R2467 – கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2467 (page 115)

கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்

THE LORD BETRAYED

யோவான் 18:1-14

“அவர் அசட்டைப்பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும் ஆவார்.”” – ஏசாயா 53:3

கடைசி இராப்போஜனத்திற்குப் பிற்பாடு, திராட்சச்செடி மற்றும் அதன் கொடிகள் குறித்துத் தம்முடைய சீஷர்களுடன் பேசின பிற்பாடு, நமது கர்த்தர் அருமையான ஓர் ஜெபம் ஏறெடுப்பது குறித்து யோவான் 17-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக, நடுராத்திரி வேளையில், இயேசு பதினொரு பேருடன் எருசலேமின் நுழைவாயிலைக்கடந்து வெளியேபோய், கெதரோன் என்னும் சிறு ஆற்றைக்கடந்து, அதற்கு அப்புறத்திலுள்ள கெத்செமனே தோட்டம் என்று அழைக்கப்படும் ஒலிவமரத் தோட்டத்திற்குப் போனார். ஒருவேளை இது பொதுவான தோட்டமாக அல்லது நமது கர்த்தருடன் நட்புறவில் காணப்படும் யாரோ ஒருவருக்குச் சொந்தமான தோட்டமாகவும் கூட இருக்கலாம். இத்தோட்டமிருந்த இடமென கருதப்படும் இடமானது, இன்றும் பல நூற்றாண்டுகளாக பூங்காவாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இத்தோட்டத்தைக் காணவரும் பார்வையாளர்களை வரவேற்க விரும்பும், துறவிகள் பொறுப்பில், இத்தோட்டம் இப்பொழுதும் காணப்படுகின்றது. தற்போது இந்தத் தோட்டத்தில் ஆறு (அ) எட்டு மிகப் பெரியதும், மிகப் பழமையானதுமான ஒவிவ மரங்கள் காணப்படுகின்றது. இந்த ஒலிவ மரங்களைப் பார்க்கும்போது, குறைந்த பட்சம் ஆயிரம் வருடங்களான மரம் போன்று காட்சியளிக்கும்; ஆனால் அவைகள் இன்னும் அதிகமான வருடங்களைக் கடந்ததாகவே இருக்க வேண்டும்.

நமது கர்த்தர் தம்முடைய சீஷர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோதும், அவர்களுக்காக ஜெபித்தப்போதும், அவர் திடமனதுடன் காணப்பட்டதாகத் தெரிகின்றது. அதாவது, அவர்களுடைய இருதயங்கள் கலங்காதிருப்பதாக என்று அவர்களுக்கு அவர் புத்திமதிக் கூறிக்கொண்டிருந்தபோது, அவருடைய சொந்த இருதயம் கலக்கம்கொள்ளாமல்தான் காணப்பட்டது. ஆனால், அந்தச் சிறுகூட்டம் கெத்செமனேயை நோக்கி நடந்துக்கொண்டிருக்கையில், நம்முடைய அருமை மீட்பருடைய உணர்வுகளை, மிகுந்த பாரம் அழுத்தினதை நம்மால் புரிந்துக்கொள்ள முடிகின்றது. “”என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது” (மத்தேயு 26:38) என்று அவர் கூறினது நம்முடைய நினைவுக்கு வருகின்றது. தற்போது அவர் கெத்செமனேவுக்குச் சென்றுகொண்டிருப்பதென்பது, முற்காலங்களில் அவ்விடத்திற்கு அவர் சென்றதிலிருந்து மிகவும் வேறுபட்டதாய் இருந்தது. ஆண்டவருடைய துக்கத்தைக்கண்டு, அப்போஸ்தலர்கள் சூழ்நிலையைக் கொஞ்சம் கிரகித்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லையென்றாலும், அடுத்து என்ன சம்பவிக்கப்போகின்றது என்பதைச் சற்றே புரிந்திருந்தார்கள்.

சுவிசேஷகர்கள் பதிவு செய்ததிலிருந்து நாம் அறிந்துக்கொள்வது என்னவெனில், தோட்டத்திற்கு வந்தபோது, நமது கர்த்தர் அப்போஸ்தலர்களில் எட்டுப்பேரைத் தோட்டத்தின் நுழைவுவாயிலிலேயே நிறுத்திவிட்டு, தமக்கு நெருக்கமானவர்களாகிய பேதுருவையும், யாக்கோபையும், யோவானையும் தம்முடன் கூட உள்ளே கூட்டிக்கொண்டு போனார் மற்றும் அது விசேஷமான சோதனைக்கான வேளையாய் இருந்தபடியினால், அவர்களனைவரும் விழித்திருந்து ஜெபம் பண்ணும்படிக்கு எச்சரித்தார். அவர்களைவிட்டு அவர் அப்புறம் சென்று, பிதாவுடன் மறைவில் உரையாடினார். அவருடைய உணர்வுகளை, அவருக்கு அன்பாய் இருந்த சீஷர்களிடம்கூட அவர் பகிர்ந்துக்கொள்ளவில்லை, கொள்ளவும் முடியாது. அவர் கடந்துப்போகின்ற பரீட்சையை/சோதனையை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியாது. அவர்கள் இன்னமும் ஆவியினால் ஜெநிப்பிக்கப்படவில்லை. ஆகவே அவருடைய மிகுந்த சோதனையான வேளையில், இயேசு தனிமையிலேயே காணப்பட்டார், “”ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை” (ஏசாயா 63:3).

நம்முடைய கர்த்தருக்கு இரத்த வியர்வை வருமளவுக்கு, அவருடைய நரம்பு மண்டலத்தின் மீது தாக்கம்கொள்ளத்தக்கதாகக் காணப்பட்ட அவருடைய சோதனையினுடைய உண்மையான அம்சத்தைப் புரிந்துக் கொள்வதில், பெரும்பாலானவர்களுக்கு, ஏன் கிறிஸ்தவ ஜனங்களுக்குங்கூடச் சிரமம் இருக்கின்றது. அநேகர் நம்முடைய கர்த்தருடைய (சோதனையின்) பாதையுடன், குறிப்பிடத்தக்க தைரியத்துடன் மரணத்திற்குக் கடந்துச் சென்ற இரத்த சாட்சியாய்க் காணப்பட்ட கர்த்தருடைய பின்னடியார்களில் சிலருடைய பாதையை ஒப்பிட்டுப்பார்த்து, இவர்களைக் காட்டிலும் பூரணமாய்க் காணப்பட்ட நமது கர்த்தருக்கு, இன்னும் அதிகமான பாடுகள் படுவதில், கஷ்டம் இருந்திருக்காது என எண்ணுகின்றனர். உண்மையைத் தெரிந்துக்கொள்வதற்கு, அநேக விஷயங்கள் மனதில் கொள்ளப்பட வேண்டும்:

(1) ஜீவனுக்கான உரிமையைப் பூரணமாய்ப் பெற்றிருந்த நமது கர்த்தர், தம்முடைய ஜீவனை மரணத்திற்குக் கையளிப்பதென்பது, இழந்து போகப்பட்டதும், பலவீனமான ஜீவனுமாய் இருப்பதை, அதிக காலம் வைத்திருக்க முடியாதவர்களால், அந்தப் பலவீனமான ஜீவனை மரணத்திற்குக் கையளிப்பதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். (2) பத்தில் ஒன்பது பாகத்திலும் மரித்துவிட்ட நம்முடைய சந்ததிக்கு, ஜீவனுடைய மாபெரும் மதிப்புபற்றின உணர்ந்துக்கொள்ளுதல் மந்தமானதாகவே இருக்கின்றது. அதாவது, நம்முடைய சந்ததியினுடைய அனுபவங்கள் அனைத்தும் மரணத்துடன் தொடர்புடையதாக இருப்பதினால், நம்முடைய சந்ததி, மரணத்தை வித்தியாசமான ஏதோ ஒன்றாகக் கருதுவதில்லை. ஆனால், இப்படியாக நம்முடைய கர்த்தருடைய விஷயத்தில் இருக்கவில்லை. அதாவது, பிதாவுடன் ஆரம்பம் முதல் காணப்பட்டவரும், அனைத்தையும் உண்டுபண்ணினவருமாகிய, “”ஜீவனின் அதிபதியினுடைய” விஷயத்தில் இப்படியாக இருக்கவில்லை. அவரைப்பொறுத்தமட்டில் ஜீவன் என்பது, மிகவும் விலையேறப்பெற்ற அருளாக, சிலாக்கியமாக, சந்தோஷமாக இருந்தது. ஆகவே பத்தில் ஒன்பது பாகத்தில் ஏற்கெனவே மரித்துப்போனவர்களாகவும், உணர்வுகள் அனைத்திலும் மழுங்கிப்போனவர்களாகவும் காணப்படும் நம்மைப் பார்க்கிலும், அவருக்கு மரணம் மிகவும் பயங்கரமானதாகக் காணப்பட்டது. அவர் [R2467 : page 116] ஒருவேளை மரணம்வரைக்கும் உண்மையுள்ளவராய் இருப்பாரானால், அவருக்கு உயிர்த்தெழுதல் கிடைக்கும் என்ற பிதாவினுடைய வாக்குத்தத்தத்தைப் பெற்றிருந்தார் என்பது உண்மைதான்; மற்றும் அவர் பிதாவின் வாக்குத்தத்தத்தை நம்பினார் என்பதிலும் ஐயமில்லை. அவர் பிதாவினிடத்தில் கொண்டிருந்த விசுவாசத்திற்கு, அவருடைய முழு வாழ்க்கையும் திரளான சாட்சியங்களை அளிக்கின்றது. எனினும் அவருடைய விஷயத்தைப் பொறுத்தமட்டில் நம்மைப்பார்க்கிலும், அவருக்கான விசுவாச சோதனையானது மிகவும் நெருக்கடியானதே. பறிமுதல் பண்ணப்பட்ட ஜீவனில், சிறிதளவையே நாம் ஒப்புக்கொடுக்கப்பெற்றிருக்கின்றோம். இன்னுமாக, கிறிஸ்து மூலமான எதிர்க்காலத்திற்குரிய பிதாவின் வாக்குத்தத்தம் மாத்திரம் நமக்கிராமல், நம்முடைய அருமை மீட்பரின் உயிர்த்தெழுதலில் செயல்பட்ட பிதாவின் வல்லமைக்கான உதாரணமும் கூட நமக்கு இருக்கின்றது. ஆனால், இப்படியான தெய்வீக வல்லமைக்கான சான்றுகள் எதுவும் நமது கர்த்தருக்கு இருக்கவில்லை. தெய்வீக வாக்குத்தத்தத்தின்படி அவரே, “”பிதாவின் சிருஷ்டிகளில் முதற்பலனானவராகவும்,”” “”மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவராகவும்” இருக்க வேண்டியிருந்தது (கொலோசெயர் 1:18; 1 கொரிந்தியர் 15:20).

ஆனால், இவைகளனைத்தும் அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்திலேயே அவரால் கருதப்பட்டு, மதிப்பிடப்பட்டு மற்றும் ஏற்றுக்கொள்ளவும்பட்டுவிட்டது. ஆடுகளுக்காக தாம் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுப்பது அவசியம் என்றும், தாம் அப்படியாக ஒப்புக்கொடுக்கப் போவதாகவும் அவர் ஏற்கெனவே சீஷர்களுக்குத் தெரிவித்துள்ளார் (யோவான் 10:15). ஆகவே, “”பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும்” என்று நமது அருமையான மீட்பர் ஜெபம் பண்ணினதை, அவர் மரணத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்பு இருக்குமானால்… என்ற அர்த்தத்தில் கூறினார் என்று நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. பாவத்திற்கான பலியாக, தாம் உயர்த்தப்படாதது வரையிலும், உலகம் தம்மிடத்திற்கு இழுக்கப்படாது; அதாவது, நம்முடைய பாவங்களுக்காக அவர் மரிப்பதும், அவருடைய மகிமைக்குள் பிரவேசிப்பதும் அவசியம் என்பதை அவர் ஏற்கெனவே அறிந்திருந்தார்; மற்றும் சீஷர்களுக்கும் இதை ஏற்கெனவே அறிவித்திருந்தார். (யோவான் 3:14; 12:32).

தம்மைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும் என்று அவர் வேண்டிக்கொண்ட பாத்திரமானது, அவர் நியாயப்பிரமாணத்தை மீறினதாகக்கூறி அவரைக் கைதுச்செய்து, பொதுவிசாரணை அவருக்கு நடத்தி, அவரைக் குற்றவாளி என்று தீர்ப்பிட்டு, பிற்பாடு அவரைக் குற்றவாளி/பாதகனெனச் சிலுவையில் அறையப்படுதலின் காரணமாகக் காணப்படும் அவமானத்தையும், நிந்தனையையும் குறிக்கின்றதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய பாவங்களுக்காக, பொதுவான மனுஷர்கள் மரிப்பதுபோன்று, எவ்விதமான விசேஷித்த அவமானமில்லாமல் அவர் மரிப்பதென்பது ஒரு காரியமாகவும், அவர் இப்படி உச்சக்கட்டமான அவமானத்திலும், கனவீனத்திலும், இகழ்ச்சியிலும் மரிக்க வேண்டுமென்பது வேறு காரியமாக இருக்கின்றது. அநேகமாகப் பிதாவினுடைய ஞானத்தின்படி, இந்தக் கடைசி அம்சமானது இவைகளெல்லாம் நிறைவேறப்போகும் தருணம்வரையிலும், நம்முடைய அருமையான மீட்பருக்கு ஏறக்குறைய மறைத்தே வைக்கப்பட்டிருந்தது. மேலும், மனிதனுக்கான ஈடுபலியைச் செலுத்தும் விஷயத்தில், ஒரு பாவி பாடுபடுவதைப்பார்க்கிலும் அதிகமாய், தாம் பாடுபடுவதற்குரிய எவ்விதமான அவசியமும் இருப்பதாக நம்முடைய கர்த்தருக்குத் தெரியவில்லை. ஆகவே, “”இப்பாத்திரம் என்னை விட்டு நீங்கக்கூடுமானால் நீங்கட்டும்” என்று அவருடைய ஜெபம் காணப்பட்டது. அப்போஸ்தலர் கூட இந்த வித்தியாசத்தை உணர்ந்தவராக, “”மரணபரியந்தம் தாழ்த்தினார்” என்று கூறிய பின்னர், “” “அதாவது, சிலுவையின் மரணபரியந்தம் தம்மைத்தாமே தாழ்த்தினார்” என்று கூறுகின்றார் (பிலிப்பியர் 2:8).

சிலுவையின் மரணமும், அதனோடு கூட உள்ள கனவீனம், நிந்தனை முதலியவைகளும், நம்முடைய முடிந்தமட்டுமுள்ள கணிப்பின்படி, நமக்கான ஈடுபலியின் விலைக்கு அவசியமில்லை என்று காண்கின்றோம். ஏனெனில், “”அதை நீ புசிக்கும் நாளிலே, நீ சிலுவையில் அறையப்பட்டு, கனவீனமடைந்து, எல்லோர் முன்பும் கொடியவனாகப் பார்க்கப்பட்டுச் சாவாய்”” என்பதாக தண்டனை காணப்படவில்லை. தண்டனை மரணமாக இருக்கின்றபடியினால், நம்முடைய கர்த்தருடைய மரணம் மாத்திரமே, மனிதனுக்கான ஈடுபலித் தொகையெனப் போதுமாய் இருந்திருக்கும் (ஆதியாகமம் 2:17). எனினும், இந்த அதிகப்படியான (அவமானத்தின்) அம்சமானது, பிதாவினால் அவசியமானது என்று கருதப்பட்டப்படியால், “”பாத்திரம்” நீங்கவில்லை. “”தம்முடைய நேச குமாரனுடைய” இருதயத்தின் உண்மையை அதாவது, குமாரனுக்குத் தம்முடைய சொந்த சுபாவமாகிய தெய்வீகச் சுபாவத்தையும், தம்முடைய இராஜ்யத்தில் உடன் சுதந்திரத்தையும் கொடுத்துச் சீக்கிரத்தில் மிகுதியாய் உயர்த்தவும், மாபெரும் ஆசீர்வாதத்தையும் கொடுக்க வேண்டுமென்று, தாம் திட்டம் பண்ணியுள்ளபடியினால், குமாரனுடைய இருதயத்தின் உண்மையைத் தமக்கு மாத்திரமல்லாமல், அறிவுடைய தம்முடைய சிருஷ்டிகள் அனைத்திற்கும் நிரூபிப்பதற்கென இப்படியான உச்சக்கட்டமான கீழ்ப்படிதலை, பரீட்சையாக வைப்பது பிதாவுக்கு அவசியமாய் இருந்தது. மேலும், நம்முடைய அருமை மீட்பருடைய உண்மையானது முழுமையாய் உறுதிப்படுத்தப்பட்டது. “”அவர் அவமானத்தை எண்ணாமல்…”” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார். அதாவது, பிதாவுக்குப் பிரியமாய் இருப்பதற்கு முன்பாக, பிதாவினுடைய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு முன்பாக, கர்த்தருக்கு அவமானங்கள் ஒரு பொருட்டாய் இருக்கவில்லை (எபிரெயர் 12:2). அவமானம் அடைதல் எனும் அம்சத்தை நீக்கிவிடுவதற்கான வாய்ப்புள்ளது என்ற எண்ணம் அவருக்குக் காணப்பட்டதுவரையிலும், கூடுமானால் நீங்கிவிடட்டும் என்று பதற்றத்துடன் இயேசு எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால், இப்படியாக நீக்குவது பிதாவின் சித்தமல்ல என்பதை அவர் உணர்ந்தவுடனே, “”என்னுடைய சித்தமல்ல, உம்முடைய சித்தமே ஆகக்கடவது”” என்று அவருடைய இருதயம் காணப்பட்டது. பிதாவின் சித்தம் தொடர்புடைய முடிவானது, உடனடியாகப் பலத்தைக்கொண்டு வந்தது. தேவனுடைய பலத்திலும், அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் அவர் இப்பொழுது எந்த அனுபவத்தையும் சந்திக்கத் தயாரானார்.

இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்னதாக இயேசுவைக் காட்டிக் கொடுப்பதாகப் பிரதான ஆசாரியனுடன் ஒப்பந்தம் போட்டிருந்த யூதாஸ், அதாவது இராப்போஜனம் முடிந்தவுடன் தன்னுடைய கொடிய திட்டத்தை நடத்தும்படிக்கு மேல் வீட்டறையை விட்டுப் புறப்பட்ட யூதாஸ், இயேசுவைக் கைதுச்செய்து, பஸ்காவிற்கு முன்னதாக அவருக்கு மரணத் தண்டனை அளிக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கும் போர்ச்சேவகரின் கூட்டத்தையும், பிரதான ஆசாரியர், பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு வந்தான். இந்தப் போர்ச்சேவகர்கள் அடங்கிய கூட்டத்தில், 600 ரோம போர்ச்சேவகர்கள் இருந்தார்கள் என்று பொதுவாய் நிலவிவரும் கருத்தை நாம் முற்றிலுமாக நிராகரிக்கின்றோம். இங்கு அனுப்பப்பட்ட போர்ச்சேவகர்கள், இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் போர்ச்சேவகர்கள் பொதுவாய் நடந்துக்கொள்வதிலிருந்து, வித்தியாசமாய்ச் செயல்பட்டனர். இதுவுமல்லாமல், இந்தப் போர்ச்சேவகர்கள் ரோமின் பிரதிநிதிகளாகிய பிலாத்துவினால் அல்லது ஏரோதினால் அனுப்பப்படாமல், ரோம படையினுடைய கட்டளையின் கீழ்க் காணப்படாத பிரதான ஆசாரியர்கள் மற்றும் பரிசேயர்களால்தான் அனுப்பி வைக்கப்பட்டனர் என்று அனைத்துச் சுவிசேஷகர்களும் பதிவு செய்துள்ளனர். இயேசுவைக் கைதுச் செய்த இந்தப் போர்ச்சேவகர்கள், யோவான் 7:32-46 வரையிலான வசனங்களில் இடம்பெறும் சேவகர்கள்தான் என நாம் எடுத்துக்கொள்கின்றோம்.

மத ரீதியிலான விஷயங்களில், யூத ஆலோசனை சங்கத்தாருக்கு ஓரளவுக்கு அதிகாரம் இருந்ததாகவும், கைதுச் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் ரோம ஆளுநரின் சம்மதமில்லாமல் யூத ஆலோசனை சங்கத்தாருக்கு, குற்றவாளிகளை மரணத் தண்டனைக்கு ஒப்புக்கொடுக்க முடியாது என்பது தெரிகின்றது. அப்போஸ்தலர்கள் அநேக தருணங்களில் யூதர்களுடைய இந்த (ஆலோசனை சங்கத்தாரின்) அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டுள்ளதை நாம் நினைவுகூருகின்றோம். அப்போஸ்தலர் 5:17,18,22, 25-40 வரையிலான வசனங்களைப் பார்க்கவும்.

பிரதான ஆசாரியர்கள் மற்றும் பரிசேயர்களுடைய அதிகாரிகளின் கீழ்க் காணப்பட்ட இந்தச் சேவகர்களை, மத்தேயுவும், மாற்கும், “”திரளான ஜனங்கள்” என்று கூறுகின்றனர். மேலும் இவர்கள், பொதுவான ஜனங்களிடம் பொதுவாய்க் காணப்படும் பட்டயங்களையும், தடிகளையும் பெற்றிருந்தார்கள் என்று இயேசுவினுடைய வார்த்தைகளிலிருந்து தெரிகின்றது. இவர்கள் ரோம சேவகர்களின் ஆயுதமாகிய ஈட்டியைக்கொண்டிருந்தார்கள் எனக் கர்த்தர் கூறவில்லை. [R2467 : page 117] இக்கருத்தை, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரன்தான் இயேசுவின் மீது முதலாவதாகக் [R2468 : page 117] கைப்போட்டதன் விளைவாக, பேதுருவின் பட்டயத்தினால் தாக்கப்பட்டான் என்ற உண்மையானது இன்னும் உறுதிப்படுத்துகின்றது. ஒருவேளை ரோம போர்ச்சேவகர்கள்தான் இவ்விடத்தில் பொறுப்பேற்றிருந்திருப்பார்களானால், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனுக்கு அங்குச் செயல்படுவதற்கு அதிகாரம் இருந்திருக்காது என்பதில் ஐயமில்லை.

யூதாசின் வழிகாட்டுதலின் கீழ் இயேசுவைத் தேடி வந்த இந்தக் கூட்டத்தார், இயேசுவும், அப்போஸ்தலர்களும் சுமார் ஒருமணி நேரத்திற்கு முன்னதாகவே வெளியேறி கடந்துப் போய்விட்ட மேல் வீட்டு அறைக்குத்தான் முதலாவதாகச் சென்றிருக்க வேண்டும். இயேசுவும் பதினொரு பேரும் மேற்வீட்டறையை விட்டுக்கடந்துப் போயிருப்பதைக் கண்டபோது, அவர்களைக் கெத்செமனே தோட்டத்தில் கண்டுபிடிக்கலாம் என்பதை யூதாஸ் அறிந்திருந்தான். காரணம், “”இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தார்.”” காட்டிக்கொடுத்த காரியம் தொடர்புடையதாய் மற்றச் சுவிசேஷகர்களால், பதிவு செய்யப்பட்ட காரியங்களை, யோவான் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார். அநேகமாக அன்பான சீஷனாயிருந்த யோவான், அவ்வுண்மைகளினிமித்தம் மிகவும் வெட்கமடைந்ததால், அவைகளைக்குறிப்பிட அவர் விரும்பவில்லைபோலும். யூதாசின் நம்பிக்கை துரோகம் போன்று, வெகு சில சம்பவங்களே நடந்துள்ளது. துரோகியின் ஸ்தானமானது, மிகுந்த இழிவானவர்கள் மத்தியில்தான் காணப்படுகின்றது என, தவறான மனநிலையில் காணப்படும் மனுக்குலம் கூட உணர்ந்துள்ளது. ஆண்டவருடைய இப்படிப்பட்ட அன்புக்கும், இரக்கத்திற்கும், நன்மைகளுக்கும்/ நற்குணங்களுக்கும் எதிரான இப்படியான நம்பிக்கைத் துரோகச் செயல்கள், சர்வ சாதாரணமானதல்ல என்பதில் நாம் மகிழ்கின்றோம். எனினும் கர்த்தருடைய ஜனங்களின் அனுபவத்தில், இதற்கு இணையான அனுபவங்கள் காணப்படுகின்றன. அதாவது, “”சகோதரர்களால் வரும் மோசங்கள்” கர்தருடைய ஜனங்களுக்கு உண்டு. இது, யூதாசின் ஆவிக்கு ஒத்ததான எதுவும் நம்முடைய இருதயங்களை அலைக்கழிக்க நாம் அனுமதிக்கக்கூடாது என்று நம்மில் ஒவ்வொருவருக்கும் எச்சரிக்கின்றதாய் இருக்கின்றது. இப்படிப்பட்டதான விஷயங்களில் நம்முடைய கர்த்தர், “”தம்முடைய சரீரத்தின் அங்கங்களை” தம்முடன் ஒரே தளத்தில் வைத்தவராக, இந்தச் சிறியவர்களான தம்முடைய சகோதரர்களுக்கு இடறல் உண்டாக்குகிறவர்கள் விஷயத்தில், இடறல் உண்டாக்குகிறவனின் கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி, அவனைக் கடலின் ஆழத்தில் அமிழ்த்திவிடுவது அவனுக்கு நலமாயிருக்கும் என்று நமக்கு உறுதியளிக்கின்றார் (மத்தேயு 18:6).

தலைக்கும், அவருடைய சரீரத்தின் உடன் அங்கங்களுக்கும் செய்யப்படும் ஒவ்வொரு செய்கையினுடைய, பின்பக்கத்திலும் நிச்சயமாக நல்ல (அ) கெட்ட நோக்கம் ஒன்று காணப்படும். வலுவான நோக்கத்தைத் தேடுவது என்பது, நம்பிக்கை துரோகத்திற்கான உறுதியான பழியிலிருந்து விலகுவதற்குரிய காரணங்களைத் தேடுவது ஆகாது. நம்முடைய அனுபவத்தையும், கணிப்பையும் வைத்துப் பார்க்கும்பொழுது, வல்லமை (அ) ஸ்தானங்கள் அடைவதற்கான இச்சையும், பேராசையும்தான், “”கள்ள சகோதரர்” செய்யும் நம்பிக்கை துரோகமான செயலுக்கு ஊற்றாக இருக்கின்றது. இப்படிப்பட்ட பரிசுத்தமற்ற இலட்சியங்களை மேன்மைப்படுத்துவதற்குரிய ஆசையானது, இவ்வாசையைக்கொண்டிருக்கும் இருதயத்தைக் கண்டிப்பாய் மாசுப்படுத்திவிடும். ஒருவர் பின்வருமாறு எழுதியுள்ளார்:

“”ஒரு எண்ணத்தை விதைத்தால், நீ ஒரு கிரியையை அறுப்பாய்;
ஒரு கிரியையை விதைத்தால், நீ ஒரு பழக்க வழக்கத்தை அறுப்பாய்;
ஒரு பழக்க வழக்கத்தை விதைத்தால், நீ ஒரு குணத்தை அறுப்பாய்;
ஒரு குணத்தை விதைத்தால், நீ ஓர் இலக்கையே அடைந்துவிடுவாய்.””

யூதாசின் எண்ணங்கள், வெளியரங்கமான பொல்லாத கிரியையின் தோற்றத்தை எடுப்பதற்கு முன்னதாக, யூதாஸ் ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் பொல்லாத எண்ணங்களை விதைத்து வந்துள்ளார். யூதாஸ் ஆஸ்தி மற்றும் செல்வாக்கின் மீது பேராசைக்கொண்டிருந்தார். அவர் சீஷர்களுடைய சிறிய கூட்டத்திற்குப் பொருளாளரானார். மேலும், நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட பணத்தில் ஒரு பாகத்தைத் தன்னுடைய சொந்த காரியங்களுக்காக, யூதாஸ் திருடினதாக வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன. யூதாஸ் எந்தளவுக்குப் பணத்தின் மீது ஆசை வைத்தாரோ, அந்தளவுக்கு அந்த ஆசையை நடைமுறையும் படுத்தினார். அதாவது, தனது ஆண்டவரை முப்பது வெள்ளி காசுகளுக்குக் காட்டிக்கொடுக்க விருப்பங்கொள்ளும் அளவுக்கு, பணத்தின் மீதான யூதாசின் ஆசை பெருகினது. யூதாஸ் வாக்களிக்கப்பட்ட இராஜ்யத்தை எதிர்ப்பார்த்ததாகவும், அநேகமாக அந்த இராஜ்யத்தில் இராஜரிக பொருளாளர் எனும் உயர்வான ஸ்தானத்தை அடைய எதிர்ப்பார்த்ததாகவும் தெரிகின்றது.

யூதாஸ், தான் காட்டிக்கொடுத்ததின் விளைவாக உண்டான நிகழ்வுகளினி மித்தம் பயங்கரமான ஏமாற்றத்தை அடைந்திருப்பார் என்பதிலும் நிச்சயமே. நமது கர்த்தர் தம்முடைய சத்துருக்களின் கையினின்று அற்புதமான வல்லமையினால் தம்மைத் தப்புவித்துக்கொள்வார் என யூதாஸ் எதிர்ப்பார்த்திருக்க வேண்டும். இதைவிட பரந்த மனப்பான்மையுடன்கூடிய கண்ணோட்டத்தில், யூதாசினுடைய நம்பிக்கைத் துரோகமான செயலை எடுத்துக்கொள்ள நமக்குத் தெரியவில்லை. எனினும், இந்தப் பரந்த மனப்பான்மையுடன்கூடிய கண்ணோட்டம் கூட, யூதாசுனுடைய செய்கையிலுள்ள கரும்புள்ளியில் கொஞ்சத்தையே துடைக்கின்றது. எனினும், பணம் விஷயத்திற்காகத் தன்னுடைய சிறந்த நண்பனை இழிவான விதத்தில் தற்காலிகமாகக்கூட பயன்படுத்த விரும்புகிறவன், பணத்தின் மீதான தன்னுடைய ஆசையுடன், தன்னுடைய அனைத்து உணர்வுகளையும் வேசித்தனம் பண்ணியுள்ளதை வெளிக்காட்டுகிறவனாய் இருக்கின்றான். கனமடைவதற்குரிய ஆசையும் கூட யூதாசுக்குக் காணப்பட்டிருக்கலாம். காரணம், நீண்ட காலமாய் வாக்களிக்கப்பட்டிருந்த இராஜ்யத்தை கர்த்தர் ஸ்தாபிக்கும்படிக்கு, அவர் (இயேசு) கட்டாயத்திற்குள்ளாகத்தக்கதாக அல்லது அவர் கூறியவை அனைத்தும், மற்றும் வாக்குத்தத்தங்களும் மோசடி என்று வெளிப்படுத்தத்தக்கதாக இந்த ஆபத்தைக் கொண்டுவருவதற்கு யூதாஸ் எண்ணியிருந்திருக்கலாம்.

காரியங்களை விரைவுபடுத்துவதிலும், தேவனுடைய கரு நிலையிலுள்ள இராஜ்யத்தை நிறுவுவதிலும் யூதாஸ் உண்மையில் வெற்றியடைந்தான்; எனினும் அவன் விரும்பினவிதத்திலல்ல, அதுவும் எந்தவிதத்திலும் அவனுக்குக் கனத்தையோ (அ) நன்மையையோ அளிக்கும் விதத்திலல்ல. இப்படியாகவே சத்தியத்தைப்பெற்றுக்கொண்டும், தங்களைச் சீஷர்கள் என்று அறிக்கைப் பண்ணிக்கொண்டும், அதே வேளையில் சத்தியத்தின் மீது அன்பு இல்லாமலும், தற்காலத்திலோ (அ) எதிர்க்காலத்திலோ கனத்திற்காக ஆசைப்படுபவர்களின் விஷயத்திலும் காணப்படுகின்றது. கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துள்ளவர்களாகிய நாம் அனைவரும், இந்த வெட்கக்கேடான பண்பின், எவ்வித அம்சங்களும் நம் எவரிடத்திலும் காணப்பட்டுவிடாதப்படிக்குக் கவனத்துடனும், விழிப்புடனும், ஜெபத்துடனும் இருக்கக்கடவோம். கர்த்தரையும், “”சகோதரரையும்”” காட்டிக்கொடுக்கும் விஷயத்தில் பல்வேறு இரகசியமான வழிகளும், அநேக வெளியரங்கமான வழிகளும் இருப்பதை நாம் நினைவில் கொள்வோமாக.

இயேசு தம் மீது வரவிருக்கும் அனைத்துக் காரியங்களையும் முன்கூட்டியே அறிந்திருந்தார் எனச் சுவிசேஷகர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவர் ஜெபம் பண்ணினபோது, “”வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி அவரைப் பலப்படுத்தினான்”” என்றும் நமக்குத் தெரிவிக்கப்படுகின்றது. கர்த்தர் பட வேண்டிய பாடுகள் எவை மற்றும் அவைகள் எப்படி எதிர்ப்பார்க்கப்பட வேண்டும் என்பவை தொடர்புடைய விஷயங்களிலுள்ள, பிதாவின் சித்தத்தைப் பற்றிக் கர்த்தருக்குத் தெரிவிப்பதாக தூதனின் இவ்வூழியம் காணப்பட்டிருக்கலாம். மேலும், காரியங்கள் தொடர்பான இந்த அறிவின் காரணமாகவும், பிதா அனைத்தையும் நன்மைக்கு ஏதுவானதாக மாற்றுவார் என்ற நிச்சயத்தின் காரணமாகவும், அவருடைய இருதயம் பலப்பட்டது; மற்றும் இதற்குப் பின்னர் நடந்த காரியங்கள் அனைத்திலும், நம்மால் அவரிடம் கவனிக்க முடிந்த, மாபெரும் அமைதியையும் அவருக்குக்கொடுத்தது.

இயேசுவைக் கைதுச் செய்யும்படிக்கு வந்த “”போர்ச்சேவகர்கள்””, அவரை மரங்களின் மறைவுகளுக்குள்ளெல்லாம் தேட வேண்டிய நிலை தங்களுக்கு ஏற்படும் என்று எண்ணியிருந்திருக்க வேண்டும். ஆகவே அவர்கள் பந்தங்களோடும், தீவட்டிகளோடும் [R2468 : page 118] வந்திருந்தார்கள். நமது கர்த்தர், அவர்களிடமிருந்து தப்பி ஓடுவதற்குப்பதிலாக, அவர்களுக்கு முன்பாக எதிர்ப்பட்டு, அவர்கள் யாரைத் தேடுகின்றார்கள் என்று கேட்டதினிமித்தம், அவர்களுக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டிருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இந்தப் போர்ச்சேவகர்களில் சிலருக்கும் ஏற்கெனவே கர்த்தரை, அதாவது அவருடைய அற்புதங்கள், பிசாசுகள் மீதான வல்லமைகள் முதலியவைகள் பற்றிய அறிவு இருந்திருக்க வாய்ப்பு உண்டு. மேலும், இதுகூட அவர்கள் பின்னிட்டுத் தரையில் விழுவதன் மூலம், தங்களது பெலவீனத்தை வெளிப்படுத்தினதற்கான காரணமாகக்கூட இருக்கலாம். இல்லையேல், தாம் அவர்களை எதிர்க்க விரும்பினால், அவர்களை எதிர்ப்பதற்கான முழு வல்லமையும் தம்மிடத்தில் இருக்கின்றது என்பதை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக, அவர்கள் பின்னிட்டுத் தரையில் விழத்தக்கதாக, அவர்கள் மீது உயர் மனதின் சக்தியைக்கூட நமது கர்த்தர் பயன்படுத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது.

இதே படிப்பினையானது, பேதுரு பட்டயத்தைப் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரன் மீது உபயோகித்தப்போதும், கற்றுக்கொடுக்கப்படுகின்றது என நாம் நம்புகின்றோம். அப்போஸ்தலர்கள் பட்டயங்களை எடுத்துக்கொள்ளும்படிக்கு நமது கர்த்தர் அவர்களிடம் கூறினார் என்றும், இரண்டு பட்டயங்கள் இருக்கின்றது என்று சொன்னபோது, அவை “”போதும்”” என்று நமது கர்த்தர் கூறினார் என்றும், சுவிசேஷங்களில் ஒருவர் பதிவு செய்துள்ளது நம்முடைய நினைவிற்கு வருகின்றது (லூக்கா 22:36,38). தமக்காக தம்முடைய சீஷர்கள் சரீரப்பிரகாரமான யுத்தம் பண்ணவேண்டும் என்ற எண்ணம் நம்முடைய கர்த்தருக்கு இல்லை. இதை அவர் பிற்பாடு, “”என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல”” என்று தெரியப்படுத்துகின்றார் (யோவான் 18:36). தற்காப்பிற்காக எதுவும் இல்லை என்பதினாலோ, அதேசமயம் தம்முடைய சீஷர்கள் கோழைத்தனமாய் இருப்பதினாலோ, நம்முடைய கர்த்தர் கைதுச் செய்யப்படாமல், மாறாக அவருடைய வேளை வந்தது என்பதையும், நம்முடைய பாவங்களுக்காக அவர் மரித்து, அவருடைய மகிமையில் பிரவேசிப்பதற்குரிய வேளை வந்துள்ளது என்பதையும் அறிந்து, அவர் தம்மை முற்றிலுமாகக் கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுத்ததினாலேயே, அவர் கைதுச் செய்யப்பட்டார் என்பதைக் காட்டுவதற்கு இரண்டு பட்டயங்கள் போதுமானதாய் இருந்தது. லூக்கா 24:46.

அங்கு வந்துள்ள திரளான ஜனக்கூட்டத்தைத் தம்மால் முழுமையாய்ச் சமாளிக்க முடியும் என்பதையும், தாம் விரும்பினால் தம்மைப் பாதுகாக்க, பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரைக்கொண்டு வருவதற்குத் தம்மிடத்தில் வல்லமை உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டும் வண்ணமாக, இந்த ஒரு வல்லமையை வெளிப்படுத்தின பிற்பாடு (மத்தேயு 26:53), நம்முடைய கர்த்தர் தாம் கைதுச்செய்யப்படுவதற்கென முழுமையாய்த் தம்மை ஒப்புக்கொடுத்துவிட்டு, சீஷர்கள் அவர்கள் வழியே போய்விட அனுமதிக்க வேண்டுமெனும் நிபந்தனையை மாத்திரம் வைப்பதை நாம் பார்க்கின்றோம். இப்படிப்பட்ட ஒரு தருணத்தில், இப்படிப்பட்ட சோதனையான சூழ்நிலையின் கீழ், தம்மைப்பற்றி முற்றிலுமாக மறந்துவிட்டு, மற்றவர்களுடைய நலனில் மாத்திரம் அக்கறைக்கொண்டிருப்பது எத்துணை அருமையான குணலட்சணமாய் உள்ளது! அவர் எப்பேர்ப்பட்டவராய் இருக்கின்றார்!

“”நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது”” (யோவான் 18:9). மறுபடியும் ஆண்டவருடைய நடத்தையில் இங்கு அவர் மேல்வீட்டறையை விட்டுப்போவதற்கு முன்பாகத் தம்முடைய ஜெபத்தில் கூறினதின்படியே, தம்முடைய சீஷர்களுக்கான அவருடைய பராமரிப்பிற்கு உதாரணத்தை நாம் காண்கின்றோம். அவர்களில் எவரும் இழந்துப் போகப்படக்கூடாது என்பதில், அவர்களுடைய ஆவிக்குரிய நன்மைகள் தொடர்பான விஷயமே பிரதானமாக அவருடைய ஜெபத்தின் எண்ணமாக இருப்பினும், இது அவருடைய சீஷர்களாகும் அனைவருடைய சரீரத்திற்கடுத்த நன்மைகள் தொடர்புடைய விஷயத்திலுமுள்ள, நம்முடைய கர்த்தரின் அக்கறையை உறுதிப்படுத்தும் உதாரணமாகவும் இருக்கின்றது. அவர்களுடைய தலையிலிருந்து அவரை அறியாமல், ஒரு மயிர்கூட கீழே விழுவதில்லை; எதுவும் அவர்கள் பாதிக்கத்தக்கதாக அனுமதிக்கப்படுவதில்லை. ஜீவியத்தின் ஒவ்வொரு விஷயமும், சம்பவங்களும், அவர்களுடைய மேலான நன்மைக்கு ஏதுவாக மாற்றப்படும் (மத்தேயு 6:32,33).

அநேகமாக இயேசுவைக் கட்டுவதற்கு ஆரம்பித்திருக்கும்போதுதான், அவரைப் பாதுகாப்பதற்கெனப் பேதுரு தன்னுடைய பட்டயத்தை உறையிலிருந்து வெளியே எடுத்திருந்திருக்க வேண்டும். ஒருவேளை தம்முடைய சீஷர்களனைவரும் அவரைக் கைவிட்டு ஓடிவிடுவார்கள் என்ற கர்த்தருடைய வார்த்தைகளும், பேதுருவாகியதான் “”உமது நிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன்” என்று பண்ணின சத்தியத்தையும் பேதுரு நினைவுகூர்ந்திருப்பார் (மாற்கு 14:29). பெருந்தன்மையுள்ள, பக்தி வைராக்கியமுள்ள பேதுரு! அவருடைய உணர்வின் பெருந்தன்மையுடன்கூடிய வெளிப்படுத்தல்களினிமித்தமும், பேதுரு மேல் நமக்கு அன்பு உருவாகுகின்றது. இங்குள்ள பேதுருவின் செயல்பாடானது, பேதுருவின் துடுக்குத்தனத்தினால் செய்யப்பட்ட தவறுகளில் ஒன்றுதான் என அநேகர் இழிவுப்படுத்தும் வழக்கமுண்டு. அப்போதுவரை அப்போஸ்தலர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லை என்பதையும், தாங்கள் அழைக்கப்பட்டிருப்பது ஆவிக்குரிய இராஜ்யம் என்பதைத் தெளிவாகப் புரிந்துக்கொள்ள முடியாமல் இருந்தார்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், நாம் பார்த்துள்ளபடி பேதுரு, பட்டயத்தை எடுத்துக்கொள்ளும்படியான கர்த்தருடைய ஆலோசனையின்படிச் செய்தவராகத்தான் இருக்கின்றார்; மற்றும் அப்பட்டயத்தைப் பயன்படுத்தினதில், அவர் தெய்வீக நோக்கத்தை நிறைவேற்றினவராகவே காணப்படுகின்றார். குற்றப்படுத்துவதற்கென எதையும் நாம் பார்க்க முடியவில்லை. அனைத்தும் பாராட்டும் வண்ணமாகவே காணப்படுகின்றது. இவ்விஷயம் பேதுருவினாலும், அங்கிருந்த மற்றவர்களாலும் உணரப்பட்டதைக் காட்டிலும் மிகப் பெரிய முக்கியத்துவம் உடையதாய் இருந்தது.

இவ்வளவு தூரம் காரியங்கள் அனைத்தும் நடைப்பெறும் வண்ணமாக அனுமதித்தப் பிற்பாடு, நமது கர்த்தர், “”உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ”” என்று கூறி, பேதுருவைக் கட்டுப்படுத்தினார் (யோவான் 18:11). இப்படிக்கூறிக்கொண்டு, கர்த்தர் காயமடைந்த தம்முடைய சத்துருவைத் தொட்டு அவனைச் சொஸ்தப்படுத்தினார். நமது கர்த்தர் தம்முடைய சத்துருக்களிடத்தில், தம்மை முன்வந்து விரும்பிக் கையளிக்கின்றார் என்பதை சீஷர்கள் கண்டு, புரிந்துக்கொள்ள வேண்டும்; மற்றும் இதுபற்றின உறுதியும் அவர்களுக்கு ஏற்பட வேண்டும். ஆகவே, இப்பாடத்தை வலியுறுத்தும் வண்ணமாக அனைத்தும் நடத்தப்பட்டன.

நம்முடைய அருமை மீட்பருடைய ஊழியத்தின் சின்னஞ்சிறு விஷயங்கள் அனைத்திலுங்கூட தாழ்மையெனும் கிருபை எவ்வளவாய்ப் பிரகாசிக்கின்றது. அவர் தம்மைத் தம்முடைய சத்துருக்களிடம் கையளித்த தருணத்திலுங்கூட, தாம் விரும்பிதான் தம்மைக் கையளிப்பதாக தற்பெருமையடித்துக் கொள்ளவுமில்லை, இரத்தசாட்சிக்குரிய பாராட்டையும் நாடவுமில்லை! [R2469 : page 118] பிதாவினிடத்திலான தம்முடைய நேர்மைக்கான/உண்மைக்கான சான்றாக இதையெல்லாம் பிதா தம்மிடத்தில் எதிர்ப்பார்க்கின்றார் என்ற எளிய உண்மையையே வெளிப்படுத்தினவராகக் காணப்பட்டார். இயேசு தம்மைத் தேவனுடைய ஊழியக்காரர் என்றும், தாம் படுகின்ற பாடுகள் மூலமாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்கின்ற குமாரன் என்றும் தெரிவித்தார். “”பிதா எனக்குக்கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ?” என்றார் கர்த்தர். உண்மையில் இதுதான் அவருடைய வெற்றிக்கான பலமாக இருந்தது. அதாவது, அவருடைய சித்தத்தை அவர் முழுமையாய்ப் பிதாவின் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்திருந்தார்; மற்றும் பிதாவினால் நன்மைக்கேதுவாக மாற்றமுடிகின்றதை மாத்திரம் தவிர, மற்றபடி எந்தத் தேவையற்ற பொல்லாப்புகளையும் பிதா தம்மீது வர அனுமதிப்பதில்லை என்ற உண்மையை, அவருடைய விசுவாசம் பற்றிப்பிடித்திருந்தது.

இங்கு இராஜரிக ஆசாரியகூட்டத்தார் அனைவருக்கும் அதாவது, மாபெரும் பிரதான ஆசாரியனுடைய அடிச்சுவடிகளில் நடக்க நாடும் அனைவருக்கும் முக்கியமான படிப்பினை உள்ளது. நான் கிறிஸ்துவில் நிலைத்திருந்து, அவருடைய அடிச்சுவடுகளில் நடக்க நாடுவது வரையிலும் நமக்கான ஜீவியத்தின் சோதனையான அனுபவங்களனைத்தும், நமக்கெனக் கர்த்தரால் கவனமாய்க் கருத்தில் கொள்ளப்படுகிறது. அதாவது, நமக்குத் தேவையற்றதும், நமக்கு நித்திய கனமகிமையை உண்டாக்காததுமான எந்தக் கசப்பான அனுபவங்களையும், நம்முடைய துக்கம் மற்றும் சோதனையின் பாத்திரத்தில் அவர் ஊற்றுவதில்லை என்பதை நாமும் நினைவில் கொள்ளவேண்டும் (2 கொரிந்தியர் 4:17). இந்த வாக்குத்தத்தங்கள் நிமித்தமாகவும், நமக்கு முன்னோடியும், [R2469 : page 119] மகிமையடைந்தவருமாகிய நம்முடைய ஆண்டவரிடத்திலான பிதாவின் உண்மைக்கான சான்றுகளின் நிமித்தமாகவும், சுவிசேஷ யுகத்தில் நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்குள் அடைக்கலம் புகுந்துள்ள நமக்குப் பலமான ஆறுதலுள்ளது (எபிரெயர் 6:18-20).

வெட்டப்பட்ட காதைச் சொஸ்தப்படுத்தின நமது கர்த்தருடைய கடைசி அற்புதமானது, அவருடைய குணலட்சணத்திற்கும், போதனைக்குமான மிக அருமையான உதாரணமாக விளங்குகின்றது. இது, “”உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்” என்ற அவருடைய வார்த்தைகளுக்கான உதாரணமாயிற்று. இது அவருடைய போதனைகள் வெளிப்படுத்தின தெய்வீக அன்பினால் அவர் நிரம்பியிருப்பதையும், அவரை இழிவான விதத்தில் நடத்தினவர்களிடத்திலும், அவரைத் துன்பப்படுத்தினவர்களிடத்திலும் அவருக்கு எந்தக் கசப்பும் இல்லை என்பதையும் காட்டுகின்றது.

நமது கர்த்தரைக் கட்டுவதற்கு அவசியமில்லை. ஆனால், இந்தப் போர்ச்சேவகர்களை அனுப்பி வைத்தவர்களுக்கு முன்பாக, இந்தப் போர்ச்சேவகர்கள் தங்களது வீரத்தை வெளிப்படையாகக் காண்பிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டதினால், இப்படியாக அவரைக் கட்டியிருக்கலாம். இதை நமது கர்த்தர் கண்டித்ததை மாற்கு 14:48-49-ஆம் வசனங்களில் பார்க்கலாம். “”இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார்.”” அப்பொழுதுதான் பதினொரு பேரும் அவரைத் தனியே விட்டுவிட்டு கூட ஓடிவிடுகின்றனர். யூதாஸ் போர்ச்சேவகர்களுடன் ஆசாரியனாகிய அன்னாவினுடைய வீட்டிற்குப் போனான். இந்த அன்னாதான் யூதாசுடன் விலைபேரம் பேசியிருந்தான். மேலும் இத்தருணத்தில்தான், ஒப்பந்தத்தின்படி நிறைவேற்றி முடித்துள்ள யூதாசுக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசுகள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும். இவன் ஈனமான/கேடுகெட்ட மனுஷன்! மனுஷகுமாரனைக் குறித்து எழுதப்பட்டதுபோல அவர் மரணத்திற்குள் போனார். ஆனால், அவர் மரிக்க வேண்டியது அவசியம் எனும் காரியமானது, அவரை அவருடைய சத்துருக்களின் கைகளில் கையளித்த கொலைக்கார, பேராசை மற்றும் நம்பிக்கை துரோகத்தினுடைய கொடூரத்தின் வீரியத்தை குறைத்துக் காட்டுவதில்லை. இப்படியாகவே, கிறிஸ்துவினுடைய சரீர அங்கங்களின் விஷயத்திலும் காணப்படுகின்றது. கிறிஸ்துவின் சரீர அங்கங்களுக்கு அவமானங்கள் வருவது அவசியமாயுள்ளது. இன்னுமாக, தலையினுடைய உபத்திரவங்களில், குறைவானதைக் கிறிஸ்துவின் சரீரமானது நிறைவேற்றுவது என்பது, தெய்வீகத் திட்டத்தின் ஒரு பாகமாக இருக்கின்றது (கொலோசெயர் 1:24). எனினும், இது இப்படியான “”காட்டிக் கொடுத்தலை” செய்பவர்களின் செய்கையினுடைய பாவத்தைக் குறைத்திடாது. அதுவும் சத்தியத்தின் அறிவை அனுபவித்திருக்கும் “”கள்ள சகோதரருடைய”” விஷயத்தில் குறைத்திடாது. கர்த்தருக்கும் சரி, அவரோடு கூட உண்மையாய்ப் பாடு அனுபவிக்கும் அனைவருக்கும் சரி, பரீட்சைகளும், சோதனைகளும் ஆசீர்வாதத்தைக் கொண்டுவருவதாக இருப்பினும், யூதாசின் போக்கைத் தெரிந்துக்கொண்டு அநீதிச் செய்பவர்கள், தங்களுக்குக் கனமும், ஆசீர்வாதமும் வேண்டும் என்பதற்காக, பொல்லாப்புச் செய்யும்படிக்குத் தங்களை விற்றுப்போடுகிறபடியால், தாங்கள் இச்சித்த கனங்களையும், ஆசீர்வாதங்களையும் ஒருபோதும் அடைவதில்லை.