HG80
(Harvest Gleaning, Vol -2, p.80 சில பகுதிகள் மாத்திரமே இப்பாடத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது)
“”இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, நீ அநேகக் காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.” – லூக்கா 10:41-42
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் நாம் நல்லதும், கெட்டதுமான விருப்பங்களையும் மற்றும் திட்டங்களையும்/கோரிக்கைகளையும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றோம். நாம் இவைகளில் ஏதேனும் ஒன்றை எப்போதும் தெரிந்தெடுத்துக்கொண்டு இருக்கின்றோம்; ஒன்றில் உற்சாகமாய்த் தெரிந்துக்கொள்கின்றோம், இல்லையேல் ஒருவேளை தெரிந்துக்கொள்ள தவிர்க்கும் பட்சத்தில், என்ன சம்பவிக்கும் என்பதை அறிந்தவர்களாக அப்படியே ஏற்றுக்கொள்கின்றவர்களாகவும் இருக்கின்றோம். இந்தப் பல்வேறு திட்டங்கள்/ கோரிக்கைகளின் விஷயத்தில் சரியான தெரிந்துக்கொள்ளுதலின் முக்கியத்துவமானது இளைஞர்களால் சரிவர புரிந்துக்கொள்ளப்படுவதுமில்லை, உணர்ந்துகொள்ளப்படுவதுமில்லை. வருடங்கள் கடந்து செல்லுகையில், அனுபவப் பாடங்களை நாம் கற்றுக்கொள்ளுகையில், முடிவு எடுக்கும் திறனை அடைகின்றோம்; அதாவது சரியாய்த் தெரிந்துக்கொள்வதின் முக்கியத்துவத்தையும், நல்ல அல்லது கெட்ட தூண்டுதல்களையும், வாய்ப்புகளையும் ஏற்றுக்கொள்வது அல்லது புறக்கணிப்பது என்பதின் அடிப்படையிலேயே நமது எதிர்க்கால ஜீவியம் அமையும் என்பதையும், நமது எதிர்க்கால ஜீவியம் நம்மையே சார்ந்துள்ளது என்பதையும் நாம் கற்றுக்கொள்கின்றோம்.
இது எப்பொழுதும் ஓரளவுக்கு உண்மையாகவே இருந்துள்ளது, ஆனாலும் முன்பில்லாத அளவுக்கு, நம்முடைய நாட்களிலேயே மிகவும் உண்மையாகவும் இருந்துள்ளது, ஏனெனில் நம்முடைய முன்னோர்களைப் பார்க்கிலும், அதிகமான வாய்ப்புகளுள்ள காலத்திலேயே நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றவர்களாய் இருக்கின்றோம். நம்முடைய முன்னோர்களைக் காட்டிலும் நமக்கான அனுபவங்களும் வாய்ப்புகளும் கிட்டத்தட்ட ஏழு மடங்குக்குக் காணப்படத்தக்கதாக, நன்மைக்கும், தீமைக்கும் ஏதுவான நமது வாய்ப்புகளை, நவீன கண்டுபிடிப்புகளும், தொலைப்பேசிகளும், இயந்திரங்களும், அஞ்சல்களும், தந்திகளும், அச்சகங்களும் வெகுவாய்ப் பெருக்கியுள்ளது. இதினிமித்தம் நம் மீதும், அனைத்து மனுஷர்கள் மீதும், அதிலும் விசேஷமாக தெய்வீகச் சத்தியத்தினால் வெளிச்சமூட்டப்பட்டு, தேவனுடைய குடும்பத்திற்குள் தத்தெடுக்கப்பட்டுத் தேவனுடைய ஸ்தானாதிபதிகளாக இருக்கும்படிக்குப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு, பரலோகத்திலுள்ள பிதாவுக்கு மகிமையாக, தங்களிடத்திலுள்ள வெளிச்சத்தை மனுஷர்கள் முன்பாகப் பிரகாசிக்கும்படியான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களுமாய் காணப்படுபவர்கள் மீதும், எத்தகைய ஒரு பொறுப்புச் சுமத்தப்பட்டுள்ளது.
நம்முடைய பாடத்தின் ஆதார வசனமானது, இரண்டு நல்ல விஷயங்களுக்கிடையேயுள்ள தெரிந்துக்கொள்ளுதலைக் குறிக்கின்றதாகவும், கர்த்தருக்கு உண்மையாய் இருப்பவர்கள் ஒன்றில் நல்லதை அல்லது சிறந்ததைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றதாகவும் இருக்கின்றது. ஆதார வசனத்தின் கருத்தானது, கர்த்தருடைய ஜனங்களென உண்மையாய் ஆகுகின்றவர்களுக்கு விசேஷித்த அழுத்தத்துடன் பொருந்துகின்றதாகவும் இருக்கின்றது. மார்த்தாள் நல்ல பங்கைத்தான் தெரிந்துக்கொண்டிருந்தாள், அவள் உண்மையில், “”அசதியாயிராமல், ஜாக்கிரதையாயிருந்து; ஆவியிலே அனலாயிருந்து, கர்த்தருக்கு ஊழியஞ்செய்தாள்;” மேலும் மார்த்தாளுடைய நடத்தையானது, கர்த்தரால் மிகவும் மதிக்கப்பட்டது. மரியாள் விருந்தோம்பல் வேலையில் அக்கறையற்று இருக்கிறாள் என மார்த்தாள் எண்ணிக்கொண்டு, மரியாளுக்கு எதிராக முறுமுறுக்கவில்லையெனில், நமது கர்த்தர் இரண்டு சகோதரிகளை வித்தியாசப்படுத்திக் காட்டுவதும், மரியாளின் நடத்தைக்கு நமது கர்த்தர் விசேஷித்த அங்கீகரிப்பு வழங்கினதும் வெளிப்பட்டிருக்காது. இரண்டு சகோதரிகளையும் அங்கீகரித்த நமது கர்த்தர், வாய்ப்பைப் பயன்படுத்தி, மார்த்தாளுடைய நடத்தையானது நிச்சயமாய் மதிக்கப்பட்டாலும், நிச்சயமாய் அங்கீகரிக்கப்பட்டாலும், மரியாளுடைய போக்கே, இன்னும் அதிகமான அங்கீகரிப்பிற்கு ஏதுவானதாய் இருக்கின்றது என மார்த்தாளுக்குக் காட்டினார். மார்த்தாள், கர்த்தரை நேசித்தபடியினால் அவருக்காக அநேகவற்றைச் செய்ய வேண்டும் என்று விரும்பினாள்; மரியாள் கர்த்தரையும், கர்த்தர் விரும்பினவைகளையும் விரும்பி, அவருடன் பேசவும் விரும்பினபடியால், அவருடைய தோழமை மற்றும் ஐக்கியத்தின் இன்பத்தை விட்டுச்செல்ல முடியாமல் இருந்ததாள். கர்த்தரைக் கனப்படுத்துவதற்கெனத் பெரியதொரு விருந்தை ஆயத்தப்படுத்துவதில், தனது சகோதரியுடன் இணைந்து வேலை செய்யவும், மரியாளும் அதிகம் விரும்பியிருப்பாள். ஆனால் சமாரியாவுக்கு அருகே இருந்த கிணற்றின் அருகில், சீஷர்கள் ஆண்டவரிடம், “”ரபீ போஜனம் பண்ணும்” எனும் போது, அவர் “”நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு” என்றும், “”நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படிச்செய்து, அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது” என்றும் கூறியவற்றிற்கு ஏற்ப அவர் பரிமாறிக்கொண்டிருக்கும் ஆவிக்குரிய உணவை, மார்த்தாளைக் காட்டிலும், மரியாள் அதிகமாய் உணர்ந்தவளாக இருந்தாள்.
கர்த்தரை ஏற்கெனவே தேர்ந்தெடுத்தவர்களுக்கு, கிருபையான வாக்குத்தத்தங்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களுக்கு, நீதியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டவர்களுக்கு, மேலும் இவைகளைத் தேர்ந்தெடுத்துக்கொண்டதன் மூலமாகப் பாவத்தையும், சாத்தானையும், உலகத்தையும், சுயநலத்தையும் புறக்கணித்துக்கொண்டவர்களுக்கு, மார்த்தாளிடத்திலான நமது கர்த்தருடைய வார்த்தைகளில் படிப்பினை ஒன்று உள்ளது. இவ்வாறாக மேற்கூறியவைகள் அனைத்திலும் நாம் நல்லவைகளைத் தெரிந்துக்கொண்வர்களாக இருக்க, கர்த்தருடைய கண்ணோட்டத்தில் சிறந்தவைகளும், மிகச்சிறந்தவைகளும் மற்றும் நல்லவைகளும் இருக்கின்றன என்பதை நாம் அறிந்துக்கொள்ளவும் வேண்டும். கர்த்தருக்கான ஊழியம் தொடர்புடைய விஷயத்தின், பூமிக்குரிய காரியங்களிலும், ஆவிக்குரிய காரியங்களிலும் எடுக்கப்படும் பிரயாசங்கள் சரியானதாகவும், பாராட்டத்தக்கதாகவும், கர்த்தரால் அங்கீகரிக்கப்படத்தக்கதாகவும் இருக்கும், அதேசமயத்தில் கர்த்தரால் இன்னும் மேலாய் அங்கீகரிக்கப்படும் சில காரியங்களும் உண்டு என்பதே படிப்பினையாகும். நீதியின் மேல் பசிதாகம் கொள்பவர்களை, “”அவருடைய வார்த்தைகளைப் புசிக்கின்றவர்களை,” “”அவருடைய பாதத்தருகே அமர்கின்றவர்களை,” அவருடைய மகிமையான திட்டங்களில் மகிழ்ந்து, அத்திட்டம் வெளிப்படுகையில் களிகூருகின்றவர்களை, கர்த்தர் மிகவும் அங்கீகரிக்கின்றார்.
ஜீவியத்தின் அனைத்து விஷயங்களிலும் சரியானவைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியதின் முக்கியத்துவம் குறித்தும், சிறிய தவறுகள் கூட, நம்முடைய ஜீவியத்தின் காரியங்களில் தாக்கம் ஏற்படுத்துபவைகள் என்பதை உணர்ந்துக்கொள்ளுவது குறித்தும் உணர்த்துவது ஒரு பக்கமிருக்க, நாம் உணர்த்த விரும்பும் விசேஷித்த படிப்பினை என்னவெனில், நாம் அவருடைய ஊழியங்களில் ஈடுபட்டிருப்பது என்பது, கர்த்தருக்கான நமது அன்பின் அடையாளமாக இருப்பினும், அவருடன் ஜெபத்தில் ஐக்கியம்கொண்டிருப்பதும், அவருடைய வார்த்தைகளைக் கற்பதும், அவரை நாம் மதிப்பதற்கான இன்னமும் மேலான அடையாளமாக இருக்கின்றது என்பதேயாகும். மரியாள் கர்த்தருடைய பாதத்தருகே இருந்து கவனிப்பதற்குத் தன்னுடைய முழு நேரத்தையும் செலவழிக்கவில்லை, மாறாக கவனிப்பதற்கான வாய்ப்பு வந்த போது, அவள் அதை விட்டுவிடவில்லை. அவள் அதைத் தெரிந்துக்கொண்டாள், அவள் அதை அடைந்தாள்; அதனோடு அவள் ஆசீர்வாதத்தையும் அடைந்தாள், மேலும் இது, பிற்பாடு வேலைகள் செய்ய அவளை ஆயத்தப்படுத்தினதில் ஐயமில்லை. இப்படியாகவே கர்த்தருடைய ஜனங்களின் விஷயத்திலும் காணப்பட வேண்டும்; கர்த்தருடன் சம்பாஷிப்பதற்கும், அவருடைய வார்த்தைகளைப் படிப்பதற்கும் எடுக்கப்படும் நேரம் வீண் செலவழிப்பு என்று கர்த்தருடைய ஜனங்கள் எண்ணக்கூடாது. மாறாக, இவ்வாறு ஆண்டவரின் பாதத்தருகே இருந்து, அவருடைய வார்த்தைகளையும், அவருடைய ஆவியையும் பானம் பண்ணுவதற்குக் கொஞ்ச நேரம் செலவழிப்பது என்பது, தங்களை ஊழியங்களுக்கான பரீட்சைகளுக்காகவும், அதில் தாங்கள் ஞானமாய்ச் செயல்படுவதற்கு தங்களை ஆயத்தப்படுத்துவதாகவும் இருக்கும் என்றும், இப்படியான போக்கே, அவருடைய அங்கீகரிப்பிற்கு ஏதுவானது என்றும் கர்த்தருடைய ஜனங்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும். எல்லா விதத்திலும் நாம் மிகச் சிறந்த பங்கை, நமது கர்த்தருக்கு மிகவும் பிரியமாய் இருக்கும் பங்கை தேர்ந்தெடுத்துக் கொள்வோமாக.