R5377 – அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R5377 (page 10)

அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி

PRINCE OF DARKNESS VS. PRINCE OF LIGHT

லூக்கா 11:14-26, 33-36

“”ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு.” – லூக்கா 11:35

தனிப்பட்ட விதத்தில் பிசாசு என்று ஒருவன் இருக்கின்றான் என்றும், அவன் ஆவியின் ஜீவிகளாய்க் காணப்படும் அசுத்த ஆவிகளின் சேனைக்கூட்டத்திற்கு அதிபதியாய் இருக்கின்றான் என்றும், அவன், தேவனுடைய அரசாளுகைக்கு எதிராக எதிர்ப்பவன் என்றுமுள்ள வேதாகமத்தின் போதனைகளை உலக ஞானிகள் எவ்வளவு தான் இகழ்ந்தாலும், இதுவே ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தல் வரையிலான வேதாகமத்தின் போதனையாக இருக்கின்றது என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்வோமாக. உலக ஞானிகளின் விஷயத்தில் அவர்களது (நல்ல) சிந்திக்கும் திறனானது, தேவனுடைய வார்த்தையினால் வழிநடத்தப்படாததே அவர்களுக்கான பிரச்சனையாகும். மனுஷருடைய கண்களுக்குப் புலப்படாத ஒரு தேவனிடத்திலும், ஒரு தேவதூதர் சேனையாகிய, ஆவிக்குரிய ஜீவிகளான அவருடைய ஊழியக்காரர்களிடத்திலும் நம்பிக்கை வைப்பது கடினமாய் இருக்கின்றது என உலக ஞானிகள் கூறுகின்றனர். இதைக் காட்டிலும் இன்னும் இவர்களுக்குக் கடினமாக, ஆம் காரணகாரியத்திற்கு உட்படாததாய் இருப்பது என்னவெனில், தேவனுக்கு எதிராளிகளாக இன்னுமொரு ஆவிக்குரிய அதிபதியும், இன்னுமொரு ஆவிக்குரிய சேனையும் இருப்பதுதான்; தேவன் தம்மை எதிர்க்கக்கூடிய, சிருஷ்டிகளைச் சிருஷ்டிப்பது என்பது அல்லது ஒருவேளை பரிசுத்தமானதாகவே அவர் சில சிருஷ்டிகளைச் சிருஷ்டித்திருக்க, அந்தச் (சில) சிருஷ்டிகள் நீதிக்கு எதிராளிகளாக மாறியிருக்க, சர்வ வல்லமையுள்ள சிருஷ்டிகர், அந்தச் சிருஷ்டிகளை அழிக்காமல், அப்படியே தீமையாக எதிர்ப்பதைத் தொடர்வதற்கு அனுமதிப்பது என்பது நினைத்தே பார்க்க முடியாத காரியமாக இருக்கின்றது என்பதே இந்த உலக ஞானிகளுடைய வாதமாக இருக்கின்றது.

[R5378 : page 10

சாத்தான்தான் முதலாவதாக மீறுதலுக்கு உட்பட்டார் என்றும், மீறுதலுக்கு உட்படுவதற்கு முன்னதாக அவர் உயர்வான நிலையில் இருக்கும் கேரூபாக இருந்தார் என்றும், பெருமை மற்றும் பேராசையின் காரணமாகத் தேவனிடத்திலான தன்னுடைய உண்மையை இழந்து போனார் என்றும், இன்று அசுத்த ஆவிகளின் சேனைகள் என்று வேதாகமம் கூறும் இவர்கள் கீழ்ப்படியாமைக்குள் வரத்தக்கதாக, இவர்களைச் சாத்தான் வஞ்சித்தார் என்றும் வேதாகமம் விவரிக்கின்றது. இந்த அசுத்த ஆவிகளின் சேனைகளானது, நமது பூமியுடன் தொடர்புடையவர்களாக இருக்கிறதாகவே வேதவாக்கியங்கள் கூறுகிறதே ஒழிய, எங்கோ தீச்சூளையில் காணப்பட்டு, மரித்த மனிதர்களைச் சித்திரவதைப்படுத்துவதாகக் கூறவில்லை.

இந்த எதிர்ப்புகளையெல்லாம் சமாளிப்பதற்குத் தேவனிடம் பலம் இல்லை என்று வேதாகமம் சுட்டிக்காட்டாமல், மாறாக இவர்களைச் சிலகாலம் அனுமதித்துள்ளார் என்றும், மனிதர்களுக்கும், தேவதூதர்களுக்கும் படிப்பினையாக, பாவம், கோபம், வன்மம், பகைமை, பொறாமை ஆகியவற்றின் பலனை வெளிப்படுத்துவதற்கென இவர்களை அனுமதித்துள்ளார் என்றும் வேதாகமம் சுட்டிக்காட்டுகின்றது. இவர்கள் சில கட்டுப்பாடுகளின் கீழ்க் காணப்படுகின்றனர்; இது குறித்து அப்போஸ்தலர், “”அந்தகார சங்கிலிகள்” எனக் குறிப்பிடுகின்றார். ஜலப்பிரளயத்தினுடைய அழிவிற்குப் பிற்பாடு, இவர்கள், மனித உருவம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் இவர்கள் மனுக்குலத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள நாடுகின்றனர்; மேலும் இதில் இவர்கள் எந்தளவுக்கு ஜெயம் அடைகின்றார்களோ, அந்தளவுக்கு, இவர்களுக்குப் பலியாடாக இருக்கும் மனுஷன் தீய ஆவிகளினால் ஆட்டுவிக்கப்படுபவனாக இருப்பான். முழுமையாய் இவர்கள் ஒரு மனுஷனிடத்தில் ஜெயம் அடைந்துவிட்டார்களெனில், அம்மனுஷன் பிசாசினால் பிடிக்கப்பட்டவனாக, பித்துப்பிடித்தவனாகி இருப்பான்.

பித்து/பைத்தியம் பிடித்தவர்களுடைய காப்பகங்களில் காணப்படுபவர்களில் பாதிப்பேர், பிசாசினால் பிடிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது; இந்தப் பிசாசுகள் நமது கர்த்தருடைய ஊழிய காலங்களில் தொடர்புடையதாக அடிக்கடி (வேதாகமத்தில்) குறிப்பிடப்பட்டுள்ள பிசாசு கூட்டங்களிலுள்ள பிசாசுகள்தான்; முந்தின காலங்களில் சூனியக்காரிகள், மந்திரவாதிகள், மாயவித்தைக்காரர்கள், முதலானவர்கள் மூலமாகவே இவர்கள், மனுக்குலத்துடன் தொடர்பு வைக்க முயன்றனர்; இன்றோ, ஆவியுலக ஊடகங்கள், ஆவியுலக தொடர்பு பலகைகள் மூலம், இவர்கள் மனுக்குலத்துடன் தொடர்பு வைக்க நாடுகின்றனர். இருண்ட யுகத்தின் போது, மனதில் பதிய வைக்கப்பட்ட இந்தப் பிசாசுகளின் உபதேசங்களினால் வஞ்சிக்கப்பட்ட மனுக்குலமானது, மரித்தவர்கள் நித்தரையில் இருக்கின்றனர் என்றும், மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள் என்றும் வேதாகமம் கொடுக்கும் சாட்சியினைப் புறக்கணித்துவிட்டது (1 தீமோத்தேயு 4:1; பிரசங்கி 9:5). ஆயிர வருட காலங்களில், “”திரும்பக்கொடுத்தலின் காலங்களில்,” “”கிறிஸ்துவின் நாளில்,” புதிய யுகத்தின் காலைப்பொழுதில் மரித்தவர்கள் விழித்துக்கொள்வது வரையிலும், மரித்தவர்களுடைய, “”யோசனைகள் அழிந்தே” இருக்கும் (அப்போஸ்தலர் 3:21; பிலிப்பியர் 1:10). இன்றைய பாடத்தில், பிசாசினால் பீடிக்கப்பட்ட மனுஷனை ஆண்டவர் விடுவிப்பதை நாம் பார்க்கப் போகின்றோம். பிரச்சனையை, சூழ்நிலையை ஜனங்கள் நன்கு உணர்ந்துக்கொண்டனர், ஆயினும் ஆண்டவருக்கு எதிராக இருந்த காரணத்தினால், ஜனங்களில் சிலர், பிசாசுகள் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்ததற்கான காரணம், இயேசு பிசாசுகளின் அதிபதியாகிய சாத்தானாக, பெயல்செபூலாக இருக்கின்றதாக, தீமையாய்ப் பேசினார்கள். இன்னும் சிலர், “”உம்முடைய அற்புதங்கள் அனைத்தும் பூமிக்குரியவைகளுக்குத் தொடர்புடையவைகளாக இருக்கின்றது; பரலோகத்தில் / வானத்தில் ஏதேனும் ஓர் அடையாளத்தைக் காண்பியும்” என்று கேட்டார்கள்.

சாத்தான் தன்னுடைய சொந்த சேனையையே விரட்டுவது என்பது, தீயவர்களின் பாளையத்திற்குள்ளாகவே யுத்தம் ஏற்பட்டுள்ளதைக் குறிக்கின்றதாய் இருந்து, சாத்தானுடைய இராஜ்யம் பிரிந்துப்போய், வீழ்ந்துப்போவதைச் சுட்டிக்காண்பிக்கின்றது என்று கூறி, தாம் பிசாசுகளின் அதிபதியாய் இராமல், வெளிச்சத்தின் அதிபதியாக இருப்பதைக் காண்பிப்பதின் மூலம், அவருக்கு எதிராக உரைக்கப்பட்ட குற்றச்சாட்டிற்கு இயேசு பதில் கொடுத்தார். சாத்தான், சாத்தானையே துரத்தியடிப்பது என்பது, முட்டாள்தனமான காரியமாய் இருக்கும்; மேலும் இப்படியாகக் கூறுவது என்பது, அர்த்தமற்ற ஒன்றாகவும் இருக்கும். “”பிசாசுகளைத் துரத்துவதற்கு வேறே யூதர்களும், இதே வல்லமையைச் செயல்படுத்தியிருக்க, அந்த யூதர்கள் ஜனங்களால், பிசாசுகளின் அதிபதி என்று ஒருபோதும் குற்றம் சாட்டப்படவில்லை என்றும், பிசாசுகளுக்கு அநேகம் அதிபதிகள் எவ்வாறு இருக்கக்கூடும்? என்றும், தமக்கு விரோதமான அவர்களது பேச்சு நியாயமானதா என்று ஜனங்கள் நிதானித்துக்கொள்ள வேண்டும் என்றும் இயேசு கூறினார். இன்னுமாக தாம் தேவனுடைய வல்லமையைக் கொண்டு, தேவனுடைய விரலைக்கொண்டு, பிசாசுகளைத் துரத்துகின்ற உண்மையை உணர்ந்துக்கொள்பவர்களுக்கு, மற்றவர்களைக் காட்டிலும் அதிகமான அளவில் தம்மிடத்தில் காணப்படுவதும், தம்முடைய அப்போஸ்தலர்கள் மூலமாகவும் தம்மால் செயல்படுத்தப்படுவதுமான இவ்வல்லமையானது, தேவனிடமிருந்து, வந்துள்ள விசேஷித்த ஈவிற்குச் சாட்சியாகவும், தேவனுடைய இராஜ்யம் சமீபித்துள்ளது, அதாவது தேவனுடைய இராஜ்யம் உங்கள் மத்தியில் உள்ளது என்ற தம்முடைய சாட்சிக்குக் கூடுதல் சாட்சியாகவும் இருக்கின்றது என்று இயேசு கூறினார்.”

ஆனால் அந்தத் தேசம், கிறிஸ்துவைப் புறக்கணித்தப்போது, தேவனால் அளிக்கப்பட்ட இராஜ்யமானது, அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. ஈவானது நிறுத்தப்பட்டது. அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரையிலும் தேவனுடைய கிருபையினின்று விலக்கி வைக்கப்பட்டனர்; பிற்பாடு அதுமுதல், கிருபை மற்றும் சத்தியத்தின் செய்தியானது வேறொரு இஸ்ரயேலரைச் சேர்த்துக்கொண்டிருக்கின்றது; முதலாவதாக யூதர்கள் மத்தியில் கபடற்ற இஸ்ரயேலர்களாய் இருப்பவர்களை இச்செய்தியானது இழுத்துக்கொண்டது, பிற்பாடு இங்கும், அங்குமாய்ச் சென்று ஒவ்வொரு தேசத்திலுமிருந்து, இந்த வகுப்பாருக்கு, அங்கங்களைச் சேர்த்துக்கொண்டிருக்கின்றது.

பிசாசுகளைத் துரத்துவதற்கான இயேசுவின் வல்லமையானது, அவர் இவ்வுலகத்தின் அதிபதியானவனை, அந்தகாரத்தின் அதிபதியானவனாகிய சாத்தானைக் கையாளுவதற்கு, முற்றிலும் திறமிக்கவர் என்பதைக் காட்டுகின்றதாய் இருக்கின்றது; இன்னுமாக அக்காலத்தில் ஒருவேளை இராஜ்யமானது ஸ்தாபிக்கப்பட்டிருக்குமாயின், சாத்தானும், அவனுடைய தூதர்களும் கட்டப்பட்டு வைத்திருக்கப்பட்டிருப்பார்கள் என்பதையும் காட்டுகின்றதாய் இருக்கின்றது. எனினும் இயேசுவும், இராஜ்யமும் அச்சமயம் புறக்கணிக்கப்படும் என்று முன்னறிந்து, தேவனால் முன்னறிவிக்கப்பட்டுள்ளபடி, சாத்தானைக் கட்டும் வேலை அச்சமயம் நடைபெறவில்லை, மற்றும் இயேசுவின் இரண்டாம் வருகை வரையிலும் அவ்வேலையானது காத்திருப்பில் வைக்கப்பட்டது. இதற்கிடையில் இராஜ்யத்தில் இயேசுவுடன் உடன் சுதந்தரர்களாய்க் காணப்படும்படிக்கு, அவருடைய மணவாட்டி வகுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க, அவர் இராஜ்யத்தின் காலத்தில் தமது மாபெரும் வல்லமையையும், ஆளுகையையும் கையில் எடுத்துக்கொள்வார். அப்பொழுது அவர் பிசாசையும், அவனுடைய தூதர்களையும் கையாளுவார்; ஆம் விழுந்துபோன மனுக்குலத்தை மிகவும் ஆட்டுவித்துள்ள சாத்தானின் ஆவியையும், பாவத்தையும் விருத்தியாக்கின அனைவரையும் கர்த்தர் கையாளுவார்.

சாத்தான் கட்டப்படுதல்

இந்தச் சுவிசேஷ யுகத்தினுடைய முடிவில் சாத்தான் ஆயிர வருடமளவும் கட்டப்படுவார் என்றும், வெளிச்சத்திற்குப் பதிலாக இருளைக் காண்பித்து, பரம பிதாவை மிக மோசமானவராக தவறாய்க் காட்டி, மில்லியன் கணக்கான மனுஷர்கள் பிறந்து, அவர்கள் நித்தியமான சித்திரவதைக்குள் கடந்துப்போக வேண்டும் என்று பிதா திட்டம் பண்ணியுள்ளதாக அவரைத் தவறாய்க் காட்டி, ஆறாயிரம் வருடங்களாக சாத்தான் மனுக்குலத்தை வஞ்சித்து, ஏமாற்றிக்கொண்டிருந்தது போன்று, அவன் இனிமேல் மனுக்குலத்தை வஞ்சிக்கமாட்டான் என்றும் நமது கர்த்தர் கூறியுள்ளார்.

தற்காலத்தில் உலகத்தின் மீதான சாத்தானுடைய கட்டுப்பாட்டை, ஆயுதம் தரித்த பலவான் தன்னுடைய அரண்மனையைப் பாதுகாத்துக்கொண்டிருப்பதற்கு ஒப்பிட்டு, கர்த்தர் இயேசு சித்தரிக்கின்றார். சாத்தானைக் காட்டிலும் பலமானவர் வந்து, சாத்தானை மேற்கொண்டு, சாத்தானால் அபகரித்து வைக்கப்பட்டுள்ள உடைமைகளை எடுத்துக்கொள்வது வரையிலும், சாத்தான், உலகத்தின் மீதான தனது கட்டுப்பாட்டைத் தக்க வைத்துக்கொள்வார். தம்முடைய மேசியா – இராஜ்யம், சாத்தானுடைய இராஜ்யத்தைக் காட்டிலும் பலமானதாகவும், அவனுடைய இராஜ்யத்தைக் கட்டுப்படுத்தி, அவனைக் கட்டும் என்று இயேசு முன்னுரைத்தார். இதன் விளைவாக, ஆறாயிரம் வருடங்களாக மனுக்குலத்தின் மீது காணப்பட்ட பாவம் மற்றும் மரணத்தினுடைய சாபத்தினின்று, மனுக்குலம் விடுவிக்கப்படும். மேசியாவின் இராஜ்யம் மாபெரும் ஏழாம் நாளில் அல்லது ஓய்வுநாளில் காணப்படும்; அப்பொழுது இரட்சகரை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும் இளைப்பாறுதலுக்குள் பிரவேசிப்பார்கள்.

இதற்கிடையில், இந்தச் சுவிசேஷ யுகத்தில், பிதாவின் திட்டத்திற்கு ஏற்ப, இயேசு தம்முடைய செய்தியின் மூலமாகவும், அப்போஸ்தலர்களுடைய செய்தியின் மூலமாகவும், இராஜ்யத்தில் தம்முடன் உடன் சுதந்தரர்களாகவும் இருக்கும்படிக்கு, உலகத்திலிருந்து ஒரு மணவாட்டி [R5378 : page 11] வகுப்பாரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கின்றார். இந்த வகுப்பாரிலுள்ள அனைவருடைய உண்மையையும் பரீட்சிக்கும்படிக்கு, சாத்தானுக்கு அதிகமான சுதந்தரம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு எஜமான்கள் மாத்திரமே இருக்க முடியும். ஜனங்கள் ஒன்றில் அறிந்து அல்லது அறியாமையில் இவர்களுள் ஒருவரைச் சேவிக்கின்றனர். “”என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்” என்று இயேசு கூறினார்.

முழு உலகமும் (சாத்தானால்) ஆட்டுவிக்கப்பட்டுள்ளது

இந்த உலகத்தின் அதிபதியானவனாகிய சாத்தான், “”இன்று கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் கிரியைச் செய்து வருகின்றான்” என்று பரிசுத்தவானாகிய பவுல் தெரிவிக்கின்றார். இயேசுவும் கூட இதே கருத்தைக்கொண்டிருந்து, இச்சம்பவத்தில் தம்மால் சாத்தானின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பிசாசு பிடித்திருந்த மனுஷனை, உலகத்திற்கு ஒப்பிடுகின்றார். இப்படியாகவே, கிறஸ்துவை ஏற்றுக்கொள்பவர்கள் அனைவரும், பிசாசின் வல்லமையினின்று விடுவிக்கப்படுகின்றனர். பாவமானது உங்களுடைய அழிவுக்கு ஏதுவான சரீரங்களில் ஆளுகைச் செய்யாதிருப்பதாக” (ரோமர் 6:12).

இவர்களுடைய இருதயங்கள், பெருக்கி, ஜோடிக்கப்பட்டிருந்ததாக, அதாவது பாவங்கள் மன்னிக்கப்பட்டு, தேவனுடைய கிருபையை ஏற்றுக்கொண்ட இருதயங்களாக இருப்பதாக இயேசு குறிப்பிடுகின்றார். ஆனால் உலகத்தின் ஆவி மூலம், அதாவது பெருமை, கோபம், வன்மம், பகை, சண்டை, மாம்சம் மற்றும் பிசாசின் கிரியைகள் மூலம் இப்படியான இருதயமுடையவர்களிடத்தில் மீண்டும் ஆதிக்கம் பெற்றுக்கொள்வதற்குச் சாத்தான் நாடுவான் என்றும் இயேசு கூறுகின்றார் (மத்தேயு 12:43-45). “”விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்” என்று அப்போஸ்தலர் எழுதுகின்றார் (1 பேதுரு 5:9). ஒருவேளை சாத்தான் எதிர்க்கப்படவில்லையெனில், தேவனைப் பற்றும் அறிவினால் உண்டான வெளிச்சமும், ஆசீர்வாதமும் சாபமாகவும், பாதிப்பாகவும் ஆகிவிடும், மேலும் அந்த நபர், கிறிஸ்துவுடனான உறவிற்குள் வருவதற்கு முன்பாக இருந்ததைக் காட்டிலும், கேடான நிலையில் காணப்படுவார்.

இதை வலியுறுத்தும் வண்ணமாக, விளக்கானது, மரக்காலால் மூடி வைக்கப்படாமல், மாறாக நன்மை உண்டாகத்தக்கதாக, அதாவது வெளிச்சம் கொடுக்கத்தக்கதாக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார்; இதுபோலவே பெற்றுக்கொள்ளப்பட்ட சத்தியத்தின் வெளிச்சமும், தேவனுடைய கிருபையும், மறைத்து வைக்கப்படாமல், மாறாக தேவன் மகிமைப்படத்தக்கதாக, பிரகாசிக்கப் பண்ண வேண்டும் என்று இயேசு கூறினார். இப்படிச் செய்யவில்லையெனில் ஒளியானது அணைந்துப்போய், இருள் காணப்படும். கண் என்பது அறிவைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; மேலும் எதுவரையிலும் நாம் உண்மையான பிரகாசத்தை (அ) அறிவைப் பெற்றிருக்கின்றோமோ, அதுவரையிலும் முழுச்சரீரமும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்; ஒருவேளை அறிவானது அழிக்கப்பட்டுவிட்டால், ஒருவேளை கண்ணானது குருடாகிவிட்டால், முழுச்சரீரமும் பாதிப்படைந்து இருளில் காணப்படும்.
வெளிச்சத்தை அடைகின்ற ஒவ்வொருவரும் அதனை இழந்துப்போய், இருளை அடையாதபடிக்கு, அந்த வெளிச்சத்தினுடைய விலையேறப்பெற்றவைகளுக்குச் செவிசாய்க்க வேண்டும். கண், ஒளி என்பது இங்கு, நம்மை ஆசீர்வதிப்பதற்கு அதிகமான வல்லமையைக் கொண்டிருக்கும் பரிசுத்தஆவியினால் உண்டாகும் பிரகாசிப்பித்தலைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது; மேலும் இதை இழந்துப்போவது என்பது, கர்த்தரைப் பற்றின அறிவை நாம் அடைவதற்கு முன்பு, நாம் அடைந்திருந்த இருளைக் காட்டிலும், அதிகமான இருள் அடைவதைக் குறிக்கின்றதாய் இருக்கும்.