R4577 – எதிராளியானவன் மீது வல்லமை / அதிகாரம்

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4577 (page 90)

எதிராளியானவன் மீது வல்லமை / அதிகாரம்

POWER OVER THE ADVERSARY

மத்தேயு 8:23-34

“”இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்.” – மத்தேயு 8:27

அப்போஸ்தலர்களில் அநேகர் கலிலேயா கடலில் மீன் பிடிக்கிறவர்களாய் இருந்தனர். ஓய்வு எடுப்பதற்காகவும், அமைதலாய் இருப்பதற்காகவும், ஆண்டவர் அவ்வப்போது அப்போஸ்தலர்களுடன் படகில் ஏறிச் செல்வதுண்டு. ஏனெனில், அவர் கரையில் காணப்படும்போது அவரது ஊழியத்திலும், ஜனங்களுக்குப் போதிப்பதிலும், வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்துவதிலும் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவே காணப்படுவார். இப்படியாக, ஒருமுறை அவர் தமது சுறுசுறுப்பான அலுவல்களிலிருந்து, ஓய்வு எடுக்கும் தருணத்தில் நடந்த சம்பவம் தொடர்பாகவே நமது பாடம் காணப்படப்போகின்றது. அவர் களைப்படைந்தவராக மீன்பிடிக்கும் பாய்மரக் கப்பலின் பின்னணியத்தில் நித்திரை பண்ணிக்கொண்டிருந்தார். திடீரென கடும் புயல் எழும்பிற்று; இப்படியாக புயல் உருவாகுவது இந்தக் கடலைப் பொறுத்தமட்டில் வழக்கமாகவே இருந்தது. சீற்றம் மிக்க அலைகள் கப்பலை நாசப்படுத்தும் வண்ணமாக இருந்தது. புயல்களுக்கு நன்கு பழக்கப்பட்டிருந்த அப்போஸ்தலர்களும் கூட இப்புயலைக் கண்டு அச்சம் அடைந்ததிலிருந்து புயலின் வீரியம் குறித்து நாம் உணர்ந்துக்கொள்ளலாம். “”ஆண்டவரே எங்களை இரட்சியும், அல்லது நாங்கள் மடிந்துபோவோம்” என்று கூறி, சீஷர்கள் ஆண்டவரை வந்து எழுப்பின போது, அவர் எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார் என்றும், மிகுந்த அமைதல் உண்டாயிற்று என்றும், பிற்பாடு, “”அற்ப விசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று கூறி அப்போஸ்தலர்களைக் கடிந்துக் கொண்டார் என்றும் வெகு சுருக்கமாக பதிவுகள் நமக்குத் தெரிவிக்கின்றன. அநேகர் இந்த வார்த்தைகளை வாசித்து, மகா ஆறுதலும், நன்மையும் அடைந்துள்ளனர். காரணம், இவர்கள் கடலின் ஆபத்துக்கு ஆளாகாமல், மாறாக அனைவரும் ஜீவியத்தின் புயல்களுக்கு ஆளாகி இருக்கின்றபடியினாலேயாகும். இந்த ஜீவியத்தின் புயல்களினுடைய பயங்கரமான பேரலைகள், நம்மை அழிக்கும்விதத்தில் பயமுறுத்துகின்றன. சொல்லர்த்தமான பேரலைகளினின்று விடுவிக்கத்தக்கதாக வெளிப்பட்ட வல்லமையானது, (இதே) வல்லமையுள்ளவர் அனைத்துப் பிரச்சனைகளினின்று, விடுவிக்கவும் வல்லவர் என்ற நம்பிக்கையைக் கொடுக்கின்றதாக இருக்கின்றது. விசுவாச குறைச்சலினிமித்தம் அப்போஸ்தலர்களுக்கு வந்த கடிந்துக்கொள்ளுதலானது, நம்முடைய சர்வவல்லமையுள்ள நண்பருடைய முன்னேற்பாடான பராமரிப்பில் மிகுந்த நம்பிக்கை கொள்வதற்கும், மிகுந்த தைரியம் கொள்வதற்கும், மிகுந்த விசுவாசம் கொள்வதற்கும், கர்த்தருடைய ஜனங்களை உற்சாகமூட்டுவதாகவும் மற்றும் அவர்களைக் கண்டிக்கத்தக்கதாகவும், அவர்களுடைய இருதயத்தினிடத்திற்கும் கடந்து வருகின்றது.

“”அப்போஸ்தலர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள்” (மத்தேயு 8:27). இந்தப் பாடத்தை இவர்கள் கற்றுக்கொள்ளாதது வரையிலும், இவர்களுடைய சோதனைகள், நன்மைகள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பான விஷயங்களில், கர்த்தரை நம்புவதற்கு இவர்கள் ஆயத்தமாய் இருக்கமுடியாது. இதைப் போலவே இயேசுவின் “”மேசியாத்துவம்”; குறித்தும், அவருடைய உயிர்த்தெழுதலின் போது “”பரலோகத்திலும், பூமியிலும் சகல வல்லமை” அவருக்குக் கொடுக்கப்பட்டது என்பது குறித்ததுமான அதே மாபெரும் பாடங்களை நாமும் கற்றுக்கொள்ளாதது வரையிலும், நம்மாலும் அவரை முழுமையாய் நம்பவும், விசுவாசத்தில் அவருடைய அன்பான பராமரிப்பிலும், இளைப்பாறவும் முடியாது.

சாத்தான் ஒர் ஆவிக்குரிய ஜீவி என்றும், கண்ணுக்குப் புலப்படாதவர் என்றும், வல்லமையுள்ளவர் என்றும், ஒரு குறிப்பிட்ட அளவுக்குத் தெய்வீகக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட நிலையில் மனிதனுடைய காரியங்கள் மீது வல்லமை கொண்டவர் என்றும் அனைத்து அப்போஸ்தலர்களும் புரிந்திருந்தது உறுதியே ஆகும். ஆகவேதான் சாத்தானைக் “”கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபு” என்று அழைக்கின்றார் (எபேசியர் 2:2).

தீர்க்கத்தரிசியாகிய யோபுவின் விஷயம் குறித்தும், இவருடைய விசுவாசத்திற்கான ஒரு சோதனையைத் தேவன் அனுமதித்தார் என்றும், இவருடைய காரியங்கள் மீது எதிராளியானவன் அதிக வல்லமை கொள்ளும்படி அனுமதித்தார் என்றும், வேதாகமம் கொடுக்கும் சாட்சிக்குறித்தும் நாம் நினைவுகூருகின்றோம். யோபுவின் பிள்ளைகள் கூடியிருந்த வீட்டை அழித்திட்ட புயல் மூலம், எதிராளியானவனுடைய அந்த வல்லமையில், சில செயல்படுத்தப்பட்டது என்பதையும் நாம் நினைவுகூருகின்றோம்.

அநேகமாக அப்போஸ்தலர்களுக்குப் பாடம் கொடுக்கும் நோக்கத்திற்காகவே கலிலேயா கடலில் புயலை உருவாக்கும்படிக்கு, எதிராளியானவன் அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும். இரட்சகரைப் பிற்பாடு இரண்டு கள்வர்களுக்கு நடுவில் சிலுவையில் அறைந்திட செய்தது போன்று, ஆகாயத்து அதிகாரப் பிரபு இங்கு இவ்விதத்தில் (இப்பாடத்தின் சம்பவத்தில்) இரட்சகரை அழிக்கலாம் என்று எண்ணியிருக்கக் கூடும். முதல் சம்பவத்தில் எதிராளியானவனுடைய பிரயாசம், இயேசுவின் வார்த்தைகளினால் தோற்கடிக்கப்பட்டது. பிற்பாடு நடந்த சம்பவத்திலோ எதிராளியானவனுடைய பிரயாசம் ஜெயங்கொள்ள அனுமதிக்கப்பட்டது. ஏனெனில் “”அவருடைய வேளை வந்தது.” யூதாசில் முன்பு கிரியை செய்துக்கொண்டிருந்த சாத்தான், நமது இரட்சகர் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முந்தின இரவில் முழுமையாக யூதாசுக்குள் புகுந்தான் என்ற பதிவுகளையும் நாம் நினைவுகூருகின்றோம். (லூக் 22:3; யோவான் 13:27)

விழுந்துபோன தூதர்களில் சிலருடனான, நமது கர்த்தருடைய போராட்டம் குறித்து, இந்தப் பாடம் நமக்குக் கூறுகின்றது. இந்தப் பிசாசுகளுக்குச் சாத்தான் தலைவனாய் இருக்கின்றான் என்று நாம் வாசிக்கின்றோம். இந்தப் பிசாசுகள், மனிதனுடைய சரீரத்தினின்று பிரியும் ஆவியாய் இராமல் மாறாக, இவர்கள் விழுந்துபோன தூதர்கள் என்று வேதவாக்கியங்கள் மிகத் தெளிவாகப் போதிக்கின்றன (2 பேதுரு 2:4; யூதா 1:6).

இந்த விழுந்துபோன தூதர்கள் முன்பு ஒரு காலத்தில் பரிசுத்தமாய் இருந்தார்கள் என்றும், ஜலப்பிரளயம் வருவதற்கு முன்னதாக இவர்கள் மனுக்குலத்தோடு வைத்த தொடர்பினிமித்தம், பாவத்தினால் தீட்டுப்படுத்தப்பட்டார்கள் என்றும் வேதாகமம் கூறுகின்றது. ஜலப்பிரளயத்திற்குப் பிற்பாடு, பரிசுத்தமான தேவதூதர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டும், மனித உருவம் எடுத்துக்கொண்டு, மனிதனாகத் தோன்றும் சுதந்தரம் தடுக்கப்பட்டும் இருந்தாலும், இவர்கள் தடைகளைத் தகர்க்க நாடுகின்றனர். மனித சரீரத்தை எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்றாலும், மனித சரீரத்தைத் தங்களுக்கான ஊடகமாகப் பயன்படுத்தித் தடையாகிய மனித சித்தத்தை தங்களால் முடிந்தமட்டும் தகர்த்து, மனுக்குலத்தை ஆக்கிரமித்து ஆட்டிப் படைக்க நாடுகின்றனர். மரித்தவர்களுக்காகப் பேசுகிறவர்களாகவும், மரித்தவர்களை அடையாளப்படுத்துகின்றோம் எனக் கூறுகிறவர்களாகவும் இருக்கும் ஊடகங்கள், சூனியக்காரர்கள், சூனியக்காரிகள், ஆவியுலகப் பேச்சாளர்கள் போன்றவர்களுடன் எவ்விதமான தொடர்பும் நாம் வைத்துக்கொள்ளக்கூடாது என வேதவாக்கியங்கள் எப்போதும் நம்மை எச்சரிக்கின்றன. “”மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என்றும், மரித்தவர்களுக்கான ஒரே நம்பிக்கை உயிர்த்தெழுதலில்தான் உள்ளது என்றும், மரித்த மனிதர்கள் அல்லாமல், விழுந்துபோன தூதர்களே நம்மிடத்திலும், நம் மூலமாகவும் தொடர்புகொள்ள நாடுகின்றனர் என்றும் வேதாகமம் நமக்கு நிச்சயமளிக்கின்றது. இந்த ஆவியுலக ஊடகர்கள் அறிந்தேதான் விழுந்துபோன தூதர்களுடன் இணைந்துள்ளனர் என நாம் இங்குக் குற்றம் சாட்டவில்லை. இந்த ஊடகர்களும், மற்றவர்களைப் போல வஞ்சிக்கப்பட்டே உள்ளனர் என நாம் நம்புகின்றோம். இக்காரியம் தொடர்பான வெளிச்சத்தை, உண்மையில் வேதாகம் மாத்திரமே நமக்குக் கொடுக்கின்றது. இதனாலேயே இதைக் குறித்து, இந்த வஞ்சகத்திலிருந்து நாம் மீட்டுக் கொண்ட அநேகருக்கு நம்மால் சுட்டிக்காட்ட முடிகின்றது.

[R4577 : page 91]
வசனம் 28-இல் இடம்பெறும் இரண்டு பிசாசு பிடித்தவர்கள், பைத்தியக்காரர்களாய் இருந்தார்கள். காரணம், அநேக பிசாசுகள் அவர்களைப் பிடித்துக் கொண்டிருந்தன, மற்றும் பல்வேறு விதங்களில் அவர்களைக் கட்டுப்படுத்த முயற்சித்தவைகளாகவும் இருந்தன. பைத்தியக்கார விடுதிகளில் இருப்பவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் பிசாசு பிடித்தவர்களே எனப் புத்தியுள்ள மருத்துவர்கள் உணர்ந்துக்கொள்வார்கள்.

பிசாசு பிடித்தவர்களிடம் நமது கர்த்தர் எப்படிக் கேள்வி கேட்டார் என்றும், தாங்கள் லேகியோன் அதாவது, அநேக பிசாசுகள் என்று அம்மனிதர்கள் மூலம் பொல்லாத ஆவிகள் எப்படிப் பதில் கொடுத்தன என்றும், வேறு ஒரு பதிவு நமக்குத் தெரிவிக்கின்றது. மேலும், அந்தப் பிசாசுகள் தாங்கள் அம்மனிதனிடத்தில் தங்கக்கூடாதெனில், பன்றி கூட்டத்திற்குள் புகும்படிக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்று கர்த்தரிடத்தில் வேண்டிக் கொண்டன. அவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் விளைவாக முழுப் பன்றிக் கூட்டமும், அநேகமாக பல நூறு பன்றிகள் தாவி, மலையிலிருந்து குதித்து, கடலுக்குள் விழுந்து மாண்டன. பன்றிகள் நடந்துக்கொண்டதை வைத்துப் பார்க்கும் போது, ஒவ்வொரு பன்றிக்குள்ளும் ஒவ்வொரு பிசாசு புகத்தக்கதாக அவ்வளவு பிசாசுகள் இருந்துள்ளது தெரியவருகின்றது. ஏனெனில், ஆடுகளைப் போலில்லாமல் பன்றி, பொதுவாக அதன் கூட்டத்திலுள்ள சகல பன்றிகளும் அதிகம் கிளர்ச்சி அடைந்திட்டாலும், அசையாமல் அப்படியே நிற்கும் சுபாவம் கொண்டவையாகும். ஒவ்வொரு பன்றியும் சுயமாகவே செயல்படுகின்றது (உடன் பன்றியின் கிளர்ச்சியினால் கிளர்ச்சி அடைவதில்லை). அம்மனுஷனிடமிருந்த பல பிசாசுகள், உண்மையில் லேகியோனேயாகும். மனித சித்தத்தைத் தகர்க்க முடியாத இந்தப் பிசாசுகள், ஒருவேளை அச்சித்தமானது ஒரு மனிதனுக்குள் தகர்க்கப்படுமாயின், இவைகள் இந்தப் பாவப்பட்ட மனிதர்களுக்குள் போய்க் குவிந்து விடுகின்றன. மாயவித்தை, ஆவியுலகக் கோட்பாடு ஆகியவை எதிராளியானவனுடையது என வேதவாக்கியங்களுக்கு இசைவாக நாம் எப்போதும் ஜனங்களை எச்சரித்துக் கொண்டிருக்கின்றோம். தன்வயப்படுத்தும் (மயக்கம் அடையப் பண்ணும்) வசீகர சாஸ்திரம் போன்று மனித சித்தத்தைத் தகர்ப்பவைகள் அனைத்தும் பாதகமானவைகள் என்றும், ஒருவேளை இந்த நபர் தனது மனநிலையை ஆட்டிப் படைக்க ஒப்புக்கொடுப்பாரானால், இவருடைய மனம் மற்றும் காரியங்களுக்குள் இந்த விழுந்துபோன ஆவிகள் பிரவேசிக்க மிகவும் ஏதுவாகிவிடுவார்கள் என்றும் நாம் எச்சரித்துள்ளோம்.

இந்த அற்புதம் காரணமாக உண்டான விளைவு, சுயநலத்தின் வல்லமையைக் காட்டுகின்றதாய் இருக்கின்றது. அற்புதத்தைக் காண திரளான ஜனக்கூட்டம் கூடினார்கள். பைத்தியமாய் இருந்த இரண்டு மனிதர்கள், இப்பொழுது வஸ்திரம் தரித்திருந்தார்கள். ஆனால், “”என்னே ஓர் இழப்பு! பன்றிகள் செத்துக் கடலில் மிதப்பதைப் பாருங்கள்!” என்று ஜனங்கள் அற்பத்தனமாய்க் கூறினார்கள். “”அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்க்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்” (மத்தேயு 8:34). இயேசுவும் அப்படியே உடனடியாகச் செய்துவிட்டார். இதே சுயநலத்தின் கோட்பாடானது இன்றும், எங்கும் கவனிக்கப்படலாம். பெரும்பாலான ஜனங்கள் விசேஷமாக தங்களது பூமிக்குரிய நலன்களையே கருதினவர்களாகக் காணப்படுகின்றனர். ஆனால், இவைகளோடு ஒப்பிட்டு பார்க்கையில், கர்த்தருடைய மாபெரும் ஆசீர்வாதங்களைக் கவனியாதே போகின்றார்கள். கலிலேயா தீர்க்கத்தரிசியின் சீஷர்களாகிய நாம், காரியங்களை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கின்றவர்களாயிருந்து, மனுக்குலத்தை விடுவிப்பதும், யூத பிரமாணம் தடை விதித்துள்ள பன்றியின் விஷயம் போல, தெய்வீகச் சித்தத்திற்கு வெறுப்பாய் இருக்கும் அனைத்தையும் அழிப்பதுமாகிய அவருடைய மகிமையான வேலைக்கு நமது இருதயங்களை இசைவாய்க் கொண்டிருப்போமாக.