R4593 (page 120)
மத்தேயு 10:1-15
“இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள்.” – மத்தேயு 10:8
இயேசு ஒரு வருடத்திற்கு மேலாக பிரசங்கித்துக் கொண்டு இருக்கும்போது, தம்முடைய பின்னடியார்களில் பன்னிரண்டு பேரைத் தம்முடைய பிரதிநிதிகளாக, அனுப்பப்படும் அப்போஸ்தலர்களாக நியமித்தார். அவர்களை இருவர், இருவராக யூதேயா முழுவதும் அனுப்பி வைத்தார். அவர்கள் பிதாவினால் (இன்னமும்) நியமிக்கப்படவில்லை. அவர்கள் உன்னதத்திலிருந்து வரும் பரிசுத்த ஆவியை இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை; மற்றும் இரண்டு வருடங்களுக்குப் பிற்பாடு பெந்தெகொஸ்தே நாள் வரும் வரையிலும், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்குப் பரிசுத்த ஆவி இன்னமும் வழங்கப்படவில்லை. ஏனெனில், அதுவரையிலும் இயேசு மகிமையடையவில்லை (யோவான் 7:39). ஆனால் அவருடைய ஞானஸ்நானத்தின் போது, அவருக்கு அளவில்லாமல் பரிசுத்த ஆவி வழங்கப்பட்டபடியினால், அப்போஸ்தலர்கள் வியாதியஸ்தர்களைச் சொஸ்தமாக்கவும், பிசாசுகளைத் துரத்தவும் அவர்களுக்குத் தம்முடைய சொந்த விசேஷமான வல்லமைகளையே இயேசு கொடுத்தார். ஆனால், அவரைப்போன்று, அவர்களுக்கும் சரீர உபாதைகளைச் சொஸ்தப்படுத்துவது மாத்திரம் பிரதானமானவைகளாக இருக்கவில்லை. கர்த்தர் இயேசுதான் இராஜா என்றும், நீண்டகாலம் எதிர்ப்பார்க்கப்பட்ட மேசியா என்றும் அப்போஸ்தலர்கள் பிரகடனப்படுத்த வேண்டியிருந்தது; மற்றும் தங்களுடைய தேசம் தொடர்புடையதான அவருடைய மத்தியஸ்த இராஜ்யத்தின் ஸ்தாபிப்பு அண்மையில் காணப்படுகின்றது என ஜனங்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தது. இந்தச் செய்தியானது, அனைத்து யூதர்களுடைய எதிர்ப்பார்ப்பிற்கு இசைவாகவும் இருந்தது. ஏனெனில் இஸ்ரயேலர்கள் மூலம் பூமியின் குடிகள் அனைத்தும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குப் பண்ணப்பட்ட தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலுக்காக, இஸ்ரயேலர்கள் நூற்றாண்டுகளாக காத்துக் கொண்டிருந்தனர். “”பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்ற அறிவிப்பின் மீது கவனத்தை ஈர்ப்பதற்கே இயேசு மற்றும் அப்போஸ்தலர்களின் அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டன (மத்தேயு 3:2). யோவான் ஸ்நானனுடைய செய்திக்கு இசைவான கர்த்தருடைய செய்தியானது, “”உத்தம இஸ்ரயேலர்கள்” அனைவரையும் விழிக்கப் பண்ணுவதற்கும் மற்றும் இயேசுவை இராஜாவென அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்குமேயாகும். அப்போஸ்தலர்களுடைய செய்தி புறஜாதிகளுக்கோ அல்லது தங்களது அயலார்களாயிருக்கும் கலப்பின ஜனங்களாகிய சமாரியர்களுக்குக்கூட அல்ல என்றும் அப்போஸ்தலர்கள் எச்சரிக்கப்பட்டார்கள். இராஜ்யத்திலும், அதன் மகிமைகளிலும் பங்கடையத்தக்கதாக யூதர்கள் மாத்திரமே தங்களுடைய இருதயங்களையும், மனங்களையும் ஆயத்தமாக்கிக்கொள்ள உண்மையில் அழைக்கப்பட்டவர்கள் ஆவர். “”காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரயேல் வீட்டாருக்கு” மாத்திரமே அப்போஸ்தலர்களின் செய்தி காணப்பட்டது (வசனம் 6).
அப்போஸ்தலர்கள் தங்களுடைய பிரயாணத்திற்கு எவ்விதமான முன்னேற்பாடும் செய்ய வேண்டாம், அதாவது பணமோ, அதிகபடியான வஸ்திரங்களையோ கொண்டிருக்க வேண்டாம் என்று கூறப்பட்டிருந்தார்கள். அவர்களை அனுப்பின ஆண்டவர் மீது, அவர்கள் முழுமையாய்ச் சார்ந்திருக்க வேண்டும் என்பது தொடர்பான படிப்பினையை அவர்கள் கற்க வேண்டியிருந்தது. அவர்கள் வீடுகள்தோறும் தேவைகளுக்காகக் கேட்கும் பிச்சைக்காரர்களாக இருக்கக்கூடாது. மாறாக, அப்போஸ்தலர்கள் தங்களுடைய ஊழியம் மற்றும் தேவனுக்கான வேலை மற்றும் மேசியாவின் ஸ்தானாதிபதிகளாகிய தங்களைப் பற்றியதுமான மரியாதையை உணர்ந்தவர்களாக, ஒவ்வொரு பட்டணத்திலும் மிகவும் பாத்திரமானவர்களாகவும், மிகவும் பரிசுத்தமாகவும், மிகவும் மாசற்ற ஜனங்களாக இருப்பவர்கள் யார் என்று விசாரித்து அறிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், இப்படிப்பட்டவர்களே ஒருவேளை ஐசுவரியவான்களாகவோ (அ) தரித்திரவான்களாகவோ இருப்பினும், இவர்களே விசேஷமாக அப்போஸ்தலர்களுடைய செய்தியில் நாட்டம் கொண்டவர்களாகக் காணப்படுவார்கள். மேலும், அப்போஸ்தலர்களின் செய்தியை ஏற்றுக்கொண்ட இப்படிப்பட்டவர்கள், அப்போஸ்தலர்களால் அறிவிக்கப்பட்ட இராஜ்யத்திற்குரிய இராஜாவினுடைய பிரதிநிதிகளைப்போல அப்போஸ்தலர்களை நடத்துவதிலும் உண்மையில் சந்தோஷம் கொள்வார்கள். இப்படியாக அடுத்த ஊருக்குப் போக அப்போஸ்தலர்கள் ஆயத்தப்படும்வரையிலும், அவர்கள் காணப்படும் ஊரில், விருந்தாளிகள்போல் தங்க வேண்டும். ஒரு வீட்டிற்குள் அப்போஸ்தலர்கள் பிரவேசிக்கும் போது, அவர்கள் வீட்டாரை மரியாதையான விதத்தில் வாழ்த்தி அவர்களுக்கான அழைப்பின் நோக்கம் குறித்து அறிவுரைக் கூற வேண்டும். ஒருவேளை சமாதானத்துடனும், இருதயப்பூர்வமாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அப்போஸ்தலர்களுடைய ஆசீர்வாதம், அந்த வீட்டில் தங்கும். இப்படியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லையெனில், அப்போஸ்தலர்கள் தங்களது நம்பிக்கையையும், அமைதியையும் இழந்துவிடக்கூடாது. மாறாக, அவர்கள் கடந்துப் போய்ச்செய்தியை ஏற்றுக்கொள்வதற்கும், அச்செய்திக்கான பிரதிநிதிகள் தாங்களென ஏற்றுக்கொள்வதற்கும் அதிகம் பாத்திரமாய் இருக்கும் இன்னொருவரைத் தேட வேண்டும். அப்போஸ்தலர்களை ஏற்றுக்கொள்கின்றவர்கள் ஓர் ஆசீர்வாதம் அடைவார்கள். அப்போஸ்தலர்களையும், அவர்களது செய்தியையும் மறுக்கின்றவர்கள் ஒரு மாபெரும் சிலாக்கியத்தை இழந்துப் போய்விடுவார்கள்.
உண்மையில் இராஜ்யம் இன்னமும் வராதிருக்க நமது கர்த்தரும், அப்போஸ்தலர்களும், பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கின்றது என்று அறிவிப்பது ஏன்? என்றும், கர்த்தருடைய கட்டளைகளின்படி, அக்கட்டளைகளைப் பின்பற்றுபவர்கள் இன்னமும், “”உம்முடைய ராஜ்யம் வருவதாக் உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக” என ஜெபித்தும் வருவது ஏன்? என அநேகர் யோசித்திருக்கக்கூடும். இதைப் புரிந்துக்கொள்வதென்பது, இன்று தவறாய்ப் புரிந்துக்கொள்ளப்பட்டு வரும் வேதாகமத்தின் அநேக காரியங்களைப் புரிந்திட உதவும் திறவுகோலாயிருக்கும். ஆகவே, இக்காரியத்தைக் குறித்துக் கொஞ்சம் நாம் விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.
இஸ்ரயேலர்கள் மூலமாக, தெய்வீக ஆசீர்வாதம் ஒவ்வொரு ஜாதியாருக்கும் கடந்துச் செல்லத்தக்கதாக, தங்களை மிகவும் பெரியவர்களாக்கும் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நிறைவேறுதலுக்காக, இஸ்ரயேலர்கள் பதினாறு நூற்றாண்டுகளுக்கு மேலாகக் காத்துக் கொண்டிருக்கின்றனர். யூத தேசத்திற்குத் தேவனால் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்கள் அனைத்தையும், ஒருவேளை அவர்கள் ஆயத்தமாய் இருக்கும் பட்சத்தில், நிறைவேற்றுவதற்கான தேவனுடைய ஏற்றவேளை வந்துள்ளது என கர்த்தர், தமது அப்போஸ்தலர்கள் மூலம் குறிப்பிட்டார். அவர்கள் ஆயத்தமாய் இருப்பதற்கு, அவர்கள் பரிசுத்தமான ஜனமாகக் காணப்பட வேண்டும். அவர்களுக்கு அறிவுரைக்கூறவும், அவர்களை ஆயத்தப்படுத்துவதற்குமெனப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே மோசேயின் மூலமாக, அவர்களுக்கு நியாயப்பிரமாண உடன்படிக்கை அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும், இப்பொழுது இயேசுவுக்குள் கொஞ்சம் முன்பு, யோவான் ஸ்நானன், ஜனங்கள் மேசியாவை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக்கத்தக்கதாக அவர்களுக்கு மனந்திரும்புதலையும், நியாயப்பிரமாணத்திற்கு இசைவான நிலையில் வருவதையும், சீர்த்திருத்தத்தையும் குறித்துப் பிரசங்கித்தார். அப்போது உலகத்தில் இருக்கும் ஜனங்களிலேயே அவர்கள் மிகவும் பயபக்தியுடைய ஜனங்களாக இருந்தும், அவர்களிலும் சிலர் மாத்திரமே “”உத்தம இஸ்ரயேலர்களாக” இருந்தனர்; அதாவது, இருதயத்தில் தேவனுக்கு முழுமையாக அர்ப்பணம் பண்ணினவர்களாகக் காணப்பட்டனர். இதன் காரணமாக முழுத் தேசமும் தேவனுடைய வேலைக்கு ஆயத்தமாய் இருப்பதற்குப்பதிலாக, அவர்களில் சிலரே பரிசுத்தமாய் இருந்தனர், மற்றும் செய்தியையும் ஏற்றுக்கொண்டனர். இயேசுவின் ஊழியத்தினுடைய முடிவில் சுமார் 500 பேர் மாத்திரமே பாத்திரமானவர்களாகக் காணப்பட்டார்கள், மற்றும் திரளான ஜனங்கள், “”அவரைச் சிலுவையில் அறையும்!” எனக் கூக்குரலிட்டனர். இதற்குத் தேவ நம்பிக்கையற்ற பிலாத்து, “”ஏன் இவர் என்ன பொல்லாப்புச் செய்தார்?” என்று வினவினார். ஆகவே, மற்ற ஜனங்களையெல்லாம் ஆசீர்வதிப்பதற்கெனத் தேவனால் பயன்படுத்தப்படுவதற்கு இஸ்ரயேல் ஆயத்தமற்றுக் காணப்பட்டது.
தேவன் இதை முன்கூட்டியே அறிந்திருந்தார்; மற்றும் சொற்பானவர்கள் மாத்திரம் பாத்திரமாகக் காணப்படுவார்கள் என்றும் தீர்க்கத்தரிசிகள் மூலம் அறிவிக்கவும் செய்தார். “”தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்” என்று இந்தத் தேசத்தாரிடம் நமது கர்த்தர்; கூறினார் (மத்தேயு 21:43). மேலும், கர்த்தர் தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு ஐந்து நாள் முன்னர் இவர்களிடம், “”இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத்தேயு 23:38,39).
மாம்சீக இஸ்ரயேலர்களுக்கு முதலாவதாக அளிக்கப்பட்டிருந்த இராஜ்யத்தின் சிலாக்கியங்கள் (அ) வாய்ப்புகள், பெந்தெகொஸ்தே நாள் முதல் ஆரம்பமான ஆவிக்குரிய இஸ்ரயேலர்களுக்கு மாற்றப்பட்டது. மாம்சீக வீட்டாரிலுள்ள “”உத்தம இஸ்ரயேலர்கள்” அனைவருக்கும், ஆவிக்குரிய வீட்டாரில் அங்கமாகும் சிலாக்கியம் அருளப்பட்டது; அதாவது, பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்படுதலை அடைந்து, சபையாகிய கிறிஸ்துவின் சரீரத்திற்குள் சேர்க்கப்படும் சிலாக்கியம் அருளப்பட்டது. இந்தச் சபையைக் குறித்துப் பரிசுத்தவானாகிய பேதுரு, “”நீங்களோ இராஜரிகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்” என்று கூறுகின்றார் (1 பேதுரு 2:9).
ஆவிக்குரிய இஸ்ரயேலில் இடம்பெறுவதற்குப் பாத்திரமான அநேக யூதர்களைத் தெரிந்துக்கொண்ட பிற்பாடு, ஆவிக்குரிய இஸ்ரயேலின் நிறைவடைவது வரையிலும், தேவனுடைய தயவு மாம்சீக இஸ்ரயேலர்கள் மீது மீண்டும் வருமென அவர் வாக்குத்தத்தங்கள் அறிவித்துள்ள காலம் வரையிலும், பெயரளவிலான மாம்சீக இஸ்ரயேலர்கள், தெய்வீகத் தயவினின்று விலக்கிப் போடப்பட்டவர்களாகக் காணப்படுவார்கள். (ரோமர் 11:25-26). இதற்கிடையில் “”உத்தம இஸ்ரயேலர்களுடைய” ஆவியை உடையவர்களையும், தேவனுக்கு உண்மையாய் இருக்கும் ஆவியைக் கொண்டிருக்கின்றவர்களையும் தேடும்படிக்கு, ஒவ்வொரு தேசத்திற்குக் கர்த்தருடைய உண்மையுள்ள அங்கங்கள் மூலம் அழைப்புச் சென்றது. இப்படியாக மற்றத் தேசத்தாரும் யூதர்களோடுகூட, அந்த ஒரே இராஜ்யத்தின் அங்கங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். [R4594 : page 121] இந்த ஆவிக்குரிய இஸ்ரயேலர்களைச் சூழ்ந்து பலவகையானவர்களும் சேர்ந்துக் காணப்படுகின்றனர்; ஆகவேதான், மில்லியன் கணக்கானவர்களைக் கொண்டுள்ள வெளித்தோற்றமான (அ) பெயரளவிலான சபைகள் காணப்படுகின்றன, மற்றும் இவர்கள் மத்தியில் உண்மையான சபையும் ஆங்காங்கே சிதறிக் காணப்படுகின்றனர்.
யூத யுகத்தின் முடிவின்போது, பாத்திரமானவர்கள் காணப்படுகின்றார்களெனப் பார்ப்பதற்கும், தம்முடைய இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்குமென இயேசு வந்ததுபோன்று, இந்தச் சுவிசேஷ யுகத்தின் முடிவிலும் செய்வார்; பரிசுத்தவான்களைக் காண்பதற்கென அவர் ஆவிக்குரிய இஸ்ரயேலர்களிடத்தில் வருவார். பெந்தெகொஸ்தே நாள் முதல், இந்த யுகத்தின் முடிவுவரையிலும், கிறிஸ்துவின் தெரிந்துக்கொள்ளப்பட்ட சபையின் எண்ணிக்கையை நிறைவு செய்யத்தக்கதான போதுமான எண்ணிக்கையில் பரிசுத்தவான்கள் கண்டுபிடிக்கப்படுவார்களென வேதவாக்கியங்கள் நமக்கு உறுதியளிக்கின்றன் உலகத்தை ஆசீர்வதிப்பதற்கான வேலையை ஆரம்பிப்பதற்கென, ஸ்தாபிக்கப்படப்போகும் ஆயிரம் வருஷம் இராஜ்யத்தில், கிறிஸ்துவின் சபையானது கிறிஸ்துவினுடைய ராணியாகவும், உடன் சுதந்தரராகவும் இருக்கும்படிக்குத் தேவன் திட்டமிட்டுள்ளார். தேவனுடைய ஆவிக்குரிய இராஜ்யம் உயர்த்தப்பட்ட பின்னர், தேவனுடைய தயவானது, மாம்சீக இஸ்ரயேலர்களுக்கு மீண்டும் திரும்பும் என்றும், அக்காலத்தில் விளங்கும் புதிய ஒழுங்கின் கீழ் ஆசீர்வதிக்கப்படுவதில் முதலாவது தேசத்தாராக மாம்சீக இஸ்ரயேலர்கள் காணப்படுவார்கள் என்றும், மற்றும் தேவனுக்கு இசைவாக மாறும் இந்த (மாம்சீக இஸ்ரயேல்) ஜனங்கள் மூலம் ஆசீர்வாதம், அனைத்து ஜனங்களுக்கும் கடந்துச் செல்லும் என்றும் ரோமர் 11:25-32 வரையிலான வேதவாக்கியங்கள் நமக்கு நிச்சயமளிக்கின்றது.
சோதோம் ஜனங்கள் மிகவும் ஒழுக்கம் கெட்டவர்களாக இருந்தனர்; எனினும் சுவிசேஷத்தைக் கேட்ட பிற்பாடும், அதனை புறக்கணிப்பவர்களைப் பார்க்கிலும், சோதோம் ஜனங்கள் ஆண்டவருடைய கணிப்பில் கொஞ்சமாகவே பொல்லாதவர்களாய் இருந்தார்கள். இந்தக் கோட்ப்பாடானது கப்பர்நகூமுக்கும், நம்முடைய நாட்களில் வாழும் அநேக ஜனங்களுக்கும், அநேக பட்டணங்களுக்கும்கூடப் பொருந்தும். மாபெரும் ஆயிரம் வருஷம் யுகம் அதாவது, நியாயத்தீர்ப்பின் நாளானது நித்திய ஜீவன் (அ) நித்திய மரணத்திற்கான பரீட்சையில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை முழு உலகத்திற்கும் அளிக்கும்போது, மற்றவர்களைக் காட்டிலும் சோதோம் ஜனங்களுக்கு மிகவும் இலகுவாயிருக்குமென ஆண்டவர் நமக்கு உறுதியளிக்கின்றார். எந்தளவுக்கு ஒருவர் கிறிஸ்துவைப் பற்றின அறிவிற்குள் வந்திருக்கின்றாரோ, அந்தளவுக்கு அவர் பொறுப்பாளியாகவும் இருக்கின்றார். கிறிஸ்துவின் மரணமானது, ஆதாமுக்கும், அவருடைய சந்ததிக்கும் இரட்சிக்கப்படுவதற்கான முழு வாய்ப்பைப் பெற்றுத் தருகின்றது. பெரும்பான்மையானவர்கள் எந்த வாய்ப்பும் இல்லாமலேயே, புற மதத்தின் இருளிலேயே இறந்துவிட்டனர்; மேலும், கிறிஸ்தவத் தேசத்திலுள்ள அநேகர், கப்பர்நகூமின் ஜனங்களைப் போன்று தங்களுக்கான வாய்ப்பை அலட்சியப்படுத்திவிட்டனர். கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கும் தங்களுக்கான சிலாக்கியம் பற்றின முழுமையான அறிவிற்குள்ளாக இராஜ்யத்தில் அனைவரும் கொண்டு வரப்படுவார்கள், பிற்பாடு புறக்கணிப்பவர்கள் யாவரும் அழிக்கப்படுவார்கள் (அப்போஸ்தலர் 3:23; 1 தீமோத்தேயு 2:4; மத்தேயு 20:28).
இயேசுவையும், அப்போஸ்தலர்களையும் பின்பற்றுவது அதாவது, அவர்களுடைய பக்தியின் அடிகளில் நாம் நடந்து, இப்படி மேசியாவோடு அவருடைய இராஜ்யத்தில் பங்கடையத்தக்கதாக நமது அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக்கொள்வதே நமக்கான காரியமாகும்; இந்த இராஜ்யத்தில், நியாயத்தீர்ப்பெனும் பெயரில் அடங்கும் பரிசளித்தல் மற்றும் தண்டனையளித்தலெனும் முறைமையின் கீழ், சபை மேசியாவோடு கூட இஸ்ரயேலையும் மற்றும் பூமியின் குடிகள் அனைத்தையும் ஆசீர்வதிப்பார்கள். இந்தத் திரும்பக் கொடுத்தல் வேலையில் இஸ்ரயேலர்களும், சோதோமியரும் பங்கடைவார்களென வேதவாக்கியங்கள் நமக்குத் தெளிவாகக் கூறுகின்றன (எசேக்கியேல் 16:50-55; அப்போஸ்தலர் 3:19-21)