R3754 – இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R3754 (page 108)

இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை

RESURRECTION POWER IN JESUS

லூக்கா 7:1-17

“”இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றார்.” – யோவான் 11:25

நமது கர்த்தராகிய இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை காணப்பட்டது. ஏனெனில், தெய்வீக திட்டத்தின்படி இவரே தம்மைப் பலியாக்குவதின் மூலமாக உலகத்தை மீட்டுக்கொள்ளவும், பின்னர் உலகத்தை முன்னிருந்த நிலைமைக்குக்கொண்டு வரவேண்டியவராக இருக்கின்றார். இவ்வேலைகள் இவர்களை மரணத்தினின்று விழித்தெழுப்புவதாக மாத்திரம் காணப்படாமல், நோயினுடைய மரித்துக்கொண்டே இருக்கும் நிலையை மேற்கொள்வதற்கு ஏதுவான அத்தகைய ஓர் உயிர் ஆற்றலையும் இவர்களுக்கு அளித்து, இறுதியில் இப்படியாக உயிர்த்தெழுப்பப்பட்ட இவர்கள், கீழ்ப்படியாமையின் காரணமாக கிடைத்திட்ட “”பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும்” (எசேக்கியேல் 18:4) என்ற வசனத்தினுடைய தீர்ப்பினிமித்தம் நம்முடைய ஆதிப்பெற்றோர்கள் ஏதேன் தோட்டத்தில் இழந்துபோயிருந்த முழுப் பூரணத்திற்குக் கொண்டுவரப்படுவார்கள். இதுவே நமக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ள தெய்வீகத் திட்டத்தினுடைய அனைத்துக் காரியங்களிலுமே மிக முக்கியமான அம்சமாகும். மேலும், இதை நாம் தெளிவாகப் புரிந்துக்கொள்வோமானால், இது தெய்வீகத் திட்டத்தினுடைய மற்ற அனைத்து அம்சங்களையும் நாம் புரிந்துக்கொள்வதற்கு உதவி செய்துவிடும். மரணம் என்பது ஜீவனற்ற நிலை, ஜீவன் இழந்துபோன நிலை என்றும், ஜீவன்பெற நாம் அபாத்திரர்களாகத் தீர்க்கப்பட்டுள்ளபடியால், இம்மரணம் நம் இனத்தின் மீது காணப்படும் தண்டனையாக இருக்கின்றது என்றும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஆதி பாவம் காரணமாக நம் மீது வந்துள்ள சாபம் அல்லது தீர்ப்பினின்று உள்ள மீட்பையே, எதிர்க்கால ஜீவியத்தைக்குறித்த அனைத்து வேதவாக்கியங்களும் குறிப்பாகக் காட்டுகின்றது. கடனை (அ) தீர்ப்பை ரத்து செய்வது என்பது மனுக்குலத்தை மீண்டும் முந்தின நிலைக்குக் கொண்டு வருவதில்லை என்றாலும், அது மனிதன் இழந்த அனைத்தையும் மீண்டுமாக திரும்பப் [R3755 : page 108] பெற்றுக்கொள்வதற்கு, அவனுக்கு இருந்த நீதியின்படியான தடையை மாற்றிவிட்டது. பின்வரும் காரியங்களே நமது இரட்சகருடைய வேலையாக இருக்கின்றது. முதலாவதாக, கர்த்தரின் வேலையானது மீட்பின் வேலையாக இருக்கின்றது. இந்தச் சுவிசேஷ யுகத்தில் மீட்கப்பட்டவர்களில் சிலரைத் தம்முடைய அங்கங்களாக, தம்முடைய மணவாட்டியாக, தம்முடைய சபையாக, தலையாகிய தம் கீழ் ஏற்றுக்கொள்வதற்கும், அடுத்த யுகத்திற்குரிய சீர்த்திருத்துதலின்/திரும்பக்கொடுத்தலின் மாபெரும் வேலையில் இவர்களைத் தம்முடன் உடன்வேலையாட்களாக ஏற்றுக்கொள்வதற்கும் கர்த்தர் இந்தச் சுவிசேஷ யுகத்தை பயன்படுத்தினாலும், இந்த மீட்பு, அவருடைய முதலாம் வருகையின்போதே செய்து முடிக்கப்பட்டது.

இரண்டாவதாக, கர்த்தருடைய இரண்டாம் வருகையின்போது அவருடைய சபை, அவருடைய அங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மெருகூட்டப்பட்டு, ஆயத்தப்படுத்தப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்டு, அவருடன் கனத்திலும், மகிமையிலும், அழியாமையிலும் பங்கடைந்து காணப்படும்போது, அவருடைய வேலை திரும்பக்கொடுத்தலாகக் காணப்படும். அப்பொழுது மீட்பின் முழுவேலையும் மனுக்குலத்தின் உலகத்தின் மேல் செலுத்தப்படும்… இது இவர்களை மரணத்தினின்று விழித்தெழுப்பி, அக்சஷணமே முழுமையான பூரணம் அடையச்செய்வதின் மூலம் செய்யப்படாமல் மாறாக, முதலாவதாக இவர்கள் மரணம் எனும் நித்திரையினின்று விழித்தெழுப்பப்பட்டு, பிற்பாடு ஆயிரவருஷ யுகத்திற்குரிய போதனைகள் மற்றும் ஒழுக்கங்கள் மூலம் இவர்களுடைய ஒத்துழைப்புடன், இவர்கள் படிப்படியாகச் சீர்த்தூக்கப்பட்டு மேலும், இந்த இரக்கங்கள் மற்றும் வாய்ப்புகளுக்கு இவர்கள் வெளிப்படுத்தும் பதிலுக்கேற்ப இவர்கள் படிப்படியாக பாவம் மற்றும் மரணத்தினின்று, நித்தியஜீவனுக்குள் கொண்டுவரப்படுவார்கள். கீழ்ப்படியாதவர்கள் [R3755 : page 109] நித்தியஜீவன் பெற்றுக்கொள்ள அபாத்திரர்களாகக் கருதப்பட்டு இரண்டாம் மரணத்தில் அறுப்புண்டுப் போவார்கள்.

ஜீவன் கொடுப்பவராகிய இயேசு

நம்முடைய பாடத்தின் ஆதார வசனத்தினுடைய (யோவான் 11:25) வார்த்தைகள் நம்முடைய கர்த்தருக்கு விசேஷமாக எதிர்க்காலத்தில் பொருந்தக்கூடியதாக இருப்பினும் அதாவது, அவருடைய ஆயிரவருஷ ஆளுகையின் ஆரம்பத்தில் அவருக்குப் பொருந்தக்கூடியதாக இருப்பினும் அதாவது, மரணத்தை அழித்துப்போட்டு அதன் வல்லமையினின்று, மாபெரும் சிறைச்சாலையினின்று, விழுகையின் காரணமாக வந்திட்ட பெலவீனங்களினின்று மனுக்குலத்தை அவர் தூக்கி எடுக்கும்போது அவருக்குப் பொருந்தக்கூடியதாக இருப்பினும், சிலவிதங்களில் அவருடைய முதலாம் வருகையின்போதும் அவருக்குப் பொருந்தக்கூடியதாகவும் இருக்கின்றது. நமது கர்த்தருடைய சொந்த பலியானது, அவர் கல்வாரியில் மரிப்பதுவரையிலும் நிறைவேறாமல் இருப்பதும் மற்றும் அவருடைய சரீரத்தினுடைய அங்கங்களின் பலிகள் நிறைவேறி முடிவதற்குப் பல நூற்றாண்டுகள் இருக்கின்றது உண்மைதான். ஆனால், நமது கர்த்தர், 30-ஆம் வயதில் பிதாவின் சித்தத்தைச் செய்வதற்கும், தம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுப்பதற்குமெனத் தம்மையே முழுமையாக அர்ப்பணம் பண்ணினபோது, அவர் செய்யும்படிக்கு தமது கையில் எடுத்துக்கொண்ட அந்தத் தெய்வீகத் திட்டமானது, பிற்பாடு நிறைவேறி முடியப்போகிற தம்முடைய சொந்த பலியினுடைய நிறைவேறுதலையும், தம்முடைய சபையாகிய நிறைவடையும் சரீரத்தின் பலியினுடைய நிறைவேறுதலுமாகிய அம்சங்களையும் உள்ளடக்கினதாகக் காணப்பட்டது.

நமது பரம பிதா, கர்த்தர் தமது பலியை (நிச்சயமாய்) நிறைவேற்றித் தீருவார் என்று கருதின காரியமானது, பிதா பரிசுத்த ஆவியைக் கர்த்தருக்கு அருளின காரியத்திலிருந்து உறுதியாகுகின்றது. கர்த்தர் மேல் அருளப்பட்ட இந்த அபிஷேகமானது, அவரை மேசியாவாக, கிறிஸ்துவாக, சபையாகிய கர்த்தரின் சரீரத்தினுடைய நம்பிக்கையாகவும் மற்றும் இறுதியில் நடைபெறப்போகிற அனைத்துக் காரியங்களுக்குமான நம்பிக்கையாகவும் ஆக்கியது. ஆகவே, நமது கர்த்தர், தாம் பண்ணின பலியின் அந்த உடன்படிக்கையை, பலியை ஒருபோதும் தவறாதபடியினாலும், மற்றும் பிதாவும் அவரைத் தவறாதவராகவே கருதினபடியினாலும், கர்த்தர் தம்முடைய சொந்த ஓட்டம் முடிவுபெறும் என்ற விசுவாசத்திலும், அதேசமயம் இந்தச் சுவிசேஷ யுகத்தின் முடிவை நம்பிக்கையில் கண்ணோக்கினவராகவும், ஆயிரம் வருஷம் யுகத்தின் முடிவில் தேவனுடைய அனைத்து நல் திட்டங்களும்/நோக்கங்களும், தமக்குள்ளும், தம் மூலமாகவும் இறுதியில் நிறைவேறித் தீரும் என்ற நிச்சயத்துடன் கண்ணோக்கினவராகவும் அவர் காணப்பட்டபடியினாலும், இக்கண்ணோட்டத்தின்படி அவர் எண்ணுவதும், செயல்படுவதும், பேசுவதும் அவருக்கு ஏற்றவைகளாக இருக்கின்றன. ஆகையால், இக்கண்ணோட்டத்தின்படியே அவர், “”நான் உயிர்த்தெழுதலும், ஜீவனுமாய் இருக்கிறேன்” என்று கூறினார். கர்த்தர் தாம் ஏறெடுத்துள்ள பலியின் வேலையானது, உலகத்திற்கு தாம் ஜீவன் கொடுப்பவராக இருக்கும் சிலாக்கியத்தைத் தமக்குப் பெற்றுக்கொடுக்கும் என்பதை அறிந்திருந்தார். இன்னுமாக, இந்த உரிமையைத் தாம் செயல்படுத்தும்போது, கல்லறையினின்று மரித்தவர்களைத் தாம் வெளியே கொண்டு வருவதோடு மாத்திரமல்லாமல், தம் மூலம் பிதாவினிடத்தில் வருகிறவர்களும், சிருஷ்டிகருக்குக் கீழ்ப்படிய இருதயத்தில் விருப்பம் கொண்டுள்ளவர்களுமாகிய அனைவரையும் முற்றிலுமாக மரண நிலையினின்று, பூரணத்திற்குத் தம்மால் கொண்டு வரமுடியும் என்பதையும் அறிந்திருந்தார்.

நமது கர்த்தருடைய அற்புதங்கள், உதாரணங்கள் ஆகும்

நமது கர்த்தர் ஜீவன் கொடுப்பவர் என்பதை நிரூபித்துக் காட்டும் கண்ணோட்டத்தில்தான் அவருடைய அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டன. ஜீவன் கொடுப்பதற்கான உரிமை (அ) சிலாக்கியம் தம்மிடத்தில் இருக்கின்றது என்பதை மாத்திரம் காட்டுகிறதாயிராமல், ஜீவன் கொடுப்பதில் தமக்குப் பிரியம் உள்ளது எனும் விஷயத்தையும் வெளிப்படுத்தும் கண்ணோட்டத்தில்தான் அவருடைய அற்புதங்கள் நிகழ்த்தப்பட்டன. இக்கண்ணோட்டத்தின்படி பார்க்கும்போது, கர்த்தர் தம்முடைய மகிமையடைந்த சபையுடன் மற்றும் சபையின் மூலம், தம்முடைய ஆயிரம் வருஷம் ஆளுகையின்போது செய்யப்போகின்ற பிரமாண்டமான வேலைக்கான சிறு உதாரணங்களாகவே நமது கர்த்தருடைய அற்புதங்கள் காணப்படுகின்றன. சகல குருடான கண்களும் திறக்கப்பட்டு, சகல செவிடர்களின் செவிகள் திறக்கப்பட்டு, மனரீதியிலும், ஒழுக்கரீதியிலும், சரீர ரீதியிலும் முடமாய் இருந்தவர்கள் சொஸ்தமாக்கப்பட்டு, பாவத்திலும், அக்கிரமத்திலும் காணப்பட்ட சகல மரித்தவர்கள் உயிர்ப்பிக்கப்பட்டு, உலக தோற்றம் முதல் சகல பரிசுத்த தீர்க்கத்தரிசிகளின் வாயின்மூலம் வாக்களிக்கப்பட்ட பிரகாரம் இழந்துபோன அனைத்தையும், கீழ்ப்படிதல் காட்டுவதன் மூலம் படிப்படியாகத் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் ஆயிரம் வருஷம் ஆளுகையின் பிரம்மாண்டமான வேலைகளுக்குக் கர்த்தருடைய அற்புதங்கள் சிறு உதாரணங்களாகவே காணப்படுகின்றது (அப்போஸ்தலர் 3:19-23).

நம்முடைய இந்தப் பாடமானது மலைப்பிரசங்கத்திற்குப் பின் தொடர்ந்த சம்பவங்களை உள்ளடக்கியுள்ளது. மலையில் ஆச்சரியமான போதனைகளை வழங்கினவருக்குள், அற்புதமான வல்லமை இருப்பது சாட்சி அளிக்கப்பட வேண்டும் என்ற எண்ணங்களை மத்தேயு மற்றும் லூக்கா தங்களுடைய மனங்களில் கொண்டவர்களாகத்தான், வசன காரியங்களை இப்படியாக ஒழுங்குபடுத்தியிருக்க வேண்டும். இயேசுவை நாசரேத் ஊரான் என்று ஏளனத்துடன் புறக்கணித்து ஒதுக்கினபடியால் இயேசு இப்பொழுது அவருடைய (புதிய) ஊரும், பேதுருவின் ஊரும், மற்றவர்களின் ஊருமாகிய கப்பர்நகூமுக்கு, கலிலேயா கடல் வழியாக வந்தார். முன்னொருமுறை அவர் கப்பர்நகூமில் அநேக வியாதியஸ்தர்களைச் சொஸ்தப்படுத்தினது நம்முடைய நினைவுக்கு வருகின்றது. மேலும், அவருடைய கீர்த்தி அனைத்து வகுப்பாரையும் எட்டியிருக்கும் என்பதிலும் ஐயமில்லை. ரோம சேவகர்களுக்கு அதிகாரியான ஒரு நூற்றுக்கதிபதி இங்கு வாழ்ந்து கொண்டிருந்தார். மேலும், இவருடைய முக்கியமான ஊழியக்காரன் வியாதிபட்டபடியால், இவனை இயேசு சொஸ்தப்படுத்த வேண்டும் என்று இவர் ஆவல் கொண்டார். இச்சம்பவத்தின் பதிவுகளானது இம்மனுஷன் தாழ்மையான மனங்கொண்டவர் என்பதையும், விசுவாசத்தினாலும், பரந்த மனப்பான்மையினாலும் நிறைந்தவர் என்பதையும் காட்டுகின்றது. புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நூற்றுக்கதிபதிகளும் பயபக்தியுடையவர்களாகவே காணப்படுகின்றனர். “”நூற்றுக்கதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், புமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.” “”இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான்” (மத்தேயு 27:54; அப்போஸ்தலர் 10:1. இந்தக் கொர்நேலியு என்பவரே புறஜாதியிலிருந்து முதலாவதாக கிறிஸ்தவ மார்க்கத்திற்கு மாறினவர் ஆவார்.

பெருந்தன்மையுள்ள நூற்றுக்கதிபதி

நம்முடைய பாடத்தில்வரும் நூற்றுக்கதிபதி ஞானமுள்ளவராகவும், தாழ்மையுள்ளவராகவும் காணப்படுகின்றார். தான் ஒரு புறஜாதியாக இருக்கின்றபடியால், தனக்கு இந்த யூத தீர்க்கதரிசியிடத்திலும், அவர் இஸ்ரயேலர்களுக்காகச் செய்துகொண்டுவரும் பணியிலும் உரிமை இல்லை என்பதை உணர்ந்தவராக இருந்தார். ஆகவே, தன்னுடைய வேலைக்காரனைச் சொஸ்தமாக்கும்படிக்குத் தம்பொருட்டு இயேசுவினிடத்தில் விண்ணப்பம் வைப்பதற்கு, இவர் பட்டணத்தின் சில மூப்பர்களை இயேசுவினிடத்திற்கு அனுப்பி வைத்தார். பட்டணத்து மூப்பர்கள் என்று சொல்லும்போது, இவர்கள் ஜெபஆலயத்தின் மூப்பர்களாயிராமல், பட்டணத்தின் பிரதான மனுஷர்களாய் இருந்தார்கள். தாழ்மையான மனம் இல்லாத எந்த மனுஷனும் நிச்சயமாக தன்னுடைய சொந்த ஸ்தானத்திற்குரிய மதிப்பை எண்ணியிருப்பான்; இன்னுமாக, யூதர்களுக்கும், புறஜாதிகளுக்கும் இடையே பிரிக்கும் சுவர் இருக்கின்றது என்றும், புறஜாதிகள் யூதர்களுக்குரிய தெய்வீக இரக்கத்தினின்று தவிர்க்கப்பட்டுள்ளனர் என்றும் வேதவாக்கியங்களும், யூதர்களும் குறிப்பிடுகின்ற வேறுபாட்டைக் கருத்தில் எடுத்துக்கொள்ளாதவனாகவும் இருந்திருப்பான். இந்த நூற்றுக்கதிபதியும், பிள்ளைகளில் ஒருவன் என்று உரிமை பராட்டிக்கொள்ளாத நிலையில் பிள்ளைகளின் மேஜையினின்றுவிழும் துணிக்கைகளை விரும்பின சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய ஸ்திரீயைப் போன்றவர்தான்.

மூப்பர்கள் நூற்றுக்கதிபதியின் சார்பில் இயேசுவினிடத்தில் வந்து, நூற்றுக்கதிபதி யூதனாக இல்லாமல் இருந்தபோதிலும், அவர் பெருந்தன்மையுள்ளவர் என்றும், அவர் இஸ்ரயேலர்களை நேசிப்பவர் என்றும், அவர் புறஜாதியாக இருக்கும் காரியத்தினிமித்தம் அவரால் பங்குக்கொள்ள முடியாத போதிலும், இஸ்ரயேலர்களாகிய தாங்கள் தொழுதுகொள்வதற்கெனத் தங்களுக்கு ஜெப ஆலயத்தை அவர் கட்டிக்கொடுத்தார் என்றும் கூறி கருத்தாய் வேண்டிக்கொண்டார்கள். ஒருவேளை இந்த நூற்றுக்கதிபதி மதிப்பானவராய்த்தன்னைக் காட்டிக்கொண்டிருந்திருப்பாரானால், தான் “”பிள்ளைகளில்” ஒருவரல்ல என்னும் உண்மையைக் கருத்தில் எடுத்துக்கொள்வதைப் புறக்கணித்திருப்பாரானால், விண்ணப்பத்திற்கு அருள் செய்வதற்கு முன்னதாக, மேற்கூறிய விஷயங்கள் சம்பந்தமான சில படிப்பினைகளைப் பதிய வைக்க வேண்டிய அவசியம் இயேசுவிற்கு உண்டாயிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், மேற்கூறின அனைத்து விஷயங்களும் அவர் வேண்டியுள்ள விண்ணப்பத்தில் ஒப்புக்கொண்டிருப்பதினால், நமது கர்த்தர் உடனடியாக விண்ணப்பத்திற்கு இணங்கினார். எந்த ஒரு காரியத்திலும் நாம் கர்த்தரைத் தாழ்மையுடன் அணுக வேண்டும் என்பதும், இந்தத் தாழ்மை அவருடைய தயவுகளையும், ஆசீர்வாதங்களையும் நாம் பெற்றுக்கொள்ளத்தக்கதாக நம்மை ஆயத்தப்படுத்தும் என்பதும் நம் ஒவ்வொருவருக்கும் இங்குக் கிடைக்கும் படிப்பினையாகும். நாமுங்கூட அவரிடம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்வதற்கு எவ்விதமான உரிமையோ, புண்ணியமோ நம்மிடத்தில் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். இன்னுமாக நாமும் தகுதியற்றவர்கள் என்றும், கெஞ்சி பணிந்து கேட்பவர்கள் என்றும், அவருடைய கரங்களினின்று நீதியை/தீர்ப்பை அடைவதற்காக இல்லாமல் கிருபையையும் இரக்கத்தையும் நாடுபவர்கள் என்றுமுள்ள கண்ணோட்டத்தில் நாம் கர்த்தரை அணுக வேண்டியவர்களாய் இருக்கின்றோம் என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும்.

இன்னுமாக நூற்றுக்கதிபதி, தான் ஒரு புறஜாதியாக இருக்கின்றபடியால், தன்னுடைய வீட்டில் ஒரு யூதர் பிரவேசிப்பது, யூதர்களுடைய வழக்கத்தின்படி சரியானதல்ல என்றும், இப்படி பிரவேசிப்பது யூதர்களைத் தீட்டுப்படுத்தும் என்றுமுள்ள விஷயத்தை நினைவுகூர்ந்தார். இந்த நூற்றுக்கதிபதி, தான் ஒரு பாவி என்றும், வல்லமை கொண்டிருக்கின்றாரென தன்னால்ஒப்புக்கொள்ளும் இயேசுவானவர், சர்வ வல்லமையுள்ளவரின் பிரதிநிதி என்றும் உணர்ந்துக் கொண்டிருந்தார் என்பதிலும் சந்தேகமில்லை. இந்த நூற்றுக்கதிபதியின் உணர்வுகள், “”ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னை விட்டுப்போக வேண்டும்” என்ற பேதுருவின் வார்த்தைகளுக்கு ஒத்திருக்கின்றன (லூக்கா 5:8).

இன்னுமாக, ஒருவேளை கர்த்தர் சம்பவத்தின் இடத்தில் இருக்கும்போது அவரால் வல்லமையைச் செயல்படுத்த முடியுமானால், சம்பவத்தின் இடத்தில் அவர் காணப்படாமலும், அவரால் தமது சொஸ்தப்படுத்தும் வல்லமையைச் செயல்படுத்த முடியும் என்று நூற்றுக்கதிபதி யோசித்தார். இன்னுமாக, இந்த நூற்றுக்கதிபதி இருக்கும் பட்டணமாகிய கப்பர்நகூமிலிருந்த [R3755 : page 110] இராஜாவின் மனுஷனுடைய குமாரனை, கர்த்தர் இயேசு கானாவூரில் இருந்துகொண்டு தமது வார்த்தை மூலம் சொஸ்தப்படுத்தின விஷயத்தையும், நூற்றுக்கதிபதி அநேகமாகக் கேள்விப்பட்டிருக்க வேண்டும். இந்தக் காரணங்களினிமித்தம் ஆண்டவர் இயேசு தன்னுடைய வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க தான் பாத்திரவானல்ல என்பதையும், ஆண்டவரை வருத்தப்படுத்த தனக்கு விருப்பமில்லை என்பதையும், ஆண்டவர் வாயினின்று புறப்படும் வார்த்தையே போதும் என்பதையும் தனக்கு முழுமையான விசுவாசம் இருக்கின்றது என்பதையும், ஆண்டவரிடத்தில் விவரித்துச் சொல்வதற்காக நூற்றுக்கதிபதி உடனடியாகத் தூதர்களை அனுப்பி வைத்தார். இன்னுமாக, கர்த்தருடைய வார்த்தை மீது தனக்கு இருக்கும் இந்த விசுவாசத்தை லூக்கா 7:8-ஆம் வசனத்தின் வார்த்தைகள் மூலம் விவரிக்கின்றார். அதாவது, தனக்கும் குறிப்பிட்டளவு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளபடியால், இந்த அதிகாரத்தினால் தன்னால் தன்னுடைய ஊழியக்காரனைப் போ என்றும், வா என்றும்சொல்லமுடியும்; இதைப்போலவே, தேவனுடைய அபிஷேகம் பண்ணப்பட்டவராகிய இயேசுவுக்கும் இயற்கையினுடைய செல்வாக்குகளின் மீது அதிகாரம் உண்டென்றும், தனது ஊழியக்காரனிடமிருந்து நோயை போ என்று கூறி இயேசு கட்டளையிட்டால், தனது ஊழியக்காரன் சொஸ்தமடைவான் என்றும் நூற்றுக்கதிபதி இயேசுவினுடைய வார்த்தைகள் மீதான தனது விசுவாசத்தை விளக்கிக்காட்டினார்.

அந்நியனுடைய ஆச்சரியப்படத்தக்கதான விசுவாசம்

“”இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (லூக்கா 7:9). இயேசு ஆச்சரியப்பட்டதாகக் குறிப்பிடப்படும் மற்ற ஒரே ஒருஇடம், மாற்கு 6:6-ஆம் வசனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பல வருடங்களாக தயவு பெற்ற ஜனங்களிடம், மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட ஜனங்களிடம், தெய்வீக வாக்குத்தத்தங்களினால் மிகவும் சம்பூரணமாகப் போஷிக்கப்பட்ட ஜனங்களிடம், தெய்வீக வழிநடத்துதல்களினால் போதிக்கப்பட்ட ஜனங்களிடம், எதிர்ப்பார்த்தளவுக்கு விசுவாசம் காணப்படவில்லை. ஆனால், தயவு பெற்றிராத புறஜாதிகளோ, அநேகவிதங்களில் குறிப்பிடத்தக்கதான விசுவாசத்தைப் பெற்றுக் கொண்டிருந்தனர். ஆகையால் கப்பர்நகூமின் ஜனங்களை, சோதோம் மற்றும் கொமோராவின் அந்நிய தெய்வங்களை வணங்கும் ஜனங்களுடன் கர்த்தர் ஒப்பிட்டு வேறுபடுத்திக் காட்டினதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. கர்த்தர் இயேசு “”தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக் கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற்போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்: கோராசினே உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும், சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய். உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள் வரைக்கும் நிலைத்திருக்கும்” என்ற வார்த்தைகளைப் பேசியதிலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை (மத்தேயு 11:20-23).

அந்நிய தேவனை வணங்குகின்ற ஜனங்கள் அனைவருக்கும், யூதர்கள் அனைவருக்கும் பாவம் மற்றும் மரணத்தின் நிலையிலிருந்து வெளியே வருவதற்கும், பாவத்தின் மூலம் இழந்ததும், விலையேறப் பெற்ற இரத்தத்தினால் மீட்டுக்கொண்டதுமான ஜீவனுக்குரிய நிலைக்கு மீண்டும் கீழ்ப்படிதல் காரணமாகக் கொண்டு வரப்படுவதற்கும் ஏதுவாக ஆயிரம் வருஷம் யுகத்தின் கிருபையான வாய்ப்புகளை அருளுவது தெய்வீகத் திட்டமாய் இருக்கின்றது என வேதவாக்கியங்கள் வாக்களிப்பதால் நாம் எவ்வளவு மகிழ்ச்சியடைகின்றோம். மத சம்பந்தமான விஷயங்களில், முக்கியமாய்க் காணப்படுபவர்களில் சிலர், உலகத்தாரைக் காட்டிலும் கர்த்தரிடத்திலும் அவருடைய நற்பண்புகளிடத்திலும், அவருடைய வல்லமையிலும், அவருடைய ஞானத்திலும், அவருடைய அன்பிலும் வைத்துள்ள குறைவான விசுவாசத்தை/விசுவாசமின்மையைப் பார்த்துச் சிலசமயம் நாம் ஆச்சரியப்பட்டிருக்கின்றோம் [R3756 : page 110] அல்லவா? ஆனால், இப்படியாக விசுவாசமின்மையுடன் காணப்படுபவர்கள், கர்த்தரைப்பற்றின அறிவு பூமி முழுவதையும் நிரப்பும்பொழுதும், சகல மனுக்குலத்தின் புரிந்துக்கொள்ளுதலின் கண்களும், தேவனுடைய மகிமைப்பற்றின அறிவை உணர்ந்துகொள்ளத்தக்கதாகத் திறக்கப்படும்போதும் எவ்வளவாய் ஆச்சரியப்படுவார்கள். இப்பொழுது தேவனுடைய ஜனங்கள் அல்லாதவர்களாய்க் காணப்படுபவர்கள், அப்பொழுது அவருடைய ஜனங்கள் ஆகுவார்கள்; மற்றும், இப்பொழுது பலவிதத்திலும் அதிக அனுகூலங்களைப் பெற்றிருந்தும், வெளிவேஷமான பக்தியை மாத்திரம் காட்டிக்கொண்டிருப்பவர்கள், இப்பொழுது தாழ்வாகக் கருதப்படும் சிலருக்கு முன்பாக, அப்பொழுது தாழ்வாகக் காணப்படுவார்கள்.

நமது கர்த்தரும், சீஷர்களும், அவரைப் பின்தொடர்ந்து சென்ற திரளான ஜனங்கள் கூட்டமும் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்கள். ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது அடக்கம் பண்ணும் ஊர்வலம் இவர்களுக்கு முன் எதிர்ப்பட்டார்கள். கைம்பெண்ணாகிய தாயும், புலம்பி வருத்தமடைந்த நண்பர்களும், பாடையைச் சுமந்து வருகிறவர்களும், ஊர்வலத்தில் காணப்பட்டார்கள். அக்கைம்பெண்ணாகிய தாய்க்கு ஒரே மகனாய் இருந்த வாலிபன் மரித்துப் போனவனாக, பாடையில் கிடத்தப்பட்டிருந்தான். நமது கர்த்தர் கைம்பெண்ணினுடைய கண்ணீரைக் கண்டு, மனதுருகி, “”அழாதே” என்று சொன்னார். “”கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார்” (லூக்கா 7:14-15). ஒருவேளை இச்சம்பவம் கற்பனை கதையாக இருக்குமாயின், விதவை உடனடியாகக் கர்த்தருடைய பாதத்தில் விழுந்து, உரத்த சத்தத்தில் அவரைப் புகழ்ந்திருப்பாள், இன்னுமாக, அந்தத் திரளான ஜனக்கூட்டமும் சேர்ந்து அவரை வாழ்த்தியிருப்பார்கள் என்று பதிவுகள் இருந்திருக்கும். ஆனால், சம்பவத்தின் பதிவுகள் “”எல்லாரும் பயமடைந்தார்கள்” என்றே தெரிவிக்கின்றது. அதாவது, இயேசுவின் வல்லமையினால், தேவன் அவர்கள் அருகாமையில் காணப்படுகின்றார் என்ற உணர்ந்துகொள்ளுதலின் காரணமாக ஜனங்கள் எல்லாரும் பயமடைந்தார்கள்.

மனுக்குலம் தேவனுக்கு எதிர்மாறாக இருக்கும் தங்களுடைய சொந்த குறைவுகளையும், பூரணமற்ற தன்மையையும், அதேசமயம் சர்வவல்லமையுள்ள தேவனுடைய பரிசுத்தத்தையும், முழுமையான பூரணத்தையும், உணரும் போது தேவன் சமீபமாய்க் காணப்படுகின்றார் என்ற எண்ணத்தினால் அவர்களுக்குப் பயமே ஏற்படுகின்றது. அங்கிருந்த திரளான ஜனங்கள் உரத்த குரலில் ஓசன்னா என்று கூறி தேவனை மகிமைப்படுத்தாமல் மாறாக, மகா தீர்க்கத்தரிசியானவர், மகா போதகர் அவர்கள் மத்தியில் காணப்படுகின்றார் என்றும், தேவன் அவருக்குள் இருக்கின்றார் என்றும் உணர்ந்தவர்களாக, “”தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார்” என்று கூறி தேவனை மகிமைப்படுத்தினார்கள். யூதர்களுடைய பிதாக்களின் விஷயத்தில் அவர்களிடத்திலான கர்த்தருடைய தயவை, அற்புதங்கள் உறுதிபடுத்தின. விசேஷமான கையாளுதல்களை யூதர்கள் அக்காலகட்டத்தில் மீண்டுமாக எதிர்ப்பார்த்திருந்தார்கள். இன்னுமாக, மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கத்தரிசி ஆனால், மோசேயைக்காட்டிலும் வல்லமையுள்ள தீர்க்கத்தரிசி எழுப்பப்படுவார் என்று உரைக்கப்பட்டிருந்த தீர்க்கத்தரிசனத்தையும் அக்காலகட்டத்தில் யூதர்கள் நினைவுகூர்ந்து காணப்பட்டார்கள். பேதுரு, அப்போஸ்தலர் 3:19-21 வரையிலான வசனங்களில் குறிப்பிட்ட காரியங்கள் சிலவற்றை யூதர்கள் அக்காலக்கட்டத்தில் எதிர்ப்பார்த்து இருந்தார்கள். அதாவது, தேவன் தம்முடைய ஜனங்களைப் புதுப்பிப்பதன் மூலமாகவும், அவர்களை ஆசீர்வதிப்பதன் மூலமாகவும், சகல பரிசுத்த தீர்க்கத்தரிசிகள் மூலம் உரைத்திட்ட திரும்பக்கொடுத்தலின் காலங்களை அவர்களுக்கு அனுப்புவதின் மூலமாகவும் தமது தயவை வெளிப்படுத்துவார் என யூதர்கள் அக்காலக்கட்டத்தில் எதிர்ப்பார்த்தார்கள்.

தீர்க்கத்தரிசி, ஆசாரியன் மற்றும் இராஜா

இவர்களுடைய எதிர்ப்பார்ப்பு சரிதான். இயேசு மகா தீர்க்கத்தரிசியாகவும், பிதா மற்றும் பிதாவின் தயவிற்கான பிரதிநிதியாகவும் காணப்பட்டார். எனினும், விசுவாசத்திற்கான பரீட்சை எத்தனை நீண்ட காலமாய் இருந்தது! கிறிஸ்துவின் சரீரத்தினுடைய அங்கங்களை எழுப்புவதற்கும் இவ்விதமாக, பரம பிதாவினுடைய திட்டம் முழுமையாக நிறைவேறுவதற்கும் கர்த்தருடைய இரண்டாம் வருகையின்போது, திரும்பக்கொடுத்தலின் காலங்கள் முழுமையாய் வருவதற்கும் எத்துணை நீண்டகாலம் அவசியமாய் உள்ளது. நமக்கான பாவநிவாரண பலியாக தம்மை மரணம் வரையிலும் கீழ்ப்படிதலுடன் ஒப்புக்கொடுத்தவருடைய புண்ணியத்தின் பலனால் மனுக்குத்தின் மீது வரப்போகும் மகா உலகளவிலான ஆசீர்வாதங்களுக்கான உதாரணங்களாகவே, நமது மீட்பர் சொஸ்தப்படுத்தின வேலைகளும், மரணத்தின் நித்திரையினின்று (சிலரை) விழித்தெழுப்பப் பண்ணின வேலைகளும் காணப்பட்டது. இயேசுவின் செய்தியும், அவருடைய வேலையும், பட்டணத்தின் சகல பகுதிகளிலும் பரவினதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நமது கர்த்தருடைய அற்புதங்களால் நிறைவேற்றப்பட்டன என அக்காலத்தில் உணரப்பட்ட வேலையை விட, ஒரு மாபெரும் வேலை நிறைவேற்றப்பட்டது. நமது கர்த்தருடைய ஊழியத்தின் போது சுமார் “”500 சகோரர்கள்” மாத்திரமே சேர்க்கப்பட்டார்கள் என்பது நம்மை ஆச்சரியப்படுத்துகின்றது. அதாவது, 500 பேர் மாத்திரமே சகோதரர்கள் என்ற பெயரில் அழைக்கப்படுவதற்குப் பாத்திரராகக் காணப்பட்டதும், நமது கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்குப் பிற்பாடு அந்த நாற்பது நாட்களின்போது அவரைக் காணும் சிலாக்கியம் இத்தனை பேருக்கு மாத்திரமே கிடைத்தது என்பதும் நம்மை ஆச்சரியப்படுத்தலாம். எனினும், புதிய யுகத்தின் கீழ்ப்பெந்தெகொஸ்தே நாள் முதலான அப்போஸ்தலர்களுடைய ஊழியத்தின் கீழ் அநேகர் பலனாய் வந்தார்கள். உதாரணத்திற்கு, நாயீன் ஊரின் இந்த விதவையும், அவளுடைய குமாரனும் கடைசியில், இயேசுவின் பின்னடியார்கள் ஆகியிருப்பார்கள் என்று நாம் எண்ணுவது சரியே. இன்னுமாக, அக்கூட்டத்தில் இருந்தவர்களும், அற்புதத்தைக் கண்டவர்களும், சரியன இருதய நிலையைக் கொண்டிருந்தவர்களும், மேசியாவின் மீது விசுவாசம் வைத்திருப்பார்கள். இன்னுமாக, சந்தேகத்திற்கிடமின்றி, “”தடுப்புச் சுவர்” இடிக்கப்பட்ட பிற்பாடும், புறஜாதியாகிய கொர்நேலியு இந்த விசுவாச ஐக்கியத்திற்குள் கொண்டுவரப்பட்ட பிற்பாடும், இப்பாடத்தில் நாம் பார்த்த நூற்றுக்கதிபதி, நிச்சயமாக கிருபை மற்றும் சத்தியத்தின் செய்தியினால் தொடப்பட்டிருப்பார். கர்த்தருடைய ஊழியத்தில், நம்முடைய சொந்த பிரயாசத்திற்கான முழுப் பலனையும் நாம் உடனடியாக எதிர்ப்பார்க்கக் கூடாது என்பதே இங்கு நாம் கற்றுக்கொள்கின்ற பாடமாகும். நாம் மனநிறைவு உள்ளவர்களாக ஊழியம் புரிய வேண்டும்; காத்திருப்பதிலும் மனநிறைவுடன் காணப்பட வேண்டும்; மற்றும், கர்த்தர் தாமே அவருடைய வார்த்தைகளுக்கும், செய்திக்கும் பின்னாகக் காணப்பட்டு, தம்முடைய இராஜ்யத்தில் உடன்சுதந்தரர்களாகுவதற்குப் பாத்திரரென, தாம் கருதுகின்றவர்களையே அவர் தெரிந்தெடுப்பார் என்று உணர்ந்துக்கொண்டவர்களாகவும் நாம் காணப்பட வேண்டும். சில உலகப்பிரகாரமான மனுஷர்கள் சத்தியம் தொடர்பான சில அறிவிற்குள்ளாக இக்காலக்கட்டத்தில் வரலாம்; ஆயினும், இவர்கள் இச்சத்தியத்தினால் முழுமையாய் ஆசீர்வதிக்கப்படுவதில்லை. மேலும் (தற்காலத்திலுள்ள) சத்தியத்திற்கான நம்முடைய ஊழியங்கள் மூலமாகவும், கர்த்தருக்கான நம்முடைய தற்கால பிரயாசங்கள் மூலமாகவும், இவர்கள் போகப்போக உபத்திரவக் காலத்தின் பாடுகள் மற்றும் உபத்திரவங்களினால் அல்லது பிற்பாடு ஆயிரம் வருஷம் யுகத்தின்போது நன்மை பெற்றுக்கொள்வார்கள் என்பதே இங்கு நமக்குக் கிடைக்கும் மற்றுமொரு கருத்தாகும்.

ஆகவே, நமக்கு வாய்ப்புக் கிடைப்பதற்கு ஏற்ப, நாம் எல்லா இடத்திலும் நல்ல விதைகளைத் தூவுவோமாக. ஏனெனில், இதுவோ (அ) அதுவோ எது செழித்து, வளரும் என்பதை நாம் அறியோம். சிலசமயம் எங்கு நாம் அதிக வைராக்கியங்கொண்டு, பிரயாசம் எடுக்கின்றோமோ, அங்குப் பலனே கிடைக்காமல்போகின்றது; மேலும், எங்கு நாம் குறைவான பலன்களை எதிர்ப்பார்க்கின்றோமோ, அங்குத்தான் சிலசமயம் அதிக பலன் கிடைக்கின்றது. நம்முடைய வைராக்கியம் (அ) பிரயாசங்களுக்கு ஏற்பவே கர்த்தர் நமக்குப் பரிசளிப்பாரே ஒழிய, நம்முடைய பிரயாசத்தினால் [R3756 : page 111] உண்டான பலன்களின் அடிப்படையிலல்ல என்பதை நாம் நினைவில் கொள்வோமாக. கர்த்தர் நம்மிடத்தில்தான் (நமக்குள்தான்) பிரதானமான பலன்களை எதிர்ப்பார்க்கின்றார். அதாவது, அவருடைய ஆவியின் கனிகளில் வளருவதே அவர் நாடும் பிரதானமான பலன்களாகும். இந்தப் பலன்களாகிய ஆவிக்குரிய கனிகளின் வளர்ச்சியானது, அவர் மீதும், அவருடைய செய்தியின் மீதும், சகோதரர் மீதும், ஒட்டுமொத்த மனுக்குலத்தின் மீதும், நம்முடைய சத்துருக்கள் மீதுமான நம்முடைய அன்பின் வாயிலாக வெளிப்படுகின்றது.

சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை உயிர்ப்பிப்பார்

நமது கர்த்தருடைய குணமாக்கும் ஊழியங்கள், சில வருடங்களே நீடித்தன. இன்னுமாக, சொற்பமான யூத ஜனங்களைத்தான் சென்றடையவும் செய்தது. ஆனால், கர்த்தர் பரமேறின பிற்பாடு, “”தம்முடைய சரீரத்தின் அங்கங்கள்” என்று அழைக்கும் தம்முடைய சீஷர்கள் மூலமாக, மேலான தளத்தில் குணப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டு வருகின்றார். (1 கொரிந்தியர் 21:27). இவர்கள் மூலம் கர்த்தர் செயல்படுவதினால், அநேக கண்கள் திறக்கப்பட்டுள்ளது, அநேக செவிகள் திறக்கப்பட்டுள்ளது, அநேக ஒழுக்க ரீதியிலான முடக்குகள் குணமாக்கப்பட்டுள்ளது மற்றும் அப்போஸ்தலர், “”அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்,” “”நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள், அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார்.” எபேசியர் 2:1; கொலோசெயர் 3:1; ரோமர் 8:11-ஆகிய வசனங்களில் குறிப்பிட்டுள்ள பிரகாரம் மரணத்தினின்று உயிர்ப்பிக்கப்பட்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இயேசுவின் வல்லமையான கிரியைகளைக் கண்ட பிற்பாடும், யூதர்கள் அவரைப் புறக்கணித்தக் காரியத்தைக்குறித்து நாம் ஆச்சரியடைவோமானால், பரலோகத்திலிருந்து மிகத் தெளிவாக நம்மிடத்தில் பேசியவரை, நம்மைக் குணப்படுத்தின தழும்புகளைக் கொண்டவரை மற்றும், உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறார் என நாம் உணர்ந்துக்கொண்டவரை ஏதோவிதத்தில் சந்தேகிப்போமானால் அல்லது, ஏதோ விதத்தில் இவருக்கு உண்மையற்றவர்களாய் இருப்போமானால், நம்மைக்குறித்து என்னவெல்லாம் பேசப்படும். ஆகவே, புதிய ஜீவனுக்குள் உயிர்ப்பிக்கப்படும் அனுபவத்தை அனுபவித்தவர்கள் மற்றும் ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள், இயேசுவின் மூலம் செயல்படும் தெய்வீக வல்லமை, ஈவு, ஞானம் மற்றும் அன்பின் விவரிப்பைத் தெளிவாக அடைந்துள்ளபடியால், ஒருவேளை இவர்கள் மறுதலித்துப் போவார்களெனில், இவர்கள் மன்னிக்கப்பட முடியாதவர்கள் ஆவார்கள். “”மறுதலித்துப்போனவர்கள், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம்” என்று அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார் (எபிரெயர் 6:6). இவ்வசனத்தில் இவர்கள் அறியாமை அல்லது பெலவீனம் காரணமாக மறுதலித்துக் கடந்து போகாமல், துணிகரமான செயல்பாடுகளினாலேயே மறுதலிக்கின்றார்களென குறிப்பிடுகின்றார். இன்னுமாக, இப்படிப்பட்டவர்களின் செயல்பாடானது, இயேசுவோடுக் கூட இருந்த யூதர்கள் அவர்பால் கொண்டிருந்த இருதய நிலைக்கு ஒத்திருக்கின்றது என்றும், இயேசுவை மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துவதற்கு ஒத்திருக்கின்றது என்றும் அப்போஸ்தலர் குறிப்பிடுகின்றார்.

அப்போஸ்தலர் குறிப்பிடுவதுபோன்று நாம் நமது அழைப்பை, அபாத்திரமான நிலையில் முடிக்காமல் காணப்படுவோமாக. இன்னுமாக, நம்மை அன்புகூர்ந்து, நம்மைத் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் வாங்கிக்கொண்டவருடைய கரங்களினின்று நாம் பெற்றுக்கொண்ட இரக்கங்களுக்கும், தயவுகளுக்கும், வெட்கக்கேடான பிரதிபலனைச் செலுத்தும் நிலைக்கு ஆளாகாமல் இருப்போமாக. நாம் உண்மையுள்ளவர்களாக இருக்கக்கடவோம். புதிய சிருஷ்டியாக நம்மில் ஆரம்பிக்கப்பட்ட உயிர்த்தெழுதலின் வேலையானது, தேவனுடைய கிருபையினால் முதலாம் உயிர்த்தெழுதலில் நிறைவேற வேண்டும் என்பதை நாம் நினைவில்கொள்வோமாக. முதலாம் உயிர்த்தெழுதலில், கணப்பொழுதில் நாம் நமது கர்த்தரைப் போன்று மாறி, அவர் இருக்கிற வண்ணமாகவே அவரைத் தரிசித்து, அவருடைய மகிமையில் பங்கடைகின்றவர்களாய் இருப்போம்.