R2706 (page 298)
லூக்கா 15:1-10
“”அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” – (வசனம் 10).
மனுக்குலம் தொடர்புடைய விஷயத்தில் பயன்படுத்தப்படும் ’காணாமல் போனது” என்ற வார்த்தைக்கு, நவநாகரிக இறையியலால் வழங்கப்படும் பொதுவான அர்த்தத்திலிருந்து, முற்றும் ஒரு வேறுபட்ட அர்த்தத்தை வேதாகமம் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. நவநாகரிக இறையியலோ, “”காணாமற்போனது” எனும் வார்த்தையை, எந்த வாய்ப்புமற்ற, தேவனால் புறக்கணிக்கப்பட்டவர்களுடன் தொடர்புபடுத்திப் பயன்படுத்துகின்றதாய் இருக்கின்றது; இன்னுமாக பாரம்பரிய நம்பிக்கையானது, இவ்வார்த்தையை வாய்ப்பற்றவர்களுக்கும், முடிவற்ற நித்திய சித்திரவதைக்குப் பாத்திரமானவர்களுக்கும் தொடர்புடையதாய்ப் பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் வேதவாக்கியங்களுடைய கண்ணோட்டத்தின்படி பார்க்கப்படுகையில் “”காணாமற்போன”எனும் வார்த்தையானது, முற்றிலும் மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்களுக்கு எதிர்மாறான நிலையில் பயன்படுத்தப்பட்டுள்ளதை, இப்பாடத்தில் நாம் பார்க்கலாம்.
வார்த்தையிலும், நடத்தையிலும் பரிசுத்தராயிருந்த நம்முடைய கர்த்தர், அவருடைய நாட்களில் பரிசுத்தமாய்க் காணப்பட்ட ஜனங்களை இயல்பாகவே தம்மிடத்தில் ஈர்க்கின்றவராய்க் காணப்பட்டார்; இந்தப் பரிசுத்தமான ஜனங்கள் பரிசேயர்களாய் இருந்தார்கள்; மேலும் இவர்கள் மத்தியில் காணப்பட்ட அநேகருடைய பரிசுத்தமானது, மாய்மாலமான விதத்திலேயே இருந்தது; அதாவது இவர்கள் இருதயத்தில் பரிசுத்தத்தையும், தூய்மையையும் பெற்றிருப்பதற்குப் பதிலாக, வெளிப்புறமாக பரிசுத்தமாய்க் காட்சியளிப்பதிலேயே விருப்பம் உள்ளவர்களாய் இருந்தனர். கடந்த பாடத்தில், நமது கர்த்தர் எப்படி முன்னிலையான பரிசேயர்களுடன் கூட, விருந்தாளியாக சென்று, எப்படி அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கான வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார் என்று பார்த்தோம். ஆனால் தங்களையே யூதர்கள் மத்தியில் பரிசுத்தமான வகுப்பார் என்று எண்ணிக்கொள்வதற்குப் பழகிப்போன பரிசேயர்கள் படிப்படியாக, ஜனங்கள் மத்தியில் கீழ்மட்டத்தில் காணப்பட்டவர்களிடமிருந்து, தங்களையே பிரித்துக் கொண்டவர்களானார்கள்; ஆகவே நமது கர்த்தருடைய நாட்களில், இந்த இரண்டு வகுப்பாரும் கலந்துக் கொள்வதில்லை/பழகுவதில்லை; பரிசேயர்கள் மற்றவர்களைச் சகோதரர் என்றும், தெய்வீக வாக்குத்தத்தங்களில் உடன்சுதந்திரர்கள் என்றும் ஒத்துக்கொள்ள மறுப்பவர்களாய் இருந்தார்கள். ஆகையால் யூதர்களின் கீழ்மட்ட ஜனங்கள், இயேசுவினுடைய போதனைகளிடத்திற்கு ஆர்வம் கொண்டுள்ளனர் என்றும், இயேசு இவர்களிடமிருந்து தம்மை விலக்கிக்கொள்ளவில்லை என்றும், இவர்களுடன் கலந்துப் பழகுபவராகவும் இருந்து, மற்றவர்களுக்குப் போதிப்பது போன்று இயேசு இவர்களுக்கும் போதிக்கின்றார் என்றும் பரிசேயர்கள் கண்டபோது, அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். ஒருவேளை இயேசு தம்மை ஒரு பரிசேயன் போல் காண்பிக்கவும், தங்களுடைய ஆச்சாரங்களுக்கு இசையவும் விரும்பினாரானால், இயேசுவைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வதற்கு, இந்தப் பரிசேயர்கள் மகிழ்ச்சியாய் இருந்திருப்பார்கள். இந்தப் பரிசேயர்களுடைய தவறான கருத்தைச் சரிச் செய்வதற்கே, இயேசு ஐந்து உவமைகளைக் கொடுத்தார்; அவைகளில் இரண்டைத்தான் நாம் இப்பாடத்தில் பார்க்கவிருக்கின்றோம்.
உவமையில் உண்மையான மேய்ப்பன், தன்னுடைய ஆடுகளை நேசித்தவனாகவும், அவைகளுக்காகப் பராமரிக்கின்றவனாகவும் இருந்து, தன்னுடைய 99 ஆடுகளையும் (பாலைவனத்தில் அல்லாமல்) காட்டில் உடன் மேய்ப்பர்களுடைய நல்ல பராமரிப்பின் கீழ் விட்டுவிட்டு, காணாமற்போன ஓர் ஆட்டைக் கண்டுபிடிக்கும் மட்டும் தேடிச் செல்லுகிற காரியமானது, தெய்வீகப் பராமரிப்புப் பற்றின விளக்கமாக இருக்கின்றது. இதற்கும் மேலாக, வேறு எந்தப் பாடமும் ஆண்டவருடைய இந்த வார்த்தைகள் மூலமாய்த் தெரிவிக்கப்படவில்லை என்று நாம் எண்ணுகின்றோம்; ஆனால் ஒருவேளை இந்த உவமையானது, இரட்சிப்பின் தெய்வீகத் திட்டத்தினுடைய அம்சங்களை விவரிக்கின்றதற்கும், கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று நாம் எண்ணுவோமானால், காணாமற்போன அந்த ஓர் ஆடு ஆதாமையும், மனித குடும்பத்தையும் குறிக்கின்றதாகவும், மற்றும் காணாமற்போகாத 99 ஆடுகளும் பாவத்தில் திரியாமலும், தேவனிடமிருந்து தொலைதூரத்திற்குப் போகாமலும், அவருடைய மேற்பார்வை மற்றும் பராமரிப்பின் கீழ் எப்போதும் காணப்பட்டவர்களாகவும் இருக்கும் தேவதூதர்களையும், மற்ற ஆவியின் ஜீவிகளையும் குறிக்க வேண்டும் என்றே நாம் அனுமானிக்க வேண்டியுள்ளது. இக்கண்ணோட்டத்தின்படி, காணாமற்போன ஆட்டைத் தேடும்படிக்கு, மேய்ப்பன் செல்வது என்பது, மனுக்குலத்தின் நன்மைக்காக, உலக தோற்றத்திற்கு முன்பாக பிதாவுடன் இருந்த தம்முடைய மகிமையை இயேசு துறந்து, மனித நிலைமைக்கு வருவதை அடையாளப்படுத்துகின்றதாய் இருக்கின்றது.
இதற்கும் மேலாக வேறு ஏதாகிலும் காரியத்திற்கு, இவ்வுமையைப் பொருத்திப் பார்ப்பது என்பது பொருந்தாதாகவே இருக்கும்; உதாரணத்திற்குக் காணாமற்போன ஆடு என்பது, மனுக்குலத்தில் மிகவும் சீரழிந்துப் போனவர்களைக் குறிக்கின்றது என்றும், 99 ஆடுகளும் பரிசுத்தமான ஒரு வகுப்பாரைக் குறிக்கின்றது என்றும் அனுமானிப்பது, இரண்டு விதங்களில் பொருந்தாதக் காரியமாக இருக்கும்; அவை (1) நீதிமான் ஒருவராகிலும் இல்லை என்று வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றன, மேலும் தீர்க்கத்தரிசி குறிப்பிட்டுள்ளது போன்று, “”நாமெல்லாரும் ஆடுகளைப் போல் வழிதப்பித் திரிகின்றவர்களாய் இருக்கின்றோம் (ரோமர் 3:10; ஏசாயா 53:6). (2) 99 ஆடுகள், பெரும்பகுதியினராக இருப்பவர்களைக் குறிக்கும் என்று கூறுவதும் பொருந்தாது, காரணம் சிறுபான்மையானவர்களே, அதாவது பூமியின் 600,000000 ஜனத்தொகையில், 100000 பேரில் ஒருவரும், 10,000 பேரில் ஒருவரும்தான் இன்று மாபெரும் மேய்ப்பனாகிய தேவனுடன் ஓரளவுக்கு ஐக்கியத்தில் இருக்கின்றனர் என்பது எவராலும் மறுக்கப்பட முடியாத ஒன்றாகும்.
ஓர் ஆடு ஆதாமுக்குள் விழுந்துபோனதும், நீதியின் பாதையினின்று தொலைதூரத்திற்கு அலைந்துத் திரிந்ததுமான ஒட்டுமொத்த மனுக்குலத்தை அடையாளப்படுத்துகின்றது என்றும், இயேசு, மாபெரும் மேய்ப்பனாகிய பிதாவினுடைய நல்ல மேய்ப்பனாக இருக்கின்றார் என்றுமுள்ள கண்ணோட்டத்தின்படி பார்க்கையில், காணாமற்போன ஆட்டைத் தேடிச்செல்வதற்கான வேலை, நமது கர்த்தருடைய முதலாம் வருகையின் போதே ஆரம்பமாகியுள்ளது என்று காண்கின்றோம். ஆட்டை மீட்கும் விஷயத்திலான நமது இரட்சகருடைய விலை கொடுக்கப்பட்டதாகிய ஆரம்பத்தை நாம் பார்க்கின்றோம், ஆனால் ஆடு மீட்கப்பட்டதை நம்மால் இன்னமும் பார்க்க முடியவில்லை, ஏனெனில் எந்த விதத்திலும் மனுக்குலமானது, தேவனுடன் இசைவிற்குள் கொண்டு வரப்படவில்லை. ஆனால் இயேசுவின் தலைமையின் கீழ் நல்ல மேய்ப்பனுடைய அங்கத்தினர்களாக, அதாவது கிறிஸ்துவினுடைய சரீரமாக இருப்பதற்கு, தேவன் மனுக்குலத்திலிருந்து சபையை இந்தச் சுவிசேஷ யுகத்தில் தெரிந்தெடுத்துக் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது; இன்னுமாக மனுக்குலமாகிய காணாமற்போன ஆட்டை, ஆயிர வருட யுகத்தின்போது, தேடுவதற்குரிய இந்த வேலையில் ஈடுபடுவதற்கு ஆயத்தப்படுத்தப்படும் விஷயத்தில், சரீரத்தினுடைய ஒவ்வொரு அங்கமும் ஏதேனும் விலை கொடுக்க (இழக்க) வேண்டியுள்ளதை நாம் பார்க்கின்றோம்.
ஆடானது எந்த இடத்தில் காணப்படுகின்றது என்ற விதத்தில் ஆடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது; ஒருவிதத்தில் சொல்லப்போனால் அது காணாமற்போகவில்லை. ஆனால் தேவனிடமிருந்து விலகி, பாவத்திற்குள்ளும், சீரழிவிற்குள்ளும் மனுக்குலம் கடந்து போய் உள்ள விதத்திலேயே, அது காணாமற்போனதாகக் கூறப்பட்டுள்ளது; மனுக்குலமானது, திரும்பக்கொடுத்தலின்/சீர்ப்பொருத்துதலின் வாயிலாக, சீரழிவிலிருந்தும், பாவம் எனும் உளையான சேற்றிலிருந்தும், அக்கிரமமும், மரணமுமாகிய படுகுழியிலிருந்தும், மீட்கப்பட அல்லது திரும்பிக்கொண்டு வரப்படவேண்டும். உவமையில் கூறப்பட்டுள்ளபடியாக, ஆடு, பூரணமான நிலைமைக்குக் கொண்டு வரப்படத்தக்கதாக ஆயிரம் வருடம் காலப்பகுதித் தேவைப்படுகின்றது; ஆனால் இதற்கிடையில் மனிதனுடைய இரட்சிப்பிற்கான இந்த மாபெரும் திட்டத்தினுடைய ஒவ்வொரு படியும், பிதாவின் தொழுவத்தைவிட்டு ஒருபோதும் வழிவிலகாத பரம சேனைகளால் ஆர்வமாய்க் கண்ணோக்கப்பட்டு வருகின்றது என்று நமது கர்த்தர் நமக்கு உறுதியளிக்கின்றார். கர்த்தருடைய விளக்கத்தில் அடையாள வார்த்தை கொஞ்சம் மாற்றம் அடைகின்றது, அதாவது மனுக்குலமானது ஓர் ஆட்டினால் அடையாளப்படுத்தப்படாமல், மாறாக அநேகம் ஆடுகளால் அடையாளப்படுத்தப்படுகின்றது (ஆதியில் ஆதாம் ஒருவராக இருந்தார். இப்பொழுது அநேகம் மனிதக்குடும்பங்கள் காணப்படுகின்றன); இன்னுமாக ஒரு பாவி, மனந்திரும்பி, மீண்டுமாகத் தொழுவத்தினிடத்திற்கு, அதாவது தேவனுடனான ஐக்கியத்திற்குத் திரும்புகையில், தேவதூதர்கள் மத்தியில் சந்தோஷம் காணப்படும் என்றும் இயேசு அறிவித்தார். [R2706 : page 299]
தேவனுடனான இசைவிற்குள் வரும் இவர்கள், பிரியமானவருக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவருக்குள்ளான கிருபையினால் அனைத்திலிருந்தும் இலவசமாக நீதிமானாக்கப்படுகின்றனர். “”சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்” (1 பேதுரு 2:25). மேலும் இவர்கள் நல்ல மேய்ப்பனோடுக் கூட, அவருடைய சரீரத்தின் அங்கத்தினராக வேலை புரியும் உடன் வேலையாட்களாகுவதற்கு அழைக்கப்படுகின்றனர்.
ஆதியில் காணாமற்போன ஓர் ஆடாகிய ஆதாமின் விஷயத்திலும், அவருடைய அநேக சந்ததியாரின் விஷயத்திலும் இழந்துவிட்ட நிலைமை அவர்களால் வாஞ்சிக்கப்படவில்லை, இல்லையேல் ஆதாமும் சரி, மற்றவர்களும் சரி, மீண்டுமாய் வெளியேறின தொழுவத்தினிடத்திற்கே சென்றிருப்பார்கள்; மாறாக பாவத்தினுடைய சீர்க்கேட்டின் நிமித்தமாக, அவர்கள் மிகவும் சீர்க்கேடானவர்களாகவும், இயலாதவர்களாகவும் ஆகிவிட்டதினால், அவர்களால் தங்களுடைய சொந்த பெலத்தினாலேயே வந்த வழியில் திரும்பிப்போக முடியாமல் போயிற்று. அவர்களுக்கு ஓர் இரட்சகர் தேவையாய் இருந்தது; அதாவது அவர்களை இந்தக் கீழான நிலையிலிருந்து இரட்சிக்கக் கூடியவரும், பாவத்தினுடைய தீர்ப்புகள் அனைத்திலிருந்தும் தங்களை விடுவிக்கக்கூடியவரும், தங்களை மீண்டுமாகத் தேவனுடைய தொழுவத்தில் முழுமையாய்க் கொண்டு வந்து சேர்க்கிறவருமான ஓர் இரட்சகர் தேவைப்பட்டார். இப்படிப்பட்டதான ஒருவராகிய நமது கர்த்தர் இயேசுவை, நம்முடைய பரம பிதாவானவர் அருளினார் “”மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபிரெயர் 7:25).
தங்களை மீட்கும் விஷயத்தில், கர்த்தருடைய அன்பானது அருளும் சகல ஆசீர்வாதங்களையும், வாய்ப்புகளையும், அவருடைய கரத்திலிருந்து பெற்றுக்கொண்ட பிற்பாடும் கூட, சிலர் துணிகரமாய்ச் சுயசித்தத்தில் காணப்பட்டு, நல்ல மேய்ப்பனுடைய உதவியை உதைத்துத் [R2707 : page 299] தள்ளுகிற வகுப்பாராகக் காணப்படுவார்கள் என்று வேதவாக்கியங்கள் தெளிவாய்க் காட்டுகின்றன. இவர்களைக் குறித்து, “”சத்தியத்தை அறியும் அறிவை அடைந்து பின்பு மனப்பூர்வமாய் பாவஞ்செய்கிறவர்கள்” என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றன் மேலும் இப்படிப்பட்டவர்கள், மாபெரும் பலியை அசட்டைப் பண்ணுகிறவர்களாய் இருப்பார்கள் என்றும், இவர்களைப் புதுப்பிப்பது என்பது கூடாத காரியம் என்றும் அப்போஸ்தலர் கூறுகின்றார். இப்படிப்பட்டவர்களின் போக்கைக் குறித்து, “”மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக் குறித்து வேண்டுதல் செய்ய நான் சொல்லேன்” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார். இப்படியாக துணிகரமாயும், தொடர்ந்தும் பாவம் செய்துகொண்டிருப்பவர்கள், நல்ல மேய்ப்பனை எட்டும் தொலைவிற்கு அப்பால் தங்களை நிறுத்துபவர்களாய் இருந்து, இரண்டாம் மரணம் மரித்து, தெய்வீகத் திட்டத்தில் ஏதேனும் ஒரு பங்கு அடைவதிலிருந்து நின்றுபோவார்கள் (எபிரெயர் 6:4-6; 1 யோவான் 5:16). “”வெள்ளாடு வகுப்பாருக்காக,” நல்ல மேய்ப்பன் தம்முடைய ஜீவனைக் கொடுத்து, வனாந்தரத்தில் தேடித் திரியவில்லை; “”நரிகளுக்காகவும்” அவர் தேடித்திரியவில்லை, மாறாக, பாவத்தினால் ஏற்பட்ட சீரழிவு இருப்பினும், கொஞ்சமாகிலும் “”செம்மறியாட்டினுடைய” சுபாவத்தைக் கொண்டிருப்பவர்களை மாத்திரமே அவர் தேடித் திரிகின்றார். ஆதாம், “”செம்மறியாடாக,” அதாவது வேதவாக்கியங்கள் தெரிவிக்கின்றது போன்று, “”தேவனுடைய குமாரனாக” இருந்தார் (லூக்கா 3:38); இவருடைய மீறுதல் துணிகரமாக இருப்பினும், சில விதங்களில் பார்க்கப்படும்போது, இவருடைய மீறுதல், தொழுவத்திலிருந்து, சுயசித்தத்தின் வழியில் செம்மறியாட்டினுடைய வழித் திரிதலாகவே இருந்தது என்று எடுத்துக்கொள்ளப்படலாம்; மாறாக செம்மறியாட்டினுடைய சுபாவத்தினின்று, வெள்ளாட்டின் (அ) நரியின் சுபாவத்திற்கு மாற்றம் எதுவும் நடைபெறவில்லை; ஆதாம் பிசாசினுடைய பிள்ளையாக இருக்க விரும்பிச்செல்லவில்லை.
ஒரு வேளை ஆதாம் தன்னுடைய இருதயத்தில் தேவனுக்கும், நீதிக்கும் எதிராக அறிவுப்பூர்வமாகவும், துணிகரமாகவும், தேவனுக்குச் சத்துருவாகியிருப்பாரானால், சர்வ ஞானமுள்ள மேய்ப்பனாகிய பிதாவானவர், ஆதாமின் பின் தம்முடைய குமாரனை அனுப்பியிருப்பார் என்று நம்மால் எண்ணிக்கொள்ள முடியாது. உண்மைதான், ஆதாமின் பிள்ளைகளில் அநேகர் இன்று, வெள்ளாட்டினுடைய சுபாவத்தில் சிலவற்றை அடைந்துள்ளனர்; “”துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாய் இருந்த உங்களை” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுவது உண்மைதான் (கொலோசெயர் 1:21). இன்னுமாக இந்த ஒரு நிலைமைக்குள் இவர்கள் அநேகமாய்த் துணிகரமாய்க் காணப்படவில்லை, மாறாக, சாத்தான் ஒளியை இருள் என்றும், இருளை ஒளி என்றும் வஞ்சித்துள்ளதினாலேயே ஆகும். இவர்களுடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் ஏமாற்றப்பட்டுள்ளது; “”தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான்” (2 கொரிந்தியர் 4:4). இவர்களில் அநேகர், எதிராளியானவனுடன் கூட்டுச் சேர்ந்துள்ளபடியால், அநேக விதங்களில் வெள்ளாட்டினுடைய சுபாவங்கள் கொண்டவர்களாக ஆகிப்போனாலும், இன்னமும் செம்மறியாட்டினுடைய சுபாவத்தில் கொஞ்சம் பெற்றிருக்கவே செய்கின்றனர்; இவர்கள் சரியான வெளிச்சத்தின் கீழ்க் கொண்டுவரப்பட்டால், தங்களை முழுமையாகத் தெய்வீகக் கிருபையினிடத்திற்கும், தொழுவத்தினிடத்திற்கும் கொண்டுவரும்/சீர்ப்பொருந்தப் பண்ணும் நல்ல மேய்ப்பனைப் பெற்றுக்கொள்வதில் மகிழ்ச்சியடைவார்கள்.
இவ்விஷயங்கள் உண்மையானது என்றும், சரியானது என்றும், உவமையினுடைய பல்வேறு அம்சங்களுக்கு இசைவான ஒரே காரியமாக இருக்கின்றது என்றும் உள்ள இக்கண்ணோட்டத்தின்படிப் பார்க்கப்படுகையில், இரண்டாம் மரணத்திற்குக் கடந்துப் போகிறவர்களைக் குறித்து, தேவன் கருத்தில் எடுத்துக்கொள்வது இல்லை எனவும், இவர்கள் செம்மறியாட்டினுடைய சுபாவத்தை இழக்கும் தருணம் முதல், தேவன் மற்றும் அவருடைய திட்டத்தைப் பொறுத்தமட்டில், எந்தவிதமான ஜீவனை அடையக்கூடாதவர்களாய் இருக்கின்றார்கள் எனவும் நாம் உணர்ந்துக்கொள்கின்றோம். திரும்பக்கொடுத்தலின் காலங்களில் நமது கர்த்தரால் மீட்கப்படுகிறதும், ஆயிர வருட யுகத்தினுடைய முடிவின்போது, தேவனுடைய மந்தைக்குள்ளாகக் கொண்டு வரப்படுகிறதுமான அந்த ஓர் ஆடானது, மனித குடும்பமாகும், அதாவது தேவனுடைய சாயலிலும், ரூபத்திலும் சிருஷ்டிக்கப்பட்டவர்களும், அந்தச் சாயலையும், ரூபத்தையும் முழுமையாய் இழந்துப்போகாதவர்களும், ஆயிரவருட யுகத்தின் போது, அவருடைய சாயலிலும், ரூபத்திலும் சீர்ப்பொருந்தப் பண்ணப்படுகிறவர்களுமான மனுக்குலமே ஆகும். ஆதாம் மற்றும் ஏவாளாகிய ஓர் ஆட்டினால் அடையாப்படுத்தப்படும் காணாமற்போன ஓர் ஆடானது, மீட்கப்படும்போது, பல மில்லியன் கணக்கான மீட்கப்பட்டு, சீர்ப்பொருந்தப் பண்ணப்பட்ட மனுக்குலத்தாராக, அநேகம் பேராக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
பத்து வெள்ளிக்காசு தொங்கவிடப்பட்ட ஆபரணத்தை, அதாவது திருமணத்திற்கான அடையாளமாகப் பெற்றுக்கொண்டிருந்த ஸ்திரீ பற்றின உவமையில், அவள் காணாமல் போன ஒரு வெள்ளிக்காசைக் கவனமாய்த் தேடுவது என்பது, முன்பு நாம் பார்த்திட்ட உவமையின் அதே கருத்தைக் கொடுக்கிறதாகவே உள்ளது. காணாமற்போன வெள்ளிக்காசைத் தேடுவதில் செலவிடப்பட்ட ஸ்திரீயினுடைய பிரயாசமானது, காணாமற்போன மனுக்குலத்தின் சார்பிலாகத் தெய்வீகப் பிரயாசத்திற்கான விளக்கமாக நமது கர்த்தரினால் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கும்கூட ஆதாமினுடைய இழப்புப் பற்றியேயல்லாமல், மற்றபடி இரண்டாம் மரணத்தில் தொலைந்துப் போகிறவர்களைக் குறித்து, “”காணாமற்போன” என்ற வார்த்தையை வேதவாக்கியங்கள் பயன்படுத்துவதில்லை என்று நாம் பார்க்கின்றோம். இரண்டாம் மரணத்தின் வகுப்பார், காணாமற்போனவர்கள் என்று சொல்லப்படுவதில்லை; அவர்கள் ஜீவன் இல்லாமல் நின்றுவிடுபவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் தெய்வீக மதிப்பின்படி ஒரு பொருட்டாக கருதப்படுவதில்லை, மற்றும் குறிப்பிடப்படுவதற்குப் பாத்திரவான்களும் இல்லை. தேவன் அங்கீகரிப்பதும், சீர்ப்பொருந்த பண்ணுவதாகக் கூறும், ஆதியில் . . . காணாமற்போனவைகள் போன்று இந்த இரண்டாம் மரணத்தின் வகுப்பார் இருப்பதில்லை.
பத்து வெள்ளிக்காசுகள் விலைறேப்பெற்றவைகளாக, மதிப்புடையவைகளாக மாத்திரம் இல்லாமல், குறிப்பிட்ட உருவங்கள் சில அந்த வெள்ளிக்காசுகளில் பொறிக்கப்படுவது வழக்கமாய் இருந்தது. இப்படியாகவே தேவனுடைய குமாரர்களாகிய தேவதூதர்களின் விஷயத்திலும், பிரதான தூதர்களின் விஷயத்திலும் காணப்படுகின்றது; வேறு எத்தனை வகையான ஆவியின் ஜீவிகள், [R2707 : page 300] தேவனுடைய சாயலிலும், ரூபத்திலும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது நமக்குத் தெரியவில்லை. இவைகளில் ஒன்றாகிய மனுஷன் காணாமற்போனான். காணாமற்போனதே தேடப்பட்டு, இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
முற்காலத்தின் வீடுகளானது, வாசல் வழியாய் வரும் வெளிச்சத்தினால் வெளிச்சம் பெற்றுக்கொள்கின்றது. மேலும் தரைப் பகுதியானது குப்பைகளில், தூசிகள் நிறைந்ததாய்க் காணப்படுவது என்பது, பாவம் மற்றும் சீரழிவுக்குள் தேவனுடைய சாயலிலும், ரூபத்திலும் காணப்பட்ட ஆதாமினால் அடையாளப்படுத்தப்படும் மனுக்குலமானது காணாமற்போனதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; அதாவது காணாமற்போன வெள்ளிக்காசானது, காணாமற்போன ஆட்டிற்கு அடையாளமாக இருக்கின்றது. இந்த உவமையானது, திரும்பக்கொடுத்தலின் வழிமுறைகளைப் பற்றிக் குறிக்காமல், மாறாக, ஆரம்பத்தில் காணாமற்போன காரியமும், இறுதியில் காணாமற்போன அதே காரியம் கண்டுபிடிக்கப்படுகிற காரியமும், இதற்காக ஏறெடுக்கப்படும் பிரயாசமும் மாத்திரமே குறிப்பிடப்படுகின்றது. விளக்கைக் கொழுத்துவதும், ஜாக்கிரதையாய்ப் பெருக்குவதும், கிறிஸ்து மூலமாய், ஆயிர வருட யுகத்தினுடைய முடிவில் நிறைவேற்றப்படும் தேவனுடைய வேலையைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது.
ஆயிர வருட யுகத்தின் முடிவில், பரம பிதாவினிடத்திற்குத் திரும்பும், சீர்ப்பொருத்தப்பட்ட இனமானது, ஆதாம் சிருஷ்டிக்கப்பட்ட போது காணப்பட்ட தேவனுடைய சாயலிலும், ரூபத்திலும் பூரணமாய்க் காணப்படுவார்கள், மற்றும் தாங்கள் பெற்றிருக்கும் சாயலுக்குரியவரான தேவன் பற்றின முழுமையான உணர்ந்துக்கொள்ளுதலையும், அதிகமான அறிவையும் கூடப் பெற்றிருப்பார்கள். இவ்வுமையில் மனித குடும்பத்தினருடைய எண்ணிக்கைப் பெருகுவது குறித்தோ, அல்லது (நீதியைக் காட்டிலும், பாவத்தின் மீதான விருப்பத்தின் காரணமாக) துணிகரமாய்ப் பாவம் செய்யும் ஆதாமின் சந்ததியில் உள்ள சிலர், ஜனங்கள் மத்தியிலிருந்து அறுப்புண்டுப் போவதைக் குறித்தோ பேசப்படுவதில்லை. (அப்போஸ்தலர் 3:23). இந்த இரண்டாம் மரண வகுப்பார்களுக்கு, பிதாவின் முன்னிலையில் எவ்விதமான தகுதியும் இல்லை; காணாமற்போனவர்களையும், தம்முடைய உண்மையுள்ள பிரதிநிதியாகிய கிறிஸ்துவினால் தேடப்பட்டு, கண்டுபிடிக்கப்பட்டு, தம்முடைய தொழுவத்தில் கொண்டு வரப்படுபவர்களையும் பற்றி மாத்திரமே பிதாவானவர் கவனத்தில் கொள்கின்றார் என்பது உண்மையே.
ஆயிர வருட யுகத்தினுடைய முடிவின்போதும், பரலோகத்திலும், பூமியிலும், சிங்காசனத்தில் வீற்றிருப்பவரையும், ஆட்டுக்குட்டியானவரையும் துதிக்கும் சத்தம் கேட்கப்படும் போதும், பரலோகத்திலும், பூமியிலும் மிகுந்த சந்தோஷத்திற்கான காலம் வரும்; ஆனால் முழுமையாய்ச் சந்தோஷம் கொள்ளும் காலத்திற்கு முன்பாகவும் கூட, மாபெரும் வேலையினுடைய நிறைவேறுதலுக்கான ஒவ்வொரு சாட்சியங்களிலும், பரலோக சேனை முழுவதும் மகிழ்ச்சிக் கொள்ளும்; அதாவது ஒரு பாவியினுடைய மனந்திரும்புதலில், அதாவது பாவத்திலிருந்து, தேவனுடன் இசைவிற்குள் முழுமையாய்த் திரும்புதலில் மகிழ்ச்சிக் கொள்ளும் என்று நமது கர்த்தர் நமக்கு உறுதியளிக்கின்றார். ஒருவேளை தேவனுக்கும், பரலோக ஜீவிகளுக்கும் இசைவாய் இருக்கும் பரலோகத்தில் உள்ள தேவதூதர்கள் மகிழ்ச்சிக் கொள்வார்களானால், பூமியில் உள்ள தேவனுடைய ஜனங்கள், சகல சிருஷ்டிகளும் பாவம் மற்றும் சாத்தானுடைய கண்ணி மற்றும் குருட்டுத்தன்மையிலிருந்து விடுபடும் போதும் மகிழ்ச்சிக் கொள்வார்கள்.
இந்த ஒரு படிப்பினையையே நமது கர்த்தர், பரிசேயர்களின் மனதில் பதியவைக்க நாடினார்; அதாவது பரிசேயர்கள் தங்களையே, கீழ்மட்ட ஜனங்களிடமிருந்து விலக்கிக் கொண்டு, இயேசுவின் வார்த்தைகளைக் கீழ்மட்ட ஜனங்கள் மகிழ்ச்சியாய்க் கேட்டுக் கொண்டிருப்பதின் காரணமாக சினம் கொள்வதற்குப் பதிலாக, பரியேசர்கள் தேவனுடனும், பரலோக தேவதூதர்களுடனும் இசைவாய்க் காணப்படுவார்களனால், அவர்கள் மனம்திரும்புதலையும், சீர்ப்பொருந்துதலையும் ஜனங்கள் மத்தியில் காணும்போது சந்தோஷமடைந்திருக்க வேண்டும்; இன்னுமாக “”கர்த்தரைத் தடவியாகிலும் கண்டுபிடிக்க” நாடுபவர்களை, தேவனுடனான உறவிற்குள் கொண்டு வருவதில், மகிழ்ச்சியாய் உதவி செய்பவர்களாக இருந்திருக்க வேண்டும் (அப்போஸ்தலர் 17:27).
இதுவே கர்த்தருடைய ஜனங்கள் அனைவருக்கும், இன்றும் காணப்பட வேண்டிய மனப்பான்மையாக இருக்கின்றது. இப்படியாக ஒருவேளை அவர்களுடைய இருதயத்தின் உணர்வுகள் காணப்படவில்லையெனில், இது அவர்களிடம் கர்த்தருடைய ஆவி இல்லாததற்கான சாட்சியாகும். இப்படியாக மற்றவர்கள் பாவத்திலிருந்து வெளிவரும் விஷயத்தில், அன்புடன் கூடிய அக்கறையைக் கொண்டிருப்பதும், தேவனுடனான ஐக்கியத்தில் மற்றவர்களைக் கொண்டுவருவதற்கான உதவி புரியும் மனநிலையைக் கொண்டிருப்பதும், தேவனுக்கு இசைவான இருதய நிலைமையை நாம் பெற்றிருப்பதற்கான சாட்சியாக மாத்திரம் இராமல், இது நமக்கே உதவியாகவும், நாம் மேய்ப்பனுடைய பராமரிப்பின் கீழ், தொழுவத்திற்குப் பத்திரமாய் வந்து சேரத்தக்கதாக, நம்முடைய பாதங்களுக்கே நாம் செவ்வையான பாதைகளை உருவாக்கிட உதவுவதாகவும் இருக்கும்.
ஆகவே நல்ல மேய்ப்பனினால், ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டு, கர்த்தருடைய அன்பான பராமரிப்பு மற்றும் தேவனிடத்தில் திரும்புவதற்கான உதவியை ஏற்றுக்கொண்டுள்ள கர்த்தருடைய அன்பான ஜனங்கள் அனைவரும், மற்றவர்களுக்காய் அனுதாபம் கொள்ளும் ஆவியையும், உதவி புரியும் ஆவியையும், நல்ல மேய்ப்பன் ஈடுபட்டுள்ள வேலையில் ஒத்துழைக்கும் ஆவியையும் அதிகமதிகமாய் வளர்த்தி, விருத்திச் செய்வார்களாக் கர்த்தருடைய ஜனங்கள் ஒட்டுமொத்த மனுக்குலத்தைத் தேடிச்செல்லாமல், மாறாக இப்பொழுது விசேஷமாகக் கர்த்தரால் இந்த யுகத்தில் தம்முடைய வேலை மற்றும் வெற்றியின் முதற்பலனானவர்களாக தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு உதவி அளிப்பார்களாக. ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கும், ஒருவரையொருவர் மகா பரிசுத்தமான விசுவாசத்தில் கட்டி எழுப்புவதற்கும், ஒருவரையொருவர் பக்திவிருத்திப் பண்ணுவதற்கும் நாடுவார்களாக. கலியாண வஸ்திரத்தை அணிவதற்கு ஒருவருக்கொருவர் உதவுவதற்கும், இராஜ்யத்தின் உடன் சுதந்திரர்களென ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தை அடையத்தக்கதாக ஒருவருக்கொருவர் உதவுவதற்கும் நாடுவார்களாக.