R5362 (page 364)
லூக்கா 10:1-24
“”பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.” – மத்தேயு 10:20
ஊழியர்களின் நியமித்தல் என்பது நூற்றாண்டுகள் காலமாக விவாதத்திற்குரிய ஒரு காரியமாகவே காணப்பட்டு வருகின்றது. இது மறைமுகமாக, கடந்த காலங்களில் இரத்தம் சிந்தப்படுவதற்கு ஏதுவான துன்புறுத்தல்களுக்கு நேராகவும் வழிநடத்தியுள்ளது. அந்தக் காலங்கள் கடந்துப் போய்விட்டப்படியினால், தேவனுக்கு நன்றி! எனினும் அநேக ஜனங்கள் இன்னமும் நியமித்தல் தொடர்பான விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துக்கொள்ளாத காரணத்தினால், இந்த நியமித்தல் தொடர்புடைய விஷயத்தில், துன்புறுத்தல் மீண்டுமாகத் தொடர்வதற்குரிய அபாயம் எப்பொதுழுமே காணப்படுகின்றது. ஊழியர்கள் நியமித்தல் தொடர்புடைய விஷயத்திலுள்ள, தவறான கருத்துகளின் அடிப்படையிலுள்ள துன்புறுத்தல்களில் பேப்டிஸ்ட்டினர், மெத்தடிஸ்ட்டினர், லுத்தரேனியர், எபிஸ்கோப்பலியர், பிரஸ்பைடேரியினர் அனைவரும் பங்குக்கொண்டுள்ளனர்; இக்காரியம் தொடர்புடைய விஷயங்களில் இவர்கள் முற்காலங்களில் ஒருவரையொருவர் துன்புறுத்தியுள்ளனர்.
ஒருவர் விசேஷித்த விதமாய் (ஊழியத்திற்கு) நியமிக்கப்படாதது வரையிலும் ஒருவரால் போதகராக அல்லது பிரசங்கியாளராக இருக்க முடியாது என்பதும், நியமிக்கப்படாமல் பிரசங்கம் பண்ணுவது அல்லது போதகம் பண்ணுவது என்பது தெய்வீக ஏற்பாட்டிற்கு எதிராகக் கலகம் செய்வதாக இருக்கும் என்பதும், இப்படியாக நியமிக்கப்படாமல் போதிப்பவரின் போதனையைப் பின்பற்றுகின்ற அல்லது அப்படிப்பட்ட ஒருவருக்கு ஆதரவு கொடுக்கின்ற அனைவரும் (Heretics) எதிரான கொள்கையை உடையவர்களாகவும், எவ்விதமான அனுதாபத்திற்குப் பாத்திரமற்று, துன்பப்படுதலுக்கு ஏதுவானவர்களாய் இருப்பார்கள் என்பதும்தான் வாதமாய்க் காணப்படுகின்றது.
அநேகர் எண்ணிக்கொள்வது போன்று ஊழியத்திற்கு நியமிக்கப்படுதல் என்பது சடங்கு, ஆச்சாரம் தொடர்புடையதல்ல. அது பிரசங்கிப்பதற்கு அதிகாரம் கொடுக்கப்படுதலையும், பிரசங்கிப்பதற்கான கடமை ஒப்படைக்கப்படுதலையும் குறிக்கின்றதாய் இருக்கின்றது. பேப்டிஸ்ட்டினர்கள் தங்களுடைய விசுவாசப்பிரமாணத்தை ஒப்புக்கொள்பவர்களிடம், அந்த விசுவாசப்பிரமாணத்தைப் பிரசங்கிப்பதற்கான கடமையை ஒப்படைக்கின்றனர். இப்படியாகவே பிரஸ்பைடேரியினர்கள் தங்களுடைய சீஷர்களிடம் கடமையை ஒப்படைக்கின்றனர்; இப்படியாகவே லுத்தரேனியர்களும், மெத்தடிஸ்ட்டினர்களும் செயல்படுகின்றனர். ரோம கத்தோலிக்கர்களும், எபிஸ்கோப்பலியர்களும் தேவனிடமிருந்து, நியமித்தல் வருவதாகக் கூறுகின்றனர்; அதாவது இவர்களுடைய கண்காணிகள் அனைவரும் அப்போஸ்தலர்களின் பின்வரும் வாரிசுகள் என்றும், அப்போஸ்தல அதிகாரம் உடையவர்களாய் இருக்கின்றனர் என்றும் உரிமைப் பாராட்டிக்கொள்கின்றனர்; இன்னுமாக இவர்களுடைய கண்காணிகள் மூலம் நியமிக்கப்படாத அல்லது பொறுப்பு ஒப்படைக்கப்படாத எவருக்கும், பிரசங்கம் பண்ணுவதற்குரிய உரிமை இல்லை என்றும், இப்படி நியமிக்காமல் பிரசங்கிக்கும் பட்சத்தில் அப்படிப்பட்டவர்கள் (Heretics) கொள்கைகளுக்கு எதிரானவர்கள் என்றும் கூறுகின்றனர். இவர்களுடைய கண்ணோட்டத்தின்படி, [R5363 : page 364] அதிகாரம் அளிக்கப்படாமல் பிரசங்கித்துக்கொண்டுவரும் புராட்டஸ்டன்ட்டினர் அனைவரும் (Heretics) கொள்கைகளுக்கு எதிரானவர்களே ஆவர்.
ஆனால் விட்டுக்கொடுத்தலின் ஆவியும் வளர்ந்துக்கொண்டு வருகின்றது; கடந்த இரண்டு வருடங்களுக்குள்ளாக எபிஸ்கோபலின் ஊழியக்காரர் ஒருவர், வேறு ஒரு சபை பிரிவின் மேடையில் நின்று பிரசங்கம் பண்ணலாம் அல்லது எபிஸ்கோபியினர்களினால் நியமிக்கப்படாத ஓர் ஊழியக்காரன், எபிஸ்கோபல் சபையின் மேடையில் நின்று பிரசங்கம் பண்ணலாம் எனும் அளவுக்கு, எபிஸ்கோபியினர்கள் மற்றப் புரோட்டாஸ்டன்டினர் மீதான தங்கள் தடைவிதிகளை விலக்கிப் போட்டுள்ளனர். எனினும் இவை அண்மை காலத்திற்குரிய சலுகையாகவே உள்ளது.
இன்றைய பாடத்தில், ஊழியத்திற்கான நியமித்தல் குறித்த சரியானக் கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. இயேசு தம்முடைய விசேஷித்த அப்போஸ்தலர்களாய் இருக்கும்படிக்கு ஏற்கெனவே பன்னிரண்டு பேரை நியமித்துவிட்டார்; இப்பொழுது அவர் மேலும் எழுபது பேரை அப்போஸ்தலர்களாய் இருப்பதற்கு அல்லாமல் மாறாக பொதுவான ஊழியர்களாய் இருக்கும்படிக்கு நியமித்தார். பதிவுகள் தெரிவிக்கின்றதை வைத்துப் பார்க்கும் பொழுது, இவர்களுடைய நியமனத்தின் விஷயத்தில் எவ்விதமான சடங்குகள் அனுசரிக்கப்படவில்லை. அவர்கள் என்ன சொல்ல வேண்டும் என்று மாத்திரமே அவர்களிடம் கூறி, இயேசு அவர்களை அனுப்பி வைத்தார். நமது பாடத்தின் ஆதார வசனம் இவைகளைத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. “”பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்” (மத்தேயு 10:20).
உண்மையைச் சொல்ல வேண்டுமெனில், அப்போஸ்தலர்கள் அதுவரையிலும், நேரடியாக பிதாவின் ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லை. பிதாவின் ஆவி, குமாரனுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது; மேலும் குமாரன், தம்முடைய நாமத்தில் பிரசங்கம் பண்ணும்படிக்கு அனுப்பி வைத்தவர்களுக்கு, அந்தத் தம்முடைய ஆவியைப் பகிர்ந்தார். பெந்தெகொஸ்தே வரையிலும், சுவிசேஷத்தின் செய்தியைப் பிரசங்கிப்பதற்குப் பிதா எவரையும் நேரடியாய் அங்கீகரிக்கவில்லை, [R5363 : page 365] மற்றும் அதிகாரம் கொடுக்கவில்லை அல்லது நியமிக்கவில்லை. பிதாவிடமிருந்து, குமாரன் மூலமாக பரிசுத்த ஆவியானது பொழியப்பட்டது குறித்து அப்போஸ்தலர் 2:32-33-ஆம் வசனத்தில் பரிசுத்தவானாகிய பேதுரு விவரிக்கின்றார்.
முன்பு பரிசுத்த ஆவி கொடுக்கப்படவில்லை, காரணம் இயேசு இன்னமும் மகிமையடைவில்லை என்று வேறு ஓர் இடத்திலும் கூட விவரிக்கப்பட்டுள்ளது. இயேசுவின் சீஷர்களைப் பிதாவானவர் புதிய ஏற்பாட்டின் கீழ்ப் புத்திரர்களாக ஏற்கும் முன்பும், அதாவது, உலகத்தில் அவருடைய ஸ்தானாதிபதிகளாகவும், பிரதிநிதிகளாகவும், அவர்கள் காணப்படத்தக்கதாக மற்றும் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் சாபத்தை மாற்றிப்போட்டு, பூமியை ஆசீர்வதிப்பதற்குரிய ஆயிரம் வருடங்களுக்குப் பரலோக இராஜ்யத்தில், இயேசுவுடன்கூடத் துணையாளர்களாகவும் காணப்படத்தக்கதாக பரிசுத்த ஆவியின் ஜெநிப்பித்தலையும், பரிசுத்தராலே அபிஷேகத்தையும், அதிகாரத்தையும் (அ) நியமித்தலையும் கொடுப்பதற்கு முன்பும் இயேசு பாடுபட்டுப் பரமேறிச் சென்று, தம்முடைய சீஷர்களின் சார்பாக தம்முடைய புண்ணியத்தை முன்வைப்பது அவசியமாய் இருந்தது.
தேவன் யாருக்குப் புத்திர சுவிகாரத்திற்குரிய பரிசுத்த ஆவியைக் கொடுத்திருக்கின்றாரோ, அவர்கள் மாத்திரமே கர்த்தருடைய நாமத்தில் பிரசங்கிக்கத்தக்கதாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளனர் (அ) பொறுப்பு ஒப்படைக்கப் பெற்றுள்ளனர். தேவனுடைய நாமத்தில் பேசத்தக்கதாக எவருக்கும், பூமியில் நடைபெறும் சடங்கு ஆச்சாரங்கள் அனைத்தினாலும், மற்றும் கண்காணிகள் அனைவரின் கரங்கள் அனைத்தினாலும் அதிகாரம் கொடுக்க முடியாது. தேவனுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வது வரையிலும், நமது கர்த்தர் இயேசுவும் தம்முடைய ஊழியத்தை ஆரம்பிக்கவில்லை. அவருடைய ஞானஸ்நானம் மற்றும் அர்ப்பணிப்பின் போது, பரிசுத்த ஆவி அவர் மீது வந்து, அவரை அபிஷேகித்து, அவரைப் பிரதிஷ்டைப்படுத்தி, அவர் “”சிறுமைப்படுத்தப்பட்டவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கவும், நொறுங்குண்டவர்களின் காயம் கட்டவும், சிறையிலிருப்பவர்களுக்கு விடுதலையைப் பறைசாற்றவும், துக்கப்படுகின்றவர்களை ஆறுதல் படுத்துவதற்குரிய கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும் அவருக்கு அதிகாரம் கொடுத்தது” (ஏசாயா 61:1-2).
அதே பரிசுத்த ஆவிதான், இதைப் பெற்றுக்கொண்டுள்ள எவருக்கும், தெய்வீகத் திட்டம் தொடர்பாக தான் புரிந்துள்ள அனைத்தையும் கேட்க செவியுடையவர்களுக்கு, அதிலும் விசேஷமாகச் சிறுமைப்பட்டவர்களுக்கும், நொறுங்கின இருதயம் உடையவர்களுக்கும், தேவனைத் தேடுபவர்களுக்கும் கூறுவதற்கான அதிகாரமாய்க் காணப்படுகின்றது. சபையின் பெண் அங்கத்தினர்கள் பொதுவிடங்களில் பிரசங்கிக் கூடாது என்று அப்போஸ்தலர் பவுல் குறிப்பாகத் தெரிவித்திருந்தாலும், இது பரிசுத்தாவியைப் பெற்றிருப்பவர்கள் அனைவரும் அவரவர்க்குரிய (ஆண்/பெண்)… பால் பாகுபாட்டிற்குரிய வாய்ப்புகள் மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப பிரசங்கம் பண்ணுவதற்கும், போதிப்பதற்குமான அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றார்கள் என்ற உண்மையில் தலையிடுவதில்லை. சிலசமயங்களில் தனி அறைகளுக்குள்ளாகப் பண்ணப்படும் போதனைகளானது, பொதுவிடங்களில் பண்ணப்படுவதற்கு ஒத்த பலனைக் கொடுக்கின்ற அளவிலும் காணப்படுகின்றது.
யோவான் ஸ்நானகன் துவங்கி, எருசலேம் அழிக்கப்படும் கிபி 70 வரையிலுமான, யூத யுகத்தை நிறைவு செய்திட்ட 40 வருடங்களானது, நிழலான இஸ்ரயேலர்களுக்கான அறுவடை காலமாய் காணப்பட்டது. இதில் உண்மையான கோதுமை அனைத்தும் சுவிசேஷ களஞ்சியத்தில் திரட்டப்பட்டது, மற்றும் மீதமான பதர் அனைத்தையும் அக்கினி அடைளாயப்படுத்தும் மகா உபத்திரவக் காலத்தில் ஒதுக்கப்பட்டது. இதைப் போலவே மத்தேயு 13-ஆம் அதிகாரத்தில், இந்தச் சுவிசேஷ யுகத்தின் முடிவிலும், அறுவடை காணப்படும் என்று கர்த்தர் தெரிவிக்கின்றார். அநேகர் இது 1874-ஆம் வருடத்தில் துவங்கிவிட்டது என்றும், 1915-ஆம் வருடத்தில் முடிவடையும் என்றும் நம்புகின்றனர்.
யூத யுகத்தின் முடிவிலுள்ள கர்த்தருடைய உண்மையுள்ளவர்கள் அனைவரும், அறுவடை வேலையில் ஈடுபடுவதற்குரிய மாபெரும் சிலாக்கியத்தை அடையாளம் கண்டுகொள்ள வேண்டியிருந்தது போன்று, இப்பொழுதும் அடையாளம் கண்டுகொள்ள வேண்டியிருக்கின்றது. கர்த்தருடைய பின்னடியார்களை, கபடற்ற ஆட்டுக்குட்டிகளுடனும், ஆடுகளுடனும் ஒப்பிடப்படுகின்றனர், ஆனால் சுயநலமானதும், சீரமைக்கப்படாததுமான உலகத்தாரை அவர் ஓநாய்களைக்கொண்டு அடையாளப்படுத்துகின்றார். யூதர் அறுவடையின்போது, சீஷர்கள் வீடு வீடாய்ப்போய் இரந்து திரிய வேண்டும் என்பது அவருடைய விருப்பமாய் இருக்கவில்லை, மாறாக ஒவ்வொரு கிராமத்திலும், மிகுந்த தகுதியான ஜனங்கள் யார் என்று விசாரிக்கப்பட வேண்டும் என்றும், மேலும் சீஷர்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், அந்தக் கிராமத்தில், சீஷர்கள் தங்களது சாட்சியைப் பகர்வது வரையிலும், அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் விரும்பினார். சீஷர்கள் முழுமையாகவே கர்த்தரைச் சார்ந்திருந்து, தங்களுடைய தேவைகளைச் சந்தித்துக்கொள்வதற்குத் தாங்களே முற்படக்கூடாது. இவைகளெல்லாம் அவர்களுடைய எதிர்காலத்தின்போது, அவர்களுக்கு உதவுகின்ற பாடமாய் இருந்தது. பிற்பாடு ஒருமுறை இயேசு தம்முடைய சீஷர்களை அனுப்பி வைக்கும்போது, அவர்களால் முடிந்தமட்டும் அவர்களுடைய தேவைகளைச் சந்தித்துக்கொள்ளும்படிக்குக் கூறி அவர்களை அனுப்பிவைத்தார்; இதிலிருந்து அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட முதலாம் அனுபவமானது விசேஷித்த விதமான ஒன்று என்றும், அவர்கள் பிரதிநிதிப்படுத்தும் தெய்வீக வல்லமையின் மீது சார்ந்தவர்களாகவும், அதில் நம்பிக்கைக்கொண்டிருப்பவர்களாகவும் அவர்களை ஆக்குவதற்கு, என்றும் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.
அவர் செய்தது போன்று, அவர்களும் வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்தவும், பிசாசுகளைத் துரத்தவும் தக்கதான அளவில் ஆண்டவருடைய ஆவி, அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. இப்படியாகவே இன்றுள்ள கர்த்தருடைய ஜனங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதாக நாம் புரிந்துக்கொள்ளக்கூடாது. சூழ்நிலைகள் மாறியுள்ளது. அன்றிருந்ததைக் காட்டிலும், மாபெரும் கிரியைகளாகிய ஆவிக்குரிய வியாதிகளை, குருட்டுத்தன்மையை, செவிட்டுத்தன்மையைச் சொஸ்தப்படுத்துவது என்பது இன்றுள்ள கர்த்தருடைய ஜனங்களுக்கான சிலாக்கியமாகும்.
தேவனுடைய இராஜ்யம் சமீபித்துள்ளது என்பதே, சீஷர்களுடைய ஒரே செய்தியாய் இருந்தது. யாரெல்லாம் அந்த ஒரு செய்தியினால், தாக்கத்திற்குள்ளாகக் காணப்பட்டார்களோ, அவர்களெல்லாம் தாக்கத்திற்குள்ளானார்கள். இஸ்ரயேலர்கள் பல நூற்றாண்டுகள் காலமாக தேவனுடைய இராஜ்யத்திற்காக் காத்திருந்தார்கள். அந்தோ பரிதாபம், இராஜ்யம் முன்வைக்கப்பட்ட போதோ, அதை ஏற்றுக்கொள்வதற்குச் சொற்பமான யூதர்களே ஆயத்தமாய்க் காணப்பட்டனர்! பின்னர், இராஜ்யம் அளிக்கப்படும் காரியமானது, அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டுவிட்டு, அன்றுமுதல், முழு உலகத்தாருக்கும் கொடுக்கப்பட்டு, மேசியாவின் மணவாட்டியாகவும், உடன் சுதந்தரராகவும் இருக்கத்தக்கதாக அனைத்துத் தேசங்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட வகுப்பார் திரட்டப்பட்டனர்; இந்த மேசியா மற்றும் அவருடைய மணவாட்டி மூலமாகவே பூமியில் சீக்கிரமாய் இராஜ்யம் ஸ்தாபிக்கப்பட்டு, அதன் ஆசீர்வாதங்கள் பூமியின் இனத்தார் அனைவர் மேலும் அருளப்படும்.
கப்பர்நகூமிலும், பெத்சாயிதாவிலும், கோராசீனிலும், ஆண்டவர் தாம் பண்ணிய பிரசங்கத்தையும், பலத்த கிரியைகளையும் குறிப்பிடுகின்றார். சிலாக்கியத்தின் விஷயத்தில், இப்பட்டணத்தார் உயர்த்தப்பட்டுள்ளதாக அடையாள வார்த்தைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது; மேலும் இவர்கள் கர்த்தருடைய தயவுகளைப் புறக்கணித்துப்போட்டபடியால், இவர்கள் பாதாளமட்டும் தள்ளுண்டுவிடப்பட்டார்கள் என்றும் அடையாளமான வார்த்தைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீதோன் மற்றும் தீருவுங்கூட இப்படியாக பாதாளமட்டும், தூசியின் நிலைமையில்கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
நமது கர்த்தர் தம்முடைய பிரசங்கத்தின் வாயிலாக ஏற்படுத்தியுள்ள பரீட்சை (அ) போதனை (அ) நியாயத்தீர்ப்பானது இறுதியானது அல்ல என்றும், எதிர்க்காலத்தில் ஒரு நியாயத்தீர்ப்பு (அ) பரீட்சை இருக்கின்றது என்றும் சுட்டிக் காண்பிக்கின்றார். பரிசுத்தவானாகிய பவுலின் கூற்றுப்படி, ஆயிரவருட யுகம் என்பது ஆயிரவருட நியாயத்தீர்ப்பின் நாளாக இருக்கின்றது. இன்னுமாக அக்கால கட்டத்தில் முழு உலகமும், சத்தியத்தைப் பற்றின அறிவிற்குள்ளாகவும், தேவனைப் பற்றின அறிவிற்கு வருவதற்குரிய முழுமையான வாய்ப்பிற்குள்ளாகவும் கொண்டுவரப்படுவார்கள் (அப்போஸ்தலர் 17:31). எனினும் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டும், அசைவுறாமல், தங்களுடைய இருதயத்தில் கடினப்பட்டுப் போனவர்கள், இதற்கேற்ப, நியாயத்தீர்ப்பின் நாளில் அனுகூலமின்மையையும் அடைவார்கள். இக்காரியத்தை, இப்படிக் கடினப்பட்டிருக்கின்ற ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்பின் நாளானது இலகுவாயிருப்பினும், இவர்களைக் காட்டிலும் சோதோமின் ஜனங்களுக்கு மிகவும் இலகுவாயிருக்கும், காரணம் சோதோமியர்கள், குறைவான வெளிச்சம் மற்றும் சிலாக்கியத்திற்கு எதிராகவே பாவம் செய்துள்ளனர் என்று கூறுவதின் மூலம் இயேசு சுட்டிக்காட்டினார் (எசேக்கியல் 16:48-63).
இறுதியில் சீஷர்கள் கூறுவதைக் கேட்டும், அவர்களை இழிவாகப் பார்ப்பவர்கள், கர்த்தரையும், பிதாவையும் இழிவாகப் பார்ப்பதாக இருக்குமென ஆண்டவர் நம்முடைய திருத்தூதர்களுக்கு உறுதியளித்தார். இது கர்த்தரால் நியமிக்கப்பட்டு, சுவிசேஷத்தின், சத்தியத்தின் ஊழியர்களென அனுப்பி வைக்கப்படும் அனைவரின் விஷயத்திலும் சந்தேகத்திற்கிடமின்றி உண்மையாகவே இருக்கின்றது.