R2701 (page 286)
லூக்கா 14:15-24
“எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள்” (வசனம் 17)
இயேசு பரிசேயனுடைய வீட்டில் பந்தி அமர்ந்துக் கொண்டிருக்கையில், பந்தியில் பேசிக்கொண்டிருந்தார். கைம்மாறு திரும்பிச் செய்ய முடியாதவர்களாகிய ஏழைகளின் நலனுக்காக விருந்து செய்யப்படவேண்டும் என்றும், கைம்மாறு பெற முடியாததினால், நிச்சயமாய் எதிர்க்காலத்தில், இராஜ்யத்தில் கைம்மாறுக்கும் மேலான திவ்விய ஆசீர்வாதம் அளிக்கப்படும்என்றுமுள்ள கருத்தைத் தெரிவித்ததின் மூலமாக, நமது கர்த்தர் ஜீவியத்தின் காரியங்கள் மாத்திரம் அல்லாமல், எதிர்க்காலத்தைப் பற்றியுமான காரியங்களை, தம்மைச் சுற்றியிருந்தவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இதிநிமித்தம் கூட்டத்தில் இருந்த ஒருவன் லூக்கா 14:15-ஆம் வசனத்தின் வார்த்தைகளைக் கூறினான், அதாவது “”ஆ, ஆம்! நாம் எதிர்ப்பார்க்கும் அந்த இராஜ்யம், ஓர் ஆசீர்வாதமான காலமாய் இருக்கும். தேவன் அளிப்பதாக வாக்களித்துள்ள மாபெரும் விருந்தில் உள்ள திரளான காரியங்களில் பங்கடைவது, எத்துணை ஆசீர்வாதமாய் இருக்கும்!” என்ற விதத்தில் கூறினான். இவ்வார்த்தைகளைக் கூறினவன், இராஜ்யம் தொடர்புடைய ஏசாயாவின் தீர்க்கதரிசன வசனத்தை நன்கு அறிந்தவனாய் இருந்திருக்கவேண்டும்; இந்தத் தீர்க்கத்தரிசனத்தில் உலகத்திற்கான தேவனுடைய இரக்கங்கள் மற்றும் ஆசீர்வாதங்கள், விருந்து எனும் அடையாள மொழியில் விவரிக்கப்பட்டுள்ளது; “”சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்” (ஏசாயா 25:6).
இப்படியாக பந்தியில் காணப்பட்டவர்களுடைய மனங்களானது பூமிக்குரிய காரியங்களிலிருந்தும், பொதுவான காரியங்களிலிருந்தும், வம்பளப்பிலிருந்தும், தேவனுடைய கிருபையான வாக்குத்தத்தங்களிடத்திற்கு வழிநடத்திச் செல்லப்பட்டது. இதுவே அநேகமாக நமது கர்த்தர் பரிசேயனுடைய அழைப்பை ஏற்றுக்கொண்டதற்கான காரணமாகக் கூட இருக்கலாம்; அதாவது இப்படியாக இத்திசையை நோக்கிப் படிப்படியாக சம்பாஷணையைத் திருப்புவதற்காக இருந்திருக்கலாம். இந்த இராஜ்யமும், அதின் ஆசீர்வாதங்களும், அதில் பங்கடைவதற்கான அழைப்பையும் பற்றி ஏதோ சிலவற்றைப் போதிப்பதற்கான வாய்ப்பு இப்பொழுது நமது கர்த்தருக்குக் கிடைத்தது; அதைப் பயன்படுத்திக்கொண்டார். ஒருவேளை அவர் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் தங்கள் மனதில் ஏசாயாவின் தீர்க்கதத்ரிசனத்தையும், ஆபிரகாமுக்கான தேவனுடைய வாக்குத்தத்ததையும் கொண்டுவந்திருப்பார்களானால், கர்த்தருடைய இராஜ்யம் அல்லது மலை, இஸ்ரயேல் வீட்டார் என்றும், இந்த இஸ்ரயேல் வீட்டார் மேசியாவின் கீழ், மகிமையான மற்றும் உயர்த்தப்பட்ட நிலையில் காணப்படுவார்கள் என்றும், இந்த இராஜ்யத்திலும், இந்த இராஜ்யத்தின் மூலமாகவுந்தான் சகல ஜாதிகளுக்குமான திவ்விய ஆசீர்வாதங்களாகிய விருந்து பரிமாறப்படும் என்றும் அவர்கள் புரிந்திருப்பார்கள். இப்பொழுது மாபெரும் ஆசீர்வாதங்களையும், சிலாக்கியங்களையும் உடைய சுவிசேஷ அழைப்பின் மீது, ஓர் உவமையைக் கூறுவதன் மூலம் கவனத்தைத் திருப்பினார்; இன்னுமாக அங்கு இருக்கும் அனைவரும் அந்த இராஜ்யம் ஆசீர்வாதமான ஒன்று என்றும், அங்குப் பரிமாறப்படும் விருந்து மிகவும் வாஞ்சிக்கப்படத்தக்கதான ஒன்று என்றும், பொதுவாக ஒப்புக்கொண்டாலும் அந்த இராஜ்யத்திற்கான அழைப்பு விடுக்கப்படும்போது, பெரும்பாலானவாகளுடைய இருதயங்களானது பூமிக்குரிய காரியங்களுடன் இசைந்து இருப்பதினால், இந்த அழைப்பைப் பொருட்படுத்துவதில்லை என்ற உண்மையைத் தம்மைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர முயன்றார்.
உவமையில் ஒரு மாபெரும் விருந்து ஏற்பாடுப் பண்ணப்பட்டது; அந்த விருந்தை ஏற்பாடு பண்ணின மனுஷனுடைய நண்பர்கள் ஏராளமானவர்கள் முன்கூட்டியே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தனர்; அதாவது விருந்து ஆயத்தமாகிவிட்டது என்று அறிவிக்கப்படும்போது, விருந்தாளிகள் ஆயத்தமாய்க் காணப்படத்தக்கதாக, விருந்தாளிகளுக்கு முன்கூட்டியே அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த உவமையில், தேவனே, விருந்தை எற்பாடு பண்ணின மனுஷனாய் இருந்தார்; மேலும் யூத தேசத்தாரே, அம்மனுஷனுடைய நண்பர்களாய் இருந்தார்கள்; இந்த யூத தேசத்தாருக்கே, தேவன் அதிகமான அனுகூலங்களைக் கொடுத்திருந்தார்; இவர்களுக்கே தேவனுடைய வார்த்தைகள்/தீர்க்கத்தரிசனங்கள் கொடுக்கப்பட்டது, அதாவது மனிதனுடைய இரட்சிப்பிற்கான தெய்வீகத் திட்டம் பற்றின அறிவு அதிகமாய்க் கொடுக்கப்பட்டிருந்தது; இன்னுமாக இவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரென உண்மையுள்ளவர்களாகக் காணப்பட்டால், இவர்களுக்கு இந்த மாபெரும் விருந்திற்கான அழைப்பும், சிலாக்கியமும், வாய்ப்பும் கிடைக்கும் என்று வாக்களிக்கவும் பட்டது. “பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களை மாத்திரம் அறிந்துக் கொண்டேன், ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன்” என்று (ஆமோஸ் 3:2), கர்த்தர் தீர்க்கத்தரிசி மூலம் இவர்களிடம் பேசினார். இஸ்ரயேலர் மாத்திரமே இந்த விருந்துக்கு அழைக்கப்பட்டனர்; ஆனால் கர்த்தருடைய நாள் வரையிலும், [R2701 : page 287] விருந்து ஆயத்தமாகவில்லை, ஆகவேதான் பங்கெடுங்கள் என்பதற்கான அழைப்பு இன்னமும் விடுக்கப்டவில்லை. இறுதியில் காலம் வந்தது. பாவநிவாரண பலியின் காளை அடையாளப்படுத்தும் கிறிஸ்து, தம்மை ஏற்கெனவே கொடுத்துவிட்டார். நமது கர்த்தர் யோவான் முன்னால், தம்மை மரணம் வரையிலுமான முழு அர்ப்பணிப்புப் பண்ணினபோது, அதாவது பலி ஒப்புக்கொடுத்த நேரத்திலேயே, பலி நிறைவேறிவிட்டதாகக் கருதப்பட்டது. பாவங்களுக்கான இந்தப் பலியின் கண்ணோட்டத்தில் பார்க்கையில், தேவனால் உடனடியாக ஆபிரகாமின் மூலம் தேவன் நீண்ட காலத்திற்கு முன்னதாக வாக்களித்துள்ள ஆசீர்வாதங்கள் மற்றும் தெய்வீகக் கிருபையின் வெளிப்படுத்தல் எனும் மாபெரும் விருந்திற்கு, முன்னமே வாக்களித்துள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்க ஆரம்பிக்க முடியும்.
ஆகவேதான் இயேசு வந்து, தம்முடைய சீஷர்களை அழைத்து, “”பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கின்றது” என்றும், தேவன் நீண்டகாலமாய் வாக்களித்துள்ள இந்தத் தேசத்திற்கான கொழுத்தவைகளிலான மாபெரும் விருந்து ஆயத்தமாய் இருக்கின்றது என்றும், யாரெல்லாம் விரும்புகின்றார்களோ அவர்களெல்லாரும் வந்து, பெற்றுக்கொள்ளுங்கள் என்றுமுள்ள செய்திகளுடன் அவர்களை அனுப்பி வைத்தார். இயேசு மற்றும், பன்னிரண்டு அப்போஸ்தலர்கள், பின்னர் எழுபது சீஷர்கள் மூலம், யூதேயா முழுவதும் கொண்டு செல்லப்பட்ட செய்தியானது, கிருபை பெற்ற (இஸ்ரயேல்) ஜனங்கள் பொறுமையற்றுக் காத்திருந்தும், பதினாறு நூற்றாண்டுகளுக்கு மேலாக எதிர்ப்பார்த்து, ஜெபம் பண்ணினதுமான மாபெரும் விருந்தாகிய, இராஜ்யத்தின் மாபெரும் சிலாக்கியங்கள் மற்றும் வாய்ப்புகளை வந்து, அனுபவிப்பதற்கான அழைப்பாகக் காணப்பட்டது.
ஆனால் இராஜ்யத்தின் அழைப்பு உண்மையாக விடுக்கப்பட்டபோதோ, மாபெரும் விருந்தின் ஆசீர்வாதங்களில் பங்குக்கொள்வதற்கான அழைப்பு அவர்களுக்கு உண்மையாக விடுக்கப்பட்டபோதோ, மற்றவர்கள் எதிர்ப்பார்த்ததற்கு நேர்மாறாக, அவர்கள் இராஜ்யத்தையும், எதிர்க்கால காரிங்களையும் விரும்பவில்லை என்பது வெளியானது என்று உவமை காட்டுகின்றது. மாறாக இராஜ்யத்திற்கான அழைப்பானது, அவர்களால் ஒரே மாதிரியான விதத்தில் மறுக்கப்பட்டதுமான காரியமானது, மறுப்புத்தெரிவித்தவர்கள் திட்டமிட்டுச் செயல்பட்டது போன்று தோன்றுகின்றது. தங்களால் வாஞ்சிக்கப்பட்ட காரியம் என்று கூறப்பட்டதுமான தேவன் வாக்களித்துள்ள காரியங்களில், தங்களால் ஈடுபடமுடியாது என்பதற்கு அவர்கள் கூறின காரணங்கள் என்பது அவர்கள் நிறைவேற்ற வேண்டிய வேறே கடமைகளின் பாரங்களாக இருந்தது; இந்தப் பாரங்களோ, அவர்கள் இராஜ்யத்திற்கான தெய்வீக அழைப்பிற்குச் செவிக்கொடுக்க அவர்களுக்கு எந்த நேரத்தையும் கொடுக்கவில்லை. ஒருவனுக்கு தன்னுடைய வயலை பார்க்க வேண்டிய பாரம் இருந்தது; இப்படியாக அவன் வயலில் வேலை செய்வதாலேயே, அவனுடைய தொழில் நன்றாக இருக்கும் என எண்ணினான்; இன்னொருவனோ, எந்த வேலையும் இல்லாதவர்களால் ஆவிக்குரிய விருந்திற்குக் கவனம் செலுத்த முடியும், ஆனால் தன்னுடைய நேரமானது, தன்னுடைய ஆஸ்திகளை, எருதுகளை, ஆடுகளை, தொழிலைக் கவனிப்பதற்கே போதுமானதாக இருக்கின்றது என்று எண்ணினான். இன்னொருவன் தன்னுடைய கடமைகளுக்கும், குடும்ப உறவுகளுக்கும், மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் தன்னுடைய கவனம் முழுவதும் தேவைப்படுகிறதினால், தன்னால் இராஜ்யத்தின் சிலாக்கியங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்று எண்ணினான்.
இப்படியாக இருந்த மாம்சீக இஸ்ரயேலர்களின் இதே மனநிலையே, இன்று ஆவிக்குரிய இராஜ்யம் அறிவிக்கப்படும்போதும், ஆவிக்குரிய இஸ்ரயேலர்களின் மனநிலையாகவும் காணப்படுகின்றது. அநேகர் ஜீவியத்தின் உண்மையான மற்றும் நடைமுறைக் காரியங்களுக்கே தங்களுடைய கவனம் தேவையாக இருக்கின்றது என்று எண்ணுகின்றனர். இவர்கள் இந்த உலகத்தின் காரியங்களைத் தொடர்ந்துச் செய்துகொண்டிருக்கவும், உலகத்தோடேயே காணப்படுவதற்கும் விரும்புகின்றனர். மேலும் பூமிக்குரிய காரியங்களிலும், உறவு காரியங்களிலும் காணப்படுகின்றதான, இப்படிப்பட்டதான விருப்பங்களானது, இவர்களுக்கு மகிமையான ஆயிர வருட இராஜ்யத்தில், கிறிஸ்துவுடன் உடன் சுதந்திரர்களாகப் பங்கடைவதற்கு, அதாவது நமக்கு வந்துள்ள பரம அழைப்பாகிய மாபெரும் விருந்தில் பங்கடைவதற்கான தெய்வீக அழைப்பிற்குப் பதில் கொடுக்க இடறலாக இருக்கின்றது எனக் காண்கின்றனர். ஒரு விதத்தில் பார்க்கப்படும்போது, இவை அனைத்தும் சரிதான், ஏனெனில் இதநிமித்தம் கர்த்தர் பங்குக்கொள்ள வேண்டும் என விரும்பாத ஒரு வகுப்பார், இராஜ்யத்தின் இந்த அழைப்பிற்கு விலகிச் செல்வர்; ஒருவேளை இப்பபடிப்பட்டவர்கள் உள்ளே வந்துவிட்டாலும், பிற்பாடு வெளியேற்றப்படுவது அவசியமாகவே இருக்கும். தேவன் அநேகருக்கு அழைப்பு விடுத்திருந்தாலும், யார் மற்றச் சிலாக்கியங்களைக் காட்டிலும் இராஜ்யத்தின் சிலாக்கியத்தை உயர்வாக மதிப்பிடுவார்களோ, அதாவது யார் இராஜ்யத்தில் பங்கடையத்தக்கதாக எதையும் மற்றும் எல்லாவற்றையும் பலிச்செலுத்த விரும்புகிறார்களோ, அப்படிப்பட்டவர்களையே இந்த விருந்திற்கு தேவன் நாடித்தேடுகின்றார்.
உவமையில் கூறப்பட்டுள்ளதான இந்த முதலாம் அழைப்பானது, நமது கர்த்தருடைய ஊழிய வருடங்களின் முதலாம் பாகத்தைக் குறிக்கின்றது. நமது கர்த்தருடைய ஊழிய வருடங்களின் முதலாம் பாகங்களானது, விசேஷமாக அந்தத் தேசத்தில் முன்னிலை வகுத்தவர்களாகவும், நமது கர்த்தரால் சொல்லப்பட்டது போல, மோசேயின் ஆசனத்தில் உட்கார்ந்து இருந்தவர்களாகவும், ஒட்டுமொத்த தேசத்திற்கு அடையாளமானவர்களாகவும் காணப்பட்ட பரிசேயர்களை, வேதபாரகர்களை மற்றும் நியாயசாஸ்திரிகளை ஆர்வப்படுத்துவதற்கு நேராகக் காணப்பட்டது; மேலும் இவர்கள் அழைப்பை மறுத்தது என்பது, அழைப்பை ஒட்டுமொத்த தேசமும் மறுத்ததாக இருந்தது. தம்முடைய மேசியாத்துவத்திற்கான சாட்சியங்களை, ஆசாரிய வகுப்பாருக்கு முன்பாக கொண்டு வருவதில் நமது கர்த்தர் மிகவும் கவனமாய் இருந்தார்; ஆகவேதான், அவர் பத்துக் குஷ்டரோகிகளைச் சொஸ்தப்படுத்தின சம்பவத்தில், அவர்கள் காரியத்தை வேறு எந்த மனுஷரிடத்திலும் அறிவியாமல், அவர்களை ஆசாரியர்களிடத்தில் போய், காண்பிக்கும்படி கட்டளையிட்டார் என்று பார்க்கின்றோம். இவ்வாறாக மற்றவர்களைக் காட்டிலும் குறிப்பாக ஆசாரிய வகுப்பாரே, நமது கர்த்தருடைய அற்புதமான கிரியைகளைக் குறித்து நன்கு அறிந்திருந்தார்கள். ஆகவே குறிப்பாக ஆசாரிய வகுப்பாரே, மற்றவர்களைக் காட்டிலும் விருந்திற்கான அழைப்பைப் பெற்றிருந்தனர். எனினும் இஸ்ரயேலின் பிரதான பிரதிநிதிகள் அழைப்பிற்கு ஆயத்தமற்று இருந்த [R2702 : page 287] காரியமானது எவ்விதத்திலும் (எதற்கும்) தடையாக இருப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை; பின்னர் நமது கர்த்தர், தம்முடைய சீஷர்கள் வாயிலாக அழைப்பை, இன்னொரு வகுப்பாருக்குக் கொடுத்தார்.
அதன் தலைவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட ஒட்டுமொத்த தேசத்திற்கான பரீட்சை, கல்வாரியில் அல்லது கல்வாரியின் சம்பவம் நடைப்பெறுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னதாக, நமது கர்த்தர் கழுதையின் மேல் ஏறிச்சென்று, எருசலேம் பட்டணத்திற்காக, “எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே, கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன் உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும் கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்” என்று கூறிக் கண்ணீர் விட்டு அழுததோடு நிறைவடைந்தது (லூக்கா 13:34-35). அதாவது “”ஒரு தேசமாக, ஒரு ஜாதியாராக, நீ மாபெரும் விருந்திற்கான தெய்வீக அழைப்பை மறுத்துவிட்டாய்; மேலும் நீயும் ஒரு ஜாதியாய் அதை ருசி பார்க்க முடியாது” என்ற விதத்தில் கர்த்தர் கூறினார். எனினும் தீர்க்கத்தரிசிகள் மூலமாய் வெளிப்படுத்தப்பட்ட தெய்வீக நோக்கம் மற்றும் வாக்குத்தத்தங்களுக்கு இசைவாக, அந்தத் தேசம் இராஜ்யத்தின் சிலாக்கியங்களுக்கு அபாத்திரமாய்க் காணப்படுகின்றது என்று நிரூபித்துக் காண்பித்த பிற்பாடும், தேவனுடைய இரக்கமானது அந்தத் தேசத்தின் பல்வேறு தனிநபர்களிடம் கடந்துச் சென்றது. அப்போஸ்தலர்கள் ஆள் சேர்க்க அனுப்பப்பட்டார்கள், ஒட்டுமொத்த தேசத்தைச் சேர்க்க அல்ல, மாறாக இந்த விருந்தில் பங்குக்கொள்ளத்தக்கதாக, தாழ்மையான மனங்களைக் கொண்டிருந்த தனிப்பட்ட நபர்களைச் சேர்க்க அனுப்பப்பட்டார்கள்; மேலும் ஒட்டுமொத்த இஸ்ரயேல் தேசத்திற்காக அல்லாமல், தனிப்பட்ட நபர்களுக்கான இந்த அழைப்பிற்கு, யாரெல்லாம் தங்களுடைய பாத்திரமற்ற தன்மையை உணர்ந்துக் கொண்டவர்களாக இருந்தார்களோ, அதாவது தாங்கள் பூரணமானவர்கள் அல்ல என்று ஒப்பக்கொண்டவர்களாகவும், பூரணத்தை வாஞ்சித்தவர்களாகவும், இராஜ்யத்தின் சிலாக்கியங்களில் பங்குக்கொள்வதற்கான அழைப்பில் களிக்கூர்ந்தவர்களாகவும், இதற்காக அனைத்தையும் விட்டுவந்தவர்களாகவும் இருந்த குருடர்களால், சப்பாணிகளால் செவிச்சாய்க்கப்பட்டது. இவர்கள் மத்தியில் அநேகர் ஞானிகளாக இல்லை, [R2702 : page 288] அநேகர் பிரபுக்களாக இல்லை, அநேகர் கல்விமான்களாக இல்லை, மாறாக பிரதானமாய்த் தரித்திரர்களாய் இருந்தனர்; தரித்திரர்கள் மத்தியில் அநேகர் தாழ்மையானவர்கள் இல்லை என்றாலும், தரித்திரர்கள் மத்தியிலேயே அதிகமானோர் அங்கீகரிக்கத்தக்கதான குணலட்சணங்களில் காணப்படுகின்றனர். ஐசுவரியவான்கள் மத்தியில் அதிக தாழ்மை எப்போதும் அரிதான ஒன்றாகவே இருக்கின்றது.
இந்த இரண்டாம் அழைப்பானது கொடுக்கப்பட்ட பட்டணத்தின் வீதிகளிலும், தெருக்களிலும் இருந்த ஏழைகளை, சப்பாணிகளை, குருடர்களை மற்றும் ஊரார்களை நம்முடைய நாட்களில் கூட்டிச் சேர்ப்பது கடினமான காரியமாக இருப்பினும், நம்முடைய கர்த்தருடைய நாட்களில் வறுமையில் உள்ளவர்கள் அடங்கிய திரளானகூட்டத்தைச் சிறு கட்டளையிலேயே கூட்டிச் சேர்த்துவிடுவது சுலபமான காரியமாகும்.
இந்த இரண்டு அழைப்புகளும் பட்டணத்திற்கே, அதாவது இஸ்ரயேலுக்கே, தேவனுடைய பெயரளவிலான இராஜ்யத்திற்கே கொடுக்கப்பட்டது கவனிக்கப்பட வேண்டும். எனினும் இராஜ்யத்தின் வகுப்பாருக்குத் தேவனால் முன்தீர்மானிக்கப்பட்ட எண்ணிக்கையை நிறைவு பண்ணுவதற்குப் போதுமானவர்களை, இந்த இரண்டு அழைப்புகளும் கண்டுபிடிக்க தவறிவிட்டது. அனைத்து இஸ்ரயேலர்களையும் வர பண்ணுவதற்கு அவரால் தூண்ட முடியும், ஆனால் அவரோ சரியான இருதய நிலையில் இல்லாதவர்களைத் துரத்தும் விதத்திலேயே, வேண்டுமென்றே விருந்திற்கான அழைப்பை விடுத்தார், அதாவது உத்தம இஸ்ரயேலர்களைக் கவரும் விதத்தில் அழைப்பை விடுத்தார்; அதாவது தங்களுடைய சொந்த தகுதியற்ற நிலையை உணர்ந்து, ஒப்புக்கொண்டவர்களாகவும், விருந்தில் பிரவேசிப்பதற்கு மகிழ்ச்சியடைகிறவர்களாகவும், தங்களுடைய சொந்த பூரணமின்மையாகிய அழுக்கான கந்தைகளை மூடுவதற்கென, விருந்தாளிகளுக்கு அளிக்கப்படும் வஸ்திரங்களைப் (கிறிஸ்துவின் நீதியை) பெற்றுக்கொள்ள மகிழ்ச்சியடைகிறவர்களாகவும் இருக்கும் உத்தம இஸ்ரயேலர்களைக் கவரும் விதத்திலேயே அழைப்பை விடுத்தார். ஆனால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களுக்கான எண்ணிக்கையை நிறைவு செய்யத்தக்கதாக, இப்பொழுது இஸ்ரயேலில் போதுமானவர்கள் கண்டுபிடிக்கப்பட முடியவில்லை; செய்தியானது பட்டணத்திற்கு வெளியே, அதாவது யூதமார்க்கத்திற்கு வெளியே புறஜாதிகளிடத்தில் அனுப்ப வேண்டியிருந்தது. ஆகவே மூன்றாம் செய்தி அனுப்பப்பட்டது, “”அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா” (லூக்கா 14:23). இவ்வசனத்தில் ஆங்கிலத்தில் இடம்பெறும் “” compel” என்ற வார்த்தையானது, இவ்விடத்தில் தவறான கருத்தைக் கொடுக்கின்றதாக இருக்கும்; பரிந்துரை/தூண்டு, இணங்க வைத்தல் என்பதாகவே இவ்வார்த்தை இடம்பெற வேண்டும்.
ஆகவேதான் சுவிசேஷ யுகம் முழுவதிலும், சுவிசேஷ கிருபைகளுக்கு உள்ளாக, ஆயத்தமாய் இருந்த அநேக யூதர்கள் கொண்டுவரப்பட்ட பின்னர், செய்தியானது “”தேவனுடைய நாமத்திற்கு என்று புறஜாதிகள் மத்தியிலிருந்து ஓர் ஜனம் எடுத்துக்கொள்ளப்படுவதற்காகவும்,” இஸ்ரயேலின் மீதியானவர்களுடன் மாபெரும் விருந்தில் பங்கடையத்தக்கதாகவும், புறஜாதிகளிடத்திற்கு அனுப்பப்பட்டது; “”அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்திய ஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள்” (அப்போஸ்தலர் 13:46-47). யூதர்கள் தாங்கள் இந்த மாபெரும் ஆசீர்வாதத்திற்கு (அ) ஈவிற்கு அபாத்திரர்களாக இருப்பதை நிரூபித்துக்காட்டினார்கள்; நித்திய காலத்திற்குமான மகிமையான வாக்குத்தத்தங்களைக் காட்டிலும், இவர்கள் அழிந்துப் போகக்கூடிய காரியங்கள் மீதே மிகுந்த விருப்பம் உள்ளவர்களாக இருந்தார்கள்.
இந்த உண்மையை அப்போஸ்தலர், “அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள்” என்று கூறுவதன் மூலம் நம்முடைய கவனத்திற்குக் கொண்டு வருகின்றார் (ரோமர் 9:27). இன்னுமாக இராஜ்யத்தில் பங்காளிகளாக இருக்கத்தக்கதாகப் புறஜாதிகளுக்குச் சென்ற அழைப்பானது, ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட அதே அழைப்பாக மாத்திரமே இருக்கின்றது என்றும், இவ்வளவு மாபெரும் இரட்சிப்பையும், சிலாக்கியத்தையும் புறக்கணித்துப்போனவர்களுடைய இடத்தில் நாம் வரத்தக்கதாகவே, அழைக்கப்பட்டிருக்கின்றோம் என்றும் அப்போஸ்தலர் நமக்குக் காட்டுகின்றார். இதை அவர், ஒலிவ மரத்தின் மூலம் விவரிக்கின்றார்; “சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால்………” (ரோமர் 11:17).
இராஜ்யத்தின் ஆசீர்வாதங்களும், சிலாக்கியங்களுமான மாபெரும் விருந்திற்கான இந்த மூன்றாம் அழைப்பானது, இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதும் போய்க்கொண்டிருக்கின்றது; மேலும் நாம் புரிந்திருக்கிறவைகளை வைத்துப் பார்க்கையில், இந்த அழைப்புச் சீக்கிரத்தில் நிறைவடையப் போவதாகத் தெரிகின்றது; கிட்டத்தட்ட பந்தியின் அநேக இடங்களில், விருந்தாளிகள் காணப்படுகின்றனர்; வெகுசில இடமே காலியாக இருக்கின்றது; இந்தக் காலியான இடங்களும் சீக்கிரத்தில் நிரம்பிவிடும்போது, மாபெரும் விருந்து ஆரம்பித்துவிடும், மேலும் நாம் நம்முடைய கர்த்தருடைய சந்தோஷங்களில் பிரவேசித்து, நாம் மாத்திரம் புசிப்பதற்குரிய சிலாக்கியம் பெற்றிராமல், அதன் ஆசீர்வாதங்களைப் பூமியின் குடிகள் அனைத்திற்கும் எடுத்துச்செல்லும் சிலாக்கியம் உடையவர்களாகவும் இருப்போம்.
முதலாம் அழைப்பின் கீழாக வந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதற்கு, யூதர்களுக்குத் இடையூறாக/ தடையாக இருந்திட்ட அதே காரியங்களே, மூன்றாம் அழைப்பைக் கேட்ட புறஜாதியார்களில் அநேகருக்கு அதிக அளவில் தடையாகக் காணப்படுகின்றது. முழுமையான தொழிலாளியாக, ஐசுவரியவானாக, செல்வாக்கு மிக்கவனாகவே இருந்துக் கொண்டு, அதே வேளையில் இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இந்த விருந்திற்கான அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில், கர்த்தருக்கு நம்முடைய இருதயங்கள், தாலந்துகள், ஆற்றல்கள் அனைத்தையும் ஒப்புக்கொடுத்துவிடுவது கூடாத காரியமாகும். இந்த விருந்திற்கான அழைப்பை ஏற்றுக்கொள்ளுதல் என்பது, மற்ற எல்லாவற்றையும் விட இதில் ஆழமான ஆர்வம் இருப்பதினிமித்தம், மற்ற எல்லா விஷயங்களும், அது வீடாகவோ, நிலமாகவோ, தகப்பனாகவோ, தாயாகவோ, மனைவியாகவோ, பிள்ளையாகவோ இருந்தாலும், அவை அனைத்தும் இராஜ்யத்திற்கு அடுத்த காரியங்களுக்கும் மற்றும் அழைப்புத் தொடர்புடைய நிபந்தனைகளின் விஷயத்திலான நம்முடைய கடமைகளுக்கும், அடுத்தப்படியாக, இரண்டாவதாகவே காணப்படுவதைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. இஸ்ரயேலர்களின் விஷயத்தில் எப்படிக் காணப்பட்டதோ, அப்படியே புறஜாதியார்களின் விஷயத்திலும் காணப்பட்டது, அதாவது இராஜ்யத்திற்கான அழைப்பானது, இந்த உலகத்தின் ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் பெற்றிருந்தவர்களால் மறுக்கப்பட்டது; அதாவது மனுஷர் மத்தியிலான கனத்திலோ (அ) சமுதாய அந்தஸ்திலோ (அ) தாலந்துகளிலோ (அ) பணத்திலோ (அ) நற்பெயரிலோ ஐசுவரியவான்களாய் இருந்தவர்கள், இவைகளையெல்லாம் விட்டுவிட்டு, இடுக்கமான வழியில் இயேசுவைப் பின்தொடர்வது கஷ்டம் என எண்ணினார்கள்; யூத யுகத்தின் முடிவில் மாத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தரித்திரர்களாகவும், எளிமையானவர்களாகவும் இராமல் இருந்ததுபோலவே புறஜாதியாரின் விஷயத்திலும் உண்மையாய் இருந்தது; இன்றும் இது உண்மையாக இருக்கின்றது “எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை.” “”என் பிரியமான சகோதரரே, கேளுங்கள் தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துக்கொள்ளவில்லையா?” (1 கொரிந்தியர் 1:26; யாக்கோபு 2:5).
ஆனால் அதற்கென்று எவ்வகையான ஐசுவரியவான்களுக்கும் அழைப்புத் தடைப்பண்ணப்படுவதில்லை, மாறாக அவர்களுக்கும் மாபெரும் சிலாக்கியங்களும், வாய்ப்புகளும் கொடுக்கப்படுகின்றது; ஏனெனில் இவர்களிடம் மிக அதிகமான தாலந்துகள் காணப்படுகின்றது; ஒருவேளை இவர்கள் விருப்பம் கொண்டால், இவர்களும் பலிச்செலுத்தி, அழைப்பையும், விருந்தையும் குறித்ததான தங்களுடைய மதிப்பீட்டை வெளிப்படுத்தி, தேவனுடைய அங்கீகரிப்பைப் பெற்றுக்கொள்ளலாம். நமது கர்த்தருடன் இராஜ்யத்தில் உடன்சுதந்திரத்துவம் எனும் மாபெரும் விருந்தில் பங்கடைவதற்கான அழைப்பிற்குப் பதில் கொடுக்கும் வண்ணமாக, நமக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஓட்டத்தில் பொறுமையுடன் ஓடத்தக்கதாக, நாமும் அப்போஸ்தலனாகிய பவுலைப் போன்று பாரமான யாவற்றையும், ஒவ்வொரு இடையூறையும், ஒவ்வொரு நெருக்கங்களையும், நமக்கு அருமையாய் இருக்கும் பூமிக்குரியவை அனைத்தையும் தள்ளிவிட்டுவிடுவோமாக (எபிரெயர் 12:1-2; ரோமர் 8:16- 18; 12:1-2).