R4566 (page 72)
மத்தேயு 6:19-34
மாபெரும் போதகர் ஊதாரித்தனமான செலவு குறித்துப் போதிக்கவில்லை. அவர் பிதாவுக்கு அடுத்த வேலைகளில் சுறுசுறுப்புடன் காணப்பட்டார். மேலும், தம்முடைய பின்னடியார்களுக்கு, “”அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள். ஆவியிலே அனலாயிருங்கள். கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்” என்ற காரியத்தையே போதிக்கின்றவராகக் காணப்பட்டார் (ரோமர் 12:11). இந்தப் பாடத்தில், பூமிக்குரிய பொக்கிஷங்களைச் சுயநலமாய்ச் சேர்க்கும் விதத்தில் நமது முயற்சிகள் காணப்படக்கூடாது என்று கர்த்தர் போதிக்கின்றார். பரலோகத்திலேயே நாம் [R4567 : page 72] பொக்கிஷங்களைச் சேர்க்கின்றவர்களாகக் காணப்பட வேண்டும். பூச்சியும், துருவும், திருடனும் பூமிக்குரிய பொக்கிஷங்களைக் கெடுக்கும் என்ற வார்த்தைகளைக் கர்த்தர் பயன்படுத்தியுள்ளபோதிலும், இவ்வார்த்தைகளில் விளங்கும் கொள்கை வெளிப்படையாக இருந்தாலும் கூட, இங்குள்ள அவருடைய போதனையை நாம் இன்னும் மேம்பட்ட கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றவர்களாய் இருக்கின்றோம். சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் தவிர மற்றபடி முன்கூட்டியே உடைகளையோ அல்லது உணவுகளையோ சேர்த்து வைப்பது என்பது அறிவீனமான காரியம் என்று அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். ஆனால், பொன் சேர்க்கப்படலாம் அல்லது பணம் வங்கியில் சேர்த்து வைக்கப்படலாம், இருக்கும் வயல்களோடு கூட இன்னும் அதிகம் வயல்கள் வாங்கி சேர்க்கப்படலாம், அதிகம் வீடுகள் சேர்க்கப்படலாம். இவைகளெல்லாம் நாம் சேர்த்துவைத்தாலும் இவைகளும் அழியக்கூடியவைகளே.
வங்கி கணக்கைப் பூச்சியால் தொடமுடியாது என்றாலும், பொன்னைத் துரு சேதப்படுத்த முடியாது என்றாலும், சொத்துகளின் உரிமையைத் திருடனால் திருட முடியாது என்றாலும், இவைகள் நிரந்தரமானவைகள் அல்ல. நாம் உயிரோடு இருக்கும்போதும், இல்லாவிட்டாலுங்கூட, எல்லாவிதமான பூமிக்குரிய பொக்கிஷங்களும் அதற்குரிய மதிப்பை இழந்துவிடலாம். நாம் மரித்த பிற்பாடு நமக்கு அது மதிப்பு இழந்ததாகவே காணப்படும். தற்கால சூழ்நிலைகளில் கீழுள்ள பூமிக்குரிய பொக்கிஷங்கள் எவ்வளவுதான் முன்யோசனையுள்ள ஏற்பாடாக இருப்பினும், அவைகளை மரணமும், அழியும் தன்மையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றது. “”நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்” (யோபு 1:21). மரணத்திற்குப் பின்பு ஓர் எதிர்க்கால வாழ்க்கையைத் தேவன் ஏற்பாடு பண்ணியுள்ளார் என்றும், அது உயிர்த்தெழுதலின் காலைபொழுதில் கிடைக்கும் என்றும் புத்திசாலித்தனமான ஜனங்கள் பொதுவாக ஒத்துக்கொண்டுள்ளனர். நாம் நம்முடைய தற்போதைய வாழ்க்கையைப் பயன்படுத்துகிறதின் அடிப்படையிலேயே, அப்போதுள்ள நமக்கான ஆசீர்வாதம் இருக்கும் என வேதவாக்கியங்கள் போதிக்கின்றன. இதையே நமது மாபெரும் போதகர் இன்றைய நமது பாடத்தில் வலியுறுத்துகின்றார். இதிலுள்ள நியாயத்தை அனைத்து அறிவுடைய மனங்களும் ஒப்புக்கொள்கின்றன.
சிலரால் கூறப்படும் எல்லை மீறின கண்ணோட்டத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டாம். ஜனங்கள் தங்கள் முதிர்வயதில் பிறரின் தர்ம உதவிகளைச் சார்ந்து இருக்காமல் இருக்கத்தக்கதாக, தங்கள் சௌகரியத்திற்குத் தேவையான நியாயமான ஏற்பாடுகளைக் கூடச் செய்ய வேண்டாம் என்று ஆண்டவர் போதித்ததாக நாம் எண்ணிவிட வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் குடும்பத்தில் தங்களைச் சார்ந்துள்ள அங்கங்களுக்குத் தாங்கள் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து அலட்சியமாக இருக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் ஆண்டவர் பேசினதாகவும் நாம் எண்ணிவிட வேண்டாம். “”ஒருவன் தன் சொந்த ஜனங்களை விசாரியாமற்போனால், அவன் அவிசுவாசியிலும் கெட்டவனாயிருப்பான்” என்று தெளிவாக வேதாகமம் போதிக்கின்றது. பரிசுத்தவானாகிய பவுல், “”நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்” என்று கூறியிருக்கின்ற பிரகாரம் நம்முடைய சொந்த எதிர்க்கால தேவைகளுக்கு அல்லது தேவைகளில் காணப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்து உதவத்தக்கதாகப் பணத்தைச் சேமித்து வைப்பது சரியான விஷயமாகும் (1 கொரிந்தியர் 16:2). தேவனுடைய ஜனங்கள் சிக்கனமாய்ச்செலவு செய்கிறவர்களாய் இருக்க வேண்டும். கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். தங்களிடத்தில் எதிர்க்கால தேவைக்கென, கொஞ்சம் பணம் சேமித்து வைத்தவர்களாக இருக்க வேண்டும்.
ஆனால், தேவனுடைய ஜனங்களுக்குப் பூமிக்குரியவைகள், அவர்களின் ஆத்துமாக்களுக்குப் பொக்கிஷங்களாக இருக்கக்கூடாது. மாறாக, அது அவர்களின் வேலைக்காரர்களாகவும், அவர்களுடைய வசதிகளுக்காக, எப்பொழுதும் பயன்பட ஆயத்தமாகவும், தேவைகளுக்கு இலவசமாகவும், முழுமையாகவும் பயன்பட ஆயத்தமாகவும் காணப்பட வேண்டும். இப்படியான நடத்தையைப் பின்பற்றுகிறவர்கள், அதிகமான பூமிக்குரிய ஆஸ்திகளைக் கொண்டிருப்பது அரிதான காரியமாகும். ஆஸ்திகளைப் பொக்கிஷமாக ஆக்கிக்கொண்டு, அவைகள்மேல் அளவுக்கு மீறின ஆசைகள் வைப்பவர்களே ஒன்றில் கருமிகளாக/பேராசைக் கொண்டவர்களாக அல்லது மிகவும் ஐசுவரியவான்களாகக் காணப்படுவார்கள். பரத்திற்குரிய காரியங்கள் மீது ஆசை வைப்பது என்பது, அதிகமான ஆஸ்திகள் குவிப்பதைத் தடைப்பண்ணத்தக்கதாக, உலக ஐசுவரியங்களிடத்தில், பற்று இல்லாமல் கையாளும் தன்மையைக் குறிக்கின்றது.
யாரொருவன் தனது ஆசையை, பூமிக்குரிய பொக்கிஷங்கள் மீது வைக்கின்றானோ, அவன் கஞ்சத்தனமானவனாகவும், சுயநலமுள்ளவனாகவும், உலகப்பிரகாரமாய் நடந்து கொள்பவனாகவும் ஆகிவிடுவான் என்பதே நம்முடைய ஆண்டவரின் வார்த்தைகளாகும். ஆனால், ஒருவன் பரத்திற்குரிய காரியங்கள் மீது தனது ஆசையை வைப்பானானால், அவன் தாராளமுள்ளவனாகவும், பாக்கியவானாகவும், ஆவிக்குரியவனாகவும், பரத்திற்குரியவனாகவும் ஆகிவிடுவான். நமக்கு இரண்டு கண்கள் உள்ளன. மேலும், ஓருவேளை அவைகள் ஒன்றுக்கொன்று பொருத்தமாகச் செயல்படவில்லையெனில், நம்முடைய பார்வைத் தெளிவற்றதாக/உருவம் வேறுபட்டதாக இருக்கும். அனைத்தையும் நாம் சரியாகப் பார்க்கத்தக்கதாக இந்தக் கண் பிரச்சனையை நாம் சரிச் செய்துகொள்ள நாடுவோம். இப்படியே புரிந்துக்கொள்ளுதலின் கண்களினுடைய விஷயத்திலும் உள்ளது. நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்களுக்கு, தற்கால மற்றும் எதிர்க்கால தோற்றங்கள் தெரியும். அதாவது, பூமிக்குரிய மற்றும் பரத்திற்குரிய பார்வைகள் உண்டு. அவையவைகளுக்குரிய வெளிச்சத்தில் இந்த இரண்டு பார்வைகளையும் நாம் சரியாய்ப் பொருத்திக்கொள்வது நல்லது. அதாவது, எதிர்க்கால வாழ்க்கையை, தற்கால வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, எதிர்கால வாழ்க்கையினுடைய மாபெரும் மதிப்பை நாம் உணர்ந்துக்கொள்ளத்தக்கதாகவும், இதன்விளைவாக நம் இருதயத்தின் ஆசைகள் பரத்திற்குரியவைகள்மேல் வைத்துக்கொள்வதற்கு உதவியாக வழிநடத்தப்படத்தக்கதாகவும் மற்றும் ஜீவியத்தின் விஷயங்களை ஞானமாய்ச் சரியான நிலையில் வைத்துக்கொள்ளத்தக்கதாகவும், [R4567 : page 73] நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்களுடைய இரண்டு பார்வைகளையும் சரியாய்ப் பொருத்திக்கொள்வது நல்லது.
நம்முடைய இயற்கையான சரீரத்தின் கண்கள் குருடான அல்லது இருண்டுபோன நிலைக்குச் எப்படிச் சென்றுவிடுகின்றதோ, அப்படியே நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்களுடைய விஷயங்களிலும் நடக்கின்றது. ஒருமுறை நம்முடைய கண்கள் பிரகாசிக்கப்பட்டு, தெய்வீக வாக்குத்தத்தங்களை நாம் ருசி பார்த்தப் பிற்பாடு, குருட்டுத்தன்மை நமக்கு ஏற்படுமாயின், நமது நிலைமை பரிதாபத்திற்குரியதாகக் காணப்படும். இப்படியான இருள் எவ்வளவு அதிகமானதாய் இருக்கும்!
இன்னும் ஒரு படிப்பினை இங்கு நமக்கு உள்ளது. உலகத்திற்கு ஊழியம் செய்வது, தற்காலத்தில் நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரக்கூடியதாக இருப்பினும், நம்முடைய எதிர்க்கால நன்மைகளைப் பாதிக்கக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், தேவனுக்கு ஊழியம் புரிவது என்பது எதிர்க்காலத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்துகின்றதாய் இருக்கின்றது. தேவனுக்கு கீழ்ப்படியத்தக்கதாக, பாவத்தினால் உண்டாகும் சந்தோஷங்களை நாம் இழந்துபோக வேண்டியதாய் இருப்பினும், தற்காலத்திலுள்ள சில நியாயமான உலக ஆசீர்வாதங்களை இழக்க வேண்டியதாய் இருப்பினும், தேவனுக்கும், நீதிக்கும் உண்மையான ஊழியர்களாக இருப்பவர்களாகிய நமக்கு தற்போதுங்கூட ஓர் ஆசிர்வாதம் உள்ளது. இதனோடுகூட மகிமையான எதிர்க்காலத்தின் ஆசிர்வாதங்கள் கூட இருக்கின்றன. ஆகவே, இரண்டு எஜமான்களில், எவர் பக்கம் நாம் நிற்க வேண்டும் என்பதை நாம் தெரிந்துக்கொள்வது அவசியமாய் உள்ளது. நம்மால் இரண்டு எஜமான்களுக்கும் ஊழியம் செய்யமுடியாது. இரண்டு எஜமான்களிடமிருந்தும் நம்மால் பலன் பெற்றுக்கொள்ள முடியாது. “”நானும் என் வீட்டாருமோவென்றால் கர்த்தரையே சேவிப்போம்” என்று யோசுவாவைப் போன்று நாமும் தீர்மானிப்போமாக (யோசுவா 24:15).
நாம் நம்முடைய அனைத்துக் காரியங்களையும் தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்கவும், நம்மால் முடிந்தமட்டும் தேவனுக்குக் கீழ்ப்படிதலுடன் காணப்படுவோம் என முழுமையாய்த் தீர்மானிக்கவும், ஆண்டவர் நமக்கு வலியுறுத்துகின்றார். பின்னர், நாம் இப்படியாகத் தேவனுடன் ஒரு விசேஷமான உறவிற்குள் வந்தபடியாலும், அவருடைய வாக்குத்தத்தங்களின் காரணத்தினாலும் தேவனுடைய சிருஷ்டிகள் அனைத்தின் மத்தியிலும், நம்மீது தெய்வீகப் பராமரிப்புக் காணப்படுவதை நாம் உணர்ந்துக்கொள்ளவும் ஆண்டவர் நமக்கு வலியுறுத்துகின்றார். தேவனுடைய ஜனங்கள் தங்களுடைய பூமிக்கடுத்த காரியங்களில் கவலைக்கொள்ளாமல், தங்கள் அனைத்துக் காரியங்களையும் நம்பிக்கையுடன் தங்களுடைய பரம பிதாவிடம் ஒப்புக்கொடுத்துவிட வேண்டும். தற்கால ஜீவியத்திற்குரிய உணவு மற்றும் வஸ்திரங்களைக்காட்டிலும் நமக்கான நித்திய ஜீவன் மிகவும் முக்கியத்துவம் உடையதாகும். நாம் ஞானத்துடன் காணப்பட்டால், தற்காலத்தின் எல்லா விஷயங்களையும் தியாகம்பண்ணி, எதிர்க்கால ஜீவியத்தை நாடுகின்றவர்களாய்க் காணப்படுவோம்.
நம்முடைய விஷயங்களில் நம்மைப் பராமரித்துக்கொள்வதற்கான நம்முடைய பரம பிதாவின் வல்லமை குறித்த விஷயத்தில், நாம் இயற்கையில் வெளிப்படும் அவருடைய வல்லமை, ஞானம் மற்றும் கிருபையையும் மற்றும் ஆகாயத்துப் பட்சிகளுக்கும், லீலி புஷ்பங்களுக்கும் அவர் பண்ணியுள்ள ஏற்பாடுகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியவர்களாய் இருக்க வேண்டும். இவைகளின் தேவைகளையெல்லாம் பராமரிப்பதுபோன்று, நம்முடைய மேலான நன்மைக்கும் அவர் அருளுவதற்கும் சரிசமமான வல்லமை கொண்டுள்ளார் என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். என்ன வந்தாலும், விசுவாசத்தில் அவரை உறுதியாய் நம்ப வேண்டும். தற்கால ஜீவியத்திலும், எதிர்க்கால ஜீவியத்திலுமுள்ள காரியங்களுக்கு நாம் கர்த்தரை நோக்கிப் பார்க்கின்றவர்களாய் இருக்கவேண்டும். நம்முடைய தற்கால அனுபவங்களையும், நமக்குரிய எதிர்க்கால பலன்களையும் தேவனுடைய ஞானம், அன்பு மற்றும் வல்லமையினிடத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டு, அவருக்கான ஊழியங்களில் கடுமையாக உழைப்பவர்களாகக் காணப்படுவோமாக!
லீலி புஷ்பங்களையும், ஆகாயத்துப் பட்சிகளையும் பராமரிக்கின்றதைவிட, கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் மூலமாகவும், நம்முடைய ஜீவியங்களை அர்ப்பணம் பண்ணினதின் மூலமாகவும் அவருடைய பிள்ளைகளாக மாறியுள்ள நம்மை அதிகம் பராமரிக்க மாட்டாரோ? உலகத்தார் பொதுவாகக் கவலைப்படும் இவ்வுலத்திற்கடுத்த உணவுகள், வஸ்திரங்கள் மற்றும் சகல காரியங்கள் தொடர்பான கவலைகளை அவரிடத்தில் வைத்துவிடுவோமாக. கவலைகள் இல்லாமல் இருக்கவேண்டும் என்பது சரியான அக்கறையுடன் இல்லாமல் காணப்படுவதையும், வேலை தேடுவதிலும், வேலை செய்வதிலும் முயற்சி எடுக்காமல் காணப்படுவதையும் குறிப்பதில்லை. நமக்கு உண்மையில் என்ன தேவை என்பதை நம்மைக்காட்டிலும் நமது பிதா அறிவார். மேலும், விசுவாசம் தேவனை நம்புகிறதாய் மாத்திரம் இராமல், நம்முடைய மேலான நலனுக்காக அவர் கொடுப்பதை ஏற்றுக்கொள்கிறதாயும் காணப்படவேண்டும்.
தேவனுடைய இராஜ்யத்தில், நம்முடைய அருமையான மீட்பருடன் பங்கடையும்படிக்கு நாடுவதே, கிறிஸ்துவின் பின்னடியார்களாகிய நம்முடைய பிரதானமான கவனமாகக் காணப்பட வேண்டும். அதாவது, மனுக்குலத்தின் உலகத்தைச் சீர்த்தூக்குவதற்கும், ஆசீர்வதிப்பதற்கும் கிறிஸ்துவின் மகிமையான சிங்காசனத்தில், கிறிஸ்துவின் மணவாட்டிகளாக, ஆயிரம் வருஷம் அரசாட்சியில் பங்கடைவதற்கும் நாடுவதே, நம்முடைய பிரதானமான அக்கறையாகக் காணப்பட வேண்டும். இப்படியாக, தேவனை விசுவாசிப்பவர்களுக்கு, அவர்களுக்கான மேலான நன்மைகளையும், பூமிக்குரிய நன்மைகளையும் பார்த்துக்கொள்வார் என ஆண்டவர் நமக்கு நிச்சயம் அளிக்கின்றார். இப்படியாக, நம்முடைய ஜீவியத்தில், அனைத்தையும் விசுவாசித்து ஒப்படைத்துவிட்ட நிலையில் நாம் காணப்படும்போது, கர்த்தரை விசுவாசிப்போருக்கு வசனங்களில் வாக்களிக்கப்பட்ட சமாதானமும், சந்தோஷமும், இளைப்பாறுதலும் நமக்குக் கர்த்தருக்குள் காணப்படும்.”