R4124 – மறுஜென்மகாலமும் இராஜ்யமும்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4124 (page 27)

மறுஜென்மகாலமும் இராஜ்யமும்

REGENERATION AND THE KINGDOM

யோவான் 3:1-21

“”தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” – யோவான் 3:16.

கிறிஸ்தவ மண்டலமெங்கும் பொதுவாக நிலவி வரும்தவறான மற்றும் வேதத்தை அடிப்படையாகக் கொண்டிராத கருத்துக்களையும், வேத விளக்கங்களையும் இப்பாடமானது சிறந்த முறையில் எடுத்துக்காட்டுகிறது. ஆச்சரியமென்னவெனில் (தேவ வார்த்தை அல்லாத) மற்றக் காரியங்களில் நன்கு பகுத்தறியும் ஆற்றல்கொண்டிருக்கும் ஜனங்கள், தேவனுடைய வார்த்தைகளின் அடிப்படையில் வெளிப்படும் நியாயங்களை/அறிவைப் புறக்கணித்துவிடுகின்றனர். இவ்விஷயத்தைக் குறித்து நிலவிவரும் விளக்கம் என்னவெனில், இயேசு ஒரு சபையை ஸ்தாபிக்க இருந்ததாகவும், அதை அவர் தேவனுடைய இராஜ்யம் என்று அழைப்பதாகவும், எவ்விதத்திலேயும் அது உலக இராஜ்யத்தின் சாயலையோ அல்லது எவ்வித உலகத்தின் ஆளுகையோடு தொடர்போ பெற்றிருக்கவில்லை என்று நிக்கொதேமுவுக்குக் கற்பித்தார் என்பதும் ஆகும். மேலும், அவருடைய சபையை நிக்கொதேமு, இராஜ்யமாகக் கருதும் விதத்தில் நமது கர்த்தர் பேசினார் என்றும் கருதப்படுகின்றது, காரணம், தேவனுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்பட்டிருப்பதுபோல, பூமியிலேயும் செய்யப்படும்படியாக, இறுதியில் அந்த இராஜ்யம் பூமியெங்கும் பரம்பி இருக்கும்/ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் என்பதினாலாகும். இவர்களுடைய இந்தக் கருப்பொருளை இன்னும் அதிக அர்த்தமற்றதாக்குவதற்கு இவர்கள், ஒருவர் முதலாவது பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படாவிட்டால் இந்த இராஜ்யத்தைப் புரிந்துக்கொள்ளவோ அல்லது அதற்குள் பிரவேசிக்கவோ கூடாது என்று நமது ஆண்டவர் இங்கு அறிக்கையிட்டதாகத் தெரிவிக்கின்றனர். இதைப் பற்றின அர்த்தமற்றக் காரியங்கள் அனைத்தையும் இப்பொழுது கவனியுங்கள்.

ஏறத்தாழ பத்தொன்பது நூற்றாண்டுகளாக, உலகத்திலுள்ள கத்தோலிக்கர், புராட்டஸ்டண்டு ஆகிய இருவருடைய மொத்த எண்ணிக்கைக் கிட்டதட்ட 400-மில்லியன் ஆகும். இவர்களுக்குள் கிறிஸ்தவ மண்டலத்தார் என்று அழைக்கப்படுவதற்குத் தகுதியற்றவர்களாகிய சகல நாகரிகமான தேசங்களிலுள்ள தரைமட்டமானவர்களும், முரட்டுத்தனமானவர்களும், கடினமானவர்களும் அதாவது கெட்டவர்களும், கீழான சூதாட்டப்பழக்கம் உள்ளவர்களும், மாசுடையவர்களும் (கிறிஸ்தவர்கள் என்ற பெயரைத் தரித்துக்கொண்டு) உள்ளடங்குகின்றனர். மீதியானோர் அதாவது, கர்த்தர் இயேசுவைக் குறித்து ஒருபோதும் கேள்விப்பட்டிராதவர்களோ அல்லது கேள்விப்பட்டும் அவரை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்களோ பன்னிரண்டாயிரம் மில்லியன் கணக்கானவர்கள். இன்று [R4124 : page 28] புறஜாதிகளின் எண்ணிக்கையோ, அநேகமாக, கர்த்தர் நிக்கொதேமுவோடு பேசிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இருந்த ஒட்டுமொத்த பூமியின் ஜனத்தொகையைப் பார்க்கிலும் பலமடங்கு அதிகரித்துள்ளது. உலகம்தான்/உலகத்தார்தான் இராஜ்யமா? நிச்சயமாக இல்லை! ஆனால் இன்று நாம், “”கிறிஸ்தவ மண்டலம்” என்று அழைக்கப்படக்கூடிய 400 மில்லியன் மக்களை உற்று நோக்கி, நாங்கள் கிறிஸ்தவர்கள் என்று அவர்கள் தங்களைக் குறித்து அறிக்கை செய்துக்கொண்டிருக்கும் திரைக்குப் பின்னாகக் காணப்படும் அவர்களின் உண்மையான தோற்றம் என்ன என்று நாம் முடிந்தளவு நன்றாக நிதானித்துப் பார்ப்போமாக. அவர்களில் எத்தனைபேர் மறுபடியும் பிறந்ததாகவும், மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டதாகவும், பரத்திலிருந்து பிறப்பிக்கப்பட்டவர்களாகவும், பரிசுத்த ஆவியின் புதிதாக்குதலைப் பெற்றுக்கொண்டதாகவும் அறிக்கை செய்துள்ளனர். உண்மையைச் சொல்லப்போனால், ஒருவரும் இல்லை; சந்தேகமின்றி, நமது கர்த்தருடைய நாளில் இருந்ததுபோலவே ஒரு “”சிறு மந்தை” மட்டுமே.

இப்பாடத்தைக் குறித்து எவருக்கேனும் சந்தேகம் இருப்பின் அவர், புதுப் பிறப்பு, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பித்தல் என்பதைக் குறித்து தனது கிறிஸ்தவ நண்பர்கள் மற்றும் அயலகத்தார் மத்தியில் விசாரிக்கக்கடவர்கள். பின்னர் அவர்கள் ஒரு முழு அர்ப்பணிப்பு அல்லது தேவனுக்கென்றும், அவருடைய பணிக்கென்றும் நம்முடைய நேரம், பெலன் மற்றும் நமக்குண்டான அனைத்தையும் தத்தம்செய்தல் குறித்தும், ஜெநிப்பித்தல் மற்றும் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணப்படுதலின் மூலம் அடையாளப்படுத்தப்படும் இருதயத்தின் மாற்றம் குறித்தும், நீங்கள் விளக்கிக் காண்பித்த பிறகு உங்களுடைய நண்பர்கள் மற்றும் அயலகத்தார்களில் எத்தனைபேர் முழு ஈடுபாட்டோடு அர்ப்பணித்துள்ளனர் அல்லது பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளனர் என்று வினவுங்கள். இராஜ்யத்தைக் குறித்த இந்தப் பொதுவான (கிறிஸ்தவமண்டல) கண்ணோட்டத்தில் மாபெரும் தவறு இருக்கின்றது என்றும், இந்தப் பொதுவான (கிறிஸ்தவமண்டல) கருத்தின்படி நமது கர்த்தர் பேசவில்லை என்றும், இது ஏற்றுக்கொள்ள முடியாத விளக்கம் என்றும் நீங்கள் தெளிவுடன் காணப்படுவீர்களானால், உங்களுக்கு நமது விளக்கத்தின் மீது இவ்வளவு கேள்விகள்/சந்தேகங்கள் எழும்ப வாய்ப்பில்லை.

இவ்விஷயத்தைக் குறித்த பொதுவான (கிறிஸ்தவ மண்டலத்தாரின்) கருத்து முற்றிலும் தவறு என்ற முழு நிச்சயத்துடன் நாம் சத்தியத்தை அறிந்துக்கொள்வதற்கும், மூடநம்பிக்கைகளிலிருந்து சத்தியம் நம்மை விடுவிப்பதற்கு ஏதுவாகவும், சத்தியம் நமக்கு வெளிச்சத்தையும், சந்தோஷத்தையும், உதவியையும் கொண்டு வருவதற்கு ஏதுவாகவும் இப்பொழுது தெளிந்த சிந்தையுடன் நம்முடைய இந்தப் பாடத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் ஜெபத்துடனும், கவனத்துடனும் கவனிப்போமாக.

நிக்கொதேமுவும், பிரதான போதகரும்

யூதர்களுக்குள்ளே செல்வாக்குமிக்க மனிதனாகவும், ஆலோசனை சங்கத்தில் ஓர் அங்கத்தினராகவும், பரிசுத்தத்தின் மாதிரியாக அதாவது, தேவனுக்கான அர்ப்பணிப்பில் மாதிரியாக பரவலாக அறியப்பட்டிருந்த பரிசேயனாகிய நிக்கொதேமு, இயேசுவைச் சந்திக்க இரவில் வந்தார். இவர் இராக்காலங்களில் வந்ததற்கான காரணம் இவருடைய பயமாயிராமல், இவர் மற்றவர்கள் மற்றும் தனக்கான நலன்/நன்மைக் குறித்து, கொண்டிருந்த முன்யோசனையினாலேயே இரவில் வந்தார். அவர் இராக்காலத்தில் வந்ததன் காரணம், அநேகமாக, போதகருடன் தனிப்பட்ட முறையில் பேசுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஆகும். எந்தச் சந்தர்ப்பத்திலும் இவர் மிகுந்த பயபக்தியும், நற்பண்புள்ளவராகவும் காணப்பட்டார். இவர் நமது ஆண்டவரை ரபீ அல்லது ஆண்டவர் என்று அழைத்து இயேசு தேவனிடத்திலிருந்து வந்த ஆண்டவர் என்றும், தேவனுடைய ஊழியக்காரர் என்றும், இயேசுவின் அற்புதங்கள் வாயிலாக இயேசுவின் மீதான, தேவனுடைய பிரியம் வெளிப்படுத்தப்பட்டது என்றுமுள்ளவைகளின் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். இராக்கால உரையாடலின் ஒரு சிறிய பகுதியே கொடுக்கப்பட்டுள்ளது. யோவானும், அவருடைய சீஷரும், அதைத்தொடர்ந்து இயேசுவும் அவருடைய சீஷரும் போதித்து வந்த தேவனுடைய இராஜ்யத்தைக் குறித்து அறிந்த நிக்கொதேமு, அதைக் குறித்தே கேள்வி கேட்க வந்திருக்கவேண்டும் என நாம் நியாயமாக ஊகிக்கலாம். வேத வாக்கியங்களின் மாணவராக இருந்த நிக்கொதேமு, தேவனுடைய இராஜ்யத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருக்க வேண்டும் என்பதையும், அது இஸ்ரயேலின் ஆசீர்வாதம் மற்றும் எடுப்பித்துக் கட்டுதலுக்குமான தேவனுடைய ஏற்பாடு என்பதையும், இறுதியாக, “”பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்” என்று ஆபிரகாமுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலாகவும் காணப்படும் என்பதையும் அறிந்திருந்தார். இயேசுவின் மீது நம்பிக்கைக்கொண்டிருந்த இவர், இந்த இராஜ்யத்தைக் குறித்த விவரங்களைக் கற்றுக்கொள்ள விரும்புவதற்கான காரணம், யோவான் ஸ்நானனோ அல்லது இயேசுவோ, இராஜ்யம் ஸ்தாபிக்கப்படப்போகிற விதம் குறித்த எவ்விஷயத்தையும் வெளிப்படுத்தவில்லை என்பதாகும்; அதாவது, (இராஜ்யத்திற்கு) போர் வீரர்கள் எங்கிருந்து ஆயத்தம் பண்ணப்படப்போகிறார்கள் என்றும், எவ்விதம் அவர்கள் பயிற்சியளிக்கப்படப்போகிறார்கள் என்றும், எங்கிருந்து போராயுதங்கள் கொண்டுவரப்பட்டு, அதற்குத் தேவையான சாதனங்கள் வாங்குவதற்குப் பெருந்தொகை திரட்டப்படும் என்றுமுள்ள எவ்விஷயத்தையும் வெளிப்படுத்தவில்லை என்பதாகும். இக்கேள்விக்கான நமது கர்த்தருடைய பதில், “”ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்பதாக இருந்தது.

ஓர் இராஜாவையும், ஒரு மகிமையான பரிவாரத்தையும், முன்பிருந்த எந்த இராஜாவைப் பார்க்கிலும் அதிக பிரமாண்டமான இராஜாவாக, மனுஷர் மத்தியில் பரலோக அதிகாரம் மற்றும் வல்லமையைப் பெற்றிருக்கும் மேசியாவை இராஜாவாக எதிர்ப்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நிக்கொதேமுவுக்கு, (இயேசுவின் பதிலால்) ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை நம்மால் உணரமுடிகின்றது. ஒருவர் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்யத்தைக் காண இயலாது என்று சொல்லப்பட்டபடியினால், அவருக்கு ஏற்பட்ட குழப்பத்தை இப்பொழுது நிதானித்துப்பார்ப்போம். அவருடைய ஆழ்ந்த சிந்தையில் பெருங்குழப்பம் ஏற்பட்டிருப்பதை, “”ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்?” என்ற அவருடைய மறுமொழியின் மூலம் காண்பிக்கப்பட்டுள்ளது. “”இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான். மாமிசத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” என்ற நமது கர்த்தருடைய பதிலைக்கொண்டு இக்கருப்பொருள் மீது அவர் ஒரு சிறிய வெளிச்சத்தைப்பெற ஆரம்பித்தார்.

மிகச் சொற்பமான வார்த்தைகளிலிருந்து, நிக்கொதேமு சில “”பலமான ஆகாரத்தைப்” பெற்றுக்கொண்டார். இவ்வறிக்கையிலிருந்து, அந்த இராஜ்யம் மாம்சத்துக்குரிய (அ) பூமிக்குரிய இராஜ்யமாக இராமல், ஓர் ஆவிக்குரிய இராஜ்யமாக, ஒரு பரலோக இராஜ்யமாக இருக்கும் என்பதை அவர் புரிந்திருக்க வேண்டும். மாம்சத்தின்படியான இயற்கையான பிறப்பு என்பது, ஒரு புதிய பிறப்பை, ஓர் ஆவிக்குரிய பிறப்பை விளக்கிக்கூறும் அடையாளமே என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கக்கூடும். மேலும் தேவனுடைய இராஜ்யம், எந்தப் பூமிக்குரிய இராஜ்யத்தைப் பார்க்கிலும் உயர்ந்த தளத்திலிருக்கும் என்றும், அது பொதுவான மனுக்குலத்தால் காணக்கூடாததும், நுழையமுடியாததும், அதன் அங்கத்தினராக முடியாததுமான ஓர் ஆவிக்குரிய இராஜ்யமாக இருக்கும் என்றும் கர்த்தர் குறிப்பிடுவதாக நிக்கொதேமு புரிந்துக்கொண்டிருக்க வேண்டும். ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டு, ஆவியினால் பிறக்கக்கூடியவர்கள் மட்டுமே உண்மையில் அந்த ஆவிக்குரிய இராஜ்யத்தைப் பார்க்கவும், அதற்குள் நுழையவும்கூடும். ஆனால் நமது கர்த்தர், “”ஜலத்தினாலும், ஆவியினாலும் பிறவாவிட்டால்” என்றும் கூறுகிறார். தண்ணீர் என்றதும், பாவங்களுக்கான மன்னிப்பாகவும், மனந்திரும்புதலுக்கான அடையாளமாகவும் யோவான் ஸ்நானனும், அவருடைய சீஷர்களும் பிரசங்கித்துக்கொண்டிருந்த தண்ணீர் ஞானஸ்நானம் குறித்து அநேகமாக நிக்கொதேமுவின் சிந்தைக்கு வந்திருக்கும். பெந்தெகொஸ்தே நாள்முதல் இன்றுவரை வாழ்ந்துகொண்டிருக்கும் நமக்கோ, பரிசுத்த ஆவியின் வழிநடத்துதல் மற்றும் போதனையின் [R4125 : page 29] கீழ்த்தேவனுடைய ஆழங்களின் மீதான புரிந்துக்கொள்ளுதல் கொடுக்கப்பட்டுள்ளது; அதாவது, நமது கர்த்தர் குறிப்பிட்டுள்ள தண்ணீருக்கு இன்னும் ஆழமான அர்த்தமுள்ளது என்று புரிந்திருக்கின்றோம். அடையாளமான தண்ணீர், “”சத்தியத்தை” அடையாளப்படுத்துவதாகவும், பரிசுத்த ஆவியினாலே நம்முடைய ஜெநிப்பித்தல் என்பது, அப்போஸ்தலர் கூறுகிறபடி, “”சத்திய வசனத்தினாலே” ஜெநிப்பிக்கப்படுதலை அடையாளப்படுத்துவதாகவும் நாம் காண்கிறோம் (யாக்கோபு 1:18). அப்போஸ்தலனாகிய பவுலும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் அறிக்கையிடும்போது, “”தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்” என்றார். இக்காரியங்கள் அனைத்தையும் ஒன்றுசேர்க்கும்போது, நாம் பெறும் கருத்து என்னவெனில், நம்முடைய மறுஜென்மம் (அ) பரிசுத்த ஆவியினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்படுதல் மற்றும் பரிசுத்த ஆவியினாலே புதிதாக்கப்படுதலாகிய இரண்டும், தெய்வீகச் செய்தியாகிய சத்தியத்தின் செயல்பாட்டினால் விளையும் சுத்திகரிப்பினால் வருகின்றது. இக்காரியம், இஸ்ரயேலரின் ஆசரிப்புக்கூடார ஊழியத்தில் அழகாக அடையாளப்படுத்தப்படுகிறது. எப்படியெனில், ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன்பு, தண்ணீர் தொட்டியில் தங்களைச் சுத்திகரித்துக்கொள்வது போன்று, புதுச் சிருஷ்டிகள் ஆகுவதற்கு முன்பு தண்ணீர் அடையாளப்படுத்தும் தேவனுடைய வார்த்தையினால், சத்தியத்தினால் அதாவது, புதிதாக்கும் தண்ணீரினால் நம்மைச் சுத்திகரித்துக்கொள்ள வேண்டும். இப்படியாகவே, நாம் கர்த்தரிடத்திலான ஓர் அர்ப்பணிப்பிற்குள்ளாகக் கடந்து வருகின்றோம். இவ்வர்ப்பணிப்பின் காரணமாக நம்மை ஏற்றுக்கொள்வதில் கர்த்தர் பிரியம் கொண்டு, தமது பரலோக அல்லது ஆவிக்குரிய குடும்பத்திற்குள்ளாகச் சேர்த்துக்கொள்வதற்கு ஏதுவான புத்திரசுவிகாரத்தின் ஆவியை நமக்கு அருளுகின்றார்.

பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான்

நிக்கொதேமு, இராஜ்யத்தையும், அந்த இராஜ்யத்தைக் காண்பதற்கும், அதற்குள் பிரவேசிக்கிறதற்குமான வழிமுறைகளையும், நிபந்தனைகளையும் குறித்து இயேசு கூறியவைகளைக் கேட்டு ஆச்சரியமடைந்தார். “”நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்பட வேண்டாம்” என்று நமது கர்த்தர் பதிலளித்தார். பின்னர் ஆவியில் பிறக்கிற ஒருவன் எப்படி இருப்பான் என்பதற்கான விளக்கத்தை இயேசு நிக்கொதேமுக்குக் கூறினார். ஆவிக்குரிய ஜீவிகள் கண்களுக்குப் புலப்படாமல் இருப்பினும், அவைகள் உண்மையாய் இருக்கின்றது என்ற விஷயத்தின் மீது நிக்கொதேமுவின் கவனத்தைத் திருப்பினார்; கண்களுக்குப் புலப்படாத காற்றை, இயேசு எடுத்துக்காட்டாக எடுத்துக்கொண்டார். காற்றானது எங்கிருந்து வருகின்றது? என்றோ, எவ்விடத்திற்குப் போகிறது? என்றோ நாம் அறியோம்; ஆனாலும், அதன் ஆற்றலை நாம் அறிவோம்; அதன் சத்தத்தைக் கேட்கவும், அது உண்டுபண்ணும் விளைவுகளைக் காணவும் நம்மால் முடிகின்றது. இதையே ஆவியில் பிறந்தவர்களுக்கான எடுத்துக்காட்டாக நமது கர்த்தர் நிக்கொதேமுவுக்கு எடுத்துரைத்தார்; அதாவது ஆவியில் பிறந்தவர்கள், பிரசன்னமாய் இருந்தாலும், ஆற்றல் உள்ளவர்களாய் (Powerful) இருந்தாலும், அவர்கள் கண்களுக்குப் புலப்படாமலும், தொட்டு உணரப்படாமலும் இருப்பார்கள். இவர்களே இராஜ்யம் ஸ்தாபிக்கப்படும்போது, இராஜ்யமாக இருப்பார்கள். நமது கர்த்தருடைய பேச்சை/கருத்தை மிகக் கவனமாய்க் கவனிக்க வேண்டும், இல்லையேல் தவறான சில கருத்துக்கள் நம்மையும் குழப்பத்தில் ஆழ்த்திவிடும். யாரையும் வேதவாக்கியங்களைப் புரட்டி, கர்த்தர் இவ்விடத்தில் பேசாதக் கருத்தைக் கர்த்தர் பேசினதாகக் கூற நாம் அனுமதிக்கக்கூடாது. நம்மை ஜெநிப்பிக்கும் (begotten) கண்களுக்குப் புலப்படாத ஆவியைக் குறித்துதான் கர்த்தர் இவ்விடத்தில் பேசியுள்ளார் என்பதான யோசனைகளை நாம் ஏற்க மறுத்துவிட வேண்டும். நம்மை ஜெநிப்பித்த ஆவி கண்களுக்குப் புலப்படாதது என்பது உண்மையாக இருப்பினும், இவ்வசனப் பகுதியில் நமது கர்த்தர் இதைக் குறித்துப் பேசவில்லை. பரிசுத்த ஆவி உலகத்தில் இங்கும், அங்குமாய்ச் சென்று கொண்டிருக்கும் என்றும், சிலரை ஜெநிப்பித்தும் (begotten) சிலரை கண்டுகொள்ளாமல் விலகிச் செல்வதால், யார் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளார்கள்? (begotten) யார் ஜெநிப்பிக்கப்படவில்லை? என்று நம்மால் அறிந்துக்கொள்ள முடியாது என்றுமுள்ள அனுமானங்களுக்குள் நமது மனதை தவறாய் நடத்தவும் நாம் விடக்கூடாது. இவைகளனைத்தும் குழப்பமான அனுமானங்களாகவும், வேதத்தில் எழுதப்பட்டுள்ளக் காரியங்களுக்கு முற்றிலும் எதிர்மாறாகவும் உள்ளது. யாருக்கெல்லாம் ஆண்டவரின் போதனைகளைக் குறித்துச் சரியான மற்றும் தெளிவான புரிந்துக்கொள்ளுதல் காணப்படுகின்றதோ, அவர்கள் சகல தேவ வார்த்தைகளுக்குக் கண்டிப்பாய்ச் செவிசாய்க்க வேண்டும். நம்முடைய கவனமின்மையின் காரணமாகவும், தேவனுடைய வார்த்தைகளுக்கு எவ்வளவேனும் இசைவில்லாத கருத்துக்களை (வேதத்தை வைத்துக்கொண்டு) விளக்குவதற்கு மற்ற மனிதர்களை நாம் அனுமதித்திருந்த காரணத்தினாலுமே நாம் இத்தனை நீண்ட காலங்கள் இருளில் இருந்துள்ளோம். தேவனுடைய வார்த்தைகளிலிருந்து நாம் ஒன்றையும் கூட்டவோ, குறைக்கவோ கூடாது; மேலும் யாரெல்லாம் இப்படிச் செய்கிறார்களோ, அவர்கள் சத்தியத்திற்கு உண்மையற்ற ஊழியக்காரராகவும், கர்த்தருக்கு (எதிரான) உண்மையற்ற ஸ்தானாதிபதியாகவும் ஆகிவிடுவார்கள்.

ஆச்சரியமடைந்த நிக்கொதேமு, “”இவைகள் எப்படி ஆகும்?” என்று பிரமிப்புடன் கேட்டார் (யோவான் 3:9); அதாவது “”நியாயப்பிரமாணங்களையும், தீர்க்கத்தரிசனங்களையும் நூற்றாண்டுகள் காலமாக கற்றுக்கொண்டிருந்தவர்கள், இப்படித் தவறிழைப்பது சாத்தியமாகுமா?” என்ற விதத்தில் நிக்கொதேமு கேட்டார். இஸ்ரயேலில் ஒரு போதகனாக நிக்கொதேமு இருக்கும்பட்சத்தில், அவருடைய கவனத்திற்கு (இராஜ்யம் தொடர்பான தவறான) இக்காரியங்கள் கொண்டுவரப்பட்டபோது, அவர் இவைகளைப் பகுத்தறிந்திருக்க வேண்டுமென்று நமது கர்த்தர் அவருக்குப் பதிலளித்தார். தேவனுடைய இராஜ்யமானது பூமிக்குரியதாக இருக்கும் என நிலவிக் கொண்டிருக்கும் (தவறான) கருத்துக்களில் காணப்படும் சமாளிக்க முடியாத எதிர், புதிர்களை, நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கத்தரிசனங்களைக் கற்றறிந்த கவனமுள்ள மாணவரான நிக்கொதேமு கண்டுபிடித்திருக்க வேண்டும். பின்னர் தேவனுடைய இராஜ்யமானது ஆவிக்குரிய ஒன்றாக இருக்கும் என்று வரும் அறிவிப்பை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருந்திருக்க வேண்டும். இந்த இராஜ்யமானது ஆவிக்குரியதாய் இருக்கும் என்பதை விளக்கும் விதமாகத்தான், “”தேவனுடைய இராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது, இதோ இங்கே என்றும், அதோ அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது,” மாறாக தேவனுடைய இராஜ்யமானது, மனுக்குலத்தின் மத்தியில் கண்களுக்குப் புலப்படாமல், அதேசமயம் சகல வல்லமையுடன் காணப்படும் என்று கர்த்தர் வேறொரு தருணத்தில் விளக்கிக் கூறினார் (லூக்கா 17:20-21).

மேற்கூறிய விஷயங்களுக்கும், கர்த்தர் பேசின வார்த்தைகளான, “”மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” என்பதற்கும் இங்குத் தொடர்பு இருப்பதைக் குறித்து வேதபாட ஆராய்ச்சி புத்தகம் 5-ஆம் தொகுதியில் பக்கம் (English Page No 189, 192-இல்) நாம் ஏற்கெனவே காட்டியிருக்கின்றோம் (யோவான் 3:6). மாம்சத்தின் ஜெநிப்பித்தல் முதலாவது சம்பவியாமல், மாம்சத்தின் எவ்வித பிறப்பும் சம்பவியாதது போன்று, ஆவியின் ஜெநிப்பித்தல் முதலாவது சம்பவியாமல், ஆவியின் எவ்விதமான பிறப்பும் சம்பவியாது. ஆவியில் ஜெநிப்பித்தல் என்பது தேவவார்த்தையின் மூலம் ஏற்படும் மறுஜென்ம முழுக்குத் தொடர்புடைய காரணத்தினால் வருகின்ற விஷயமாகும், மேலும், ஆவியில் ஜெநிப்பித்தல் என்பது தற்கால ஜீவியத்திற்குத் தொடர்புடையதாகும். புதுச் சிருஷ்டிகளாக, நாம் கர்த்தருடைய ஊழியத்திலுள்ள செயல்பாடுகளில் உயிர்ப்பிக்கும் படிநிலையை அடையும்வரையிலும், நாம் ஆவிக்குரியவைகளில் வளர்ந்து கொண்டிருக்க வேண்டும். மேலும், யாரெல்லாம் இவ்விதமாக ஜெநிப்பிக்கப்பட்டு, உயிர்ப்பிக்கப்படுகின்றார்களோ அதாவது, யாரிடத்தில் புதிய சித்தம் மரணம் வரையிலும் உண்மையுடன் காணப்படுகின்றதோ, இவர்கள் இவர்களுடைய உயிர்த்தெழுதலில் ஆவியில் பிறந்தவர்களாக இருப்பார்கள். இவ்விதமாகவே, நமது கர்த்தரும் தமது ஞானஸ்நானத்தின்போது, பரிசுத்த ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்டார்; மேலும், அவருடைய உயிர்த்தெழுதலில் அவர் ஆவியில் பிறந்தவரானார்; அதாவது, மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானார்; அதாவது, அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவர் ஆனார். கர்த்தரைப்போன்று அவருடைய சகோதரரும், அதாவது இராஜ்யத்தில் அவருடைய உடன்சுதந்தரர்களுமாய் இருப்பவர்கள், அவர்களின் மறுஜென்ம முழுக்கின்போது, பரிசுத்த ஆவியினால் இப்பொழுது ஜெநிப்பிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், அவர்கள் ஒருவேளை உண்மையாயிருக்கும் பட்சத்தில், அவர்களின் உயிர்த்தெழுதலின் மாற்றத்தில் அவர்களின் பிறப்புச் சம்பவிக்கும். “”பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்” (1 கொரிந்தியர் 15:43-44). இவர்கள் நமது கர்த்தருடைய முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைந்து, ஆவிக்குரிய சுபாவத்தையும், மகிமையையும், கனத்தையும், அழியாமையையும் பெற்றுக்கொள்வார்கள். அநேகர் இவ்விஷயத்தில் குழப்பமடைவதற்கான காரணம், “”Gennao”” எனும் ஒரே கிரேக்க வார்த்தையானது, ஜெநிப்பித்தல் மற்றும் பிறப்பு எனும் இரண்டு விஷயங்களைச் சுட்டிக்காட்டுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது என்பதைக் கவனிக்கத் தவறினதாலேயே என்று நாம் இங்குக் குறிப்பிடுவது நலமாயிருக்கும்.

நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லுகிறோம்

நிக்கொதேமுவின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில், நமது கர்த்தர், இராஜ்யமானது ஆவிக்குரிய இராஜ்யமாக இருக்கும் என்றதான இந்தச் சாட்சியானது எவ்வித கற்பனையான கதை அல்ல என்று பதிலளித்தார். அதாவது, தாம் (இயேசு) கூறின சாட்சி மெய் என்று நிக்கொதேமுவுக்குத் தெரியும் என்றும், நிக்கொதேமுவின் பிரச்சனை, அவர் (நிக்கொதேமு) கற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதேயாகும் என்றுமுள்ள விதத்தில் நமது கர்த்தர் பதிலளித்தார். நிக்கொதேமு நமது கர்த்தரை ரபீ, போதகர் என்று அழைத்தார்; இயேசு தேவனால் [R4125 : page 30] அனுப்பப்பட்டவர் என்று, தான் நம்புவதாகவும் நிக்கொதேமு அறிக்கையிட்டார்; எனினும், இவர் முழு விவரமும் அறியாமல் முன்கூட்டியே தன்னிடத்தில் கொண்டிருந்த அபிப்பிராயங்களினால் கட்டுண்டவராக இருந்தபடியினால், இவருக்குப் போதனை வழங்க ஆற்றல் கொண்டிருந்த ஒரே நபரின் சாட்சியை ஏற்றுக்கொள்வதற்கு இவர் தயாராக இருக்க முடியவில்லை. பரலோக இராஜ்யத்தைக் குறித்து இன்னும் அதிகமாக தம்மால் கூற முடியும்; ஆனால் தம்மைக் கேட்டுக் கொண்டிருப்பவர்கள், ஆவிக்குரியவைகளைப் புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் காணப்படுவதால், தாம் ஆவிக்குரியவைகளைக் குறித்து இப்பொழுது பேசுவதும் ஏற்றதாக இருக்காது என்று நமது கர்த்தர் குறிப்பிட்டார். “”பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்?” (யோவான் 3:12). நமது ஆண்டவருடைய இந்த வார்த்தைகள் கடிந்துகொள்ளுதலாக இராமல், யதார்த்தங்களைப் பேசுகிறதாக இருக்கின்றது என்று அப்போஸ்தலர் பவுலின் வார்த்தைகளிலிருந்து நாம் புரிந்துக்கொள்கின்றோம்; சுபாவத்தின்படியான மனுஷன், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படாததால், அவனால் ஆவிக்குரியவைகளைப் புரிந்துக்கொள்ள முடியாது என்று அப்போஸ்தலர் தெரிவிக்கின்றார். பெந்தெகோஸ்தே நாளன்று தமது பின்னடியார்கள் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டு, ஆவிக்குரியவைகளையும், பரலோக/பரம காரியங்களையும் புரிந்துக்கொள்ளவும், ஏற்றுக்கொள்ள ஆயத்தமாகவும், பாத்திரவான்களாகவும் அடையும் நிலையை எட்டும் வரை தெய்வீகத் திட்டத்தின் ஆழமான காரியங்களைக் குறித்த விளக்கங்கள் கொடுப்பதை நிறுத்தி வைத்திருந்தார். “ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்” (1 கொரிந்தியர் 2:14).

சந்தேகத்திற்கிடமின்றி, இன்றும் இக்காரணங்களே பெரும்பாலான ஜனங்களுக்கு இடையூறாக/பிரச்சனையாகக் காணப்படுகின்றது; அதாவது, பெரும்பான்மையானவர்கள் பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படவில்லை. ஆகையால், அவர்களால் ஆவிக்குரியவைகளைப் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஆகவே, நாம் பரிந்துரைப்பதென்னவெனில், சத்தியத்திற்குச் செவிசாய்க்க முடியாத செவிகளையுடைய யாரையாகிலும் நீங்கள் கண்டீர்களானால், சத்தியத்தை அவர்களுக்குள் திணிக்க முற்படாதீர்கள். மாறாக, வேறுவிதத்தைக் கையாண்டு, அவர்கள் அர்ப்பணிப்புச் செய்யத்தக்கதாக நாடுங்கள்…. அதாவது கர்த்தருக்கும், அவருடைய ஊழியத்திற்குமான அர்ப்பணிப்பின் விஷயத்தில் அவர்கள் ஏற்கெனவே புரிந்து, கிரகித்து வைத்திருந்த கண்ணோட்டங்களோடு, முழு அர்ப்பணிப்பின் விளக்கங்களை ஒப்பிட்டு, முழு அர்ப்பணிப்புக் குறித்ததான நியாயமான கண்ணோட்டங்களை அவர்கள் முன் வையுங்கள். ஒருவேளை அவர்கள் தங்களை அர்ப்பணித்து, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பித்தலைப் பெற்றுக்கொண்டால், பின்னர் கர்த்தருடைய ஆழமான காரியங்கள் அவர்களுக்கு உரியதாகும்; அவைகளை அவர்களால் அப்போது புரிந்துக்கொள்ளவும் முடியும். இப்படிச் செய்வதே, ஜெநிப்பிக்கப்படாதவர்கள் முன்பு, ஆவிக்குரிய ஆழமான விஷயங்களாகிய தெய்வீகச் சத்தியம் எனும் முத்துகளைப் போட்டுவிடாத ஞானமாக இருக்கும். அதாவது, யுகங்களைக் குறித்ததான தெய்வீகத் திட்டத்தை மேலோட்டமாக, உலகத்தாரிடம் பொதுவாக கூறுவதும், தேவனுடைய கிருபையை விருதாவாக பெற்றுக்கொள்ளக்கூடாது என்று புத்திமதிக் கூறுவதும், புதுச் சிருஷ்டிகளாக, தேவனுடைய குமாரர்களாகிய ஆவிக்குரிய உடன்படிக்கையின் உறவிற்குள் வருபவர்களுக்கு மாத்திரம் ஆழமான காரியங்கள் கொடுக்கப்படும் என்றும், இவ்வுடன்படிக்கையின் உறவிற்குள் வருகிறவர்கள் மாத்திரமே ஆழமான காரியங்களைப் புரிந்துக்கொள்ளும் நிலையை அடைய முடியும் என்றும், பரத்திலிருந்து வரும் ஞானம், இவ்வுடன்படிக்கையின் உறவிற்குள் வருகிறவர்களுக்குக் கிடைக்கும் என்று அவர்களுக்கு உறுதி கூறுவதுமே ஞானமாகும்.

பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை

நமது கர்த்தரின் இவ்வார்த்தைகள், நிக்கொதேமுவுக்கு எவ்வித ஆச்சரியத்தையும் எழுப்பவில்லை, ஏனெனில் மரித்தவர்கள் உயிரோடு இருக்கின்றார்கள்; அதாவது, முன்பிருந்ததைக் காட்டிலும் அதிகம் ஜீவனுள்ளவர்களாக இருக்கின்றார்கள் என்று அந்நிய தெய்வங்களை வணங்கி வரும் ஜனங்கள் மத்தியில் நிலவி வரும் கருத்தானது, நியாயப்பிரமாணத்திலோ அல்லது தீர்க்கத்தரிசிகள் கூறின வார்த்தைகளிலோ அல்லது பாரம்பரியமான யூத மார்க்கத்தின் போதனைகளிலோ காணப்படவே இல்லை. மரித்தவர்கள், மரித்தவர்களாகத்தான் இருக்கின்றார்கள் என்றும், மரித்தவர்கள் உயிர்த்தெழுவார்கள் என்றும், மேசியா வந்து சாபத்தை மாற்றிப் போட்டு, மனுஷர்களைச் சீர்த்தூக்கவும், தேவனிடத்தில் மீண்டும் ஒப்புரவாக்கவுமெனப் பரலோக இராஜ்யத்தை மனுஷர் மத்தியில் ஸ்தாபிக்கும்போது, உயிர்த்தெழுதல் சம்பவிக்கும் என்றும் இஸ்ரயேலர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் இன்று, அந்நிய தெய்வங்களை வணங்கும் ஜனங்களின் தப்பறையான கருத்துக்களும், “”மரித்தவர்கள், மரணத்திற்குப் பின்பு ஜீவனோடு இருந்த நாட்களில் இருந்ததைக் காட்டிலும் அதிக ஜீவனுள்ளவர்களாக இருப்பார்கள்” என்ற பிளாட்டோவின் (Plato’s Philisophy) தத்துவங்களும், சகல குழப்படியான உபதேசங்களும் கிறிஸ்தவ மண்டலத்தையும் ஆட்டிப்படைக்கின்றது. யதார்த்தமான, அறிவுள்ள சில ஜனங்கள்… நம்மிடம் தாங்கள் மரித்தோரின் உயிர்த்தெழுதலை நம்புவதாகவும், அதேசமயம் மரித்தவர்கள் மரிக்கவில்லை என்றும் ஒரே மூச்சில் கூறிவிடுகின்றனர். ஒருவேளை மரித்தவர்கள் மரிக்கவில்லையென்றால், எப்படி மரித்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படக்கூடும் என்ற கேள்விக்கும், அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. ஆண்டவருக்குப் போதிக்க விரும்புவதைக்காட்டிலும், ஆண்டவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்துடன் இப்பாடத்தைப் படிக்கின்ற அனைவரும், அவருடைய இவ்வார்த்தைகளுக்குக் கவனமாய்ச் செவிசாய்க்கக்கடவோம். அதாவது, “”பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை” (இவ்வசனப் பகுதியில் இடம்பெறும் வார்த்தையான “”பரலோகத்திலிருக்கிறவருமான” என்பது பழைய கிரேக்கப் பகுதிகளில் காணப்படுவதில்லை என்பதையும் இங்குக் குறிப்பிடுகின்றோம்) என்ற அவருடைய இவ்வார்த்தைகளுக்குக் கவனமாய்ச் செவிசாய்க்கக்கடவோம்.

வனாந்தரத்தின் சர்ப்பம்

இப்பாகத்திலிருந்து தொடரும் பிந்தைய வசனப் பகுதிகள் நிக்கொதேமுவிடம் பேசப்பட்டதில்லை. மாறாக, நம்முடைய கர்த்தருடைய பல்வேறு போதனைகளை அச்சுவிசேஷப் [R4126 : page 30] புஸ்தகத்தின் ஆசிரியர் அவ்விடத்தில் ஒன்றாகத் தொகுத்து எழுதியுள்ளார் என்று நாம் எண்ணுகின்றோம்.

வனாந்தரத்தில் வெண்கல சர்ப்பம் உயர்த்தப்பட்ட காரியமானது 14-ஆம் வசனத்தில் கூறப்பட்டதற்கான காரணம், நமது கர்த்தர் சிலுவையில் அறையப்படுவதற்கான அந்த நிழல் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்கேயாகும். பாவத்தின் காரணமாக இஸ்ரயேலர்கள் எப்படிப் பயங்கரமான சர்ப்பங்களால் தீண்டப்பட்டார்கள் என்றும், எத்தனை கொடிதான வலியை இதன் காரணமாக அனுபவித்தார்கள் என்றும், மோசே தெய்வீக நடத்துதலினால் வெண்கல சர்ப்பத்தைச் செய்து உயர்த்தி நாட்டினதுவரையிலும் எத்தனை திரளானோர் மரித்துப் போனார்கள் என்றுமுள்ள சம்பவத்தை நாம் நினைவுகூருகின்றோம். விசுவாசத்தினால் சர்ப்பத்தை நோக்கிப் பார்த்த ஒவ்வொரு இஸ்ரயேலனும் சொஸ்தமாக்கப்பட்டான். இதன் நிஜத்தை நாம் பார்க்கலாம். முழு உலகமும், பாவத்தினால் தீண்டப்பட்டவர்களாக இருக்கின்றார்கள். “”ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது” (ரோமர் 8:22). 18 நூற்றாண்டுகளுக்கு முன்பாக மனுஷகுமாரனாகிய இயேசு கல்வாரியில் உயர்த்தப்பட்டார், அவர் பாவியாகக் கருதப்பட்டார். இயேசுவின் நீதியை விரும்பும் யாவருக்கும் அதை, இயேசு வழங்கும் உரிமையை அவர் பெற்றுக்கொள்ளவும், அவர்களைச் சொஸ்தமாக்கி, நித்தியத்திற்குரிய ஜீவனைக் கொடுக்கவும் ஏதுவாக நம்முடைய பாவங்கள் அவர்மேல் சுமத்தப்பட்டது.

“”தம்மை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும்” (யோவான் 3:15). இதுவரையிலும் சிலர் மாத்திரமே அவரை விசுவாசிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர்; நம்முடைய கர்த்தருடைய நாட்களிலும், இன்றைய நாட்களிலும், காணப்படும் திரளான ஜனங்கள் மீட்பரைக் குறித்தும், அவருடைய பலி மற்றும் அவரை நோக்கிப்பார்ப்பதின் மூலமாக வரும் ஆசீர்வாதங்கள் குறித்தும் முழுமையான அறியாமையில் காணப்படுகின்றார்கள். இவர்கள் ஒருபோதும் நோக்கிப் பார்க்க மாட்டார்களா? இவர்கள் ஒருபோதும் இவைகளையெல்லாம் அறிந்துக்கொள்ள மாட்டார்களா? இவர்கள் ஒருபோதும் நித்திய ஜீவன் பெற்றுக்கொள்ள மாட்டார்களா? சுவிசேஷ யுகத்தில் விசேஷமான தயவைப் பெற்றுக்கொண்டவர்களாகிய, தெரிந்துக்கொள்ளப்பட்ட சபை மாத்திரம்தான் இந்த மாபெரும் வாய்ப்பைப் பெறுவார்களா? ஏற்ற காலத்தில் தேவன் தம்முடைய கிருபை/இரக்கத்தைக் குறித்ததான அறிவு மனுக்குலத்தின் ஒவ்வொரு அங்கத்தையும் சென்றடையத்தக்கதாக செய்வார். இதுவே 16-ஆம் வசனத்திலுள்ள நம்முடைய ஆண்டவரின் வார்த்தைக்கான முக்கியத்துமாகும். ஆ! ஆம்! இது ஆசீர்வாதமான வாக்குறுதியாகும். தேவனுடைய இரக்கத்தினால் இயேசு எல்லா மனுஷருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தார் என்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம் என்றாலும், “”தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்;” “”நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவர் நம்முடைய பாவங்களை மாத்திரமல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார்” என்ற வசனத்தின் காரியங்களினாலும் நாம் மகிழ்ச்சியடைகின்றோம் (எபிரெயர் 2:9; 1 யோவான் 2:2). இறுதியில் முழு உலகமும், கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய கிருபையின் ஐசுவரியங்களைப் புரிந்துக்கொள்ளத்தக்கதாகவும், பார்க்கத்தக்கதாகவும் தங்களுடைய கண்களும், காதுகளும் திறக்கப் பெற்றிருக்கும் சிலாக்கியத்தையும், வாய்ப்பையும் பெற்றுக்கொள்வார்கள்.

[R4126 : page 31]
17-ஆம் வசனத்தை நாம் எத்துணை மகிழ்ச்சியோடு வாசிக்க வேண்டும். உலகமானது ஏற்கெனவே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டுள்ளது. காரணம் உலகம், ஆதாமின் சந்ததியாய் இருப்பதினால், ஆதாமுக்குள் ஆக்கினைத் தீர்ப்பில் பங்கடைந்துள்ளது. உலகம் மீண்டும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட அவசியமில்லை. மாறாக, அதன்மேல் காணப்படும் ஆதாமினால் உண்டான ஆக்கினைத் தீர்ப்பிலிருந்து, அதற்கு இரட்சிப்பே அவசியமாய் உள்ளது. உலகமானது சரீர ரீதியிலும், மன ரீதியிலும், ஒழுக்க ரீதியிலும் பெற்றிருக்கும் அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து இரட்சிக்கப்பட வேண்டும். மேலும், இதைச் செய்து முடிக்கவே இயேசு வந்தார். விசுவாசப் பிரமாணங்களும், ஆண்டவரின் போதனைகளும் முற்றிலும் எதிர்மாறாக உள்ளது. தெரிந்துக்கொள்ளப்பட்ட சபையல்லாத அனைவரும் நித்திய சித்திரவதைக்குள் போகும்படிக்குத் தீர்க்கப்படுவார்கள் என்று “”இருண்ட யுகத்தில்” கூறப்பட்டது. மேலும், சபையல்லாத மீதமான மனுக்குலம் முழுவதும் அறியாமை, மூடநம்பிக்கை, குருடாக்கப்பட்ட நிலையின் காரணமாக இதுவரையிலும் தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்ளவில்லை என்றும், வாய்ப்பும் இவர்களுக்கு இல்லை என்றும் இருண்ட யுகத்தில் கூறப்பட்டது; மேலும், உலகம் ஒருபோதும் தேவனுடைய கிருபையைப் பெற்றுக்கொள்ளாது என்றும், உலகத்தை இரட்சிக்க தேவன் சித்தங்கொள்ளவில்லை என்றும், கிறிஸ்து உலகத்திற்காக அல்லாமல், தெரிந்துக்கொள்ளப்பட்ட சபைக்காக மரித்தார் என்றும் இருண்ட யுகத்தில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த அறுவடையின் காலக்கட்டத்தில் தெய்வீக வார்த்தைகள் மூலம், தெய்வீக ஞானம் மற்றும் அன்பின் நீளம், அகலம், ஆழம் மற்றும் உயரம் மகிமையாய் வெளிச்சமாக்கப்பட்டுள்ளது! அதாவது, சபையின் தெரிந்துக்கொள்ளுதல் என்பது உலகத்தை ஆசீர்வதிக்கும், வெளிச்சமூட்டும், சீர்த்தூக்கும் மாபெரும் வேலைகளுக்கு முன்பு சம்பவிக்க வேண்டிய செயல்/திட்டம் மாத்திரமே என்பது எவ்வளவு அழகாக நமக்கு வெளிச்சமாக்கப்பட்டுள்ளது. “”ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது” (யோவான் 3:19). ஒளியானது, எவ்வளவாக ஒருவரால் பார்க்கப்பட்டு, புறக்கணிக்கப்படுகின்றதோ, அவ்வளவாய் ஆக்கினைத் தீர்ப்புக்குள்ளாக்கப்படுவார்கள் என்று நமது கர்த்தர் இங்குக் குறிப்பிடுகின்றார். நமது கர்த்தருடைய முதலாம் வருகையின் நோக்கமானது, ஆதாமினால் உண்டான ஆக்கினைத் தீர்ப்பைக் கூட்டுவதற்காக இராமல் மாறாக, இந்த ஆக்கினைத் தீர்ப்பை முற்றிலும் ரத்து செய்துவிடும் பலியைச் செலுத்துவதற்கேயாகும். எனினும், அவர் அப்போது உலகத்திற்கு வந்ததையும், அப்போது பிரகாசித்த வெளிச்சத்தையும், இன்றளவும் அவருடைய பின்னடியார்கள் மூலம் பிரகாசித்துக்கொண்டிருக்கும் வெளிச்சத்தையும், நிராகரித்த அனைவர் மேலும் ஆக்கினைத்தீர்ப்பு உண்டு.

இந்த ஆக்கினைத்தீர்ப்பானது, ஆதாமிடமிருந்து சுதந்தரிக்கப்பட்டுள்ள ஆதாமின் நிமித்தமான ஆக்கினைத்தீர்ப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். ஆதாமின் நிமித்தமாக உண்டான ஆக்கினைத்தீர்ப்பானது நமது பாவத்திற்கான கிறிஸ்துவின் பலியினால் இறுதியில் முற்றிலும் ரத்து செய்யப்படும்; ஆனால், ஒளியை/வெளிச்சத்தை நன்கு அறிந்துக்கொண்டு நிராகரிப்பதின் காரணமாக உண்டாகும் ஆக்கினைத்தீர்ப்பானது, தனிப்பட்ட விதத்தில் அந்தந்த நபருக்குத் தண்டனையைக் (Individual Penalty) கொண்டு வருகின்றதாய் இருக்கின்றது. இவ்வகை ஆக்கினைத்தீர்ப்பானது, உண்மையற்றவர்கள் மீது தற்காலத்திலும், எதிர்க்காலத்திலும் கசையடிகளைக் கொண்டுவரக் கூடியதாய் இருக்கும். கசையடிகள்/சிட்சைகள் என்பது அந்தந்த நபர்களின் பிடிவாதத்தனமான தவறானப் போக்கை மாத்திரமே சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; கசையடிகள்/சிட்சைகள் கொடுக்கப்படும் விஷயத்தில், சுபாவத்தின்படியான பெலவீனங்கள், சோதனைகள் முழுமையாய்ச் சலுகை செய்யப்படும் என்று நமக்கு உறுதியளிக்கப்படுகின்றது. அதாவது, ஆதாமின் விழுகைக் காரணமாகச் சுதந்தரிக்கப்பட்ட பெலவீனங்கள் கிறிஸ்துவின் பலியினால் உண்டான புண்ணியத்தினிமித்தம் ரத்து செய்துவிடப்படுவதை உறுதியளிக்கின்றது. இச்சலுகைகளைத் தாண்டியும் சத்தியத்தின் வெளிச்சத்திற்கு எதிரான எதிர்ப்புகள் முழுவீச்சில் காணப்படுமாயின், தண்டனை இரண்டாம் மரணமாகவே காணப்படும்.

தெரிந்தெடுக்கும் நடைமுறை

எங்கெல்லாம் சுவிசேஷத்தின் ஒளியானது பிரகாசிக்கின்றதோ, இதற்கேற்ப பொறுப்பும் ஏற்படுகின்றது, மற்றும் தெரிந்தெடுப்பதற்கான சூழ்நிலைகளும் அமைகின்றது என்பதை நாம் கடந்து வந்த காலங்களில் உணருகின்றோம். “”பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், இவர்கள் தங்களுடைய தவறுகள், பாவங்கள், தாங்கள் விரும்பும் பாவங்கள் கண்டிக்கப்படாதபடிக்கு, வெளிப்படாதபடிக்கு ஒளியினிடத்தில் வராதிருக்கிறார்கள்” என்று நமது கர்த்தர் கூறுகின்றார்; இவர்களுக்கு எதிர்மாறாக, “சத்தியத்தின்படி தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்” (யோவான் 3:21). இவர்கள் கர்த்தருடைய சித்தத்தைத் தங்களால் முடிந்தமட்டும் நிறைவேற்ற நாடுகின்றார்கள் என்பது தங்களுடைய ஜீவியத்தில் விளங்க வேண்டுமென விரும்புகின்றார்கள். மேலும் தற்செயலாக, தேவனுடைய சித்தத்திற்கு எதிரானவைகள் ஏதோ ஒன்று தங்கள் ஜீவியத்திலோ அல்லது கோட்பாடுகளிலோ வெளிப்பட இவர்கள் கண்டால், அவைகளைத் திருத்தம் செய்து கொள்வதற்கான வாய்ப்புத் தங்களுக்குக் கிடைத்தபடியால் மகிழ்ச்சிக் கொள்வார்கள்.

இந்தத் தெரிந்தெடுக்கும், பிரித்தெடுக்கும் வேலையானது அந்நிய தெய்வங்களை வணங்குபவர்கள் மத்தியில் நடைபெறாமல் கிறிஸ்தவ மண்டலத்தார் மத்தியிலேயே நடைபெறுகின்றது; கிறிஸ்தவ மண்டலத்ததாரின் திரளான ஜனக்கூட்டத்தாரின் மத்தியில் நடைபெறாமல், விசேஷமாகத் தேவனுடைய ஜனங்கள் என்றும், நமது கர்த்தரின் நாட்களில் யூதர்கள் செய்ததுபோன்று, இருளிலிருந்து ஒளியினிடத்திற்கு வந்துள்ளோம் என்றும் அறிக்கைப் பண்ணியுள்ள ஜனங்கள் மத்தியிலேயே நடைபெறுகின்றது. உண்மை சூழ்நிலையை உணர்ந்தவர்களாக, தெய்வீகத் திட்டம் மீது அல்லது நம்முடைய சொந்த இருதயங்கள் மற்றும் ஜீவியங்களின் மீதும் பிரகாசிக்கும் ஒளியின் ஒவ்வொரு, கதிர்களுக்காகவும் மிகவும் வைராக்கியமுள்ளவர்களாக இருக்கக்கடவோம். சத்தியமானது நம்மை ஒவ்வொரு அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கத்தக்கதாகவும், நம்மைக் கிறிஸ்துவுக்குள், தேவனுடைய சித்தத்திற்கு அதிகமதிகமாகக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்கதாகவும், சத்தியத்தை அதிகமதிகமாக அறிந்துக்கொள்ள விரும்புவோமாக. ஒளியின் பிள்ளைகளாகிய நாம் இருளின் கிரியைகளோடும், உபதேசங்களோடும், எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள முடியாது! தெய்வீக வார்த்தையானது நம்முடைய பார்வைத் திறனை அதிகமதிகமாகப் பெருகச் செய்யும்போதும், இருள் மற்றும் ஒளிக்கும், சத்தியம் மற்றும் தப்பறைக்கும், நீதி மற்றும் பாவத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை நாம் அதிகமதிகமாகத் தெளிவாகக் காணச் செய்யும்போதும் நாம் அதிகமதிகமாய் நேர்மை/உண்மையுள்ளவர்களாக இருப்போமாக!