R943 (page 5)
தேவனுடைய ஆவிக்குரிய குமாரர்கள் என்பதான புதிய உறவிற்குள் வந்துள்ளவர்கள், அவர்கள் அடைந்துள்ள உறவுகளின் மாற்றத்தை அடிக்கடியும், மற்றும் கவனமாயும் கருத்தில் எடுத்துக் கொண்டும் காணப்படுவது நலம். இனிமேல் நம்முடைய நெருக்கமான உறவுகள், பூமியுடன் காணப்படுவதில்லை. நம்முடைய கவனம், எதிர்ப்பார்ப்புகள்/நம்பிக்கைகள் மற்றும் குறிக்கோள்கள் இப்பொழுது பரலோக குடும்பத்துடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. இன்னுமாக, நாம் இதைக்குறித்து முழுமையாக உணர்ந்துக்கொள்ளுகையில், தேவனுடைய குடும்பத்தின் மீது நமது பிரியம் காணப்படும், மற்றும் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அந்த அன்பை, அகலமும் ஆழமும் படுத்தத்தக்கதாக, பரலோக குடும்பத்துடனான நம்முடைய ஐக்கியம் காணப்பட வேண்டும்.
இதற்கு இசைவான நமது கர்த்தருடைய வார்த்தைகள், அவர் எப்படிப் பரலோக உறவைக் கருதினார் என்பதைக் காட்டுகின்றது. கர்த்தரிடம் ஒருவர், “”உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள்” (மத்தேயு 12:47) என்று கூறினபோது கர்த்தர், “”தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்குப் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்” (மத்தேயு 12:48-50).
புதிய சிருஷ்டிகளாகிய, தேவனுடைய ஆவிக்குரிய குமாரர்களாகிய நாம், விரைவில் அவருடைய அருமையான குமாரனுடன் உடன்சுதந்திரர்களாக இருக்கப் போகின்றோம். நிச்சயிக்கப்பட்ட கன்னிகைகளாக, சகல பூமிக்குரிய ஈடுபாடுகளைத் துறந்திருக்கும் நாம், நமது பரலோக மணவாளனுடன், திருமணத்தின் மூலம் இணைக்கப்படவிருக்கின்றோம், மற்றும் (திருமணத்தின் மூலம் இணையும்) அந்த மாபெரும் தருணத்திற்காகச் சந்தோஷத்துடன் நம்மால் முடிந்த அனைத்து ஆயத்தங்களையும் செய்து கொண்டிருக்கின்றோம். இந்த ஒரு புதிய நிலைக்குள் நாம் முழுமையாய்ப் பிரவேசித்தப் பிற்பாடு, நாம் பூமிக்குரிய தளத்தில் காணப்படுபவர்களுக்குக் கணவர்களாக, மனைவிகளாக, பெற்றோர்களாக, பிள்ளைகளாக, சகோதரர்களாக மற்றும் சகோதரிகளாக இருப்பதில்லை. ஏனெனில், அக்காலத்தில் பூமியின் சகல குடிகளை ஆளுவதற்கும், ஆசீர்வதிப்பதற்கும் ஆயத்தமாக நாம், “”தேவனுடைய ஆசாரியர்களாகவும், இராஜாக்களாகவும்” இருப்போம். இன்னுமாக, அக்காலத்தில் பூமியின் குடிகளிலுள்ள ஒவ்வொருவரும் தேவனுக்கு அன்பிற்குரியவர்களாக இருப்பது போன்று நமக்கும் இருப்பார்கள். இக்காலத்தில் நமது அன்பிற்குரியவர்கள் மீது நாம் கொண்டிருக்கும் அன்பானது, அக்காலத்தில் எவ்விதத்திலும் குறைவதில்லை. அக்காலத்தில் நமது அன்பு மிகவும் அதிகமாய்க் காணப்படும். அதுவும் இக்காலங்களில் இரத்த உறவுகளுக்குள் மாத்திரம் அன்பு செய்தல் என்றுள்ள குறுகிய வரம்புகளற்ற அன்பாக நமது அன்பு அக்காலத்தில் காணப்படும்.