R3726 – வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3726 (page 57)

வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்

CAPERNAUM EXALTED TO HEAVEN

மாற்கு 1:21-34

“”பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கினார்.” மாற்கு 1:34

வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாள பரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று நமது கர்த்தர் கூறியுள்ளார் (மத்தேயு 11:23). நம்முடைய பாடமானது கப்பர்நகூம் எவ்வளவாக வானபரியந்தம் உயர்த்தப்பட்டது என்று நமக்கு இப்பொழுது எடுத்துக் காண்பிக்கப் போகின்றது; அதாவது கப்பர்நகூமின் ஜனங்களுக்கு, அவர்களின் வியாதிகளைச் சொஸ்தப்படுத்தின நம்முடைய கர்த்தருடைய ஊழியத்தின் ஆரம்ப காலப்பகுதிகளில் அருளப்பட்ட மாபெரும் இரக்கங்கள், ஆசீர்வாதங்கள் மற்றும் சிலாக்கியங்களை நம்முடைய இந்தப் பாடமானது நமக்கு எடுத்துக் காண்பிக்கப் போகின்றது. எனினும், சொற்பமான நபர்களே அவரை மேசியாவாக ஏற்றுக்கொண்டனர். மேலும், இயேசு கூறின பிரகாரமாக அப்பட்டணமானது பாதாளபரியந்தம் தாழ்த்தப்பட்டது. அதாவது, அப்பட்டணம் எரிகின்ற (அ) சித்திரவதைப்படுத்துகின்ற இடத்திற்குள் தள்ளப்படாமல், (hades) ஹேடிஸ்க்குள், அதாவது படுகுழிக்குள் (grave) அதாவது மரித்த நிலைக்குள் விடப்பட்டது என்று நாம் அறிகின்றோம். அப்பட்டணமானது முற்றிலும் அடையாளம் தெரியாமல் போய்விட்டது. மேலும், அது காணப்பட்ட இடம் கூட இன்று திட்டவட்டமாகத் தெரியாத நிலையிலேயே உள்ளது. ஒரு குறிப்பிட்ட கற்குவியலே கப்பர்நகூம் காணப்பட்ட இடம் எனக் கூறிவரப்படுகின்றது.

கப்பர்நகூம் பட்டணமானது, கலிலேயா கடலின் அருகே, அதாவது நமது கடந்த பாடத்தில் அற்புதவிதமாக அநேக மீன்கள் வந்த கடலின் அருகே காணப்பட்டது. அடுத்து வந்த ஓய்வு நாள் அன்று, இயேசுவுடைய சீஷர்கள் ஆகும்படிக்குத் தங்களுடைய அனைத்தையும் விட்டுவந்த நான்கு மீனவர்களோடுகூட இயேசு, கப்பர்நகூமிலுள்ள ஜெப ஆலயத்திற்குள் பிரவேசித்தார். யூதர்களின் ஜெப ஆலயங்களில் (Synagogue) மிகுந்த சுதந்திரம் அருளப்பட்டிருந்தது. மேலும், பயபக்தியுள்ள எவரும் நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கத்தரிசனங்கள் குறித்ததான தங்களுடைய கண்ணோட்டங்களை முன்வைப்பதற்கான வாய்ப்பும் அருளப்பட்டிருந்தது. நமது கர்த்தர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஜனங்களுக்குப் போதித்தபோது, அவருடைய உபதேசம் மற்றும் அவருடைய போதனைகள் குறித்தும் ஆச்சரியம் அடைந்தார்கள். வேதவாக்கியங்களைக்குறித்துச் சதுசேயர் மற்றும் வேதபாரகர்கள் சண்டைச் சச்சரவு செய்து கொண்டு, வேத வாக்கியங்களின் அர்த்தங்களை யூகம் செய்து அவைகளின் அர்த்தங்களைக் குழப்பிக்கொள்வதையும், வேதவாக்கியங்களைப் புரிந்துக்கொள்ள முடியாத புதிர்கள்போல் ஆக்குவதையுமே ஜெப ஆலயங்களில் ஜனங்கள் பார்த்துப் பழகியிருந்தார்கள். ஆனால், இயேசுவோ “”அதிகாரமுடையவராய்” வேதவாக்கியங்களின் அர்த்தங்களை முழுவதும் புரிந்துக்கொண்டிருந்த ஆண்டவர் போல் போதித்தார்.

உண்மைதான், நமது கர்த்தர் பரலோகத்திலிருந்து இறங்கி வந்தவர்தான். மேலும், மற்றவர்கள் அறிந்திராதக் காரியங்கள்பற்றின அறிவு அவருக்கு இருந்ததும் உண்மைதான்; ஆனால், அக்காரியங்களைக் குறித்தெல்லாம் அவர் போதிக்கவில்லை என்பதை அவர் நிக்கொதேமுவிடம் பேசின வார்த்தைகளிலிருந்து நாம் உறுதிப்படுத்தலாம்; அதாவது, “”பூமிக்கடுத்தக் காரியங்களை” நான் உங்களுக்குச் சொல்லியும், நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரம காரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? (யோவான் 3:12). கர்த்தரோ தெய்வீக வெளிப்படுத்தல்களான, நியாயப்பிரமாணங்கள் மற்றும் தீர்க்கத்தரிசனங்கள் குறித்தும் அவைகளின் நிறைவேறுதல் குறித்துமே போதித்தவராகக் காணப்பட்டார். இதை “நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்” என்றும், “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது” என்றும், அவர் பேசின வார்த்தைகள் மூலமாகவே நாம் நிச்சயித்துக்கொள்ளலாம் (யோவான் 12:49, 7:16).

ஆகவே, கர்த்தருடைய சகல பிரதிநிதிகளும் கூட இப்படியாகவே போதிக்க வேண்டும். அதாவது, மனித யூகங்களையும், தத்துவங்களையும் போதியாமல், தேவனுடைய வார்த்தைகளையே போதிக்க வேண்டும். “”சொப்பனங்கண்ட தீர்க்கத்தரிசி சொப்பனத்தை விவரிப்பானாக என் [R3726 : page 58] வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமியா 23:28). “”வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும் இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை” (ஏசாயா 8:20). “”சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும், உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திச்சொல்லு” (2 தீமோத்தேயு 4:2). “”தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும், யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபிரெயர் 4:12). “”உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 17:17). “”பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு அவர்கள் படிப்பறியாதவர்களென்றும், பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்துக்கொண்டார்கள்” (அப்போஸ்தலர் 4:13).

ஆகவே கர்த்தருக்கும், அவருடைய சாட்சியின் வேதவாக்கியங்களுக்கும் உண்மையும், நேர்மையுமாய் இருப்பவர்கள், உலகத்தாரிடம் தெளிவற்ற விதத்தில் பேசாமல் ஏற்றவேளையில், “”சகல ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியாகிய” தேவனுடைய செய்தியை அறிவிப்பார்கள்.

உம்மை இன்னார் என்று அறிவேன்

இயேசு பேசிக்கொண்டிருக்கையில் அல்லது அவருடைய சொற்பொழிவு அநேகமாக முடியும்போது, “”நசரேயனாகிய இயேசுவே எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களை கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர்” என்ற வார்த்தைகளை, ஜெப ஆலயத்தில் காணப்பட்ட சபையார் கேட்டபோது அதிர்ச்சியடைந்தார்கள் (வசனம் 24). இவ்வார்த்தைகளைப் பேசினது அசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டவன் ஆவான். ஆனால், இன்றைய நாட்களிலோ, இப்படிப்பட்ட மனிதன், பைத்தியம் பிடித்தவனாகக் கருதப்பட்டு, மனநிலை [R3727 : page 58] பாதிக்கப்பட்டவர்களுக்கான காப்பகத்தில் சேர்க்கப்படுவான். அதற்காக இன்று மனநிலை பாதிக்கப்பட்டவர்களாய் இருக்கும் அனைத்துப் பைத்தியக்காரர்களும், அசுத்த ஆவியினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. மூளையானது நோயினால் தாக்கப்பட்டுப் பைத்தியமாய்ப் போனவர்களும் உண்டு என்பது உண்மைதான்; ஆயினும் பைத்தியக்காரர்களாகக் கருதப்படும் ஜனங்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் அசுத்த ஆவிகளினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் என்றும் நாம் நம்புகின்றோம்.

மனுக்குலத்தை ஆட்கொள்ளும் இந்த அசுத்த ஆவிகள் ஒருகாலத்தில் தேவதூதர்களாகக் காணப்பட்டு, நோவாவின் நாட்களில் பாவம் செய்த காரணமாக தெய்வீகத் தயவினின்று தள்ளப்பட்டு, அன்று முதல் ஆயிரம் வருஷம் அரசாட்சியின் மாபெரும் நாளுக்குரிய நியாயத் தீர்ப்பிற்கென்று, இருளின் சங்கிலிகளால் கட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என வேறு கட்டுரைகளில் நாம் ஏற்கெனவே எழுதியுள்ளோம் (யூதா 1:6); மேலும் ஆயிரம் வருஷம் அரசாட்சியின்போது, கிறிஸ்துவாகிய இயேசுவும், சபையும் மகிமையடையும்போது, மனிதன் நியாயத்தீர்ப்பு (அ) பரீட்சிக்கப்படுவதற்கான வாய்ப்புப் பெற்றுக்கொள்வதோடு, இந்த விழுந்துபோன தூதர்களும் பெற்றுக்கொள்வார்கள் (1 கொரிந்தியர் 6:3). இதற்கிடையில் மனுக்குலத்தோடு தொடர்பு வைத்துக்கொள்வதற்கும், மனிதர்கள் தங்கள் சித்தங்களை ஒப்புக்கொடுப்பதன் மூலம் அவர்கள் மேல் ஆதிக்கம் கொள்வதற்குமான இந்த விழுந்துபோன தூதர்களுடைய பிரயாசங்கள் இடைவிடாமல் தொடரும். பழைய மற்றும் புதிய ஏற்பாட்டிலுள்ள வேத வாக்கியங்களில் எங்கும், தேவனிடம் பயபக்தியுடன் காணப்படும் அனைவரும், ஆவியுலக ஊடகங்கள் மற்றும் ஆவியுலகக் கோட்பாடுகளின் கூட்டங்கள் மற்றும் சைத்தான் தனமாயுள்ள இந்த ஆவிகளுடன் வைத்துக்கொள்ளும் எல்லா விதமான தொடர்புகள் ஆகியவற்றிற்கு எச்சரிக்கப்படுகின்றனர். இந்த எச்சரிப்புகளை மீண்டும் மீண்டுமாக வலியுறுத்துவது நமது கடமையாக இருக்கின்றது, காரணம் முன்பு காணப்பட்டதைக்காட்டிலும் இந்த விழுந்துபோன ஆவிகளின் செல்வாக்கு/தாக்கம் இன்று மிகுந்த செயல்பாட்டில் காணப்படுகின்றது; இன்னுமாக, நம்முடைய நாட்களில் அதாவது இன்னும் கொஞ்ச காலத்திற்குள் கிறிஸ்தவ மண்டலம் முழுவதின் மேலும் வரவிருக்கும் மாபெரும் பரீட்சையின்/சோதனையின் ஒரு பாகமாக, இந்த விழுந்துபோன ஆவிகளின், அதிக வல்லமையான செயல்பாடுகள் இன்னும் அதிகரிக்கும் என வேதவாக்கியங்கள் காட்டுகின்றது. ஐரோப்பியா அல்லது அமெரிக்காவைக்காட்டிலும் ஆஸ்திரேலியாவில் ஆவியுலக தொடர்புகளும், கோட்பாடுகளும் மிகுந்த முன்னேற்றமும், மிகுந்த ஆற்றலும் அடைந்துகொண்டு வருகின்றது என நாம் அறிந்துவருகிறோம், அதுமாத்திரமல்ல, அது எல்லா திசைகளிலும் விரைந்துப் பாய்கின்றது என்பதையும் நாம் அறிந்துவருகின்றோம்.

நம்முடைய பாடத்தில் இடம்பெறும் இச்சம்வத்தில் வரும் அசுத்த ஆவியானது, மேசியா வரும்போது சகல தீமையும் நீக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிடும் என்பதை அறிந்துள்ளதுபோல் தோன்றுகின்றது. வேறு ஒரு சம்பவத்தின் பதிவு இப்படியாகத் தெரிவிக்கின்றது… “”காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ? (மத்தேயு 8:29)… அதாவது மேசியா மூலம் வல்லமை வெளிப்படுவதற்கான காலம் இன்னும் எதிர்க்காலத்தில் உள்ளது என்ற செய்தியை அந்த ஆவி பெற்றிருப்பது போன்று (அ) முன்னுணர்வுகொண்டிருப்பது போன்று இவ்வசனம் வாசிக்கையில் நமக்குத் தோன்றுகின்றது… “”எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ? என்ற வசனத்தில் இடம்பெறும் வேதனை என்ற வார்த்தையானது தண்டித்தலை, வேகமாக நடத்துதல் என்ற பொருளைக்கொடுக்கின்றது. அக்கால கட்டம்வரையிலும் தேவஆவியினால் ஏவப்பட்டு வேதத்தில் எழுத்தாளர்கள், விழுந்துபோன ஆவிகள்மேல் வரப்போகின்ற தண்டனையின் தன்மையைச் சுட்டிக்காட்டி எழுதவில்லை மேலும் அந்தத் தண்டனையானது தங்களுக்கான அழிவாகவே இருக்கும் என இந்த விழுந்துபோன ஆவிகள் யூகித்துக் கொண்டன.

பாவ நிவாரண பலியாகிய நமது கர்த்தருடைய மரணத்தையும், தெய்வீக வல்லமையினால் உண்டான அவருடைய உயிர்த்தெழுதலையும் பார்த்த விழுந்துபோன ஆவிகள், தாங்கள் ஒரு காலத்தில் உணர்ந்துக்கொள்ளாததும், இப்பொழுது மனுக்குலத்தின் சார்பாக வெளிப்பட்டதுமான தேவனுடைய அன்பையும், தேவனுடைய வல்லமையையும் உணர்ந்துக்கொண்டார்கள்; மேலும், ஏற்றகாலத்தில் மனுக்குலம் மீது தேவனுடைய இரக்கம் வரும் என்ற கருத்தானது, விழுந்துபோன ஆவிகளின் கூட்டத்தார் மத்தியிலும், மனந்திரும்பின தூதர்கள் கூட ஏற்றக்காலத்தில் கிறிஸ்துவின் மூலம் தெய்வீக இரக்கத்தில் பங்கடைவதற்கான வாய்ப்பை அடைவார்கள் என்பது குறித்ததான நம்பிக்கை, இந்த விழுந்துபோன ஆவிகள் மத்தியிலுள்ள சிலருக்கு வந்துவிட்டது என அப்போஸ்தலர் பவுல் குறிப்பிடுகின்றார். இது தெய்வீகத் திட்டத்தின் ஒரு பாகம் என்பதை நாம் அறிவோம். அதாவது, கிறிஸ்து வெளிப்படும் போதும், இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போதும் விழுந்துபோன மனிதர்கள் மாத்திரமல்லாமல், விழுந்துபோன தூதர்களும் நியாயம் தீர்க்கப்படுவது (அ) பரீட்சிக்கப்படுவது தெய்வீகத் திட்டத்தின் ஒரு பாகம் என்பதை நாம் அறிவோம் (1 கொரிந்தியர் 6:3).

அசுத்த ஆவி அம்மனுஷனை விட்டு வெளியேறும்படி நமது கர்த்தர் கட்டளையிட்டார். அதாவது, அம்மனுஷனுடைய மனம் மற்றும் சரீரத்தின் மீதான ஆதிக்கத்தை விட்டுவிடக் கட்டளையிட்டார். இயேசுவினிடத்தில் காணப்படும் அதிகாரத்தை எதிர்ப்பதற்கு அந்த அசுத்த ஆவிக்கு வல்லமை இல்லாமல் இருந்தபோதிலும், அந்த மனுஷனை விட்டு போகையில், அவனுக்கு சில கஷ்டங்களைக் கொடுப்பதில் அவ்வாவியானது தடைப்பண்ணப்படவில்லை. லூக்கா 4:35-ஆம் வசனத்தில், பிசாசானது அம்மனுஷனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி விட்டுச்சென்றது என நாம் வாசிக்கின்றோம். இவ்விதமாக, தீய ஆவிகளின் கொடுமையான செயல்கள் வெளிப்படுத்தப்பட்டன. பரிசுத்தமான ஆவிகள்/தூதர்கள் இவ்விதமாக அலைக்கழித்து ஆட்டிப்படைப்பதில்லை. தேவன் மனுக்குலத்தின் ஒவ்வொரு அங்கங்களுடைய தனித்துவத்தைக் கருத்தில் கொண்டவராகவும் காணப்பட்டு, அவர்களுடைய தனித்துவத்தில் தலையிடுவதில்லை; மேலும், பரிசுத்தமான தேவ தூதர்களும் இப்படியாகத் தலையிடுவதில்லை. பிசாசுகள் மனுஷனுடைய சுயமாய்ச்சிந்திக்கும் திறனை, இல்லாமல் ஆக்கிப்போட்டு, மனுஷனுடைய (சுய) சித்தத்தை அடக்கி வயப்படுத்துவது போன்று தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியைக்கொண்டு செயல்படுவதில்லை. மாறாக, ஒருவருடைய சித்தத்திற்கும், சுயமாய்ச்சிந்திக்கும் திறனுக்கும் இசைவாகவே தேவன் செயல்படுகின்றவராக இருக்கின்றார் (அவர் சித்தத்தை வற்புறுத்துகிறவர் அல்ல). கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக முழுமையாக அர்ப்பணம் பண்ணின விசுவாசி, தன்னுடைய சிந்தையிலும், வார்த்தையிலும், நடத்தையிலும் கர்த்தரிடத்தில் மகிமையான உறவிற்குள் வருவதற்கு ஏற்ப அதிகமதிகமாய்ப்பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், சுயசித்தத்திற்கு எதிராக அவன் அங்கீகரித்துள்ள தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவது குறித்த கோட்பாடுகளையோ, தெய்வீகப் போதனைகளையோ எவ்விதத்திலாகிலும் அவனால் புறக்கணிக்கப்படுமாயின், இதற்கு ஏற்ப பரிசுத்த ஆவியும், தெளிந்த புத்தியின் ஆவியும், தேவனுடைய ஆவியும் தணிந்துப் போய்விடும்; மேலும், இந்த ஆவியானது எந்த விதத்திலும் நம்மிடத்தில்/நம்மேல் திணிக்கப்படவில்லை, மாறாக இவ்வாவி தக்கவைக்கப்பட்டு, பெருக பண்ணப்பட வேண்டுமாயின் நாம் அவைகள் மீது விருப்பம் கொண்டிருக்க வேண்டும், அவைகளைப் பற்றிப்பிடித்து வைத்திருக்க வேண்டும் மற்றும் அவைகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

போதகத்தைக் குறித்து ஆச்சரியமடைதல்

நமது கர்த்தர் போதிக்கையில் அவர் பாவம், துக்கம், வலி மற்றும் மரணத்திற்கான காரணம் பற்றி விவரித்திருக்க வேண்டும். அதாவது, இவைகள் ஆதியில் கீழ்ப்படியாமையின் நிமித்தம் உண்டானவைகள் என்றும், இவைகள் சாபம் என்றும், பின்னர் தேவனுடைய ஏற்றகாலத்திலும், அவருக்குரிய வழிமுறைகளிலும் இச்சாபமானது உலகத்திடமிருந்து எடுக்கப்பட்டுவிடும் என்றும், தீய ஆவிகள் வஞ்சனைப் பண்ணுவதற்கும், தாக்குதல் பண்ணுவதற்கும் வல்லமையும், அதிகாரமும் இல்லாமல் அப்போது காணப்படும் என்றும், மேசியா மூலம் தேவன் வாக்களித்துள்ள ஆசீர்வாதத்தின் மகிமையான காலை வேளையில் நோய், வலி மற்றும் மரணம் யாவும் அப்புறப்படுத்தப்படும் என்றும் விவரித்திருக்க வேண்டும். இந்தப் பிரமிக்கத்தக்கப் போதனைகள், ஜனங்கள் இதுவரையிலும் வேதபாரகரிடமிருந்து கேட்டவைகளைவிட மிகவும் தெளிவாக இருந்தபடியாலும் அசுத்த ஆவியைத் துரத்தின கர்த்தருடைய வல்லமையானது ஜனங்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்தபடியினாலும் அனைத்து ஜனங்களும் பிரமித்து நின்றார்கள். மேலும், ஜனங்கள் கடற்கரையில் நின்று தங்களுக்குப் போதித்துக் கொண்டிருப்பவர் ஒரு மாபெரும் போதகர் என்றும், ஒரு மாபெரும் தீர்க்கத்தரிசி என்றும், ஒருவேளை மேசியாவாகக் கூட இருக்கலாம் என்றும் ஜனங்கள் போதுமான அளவு உணர்ந்துக்கொண்டார்கள்.

இயேசு தமது ஊழியத்தை ஆரம்பித்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியிருந்த போதிலும், கலிலேயாவிலுள்ள கானாவூரில் அவர் அற்புதம் செய்து வெகுநாள் சென்றிருந்த போதிலும், அப்பகுதியில் “”பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது” எனப் போதுமான அளவு போதித்திருந்த [R3727 : page 59] போதிலும், இச்சம்பவமே வியாதி மற்றும் அசுத்த ஆவிகள் மீது கர்த்தருக்கு இருக்கும் அற்புதகரமான வல்லமையை அப்பட்டமாக வெளிப்படுத்தினதில், முதல் சம்பவமாக விளங்குகின்றது எனத் தோன்றுகிறது. இல்லையேல், இயேசு போதித்தவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த அப்பட்டணத்து ஜனங்கள் இவ்வளவுக்கு ஆச்சரியமடைந்திருக்க முடியாது. ஆனால், அவருடைய சீஷர்களாகும்படிக்குத் தங்களுடையது அனைத்தையும் விட்டுச்சென்ற அந்த நான்கு மீனவர்கள், மற்றவர்களைக் காட்டிலும் குறைவாக பிரமிப்படைந்திருக்க வேண்டும் என்பது நிச்சயமே; ஏனெனில், அவர்கள் கானாவூரில் திராட்சரசம் அவர் உண்டுபண்ணினதைக்குறித்தும், இந்த அசுத்த ஆவி விரட்டப்படுவதற்குக் கொஞ்ச நாள் முன்பு அற்புதமான விதத்தில் மீன்கள் பிடிப்பட்டது குறித்ததுமான அறிவு அவர்களிடத்தில் இருந்ததாலேயே ஆகும்.

ஜெப ஆலயத்திலிருந்து இயேசுவும், நான்கு சீஷர்களும் புறப்பட்டுப் பேதுருவின் வீட்டிற்குள் பிரவேசித்தார்கள், அங்குப் பேதுருவின் மாமியார் கடும் ஜுரத்தினால் வியாதிப்பட்டு இருந்தாள்; அவளைக் கர்த்தர் சுகப்படுத்தினார். பிசாசைத் துரத்தின இச்சம்பவமானது, சீஷர்களுடைய மனதில் நமது கர்த்தர் வியாதிகளைச் சுகப்படுத்துவதற்கும் வல்லவர் என்பதான எண்ணங்களை உதிக்கச் செய்தது. ஆகவேதான் சீஷர்கள், ஜெப ஆலயத்திற்குப் போவதற்கு முன்பு, (அதாவது இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அவர்களுக்குள் நோய்களைச் சுகமளிக்கும் கர்த்தருடைய வல்லமை குறித்த எண்ணங்கள் உதிப்பதற்கு முன்பும்), அந்த ஸ்தீரியைச் சொஸ்தப்படுத்த வேண்டும் என்ற எந்த விதமான வேண்டுகோள்களையும் வைக்கவில்லை. நமது கர்த்தர் அந்த ஸ்தீரியின் கரங்களைப் பிடித்து அவளை எழுப்பி விட்டார், உடனடியாக ஜுரம் அவளை விட்டுக் கடந்துப் போயிற்று. பொதுவாக காய்ச்சல் உடைய நோயாளிகளுக்குக் காய்ச்சல் நின்றாலும், சரீர பெலவீனமும், வலுவின்மையும் காணப்படுவது வழக்கம். ஆனால் பேதுருவின் மாமியோ தனது வீட்டில் வந்த விருந்தாளியாகிய அவர்களுக்கு உடனடியாகப் பணிவிடை செய்யவும், உணவு பரிமாறவும் தக்கதாக முழுப் பெலத்துடன் காணப்பட்டாள் என்று பார்க்கின்றோம்.

அவர்தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டார்

மாலை பொழுது, அதாவது சூரியன் மறையும்பொழுது நாளின் முடிவாக இருந்ததால், மாத்திரமல்ல, மாறாக யூதர்களின் வழக்கத்தின்படி ஓய்வுநாள் மாலை வேளையான சூரியன் மறையும் வேளையில் நிறைவடைவதால், இதுவே சரியான நேரம் என ஜனங்கள் கருதி, வியாதியஸ்தர்களையும், பிசாசு பிடித்தவர்களையும், கர்த்தர் விடுதலை பண்ணத்தக்கதாக அவரிடத்தில் அழைத்து வந்தார்கள். இந்தச் சொஸ்தமாக்குதல்கள் அனைத்தையும் அவர் தமது சொந்த சத்துவத்தை, உயிராற்றலைக் கொடுத்தே செய்தார் என்பதில் நமக்கு நிச்சயமே. அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டார் என்றும், வியாதிகளைச் சுமந்தார் என்றும் அப்போஸ்தலர் சுட்டிக்காண்பிப்பதோடு, வேறு ஒரு சொஸ்தப்படுத்தும் சம்பவத்தில் இவ்விஷயங்கள் நேரடியாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. “”அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.” “”அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள்” (மத்தேயு 8:17; லூக்கா 6:19). லூக்கா 6:19-ஆம் வசனத்தில் வரும் வல்லமை என்பதற்கான ஆங்கில வார்த்தை Virtue ஆகும், இதன் அர்த்தம் வல்லமை, வலிமை, உயிராற்றல் என்பவைகளாகும். இப்படியாக, நமது கர்த்தர் தமது அர்ப்பணிப்பிற்கான உடன்படிக்கையை நிறைவேற்றினார். மேலும், இவ்விதமாக மற்றவர்களுக்கு உதவி பண்ணும் பொருட்டுக் கர்த்தர் தமது வலிமையை/சத்துவத்தைப் பயன்படுத்தின காரியமாவது அவருடைய ஊழியத்தின் முடிவு வரையிலும் தொடர்ந்தது. அதாவது, எவ்விதமான மறுப்பும் தெரிவிக்காமல், பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, நம்மை அவருடைய இரத்தத்தினாலும், அவருடைய பலியாக்கப்பட்ட ஜீவியத்தினாலும் மீட்டுக்கொள்ளத்தக்கதாக, அநீதிமான்களுக்கு ஒரு நீதிமானாயும், பாவிகளுக்குத் தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுப்பது வரையிலும் தொடர்ந்தது.

“”அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை” (வசனம் 34) எனப் பதிவுகள் தெரிவிக்கின்றது. இதுபோலவே, “”இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள்” என்று சத்தமிட்டுக்கொண்டிருந்த குறிச்சொல்லுகின்ற ஸ்திரீயையும் பவுல் கடிந்துகொள்கின்றார் (அப்போஸ்தலர் 16:17). கர்த்தர் தம்மைக்குறித்தும் தமது திட்டத்தைக்குறித்தும் பிசாசுகள் சாட்சிக் கொடுப்பதை விரும்பவில்லை என்பது எவ்வளவு தெளிவாகத் தெரிகின்றது. மீண்டும் புதுப்பிக்கப்படாத அனைவருக்கும் இது பொருந்தும். இப்படிப்பட்டவர்களுக்குச், “”சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்” என்ற வார்த்தைகளே நமது கர்த்தர் கூறும் வார்த்தைகளாய் இருக்கின்றது (சங்கீதம் 50:17). கர்த்தருடைய ஸ்தானாதிபதிகளாகவும், அவருடைய வாய்க்கருவிகளாகவும் இருப்பது, கர்த்தருக்கென்று தங்களை அர்ப்பணம் பண்ணினவர்களுக்குரிய விசேஷித்த சிலாக்கியமாகும்; அது அவர்களுக்குக்கெனக் கொடுக்கப்பட்ட விசேஷித்த கனமாகும். “”அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துக்கொள்ளுவார்கள்” (தானியேல் 12:10).

தேவனுக்குரிய விஷயங்களில் ஞானத்துடன் காணப்பட்டு, தேவனுடைய சித்தத்திற்கு இசைவாக ஜீவிக்க முயற்சி பண்ணுபவர்களுக்கே, தேவனுடைய உண்மையான திட்டம் குறித்ததான தெளிவான புரிந்துக்கொள்ளுதல் காணப்படும்; மற்றவர்களோ குழப்பத்தில் காணப்பட்டு இருளில் காணப்படுவார்கள். ஆகவேதான் தீர்க்கத்தரிசி, கிறிஸ்துவாகிய அபிஷேகம் பண்ணப்பட்டவருடைய முழுச் சரீரத்தைக்குறித்து, “”கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார். சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார். இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்……” என்று குறிப்பிடுகின்றார் (ஏசாயா 61:1). அபிஷேகம் பண்ணப்பட்டவர்கள் தவிர வேறு எவரும், தேவனுடைய செய்தியை அறிவிக்கும் போதகர்களாகக் (teacher) கருதப்படுவதில்லை; மேலும் அபிஷேகம் பண்ணப்பட்ட அனைவரும், அவர்கள் பெற்றிருக்கும் அபிஷேகத்திற்கு ஏற்ப வேதவாக்கியங்களின் நியாயமான வரையறைகளுக்கு உட்பட்ட விதத்தில் அவர்களுடைய விருப்பம் மற்றும் வாய்ப்பிற்கு ஏற்றாற்போல் கர்த்தருடைய பிரதிநிதிகளாகவும், அவருடைய வாய்க்கருவிகளாகவும் இருப்பதற்கான சிலாக்கியம் பெற்றுக்கொள்வார்கள்.

[R3728 : page 59]

அடுத்த நாள் காலையில் ஜனங்கள், தங்கள் மத்தியில் ஒரு மாபெரும் போதகர், மாபெரும் சொஸ்தமாக்குபவர் இருக்கின்றார் என்ற எண்ணத்தில் உற்சாகமடைந்தவர்களாக, இயேசுவை மீண்டும் தேடினார்கள்; ஆனால் அவரோ தாம் அடுத்த ஊர்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ண வேண்டும் என்று கூறி அதிகாலையில், இருட்டோடே வனாந்தரமான ஓர் இடத்திற்குப் புறப்பட்டு போய்விட்டார்; அதாவது அவர் தமது பிதாவுக்கடுத்த வேலைகளில் ஈடுபட வேண்டும் என்றும், முழு மந்தையின் நலனையும், தேவைகளையும் தாம் சந்திக்க வேண்டும் என்று கூறி புறப்பட்டுப் போய்விட்டார். தெய்வீகத் தயவின் நிரூபணங்களாகிய இந்த அற்புதங்களானது கபடற்ற உத்தம இஸ்ரயேலர்களாய் இருக்கும் அனைவரும் தம்முடைய குணங்கள் மற்றும் வேலைகளைப் பார்க்கையில், தாம் பிதாவின் பிரதிநிதி என்றும், மேசியா என்றும் நம்பிக்கை வைப்பதற்கு மாத்திரம் ஏதுவாய் இருக்க வேண்டும் என்பதே கர்த்தருடைய நோக்கமாயிருந்தது என்பது நமக்கு நிச்சயமே. இந்த அற்புதங்களாகிய சான்றுகளைக் (token) கொடுத்தப் பிற்பாடு, அவர் அவ்விடத்தை விட்டுப் போய்விடுவார்; அதாவது அவ்விடத்தில் தமது அற்புதமாகிய சான்றைக் கண்டவர்கள் மத்தியில், சரியான இருதய நிலையில் இல்லாதவர்கள் மறந்துவிடவும், தங்களின் கவனத்தை இழந்துவிடவும், தங்களின் அனல், ஆர்வம் தணிந்து விடுவதற்கு ஏதுவாகவும், ஆனால் உத்தம இஸ்ரயோலர்களோ நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கத்தரிசிகள் மூலமாயத்தேவன் வாக்களித்துள்ள ஆறுதலுக்காக காத்து இருப்பதற்கும், அவர் அறிவித்துள்ள இராஜ்யத்திற்காக கவனித்து, நம்பிக்கை வைத்து, காவல் காத்து, ஜெபம் பண்ணுவதற்கும் ஏதுவாகவும் அவ்விடத்தை விட்டுக் கர்த்தர் போய்விடுவார்.

இப்படியே இச்சம்பவத்திலும் கர்த்தர் நடந்து கொண்டார். கர்த்தர் தெரிந்துக்கொள்ளப்படும் வகுப்பாரை மாத்திரமே நாடுகின்றார்; அதாவது அவரை ஆவியிலும், சத்தியத்திலும் தொழுது கொள்ளுபவர்களை மாத்திரமே தேடுகின்றார்; அவர் திரளான ஜனக்கூட்டத்தாரைத் தேடவில்லை; இப்படித் தேடுவதற்கான வேளையும் இன்னும் வரவில்லை. ஏற்றகாலத்தில் குருடான சகல கண்களும் திறக்கப்படும், சகல செவிடான காதுகளும் திறக்கப்படும், மேலும் மனுக்குலத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் கர்த்தரை அறிகிற அறிவு அருளப்படும், ஆனால் இப்பொழுதோ கர்த்தர் தம்முடைய மணவாட்டியின் அங்கங்களாகும் ஒரு விசேஷித்த வகுப்பாரையே தேடிக்கொண்டிருக்கின்றார்.

அவர் அநேகரைச் சொஸ்தப்படுத்தினார்

கர்த்தர் தம்முடைய ஊழிய காலங்களில் அநேக வியாதியஸ்தர்களைச் சொஸ்தமாக்கினார் என்பதில் நமக்கு ஐயமில்லை என்றாலும், அவர் பாலஸ்தீனியாவிலுள்ள அனைத்து வியாதியஸ்தர்களையும் சொஸ்தமாக்கினார் என்ற எண்ணம் நமக்கில்லை. அவருடைய ஊழியம் வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்துவதாய் இராமல், சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணுவதாகவே இருந்தது. வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்தும் காரியமானது, கவனத்தை ஈர்ப்பதற்கும், விசுவாசத்தை ஸ்திரப்படுத்துவதற்கும், தம்மைத் தேவனுடைய விரல் எனச் சுட்டிக்காண்பிப்பதற்குமேயாகும். யோவான் 5:1-9 ஆகிய வசனங்களிலுள்ள சம்பவத்தில், அநேக வியாதிஸ்தர்கள் மத்தியில் ஒருவன் மாத்திரமே சொஸ்தமாக்கப்படுகின்றான் என்பதையும் நாம் பார்க்கின்றோம். கப்பர்நகூம் பட்டணத்திலுள்ள அனைத்து வியாதியஸ்தர்களும் சொஸ்தமாக்கப்படவில்லை என்றாலும் அநேகர் சொஸ்தமாக்கப்பட்டார்கள் எனப் பதிவுகள் தெரிவிக்கின்றது; ஆனால் அது ஒரு சிறு பட்டணம்தான், ஆயினும் மற்றப் பட்டணங்களைப் பார்க்கிலும் இப்பட்டணத்திற்கு ஆச்சரியமான ஆசீர்வாதங்கள், சிலாக்கியங்கள் மற்றும் வாய்ப்புகள் அருளப்பட்டது என்று நமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது அப்பட்டணத்தின் வியாதியஸ்தர்கள் சொஸ்தமாக்கப்பட்டதன் மூலமாகவும், பிசாசு பிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதின் மூலமாகவும் இப்பட்டணத்திற்குக் கிடைத்த சிலாக்கியங்கள், ஆசீர்வாதங்கள் மற்றும் வாய்ப்புகள் தொடர்பான விஷயங்களிலேயே இப்பட்டணமானது வானபரியந்தம் உயர்த்தப்பட்டது என நாம் பார்க்கின்றோம்.

விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்கள்

இப்பாடத்தைப் படிக்கும் அநேகருடைய மனதில், “”கர்த்தரை உண்மையாய் விசுவாசிக்கும் கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் ஜெபத்தின் மூலம் ஒருவரையொருவர் சொஸ்தப்படுத்திக் கொண்டவர்களாக இருக்க வேண்டும், மற்றும் ஒருபோதும் நோய்வாய்ப்பட்டவர்களாக இருக்கக்கூடாது” என்ற சிலரின் விவாதங்கள் நினைவுக்குவரும் என்பதில் ஐயமில்லை. இப்படியாக விவாதிப்பவர்கள், மாற்கு 16:17-18-ஆம் வசனங்களை ஆதாரமாய் முன்வைக்கின்றனர், [R3728 : page 60] “”விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதிஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள்.”

மேற்கூறப்பட்டுள்ள நமது அருமையான நண்பர்கள், இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அவை பின்வருமாறு:

(1) மாற்கு 16:9 முதல் கடைசி வரையிலான வசனங்கள் வேதாகமத்தின் பழைய மூலப்பிரதிகளில் காணப்படுவதில்லை; மேலும் இவ்வசனங்கள் மாற்கு எழுதி பதிவு செய்துள்ள காரியங்களுடன் கூட்டிச்சேர்க்கபட்டுள்ளதால், இவ்வார்த்தைகள் முழுவதும் (தேவ ஆவியினால்) ஏவப்பட்டு, அதிகாரமுள்ளவைகளாக எழுதப்படவில்லை. அனைத்துக் கல்வியறிவு பெற்றவர்களும் இதை அறிந்திருக்கின்றார்கள்; மேலும் இந்தச் சேர்க்கப்பட்ட வசனங்களை முன்வைப்பவர்களில் பெரும்பாலானோர், இவ்வார்த்தைகள் சேர்க்கப்பட்டவைகள் என்பது தொடர்பான அறிவு பெற்றுக்கொள்ளத்தக்கதாக போதுமான அளவு புத்திசாலிகளாகவே இருக்கின்றார்கள் என நாம் அனுமானிக்கின்றோம். அப்படி இருந்தும் வேதவாக்கியங்கள் அல்ல என்று தாங்கள் அறிந்திருக்கிறவைகளை வேதவாக்கியங்கள் என இவர்கள் முன்வைப்பது ஏன்?

(2) இந்த வார்த்தைகள் கர்த்தருடைய பின்னடியார்களின் விஷயத்தில் பொருந்தக்கூடியவைகள் அல்ல. மேலும் கர்த்தருடைய பின்னடியார்களுக்கு அவ்வார்த்தைகள் பொருந்தும் என முன்வைப்பவர்களும் கூட, தாங்கள் அவைகளை நம்பவில்லை என்பதையும் கூட வெளிக்காட்டுகின்றனர். இவர்களால் சர்ப்பங்களைக் கைகளில் எடுக்க முடியாது, மேலும் சாவுக்கேதுவான யாதொன்றையும் குடிப்பதற்கு அஞ்சுகின்றனர், இவர்களால் பிசாசுகளைத் துரத்தவும் முடிகிறதில்லை, மேலும் வியாதியஸ்தர்களின் மேல் தங்கள் கைகளை வைப்பதன் மூலம் இவர்கள் அனைவராலும் சொஸ்தப்படுத்த முடிகிறதுமில்லை.

நமது கர்த்தருடைய அற்புதங்கள் ஜனங்களுக்குச் சுட்டிக்காட்டும் குறிப்புகளாக இருந்ததோடல்லாமல், இறுதியில் பூமியின் சகல குடிகளையும் ஆசீர்வதிப்பதற்கான மாபெரும் பிரமாண்டமான விதத்தில் அவர் பயன்படுத்தப் போகின்ற வல்லமையையும் கூடச் சித்தரித்துக் காட்டுகின்றது. பதிவுகள் தெரிவிக்கிறவைகளை வைத்துப் பார்க்கையில் கர்த்தர் தம்முடைய வல்லமையைத் தமது பின்னடியார்கள், அதாவது தமது சீஷர்கள் மீது பயன்படுத்தவில்லை. அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதே அவர்களுக்கான அழைப்பாய் உள்ளது; மேலும் சரீர பிரகாரமான ஆரோக்கியத்தையும், குணமாக்குதலையும் நாடுவதற்குப் பதிலாக இவர்கள் சத்தியத்தின் ஊழியத்தின் பொருட்டுத் தங்கள் சகோதர சகோதரிகளுக்காக தங்கள் ஜீவனை ஒப்புக்கொடுக்கிறவர்களாய் இருக்க வேண்டும். கர்த்தருடைய பின்னடியார்கள் சரீர பிரகாரமான ஆரோக்கியம் பெற்றுக்கொள்வதற்கும், சோதனைகள், பிரச்சனைகள், பாரங்கள், வலிகள் மற்றும் வேதனைகளிலிருந்து விடுதலைப் பெற்றுக்கொள்வதற்கும் அழைக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்தைப் பெற்றிருப்பவர்கள் தவறான கருத்தையே பெற்றிருக்கின்றார்கள். தேவ பக்தியுடன் கூடிய ஜீவியமும், சமாதானமுடைய இருதயமும், சரீர ஆரோக்கியத்திற்கு ஆதரவானவைகள் என்பது உண்மைதான்; ஆயினும் இராஜாவினுடைய ஊழியத்தைச் சமயம் வாய்த்தாலும், வாய்க்காவிட்டாலும் செய்கையில் சரீர பிரகாரமாக கொஞ்சம் களைப்பும், சோர்வும் ஏற்படுவதும் உண்மைதான்; சில சமயம் சரீர பிரகாரமான அசௌகரியங்களும் கூட ஏற்படுகின்றன மேலும் இவ்விதமான சரீரப்பிரகாரமான பாதிப்புகள் நம்முடைய பலியின் ஒரு பாகமாகவும், நம்முடைய நன்மைக்கு ஏதுவாக தேவன் மாற்றிப்போடும் நம்முடைய அனுபவங்களின் ஒரு பாகமாகவும் கருதப்பட வேண்டும்.

கர்த்தருடைய சிட்சிக்கும் கோலினுடைய துன்பங்கள், வியாதிகள், முதலானவைகள் மூலம் அவருடைய கரங்களிலிருந்து மிக அருமையான ஆசீர்வாதங்களைக் கர்த்தருடைய ஜனங்களில் அநேகர் பெற்றுக்கொண்டுள்ளனர். இவ்விதமாக சாபத்தின் அம்சமாகிய சில தீமைகள் அநேக தருணங்களில், கர்த்தரை அன்புகூருகிறவர்களுக்கும், தங்களின் அனுபவங்கள் மூலம் வரும் படிப்பினைகளைச் சரியான விதத்தில் கற்றுக்கொள்பவர்களுக்கும், நன்மைக்கு ஏதுவாக மாற்றப்பட்டுள்ளது. பரலோகத்தில் எவ்வித வியாதியும் இருப்பதில்லை; மேலும் சாபங்களையெல்லாம் ஆயிரம் வருஷம் அரசாட்சியானது மாற்றிப்போட்டு, கீழ்ப்படிதல் எனும் நிபந்தனையின் கீழ்த் தேவனை ஏற்றுக்கொள்பவர்களுக்கு பூரணத்தையும், இழந்த அனைத்தையும் திரும்பப் கொடுத்தப் பிற்பாடு மற்றும், கீழ்ப்படியாதவர்கள் அனைவரையும் அழித்த பிற்பாடு எவ்விதமான வியாதியும் இருப்பதில்லை. ஆனால் இதற்கான காலம் இன்னும் வரவில்லை; நாம் இன்னமும் தரிசத்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறவர்களாக இருக்கின்றோம்; ஆதாமின் வீழ்ச்சியின் காரணமாக வந்தவைகளின் நிமித்தம் நமக்குப் பங்காக சரீர ரீதியிலும், மன ரீதியிலும், ஒழுக்க ரீதியிலும் பெலவீனங்கள் இன்னமும் காணப்படுகின்றது. கர்த்தர் நமக்குச் சில நோய் எதிர்ப்புச் சக்தியை (immunity) அல்லது விசேஷித்த விதமான புத்துணர்வை அவருடைய ஞானத்தின்படியேயும், நாம் செய்ய வேண்டும் என்று அவர் நமக்கு நிர்ணயித்துள்ள வேலைக்குரிய தேவைகள் பற்றியதான அவருடைய அறிவின்படியேயும் நமக்கு அருளுவார். ஆனால், அதற்கென்று நாம் பூமிக்குரிய தயவுகளையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் (immunity) அவரிடத்தில் கேட்டு நமது பலியைப் பின்வாங்கிப்போட முயற்சிக்கக்கூடாது. மாறாக, பூமிக்குரிய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பூமிக்குரியவற்றில் நல்லவைகளைக் கொடுக்க விருப்பம் கொள்வதைப் பார்க்கிலும், நமது பிதாவாகிய தேவன் தமது பிள்ளைகளுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுக்க அதிக விருப்பமுள்ளவராக இருக்கின்றார் என்பதை நாம் உணர்ந்தவர்களாக ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையே கேட்க வேண்டும்.

பரிசுத்த ஆவி நமக்குக் கொடுக்கப்படும்போது, அது படிப்படியாக ஒழுக்க ரீதியிலான (அ) சரீர ரீதியிலான சோதனைகள் மற்றும் பாடுகளின் மூலம் அன்பு, சாந்தம் மற்றும் பொறுமையில் வளருவதற்கான படிப்பினைகளைப் படிப்படியாகக் கொடுக்கின்றது. வேதவார்த்தைகள் பற்றின அறிவினாலும், அதன் ஆவியினால் ஆட்கொள்ளப்படுவதினாலும் வளரும், தேவனுடைய கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகள், தங்களுக்கு நன்மையாக இருக்கும் எனக் கர்த்தர் காணும் எந்தப் பூமிக்குரிய ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் கர்த்தர் மேல் விசுவாசம் வைப்பதிலும், கர்த்தருடைய ஞானத்தை ஒத்துக்கொள்வதிலும் சந்தோஷம் கொள்வார்கள். நமக்கான விசேஷித்த அனுகூலங்கள் ஆவிக்குரியவைகளேயாகும்; மேலும் இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் கப்பர்நகூமிலோ அல்லது நமது கர்த்தருடைய ஊழிய நாட்கள் முழுவதிலுமோ ஆரம்பிக்காமல், அவர் பரத்திற்கு ஏறி, பிதாவினிடத்திலிருந்து தமது பரிசை/பலனையும், தமது பின்னடியார்களை ஜெநிப்பித்தலின் ஆவியினால் புதிய சுபாவத்திற்குள் கொண்டுவருவதற்கான அதிகாரத்தையும் பெற்றுக்கொண்ட பிற்பாடு, பெந்தெகொஸ்தே நாளன்றே ஆரம்பித்தது.

நாம் அப்பங்களையும், மீன்களையும், சரீர பிரகாரமான சுகங்களையும் நாடாமல் இருப்போமாக. ஏனெனில், இவைகளையெல்லாம் புறஜாதிகளே நாடுகின்றார்கள்; மாறாக, நாம் ஆவிக்குரிய ஆரோக்கியத்தையும், பலத்தையும், வல்லமையையும், தெய்வீக ஞானம் மற்றும் அன்பு நமக்குக் கூட்டி வழங்கும் சகல பூமக்குரியவைகளையுமே நாடக்கடவோம்.”