R3867 – புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3867 (page 312)

புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்

WISE AND FOOLISH VIRGINS

மத்தேயு 25:1-13

“”மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.”―வசனம் 13

நமது கர்த்தருடைய பூமிக்குரிய ஊழிய நாட்களின் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, நமது காத்தர் எருசலேமின் அழிவைக் குறித்தும், தம்முடைய பின்னடியார்கள் சிதறடிக்கப்படுவது குறித்தும், நீண்ட காலப்பகுதியான யுத்தங்கள் குறித்தும், யுத்தங்களின் செய்தி குறித்தும், இறுதியாக, மத்தேயு 25-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள தம்முடைய இரண்டாம் வருகையைக் குறித்தும் முன்னறிவித்தார். இந்த ஒரு தகவலானது, அவ்வேளையில் அப்போஸ்தலர்களுக்கு மிகவும் ஏற்றதாய் இருந்தது. ஏனெனில், அப்போஸ்தலர்களுடைய எதிர்ப்பார்ப்பு வேறுவிதமாய்க் காணப்பட்டது; அதாவது, அவர்கள் கர்த்தர் மேசியாவாக உயர்த்தப்படுவார் என்றும், எருசலேம் அவரது சாம்ராஜ்யத்தின் ஸ்தலமாக இருக்கும் என்றும் எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தவர்களாகக் காணப்பட்டனர். “”இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்ற கேள்விகளைக் கேட்டனர் (மத்தேயு 24:3). மத்தேயு 24-ஆம் அதிகாரத்தில் இயேசுவினால் கூறப்பட்ட அவருடைய மாபெரும் தீர்க்கத்தரிசனத்தில், தம்முடைய இரண்டாம் வருகை என்பது விறுவிறுப்பான காலப்பகுதிகளில் நடைபெறும் என்றும், அப்போது கூடுமானால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்கள் கூட வஞ்சிக்கப்பட்டுப் போவார்கள் என்றும், நோவாவின் நாட்களில் எப்படி இருந்ததோ, அப்படியே மனுஷகுமாரனுடைய நாட்களில் இருக்கும் என்றும், ஜனங்கள் புசித்தும், குடித்தும், நட்டும், கட்டியும், பெண் கொண்டும், பெண் கொடுத்தும் இருப்பார்கள் என்றும், அவருடைய இராஜ்யத்தின் புதிய யுகத்திற்கான ஆரம்பத்திற்கு ஆயத்தப்படுத்தத்தக்கதாக, சீக்கிரம் வரவிருக்கின்ற புயலைக் குறித்து அறியாதவர்களாக உலத்தின் ஜனங்கள் இருப்பார்கள் என்றும் அப்போஸ்தலர்களுக்குச் சுட்டிக்காண்பித்து, அவர்களுக்கு இயேசு காரியங்களை விளக்கினார்.

காரியங்களை அவர்களது மனதில் பதிய வைப்பதற்கென, இயேசு ஐந்து புத்தியுள்ள மற்றும் ஐந்து புத்தியில்லாத கன்னிகைகளாகிய, பத்துக் கன்னிகைகள் பற்றின உவமையை அவர்களுக்குக் கூறினார். உவமையின் காட்சியானது/சம்பவமானது, சுவிசேஷ யுகத்தினுடைய நிறைவு பகுதியைப் பற்றினது என்பது, “”அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்க்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும்” என்ற வார்த்தைகள் மூலம் சுட்டிக்காண்பிக்கப்படுகின்றது (மத்தேயு 25:1). இந்த உவமை சுவிசேஷ யுகம் முழுவதற்கும் பொருந்துகிறதில்லை. மாறாக, நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின்படி இவ்வுவமையானது, இக்காலத்திற்குப் பொருந்தக் கூடியதாய் இருக்கின்றது. ஏனெனில், நாம் மணவாளன் காணப்படும் காலமாகிய யுகத்தினுடைய முடிவில் வாழ்ந்துக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றோம். அதாவது, கலியாணத்திற்குப் புத்தியுள்ள கன்னிகைகள் செல்வதும், புத்தியில்லாத கன்னிகைகளுக்குக் கதவு அடைக்கப்படுவதுமான காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தற்காலத்தில் இந்த உவமையைப் புரிந்துக்கொள்வது என்பது, கர்த்தருடைய உண்மையான பின்னடியார்கள் அனைவருக்கும் ஏற்றக்கால சத்தியமாகக் காணப்படும்.

வேதவாக்கியங்கள் எங்கும் சபை, தனது கலியாணத்திற்காக ஆயத்தம் [R3867 : page 313] பண்ணிக்கொண்டிருக்கும் மணவாட்டியினால் அடையாளப்படத்தப்பட்டுள்ளது. மணவாளன் கர்த்தர் இயேசு ஆவார்; கர்த்தர் இயேசுவே அனைத்திற்கும் சுதந்தரவாளியாக இருக்கின்றார்; அவருடைய மணவாட்டியாகவும், உடன் சுதந்தரராகவும் ஆகுவதற்கான வாய்ப்புக் கர்த்தருடைய பின்னடியார்களுக்கு அருளப்பட்டுள்ளது. இவர்கள் இராஜாவினுடைய குமாரனுடன் இணைவதாலே அல்லாமல், மற்றப்படி இவர்களுக்கு நித்திய இராஜாவுடன் எவ்விதமான உறவும் இல்லை. இதற்கான நிழல், பழைய ஏற்பாட்டில் மிகவும் அருமையாய் உள்ளது. ஆபிரகாம், மிகவும் ஐசுவரியமுள்ள பரம பிதாவிற்கு நிழலாய் இருக்கின்றார்; ஈசாக், வாக்குத்தத்தத்தின் வித்தாகவும், அனைத்திற்கும் சுதந்தரவாளியான நமது கர்த்தர் இயேசுவுக்கு நிழலாய் இருக்கின்றார்; ஈசாக்கிற்கு மனைவியை அழைத்து வரும்படிக்கு அனுப்பப்பட்ட ஆபிரகாமின் ஊழியக்காரன், பரிசுத்த ஆவிக்கு அருமையான நிழலாய்க் காணப்படுகின்றார்; இந்தப் பரிசுத்த ஆவியானது, இந்தச் சவிசேஷ யுகத்தில் சபையைத் தெரிந்துக்கொண்டு வருகின்றது; இதைக் குறித்து அப்போஸ்தலர், “”நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்” என்று கூறுகின்றார் (2 கொரிந்தியர் 11:2).

சுவிசேஷ யுகம் முழுவதும், இந்தச் சபையானது, பரிசுத்த ஆவியினுடைய வழிநடத்துதல் மற்றும் பாதுகாப்பின் கீழ், மணவாளனோடு கூட உடன் சுதந்தரத்துவத்தில் வாக்களிக்கப்பட்ட மகிமையான நிலைமையாகிய, பரலோக இராஜ்யமாகிய, பல அறைகளைக்கொண்ட பிதாவின் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஒருவேளை நாம் காரியங்களைச் சரியாகப் புரிந்துக்கொண்டவர்களாக இருப்போமானால், நாம் பிரயாணத்தின் முடிவில் இப்பொழுது காணப்படுபவர்களாக இருந்து, ரெபேக்காவினால் அடையாளப்படுத்தப்பட்டபடி, மணவாட்டி வகுப்பாரென முக்காடிட்டுக்கொண்டு, ஒட்டகங்களிலிருந்து இறங்கி, பரலோக மணவாளனால் ஏற்றுக்கொள்ளப்படுபவர்களாய்க் காணப்படுவோம். இந்த முழுக் காரியமும், கிட்டத்தட்ட 19 நூற்றாண்டு காலப்பகுதியை உள்ளடக்கியிருப்பதினால், சம்பவிக்கவிருக்கும் அம்சங்கள்கூட, அவைகள் நிறைவேறுவதற்குப் பல வருட காலங்களை எடுத்துக்கொள்ளுகிறதாய் இருக்கும்.

சீக்கிரத்தில் மணவாட்டி, மணவாளனுடன் கூடக் காணப்படுவாள்; மற்றும் ஆபிரகாமின் உடன்படிக்கையில், மணவாட்டி அவரோடு கூடச் சாராளின் கூடாரத்தில் உடன்சுதந்தரர்களாகக் காணப்படுவாள். இவைகளுக்கு இசைவாகவே, “”நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்” என்று அப்போஸ்தலரால் நமக்குக்கொடுக்கப்பட்ட நிச்சயம் காணப்படுகின்றது (கலாத்தியர் 3:29).

கர்த்தருடைய உவமைகளில் அநேக உவமை, இராஜாவினுடைய மகனின் கலியாணம் தொடர்புடையதாக இருக்கின்றது; மேலும் சபைக்கான தம்முடைய கடைசி செய்தியிலுங்கூட, மணவாட்டியாகிய ஆட்டுக்குட்டியானவரின் மனைவியானவள், எப்படி இராஜ்யத்தில் மிகப் பிரகாசமாய்ப் பிரகாசிப்பாள் என்று கூறப்பட்டுள்ளது; அவள் புதிய எருசலேமென அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறாள். இங்கும் ஆட்டுக்குட்டியானவரின் மனைவி தன்னை ஆயத்தம் பண்ணின பின்பு ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்து இருப்பதாக அறிவிப்புக்கொடுக்கப்பட்டது என்று பார்க்கின்றோம் (வெளிப்படுத்தல் 19:7-9). யோவான் ஸ்நானன் ஒரு தீர்க்கத்தரிசியாக, கிறிஸ்துவுக்கும், சபைக்கும் இடையிலான இந்த உறவைக் குறித்துக் கூறும்போது, “”மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான். இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்புரணமாயிற்று” [R3868 : page 313] என்றார் (யோவான் 3:29). யோவான் ஸ்நானன் தான் மணவாட்டி வகுப்பாரில் அங்கத்தினன் அல்ல என்றும், தான் மணவாளன் அல்ல என்றும் உணர்ந்திருந்தார். யோவான் ஸ்நானன், இயேசுவை மணவாளன் என்று அடையாளம் கண்டுகொண்டார்; மேலும் மணவாளன் மற்றும் மணவாட்டிக்குப் பணிவிடைக்காரனாக, அவர்களை அறிமுகப்படுத்தி வைக்கும் விதத்தில், தேவனால் கனப்படுத்தப்பட்டதில் மகிழச்சியாயிருந்தார். எதிர்க்காலத்தில் யோவான்ஸ்நானன், உண்மையுள்ள தீர்க்கத்தரிசிகளில் ஒருவராக, உயர்ந்த ஸ்தானம் வகுப்பார்; மேலும் நமது கர்த்தர் உறுதியளித்ததுபோல, இவரைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கத்தரிசி எவரும் இருப்பதில்லை; எனினும் இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய மணவாட்டி வகுப்பாரில் மிகவும் எளிமையானவனாய், சிறியவனாய் இருப்பவன், அதாவது இந்த இராஜ்ய வகுப்பாரிலேயே சிறியவனாய் இருப்பவன், யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவனாய் இருப்பான். ஏனெனில், இவர்கள் இராஜ்யத்தின் உடன் சுதந்தரர்களாகவும், கனம், மகிமை மற்றும் அழியாமையில் பங்கடைபவர்களாகவும் இருப்பார்கள்; ஆனால் யோவான்ஸ்நானனும், முற்காலத்திலுள்ள உண்மையுள்ளவர்களும், பூமிக்குரிய தளத்தில், மனுஷர் மத்தியில் இராஜ்யத்தின் பிரதிநிதிகளாகவும், பிரபுக்களாகவும் இருப்பார்கள். (மத்தேயு 11:11; எபிரெயர் 11:39-40; சங்கீதம் 45:16).

இரண்டு வகுப்பாரான கன்னிகைகள்

இந்த உவமையானது தற்காலத்திற்குப் பொருந்துகின்றது என்பதை மனதிற்கு முன்பாக நிறுத்திய பிற்பாடு, இவ்வுமையானது கன்னிகைகளை, அதாவது தூய்மையுள்ளவர்களை மாத்திரமே குறிப்பிடுகின்றது என்பதை நாம் கவனிக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். இவ்வுவமையானது உலகத்தாரையோ, பெயர்க்கிறிஸ்தவ ஜனங்களையோ குறிப்பிடுவதில்லை. இவ்வுவமையில் இடம்பெறும் இரு வகுப்பாரும், கிறிஸ்தவர்களை அதாவது பரலோக இராஜ்ய வகுப்பாiர் அதாவது விசுவாசிகளை, அர்ப்பணம் பண்ணின விசுவாசிகளை, அதாவது இராஜ்யத்தின் சுவிசேஷத்தைக் கேட்டு, இராஜாவை அவரது இரண்டாம் வருகையில் எதிர்ப்பார்த்து, தங்கள் தீவெட்டிகளிலிருந்து வெளிச்சம், தகவல் மற்றும் போதனைகள்/அறிவுரைகள் பெற்றுக்கொள்ளும் விசுவாசிகளைக் குறிக்கின்றவர்களாய் இருக்கின்றனர். தூய்மையானவர்களாகவும், உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டவர்களாகவும், மணவாளனுடைய வருகை மற்றும் இராஜ்யம் குறித்து அறிவிக்கப்பட்டவர்களாகவும், அதற்காக காத்திருப்பவர்களாகவும் காணப்படும் இந்த இரண்டு வகுப்பார், அர்ப்பணிக்கப்பட்டவர்களில் காணப்படும் இரண்டு வகுப்பாராகிய சிறுமந்தையினரையும், திரள்கூட்டத்தாரையும் குறிக்கின்றவர்களாய் இருக்கின்றனர்; அதாவது முற்றிலும் ஜெயங்கொள்பவர்களையும், மிகுந்த உபத்திரவத்தின் வாயிலாக ஜெயங்கொள்பவர்களையும் குறிக்கின்றவர்களாய் இருக்கின்றனர். (ரோமர் 8:37; வெளிப்படுத்தல் 7:14). இந்த இரண்டு வகுப்பாரும்தான், ஆசாரிப்புக் கூடாரத்தின் நிழல்களில் இடம்பெறும் இரண்டு ஆடுகள் மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றனர்; இந்த இரண்டு ஆடுகளில் ஒன்று பலிச் செலுத்தப்படுவதற்கான கர்த்தருடைய ஆடு, மற்றொன்று போக்காடாய் போனது; ஆசாரிப்புக் கூடார நிழல்களில் இந்த ஆடுகளானது, சுவிசேஷ யுகம் முழுவதிலும், அதே சமயம், யுகத்தினுடைய முடிவிலுமான இந்த இரண்டு வகுப்பாருக்கும் அடையாளமாய் இருக்கின்றது; ஆனால் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் உவமையில் வரும் இரண்டு வகுப்பார், இந்த யுகத்தினுடைய முடிவாகிய, தற்காலத்திலுள்ள சபைக்கு மாத்திரம் அடையாளமாய் இருக்கின்றனர்.

இந்த உவமையைக் கர்த்தர் கொடுப்பதற்கு இரண்டு நோக்கங்கள் உண்டு; முதலாவதாக அப்போஸ்தலர்களும், இந்தச் சவிசேஷ யுகத்தினுடைய முழுச்சபையும் இராஜ்யத்தில் பங்கடைவதற்கு எப்போதும் ஆயத்தத்துடன் காணப்படத்தக்கதாக, வரவிருக்கின்ற இராஜா மற்றும் அவருடைய இராஜ்யத்திற்காக விழிப்புடனும், ஜாக்கிரதையுடனும், ஜெபத்துடனும், எதிர்ப்பார்ப்புடனும், ஆயத்தத்துடனும் காணப்பட வேண்டிய அவசியம் குறித்துப் பாடம் புகட்டுவதற்கு ஆகும். இரண்டாவதாக விசேஷமாக இக்காலத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் நமக்காக கொடுக்கப்பட்டுள்ளது; அதாவது இராஜ்யத்தை எதிர்ப்பார்ப்பதும், அதற்காக ஜெபம் பண்ணுவதும், பொதுவான விதத்தில் மணவாளனை எதிர்ப்பார்த்திருப்பதும் (மட்டும்) போதாது, இறுதித் தருணத்தில் நாம் ஏமாற்றம் அடைந்துப் போகாதபடியும், நாம் நம்மை ஞானமாய் ஆயத்தம் பண்ணிக்கொள்ளும்படியும், அத்தருணத்திற்கென நாம் மிகவும் விழிப்புள்ளவர்களாகவும், மிகவும் ஊக்கத்துடனும் காணப்பட வேண்டுமென்பதை நாம் காணத்தக்கதாக, இவ்வுவமை நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

உவமையில் இரண்டாம் அட்வெண்டிஸ்டுகள்

(இரண்டாம் வருகையினை எதிர்பார்ப்பவர்கள்)

“”உவமையின் காட்சியின்படியே, கடந்த நூற்றாண்டில் அனைத்துக் கிறிஸ்தவப் பிரிவுகளிலுள்ள கர்த்தருடைய ஜனங்களின் மத்தியில், ஓர் இயக்கம் ஆரம்பித்து, பின்னர் இரண்டாம் வருகை இயக்கம் என்று அழைக்கப்படும் அளவுக்கு உச்சநிலையை எட்டினது. உலகமெங்குமுள்ள கிறிஸ்தவர்கள் அனைவரின் மத்தியிலுமுள்ள தூய்மையானவர்களாகிய கன்னிகைகள், மணவாளனுடைய வருகைச் சமீபித்துள்ளது என்ற எண்ணத்தினால் விழித்தெழுந்துள்ளனர்; மற்றும் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தல் எனும், இரண்டாம் வருகை தொடர்புடைய வேதாகமத்தின் மீதான பொதுவான ஆராய்ச்சி நடைப்பெற்றது. உவமையின்படியே, அந்த அருமையான ஜனங்களுடைய எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடைந்தது. “”மணவாளன் வர தாமதித்தார்;” மேலும் அவர் தாமதித்தபோது அவர்களனைவரும், “”நித்திரை மயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.” விளக்குகள் மீதான கவனம் புறக்கணிக்கப்பட்டது, பின்னர் இவ்வகுப்பார்மேல் ஒரு மந்தத்தன்மை ஏற்பட்டது. கன்னிகைகளில் அநேகர் தூங்கிபோனது மாத்திரமல்லாமல், அநேகர் மிகவும் விநோதமான மற்றும் பகுத்தறிவுக்குட்படாத, கற்பனையான காரியங்களைக் கனவு கண்டார்கள். இப்படியாகப் போய்க்கொண்டிருக்கும்போது, “”இதோ மணவாளன்!” என்று நடுராத்திரியில் அறிவிக்கப்பட்டது.

இந்த ஒரு சத்தமானது கி.பி. 1874 முதல் போய்க்கொண்டே இருக்கின்றது; மேலும் இதற்குச் செவிச்சாய்த்து, கன்னிகை வகுப்பார் அனைவரும் விழித்தெழுந்து கொண்டிருக்கின்றனர்; மீண்டும் புதிதாய் தெய்வீக வார்த்தைகளின் மீதான ஆராய்ச்சி நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்றது. தீவெட்டிகள் ஆயத்தப்படுத்தப்படுகின்றன. இந்த அறிவிப்பை/சத்தத்தைக் கேட்டவர்களில் சிலர், இது தவறான சத்தம்/அறிவிப்பு என்று வலியுறுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் அதிகம் அரைத்தூக்கத்திற்குள்ளாகிவிட்டதினாலும், இவர்கள் இவ்வுலகத்தின் கவலைகளினால் பாரமடைந்து விட்டதினாலும், இவர்கள் நன்கு சௌகரியமாய்க் காணப்படுவதினாலும், இவர்கள் மணவாளனை அன்புகூர்ந்தபோதிலும், அனைத்துக் காரியங்களைக் காட்டிலும் அவரால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு ஆயத்தமாய் இருப்பதை விரும்பினபோதிலும், இவர்கள் ஆயத்தமற்றவர்களாகவும், வேத ஆராய்ச்சி செய்ய மறுப்பவர்களாகவும், பின்வருமாறு தங்களுக்குள்ளாக வெறுமனே முறுமுறுக்கிறவர்களாகக் காணப்படுகின்றனர்; அதாவது, “”ஆம் நாங்கள் மணவாளனை அன்புகூருகிறோம்; அவரைச் சந்திக்க நிச்சயமாய் நாங்கள் ஆயத்தமாய் இருப்போம்; நாங்கள் நீண்டகாலமாய் அவருக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றோம்; [R3868 : page 314] ஆனால் அவர் இன்னமும் வரவில்லை, இன்னமும் வரவில்லை. ஆத்துமாவே அமைதலாயிரு; யாருக்கும் எதுவும் தெரியாது; மணவாளன் வந்திருக்கிறார் என்று அறிவிக்கின்றவர்கள் நிச்சயமாய் தவறாகவே சொல்கின்றார்கள்” எனத் தங்களுக்குள்ளாக முறுமுறுக்கிறவர்களாக மாத்திரமே காணப்படுகின்றனர்.

நாட்கள், வாரங்கள் மற்றும் வருடங்கள் தாண்டிச் சென்றுக்கொண்டிருக்கையில், அநேக, அநேக கன்னிகைகள் விழித்தெழுந்துக்கொண்டிருக்கின்றனர்; மேலும் இப்படியாக இவர்கள் விழித்தெழும்பும் போது, வேத ஆராய்ச்சியாகிய, தீவட்டிகளை ஆயத்தப்படுத்துதலும் ஆரம்பமாகுகின்றது; இப்படி ஆராயச்சி நடந்துக் கொண்டிருக்கையில், தங்களுடைய கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பதற்கு, தாங்கள் ஆயத்தமாய் இருக்கின்றதாக எண்ணிக்கொண்டிருந்த சிலர், பரிசுத்த ஆவியை அடையாளப்படுத்துகின்றதுமான மிக முக்கியமான எண்ணெயில், தாங்கள் குறைவுப்பட்டிருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர்; இந்தப் பரிசுத்த ஆவியிலிருந்தே இவர்களுக்கான வெளிச்சம்/பிரகாசிப்பித்தல் வருகின்றது. மணவாளனுடைய தாமதமானது, அவரோடு கலியாணத்துக்கு வரும்படிக்கு அழைக்கப்பட்டிருந்த கன்னிகைகளுக்குப் பரீட்சையாக அமைந்தது; இந்தத் தாமதமானது யார் புத்தியுள்ளவர்கள் என்றும், யார் புத்தியில்லாதவர்கள் என்றும் நிரூபிப்பதற்குரிய பரீட்சையாக அமைந்தது. கன்னிகைகளில் ஒருவராக, எந்தச் சபை காலப்பகுதியிலும் கருதப்படுவதற்குக் குறிப்பிட்டளவு எண்ணெய், ஒரு குறிப்பிட்டளவு அர்ப்பணிப்பு, ஒரு குறிப்பிட்டளவு பரிசுத்த ஆவி அவசியமாய் இருந்தது; ஆனால் இவைகளனைத்தும் மணவாளன் உண்மையில் பிரசன்னமாய்க்காணப்படும் இப்பொழுது மற்றும் நிஜமான பவனி நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இப்பொழுது, அதிகளவில் அவசியப்படுகின்றது; இப்பொழுது அதிக வெளிச்சம், அதிக சத்தியத்திற்கான வேளையாக இருக்கின்றது; மற்றும் இவை, கலியாணத்துக்குப் போகிறவர்களால் பெற்றுக்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

கன்னிகைகள், இக்காலத்தில் காணப்படும் கர்த்தருடைய ஜனங்களுக்குப் பொதுவாக அடையாளமாய் இருக்கின்றனர்; ஆகவே இவர்கள் மத்தியில் 1844-ஆம் வருடத்தின் இயக்கத்துடன் தொடர்பு இல்லாதவர்கள் கூடக் காணப்படுகின்றனர். எனினும் 1844-ஆம் வருடத்திலிருந்த அதே ஆவிதான், இன்றும் காணப்படுகின்றது; அதாவது மணவாளன் மீது அன்பும், அவருடைய இராஜ்யத்தில் அவருடைய பிரசன்னத்திற்கான எதிர்ப்பார்ப்பும், கதவு அடைக்கப்படுவதற்கு முன்னதாக, அவரோடுகூட உள்ளே பிரவேசிக்கத்தக்கதாக ஆயத்தம்படுவதற்கு எல்லாவற்றையும்விட விரும்புவதும், 1844-ஆம் வருடத்தில் காணப்பட்டதுபோல், இன்றும் காணப்படுகின்றது. கதவு அடைப்படுவதற்கு முன்னதாக, மணவாளனுடன் உள்ளே பிரவேசிக்கத்தக்கதாக பவனியில் நிற்கும் கன்னிகைகளாக இருப்பதற்கு உதவும், வெளிச்சத்தை அருளுமளவுக்குப் போதுமான எண்ணெயை, வெளிச்சத்தை, பரிசுத்த ஆவியைக்கொண்டிருப்பவர்கள் யார்? என்ற கேள்வி எழும்புகின்றது. இது ஒரு முக்கியமான கேள்வியாகும்; மற்றும் இது தனது தீவட்டியை எரிய பெற்றிருக்கும் ஒவ்வொருவரும் அறிய வேண்டியதாகும். நாம் போதுமானளவுக்கு கர்த்தருடைய ஆவியாகிய சாந்தத்தின், பொறுமையின், நீடிய பொறுமையின், சகோதர சிநேகத்தின், அன்பின் ஆவியைக் கொண்டிருக்கின்றோமா என்பதை நாம் பார்த்துக்கொள்வது எவ்வளவு அவசியமானதாய் இருக்கின்றது. இவைகளை நாம் போதுமானளவில் கொண்டிருக்கவில்லையெனில், நம்முடைய தீவட்டிகள் அணைந்து போய்விடும் என்பது உறுதியே.

உங்கள் எண்ணெயில் கொஞ்சம் கொடுங்கள்

தங்களுடைய வெளிச்சத்தையும், மணவாளனிடத்திலான தங்களது தயவைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், மற்றுமாக கலியாணத்திற்குள் போகத்தக்கதான நிலையை அடைவதற்கும், இந்தப் பரிசுத்த ஆவியை, இந்த அர்ப்பணிப்பின் ஆவியைப் புத்தியுள்ள கன்னிகைகள் அனைவரும் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதை விவரிப்பதற்காகவே, உவமையில் புத்தியில்லாத கன்னிகைகள், புத்தியுள்ளவர்களுடைய எண்ணெயில் கொஞ்சத்தைக் கேட்பதாகக் கர்த்தர் காண்பித்து, மற்றவர்களிடமிந்து இப்படியாக எண்ணெய் பெற்றுக்கொள்வது என்பது முடியாத காரியம் என்பதைச் சுட்டிக்காண்பிக்கின்றார்; கேட்பதினால் பரிசுத்த ஆவியின் கனிகளும், வரங்களும் பெற்றுக்கொள்ளப்பட முடியாது. இவைகள் அனுபவமெனும் கடையில் வாங்கப்பட வேண்டியவைகளாக இருக்கின்றன. இவைகள் படிப்படியாக வளரக்கூடியவைகளாகவும், கவனமான/ஜாக்கிரதையுடன் கூடிய வார்த்தைகளினாலும், எண்ணங்களினாலும், கிரியைகளினாலும் பெற்றுக்கொள்ளப்படக் கூடியவைகளாக இருக்கின்றன. ஆவியின் கனிகள் அடைவதற்கு மிகவும் கஷ்டமானவைகள் என்பதினாலும், சுயத்தை வெறுத்தல் எனும் விலையினால் இந்த ஆவியின் கனிகள் அடையப்படுவதினாலும், இவைகள் கர்த்தருடைய பார்வையில் விலையேறப் பெற்றவைகளாக இருக்கின்றன.

எவராலும் இந்தப் பரிசுத்த ஆவியைத் திரளாய்ப் பெற்றுக்கொள்ள முடியாது, மற்றும் தன்னுடைய தேவைக்குப்போக, மற்றவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாக அதிக திரளாய் எவரும் இந்தப் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள முடியாது. தம்மோடு கூடக் கலியாணத்திற்கு வர அழைக்கப்பட்டவர்கள், வஸ்திரம், தீவட்டிகளால் மாத்திரமல்லாமல், எண்ணெயையும் பெற்றுக்கொள்ளத்தக்கதாக, மணவாளன் முன்கூட்டியே அநேகம் ஏற்பாடுகளைப் பண்ணிவிட்டார்; ஒருவேளை எவரேனும் எண்ணெய் பெற்றுக்கொள்வதில் அஜாக்கிரதையுடன் காணப்பட்டால், அவர்கள் இப்படியாக, கதவு பூட்டப்படுவதற்கு முன்னதாகவே, மணவாளனுடன் பிரவேசிக்கும் வகுப்பாரில் காணப்படுவதற்கான தங்களுடைய தகுதியற்ற நிலையைக் காண்பிக்கிறவர்களாக இருக்கின்றார்கள். இதுவே இந்த உவமையின் மூலமான நம்முடைய கர்த்தருடைய போதனையின் சாரமாக இருக்கின்றது; அதாவது, இராஜ்யத்திற்குள் பிரவேசிக்க வேண்டுமென்றும், அதன் மகிமைகளில் பங்கடைய வேண்டுமென்றும் எதிர்ப்பார்ப்போடு இருப்பவர்கள், முன்கூட்டியே ஆயத்தமாய்க் காணப்பட வேண்டுமென்பதே ஆகும். ஒருவேளை அவர்கள் கதவு அடைக்கப்படும் தருணம் வரையிலும் ஆயத்தம் அடைவதில் தாமதித்துக்கொண்டிருப்பார்களானால், அவர்கள் எவ்வளவுதான் விருப்பம் கொண்டவர்களாகவும், எவ்வளவுதான் வாஞ்சைக் கொண்டவர்களாகவும் இருந்தாலுங்கூட (முடிவில்) அவர்களால் ஆயத்தம் அடையமுடியாது; ஏனெனில், ஆயத்தம் அடைவதற்கு நேரமும், பொறுமையும், கவனமும் அவசியமாய் இருக்கின்றது.

உண்மையான கிறிஸ்தவர்களாகவும், கன்னிகைகளாகவும், தூய்மையான நோக்கம் மற்றும் இருதயம் கொண்டவர்களாகவும், பரலோக மணவாளன்மீது விருப்பம் கொண்டவர்களாகவும், கலியாண விருந்தில் பங்கெடுக்க விருப்பம் கொண்டவர்களாகவும் இருப்பதற்கு சாட்சிப் பகர்ந்து, அதே வேளையில் இவ்விஷயங்களில் குறைவான வெளிச்சம் கொண்டுள்ளவர்களாகிய சிலரை நாம் அடிக்கடிச் சந்திக்கின்றோம். இவர்கள் சிலசமயம் நம்மிடம் பின்வருமாறு கூறுவதுண்டு; அதென்னவெனில், “”உங்கள் வெளிச்சத்தை எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள்; இவைகளையெல்லாம் நீங்கள் எப்படி அறிந்துக்கொண்டீர்கள் என்பதை எங்களுக்குச் சொல்லுங்கள்; மற்றவர்கள் தூங்கிக்கொண்டிருக்க, இவைகளைப்பற்றி நீங்கள் ஏன் இவ்வளவு உறுதியுடன் காணப்படுகின்றீர்கள்? நாங்கள் போதுமானளவுக்கு எழுந்திருக்கின்றோம், ஆனால் எங்கள் தீவட்டிகள் வெளிச்சம் கொடுப்பதில்லை” என்பதாகும். இவ்விஷயங்களில் இவர்களுக்கு இன்னொருவர்/பதிலாள் வாயிலாக விசுவாசம் கொடுப்பது சாத்தியமற்றது என்று நாம் பதிலளிக்கின்றோம்; வெளிச்சத்தை அடைவதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது; அது பரிசுத்த ஆவியினுடைய வழிநடத்துதல் கீழாக, தெய்வீக வார்த்தைகளைப் பொறுமையுடன், தொடர்ந்து/சோர்ந்து போகாமல் ஆராய்வதன் மூலமேயாகும். இந்த எண்ணெயையும், அதன் வெளிச்சத்தையும் பெற்றுக்கொள்வதற்கு, இவர்கள் நற்கிரியைச் செய்வதிலும், வேத ஆராய்ச்சிகளிலும், ஆவியின் கனிகள் மற்றும் கிருபைகளை வளர்த்துவதிலும் சோர்ந்துப் போகாமல் காணப்பட வேண்டுமென நாம் இவர்களுக்கு அறிவிக்கின்றோம். இவர்கள் தங்கள் ஆவிக்குரிய வளர்ச்சிக்கும், தேவ வார்த்தைகளின் ஆராய்ச்சிக்கும் நேரம் கொடுக்க முடியாதளவுக்கு, இவ்வுலகத்தின் கவலைகளினாலும், ஐசுவரியத்தின் மயக்கத்தினாலும், ஜீவனத்தின் பெருமையினாலும் அமிழ்த்தப்பட்டுள்ளனர் என்று மனவருத்தம் தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்டவர்களினிமித்தம் நமக்கு வருத்தம் ஏற்படுகின்றது; நமக்கிருக்கும் எண்ணெய் மற்றும் நமது தீவட்டிகளின் தெளிவான வெளிச்சமாகிய ஆசீர்வாதங்களை, இவர்களும் அனுபவிக்க வேண்டுமென்றே நாம் விரும்புகின்றோம். எங்கு மற்றும் எப்படி எண்ணெய் மற்றும் வெளிச்சம் அடையப்பெறலாம் என்பதை இவர்களுக்குச் சொல்வதைக் காட்டிலும், வேறெதுவும் எங்களால் செய்ய இயலாது. மணவாளனுக்கு வந்தனம் தெரிவிக்கத்தக்கதாகவும், அவருடைய பிரசன்னம்/வந்திருத்தல் தொடர்புடைய நமது சந்தோஷத்தைத் தெரிவிக்கத்தக்கதாகவும், அவரோடு கூடக் கலியாணத்திற்குள் பிரவேசிப்பதற்கான நமது எதிர்ப்பார்ப்பைத் தெரிவிக்கத்தக்கதாகவும், நாம் நமது வெளிச்சத்தை உயர்த்திப் பிடித்துக்கொள்பவர்களாகவும், நமது தனிப்பட்ட விதமான ஆயத்தமாகுதலைத் தொடர்ந்து செய்து வருபவர்களாகவும் காணப்பட வேண்டும்.

கதவும் அடைக்கப்பட்டது

கி.பி. 1878 முதல், புத்தியுள்ள கன்னிகைகள் நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின்படி கலியாணத்திற்குள் பிரவேசித்துக்கொண்டு வருகின்றனர்; மற்றும் இன்னமும் புத்தியுள்ள கன்னிகைகள் திரையைக் கடந்து, ஒரு இமைப்பொழுதில் மறுரூபமடைந்துக்கொண்டு வருகின்றனர். (1 கொரிந்தியர் 15:51). சீக்கிரத்தில் முதலாம் உயிர்த்தெழுதல் நிறைவடைந்து, கடைசி அங்கத்தினர் [R3869 : page 314] மறுரூபமடைந்து தீரும்; பின் கதவு அடைக்கப்படும்; பின்னர் ஒருவரும் பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. இக்காரியங்களானது கர்த்தருடைய அருமையான ஜனங்களில் சிலர், எண்ணிக்கொண்டுள்ள பயங்கரமான காரியங்களைக் குறிப்பதாக இல்லை என்பதற்காக தேவனுக்கு நன்றி. கதவு அடைக்கப்படுவது என்பது, வெளியே இருக்கும் புத்தியில்லாத கன்னிகைகளும், உலகத்தாரும், நம்பிக்கையற்ற இரண்டாம் மரணத்திற்குப் போய்விடுவார்கள் என்பதைக்குறிக்கிறதாக இல்லை; மாறாக கதவு அடைக்கப்படுவது என்பது, இனி ஒருபோதும் திறக்கவே மாட்டாத, மாபெரும் பிரம்மாண்டமான வாய்ப்புகளின் நிறைவடைதலைக் குறிக்கின்றதாய் இருக்கும்; அதாவது இராஜ்ய வகுப்பாரின், மணவாட்டி வகுப்பாரின் நிறைவடைதலையும், கனம், மகிமை, அழியாமை மற்றும் கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரத்துவத்திற்கான இடுக்கமான வழி மூடப்படுவதையும் குறிக்கின்றதாகவே இருக்கின்றது.

புத்தியில்லாத கன்னிகைகள் போய், விலையேறப் பெற்ற எண்ணெயை வாங்கிக்கொண்டு வந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்திக்கொண்டு எரிய வைக்கின்றனர். ஆனால் இவர்கள் கலியாணத்திற்கு வர தாமதித்துவிடுகின்றனர்; ஆட்டுக்குட்டியானவரின் மனைவியாகிய மணவாட்டி ஆகுவதில் மிகவும் தாமதித்துவிடுகின்றனர். ஆகவேதான் இவர்கள் உவமையில் கதவைத் தட்டும்போது, மணவாளன் இவர்களிடம், “”மணவாட்டி வகுப்பாரில் உங்களை நான் அங்கத்தினராக அறியேன்; நீங்கள் உள்ளே வரக்கூடாது” என்று கூறுவதாகக் காணப்படுகின்றது. இவர்கள் [R3869 : page 315] கர்த்தருடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிப்பதற்குப் பதிலாக, கொஞ்சக் காலம், அப்போது உலகம் முழுவதும் நிலவும் மகா உபத்திரவக்காலத்தில் தங்கள் பங்கை அடையும்படி அனுமதிக்கப்படுகின்றனர்; அக்காலத்தில் புத்தியில்லாத கன்னிகைகளுக்கு மாத்திரமல்லாமல், பூமியின் குடிகள் அனைத்திற்கும் கூட அழுகையும், பற்கடிப்பும், துக்கமும், ஏமாற்றமும், மன வருத்தமும் பங்காகக் காணப்படும். சீக்கிரத்தில் வரவிருக்கின்ற ஆயிர வருட இராஜ்யத்தின் மகிமையான நிலைமைகளுக்காக, மனுக்குலத்தின் உலகத்தை உபத்திரவத்தின் மகா நாளானது, ஆயத்தப்படுத்தும் என்பதை அறிவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். நீதியின் சூரியனானது, ஆரோக்கியமுடைய அதன் செட்டைகளுடன் உதிக்கும்போது, “”திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள். அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள். ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும்;” “”சீயோனிலிருந்து (மகிமைப்படுத்தப்பட்ட இராஜ்யம், பரலோக இராஜ்யம்) வேதமும், எருசலேமிலிருந்து (பரலோக இராஜ்யத்தின், பூமிக்குரிய பிரதிநிதிகள்) கர்த்தரின் வசனமும் வெளிப்படும்.” (ஏசாயா 2:3; மல்கியா 4:2).

இந்தப் புத்தியில்லாத கன்னிகைகள், இராஜ்யத்தின் ஆசீர்வாதங்களிலிருந்து தள்ளப்படுவது மாத்திரமல்லாமல், இவர்கள் எண்ணெயாகிய பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டு வந்த பிற்பாடும், நித்தியமான சித்திரவதைக்குள் அனுப்பப்படுவார்களெனும் கருத்தானது எவ்வளவு முரண்பாடாக உள்ளது! எவ்வளவு நியாயமற்றதாய் உள்ளது! எவ்வளவு முன்னுக்குப் பின் முரணானதாக உள்ளது! இந்த உவமையனாது தெய்வீகக் குணலட்சணத்திற்கும், திட்டத்திற்கும் / ஏற்பாட்டிற்கும் எவ்வளவு இசைவானதாய்க் காணப்படுகின்றது. நாம் புத்தியில்லாத கன்னிகைகள் மீது அனுதாபம் கொள்கின்றோம்; நாம் இவர்களைப் புகழ முடியாது, ஆனால் இவர்களைக் கடிந்துக்கொள்ள வேண்டும். இவர்கள் திரள்கூட்டத்தினராக, தங்கள் வஸ்திரங்களை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தில் கழுவி, வெண்மையாக்கிக்கொண்டு, கர்த்தர் மற்றும் மணவாட்டியினுடைய முன்னிலையில் காணப்படுவார்கள். வெளிப்படுத்தல் 7 மற்றும் சங்கீதம் 45-ஆம் அதிகாரங்களில் குறிப்பிட்டுள்ளதுபோல், கன்னிகைகளாக, மணவாட்டியினுடைய தோழிகளாகக் காணப்படுவார்கள்; சிங்காசனத்திற்கு முன்னதாக ஊழியக்காரர்களாய்க் காணப்படுவார்கள்; ஒருவேளை இவர்கள் தற்காலத்தில் சரியான அன்பும், வைராக்கியமும், அறிவும் கொண்டிருப்பார்களானால், மணவாட்டி வகுப்பின் அங்கத்தினர்களாக, சிங்காசனத்தில் காணப்பட்டிருந்திருப்பார்கள்.

நாளையாவது நாழிகையையாவது அறியாதிருக்கிறபடியால்

“”மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்” (மத்தேயு 25:13) என்று கூறி நமது கர்த்தர் உவமையை முடிக்கின்றார். பழைய மூல பிரதிகளில், “”மனுஷகுமாரன் வரும்” என்ற வார்த்தைகள் காணப்படுவதில்லை. எப்படியாயினும் கருத்து ஒன்றுபோலவே காணப்படுகின்றது. “”இந்த உவமை நிறைவேறும் நாளையோ, நாழிகையையோ அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள்.” விழித்திருத்தல் என்பது, சுவிசேஷ யுகம் முழுவதிலுமுள்ள கர்த்தருடைய ஜனங்களுக்கு நன்மையாகவே இருந்துள்ளது; மற்றும் இது தற்காலத்திலுள்ள புத்தியுள்ள கன்னிகை வகுப்பாருக்கு இன்னும் அதிக நன்மைக்கு ஏதுவாய்க் காணப்படுகின்றது, ஏனெனில் விழித்திருத்தலானது, இவர்களுக்கு, இவர்களுடைய சூழ்நிலைகளையும், நிலைமைகளையும் விவரிக்கின்றதாய் இருக்கின்றது. இந்த உவமையில் கூறப்பட்டுள்ள விழிப்பாய் இருக்கும் மனநிலைமையில், புத்தியுள்ள கன்னிகை வகுப்பார் அனைவரும் காணப்பட வேண்டும்; மணவாளன் வந்துகொண்டிருக்கின்றார் என்ற உண்மைப் பற்றின அறிவு இவர்களுக்குக் காணப்பட வேண்டும்; இவர்களிடம் தீவட்டிகளும், நிரம்ப எண்ணெயும் காணப்பட வேண்டும். இப்படியாக இந்த ஆயத்தமான நிலைமையில் காணப்படுபவர்கள், “”இதோ மணவாளன் காணப்படுகின்றார்/பிரசன்னமாயுள்ளார்” என்று கடந்துப் போய்க்கொண்டிருக்கும் செய்தியைக் கேட்கும்போது அச்சமோ, அதிர்ச்சியோ அடையமாட்டார்கள். நாம் மனுஷகுமாரனுடைய பிரசன்னத்தில் (parousia) வாழ்ந்துக்கொண்டு வருகின்றோம்; புத்தியுள்ள கன்னிகைகள் ஏற்கெனவே கலியாணத்திற்குள் பிரவேசித்துக்கொண்டிருக்கின்றனர்; சபைக்கான முழுமையான எண்ணிக்கைச் சீக்கிரத்தில் நிறைவடையும், கதவும் அடைக்கப்படும். இப்படியான விழிப்பான இருதய நிலைமையில் இருப்பவர்களும், கர்த்தருடைய ஆவியை முழுமையாய்த் தங்கள் இருதயங்களில் பெற்றிருப்பவர்களும், மணவாளன் காணப்படுகின்றார்/வந்திருக்கின்றார் என்ற முதலாம் தகவலிலேயே/அறிவிப்பிலேயே மிகவும் விரைவாக ஈர்க்கப்படுவார்கள். இவர்கள் தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தும்போது, அதாவது வேதவாக்கியங்களை ஆராயும்போது, இந்த அறிவிப்பினுடைய உண்மையை உடனடியாக உணர்ந்துக்கொண்டு, விரைவாக (தங்களை) ஆயத்தம் பண்ணிக்கொண்டு, புத்தியுள்ள கன்னிகைகள் மத்தியில் நிற்பார்கள். இவ்விஷயம் தொடர்புடைய சத்தியமானது, இந்த அறிவிப்பானது ஒரு பரீட்சையாக அமைந்து, கர்த்தருடைய கன்னிகைகள் என்று அறிக்கைப் பண்ணிக்கொண்டவர்களில், எவர்களுடைய பாத்திரத்தில் எண்ணெய் இருக்கின்றது என்றும், தாழ்மையின், பொறுமையின், அன்பின், சரியான ஆவி இருக்கின்றது என்றும், மணவாளனுக்கடுத்த காரியங்களில் ஈடுபாடும், அக்கறையும் இருக்கின்றது என்றும் நிரூபிக்கின்றதாய் விளங்கும். இப்படிப்பட்டவர்கள் மாத்திரமே மணவாளனினால் விரும்பப்படுகின்றனர் அல்லது உள்ளே பிரவேசிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இக்கண்ணோட்டத்தின்படிப் பார்க்கையில், தங்காலத்தின் நமது வேலையானது, மணவாளனுடைய வந்திருத்தலை பறைசாற்றுவது/பிரகடனப்படுத்துவது மாத்திரமில்லாமல், பாத்திரத்தில் எண்ணெய் கொண்டிருப்பவர்கள் தங்கள் தீவட்டிகளை ஆயத்தம் பண்ணுவதற்கும், நாம் உதவ வேண்டியவர்களாகவும் இருக்கின்றோம். எண்ணெயைப் போய் வாங்கிகொள்வதற்கு இதுவரை காலம் இருக்கிறது என்றாலும், இனிச் சீக்கிரத்தில் அதற்குக் காலம் இராமல் போகும்; ஆகவே, கர்த்தருடைய ஆவியாகிய எண்ணெயைக்கொண்டிருந்தும், இன்னமும் அரைதூக்கத்தில் இருப்பவர்களுக்கே நமது விசேஷித்த அக்கறை காணப்பட வேண்டும்; மேலும் அன்புடனும், பொறுமையுடனும், விடா முயற்சியுடனும் அவருடைய பிரசன்னத்தின் அறிவிப்பானது, இவர்களது கவனத்திற்குக்கொண்டு வரப்பட வேண்டும்.

மணவாளனுடைய வந்திருத்தல் அறிவிக்கப்படும் வேளை வரும்போது, அதைக் கன்னிகைகள் அறியாமல் இருப்பார்கள் என்பது உவமையின் கருத்தல்ல. அவருடைய பிரசன்னத்தில் உறுதியில்லாமல் அவர்களால் எப்படித் தங்கள் தீவட்டிகளை ஆயத்தம் பண்ணிக்கொண்டு அவரைச் சந்திப்பதற்கும், அவரோடு செல்வதற்குமெனப் புறப்பட்டுப்போக முடியும்? பிரசன்னமாகுவதற்கு முன்னான காலப்பகுதித் தொடர்புடைய விஷயத்திலேயே கர்த்தர் விழித்திருக்கச் சொன்னார். மணவாளன் வந்திருப்பதை உணர்ந்துக்கொண்டவர்களும், தங்களுடைய தீவட்டிகளை ஆயத்தம் பண்ணிக்கொண்டவர்களும், அவருக்கான ஊர்வலத்தில் சேர்ந்துக்கொண்டவர்களுமாகிய கன்னிகைகள், அவருடைய வருகைக்காக (எப்போது வருவார் என்பதற்காக) விழித்திருக்கவில்லை, மாறாக அவருடைய பிரசன்னத்தை அறிந்தவர்களாக இருக்கின்றனர், ஏனெனில் அந்த நாளும், நாழிகையும் வந்தபோது, அவர்கள் ஆயத்தத்துடனும், எண்ணெயுடனும் காணப்பட்டிருந்தார்கள்.

நமக்கு ஏற்கெனவே உரியதாக இருக்கும் ஆசீர்வாதங்களுக்காகவும், இரக்கங்களுக்காகவும், நாம் தேவனுக்குத் துதிச் செலுத்திக்கொண்டு, நமது தீவட்டிகளுடைய வெளிச்சத்திலும், மகிமையான கலியாண விருந்திற்கான எதிர்ப்பார்ப்பிலும், பின்னர் மணவாளனோடு கூடப் பூமியின் குடிகளை ஆசீர்வதிக்கும் மகிமையான வேலைபற்றின எதிர்ப்பார்ப்பிலும், களிக்கூர்ந்து, நாம் உண்மையுடன் தொடர்ந்து முன்னேறுவோமாக. இந்த அறிவை உடையவன், இந்த அறிவினிமித்தமாக உலகத்திலிருந்தும், அதன் ஆவியிலிருந்தும் அதிகமதிகமாய்ப் பிரிக்கப்பட்டு, அதிகமதிகமாய் மணவாளனுடைய சாயலுக்குத்தானே, மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுவான்.