களால் மாத்திரமே நித்தியத்திற்கான ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று ஆண்டவர் சொல்லவில்லை. முழு உலகமும் தொலைந்துப்போய், தேவனிடத்திலிருந்து பிரிந்துப் போய், நித்திய ஜீவனுக்கான உரிமை இல்லாமல் காணப்படுகின்றது என்பதே அவருடைய பொதுவான போதனையாக இருக்கின்றது. அநீதியுள்ளவர்கள் அனைவரும், தெய்வீகத் தயவிற்குள்ளாக திரும்புவதற்காக வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, ஆண்டவர் “”அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்” மரிக்க வந்திட்டார். எதிர்கால ஜீவியத்திற்கான இப்படிப்பட்ட வாய்ப்பினை, அவருடைய பின்னடியார்கள் தவிர, வேறு எவரும் பெற்றுக்கொள்வதில்லை என்று இயேசு சொல்லவில்லை. இப்படியாகவெல்லாம் தவறாய்க் கூறுபவர்கள், தங்களையே குழப்பிக் கொள்ளுகிறவர்களாய் இருப்பார்கள்.

“”உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியாகிய மெய் ஒளியாக,” ஏற்றக்காலத்தில் தாம் இருப்பார் என்றே இயேசு போதித்தார். இயேசு வருவதற்கு முன்னதாக, 4000 வருடங்களாகவே உலகம் ஏற்கெனவே காணப்பட்டு வருகின்றது; மேலும் அவர் வருவதற்கு முன்பு வாழ்ந்தவர்களுக்கு அவரை அறிவதற்கோ, அவருடைய சீஷர்களாக ஆகுவதற்கோ வாய்ப்பு இல்லை என்பதை யாரும் மறுப்பதில்லை. எனினும் இவர்களையும் ஆசீர்வதிப்பதற்காகவும், அவர்; வந்த பிறகு உலகத்தில் பிறந்த அனைவரையும் ஆசீர்வதிப்பதற்காகவுமே அவர் மரித்தார். இப்படியாக உலகத்தை ஆசீர்வதிப்பது என்பது, அவருடைய இராஜ்யத்தில் நிறைவேற்றப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்; மேலும் அவருடைய இராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதாய், இந்த யுகத்திற்குரியதாய் இராமல், எதிர்க்காலத்திற்குரியதாய் இருக்கின்றது என்றும் அவர் தெளிவாய்க் கூறியுள்ளார். அதுவரையிலும் அவர் சீஷர்களை அழைத்து மாத்திரம் கொண்டிருக்கின்றாரே ஒழிய, உலகத்தை அணுக முயற்சிக்கவில்லை. [R5426 : page 91]

சீஷர்கள் அவரோடு கூடச் சிங்காசனத்தில் உட்காரத்தக்கதாகவும், மனுஷரைச் சீர்த்தூக்கும் அவருடைய மாபெரும் வேலையில் அவருடன் பங்குக்கொள்ளத்தக்கதாகவும், அதாவது ஆதாமுக்குள் இழக்கப்பட்டு, கல்வாரியில் மீட்கப்பட்ட அனைத்தையும் மனுக்குலத்திற்குத் திரும்பக்கொடுக்கும் அவருடைய மாபெரும் வேலையில், அவருடன் பங்குக்கொள்ளத்தக்கதாகவும் அவருடைய இராஜ்யத்தில், இயேசுவுடன் உடன்சுதந்திரராகும்படிக்குச் சீஷர்கள் அழைக்கப்படுகின்றனர். மிகுந்த உபத்திரவத்தின் வாயிலாக மாத்திரமே, சீஷர்களாக இராஜ்யத்தின் வகுப்பாருக்குள் பிரவேசிக்க முடியும் என்று, அவர் சீஷர்களுக்குத் தெளிவாய்க் கூறியுள்ளார்; இன்னுமாக உபத்திரவங்கள் என்பது, நீதியின் மீதான அவர்களுடைய அன்பையும், தேவனிடத்திலான அவர்களுடைய நேர்மையையும் நிரூபித்துக் காண்பிக்கும் என்றும் தெளிவாக அவர் சீஷர்களுக்குக் கூறியுள்ளார்; இன்னுமாக சொற்பமானவர்கள் மாத்திரமே, அதாவது தேவனுடைய பார்வையில் மனுக்குலத்திலேயே மிகவும் பொறுக்கியெடுக்கப்படத்தக்கதானவர்கள் மாத்திரமே இடுக்கமான வழியைக் கண்டுபிடிக்கத்தக்கதாக, வெகு சிலரே அந்தப் பாதையில், மகிமை, கனம் மற்றும் அழியாமையின் எல்லையை அடையத்தக்கதாக, தேவன் திட்டமிட்டே பாதையை மிகவும் இடுக்கமாக ஆக்கியுள்ளார் என்றும், அவர் தெளிவாய்ச் சீஷர்களுக்குக் கூறியுள்ளார்.

இந்தக் கண்ணோட்டங்களை, நம்முடைய மனக்கண்களுக்கு முன்பாக நாம் தெளிவாக வைக்கையில், சீஷயத்துவத்திற்குக் கடுமையான நிபந்தனைகள் இருப்பது நியாயம் என்று உணரப்படலாம். இப்படியான நிபந்தனைகளுக்கு இணங்கி நடக்க விருப்பம் கொண்டு, இவ்வாறாக தேவனிடத்திலான தங்களுடைய அன்பையும், நேர்மையையும் நிரூபிப்பவர்களுக்கு மாத்திரமே, மீட்பரோடு கூட இராஜ்யத்தின் வகுப்பாருக்கு அருளப்படும் மாபெரும் வல்லமையும், கனமும், மகிமையும் கொடுக்கப்பட முடியும். இந்த வார்த்தைகளை நாம் கவனமாய் ஆராய்வோமாக் இதற்கிடையில் நம்மை, அதாவது நம்முடைய மாம்சத்தை அல்லாமல், நம்முடைய ஆவியை, நம்முடைய நோக்கங்களை, நம்முடைய வாஞ்சைகளைப் பரிசோதித்துப் பார்ப்போமாக.

இயேசுவினுடைய இந்த வார்த்தைகளைக் குறித்து ஹென்றி வார்ட் பீச்சர் அவர்கள் நன்றாய்ப் பின்வருமாறு கூறியுள்ளார்… “”ஒருவரைப் பின்பற்றுவதற்கு விரும்பியும், வாஞ்சித்தும் இருப்பவர்களுக்குச் சொல்லப்பட்ட இப்படியான ஒரு வார்ததை என்னைப் பொறுத்தமட்டில் இதற்கு முன்பும், ஒருபோதும் இப்படியாகப் பேசப்படவுமில்லை, பிற்பாடும் ஒருபோதும் இப்படியாகப் பேசப்படவுமில்லை.” லூக்கா சுவிசேஷத்தில் இடம்பெறும் இவ்வசனத்திற்கு இணையான வார்த்தைகள், மத்தேயு 10:37-ஆம் வசனத்திலும் காணப்படுகின்றது, அதாவது “”தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.” இங்கு இடம்பெறும் வெறுப்பு என்ற வார்த்தையானது, அன்பிற்கு எதிரானது என்று காட்ட பயன்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் சீஷன் ஆகுவது என்பது, நாம் கர்த்தரையும், அவர் ஆதரிக்கும் கொள்கைகளையும் பிரதானமாய் அன்புகூருவதாக இருக்கின்றபடியால், மற்றவர்களுக்கான அன்பு நமக்குக் கர்த்தரோடு ஒப்பிடுகையில் வெறுப்பாய்க் காணப்படும்.

நம் விஷயத்தில், கர்த்தருக்கான நம்முடைய அன்பிற்கும், அவருடைய சித்தத்திற்கான நம்முடைய கீழ்ப்படிதலுக்கும் எதிரான எந்த மற்ற அன்பையும் வெட்டிவிடுவது நோக்கமாக, சித்தமாகக் காணப்பட வேண்டும். கர்த்தருடைய அன்போடு ஒப்பிடுகையில், நம்முடைய பூமிக்குரிய அன்புகள் ஒருபொருட்டாக இல்லையென்று கருதப்பட வேண்டும். நமது கர்த்தருடைய கட்டளைக்கு ஏற்ப, ஒவ்வொரு பூமிக்குரிய எதிர்ப்பார்ப்பையும், நம்பிக்கையையும், இலட்சியத்தையும், நோக்கத்தையும், பலிச்செலுத்துவதற்கும், மற்றும் விருப்பத்துடனும், மகிழ்ச்சியுடனும் நம்முடைய ஜீவியங்களை ஒப்புக்கொடுப்பதற்கும் நாம் ஆயத்தமாய்க் காணப்பட வேண்டும். இப்படியான பக்தியின் வெளிப்பாடை வெளிப்படுத்துகிறவர்களிடத்தில் எதுவும் ஒப்படைக்கலாம். இவர்களைக் குறித்துக் கர்த்தர், “”என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள்” என்று தீர்க்கத்தரிசனமாய்ப் பேசுகின்றார் (மல்கியா 3:17).

இயேசுவும் இப்படியான பண்பையே கொண்டிருந்தார் என்பதும், மற்றவைகள் அனைத்தையும்விட மேலாக பிதாவின் சித்தத்தையே முதன்மையாகக் கொண்டிருந்தார் என்பதும், இராஜ்யத்தில் அவருடன் உடன்சுதந்திரர்களாய் இருப்பவர்கள் அனைவரிடத்திலும் இதே மனது, இதே ஆவி காணப்படும் என்ற நிச்சயத்தைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. இராஜ்யம் சுயநலமான ஒன்றாக இராமல், எதிர்மாறாகவே இருக்கும் என்று அவர் நமக்கு நிச்சயம் அளிக்கின்றார். அந்த இராஜ்யத்தின் இராஜாக்கள், பிரபுக்கள், நியாயாதிபதிகள் வல்லமையில் மாத்திரம் எதிர்த்து வெல்லப்பட முடியாதவர்களாய் இராமல், கொஞ்சமும் அசுத்தப்படுத்தப்பட முடியாதவர்களாய் இருப்பார்கள். இவர்களைப் பொறுத்தமட்டில் தெய்வீகக் கோட்பாடே முதன்மையானதாகக் காணப்படும்.

இங்கு விவரிக்கப்பட்டுள்ளதான இப்படியான பக்தி என்பது சிலசமயம், அநேக பூமிக்குரிய பந்தங்களைத் துண்டித்துப் போடுவதைக் குறிக்கின்றதாக இருக்கும். இது இயேசுவின் பின்னடியார்களை, விநோதமான ஜனங்களாக எண்ணப்படுவதைக் குறிக்கின்றதாய் இருக்கும். அநேகர் இவர்களுடைய போக்கை விநோதமாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் எண்ணுவார்கள். ஆகவே, பரிசுத்தவானாகிய பவுல் தெரிவித்துள்ள வண்ணம், நாம் கிறிஸ்துவின் நிமித்தமாகப் பைத்தியக்காரர்களாக எண்ணப்படுகின்றோம், ஏனெனில் மனித ஞானத்திற்கும், மனித அன்பிற்கும் பதிலாக, நாம் தேவனுடைய ஞானத்திற்கும், தேவனுடைய அன்பிற்கும் முன்னுரிமைக் கொடுத்துப் பிரசங்கிக்கின்றோம். இப்படிப்பட்டவர்களைக் குறித்து, பரிசுத்தவானாகிய யோவான், “”அவர் இருக்கிறபிரகாரமாகவே நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்,” அதாவது தவறாய்ப் புரிந்துக்கொள்ளப்பட்டு, பழித்துரைக்கப்பட்டு, விலக்கி வைக்கப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டுக் காணப்படுகின்றோம் என்று கூறுகின்றார். இம்மாதிரியான அனுபவங்களில் நிற்க முடிகின்றவர்கள் மாத்திரமே, “”ஜெயங்கொள்ளுகிறவர்களுக்குத் தாம் ஜீவகிரீடத்தைக் கொடுத்து, அவர்கள் தம்முடன் சிங்காசனத்தில் உட்கார அனுமதிப்பதாக,” இயேசுவினால் குறிப்பிடப்பட்ட கிரீடத்தை வெல்கிறவர்களாய் இருப்பார்கள்.

“”இவைகளை நடப்பிப்பதற்கு எவன் தகுதியானவன்?” என்று அப்போஸ்தலர் கேள்வி கேட்கின்றார். “”எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது” என்றும், “”என் கிருபை உனக்குப்போதும், பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” மற்றும் “”நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” எனும் வாக்குத்தத்தத்தையும் பதிலாக வழங்குகின்றோம் (எபிரெயர் 13:5; 2 கொரிந்தியர் 12:9; 2:16; 3:5).

சிலுவை சுமத்தலின் அர்த்தம்

இன்னும் அழுத்தம் தெரிவிக்கும் வண்ணமாக, “தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்,” என இயேசு கூறுகின்றார் (லூக்கா 14:27). தைரியத்துடன் கூடிய நோக்கத்துடனும், சீஷயத்துவத்தை அறிக்கைப் பண்ணுவதுடன், நாம் ஆரம்பிப்பது மாத்திரம் போதாது. நாம் விசுவாசத்துடன் கர்த்தர் பக்கத்தில் நிலை கொண்ட பிற்பாடு, நாம் நிரூபிக்கப்பட வேண்டும். ஆரம்பத்தில் கொஞ்சம் உணர்ச்சி வேகம் கொண்டிருப்பவர்கள் அல்ல, மாறாக தங்களுடைய உண்மையின் மூலமாக தங்களுடைய தகுதியை நிரூபித்துக் காண்பிப்பவர்களே தகுதியுள்ளவர்கள் என்று கருதப்பட்டு, இறுதியில் கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். சிலுவை சுமத்தல் என்பது, அன்றாட விஷயமாக இருக்கவேண்டும். கர்த்தருடைய வார்த்தைகளில் நமக்கெனக் கொடுக்கப்பட்டுள்ள தெய்வீகச் சித்தத்திற்கு எதிராக, மாம்சம், உலகம் மற்றும் சாத்தானிடமிருந்து வரும் எதிர்ப்புகளே நம்முடைய சிலுவைகள் ஆகும். “”என்னுடைய சித்தம் அல்ல, உம்முடைய சித்தமே ஆகக்கடவது” என்ற ஆண்டவரின் உணர்வே, சரியான உணர்வாக இருக்கின்றது.

நிதானித்து, யோசிக்கப்படாமல், சீஷயத்துவத்தை எடுத்தக்கொள்ளக்கூடாது என்பதற்கான எச்சரிப்பைக் கொடுக்கும் பொருட்டு, நமது கர்த்தர் ஓர் உவமையைக் கூறினார்; அதென்னவெனில் ஒரு கோபுரத்தைக் கட்டத் துவங்கின மனுஷன், அதற்கு அஸ்திபாரத்தைப் போட்டான், ஆனால் அதனை கட்டி முடிக்க அவனால் கூடாமல் போயிற்று, இவ்வாறாக அவன் தன் பிரயாசத்தை வீணாக்கி, தன்னையே ஏளனத்திற்கு ஆக்கிக்கொண்டு, மூடனாய் செயல்பட்டுக் கொண்டவனாய் இருந்தான். இன்னொரு உருவகமானது, தேவையான ஆயத்தம் இல்லாமல், யுத்தத்திற்குப் போவது பற்றியதாகும்; இப்படியாக யுத்தத்திற்குச் செல்வது என்பது, விபரீதத்தையே கொண்டு வருவதாக இருக்கும். கிறிஸ்துவின் பின்னடியார்கள் அனைவரும் குணலட்சணத்தை வளர்த்துக்கொள்வதிலும், “”நல்ல போராட்டம் போராடுவதிலும்” ஈடுபட்டிருக்கின்றனர். யாரொல்லாம் இயேசுவின் கொடியின் கீழ்த் தங்களை இணைத்துக்கொண்டுள்ளார்களோ, இவர்கள் சாத்தானுக்கும், பாவத்திற்கும் எதிரான நிலையை எடுத்துக்கொண்டவர்களாய் இருக்கின்றார்கள்; மேலும் இவர்கள் கடுமையான யுத்தத்தை எதிர்ப்பார்க்கலாம்; இன்னுமாக உண்மையாய் நற்கிரியைகளை நடப்பிப்பதில் தொடர்ந்து நிலைத்து நின்றாலே ஜெயங்கொள்கிறவர்களுக்கான கிரீடத்தையும், “”நல்லது” என்ற வார்த்தையையும் கேட்க முடியும் என்பதையும் எதிர்ப்பார்க்கலாம். [R5426 : page 92]

கிறிஸ்துவினுடைய காரணங்களை/நோக்கங்களை ஆதரிப்பவர்கள், தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்ற தெளிவான முழுப்புரிந்துக்கொள்ளுதலுடன் கூட, திரும்பிப் பின்னே பார்க்காமல், நல்ல வழியில் தொடர்ந்து முன்னோக்கிப்போக வேண்டும் என்ற உறுதியான தீர்மானத்துடன் செயல்படுவார்களானால், அது எத்துணை ஆசீர்வாதமாய் இருக்கும்! இன்னுமாக கிறஸ்துவினுடைய காரணங்கள்/நோக்கங்கள் மனுஷர் மத்தியில் நன்கு முன்னேறும்; இவர்களுடைய எண்ணிக்கை மிகச் சொற்பமாக இருந்தாலும் கூட உலகத்தில் இவர்களுடைய செல்வாக்கும், வல்லமையும், சந்தேகத்திற்கு இடமின்றி மிகப் பெரியதாகவே இருக்கும்.

உப்பு நல்லதுதான், ஆனாலும்… – SUB HEADING

உப்பு, பதப்படுத்துகிற தன்மையைக் கொண்டதாகும். இது உணவிற்குச் சுவையையும் கொடுக்கக்கூடியதாக இருக்கின்றது. முற்காலங்களில் உண்மைக்கு, நேர்மைக்கு உப்பானது அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டது; இன்னமும் கூட சில அரேபியர்கள், தாங்கள் உப்புச் சாப்பிட்ட வீட்டில் உள்ள நபருக்கு, மரணம் வரையிலும் உண்மையுள்ளவர்களாகக் காணப்படுவார்கள் என்று கூறப்படுகின்றது. இவர்களைப் பொறுத்தமட்டில் உப்பு, நேர்மைக்கான/உண்மைக்கான உறுதிமொழியாக இருக்கின்றது.

இயேசு, தேவனிடத்தில் கொண்டிருந்த தம்முடைய உண்மைக்கும், தம்முடைய பின்னடியார்கள் அனைவரும் கொண்டிருக்க வேண்டியதும், தக்கவைத்தக்கொள்ள வேண்டியதுமான உண்மைக்கும், உப்பை அடையாளமாகப் பயன்படுத்துகின்றார். உப்பானது அதன் சாரத்தை இழந்துப் போகுமானால், அது எதற்கும் பயன்படாது; அது உரமாகக் கூடப் பயன்படாது, ஏனெனில் அது எதிர்மாறான செயல்பாட்டையே, சாரமற்றுப் போனப் பிறகுக் கொண்டிருக்கும்; அது முற்றிலும் பயனற்றதாயிருக்கும். இப்படியாகவே கிறிஸ்தவனும், உலகத்தில் ஒரு விசேஷித்த நோக்கத்தைப் பெற்றிருப்பவனாக இருக்கின்றான், அதாவது அவன் பதப்படுத்துகின்ற ஆற்றலாய் இருந்து, கிருமிநாசினியாக இருந்து, தொடர்புக்கு வரும் அனைவரிடமும் நல்ல பண்புகளை வெளியே கொண்டு வருபவனாக இருக்கவேண்டும். இதுவே உலகத்தைப் பொறுத்தமட்டிலான கிறிஸ்தவனுடய வேலையாக இருக்கின்றது. இதில் அவன் தவறுவானானால், அவன் அழைக்கப்பட்ட நோக்கத்தைப் புரிவதில் தவறுகிறவனாய் இருந்து, கர்த்தருடைய வேலைக்குப் பயனற்றவனாய் இருப்பான்.

“”கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்” என்று இயேசு இறுதியாகக் கூறினார். அவருடைய பின்னடியார்கள் அனைவரும் இந்த வார்த்தைகளுக்குச் செவிக்கொடுக்க வேண்டும். இவ்வார்த்தைகளை அசட்டைப் பண்ணுகிறவன், இவ்வார்த்தைகளைக் கொடுத்திட்டவரை அசட்டைப் பண்ணுகிறவனாய் இருந்து, நிச்சயமாய்க் கிடைக்கப்பெறும் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள தவறுகிறவனாய் இருப்பான். ஆனால் உலகத்தாரைப் பொறுத்தமட்டில், “”அவர்கள் காதுகளிருந்தும் கேளாதவர்களாகவும், கண்ணிருந்தும், காணாதவர்களாகவும்” இருப்பார்கள். நம்மையும், இயேசுவின் பின்னடியார்கள் அனைவரையும் அளப்பதற்கான அதே கொள்கைகளின் அடிப்படையில் நாம் உலகத்தாரைக் கணிக்கக்கூடாது. உலகத்திற்கான உயர்ந்த அளவுகோல்/கொள்கை பொன்னான சட்டமாக இருக்கின்றது. கிறிஸ்தவனுக்கான உயர்ந்த அளவுகோல்/கொள்கை சுயத்தைப் பலிச் செலுத்தி, எல்லாம் இழந்து, தேவன் சித்தம் செய்வதாகும்.