R2438 – மெய்யாகவே விடுதலையாவீர்கள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2438 (page 55)

மெய்யாகவே விடுதலையாவீர்கள்

YE SHALL BE FREE INDEED

யோவான் 8:12, 31-36

“”ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்” – யோவான் 8:36.

இப்பாடத்தில் நாம் பார்க்கப்போகிற கர்த்தருடைய சம்பாஷணையானது, கூடாரப்பண்டிகையின் பிரதான நாள் (அ) எட்டாம் நாளைத் தொடர்ந்த அடுத்த நாளில் நடந்தது என்று கருத்திற்கொள்ளப்படுகின்றது; இந்த ஒரு கருத்தானது, 8-ஆம் அதிகாரத்தின் 1,2- வசனங்கள் மற்றும் 7-ஆம் அதிகாரத்தின் கடைசி வசனத்தின் அடிப்படையிலும் கொடுக்கப்படுகின்றது. கூடாரப்பண்டிகையின் கடைசி நாளாக, எட்டாம் நாள் காணப்பட்ட போதிலும், பண்டிகையின் சந்தோஷம் நிறைவடைவதை ஜனங்கள் விரும்பாததினால், அடுத்த நாளிலும் சில விஷயங்கள் அனுசரிக்கப்படுகின்றது. இந்தச் சம்பாஷணையானது, எட்டாம் நாளினுடைய சம்பாஷணையில் ஒரு பாகம்தான் எனவும் ஒரு கண்ணோட்டம் காணப்படுகின்றது.

இந்தப் பண்டிகையின்போது, ஆலயத்தினுடைய பிரகாரத்தில் காணப்பட்ட இரண்டு மாபெரும் விளக்குகளின் அருகில்தான் இயேசு இவைகளைப் பேசினார் என்று கூறப்படுகின்றது (court of the women – ஸ்தீரிகளுக்கான பிரகாரம் – ஸ்தீரிகளுக்கும், புருஷர்களுக்கும் திறந்து வைக்கப்பட்டுள்ள ஆலயத்தின் பாகம்). இந்த விளக்குகள் அல்லது கொத்து விளக்குகள் அலங்கரிக்கப்பட்டதாயும், தங்கத்தினால் மெருகிடப்பட்டதாயும், 75 அடி உயரம் கொண்டதாயும் இருக்கின்றபடியினால், [R2439 : page 55] அவைகள் பண்டிகை வேளையில் மிகுந்த வெளிச்சத்தைப் பட்டணம் முழுவதிலும் வீசியது. இதுதான் இயேசுவை உலகத்தின் ஒளியாய், தாம் இருப்பதைப் பற்றிக்கொடுத்த சொற்பொழிவுக்கு ஆதாரமாக இருந்திருக்க வேண்டுமென்று கருதப்படுகின்றது; யூதர்களுடைய குறிப்பிட்ட ஒரு பண்டிகையின் போதுள்ள அனுசரிப்பைப் பார்த்தும், இயேசு இந்தச் சம்பாஷணைப் பண்ணியிருக்க வாய்ப்பு இருக்கின்றது. அந்த அனுசரிப்பு பற்றி பக்ஸ்டோர்ப் அவர்களால் பின்வருமாறு விவரிக்கப்படுகின்றது:-

“”கூடாரப்பண்டிகையின் கடைசி நாளுக்கு, அடுத்த நாளாகிய ஒன்பதாம் நாள், அனுசரிப்புகள் நிறைந்த நாளாக, “”நியாயப்பிரமாணத்திற்கான சந்தோஷப் பண்டிகை” என்று அழைக்கப்படுகின்றது; ஏனெனில், இந்த நாளில்தான் நியாயப்பிரமாணத்தின் கடைசி பாகம் வாசிக்கப்படுகின்றது; கடைசிக்கு முன்புள்ள பிரமாணத்தின் பாகங்களோ முன்பு வந்த ஓய்வு நாட்களில் வாசித்து முடித்திருக்க, கடைசி பாகம் ஒன்பதாம் நாளில் வாசிக்கப்படுகின்றது. இந்த ஒன்பதாம் நாளில், அறையிலிருந்து நியாயப்பிரமாணத்தின் புத்தகங்கள் அனைத்தும் வெளியே எடுக்கப்பட்டு, நீதிமொழிகள் 6:23-ஆம் வசனத்திலுள்ள, அதிலும் குறிப்பாக சங்கீதம் 119:105-ஆம் வசனத்திலுள்ள காரியங்களைத் தெரிவிக்கும் வண்ணமாக, புத்தகங்களினுடைய இடத்தில் மெழுகுத் திரிகளை வைப்பது யூதர்களுடைய வழக்கமாகும் – Synag. Jud; c.xxii.”

இச்செய்கை அடையாளப்படுத்துவது என்னவென்று பார்க்கும்போது, முதலாவது நியாயப்பிரமாணம் வெளிச்சமாக இருந்தது, மற்றும் இரண்டாவதாக, யூதருடைய நியாயப்பிரமாணத்தினுடைய இடத்தில், கடைசியில் மெய்யான ஒளியாகிய, நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய கிருபையின் சுவிசேஷமானது வரும் என்பதாகும். ஒன்றில் நியாயப்பிரமாண புத்தகங்களின் இடத்தில் வைக்கப்பட்ட மெழுகுத்திரிகள் அல்லது பிரகாரத்தில் வைக்கப்பட்ட இரண்டு மாபெரும் விளக்குகள், இல்லையேல் இரண்டுமே, நமது கர்த்தர் மனதில் பதியப்பண்ணும்படிக்குத் திட்டமிட்ட பாடத்திற்கு ஏற்றதும், போதுமானதுமான உதாரணங்களுமாய் இருக்கின்றது. முதல் அடையாளத்தின் கருத்து உலகம் இருளில் இருக்கின்றது; மற்றும் ஜீவனுக்கான ஒளி அவசியம் மற்றும் ஒளியில் நடப்பவன் இடறிவிழுவதில்லை என்பதாகும். மற்றொரு அடையாளத்தின் கருத்து, இறுதியில் அறியாமையின் திரை அகற்றப்படும் மற்றும் சத்தியத்தின் [R2439 : page 56] ஆவி உய்த்துணரப்படும் மற்றும் இப்படியாக மெய்யான ஒளியாகிய இயேசு, தெய்வீகக் குணம் மற்றும் பிரமாணம் மற்றும் நித்திய ஜீவனை அனுபவிப்பதற்குரிய நிபந்தனைகள் தொடர்புடைய காரியங்களில் உலகத்திலுள்ள ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கின்ற ஒளியாக இருப்பார் என்பதாகும்.

இன்னுமொரு கருத்து என்னவெனில், இந்தக் கூடாரப்பண்டிகையானது, கானானை நோக்கின இஸ்ரயேலின் வனாந்தர பிரயாணத்தின் காலத்தைக்குறிப்பதாய் இருக்க, இப்பண்டிகையின் மாபெரும் விளக்கானது/ஒளியானது, இஸ்ரயேலர்களை வனாந்தர பிரயாணத்தில் மாபெரும் ஒளியாக வழிநடத்தினதும், அவர்களை விரட்டின சத்துருக்களுக்கு மாபெரும் இருளின் மேகமாக காணப்பட்டதுமான அக்கினி மற்றும் மேகஸ்தம்பத்தை அநேகமாய்க் குறிக்கின்றதாய் இருக்கும். இக்கருத்து மற்றக் கருத்துக்களுக்கு முழு இசைவுடன் காணப்படுகின்றது; காரணம், ஆவிக்குரிய இஸ்ரயேலர்களும் பரம கானானை நோக்கி, சீன் வனாந்தரத்தின் வழியாகப் பிரயாணம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்றும், நமது கர்த்தரும், அவருடைய போதனைகளும் அவருடைய ஜனங்களுக்கு, அதாவது முழு விசுவாச வீட்டாருக்கும், அதிலும் விசேஷமாக பரம ஆலோசனைக்குக் கவனித்திருப்பவர்களாகவும், விழிப்புள்ளவர்களாகவும் இருப்பவர்களுக்கு வெளிச்சமாகவும், வழிகாட்டியாகவும் இருக்கின்றது என்றும் நாம் காண்கின்றோம்.

நம்முடைய அர்ப்பணிப்பு முதல் தொடங்கப்பெற்ற கிறிஸ்துவுடனான இந்த உறவானது, (அவர் உபதேசத்தில் நாம் நிலைத்திராவிட்டால்) நின்றுபோகிறதற்குக்கூட வாய்ப்புண்டு என்பது 31,32-ஆம் வசனங்களின் வார்த்தைகளில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. தம்மை இரட்சகர் என்றும், தம் மூலமாக மாத்திரம் கிடைக்கக்கூடிய ஆசீர்வாதங்கள் மற்றும் சிலாக்கியங்களையும் ஏற்றுக்கொள்பவர்கள் மாத்திரமே சீஷத்துவத்திற்குள் பிரவேசித்திருக்கின்றார்கள் என்றும் கர்த்தர் முன் வைக்கின்றார். இன்னுமாகச் சீஷத்துவம் என்பது, ஆதிக்கத்தைக்குறிப்பதில்லை; மாறாக ஒருவர் சீஷனாக மாறுவது என்பது, பூரணம் அடைவது வரையிலும், ஆண்டவருடைய அறிவுரைகளின் கீழ் ஒழுக்க ரீதியிலும், அறிவின் ரீதியிலும், கிறிஸ்துவுக்குள் பூரண புருஷருக்குரிய வளர்ச்சியை அடைவதற்கெனச் சீஷனாக ஆகியுள்ள கற்றுக்குட்டியாக இருப்பதைக்குறிக்கின்றது. இவ்விஷயத்தில் கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக்கொண்டவர்கள் அனைவரிடத்திலும், பூரணத்தை எதிர்ப்பார்க்கும் உலக ஜனங்களினாலும் மற்றும் கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணம் பண்ணும்போது, உடனடியாகவே தங்களுக்குள் பூரணம் ஏற்பட வேண்டுமென்று, வீணாய்க் கற்பனைப் பண்ணிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவர்களினாலும் ஒரு மாபெரும் தவறு செய்யப்படுகின்றது; அதாவது, சில கிறிஸ்தவர்கள் தங்களிடத்தில் பாவம் இல்லையென்று வீணாய்க் கூறி பாவம் செய்கின்றனர், மேலும் இப்படிக் கூறுவதன் மூலம் தங்களுக்கு ஓர் இரட்சகர், ஒரு கிறிஸ்து தேவை இல்லையென்றும், தாங்கள் கடமைகளைச் செய்யத் தவறியதினாலும் ஏற்படும் கறைகளை மூடுவதற்கு அவருடைய புண்ணியத்தினுடைய பலன் தேவையில்லையென்றுமுள்ள அனுமானத்தைக் கொடுக்கின்றவர்களாக இருக்கின்றனர்.

நமது கர்த்தருடைய வார்த்தைகளில் முன்வைக்கப்பட்டுள்ள சரியான கருத்து என்னவெனில், பாவிகள் சீஷத்துவத்திற்கு அழைக்கப்படவில்லை, மாறாக மனம் திரும்புவதற்கும், தங்களுடைய பாவங்களுக்கான மன்னிப்பைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக (நீதிமானாக்கப்படுவதற்காக) மீட்பரிடத்தில் விசுவாசம் வைப்பதற்கும்தான் அழைக்கப்படுகின்றனர்; ஆனால் இவை அனைத்தும் நீதிமான்களாக்கப்பட்ட மனுஷர்களாக இவர்கள் தங்களை, கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணிப்புப் பண்ணுவதன் மூலமாக, அவருடைய சீஷர்களாக ஆகுவதற்கே, அதாவது கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் ஆகுவதற்கே ஆகும்.

நாம் ஏன் இந்தப் பள்ளிக்கூடத்திற்குள் பிரவேசிக்கின்றோம்? அங்கு என்ன பாடங்களை நாம் கற்க இருக்கின்றோம்? என்ன காரணங்களுக்காக நாம் இந்தப் பாடங்களைக் கற்பதற்கும், இவைகளைக் கற்பதற்கென நம்மையே அர்ப்பணம் பண்ணுவதற்கு நாடுகின்றவர்களாக இருக்கின்றோம்?

கிறிஸ்து எனும் புதியதும், ஜீவனுக்குரியதுமான வழியில், பிதாவினுடைய கிருபையின் சிங்காசனத்தை அணுகும் நீதிமான்களாக்கப்பட்ட விசுவாசிகளுக்கான, பரம பிதாவின் அழைப்பே கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்திற்குள் பிரவேசிப்பதற்கான தூண்டுதலாக அமைகின்றது; இப்படிப்பட்டவர்களுக்கு, “”தேவனுடைய புத்திரர்களாகும்படிக்கான “”பரம அழைப்பை” பிதா கொடுக்கின்றார்; “”நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன்சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்” (ரோமர் 8:17).

இந்தக் கிறிஸ்துவின் பள்ளிக்கூடமானது, அன்பினால் இயக்கப்பட்டதும், பக்தியினால் தக்கவைக்கப்படுகிறதுமான சுயத்தைப் பலிச் செலுத்துதலுக்கான, சுயத்தை வெறுத்தலுக்கான பள்ளிக்கூடமாக இருக்கின்றது. கர்த்தருடைய சகோதரர்களென, கர்த்தரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களுக்குப் போதிக்கும்படிக்குப் பிதாவினால் இப்பள்ளிக்கூடத்தில் நியமிக்கப்பட்டுள்ள மாபெரும் போதகராய் இருக்கும் கர்த்தர் கூட, இதே பள்ளியில், பிதாவின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ்க் கற்றுக்கொண்டவராய்க் காணப்படுகின்றார். “”அவர் குமாரனாய் இருந்தும் பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, தாம் பூரணரானப் பின்பு (அவர் அழைக்கப்பட்ட மேன்மையான நிலையாகிய, திவ்விய சுபாவத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட பின்பு) தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணமானார்” (எபிரெயர் 5:8,9).

நாம் அனைத்து விஷயங்களிலும் சோதித்துப் பார்க்கப்படுவது போன்று, “”கிருபையினாலும், சத்தியத்தினாலும் நிறைந்தவராய் இருக்கும் பிதாவின் ஒரே பேறானவரும்” அனைத்துக் கட்டங்களிலும் சோதித்துப் பார்க்கப்படுவதும் அவசியமாய் இருந்தது; அதாவது எதை இழந்தும் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும் விஷயத்தில் அவருடைய கீழ்ப்படிதலும், மற்றும் மனுக்குலத்தினை மீட்பதற்கும், தூக்கிவிடுவதற்கும் பிதாவின் ஏற்பாட்டின்படி அனுப்பி வைக்கப்பட்ட கர்த்தர், இந்த மனுக்குலமாகிய தம்முடைய அயலானிடத்தில் கொண்டிருக்கும் அவரது அன்பும், முழுமையாய்ச் சோதிக்கப்பட்டு, நிரூபிக்கப்படுவது அவசியமாய் இருந்தது. விழுந்துபோய், மீட்கப்பட்ட சந்ததியாரைச் சேர்ந்தவர்களும், அவருடன் உடன்சுதந்தரத்திற்கு அழைக்கப்பட்டுள்ளவர்களுமாகிய நாம், பிதாவினுடைய புத்திரர்களாகும்படிக்கு, அதாவது திவ்விய சுபாவத்திற்குப் பங்குள்ளவர்களாகும்படிக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கென, பிதாவினால் ஏற்பாடு பண்ணப்பட்ட இப்பள்ளிக்கூடத்தில், பிதாவின் முழுமையான அங்கீகரிப்பிற்கு ஏற்ற கிறிஸ்துவின் சிந்தையை முழுமையாய்த் தரித்துக் கொள்ளும் நோக்கத்திற்காக போதிப்பையும், பயிற்சியையும் அடைவதும் எவ்வளவு அவசியமாய் இருக்கின்றது. நாம் பிதாவினுடைய குமாரனின் சாயலை அடைவதற்கும், இவ்வாறாக இராஜ்யத்தில் உடன் சுதந்தரர்களாக, “”ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில்” பங்கடைவதற்குமென, தேவனுடைய முன்தீர்மானத்தின்படி நாம் அனைவரும் அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்து, நாம் காண்கிறதென்னவெனில், விசுவாசத்தின் மூலமும், அர்ப்பணிப்பின் மூலமும் நாம் கர்த்தருடன் இணைந்துக்கொள்ளும்போது, நாம் தேர்ச்சியடைந்துவிட்டோம், சுதந்தரர்கள் ஆகிவிட்டோம் என்று நம்மைக் குறித்து அறிவிக்கின்றவர்களாய் இராமல், மாறாக, “”தேவனை அன்புகூருகிறவர்களுக்கென்று அவர் வைத்துள்ளவைகளைச்” சுதந்தரித்துக்கொள்ள ஆயத்தப்படுவதற்கு விரும்புகின்ற மாணாக்கர்களாக, சீஷர்களாக இருப்பதாக நாம் நம்மைக் குறித்துப் பிரகடனப்படுத்துகின்றவர்களாகவே இருக்கின்றோம். இவ்விஷயம் தொடர்பான கருத்தைத் தெய்வீகப் போதனை என நாம் மனதில் வைத்துக்கொள்வோமானால், இது நாம் விரும்பாததைச் செய்கின்றவர்களாகவும், நாம் செய்ய வேண்டியதை நாம் செய்யாமல் விட்டுவிடுகிறவர்களாகவும், நம்முடைய மாம்சத்தில் பூரணம் இல்லை என்பதையும் நாம் காண்கையில், நமக்கு ஏற்பட வாய்ப்புள்ள சோர்வைத் தடுக்க உதவியாய் இருக்கும் (1 கொரிந்தியர் 2:9; ரோமர் 7:25).

இன்னுமாக மாம்சம், கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்திற்குள் பிரவேசிக்கவில்லை என்றும், மாம்சம், இராஜ்யத்திற்குரிய அவருடைய அறிவுரைகள் மற்றும் ஆயத்தப்படுதலின் கீழ் இல்லையென்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்; ஏனெனில் மாம்சமும், இரத்தமும், தேவனுடைய இராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது (1 கொரிந்தியர் 15:50). ஆவிக்குரிய சுபாவத்தைப் [R2439 : page 57] பெற்றுக்கொள்வதற்குரிய தெய்வீக அழைப்பை நாம் ஏற்றுக்கொள்வது என்பது, எல்லா விதத்திலும் பூமிக்குரிய சுபாவத்தைத் துறந்துவிடுவதையும், “”தேவனுடைய புத்திரர்களாக,” புதிய சிருஷ்டிகளாக நாம் ஜெநிப்பிக்கப்படுவதையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது. “”புதிய சிருஷ்டியே,” புதிய மனமே, புதிய சித்தமே, கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் காணப்படுகின்றது, மேலும் இதுவே பூரணப்படுத்த வேண்டியுள்ளது, அதாவது தெய்வீகச் சித்தத்திற்கு முழு இசைவுடன் கொண்டுவரப்பட வேண்டியுள்ளது, அதாவது கர்த்தருடைய சாயலுக்கு ஒப்பாகக் கொண்டுவரப்பட வேண்டியுள்ளது. தெய்வீகப் பிரமாணத்துடன் முழுமையான இசைவான நிலைக்குள், நம்முடைய மாம்சத்தை ஒருபோதும் நம்மால் கொண்டுவர முடியாது, காரணம் அதன் சுதந்தரிக்கப்பட்டுள்ள அபூரணத் தன்மைகள் ஆகும். யார் ஒருவர் தன்னுடைய மாம்சத்தில் பூரணத்தை எதிர்ப்பார்க்கின்றாரோ மற்றும் மாம்சத்தில் பூரணம் வரும் என்று விசுவாசிக்கின்றாரோ, அவர் கிறிஸ்துவின் சாயலை என்றாவது அடைவதற்கும், முன் குறிக்கப்பட்ட வகுப்பாராகிய, “”அவருடைய குமாரனுடைய சாயலை” அடையும் வகுப்பாரில் ஒருவராக ஆகுவதற்கு, குறைவாகவே வாய்ப்புக் காணப்படுகின்றது (ரோமர் 8:29).

புதிய மனமானது எந்தளவுக்குக் கிறிஸ்துவினுடைய மனதிற்கு ஒப்பாக வளர்ச்சியடைகின்றதோ, அவ்வளவாய் சரீரத்தை, அதன் பாவத் தூண்டுதல்களுடன் கட்டுப்படுத்துவதில், அதாவது மாம்சத்தின் சித்தத்தை மரித்த நிலையிலேயே வைத்துக்கொள்வதில் அதன் முயற்சியைத் தளர்த்தாது என்பதை நாம் சுட்டிக்காட்டி விளக்குவதற்கு அவசியமிராது. நிச்சயமாக தேவனுடைய ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்ட புத்திரன் யாராலும், தன்னுடைய அழியக்கூடிய சரீரத்தில் பாவம் ஆளுகை செய்யத்தக்கதாக அனுமதிக்க முடியாது; ஒருவேளை ஏதேனும் அளவில் பாவம் அவனைக் கட்டுப்படுத்திக்கொண்டிருக்குமானால், அது துணிகரமாய் இருக்காது; மாறாக கண நேரமே இருக்கும்; அதாவது புதிய மனமானது/சிருஷ்டியானது, உயிரடைந்து எழும்பும் மாம்சத்தைக் கண்டு, அதைப் பரலோகக் கிருபையின் களஞ்சியமாகிய கிறிஸ்துவிடமிருந்து, தேவையானபொழுதெல்லாம்கிடைக்கும் என வாக்களிக்கப்பட்டுள்ள கிருபையையும், உதவியையும் அடைந்து, வெற்றியடைவது வரையிலும்தான் அப்பாவம் காணப்படும்.

இந்தக் கருத்தானது சரியான விதத்தில் புரிந்துக்கொள்ளப்படுமாயின், இது உண்மையான சீஷர்களுக்கு, தங்களுடைய நிலையைப் புரிந்துக்கொள்வதற்கும், தங்களுடைய இருதயங்களானது, பாவத்திற்கும், அநீதிக்கும் இசைவாய் இராமல், மாறாக நம்முடைய போதகருடைய போதனைகளுக்கும், கொள்கைகளுக்கும் முழு இசைவுடன் இருக்கின்றது என்றும், அவருடைய பார்வையில் பிரியமாயும், ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாகவும் இருக்க தங்கள் இருதயங்கள் வாஞ்சிக்கின்றது என்றும் அவர்களால் உணரமுடிகிறது வரையிலும், ஒருவேளை அவர்கள் மாம்சத்தின் தவறில் விழுந்தாலும் முற்றிலுமாகச் சோர்ந்துபோகாமல் இருப்பதற்கும் உதவப்படுவார்கள். மேலும் இந்தச் சரியானக் கருத்தானது, உண்மையான சீஷர்கள் அனைவரும், தங்கள் மத்தியில் அதாவது, தங்களைப் போல இந்தப் பள்ளிக்கூடத்தில் சீஷர்களாக, மாணவர்களாக, மாம்சத்தில் அல்லாமல், தங்களது மனதினுடைய ஆவியில் புதிய சிருஷ்டிகளாக இருக்கும், “”சகோதரர்களிடத்தில்” அன்பைக் காட்டுவதற்கும் உதவிடும். ஆகவே ஒவ்வொருவரும், உடன் சகோதரனுடைய மாம்சத்தில் அவனால் வெறுக்கப்பட்டு, எதிர்த்துப் போராடப்படுகின்ற குறைவுகளை நாம் பார்க்கும்போது, அதுவும் அச்சகோதரன், அவனுடைய இருதயமும், சித்தமும் கர்த்தருக்கும், அவருடைய அன்பின் பிரமாணத்திற்கும் இசைவாக இருக்கின்றது என்ற நிச்சயத்தையும், மற்றும் இந்தக் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் கற்றுக்கொடுக்கப்படும் பாடங்களை அன்றாடம், அவன் கற்றுக்கொள்ள நாடுகின்றதாகவும், மாம்சத்தின் பெலவீனங்களுக்கு எதிராக, அவன் நல்லதொரு போராட்டம் போராட நாடுகின்றதாகவும் உள்ள நிச்சயத்தையும் நமக்குக் கொடுக்கும் பட்சத்தில், நாம் (அச்சகோதரனிடத்தில்) காணும் அத்தீமையானது, அச்சகோதரனுடைய சத்துருவே ஒழிய, அச்சகோதரனாகிய புதிய சிருஷ்டியினுடைய தீமைகள் அல்ல என்பதை நாம் ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

இது வேதவாக்கியங்களின் வெளிச்சத்தில் நடப்பதாகவும், இருளில் இடறிப்போகாத நிலையாகவும் கூறப்படுகின்றது, அதாவது புரிந்துக்கொண்டு, தெய்வீக ஏற்பாடுகளுக்கு இசைவாகச் செயல்படுவதாகும், அதாவது தேவன் காரியங்களைப் பார்க்கிற விதத்திலும், தம்முடைய கிருபையான வார்த்தைகளில் தெளிவாக முன்குறித்து வைத்துள்ள விதத்திலும், காரியங்களை நாம் பார்ப்பதாகும். எனினும் அன்பின், பொறுமையின், நீடிய பொறுமையின், சகோதர சிநேகத்தின் வெளிச்சத்தில், உலகப்பிரகாரமானவர்கள் கர்த்தருடைய அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களைப் பார்க்க விரும்புவார்கள் (அ) பார்க்க முடியும் என்று நாம் எதிர்ப்பார்க்க வேண்டாம். மாறாக நம்முடைய எதிராளியானவன், “”இப்பிரபஞ்சத்தின் தேவனானவன்” உலகப்பிரகாரமானவர்களிடம், சுயநலம், தீய எண்ணம் [R2440 : page 57] முதலியவைகளுக்கான போர்வையாகக் கிறிஸ்துவின் நாமத்தையும், அன்பின் பிரமாணத்தையும் பயன்படுத்துகின்ற மாய்மாலக்காரர்களையே காண்பிக்கின்றார். மேலும் இந்த எதிராளியானவன் உலகத்தாருக்கும், மாய்மாலமான கிறிஸ்தவர்களுக்கும் மாத்திரமல்லாமல், விசேஷமாக உண்மையான சீஷர்களுக்கும், கிறிஸ்துவினுடைய பள்ளிக்கூடத்திற்கான நிபந்தனைகளைத் தவறாய்க் காட்டுவதற்குத் தொடர்ந்து நாடுகின்றான். கர்த்தருடைய வார்த்தைக்கு நேர்மாறாக, சீஷர்கள் மாம்சத்தின்படியே நியாயந்தீர்க்கப்படுகின்றார்களே ஒழிய, ஆவியின்படி, புதிய மனதின்படியல்ல என்று உண்மையான சீஷர்களை நம்ப வைத்து, அவர்களைச் சோர்வடையப்பண்ணி, சரியானப் பாதையிலிருந்து விலகிப்போகத்தக்கதாகத் தொடர்ந்து நாடுகின்றான்.

“”உத்தம சீஷர்களே,” இந்த கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் தங்கள் ஓட்டத்தை முடித்து, தேர்ச்சிப் பெற்று, தங்களுடைய கர்த்தருடன் உடன்சுதந்தரர்களாகி, இறுதியில் பூமியின் குடிகள் அனைவருக்கும் போதிப்பதற்கும், ஆசீர்வாதம் வழங்குவதற்கும் அவரோடு உடன் துணையாளர்களாகக் காணப்படுபவர்களாக இருப்பார்கள்; ஆனால் பள்ளியில் சேர்ந்துக்கொள்ளுவது என்பது, இந்தப் பலன்கள் அனைத்தையும் கொண்டுவருவதில்லை; நமது கர்த்தர் குறிப்பிட்டிருப்பதுபோல, பள்ளியில் நிலைத்திருப்பதினால் மாத்திரமே, அதாவது அவருடைய வழிநடத்துதலின் கீழ், அவருடைய சத்திய வார்த்தையினுடைய வழிநடத்துதலின் கீழ் உண்மையாயும், விடாமுயற்சியுடனும் நிலைத்திருப்பதினால் மாத்திரமே, இப்பள்ளியினுடைய பிரமாண்டமான நோக்கம் அடையப்பெறும். பிரயாணத்தின் போது, நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், நாம் முன்னேறுகின்றோம் என்பதையும், நாம் அதிகமதிகமாய்ச் சத்தியத்தை அறிய வருகின்றோம் என்பதையும், சத்தியம் நம்மை அதிகமதிகமாய் விடுவிக்கின்றது என்பதையும், நாம் காண்பது/உணர்வது நமக்கான சிலாக்கியமாய் இருக்கின்றது. உடனடியாக அறிவு வரும் என்றோ, உடனடியாக விடுதலை வரும் என்றோ நாம் எதிர்ப்பார்க்கக்கூடாது.

சத்தியத்தின் வெளிச்சம், அதாவது தேவனுடைய வார்த்தையாகிய விளக்கினுடைய பொதுவான பலனானது, மூட நம்பிக்கையாகிய விலங்குகளைத் தகர்த்து, ஜனங்களைச் சுதந்தரம் ஆக்குவதாகும். ஆனால் கிறிஸ்துவினுடைய பள்ளிக்கூடத்தில் சீஷர்களாய் இராதவர்களுக்கு, சத்தியத்தின் வெளிச்சம் உண்டுபண்ணும்பலனானது கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இன்னும் வேறு சிலருக்குச் சுதந்தரமும், அறிவின் வெளிச்சமும், நாசத்தைக்கொண்டு வருவதாகவும் இருக்கின்றது, இன்னுமாக இறுமாப்பு அடைவதற்கும், இரக்கமற்றவர்களாய் இருப்பதற்கும், தற்பெருமை அடித்துக்கொள்வதற்கும், கர்வம்கொள்வதற்கும், சண்டைப்பண்ணுவதற்கும், அதிருப்திக்கொள்வதற்கும், சந்தோஷம் இல்லாமல் இருப்பதற்கும் நேராக வழி நடத்துகின்றது. இந்தப் பொல்லாப்பான விளைவுகளானது, சில விஷயங்களில்விடுதலை பெற்று, மற்றெல்லா விஷயங்களிலும் கட்டப்பட்டவர்களாகக் காணப்படுபவர்களிடத்திலேயே காணப்படுகின்றது; மேலும் இதுவே இன்றைய நாகரிக உலகிலும், பெயர்ச்சபையில் பெரும்பான்மையானவைகளிடத்திலும் வளர்ந்துக்கொண்டு வருகிறதும், பரவலாய்க் காணப்படுகிறதுமான நிலமையாக இருக்கின்றது.

ஆனால் மாபெரும் போதகருடைய வார்த்தைகளுக்குச் செவிசாய்த்து, அவருடைய மாணவர்களாகக் காணப்படத்தக்கதாக அனைத்து விஷயங்களிலும் தொடர்ந்து நிலைத்திருக்கும் உண்மையான சீஷர்கள், அறியாமை மற்றும் மூடநம்பிக்கையிலிருந்து மாத்திரம் விடுவிக்கப்படாமல், பாவத்திற்கு ஊழியம் செய்வதிலிருந்தும் விடுதலை அடைந்துள்ளனர்; மற்றும் அவர்களுடைய சுதந்தரிக்கப்பட்டுள்ள சொந்த பெலவீனங்கள், குறைகள் குறித்தும், தெய்வீக மனம் குறித்துமுள்ள சரியான உணர்ந்துக்கொள்ளுதலையும், அதாவது சத்தியத்தையும் பெற்றுள்ளனர். இதன் காரணமாக இவர்களுடைய சுதந்தரம் என்பது, இவர்களைப் பாதிப்பிற்குள்ளாக்குவதற்குப் பதிலாக ஆசீர்வதிக்கவே செய்கின்றதாய் இருக்கின்றது; பெருமை மற்றும் தற்பெருமை அடித்துக்கொள்ளும் தன்மைக்குப் பதிலாகத் தாழ்மையைக்கொண்டு வருகின்றதாய் இருக்கின்றது; கோபத்திற்குப் பதிலாகப் பொறுமையைக்கொண்டு வருகின்றதாய் இருக்கின்றது; சுயநலம் மற்றும் பகைக்குப் பதிலாக, [R2440 : page 58] பெருந்தன்மையையும், இரக்கத்தையும்கொண்டு வருகின்றதாய் இருக்கின்றது; கசப்பின் ஆவி மற்றும் அதிருப்திக்குப் பதிலாக சந்தோஷத்தையும், சமாதானத்தையும் கொண்டு வருகின்றதாய் இருக்கின்றது. உண்மைதான், குமாரனால் மாத்திரமே நம்மை மெய்யாக விடுவிக்க முடியும்.

எனினும் நம்முடைய விடுதலை என்பது, மாம்சத்தின் விடுதலையாய் இராமல், மாறாக இருதயத்தின், மனதின், சித்தத்தின், புதிய சுபாவத்தின் விடுதலையாக இருக்கின்றது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் நாம் இந்தப் பொக்கிஷங்களை மண்பாண்டங்களில் பெற்றிருப்பது வரையிலும், புதிய சிருஷ்டியானது மாம்சமாகிய பூரணமற்ற சரீரத்தை அதன் கருவியாகப் பயன்படுத்த வேண்டியது வரையிலும், இந்தச் சுதந்தரம் நிறைவானதாய்/முழுமையானதாய் இருப்பதில்லை. கிறிஸ்துவின் இந்தச் “”சகோதரர்கள்,” “”உன்னதமானவரின் குமாரர்கள்,” முதலாம் உயிர்த்தெழுதலில் தங்களது பங்கை அடையும்போதுதான் உண்மையில் விடுதலையடைந்தவர்களாய் இருப்பார்கள். “”நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்” (சங்கீதம் 17:15).

பாவம் செய்கின்றவர்கள், பாவத்தின் ஊழியக்காரர்கள் என்றும், அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றும் நமது கர்த்தர் சுட்டிக்காட்டுகின்றார். “”பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான், பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம், சத்தியம் நமக்குள் இராது” (1 யோவான் 3:8; 1:8). மேற்கூறப்பட்ட ஒன்றுக்கொன்று முரண்பாடாக இருப்பது போல் தோன்றும் வேதவாக்கியங்களை எப்படி நாம் இசைவாக்கிக்கொண்டு, ரோமர் 6:18-ஆம் வசனத்தின் வார்த்தைகளைப் புரிந்துக்கொள்ளலாம்?

நம்முடைய பதில் என்னவெனில், வேதவாக்கியங்கள் புதிய மனதின் பாவங்கள் என்றும் சுட்டிக்காட்டுவதில்லை மற்றும் நம்முடைய விழுந்துபோன மாம்சத்திற்கு, நீதியில் பூரணம் உண்டு என்றும் சொல்லவில்லை; இந்த இரண்டு உண்மைகளையும், இப்பாடத்தைப் படிக்கையில் நினைவில் கொள்ளப்பட வேண்டும். தேவனால் ஜெநிப்பிக்கப்பட்ட புதிய சிருஷ்டியை (இதன் மாம்சம் மரித்துவிட்டதாகக் கருதப்படுகின்றது) அடையாளப்படுத்தும் புதிய மனம் பாவம் செய்யாது, காரணம் அதனிடத்தில் பாவத்திற்கு எதிரான சத்தியத்தின் ஆவி, சத்தியம் எனும் விதை நடப்பட்டுள்ளது (யாக்கோபு 1:18). இந்தப் புதிய சிருஷ்டியானது, நீதிக்கு மிக இசைவுடன் காணப்பட்டுக் கர்த்தருடைய ஆவியினால், பரிசுத்தத்தின் ஆவியினால் மிகவும் ஊக்குவிக்கப்படுகின்றபடியால், புதிய சிருஷ்டி பரிசுத்தத்தில்தான் பிரியங்கொள்கின்றதே ஒழிய, பாவத்தில் அல்ல மேலும் இவைகளெல்லாம் ஜெநிப்பிக்கப்பட்ட (அ) பரிசுத்த ஆவியின் ஜெநிப்பிக்கப்பட்ட நிலைமைகள் தொடர்ந்துக் காணப்படுவது வரையிலும்தான் காணப்படுகின்றது. “”தேவனால் ஜெநிப்பிக்கப்பட்டுள்ள எவனும் பாவஞ்செய்யான் (துணிகரமாய்ச் செய்யான், அதாவது பாவத்தை அங்கீகரிக்கமாட்டான் அல்லது பாவத்தில் சந்தோஷமும் அடையமாட்டான்), ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது.” அதாவது அவனை ஜெநிப்பித்துள்ள சத்தியத்தின் ஆவி, சத்தியத்தின் பரிசுத்தமான வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; “”பொல்லாங்கன் அவனைத் தொடான்” (1 யோவான் 3:9; 5:18).

எதுவரையிலும் இருதயமானது (மனமானது, சித்தமானது) பரிசுத்தமாகவும், தேவனுக்கும், நீதிக்கும் இசைவானதாகவும் இருக்கின்றதோ, அதாவது நம்மை ஜெநிப்பித்த வித்தாகிய, சத்தியத்தின் ஆவி, பரிசுத்தத்தின் ஆவியானது நம்மில் தொடர்ந்துத் தரித்திருப்பது வரையிலும், புதிய மனதினால் பாவத்தை அங்கீகரிக்க முடியாது மற்றும் அதை எதிர்க்க வேண்டும், மற்றும் அதை எதிர்க்கவும் செய்யும். நம்முடைய சொந்த விழுந்துபோன மாம்சத்தின் அங்கங்களுடனும், பெலவீனமான மனித சுபாவத்துடனும், அதன் ஏக்கங்கள் மற்றும் ஆசைகளுடனும் அநேக யுத்தங்கள் பண்ணப்பட்டாலும், மாம்சத்திலிருந்து வேறுபட்டது “”புதிய சிருஷ்டி” ஆகும்; மற்றும் மாம்சத்தின் பூரணமற்ற தன்மைகளும், பெலவீனங்களும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான புதிய சிருஷ்டிக்குத் தரிக்கப்படாமல், மாறாக நமது கர்த்தருடைய மீட்பின் பலியினுடைய புண்ணியங்களின் கீழ் மூடி, மறைத்து வைக்கப்பட்டதாகவே கருதப்படுகின்றது.

விழுகையின் காரணமான பெலவீனங்களினாலும், தீமையின் நெருக்கடியினாலும், நாம் மாம்சத்தைக் கீழ்ப்படுத்துவதற்கு எவ்வளவுதான் பிரயாசங்கள் எடுத்துக்கொண்டாலும், நம்முடைய மாம்சமானது ஒருபோதும் தெய்வீகப் பிரமாணத்திற்குரிய அளவுகோலுக்கு/நியமத்திற்கு ஒப்ப வரமுடியாது; எனினும், “”புதிய சிருஷ்டிகளாகிய” நமக்கு வேதவாக்கியத்தின் நிச்சயம் பின்வருமாறு காணப்படுகின்றது அதாவது, “”மாம்சத்தின்படி நடவாமல் (நம்மால் முடிந்தமட்டும் தெய்வீக உதவியை நாடி, மாம்சத்தின் கவர்ச்சிகரமான செல்வாக்குகளை நாளுக்குநாள் எதிர்த்து) ஆவியின்படி நடக்கிற (நாம் அநேகமாக ஆவிக்கேற்ப முற்றிலுமாக நடக்கவில்லை என்றாலும் இறுதியில், பரம பிதாவினுடைய அன்பான குமாரனுடைய சாயலுக்கு ஒப்பான சாயல் என்று பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்படத்தக்கதாக, “”புதிய சிருஷ்டிகளுக்குரிய” குணலட்சணத்தின் மகிமையான நிலைக்கு நம்முடைய மாபெரும் போதகருடைய கிருபையினாலும், உதவியினாலும் வரத்தக்கதாக நாம் ஆவியில் நடப்பதை நாளுக்கு நாள் தொடரும்) நம்மிடத்தில் (புதிய சிருஷ்டிகளிடத்தில்) நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்” (ரோமர் 8:4).

மாறாக ஒருவேளை இப்படியாக, “”புதிய சிருஷ்டிகளாக” மாறியுள்ளவர்களில் எவரேனும் பாவத்தில் துணிகரமாகவும், விரும்பியும் ஈடுபட்டு, மாம்சத்திற்கு ஏற்றபடி வாழ்வாரானால் இது, அவரை ஜெநிப்பித்த சத்தியத்தின் விதையானது, அவருக்குள் அழிந்துப் போய்விட்டதற்கான உறுதியான அடையாளமாகும்; ஏனெனில் இந்த விதை அவருக்குள் எதுவரையிலும் தரித்திருக்கின்றதோ, அதுவரையிலும் அவரால் துணிகரமாய்ப் பாவம் செய்ய முடியாது (1 யோவான் 3:9).

பாவத்திற்கு அடிமைகளாக இருந்து, உண்மையில் விடுதலை அடையாமல், புத்திரத்துவத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் தற்கால சூழ்நிலைகளின் கீழ், ஒரு குறிப்பிட்ட வேளைவரையிலும் யுகத்திற்கடுத்த திட்டங்களை நிறைவேற்றும் விஷயத்தில் தெய்வீகத் திட்டத்தினுடைய ஊழியக்காரர்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர்; உதாரணத்திற்குச் சிலசமயம் தேவன், மனுதனுடைய கோபத்தையும், சாத்தானுடைய எதிர்ப்பையும் நன்மைக்கு ஏதுவாக மாற்றிப் பயன்படுத்துகின்றார்; ஆனால் பாவம் நித்திய காலமும் நிலைத்திருப்பதற்கும், அதற்கு அடிமைகளாக இருப்பவர்கள் அப்படியே காணப்படுவதற்கும் தேவன் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. தேவனுடைய புத்திரர்கள் மாத்திரமே, ஜீவிப்பதற்குரிய சிலாக்கியத்தை இறுதியில் பெற்றிருப்பார்கள். இரண்டு யுகங்களில் புத்திரர்கள் இருப்பதை நாம் நினைவில்கொண்டு, மேற்கூறிய புத்திரர்களைக் குறித்துத் தவறாய்ப் புரிந்துக்கொள்ளாமல் இருப்போமாக.

இரண்டு யுகங்களின் புத்திரர்கள் பின்வருமாறு:-

(1) இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய புத்திரர்கள், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் அவருடைய, “”சகோதரர்களென” உடன் சுதந்தரத்துவத்தைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஜெநிப்பிக்கப்பட்டவர்கள் ஆவர்; இவர்கள் முதற்பேறானவருடைய மணவாட்டிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்; இவர்கள் அனைத்தையும் சுதந்தரிக்கப் போகின்றனர். “”இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம்” (1 யோவான் 3:2). ஆவிக்குரிய சுபாவத்திற்குள் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளவர்களாகிய இந்தப் புத்திரர் வீட்டார், சீக்கிரத்தில் நிறைவடையப்போகின்றார்கள்; இவர்கள் நிறைவடைந்த பிற்பாடு, யாரும் இவ்வகுப்பாருக்குள் சேர்க்கப்பட முடியாது.”

(2) சீக்கிரத்தில் இன்னொரு புத்திரர் வீட்டார் ஆரம்பிக்க இருக்கின்றனர். ஆயிரவருட யுகத்தின்போது, புதிய உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்குக் கீழ்த் தேவனுடைய ஈவை ஏற்றுக்கொள்பவர்களாகிய உலகத்திற்கு நமது கர்த்தர் இயேசு பிதாவாக, ஜீவன் கொடுப்பவராக இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது. சபை முதலாம் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளாக, முதல் பலன்களாக இருக்க, உலகம் பின்வரும் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளாக இருப்பார்கள். ஆயிரவருட யுகத்தின்போது உயிர்ப்பிக்கப்பட்டு, யுகத்தின் முடிவில் புத்திரத்துவத்திற்குள் கொண்டுவரப்படும் இந்தக் கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய உலகத்தாரைக் குறித்து அப்போஸ்தலர் கூறுகையில், “”சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று (மரணத்தினின்று) தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்,” அதாவது பாவம், மரணம், துக்கம், அழுகை, வலி முதலானவற்றிலிருந்து விடுதலை என்று குறிப்பிடுகின்றார். இவர்கள், தேவனுடைய பிள்ளைகள் அனைவருக்குமான பொதுவான சிலாக்கியங்கள் அனைத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள், மற்றும் இதோடுகூட மாபெரும் பாவநிவாரண பலி மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட, பூமிக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்வார்கள் (ரோமர் 8:20-23).

இப்படியாக பூமியின் சீர்ப்பொருந்தப்பட்ட வகுப்பார், கிறிஸ்துவின் பிள்ளைகளாக இருப்பார்கள்; கிறிஸ்துவே இவர்களுடைய ஜீவனை விலைக்கொடுத்து வாங்கி, இவர்கள் ஆதாமுக்குள் இழந்துபோனதும், தம்முடைய சொந்த ஜீவனைக்கொடுத்து மீட்டுக்கொண்டதுமானதை இவர்களுக்குத் திரும்பக் கொடுத்திடுவார். ஆனால் அதற்கென்று இவர்கள் இறுதியில், யேகோவா தேவனைத் தங்கள் பிதாவாகவும், பிதா இவர்களை தமது பிள்ளைகளாகவும் கொண்டிருக்கமாட்டார் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. இக்காரியம் தொடர்பான இஸ்ரயேலிலுள்ள நிழலான வழக்கமானது, காரியத்தைத் தெளிவுப்படுத்துகின்றது. உதாரணத்திற்கு அனைத்து இஸ்ரயேலர்களும் ஆபிரகாமின் பிள்ளைகள் என்றும் இஸ்ரயேலின் பிள்ளைகள் என்றும், யாக்கோபின் பிள்ளைகள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

ஆனால் நாம் பதிய வைக்க விரும்பும் மையக்கருத்து என்னவெனில், எக்காலக் கட்டத்திலும் தேவனால், தம்முடைய பிள்ளைகளென ஏற்றுக்கொள்ளப்படுபவர்கள் தேவனுடைய ஒரே பேறான குமாரனாகிய மத்தியஸ்தர் மூலமாக மாத்திதரமே பாவத்தின் கொடுமையினின்று விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்; இப்படிப்பட்டவர்களே மெய்யாகவே விடுவிக்கப்படுகின்றனர் என்பதே ஆகும்.