R5390 – நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5390 (page 28)

நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை

GOOD CONFESSION VERSUS BAD CONFESSION

லூக்கா 12:1-12

“”மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.” (வசனம் 8)

எந்த ஒரு மனுஷனாலும், ஒருக்காலும் பேசப்படாதது போன்று பேசின, இரட்சகரின் பேச்சுக்களைக் கேட்பதற்குப் பெரும் திரளான கூட்டம் அவரைச் சூழ்ந்துக்கொண்டிருந்தது. ஜனங்களைப் பொருட்படுத்தாமல், இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி, “”மாயக்காரராகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்” என்று கூறினார். எங்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது போன்று, தம்முடைய போதனைகளிலும், இயேசு தீமையான செல்வாக்கை அடையாளப்படுத்துவதற்குப் புளிப்பு என்ற வார்த்தையே பயன்படுத்துகின்றார். தூய்மையானதை அல்லது நல்லதை அடையாளப்படுத்துவதற்கென, எங்கேயாவது புளிப்பானது பயன்படுத்தப்பட்டுள்ள எந்த ஒரு தருணத்தையும் நாம் அறியோம். பஸ்கா காலங்களில், யூதர்கள் புளிப்பைப் பயன்படுத்துவதற்கு விலக்கப்பட்டுள்ளனர்; இது பாவத்தைக் களைந்துப் போடுவதை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.

அந்தக் காலத்திலுள்ள கல்விமான்களாகிய, பரிசேயர்களால் அனுசரிக்கப்பட்டு வந்த மாய்மாலங்கள், புளிப்பாகவும், அசுத்தமாகவும், பாவமாகவும் இருந்து, பரிசேயர்களின் செல்வாக்கை அசுசிப்படுத்துகின்றதாகவும் இருக்கின்றது என்று இயேசு கூறினார். அவருடைய சீஷர்கள் நேர்மையானவர்களாகவும், உண்மையுள்ளவர்களாகவும், சுத்தமானவர்களாகவும், வஞ்சனையும், போலித்தனமான பேச்சுகளும் இல்லாதவர்களாகவும் காணப்பட வேண்டும். மூடி மறைப்பதற்குரியதாய் இல்லாத விதத்தில், அவருடைய சீஷர்களின் வார்த்தைகளும், கிரியைகளும் காணப்பட வேண்டும். இறுதியில் அனைத்து மாய்மாலங்களும், பாவங்களும் நிர்வாணமாக்கப்படும், வெளியாக்கப்படும் என்று இயேசு கூறினார். அவருடைய இராஜ்யத்தில், உயிர்த்தெழுதலின் வல்லமை செயல்படுத்தப்படும்போது, இருளின் மறைவான காரியங்கள் அனைத்தும் ஒழித்துக்கட்டப்பட்டு, மனுக்குலத்தின் இரகசியம் வெளியாக்கப்படும் எனும் அர்த்தத்தில் இயேசு கூறினார். முன்னுரைக்கப்பட்டுள்ளபடி, அநேகரின் தண்டனையாக அவமானம் மற்றும் நிந்தனைகள் காணப்படும்என்பதில் ஐயமில்லை.

இவ்வாறாக உயிர்த்தெழுதலில், சிலர் பரலோகத்தின் நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பதற்காகவும், மற்றவர்களோ வெட்கமும், நித்தியமான அவமானமும் அடையத்தக்கதாக எழும்பி வருவார்கள் என்று நாம் வாசிக்கின்றோம் (தானியேல் 12:2). எனினும் நித்தியம் என்று இங்கு இடம்பெறும் வார்த்தைக்கான எபிரெய வார்த்தையானது, நித்தியம் என்று அர்த்தம் கொடுக்காமல், நீடித்திருத்தல் எனும் அர்த்தத்தைக் கொடுப்பதினால் ஆறுதலடைகின்றோம். வெட்கமான மற்றும் அவமானமான சூழ்நிலைகள் நீடிப்பது வரையிலும், வெட்கமும், அவமானமும் நீடித்திருக்கும், அதாவது ஒரு நபர் சீர்த்திருந்துவது வரைக்கும் அல்லது தவறும் பட்சத்தில் இரண்டாம் மரணத்தில் அழிக்கப்படுவது வரைக்கும் நீடிக்கின்றதாய் இருக்கும்.

துன்புறுத்தப்படுதலுக்கு அஞ்சாதிருங்கள்

வாழ்க்கையில் நேர்மையாய் இருப்பதன் காரணமாக, மாய்மாலக்காரர்களிடமிருந்து, தம்முடைய பின்னடியார்களுக்குத் துன்புறுத்தல்கள் வரும் என்றும் துன்புறுத்தல்கள் அவர்களுக்கு மரணத்தைக் கொண்டு வருவதாக இருப்பினும், அவர்கள் அஞ்சக்கூடாது என்றும் இயேசு குறிப்பிட்டிருந்தார். தற்கால ஜீவியம் என்பது, சிலகாலம் மாத்திரமே வாழ்கின்ற ஜீவியமாக இருக்கின்றது. விருப்பமுள்ளவர்களுக்கும், கீழ்ப்படிதலுள்ளவர்களுக்கும் தேவன் ஏற்படுத்தியுள்ளதும்; இயேசுவின் பலியினுடைய புண்ணியத்தினால் இறுதியில் அடையப் பெறப்படுகிறதுமான நித்தியத்திற்குரிய ஜீவனே, கருதுவதற்குப் பாத்திரமான ஜீவனாகும். இப்படியாகக் கருதுபவர்கள், மனுஷர் தங்களுக்குச் செய்கிறவைகளைக் குறித்து அஞ்சாமல், மாறாக தேவனிடமிருந்தும், எதிர்க்கால ஜீவியம் குறித்த அவருடைய கிருபையான ஏற்பாடுகளிலிருந்தும் தங்களைப் பிரித்துவிடுவதற்கு ஏதுவானவைகளைக் குறித்தே அஞ்ச வேண்டும்.

“”கொலை செய்த பின்பு, நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்,” இங்கு இடம்பெறும் நரகம் என்பதற்கான கிரேக்க வார்த்தை கெஹன்னா ஆகும். முதலாவதாக, இது எருசலேமுக்கு வெளியே இருக்கும் பள்ளத்தாக்கினுடைய பெயர் ஆகும்; இதில் பட்டணத்தின் குப்பைகள், முற்றிலுமாய் அழிக்கப்படுவதற்கெனப் போடப்படுகின்றது; இன்னுமாக பயங்கரமான குற்றவாளிகள், மரணத் தண்டனை அடைந்த பிற்பாடு, அவர்களுடைய சரீரம் இங்கு வீசப்படுகின்றன. அவர்களைச் சித்திரவதைப் பண்ணுவதற்காக அல்லாமல், மாறாக பொல்லாதவர்களுக்கு எதிர்க்காலம் இல்லை என்பதை அடையாளமாய்த் தெரிவிப்பதற்கே இப்படியாகச் செய்யப்பட்டது. வெளிச்சத்திற்கும், அறிவிற்கும் எதிராகவும், நன்கு உணர்ந்தவர்களாகவும், வேண்டுமென்றும் பாவம் செய்பவர்களுக்குரிய இரண்டாம் மரணத்திற்கு நிழலாக இயேசு, கெஹன்னாவைப் பயன்படுத்துகின்றார்.

தேவனுக்குப் பயப்படுகின்ற பயம் என்பது, ஞானத்தின் ஆரம்பமாக இருக்கின்றது; பயபக்தியுடன் கூடிய பயம் கொண்டிருப்பது எப்போதும் நல்லதே. ஆனால் தேவனுடைய ஜனங்கள், அவருடன் நெருங்கிப் பழகி, அவருடைய நீதியையும், ஞானத்தையும், அன்பையும், வல்லமையையும் கற்றுக்கொள்ளும் போது, நீதியை விரும்புகின்ற யாவருக்கும் அவர் நண்பராய் இருக்கின்றர் என்பதை உணர்ந்துக்கொண்டு, தேவனை அன்புகூருகின்றனர்; அப்போஸ்தலர் கூறுவது போன்று, “”பூரண அன்பானது, (வெறுப்பு மூட்டிவிடுவோமே எனும் அச்சத்தை) பயத்தைப் புறம்பே தள்ளுகின்றது” . . . இது இளைப்பாறுதலைக் குறிக்கின்றது. கர்த்தருடைய சீஷர்கள், தங்களுடைய பரம பிதா தங்கள் மீது கொண்டிருக்கும் பராமரிப்பையும், அவருடைய ஞானத்தையும், அடைக்கலான் குருவிகளையே அவர் மறக்காமல் இருப்பதினால், தங்களையும் அவர் மறப்பதில்லை என்பதையும், அவருடைய அறிவின்படியும், அனுமதியின்படியும் அல்லாமல் மற்றபடித் தங்களுடைய தலையிலிருந்து ஒரு மயிர்க்கூட, கீழே விழுவதில்லை என்பதையும், அவருடைய ஜனங்களுக்கும், அவருடைய பிள்ளைகளுக்கும் அவர் அனுமதிக்கும் யாவும், ஏதோ ஓர் ஆசீர்வாதத்தையே கொண்டு வருகிறதாய் இருக்குமென அவர் நிச்சயம் அளித்துள்ளார் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

மனுஷர் முன்பாக என்னை அறிக்கைப்பண்ணுங்கள்

தேவனுடன் இசைவாகக் காணப்படும் அனைவரும் தேவனையும், தேவனுடைய பிரதிநிதியாக உலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட இயேசுவையும் அறிக்கைப்பண்ண வேண்டும். இயேசுவை அறிக்கைப் பண்ணுகிறவர்கள் எவரும், அவரை அனுப்பின பிதாவையும் அறிக்கைப் பண்ணுகிறவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் கர்த்தருடைய தயவிற்குள்/கிருபைக்குள் காணப்பட்டு, இறுதியில் உயிர்த்தெழுதலில், பிதாவினாலும், பரிசுத்த தூதர்களாலும் கிறிஸ்துவின் மணவாட்டியின் அங்கங்களாக அங்கீகரிக்கப்படுவார்கள். ஆனால் கிறிஸ்துவின் சீஷர்களான பிற்பாடு, அவரை மறுதலிப்பவர்களை, அவர் மகிமையில் சீஷர்களாக அங்கீகரிக்கமாட்டார்.

இயேசுவின் வார்த்தைகள் சீஷர்களுக்கே சொல்லப்பட்டதே ஒழிய, ஜனக்கூட்டத்தாருக்கு அல்ல. கிறிஸ்துவை அறிக்கைப் பண்ணுகிறவர்கள், அவருடைய சீஷர்களாகுகின்றனர்; அவரை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாதவர்களால் அவரை மறுதலிக்கவும் முடியாது. ஞானஸ்நானத்தினால் அல்லது வேறு ஏதாகிலும் வெளித்தோற்றமான முறையினால் மாத்திரமாகக் கர்த்தர் அறிக்கைப்பண்ணப்படக் கூடாது. அவருடைய பின்னடியார்களின் ஜீவியத்திலும், வார்த்தையிலும், நடத்தையிலும் அவர் அறிக்கைப்பண்ணப்பட வேண்டும். பின்னடியார்கள் அவருடைய ஆவியைக் கொண்டிருந்து, “”இருளினின்று ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கின்றவர்களாக” இருக்க வேண்டும். சீஷன் என்று தன்னை ஒருவன் அறிக்கைப் பண்ணிக்கொண்டும், ஆண்டவருடைய போதனைகளைப் புறக்கணித்து, அவரைத் தவறாய்க் காட்டுகின்றவனாகவும், அவரைத் தூஷிக்கின்றவனாகவும், அவரை மறுதலிக்கின்றவனாகவும் இருப்பானானால், இந்த யுகத்தின் முடிவில், மணவாட்டி மகிமையில் (தேவன் முன்பாக) நிறுத்தப்படுவதில் பங்கடையமாட்டான்.

அங்கிருந்த ஜனக்கூட்டத்தார், சீஷர்கள் ஆகவேயில்லை என்பதில் ஐயமில்லை. சிலர் இயேசு பிசாசு பிடித்தவராய் இருந்தார் என்றும், பைத்தியமாய் இருக்கின்றார் என்றும் ஏளனம் செய்தனர். இப்படியாக தம்மைத் தவறாய்க் காட்டினதும், தம்மை இப்படியாக தூஷித்ததும், அறியாமையினால் செய்யப்படும் பட்சத்தில் மன்னிக்கப்படும் என்று ஆண்டவர் கூறினார். ஆனால் சிலர் இதையும் தாண்டிச் சென்று, பரிசுத்த ஆவியினால் செய்யப்பட்ட அவருடைய நற்கிரியைகளை, பெயெல்செபூலாகிய சாத்தானின் வல்லமையினால் செய்யப்பட்டது என்று கூறினார்கள்; இதன்மூலம் இவர்கள் கண்டுக்கொள்ளப்படாமல் விடுவதற்கு முடியாத, மன்னிக்க முடியாத பாவங்களைச் செய்தவர்கள் ஆனார்கள்.

இப்படிப்பட்ட பாவங்கள் துணிகரமானவைகள்; ஏனெனில் இவர்களுடைய குற்றச்சாட்டிற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. ஆண்டவருடைய போதனைகளானது, தூய்மையானவைகள். அவருடைய நடத்தையும், அவருடைய பேச்சும், அவருடைய அற்புதங்களும் அனைத்தும் நற்கிரியைகளாக இருந்தன. துணிகரமாய்த் தவறாய் இருப்பவர்கள் மாத்திரமே, இயேசுவின் இக்காரியங்கள் சாத்தானால் செய்யப்பட்டது என்று சொல்வார்கள். இத்தகையவர்கள் ஒருபோதும் மன்னிக்கப்பட முடியாது என்ற காரியமானது, இந்த அவதூறுகாரர்களுக்கு இனிமேல் நம்பிக்கையே இல்லை என்ற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. இவர்கள் தங்களுடைய துணிகரத்திற்கு ஏற்ப தண்டனை பெறுவார்கள். இத்தண்டனையின் மூலம்; இவர்கள் சீர்த்திருந்தினால் நல்லது; ஒருவேளை இல்லையென்றால், இறுதியில் இரண்டாம் மரணத்தில் முற்றிலுமாக அழிக்கப்படுவார்கள். [R5391 : page 29]

பரிசுத்த ஆவிக்கு எதிரான பாவம், போன்றதான, சில பாடங்கள் குறைவாகப் புரிந்துக்கொள்ளப்படுகின்றது. இவ்விடத்தில் இடம்பெறும் ஆவி எனும் வார்த்தையானது, வல்லமை (அ) செல்வாக்கைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. உதாரணத்திற்குச் சாத்தானுடைய ஆவி என்பது தேவனுக்கும், நீதிக்கும் விரோதமான செல்வாக்காகும்; தப்பறையின் ஆவி என்பது தப்பறையின் வல்லமை (அ) செல்வாக்கு ஆகும். இதற்கு எதிர்மாறான சத்தியத்தின் ஆவி, தேவனுடைய ஆவி, பரிசுத்த ஆவி என்பது, தெய்வீக வல்லமையையும், செல்வாக்கையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஒருவர் எந்தளவிற்கு வெளிச்சமூட்டப்பட்டிருக்கின்றாரோ, அந்தளவுக்குப் பொறுப்புடையவராக இருக்கின்றார். மனதளவிலும், ஒழுக்க ரீதியிலும் குருடாய் இருப்பவர்களுக்குக் குறைவாகவே பொறுப்பு இருக்கின்றது/பொறுப்பு இல்லை, காரணம் இவர்கள் சத்தியத்தின் ஆவிக்கும், தப்பறையின் ஆவிக்கும் இடையிலும், தேவனுடைய ஆவிக்கும், சாத்தனுடைய ஆவிக்கும் இடையிலுமுள்ள வித்தியாசத்தைத் தெளிவாக உணர்ந்துக்கொள்வதில்லை.

நன்மை, தீமை என்ன என்பதை உணர்ந்துக்கொள்வதற்கு முடியாமல் இன்றுக் காணப்படும் நிலைமையில், மனுஷன் ஆதியில் சிருஷ்டிக்கப்படவில்லை. அவன் பூரணமாக, தேவனுடைய சாயலிலும், ரூபத்திலும் சிருஷ்டிக்கப்பட்டான். பாவமானது, மனிதனுடைய சரீரத்திற்கு மாத்திரமாக மரணத்தைக்கொண்டு வராமல், அவனுடைய மனதிற்கும், அவனுடைய மனசாட்சிக்கும் கூட மரணத்தைக்கொண்டு வந்தது. ஆகவே நன்மைக்கும், தீமைக்கும் இடையிலான வித்தியாசத்தை உணர்ந்துக்கொள்வதற்கான திறனும் வேறுபட்டிருக்கின்றது. இன்னுமாக சிலருக்கு மற்றவர்களைக் காட்டிலும் அறிவுரைகள் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இருந்தபடியால், இதற்கேற்ப பொறுப்புகளும் அதிகமாயிருந்தது. உலகமானது, தேவனை அறிந்துக்கொள்ளவில்லை, ஆதலால் இரண்டாம் மரணத்திற்கு ஏதுவாக தண்டிக்கப்படத்தக்கதாக, உலகம் பரிசுத்த ஆவிக்கு எதிராய் முழுமையாகப் பாவம் செய்ய முடியாது; “”தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” (2 கொரிந்தியர் 4:4).

கிறிஸ்து, தேவனால் அனுப்பப்பட்டவர் என்பதை அறிந்துக்கொள்வதற்குக் கொஞ்சம் அறிவு அவசியமாய் இருக்கின்றது. ஒருவேளை நாம் அவரை ஏற்றுக்கொண்டு, அவருடைய அர்ப்பணிக்கப்பட்ட சீஷர்களாக அல்லது பின்னடியார்கள் ஆகும் பட்சத்தில், நாம் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுதலை அடைகின்றோம். இது நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படுவதற்குத்தக்கதாக, நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் அகலமாய் அதிகமதிகமாக திறக்கும் அனுகூலமான கட்டத்திற்கு நம்மைக் கொண்டு வருகின்றது. கர்த்தருக்குள்ளான நம்முடைய சந்தோஷத்துடனும், நாம் அழைக்கப்பட்டிருக்கும் பரலோக மகிமைகளுக்கான நம்முடைய ஆயத்தங்களுடனும், நம்முடைய பொறுப்புங்கூடப் பெருகுகின்றது. இந்த வளர்ச்சியடைந்துள்ள இயேசுவின் சீஷர்களே, அவர்கள் முத்திரையிடப்பட்டுள்ள பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துவதற்கும், அவர்களுடைய இருயதங்களிலுள்ள பரிசுத்தத்தின் ஆவியை அவித்துப் போடுவதற்குமான அபாயத்தில் காணப்படுகின்றனர் (எபேசியர் 4:30; 1 தெசலோனிக்கேயர் 5:19). அவித்துப் போடுதலும், துக்கப்படுத்துதலும் உடனடியாகச் சம்பவிக்கும் கிரியைகளாக இல்லாதிருந்தாலும், இவைகள் இரண்டாம் மரணத்திற்கு நேராக வழிநடத்தும் பாதைகளாக இருக்கின்றது. ஒவ்வொரு கிறிஸ்தவனும், ஆவியில் நிரம்பி, பரிசுத்தத்தில் பூரணமடைதலுக்கு நேராக முன்னோக்கி தொடர்ந்துக்கொண்டிருக்க வேண்டும்.

தேவனுடைய நல்வார்த்தைகளையும், இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியில் பங்கடைந்தும், பிற்பாடு, கிறிஸ்துவையும், நீதியையும் துணிகரமாயும், வேண்டுமென்றும் வெறுத்து, பாவத்திற்குள்ளாகப் போகிறவர்களை மனந்திரும்புதலுக்கு ஏதுவாய் மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாத காரியம் எனும் இக்கருத்தை, அப்போஸ்தலர் எபிரெயர் 6:4-6 வரையிலான வசனங்களில் குறிப்பிடுகின்றார். “”சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்புர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்ப்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும்” (எபிரெயர் 10:26-27). இப்படியாக கிறிஸ்துவின் ஒப்புரவாகுதல் பணியைப் புறக்கணிக்கின்றவர்களைக்குறித்து, அப்போஸ்தலர் விசேஷமாகக் குறிப்பிடுகையில், இப்படிப்பட்டவர்கள் தங்களைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தைச் சாதாரணமான ஒன்று என்று எண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கின்றார்கள் என்கிறார்.

பரிசுத்தத்தின் ஆவியை அவித்துப்போடுகிறவர்களை (அ) ஆவியைத் துக்கப்படுத்துகிறவர்களைப் பரிசுத்தவானாகிய யாக்கோபு, ஆவிக்குரிய வாழ்க்கையில் நோய்வாய்ப்பட்டுள்ளவர்களாக விவரிக்கின்றார். (யாக்கோபு 5:14). தேவனிடத்திலுள்ள ஐக்கியத்திலிருந்து துண்டிக்கப்பட்டுள்ள இத்தகையவர்களுக்கு, கடைசியாக ஓர் உதவி காணப்படுகின்றது; அதென்னவெனில், இவர்கள் இவர்களுக்காக ஜெபிக்கவும், பரிசுத்த ஆவிக்கு அடையாளமான எண்ணெயினால் இவர்களை அபிஷேகிக்கவும், இவர்கள் சபையிலுள்ள பரிசுத்தமாக்கப்பட்ட மூப்பர்களின் உதவியைக் கேட்டுக்கொள்ள வேண்டும். விசுவாசத்துடன் கூடிய ஜெபம் இந்த ஆவிக்குரிய நோயாளிகளை இரட்சிக்கும்; மற்றும் கர்த்தர் இவர்களைத் தூக்கிவிடுவார்; இவர்கள் பாவங்கள் செய்திருந்தாலும், இவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.

பரிசுத்த ஆவியானது போதிக்கும்

கர்த்தருடைய உண்மையுள்ள பின்னடியார்கள், அவர்களுக்கு வரும் உபத்திரவங்களில், அவர்கள் தவறாய்க் குற்றஞ்சாட்டப்பட்டு, துரைத்தனத்தார்களுக்கு முன்பாகக்கொண்டுச் செல்லப்படுவதை எதிர்ப்பார்க்கலாம். சீஷர்களில் பெரும்பாலானவர்கள் கல்லாதவர்களாய் இருந்தபடியினால், அவர்கள் கல்வியறிவுள்ள அதிகாரிகள் முன்பு கொண்டுச் செல்லப்படும் போது, மிகுந்த மனக்கலக்கம் அடையக்கூடும்; அவர்கள் மீது கர்த்தருடைய ஆசீர்வாதம் காணப்படும் என்பதைப் பின்னடியார்கள் அறிந்திருக்க வேண்டும்; மேலும் அவர்களுக்கு இருக்கும் இயல்பான ஞானத்தைப் பார்க்கிலும், உயர்வான ஞானத்தை அடைவார்கள் என்பதையும் பின்னடியார்கள் அறிந்திருக்க வேண்டும்; என்ன பதில் சொல்ல வேண்டும் என்று பின்னடியார்கள் பதட்டத்துடன், முன் கூட்டியே சிந்தித்து வைத்துக்கொள்ளாமல், மாறாக தெய்வீக உதவியினை எதிர்ப்பார்த்து, அனைத்தையும் கர்த்தரிடத்தில் ஒப்படைத்து விட வேண்டும்.

ஆனால் அதற்கென்று, தங்களுக்கான பாடத்தைப் படிக்காமல், கிறிஸ்துவின் ஊழியர்கள் மேடைகளில் அல்லது பாட வகுப்புகளில் கர்த்தருக்குப் பிரதிநிதியாக நிற்க முற்படக் கூடாது. மாறாக ஒவ்வொருவரும், “”நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரும்” என்ற தீமோத்தேயுவுக்கான பரிசுத்தவானாகிய பவுலினுடைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் (2 தீமோத்தேயு 2:15). தேவனுடைய ஜனங்களாகிய சபையாரின் முன்பாக தேவனுடைய வாய்க்கருவியாக நிற்பதற்கும், துரைத்தனத்தார்களுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய் நிற்க வைக்கப்படுவதற்கும் வித்தியாசம் இருக்கின்றது.