R2441 – நல்ல மேய்ப்பன் – கிறிஸ்து

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R2441 (page 63)

நல்ல மேய்ப்பன் - கிறிஸ்து

THE GOOD SHEPHERD—THE CHRIST

யோவான் 10:1-16

“”நானே நல்ல மேய்ப்பன்; நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.”- யோவான் 10:11

கிறிஸ்து உலகத்திற்கான ஒளியாக இருக்கத்தக்கதாக, “”தேவனுடைய சிருஷ்டியின் ஆதியாக இருந்த அவர், “”மாம்சமாக்கப்பட்டார்” என்ற விஷயத்தைச் சுவிசேஷகராகிய யோவான் நம்முடைய கவனத்திற்கு முதலாவதாகக்கொண்டு வருகின்றார்; அடுத்ததாக அவரைப் பசியுள்ளவர்களுக்கு ஆகாரம் வழங்குபவராக நமக்குக் காட்டுகின்றார்; அடுத்ததாக தாகமுள்ளவர்களுக்கு, ஜீவத்தண்ணீரை வழங்குபவராக, அவரை நமக்குக் காட்டுகின்றார்; அடுத்ததாக மனிதனுக்குரிய வேதனைகளைச் சொஸ்தப்படுத்துகிறவராகவும், மனிதனுடைய ஆவிக்குரிய மற்றும் பூமிக்குரிய தேவைகளை அளிப்பவராகவும் அவரை நமக்குக் காட்டுகின்றார்; அடுத்ததாக நமது புரிந்துக்கொள்ளுதலின் கண்களைத் திறப்பவராக அவரை நமக்குக் காட்டுகின்றார். இந்தப் பாடத்திலோ, சுவிசேஷகனாகிய யோவான், கிறிஸ்துவினுடைய பணியை இன்னொரு கோணத்தில், அதாவது அவரை நல்ல மேய்ப்பனாக, இப்பொழுது நமக்கு முன்வைக்கின்றார்.

கண்கள் திறக்கப்பட்ட மனுஷன், இயேசுவே தனக்குத் தெய்வீகத் தயவைப் பெற்றுக்கொள்வதற்கான வழிவகையாக இருந்தார் என்று அறிக்கைப்பண்ணினதினிமித்தம், நியாயசாஸ்திரிகள் ஆத்திரமடைந்து, அம்மனுஷனை ஜெப ஆலயத்திலிருந்து புறம்பாக்கிப் போட்டப் பிற்பாடு, இந்த உவமை பேசப்படுகின்றது. நமது கர்த்தரால் பேசப்பட்ட இந்த உவமையானது, தவறாய் மேய்ப்பவர்களுக்குக் கடிந்துக்கொள்ளுதலாய் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. உண்மையான மேய்ப்பனை அடையாளம் கண்டுகொள்வதற்கும், அவரிடத்தில் வருவதற்கும், நீண்ட காலமாய் வாக்களிக்கப்பட்டுள்ள இராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வதற்கும், பாவமான சிதறடிக்கப்பட்ட ஆடுகளாகிய இஸ்ரயேலுக்கு உதவி புரிய வேண்டியவர்களோ, மேய்ப்பனைக் கர்த்தருடைய ஆடுகள் அடையாளம் கண்டுகொள்வதைத் தவிர்ப்பதற்கு முயற்சிக்கின்றனர்; அதாவது தாங்களும் பிரவேசியாமல், மனுஷர்களையும் இராஜ்யத்தில் பிரவேசிக்கவிடாமல் தடைபண்ணுவதற்கு நாடுகின்றவர்களாய் இருக்கின்றனர் (மத்தேயு 23:13).

கர்த்தரை, மேய்ப்பன் என்றும், அவருடைய ஜனங்களை ஆடுகள் என்றும், கூறும் உதாரணமானது, வேதவாக்கியங்களில் பொதுவான/சகஜமான காரியமாக இருக்கின்றது; மேலும் இந்த உதாரணமானது, அவர்களுக்கிடையே காணப்படும் நம்பிக்கைக்குரிய நெருக்கமான உறவிற்குச் சரியாக பொருந்தவும் செய்கின்றது; ஆனால் இந்த அடையாளமானது, உலகத்தின் ஆவிக்கு, முற்றிலும் எதிர்மாறானதாக இருக்கின்றது. இந்த ஓர் அடையாளத்தில், சுபாவத்தின்படியான மனுஷனைக் கவருகின்ற எதுவும் இல்லை; சுபாவத்தின்படியான மனுஷன் தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்துகையில், அவன் தன்னை மற்றவர்கள் நரி போலும், சிங்கம் போலும், புலி போலும் அல்லது தீண்டினால் பட்சித்துப்போடும் வேறு ஏதாவது கடுமையான மிருகம் போலும் கருத விரும்புகின்றான். இவ்விஷயத்தை, மேலங்கியிலுள்ள மரபுரிமை சின்னங்களில் நாம் பார்க்கலாம்; மகா வல்லவர்களின் கேடகங்களில் பட்சிக்கும் பறவைகளின், பட்சிக்கும் மிருகங்களின் சித்திரங்கள் இருப்பதையும் பார்க்கலாம்; இந்த மிருகங்கள் அச்சுறுத்தலையும், மூர்க்கத்தனத்தையும் சுட்டிக்காட்டுபவைகளாகும். ஆனால் தேவன், தம்முடைய இராஜரிக குடும்பத்திற்கான சின்னத்தை வெளிப்படுத்துகையில், அவருடைய ஒரே பேறான குமாரன், தேவனுடைய ஆட்டுக்குட்டி என்றும், அவருடைய ஜனங்கள் அனைவரும் அவருடைய ஆடுகள் என்றும் அழைக்கின்றார்; இது சாந்தத்திற்கும், ஆபத்தற்ற தன்மைக்கும், கனிவிற்கும் சின்னங்களாய் இருக்கின்றது. “”கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கின்றார்” என்பது அவருடைய ஜனங்களுக்கான சரியான உணர்வாகும் (சங்கீதம் 23:1).

பாலஸ்தீனியாவில் ஆடுகள் வளர்ப்பது என்பது, பெரிதளவில் காணப்பட்டது; எனினும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்காவிலுள்ள தற்கால முறைமைகளிலிருந்து, முற்றிலும் வேறுபட்டதான முறைகளிலேயே பாலஸ்தீனியாவில் ஆடுகள் வளர்க்கப்பட்டன. மந்தையினுடைய சொந்தக்காரர் அல்லது அவருடைய குமாரனே பொதுவாக மேய்க்கும் வேலையைச் செய்வார் (அ) சிலசமயம் மந்தையை பெருக்குவதில் அக்கறை காட்டும் நபர் வேலையில் அமர்த்தப்படுகின்றார்; உதாரணத்திற்கு யாக்கோபும் இப்படியாகவே தன்னுடைய மாமனாகிய லாபானுடன் மேய்ப்பனாக இருந்தார். அக்காலங்களில், இன்றைய காலங்களைக் காட்டிலும் ஆடுகளுக்கும், அவைகளின் மேய்ப்பனுக்கும் இடையே இருந்த உறவு மிக வித்தியாசமாக, மிகவும் நம்பகரமாக இருந்தது. மேய்ப்பன் தன்னுடைய ஆடுகளுடன் நன்கு பழக்கம் ஏற்படுத்திக்கொண்டவனாக இருக்கின்றான்; இன்னும் அவைகளை அன்புச் செய்கின்றான்; அவைகளை ஆஸ்தியாகவும், லாபம் தருபவைகளாக மாத்திரம் அன்பு செய்யாமல், அவைகளை நண்பர்கள், துணைவர்கள் போன்று கருதி அன்புச் செய்கின்றான்; அவைகளுடனே அவன் பேசுகின்றான், அவைகளுக்கான நன்மைக்கடுத்த காரியங்களில் பராமரிப்புச் செலுத்துகின்றான். இந்த உவமையில் குறிப்பிடப்பட்ட விசேஷித்த அம்சங்கள், இன்று வரையிலும், கிழக்கத்திய நாடுகளிலுள்ள மந்தைகளில் பார்க்கலாம் என்று சுற்றுப் பிரயாணிகள் நமக்குத் தெரிவிக்கின்றனர்; அதாவது தன்னுடைய மந்தையிலுள்ள ஒவ்வொரு தனிப்பட்ட ஆடுகளின் பெயர்களையும் மேய்ப்பன் அறிவான் என்றும், ஒவ்வொரு ஆட்டிற்கும் பெயர் வைத்திருக்கின்றான் என்றும், ஆடுகள் தங்களுடைய மேய்ப்பனை அறிந்திருக்கும் என்றும், மேய்ப்பனுடைய சத்தத்தை உடனடியாக ஆடுகள் அடையாளம் கண்டுகொள்ளும் என்றும், அவைகளை ஏமாற்ற முடியாது என்றும் சுற்றுப் பிரயாணிகள் நமக்குத் தெரிவித்தனர். உவமையின் இந்த விநோதமான வார்த்தைகளைச் சிலர் எப்படிப் பரீட்சித்துப்பார்த்து, நிரூபித்துக்கொண்டார்கள் என்றும் நமக்குத் தெரிவித்தனர்: ஒரு குறிப்பிட்ட ஆட்டின் பெயரைச் சொல்லி ஆட்டை அழைக்கும்படி ஒருவர், மேய்ப்பனிடம் கேட்டுக்கொண்டார்; அதாவது ஆடு, மேய்ப்பனிடம் வருகின்றதா (அ) இல்லையா என்பதைப் பார்க்க, இப்படி மேய்ப்பன் ஆட்டின் பெயரை அழைக்கச் சொன்னார்; தொலைத்தூரத்தில் இருக்கும் ஓர் ஆட்டை மேய்ப்பன் அழைத்தான்; உடனடியாக அந்தக் குறிப்பிட்ட ஆடு, அது நின்ற இடத்தில், அதன் தலையை உயர்த்தி, மேய்ப்பனை நோக்கிப் பார்த்தது; பெயர் மீண்டுமாக அழைக்கப்பட்ட போதோ, அந்த ஆடு மந்தையின் ஊடே நடந்து முன்னேறி, அவனுடைய பாதங்களின் அருகே வந்து நின்றது; அது கீழ்ப்படிந்ததின் காரணமாக, அதன் தலை மெல்ல அன்பாய்த்தட்டிக்கொடுக்கப்பட்டது. இப்படியாக ஆடு ஒருமுறைதான் செய்யுமோ என்ற எண்ணத்தில், இப்பரீட்சை மீண்டும் மீண்டுமாக நடத்தப்பட்டது; ஆடு மீண்டும் மீண்டுமாக அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து மேய்ப்பனிடம் வந்தது. இன்னொரு பயணி, மேய்ப்பனுடைய குரலைக் கொடுத்து, ஆட்டைப் பெயர்ச் சொல்லி அழைத்தார்; ஆனால் ஆடு செவி சாய்க்கவேயில்லை. மேய்ப்பனுடைய வஸ்திரத்தில், தான் காணப்படாததினால்தான் தன்னுடைய சத்தத்திற்கு ஆடு செவிக்கொடுக்கவில்லை என்று அந்தப் பயணி எண்ணி, பயணியும், மேய்ப்பனும் ஒருவருக்கொருவர் உடையை மாற்றிக்கொண்டனர்; ஆனாலும் அந்நியனுடைய குரலுக்கு ஆடு செவிசாய்க்கவில்லை; பின்னர் மேய்ப்பன் ஆடுகளுக்குச் செவிகொடுத்தப்போதோ, அவன் அந்நியனுடைய உடைகளில் இருந்தபோதிலும், ஆடுகள் மேய்ப்பனுடைய சத்தத்தை அறிந்திருந்தபடியால், உடனடியாகச் செவிசாய்த்தன.

நமது கர்த்தர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு, நன்கு பரிச்சயமாய் இருந்த இந்த உண்மைகளைப் பயன்படுத்தி, கர்த்தருடைய ஜனங்களுடன், மாபெரும் மேய்ப்பனின் குமாரனாகிய, அவர்களின் மேய்ப்பனாகிய தமக்கு இருக்கும் உறவை விவரித்தார்; இன்னுமாக அவருடைய மந்தையாய் உண்மையில் இருப்பவர்கள் அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்பார்கள் என்றும், எதிராளியானவன் கூடுமானால் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களை வஞ்சிக்கத்தக்கதாக, ஒளியினுடைய தூதனுடைய வேஷத்தைத் தரித்து வந்தாலும் ஏமாற்றம் அடையார்கள் என்றும் சுட்டிக் காண்பிக்கின்றார். நாம் கர்த்தருடைய மந்தையின் உண்மையான அங்கத்தினராக வேண்டும் என்பதும், அவருடன் நெருக்கமாய்ப் பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும், அவருடைய வார்த்தைகளை, அவருடைய சத்தத்தை அறிந்திருக்க வேண்டும் என்பதும், உத்தம சீஷர்களாய்க் காணப்பட வேண்டும் என்பதும்தான் முக்கியமான காரியமாய் இருக்கின்றது. இப்படியாகக் காணப்படுபவர்களையே, தம்முடைய தற்கால மந்தைக்காக கர்த்தர் நாடுகின்றார். தற்போதைய காலத்தில் அவருக்கு இரண்டு மந்தைகள் இருக்கவில்லை; அதாவது ஒரு மந்தை, அவருடைய சத்தத்தைக் கேட்டு, கீழ்ப்படிகின்றதாகவும், மற்றொரு மந்தை அவருடைய சத்தத்திற்குச் செவிச்சாய்க்காத மந்தைகளாகவும் அவருக்கு இல்லை. “”என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது.” நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது (வசனம் 27) என்று கர்த்தர் கூறுகின்றார். வார்த்தையிலும், மாதிரியிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள கர்த்தருடையச் சத்தத்திற்குக் கீழ்ப்படிதலுடன், அவரைப் பின்பற்றாதவர்கள் அவருடைய மந்தையல்ல இப்படிப்பட்டவர்கள் தற்கால சத்தியம் என்னும் புல்வெளிகளினிடத்திற்கும், அமர்ந்த தண்ணீரினிடத்திற்கும் வழி நடத்தப்படுகிறதில்லை; இவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாக இவர்களுக்குப் பந்தி ஆயத்தப்படுத்தப்படவில்லை; இவர்கள் கர்த்தருடைய வீட்டில் நீடித்து நிலைத்திருப்பதற்கு ஏதுவான தெய்வீக நன்மை மற்றும் கிருபை ஏற்படுத்தியுள்ள பாதையிலும் இல்லை (சங்கீதம் 23).

பிதாவாகிய தேவன் ஒரு நிழலான இராஜ்யத்தை அல்லது ஆட்டுத்தொழுவத்தை ஸ்தாபித்து, இஸ்ரயேல் தேசத்தை, தம்முடைய ஆடுகளாக ஏற்றுக்கொண்டார்; ஆனால் இவர்கள் தேசமாக வழிவிலகிப்போன ஆடுகளாகி, அவரை அறியாமல் போய்விட்டனர். இவர்களை நியாயப்பிரமாண உடன்படிக்கையினால் வேலியடைத்தார். இவர்கள் ஓர் இராஜா, ஓர் ஆளுநர் வேண்டும் என்று விரும்பினர்; தேவனும் இவர்களுடைய விருப்பத்தை அருளினார்; ஆனால் இந்த இராஜாக்களில் எவரும் உண்மையான மேய்ப்பனுமல்ல இன்னுமாக இவர்களில் எவரும் ஆடுகளைத் தகுந்த பிரியமான நிலைக்கும் கொண்டு வரவில்லை. இவர்களெல்லோரும் (இராஜாக்களெல்லாம்) போன பிற்பாடு, அநேகர் வந்து தங்களை மேசியாவென அறிவித்துக்கொண்டு, இஸ்ரயேலை வழிநடத்துவதற்கான உரிமையைத் தவறாய்ச் சொந்தம் கொண்டாடினார்கள். இவர்கள் பொய் மேசியாக்களாக காணப்பட்டனர். ஆடுகளினுடைய நன்மைக்காக அல்லாமல், சுயநலமான நோக்கத்தினாலும், தன்னைத்தான் உயர்த்திக்கொள்ளும் நோக்கத்தினாலும், செல்வம் திரட்டும் நோக்கத்தினாலும், ஆடுகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நாடின இவர்களை நமது கர்த்தர் கள்வர்களும், திருடர்களும் என்கிறார். இவர்கள் வாசல் வழியாக அல்லாமல், வேறு வழிகளின் மூலமாய் ஏறி உள்ளே குதித்துக் கர்த்தருடைய ஆடுகளை வெளியே கொண்டுவருவதற்கு முயன்றனர்; இவர்கள் நியாயப்பிரமாணம் எனும் வேலியின் மேலேறி உள்ளே குதிப்பதன் மூலம் அல்லது மண்ணைத் தோண்டி உள்ளுக்குள்ளாக வந்து ஆடுகளிடம் நெருங்கி, வழிநடத்துவதற்கு முயன்றனர்; இப்படியாக இஸ்ரயேலில் பெரும் பகுதியானவர்கள் தொழுவத்திலிருந்து, வழித்தவறிப் போய்விட்டனர். சிலர் விக்கிரகங்களுக்கு நேராகவும், வேறு சிலர் வெறுமனே வனாந்தரத்தில் சுற்றித்திரிவதற்குமென வழிநடத்தப்பட்டனர்.

இதுவே நமது கர்த்தருடைய முதலாம் வருகையின்போது இருந்த சூழ்நிலைகள் ஆகும்; இஸ்ரயேலுடனான தேவனுடைய உடன்படிக்கையானது, தேசத்தைச் சுற்றிலும் மதில் சுவராக நின்றுகொண்டிருந்தது; ஆனால் வாசலோ, மோசேயின் நியாயப்பிரமாணமாகிய இஸ்ரயேலின் [R2441 : page 64] உடன்படிக்கையில் அடையாளப்படுத்தப்படும் நீதியினால் பூட்டப்பட்டிருந்தது. உள்செல்லுவதோ (அ) வெளியேறுதலோ இல்லாதிருந்தது; அனைவரும் நியாயப்பிரமாணத்தின் கைதிகளாய்க் காணப்பட்டனர்; ஜீவனுக்கான வழி அல்லது வாசலாகிய கிறிஸ்து பிற்பாடு வெளிப்படுத்தப்படுவார் என்ற நம்பிக்கையில் பூட்டப்பட்டிருந்தது; இதற்கிடையில் வாசலானது பரிசேயர்கள் மற்றும் வேதபாரகர்களால், வைராக்கியமாய்ப் பாதுகாக்கப்பட்டு வந்தபொழுதிலும், ஆட்டுத்தொழுவத்தைச் சூறையாடும் வேலையை, சாத்தானின் ஊழியக்காரர்களாகிய கள்வர்களும், திருடர்களும் செய்துகொண்டு வருகின்றனர் என்ற உண்மையானது, முற்றிலுமாய் மறக்கப்பட்டுவிட்டது. (யோவான் 10:1,2,7,9; கலாத்தியர் 3:24; யோவான் 14:6; சகரியா 9:9-12).

நமது கர்த்தர் இயேசுவுங்கூட தம்முடைய ஜீவனை இழக்காமல், தொழுவத்தைத் திறப்பதற்கும், ஆடுகளைப் பொறுப்பேற்றுக்கொள்வதற்கும் சட்டப்படி முடியாது. இதுவே மாபெரும் மேய்ப்பனாகிய, பிதாவின் நோக்கமாய் இருக்கின்றது; மேலும் இக்கண்ணோட்டத்தின் அடிப்படையில்தான், கிறிஸ்து தம்முடைய ஜனங்களுக்குக் கொடுக்கும் விடுதலையை ஆடுகள் அடைவதற்கு முன்பாக, ஆடுகள், நியாயப்பிரமாணத்தினுடைய ஆதிக்கத்தின் கீழினின்று, தம்முடைய (நியமிக்கப்பட்ட மேய்ப்பனாகிய) குமாரன் மூலம் மீட்கப்படுவதற்காக, ஆடுகளை நியாயப்பிரமாணத்தின் கீழ் அடைத்து வைத்தார். இதுவே நல்ல மேய்ப்பனால், ஆடுகளுக்காக செய்த முதல் வேலையாகும்; அவர் தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுத்த காரியமானது, அவருடைய ஊழியத்தின் ஆரம்பத்தில், அதாவது மரணம் வரையிலும் தம்மை முழுமையாய் அர்ப்பணித்தக் காரியத்தை, ஞானஸ்நானம் எடுத்ததன் மூலம் அடையாளப்படுத்திக் காட்டினது முதலே ஆரம்பித்துவிட்டது. இப்படியாக ஆரம்பிக்கப்பட்டதும், தொடர்ந்து நிறைவேற்றப்பட்டதும், கல்வாரியில் பிற்பாடு நிறைவேற்றப்படப் போகின்றதுமான இந்தப் பலியைக் கருத்தில் கொண்டவராகவே, நமது மீட்பர், தம்மை ஆடுகளுக்காக தம்முடைய ஜீவனைக்கொடுக்கும் நல்ல மேய்ப்பனாக அறிவித்தார்.

நமது கர்த்தருடைய மரணமானது, இஸ்ரயேலை, நியாயப்பிரமாணத்தின் கீழான சாபத்தினின்று (தீர்ப்பினின்று) விடுவித்தது என்று அப்போஸ்தலர் கூறுகின்றார்; வாசலைக் காக்கும் காவல்காரன், ஆட்டுத்தொழுவத்தைத் திறந்துவிடத்தக்கதாக மாத்திரமல்லாமல், உண்மையான மேய்ப்பன் ஆடுகளைப் புல்வெளிக்கு நடத்துவதற்கும், ஆடுகள், அவருடைய ஆடுகளாக, அவரைப் பின்சென்று, முழுமையான சுதந்தரத்துடன் உள்ளும், புறம்பேயும் செல்வதற்கும் ஏதுவாக, உண்மையான மேய்ப்பன் ஆடுகளின் மீது அதிகாரத்தையும், ஆடுகளைத் தமக்குச் சொந்தமாக அடையத்தக்கதாகவும், அவரது மரணமானது நியாயப்பிரமாணத்தைத் திருப்திப்படுத்திற்று. எனினும் அநேக உண்மை ஆடுகள் தொழுவத்திலிருந்து வெளியேறி, பாவம் எனும் வனாந்தரத்தில் தொலைந்துப் போய்விட்டன என்று நமது கர்த்தர் சாட்சிப் பகர்ந்தார். இப்படிப்பட்டவர்களையும் மற்றும் தொழுவத்தில் இருக்கும் மீதியானவர்களையும் அழைப்பதே அவருடைய ஊழியமாக இருந்தது; அதாவது ஆயக்காரர்களையும், பாவிகளையும் மற்றும் தேவனை நெருங்கி வாழ்வதற்கு முயன்றுகொண்டிருப்பவர்களையும் (தொழுவத்தில் இருக்கும் மீதியானவர்களை) அழைப்பதே அவருடைய ஊழியமாக இருந்தது.

இவ்வாறாக உண்மையான மேய்ப்பன், தம்முடைய உண்மையான ஆடுகளின் மீது தமது அக்கறையைக் காண்பித்தார்; ஊனமுள்ளதும், பெலவீனமானதும், வாடி வதங்கி நலிந்துப் போனதுமான ஆடுகளாகிய தம்முடைய உண்மையான ஆடுகளின் மீது, தமது கவனத்தைச் செலுத்தினார். அவர் பாவிகளை மனந்திரும்பும்படி அழைத்தார்; மேலும் உண்மையான ஆடுகள், நியாப்பிரமாணத்தின் கீழ்த் தங்களுக்கிருந்த இயலாமைகளை உணர்ந்து, அவருக்குச் செவிச்சாய்த்து, மேய்ப்பனாகவும், தங்களின் ஆத்துமாக்களுக்குக் கண்காணியாகவும் இருந்த அவரிடத்திற்கு வந்தனர். ஆனால் மந்தையிலுள்ள அநேகம் ஆடுகள், உண்மையான ஆட்டிற்கான நிலையிலிருந்து மிகவும் தொலைவில் கடந்துப் போய்விட்டபடியினால், அவருடைய மந்தைக்கான நியமிக்கப்பட்ட எண்ணிக்கையை நிறைவு செய்யத்தக்கதாக, அவருடைய சத்தத்தைக் கேட்டவர்கள் போதுமானவர்களாக இல்லாததினால், இந்த நல்ல மேய்ப்பன், இந்தச் சுவிசேஷ யுகத்தில், தம்முடைய குரலை உயர்த்தி (தம்முடைய சரீரத்தின் அங்கங்கள் வாயிலாக பேசுவதன் மூலம்) புறஜாதிகள் மத்தியிலிருந்து, ஆடுகளை அழைத்துள்ளார்; முன்தீர்மானிக்கப்பட்ட அந்த எண்ணிக்கைக்குப் போதுமானவர்கள் செவிக்கொடுப்பார்கள்.

இந்தத் தற்காலத்தில் அழைக்கப்படும் அழைப்பானது, பொதுவான ஒன்றாய் இராமல் மாறாக, “”அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்ச் சொல்லிக் கூப்பிடுகிறான்” என்று வேதவாக்கியங்களில் காணப்படுகிறபடி, அது ஒரு விசேஷமான அழைப்பாய் இருக்கின்றது. “”கர்த்தர் தம்முடையவர்களை அறிவார்.” ஆடுகள் அவருடைய அழைப்பிற்குக் கீழ்ப்படிந்து, அவருக்குப் பின்செல்லுவதன் [R2442 : page 64] மூலமாக, ஆடுகள் அவருடைய மந்தைகளாக தங்களுக்கு இருக்கும் உறவை வெளிப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. இப்பொழுது அழைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதும், இறுதியில் தங்கள் அழைப்பையும் தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிப்படுத்துகிறதுமான மந்தை மாத்திரமே, “”சிறுமந்தையினராக” இருப்பார்கள் என்றும், இவர்களுக்கு அருளும் தொழுவமானது விசேஷமானது என்றும், அது இராஜ்யம் என்றும் வேதவாக்கியங்கள் நமக்குக் கூறுகின்றன. “”பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார் (லூக்கா 12:32).

இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதிலும், கர்த்தர் இந்த வகுப்பாரைப் பராமரித்துக்கொண்டு வருகின்றார்; இவர்கள் மற்றவர்களின் பார்வையில் கடுமையான சோதனைகள், சிட்சைகள், பாடுகளுக்குள் கடந்துப்போனவர்களாகக் காணப்பட்டாலும், இவர்களைக் கர்த்தர் விசேஷமாய் வழிநடத்தியுள்ளார், போஷித்துள்ளார் மற்றும் ஆசீர்வதித்துள்ளார். ஆம் நம்முடைய மேய்ப்பன் அறிவித்துள்ள பிரகாரம், தேவபக்தியாய் நடக்கின்றவர்கள் அனைவரும் துன்புறுத்தப்படுவார்கள். ஆனால் இது விசேஷமாய்த் தெரிந்துக்கொள்ளப்பட்டுள்ள மந்தைக்கு, விசேஷமான சோதனை காலம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்தத் தொழுவத்தில் அல்லாத வேறே ஆடுகள், அதாவது இராஜ்யத்திற்கான அழைப்புப் பெறாத வேறே ஆடுகளும் தமக்கு இருக்கின்றது என்று மேய்ப்பன் கூறியுள்ளதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வேறே ஆடுகள் இன்னமும், பாவம் எனும் வனாந்தரத்தில் அலைந்துக்கொண்டுதான் இருக்கின்றன் ஆனால் ஆயிர வருட இராஜ்யம் சமீபித்து இருக்கின்றது; அப்பொழுது கர்த்தர் தம்முடைய சிதறடிக்கப்பட்ட ஆடுகளை ஒன்று கூட்டுவார்; அதாவது அனைவரும், தமக்கு இசைவாக, தம்முடைய மந்தையாகக்கொண்டுவரப்படத்தக்கதாக, சாதகமான சூழ்நிலைகளின் கீழ் நீதியையும், தேவனுடன் ஒப்புரவாகுதலையும் விரும்பி, நாடும் அனைவரையும் கர்த்தர் ஒன்றுகூட்டுவார். இந்த யுகத்திலுள்ள, “”சிறுமந்தையினருக்கு,” அதாவது, “”இராஜ்யத்தின் சுதந்தரர்களுக்கு” மாத்திரமல்லாமல், தம்முடைய ஆடுகள் அனைத்திற்குமாக, நல்ல மேய்ப்பன் தம்முடைய ஜீவனை ஈடுபலியாகக் கொடுத்திட்டார். இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்ட பிற்பாடே, கர்த்தருடைய பெரிய மந்தை கூட்டிச்சேர்க்கப்படும் (மத்தேயு 25:31-32).

தெய்வீகத் திட்டத்தினுடைய மற்ற அநேக அம்சங்ளுக்குரிய திறவுகோலாகக் காணப்படும் இந்த உவமையினுடைய திறவுகோலுக்கான ஒரு பாகமானது, இராஜ்யத்தின் உடன்சுதந்தரராகும் பொருட்டு இப்பொழுது அழைக்கப்பட்டு, தெரிந்தெடுக்கப்படும் “”சிறுமந்தையினர்” பலியாகிட வேண்டும் எனும் உண்மையில் அடங்கியுள்ளது; இராஜாவின் மகனாகிய மேய்ப்பன் தம்மைத் தேவனுடைய ஆட்டுக்குட்டியாகப் பலிச்செலுத்தினார்; மற்றும் அவர் நியாயப்பிரமாணத்தின் கீழ் அடைக்கப்பட்டவர்களுக்காக வாசலைத் திறந்துவிட்டதுமல்லாமல், அதே பலியினால், இனிமேல் அவர் கூட்டிச்சேர்க்கப்போகின்ற மற்ற ஆடுகளையுடைய ஒட்டுமொத்த மனுக்குலத்தையும் அவர் மீட்டுள்ளார்; இதுபோலவே இப்பொழுது அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கும், “”சிறுமந்தையின்” ஆடுகளாகிய அனைவரும் தேவனுடைய ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவுடன் பாடுபட வேண்டும் மற்றும் பரிசுத்தமும், தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக புத்தியுள்ள ஆராதனையாக தங்களை, அனைவரும் ஒப்புக்கொடுக்க வேண்டும். “அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம் நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்” (ரோமர் 12:1; 1 யோவான் 3:16).

இக்கண்ணோட்டத்திலிருந்து பார்க்கப்படும்போது நமது கர்த்தர் பிதாவின் ஆட்டுக்குட்டியாகவும், உலகத்திற்கான பாவநிவாரணபலியாகவும் இருப்பதினால், இயேசுவின் மந்தையினராகிய நாம், கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, நிறைவேற்றுபவர்களாய் இருப்போம் என்பது பார்க்கப்படலாம். “”இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்” (கொலோசெயர் 1:24). இன்னுமாக இம்மந்தையில் உள்ளவர்கள், “”மரணம் வரையிலும்” மேய்ப்பனைப் பின் தொடரும் விஷயத்தில் உண்மையுள்ளவர்களாய் இருந்தால், அவர்கள் மேய்ப்பனுடைய சரீரத்தின் அங்கங்களாகக் கருதப்படுவார்கள் என்று வேறு வேதவாக்கியங்கள் நமக்குக் காண்பிக்கின்றன. இவ்வாறாக முழுச் சுவிசேஷ யுகமும், கிறிஸ்துவுடன் பாடுபடுவதற்கும், அன்றாடம் மரிப்பதற்கும், சகோதர சகோதரிகளுக்காக ஜீவனை ஒப்புக்கொடுப்பதற்குமான காலமாகக் காணப்படுகின்றது; மேலும் இந்தப் பலியானது, இந்த யுகத்தின் முடிவில் நிறைவடையாத வரையிலும், புதிய உடன்படிக்கையானது மனுக்குலத்தின் முன்பாக வைக்கப்படவும் முடியாது, மாபெரும் மேய்ப்பனும், அதாவது தலை மற்றும் சரீரம் முழுமையடைந்திருக்காது. பின்னர் ஆவியும், மணவாட்டியும், “”வா என்பார்கள்;” ஆனால் இப்பொழுது ஒருவனைப் பிதா இழுத்துக்கொள்ளாதது வரையிலும், அவன் “”சிறுமந்தைக்குள்” வரமாட்டான்.

இராஜ்யத்தில் அவருடன் இணைந்திருக்கும்படிக்கு இப்பொழுது அழைக்கப்படும் அனைவரிடத்திலும், மந்தையின் மாபெரும் பிரதான மேய்ப்பனுடைய ஆவிக் காணப்பட வேண்டும். நல்ல மேய்ப்பன் தம்முடைய ஜீவனை மந்தைக்காகக் கொடுத்தது போன்று, இவர்கள் அனைவரும் கூடச் சத்தியத்திற்கான ஊழியத்தில், தங்களது ஜீவன்களைக் கொடுப்பார்கள். நல்ல மேய்ப்பன், தமக்கும், ஆடுகளினால் தமக்கும் எவ்வளவு ஆதாயம் கிடைக்கும் என்பதையும் பொருட்படுத்தாமல், ஆடுகளின் தேவைகளை நிறைவேற்றுவது போலவே, அவருடைய ஆவியையுடைய அனைவரின் விஷயத்திலும் காணப்படும்; இவர்கள் இழிவான ஆதாயத்திற்காகவோ, மனுஷர் மத்தியிலான கனத்திற்காகவோ, பூமிக்குரிய ஆதாயத்திற்காகவோ எவ்விதத்திலும், கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஊழியம் செய்யாமல், மாறாக தேவன் மீதான அன்பினாலும், சத்தியத்தின் மீதான அன்பினாலும், மந்தையாகிய சகோதர சகோதரிகளின் மீதான அன்பினாலுந்தான் ஊழியம் புரிகின்றனர்.