R2585 (page 67)
(சங்கீதம் 37:37-KJV)
“”சான்றோரைப் பார்! நேர்மையானவரைக் கவனி!” (திருவிவிலியம்) மத்தேயு 4:25-5:12
“”இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.” (மத்தேயு 5:8)
தேவன் அளிக்கப்போகின்ற மிக ஆசீர்வாதமான நிலைகளை நாம் அடைவதற்கு என்ன குணநலன்கள் அவசியமாய் உள்ளன? இராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வதற்கும், நீதியினால் நிரம்பிக்காணப்படுவதற்கும், தெய்வீக இரக்கம் மற்றும் முடிவில்லா ஆறுதலைப் பெற்றுக்கொள்வதற்கும், தேவனுடைய குமாரர்கள் என்று அழைக்கப்படுவதற்கும், தேவனுடைய முகத்தைப்பார்க்க அனுமதிக்கப்படுவதற்கும், பரலோகத்தில் மாபெரும் பலனை அடைவதற்கும் நாம் எப்படிக் காணப்பட வேண்டும்? இதைக்காட்டிலும் வேறெந்தக் கேள்வி, வேறெந்தத் தலைப்பு, வேறெந்தப் பாடம் நமக்கு மிகவும் சுவாரசியமாகவும் அல்லது மிகவும் நன்மைக்கேதுவான ஆராய்ச்சியாகவும் இருக்கக்கூடும்? இதை மாபெரும் போதகரானவர் தம்முடைய முதலாம் வருகையின்போது கொடுத்திட்ட முக்கியமான போதனைகளில் ஒரு தலைப்பாகக்/பாடமாகக் கொடுத்துள்ளார். மேலும், இந்தச் சுவிசேஷ யுகம் முழுவதிலுமுள்ள தம்முடைய உண்மையான சீஷர்களுக்கு எச்சரிப்பாக இருக்கும்படிக்குத் தம்முடைய வாதங்களின் சாராம்சத்தைப் பதிவு செய்து வைக்கும்படியாகவும் பண்ணினார்.
கர்த்தருடைய பின்னடியார்களாகிய நாம் பின்பற்ற வேண்டிய அவருடைய குணலட்சணம் ஒன்றாக இருப்பினும், அந்த ஒரு குணலட்சணத்தை அடைவது என்பது, தேவன் அளிக்கப் போகின்ற அனைத்து ஆசீர்வாதங்களை அடைவதாக இருக்கும். எனினும், இவ்விஷயத்தை நம்முடைய மனங்களுக்குத் தெளிவுபடுத்தும் வண்ணமாக, கர்த்தர் இந்த ஒரு குணலட்சணத்தைப் பல்வேறு பாகங்களாகப் பிரித்து, அந்த ஒவ்வொரு தனிப்பட்ட பாகத்தை நமக்கு எடுத்துக்காட்டுகின்றார். அதாவது, எப்படி ஒரு நிழற்படம் எடுப்பவர் (photographer) ஒரு பொருளின் அனைத்து விஷயங்களும் தெளிவாகத் தெரியத்தக்கதாக முன்புறக் கண்ணோட்டத்திலும், இடது புறக் கண்ணோட்டத்திலும், வலது புறக் கண்ணோட்டத்திலும், பின்புறக் கண்ணோட்டத்திலும் (Front, Right, Left, Back View) படங்கள் எடுத்துக்கொள்வதுபோன்று, கர்த்தர் நமக்குக்காட்டி, நம் மனங்களுக்குத் தெளிவுப்படுத்துகின்றார்.
நமது கர்த்தர் முன்வைக்கும் முதலாவது குணலட்சணமானது, சில கோணங்களில் மிகவும் முக்கியமானது என்று எண்ணுவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு என்று நாம் கருதுகின்றோம். முதலாம் குணலட்சணம் தாழ்மையாகும். “”ஆவியில் எளிமையுள்ளவர்கள் (தாழ்மையான மனமுள்ளவர்கள்) பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.” வசனம் இப்படியாக இருப்பதினால், தாழ்மைதான் அவசியமான ஒரே குணலட்சணம் என்றும், தாழ்மை கொண்டவர்கள் எவரும் இராஜ்யத்தை அடைந்துவிடுவார்கள் என்றுமுள்ள அர்த்தத்தைக் கொடுக்காது. மாறாக, இராஜ்யத்தை அடைவதற்குத் தாழ்மையானது முதலாம் முக்கியத்துவமுள்ள முன்தேவை/முன்நிபந்தனையாகும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், தாழ்மையுள்ளவர்கள் அனைவராலும் இராஜ்யத்தை அடையமுடியாது, அதேசமயம் தாழ்மை இல்லாத எவராலுங்கூட இராஜ்யத்தை அடையமுடியாது. மேலும், “”பரலோக ராஜ்யம் அவர்களுடையது” என்பதின் அர்த்தமானது, பெருமை, அகம்பாவம், செருக்கு என்பவைகளைத் தங்களின் குணலட்சணங்களுடைய அஸ்திபாரமாகக் கொண்டிருப்பவர்களாகிய வேறு மனநிலையைக் கொண்டவர்களுக்கு, இராஜ்யத்தை அடைவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் தடைச் செய்யப்பட்டிருப்பினும், மேற்கூறப்படுள்ள தாழ்மையுள்ள வகுப்பார், இராஜ்யத்திற்கான கனங்கள் மற்றும் ஆசீர்வாங்களைப் பெறுவதற்கான நிபந்தனைகளைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதேயாகும்.
“”தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்” என்ற வார்த்தைகளைக் கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் தெளிவாய்ப் புரிந்துக்கொள்வார்களாக! இந்தக் கருத்தானது, தேவனுடைய நேச குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மாறும்படிக்கு நாடிக்கொண்டிருக்கின்ற, கர்த்தருடைய சிறியவர்களில் ஒவ்வொருவரையும் எவ்வளவாய் எச்சரிப்புடன் இருக்கச்செய்ய வேண்டும். இந்தத் தாழ்மையின் ஆவியைத் தங்களுடைய இருதயங்களில் வளர்த்திக்கொள்ளும்படியாக இவர்கள் பேணுவதிலும், கவனிப்பதிலும் எத்துணை வைராக்கியத்துடன் காணப்பட வேண்டும். மேலும், இத்தாழ்மையானது மற்றவர்களுக்கு அதிகமதிகமாய்த் தெரியத்தக்கதாக இவர்களுடைய அன்றாட ஜீவியத்திலும் காணப்பட வேண்டும். இன்னுமாக, இத்தாழ்மை விசேஷமாகச் சகோதரர்களுக்கு எத்துணை ஆசீர்வாதமாகவும் நன்மைக்கேதுவான எத்துணை செல்வாக்காகவும் காணப்பட வேண்டும்.
வேரிலிருந்து பல கிளைகளையுடைய மரமானது வளர்வதுபோன்று, முதலாவது அவசியமாய் இருக்கும் இக்குணலட்சணம் வளரும்போது, கர்த்தர் “”பாக்கியம்” அதாவது தெய்வீக அங்கீகரிப்புடையது என்று அறிவித்துள்ள ஆவியின் மற்றக் குணலட்சணங்களும் வளர்கின்றது. இக்கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, சகல மனித போதனைகளிடமிருந்தும், நமது கர்த்தருடைய போதனைகள் எவ்வளவு வேறுபட்டதாகக் காணப்படுகின்றது! பூமிக்குரிய ஞானமானது பின்வரும் காரியங்களைக் கூறுகின்றது:- அதாவது, “”நிமிர்ந்து நில்லுங்கள், உங்களைப்பற்றி உயர்வாக எண்ணுங்கள், எளிமையுடன் இருப்பதற்குப்பதிலாகக் கொஞ்சம் கர்வம் கொண்டவர்களாக இருங்கள். இப்படிக் கொஞ்சம் கர்வத்துடன் இருப்பது அநேக விதத்தில் மிகுந்த செல்வாக்கை உடையதாக இருக்கும். உங்களைக்காட்டிலும் வேறு எவராலும் உங்களைக்குறித்து உயர்வாகவும் எண்ணமுடியாது, பாராட்டவும் முடியாது. ஆகவே, உங்களைக்குறித்து உயர்வாக எண்ணிக்கொள்ளுங்கள், நிமிர்ந்து நடங்கள், உங்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுப்பதை வெளிப்படுத்தும் பார்வையை உடையவராய் இருங்கள்.”
இப்படியான உலகப்பிரகாரமான ஆலோசனையில், உலக ஞானம் காணப்படுகின்றது என்பதில் சந்தேகமில்லை. தற்காலம் தொடர்பான பூமிக்குரிய விஷயங்களில் ஜெயம்/வெற்றிக்கொள்வதற்கு ஏதுவான இந்தப் பூமிக்குரிய ஆலோசனைகளில் கொஞ்சம் உண்மை இருக்கின்றது என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், தேவனுடைய வழிகள் என்பது மனுஷனுடைய வழிகள் அல்ல வானம் பூமியிலிருந்து எவ்வளவு உயரமாகக் காணப்படுகின்றதோ, அவ்வளவாய்த் [R2585 : page 68] தேவனுடைய வழிகளும், மனுஷனுடைய வழிகளிடமிருந்து உயர்வானதாகக் காணப்படுகின்றது. மேலும், தன்னைத்தான் தாழ்த்துகின்றவன், ஏற்றகாலத்தில் உயர்த்தப்படுவான் என்றும், தன்னைத்தான் உயர்த்துகின்றவன், ஏற்றகாலத்தில் தாழ்த்தப்படுவான் என்றும் தேவன் நமக்கு உறுதியளிக்கின்றார் (மத்தேயு 23:12). தேவன் இன்று தெய்வீக வல்லமையின் வலது பாரிசத்தில் உயர்த்தப்பட்டுள்ள நமது அருமையான மீட்பரை, தாழ்மை மற்றும் கீழ்ப்படிதலுக்கான மாதிரியாக வேத வாக்கியங்களில் சுட்டிக்காட்டுகின்றார். பின்னர் தன்னைத்தான் உயர்த்த முயற்சித்து, இப்பொழுது தள்ளப்பட்டு, முற்றிலுமாக இறுதியில் அழிக்கப்படப்போகின்ற மாபெரும் எதிராளியானவனின் போக்கின்மேல் நமது கவனத்தைத் திருப்புகின்றார் (பிலிப்பியர் 2:9; எபிரெயர் 2:14).
ஆவியில் எளிமையுள்ளவனுக்கும் மற்றும் பணப்பையில் எளிமை/தரித்திரனாய் இருப்பவனுக்கும் (அ) அறிவிலும், சாதனைகளிலும் தரித்திரனாய் இருப்பவனுக்கும் இடையேயுள்ள துல்லியமான வித்தியாசம் கவனிக்கப்பட வேண்டும். பூமிக்குரிய காரியங்களில் தரித்திரராய் இருந்தும், ஆவியில் செருக்குக்கொண்டவர்களாய்க் காணப்படும் ஜனங்களை நாம் அனைவருமே பார்த்திருக்கின்றோம். நம்முடைய பொருளாதாரமும் (அ) அறிவும், சூழ்நிலைகளும் என்னவாகக் காணப்பட்டாலும் சரி, தாழ்மையான ஆவியே தெய்வீகப் பார்வையில் அங்கீகரிக்கப்படுகின்ற காரியமாக இருக்கும் என்பதே கவனிக்கத்தகுந்த கருத்தாகும். பரத்திலிருந்துவரும் ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு இத்தகைய தாழ்மையின் ஆவி அவசியமாகும். அதாவது, தங்கள் சொந்த குறைபாடுகள் குறித்தும், ஞானமில்லாமைக் குறித்தும் தாழ்மையுடன் உணர்ந்துக்கொண்டவர்களாக இருக்க வேண்டும். இல்லையேல், தேவன் தற்காலத்தில் தாழ்மையுள்ளவர்களுக்கு மாத்திரம் அருள விரும்பும் ஞானத்தை இருதயப்பூர்வமாகவும், இலவசமாகவும் பெற்றுக்கொள்ள முடியாது. இன்னுமாக, இந்த மனத்தாழ்மையானது, தெளிந்த புத்தியுள்ள ஆவிக்கு அவசியமான ஆதாரமாக/ அஸ்திபாரமாகக்கூட இருக்கின்றது. ஏனெனில், தாழ்மையான மனப்பான்மை உடையவரைத் தவிர வேறு எவரால் நியாயமாகவும், பாரபட்சமின்றியும், சரியாக சிந்திக்க முடியும்? ஆகவே, தாழ்மையானது கிறிஸ்துவின் மனம் அல்லது குணலட்சணத்தின் முதல்நிலை மூலக்கூறாக இருக்கின்றது என நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்.
கர்த்தரால் கூறப்பட்டுள்ள இரண்டாம் மலைப்பிரசங்கத்தின் வார்த்தைகள் அல்லது பாக்கியமான நிலை, முதல் வார்த்தைக்கு மிகவும் தொடர்புடையதேயாகும். “”துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்.” துயரப்படுவது என்பது ஒரு குணலட்சணம் அல்ல, மாறாக அது கர்த்தருடைய பார்வையில் அங்கீகரிக்கப்படத்தக்கதான ஒரு மனப்பான்மையைக் குறிக்கின்றதாய் இருக்கின்றது. ஆறுதல் அல்லது சந்தோஷங்கள் இல்லாத துயரப்படுதலின் ஆவியே ஒரு கிறிஸ்தவனுடைய ஆவி என்று நாம் எண்ணிவிடக்கூடாது. மேலும், நம்முடைய பரம பிதாவும், பரிசுத்த தேவதூதர்களும் எப்போதும் துக்கப்பட்டுக்கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள் என்றும் நம்மால் அனுமானிக்கவும் முடியாது. ஒருவேளை, துயரப்படுதல் ஒரு குணலட்சணமாக இருக்குமாயின், நிச்சயமாகப் பிதாவும், தூதர்களும் துயரப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். மாறாக, கருத்து என்னவெனில், இப்பொழுது துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் என்பதேயாகும். அதாவது, தற்கால பூமிக்குரிய சூழ்நிலைகளானது, முழுமையான திருப்தியையும், மகிழ்ச்சியையும் கொடுப்பதில்லை என்று உணர்கின்றவர்களைக் குறிக்கின்றது. அதாவது, முழு மனிதகுடும்பமும் இன்று கடந்துசென்று கொண்டிருக்கும் பிரச்சனைகள், பாவம், வியாதி, வலி, மரணம் மற்றும் கூக்குரலை அறிந்தவர்களைக் குறிக்கின்றது. தற்கால சூழ்நிலைகளின் கீழ் அனுதாப இருதயம் கொண்டவர்களும், தற்கால சூழ்நிலைகள் திருப்திகரமற்றவைகள் என்று உணர்கிறவர்களும் பாக்கியவான்கள். ஏனெனில், தேவனுடைய ஏற்பாட்டின் கீழ் அனைத்தும் சிறப்பான விதத்தில் நிறுவப்படுவதற்கான காலம் வந்து கொண்டிருக்கின்றது. மேலும், தற்கால சூழ்நிலைகள் குறித்ததான இவர்களுடைய அதிருப்தியானது, தெய்வீகத் திட்டம் ஏற்பாடு பண்ணிக்கொண்டிருக்கும் மேலான ஏற்பாடுகள் மீது இவர்களை ஈர்க்கின்றது. தேவனுடைய இராஜ்யம் வந்து, பரலோகத்தில் அவருடைய சித்தம் செய்யப்படுவது போன்று பூமியிலும் செயல்படுத்தப்படும் போதும் துக்கம், துயரம், வேதனை மற்றும் கண்ணீருக்கான காரணிகள் அனைத்தும் மாற்றப்படும். மேலும், அக்காலமானது (இராஜ்யம்) (இன்று துயரப்படுகின்ற) இந்த வகுப்பாருக்கு ஆறுதலின் காலமாகவும், திருப்தியின் காலமாகவும் இருக்கும்.
கர்த்தருடைய ஜனங்களுக்கு தற்காலத்திலுங்கூட ஆறுதல் கிடைப்பது உண்மையே. அதாவது, தெய்வீக வார்த்தையின் மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்கள் மீது [R2586 : page 68] இவர்கள் கட்டியெழுப்பும் விசுவாசத்தின் மூலமாக இவர்கள் இக்காலத்திலேயே ஆறுதல் அடைகின்றனர். இந்த வகுப்பார் தற்காலத்தில் காணப்படும் தவறுகள், அநியாயம், பெரும்துயரங்களை உணர்ந்துக்கொள்வார்கள் என்ற இக்காரியமானது, இவர்களுக்குள் பல தெய்வீக வாக்குத்தத்தங்கள் கவர்ந்து இழுக்கப்படும் இருதய நிலையை உருவாக்குகின்றது. ஆனால் மற்றவர்களோ, அதாவது சிருஷ்டிகளின்மேல் அதிகம் அனுதாபம் இல்லாத இருதயத்தை உடையவர்ளோ, நமக்கு முன்பாக சுவிசேஷத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைகளை முழுமையாய்ப் புரிந்துக்கொள்ள முடியாத நிலையில் காணப்படுவார்கள். ஆகவே, அனுதாபம் கொள்பவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளினால் கவர்ந்து இழுக்கப்படுகின்றபடியால், இவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளிலிருந்து ஆறுதலை அடைகின்றார்கள். இந்த வார்த்தைகள் இவர்களுடைய இருதயங்களுக்குச் சமாதானத்தைப் பேசுகின்றது. மேலும், இவ்வார்த்தைகள் தற்கால சூழ்நிலைகளின் கீழ்க் குறைவான அனுதாபம் உள்ளவர்களாக இருப்பவர்கள் அறிந்திராத, உள்ளான சந்தோஷத்தையும் இவர்களுக்குக் கொடுக்கின்றது. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்களே!
குணலட்சணங்களிலுள்ள முதலாவது குணலட்சணமாகிய மனத்தாழ்மையை நாம் விதைத்து, அதனை நாம் அதிகமதிகமாய் வளர்த்த முடியும்போது, நம்மால் இரண்டாம் குணலட்சணமாகிய அனுதாபத்தின் ஆவியையும் நம்மால் வளர்த்தமுடியும். இந்த அனுதாபத்தின் ஆவியை வளர்த்துவதற்கு நாம் அடிக்கடி மற்றவர்களுடைய நலன்களை, சோதனைகளை, நம்முடைய பிரச்சனைகள்போன்று எண்ணி உதவிகரத்தை நீட்டவேண்டும். “”ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்” (கலாத்தியர் 6:10).
கர்த்தர் குறிப்பிடும் மூன்றாம் குணலட்சணம் சாந்தகுணமாகும். சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். மூன்றாம் குணலட்சணம் என்பது சாந்தகுணம் அல்லது கனிவு/நிதானம் ஆகும். வெப்ஸ்டர் அகராதியானது, சாந்தகுணத்தை, “”தெய்வீகச் சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுத்தல் மற்றும் ஒழுக்க ரீதியிலும், மத ரீதியிலும் காட்டப்படும் பொறுமை மற்றும் நிதானம்/கனிவு என்று விளக்குகின்றது. இந்தப் பொறுமை, நிதானம் மற்றும் தெய்வீகச் சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுத்தல் என்பவைகளுக்கும், சுயவிருப்பங்களை நிறைவேற்றுவதற்கென அடிக்கடி காட்டப்படும் சாதாரணமான நிதானம்/கனிவு, பொறுமை என்பவைகளுக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளது என்பதைப் புரிந்துக்கொள்ள முடிகின்றது. குணலட்சணங்களுடைய வரிசையில் முதலாவதாக இடம்பெறும் தாழ்மையான மனதைப் பெற்றிராதவர்களுக்கு, தெய்வீகச் சித்தத்திற்குப் பொறுமையுடன் கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுப்பது என்பது கூடாத காரியமாகும். பெருமையும், சுயசித்தமும் கொண்டிருப்பவர்களிடம், சுயம் மேலோங்கி, அவர்களுடைய கணிப்பைத் தவறாய் வழிநடத்தி, அவர்களுடைய மனசாட்சியையும் தவறாய் வழிநடத்தி, அவர்களைத் தெய்வீக ஏற்பாடுகளின்மேல் முழுமையான நம்பிக்கை வைக்கமுடியாதபடிச் செய்து, அவர்கள் தங்கள் (ஊசாவைப் போன்று) கரங்களை நீட்டி (உடன்படிக்கைப்) பெட்டி விழுந்துவிடாதபடிக்கு, பெட்டியைத் தாங்கள் பிடித்து நிலைகுலையாமல் செய்ய வேண்டும் என்று எண்ணச் செய்கின்றது.
துயரப்படுபவர்கள் மாத்திரமே அதாவது, அதிகமான அனுதாபங்கள் கொண்டிருப்பவர்கள் மாத்திரமே அதாவது, தேவனுடைய ஜனங்களை தேவனுடைய ஆசீர்வாதமான வாக்குத்தத்தங்களின் வாயிலாக, ஆறுதல்படுத்தும் பரிசுத்த ஆவியினால் ஆறுதல்படுத்தப்பட்டவர்கள் மாத்திரமே, பொறுமையுடன் கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுக்கும் குணலட்சணத்தை வளர்த்துக்கொள்ள முடியும். நம்முடைய காலக்கட்டத்திலுள்ள தீமைபற்றியும், அவைகள் தற்காலத்தில் ஒரு ஞானமுள்ள நோக்கத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது பற்றியும் உணர்ந்துள்ள நிலையில் தேவனுடைய ஜனங்கள், தவிக்கும் சர்வ சிருஷ்டிகளின்மேல் அனுதாபங்கொள்வதோடு கூட, இந்த அனுதாபமும் மற்றும் இந்த அனுதாபத்தினால் கிடைத்துள்ள பலனாகிய ஆறுதலும், இவர்களைத் தெய்வீகச் சித்தத்திற்குப் பொறுமையுடன் காணப்படவும், தங்களைக் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுப்பதற்கும் உதவுகின்றது. தேவனை அன்புகூருகின்றவர்வர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கும் என்பதை இவர்கள் நினைவுகூர்ந்து, தெய்வீக வழிநடத்துதல்கள் தங்களுக்கு எந்த விதத்தில் காணப்பட்டாலும், அதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்கின்றனர். இன்னுமாக, இந்த வழிநடத்தல்களில் கிடைக்கும் படிப்பினைகளானது, எதிர்க்கால நித்தியத்திற்குரிய சந்தோஷங்களைப் பெற்றுக்கொள்வதற்கு ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கும் தங்களுக்கும், மற்றவர்களுக்கும் ஆசீர்வாதங்களாகக் காணப்படுவதற்கும் இவர்கள் ஆயத்தமாயிருக்கின்றனர்.
இந்த மூன்றாம் குணலட்சணமாகிய, தெய்வீகச் சித்தத்திற்குப் பொறுமையுடன் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுக்கும் தன்மையானது அதாவது, நம்மிடம் பழகி வருபவர்களால் (வெளிப்படையாக) அறியப்படும் இந்த மூன்றாம் குணலட்சணமானது, உள்ளுக்குள், இருதயத்திற்குள் உடன் இருப்பவர்களால் வெளிப்படையாகப் பார்க்கமுடியாத இரண்டாம் குணலட்சத்தின் வெளிப்படுத்தலாக [R2586 : page 69] இருக்கின்றது என்று கூடச் சொல்லலாம். கிறிஸ்துவுக்குள் காணப்படுபவர்களுக்கு, அவர்களுடைய அனைத்து விஷயங்களும், தெய்வீக மேற்பார்வையின் கீழிருக்கின்றது என்பதை நாம் உணர்கையில், நம்முடைய ஜீவியத்தின் அனைத்து விஷயங்களிலும் அனுதாபம் எனும் குணலட்சணமானது, நம்முடைய பொறுமையுடன்கூடிய கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுக்கும் தன்மையில் வெளிப்படுகின்றது. மேலும், நம்முடைய சூழல்கள் மற்றும் ஜீவியத்தின் காரியங்கள் தொடர்பான விஷயங்களிலுள்ள தேவனுடைய வழிநடத்துதல் நிமித்தமான இந்தப் பொறுமையானது, மற்றவர்களுடைய பெலவீனம் மற்றும் குறைவுகள் மற்றும் அறியாமையின் விஷயங்களில் அவர்கள்மீது பொறுமையுடன் இருக்க வழிநடத்துகின்றது. மேலும், நமக்கு வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உதவியாகவும் இருக்க வழிநடத்துகின்றது.
இந்தச் “”சாந்தகுணமுள்ளவர்கள்” பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். தெய்வீகச் சித்தத்திற்கென்று பொறுமையுடன் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுப்பவர்கள், தற்காலத்தில் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்ற அர்த்தத்தில் கர்த்தர் கூறவில்லை. பொறுமையற்றவர்களும், கர்வம் கொண்டவர்களும், வெறியர்களும், சுயநலமுள்ளவர்களும்தான் இப்பொழுது வல்லமை, செல்வாக்கு மற்றும் ஆஸ்தியிலுள்ள பிரதானமானவைகளைக் கைப்பற்றுகின்றார்களே ஒழிய, இவர்களோடு ஒப்பிட்டுப்பார்க்கும்பொழுது, பொறுமையுடன் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுத்து இருப்பவர்களுக்கு, பூமியைச் சுதந்தரிப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றே தெரிகின்றது. மற்றவைகள் போன்று இந்தக் குணலட்சணத்திற்குரிய பலன் எதிர்க்காலத்திலேயே உள்ளது. அதாவது, இக்குணலட்சணம் உடையவர்கள் தெய்வீக வழிநடத்துதலைப் பின்தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவுடன் உடன் சுதந்திரர்களாகவும், தேவனுடைய சுதந்ததிரர்களாகவும் (இராஜ்யத்தில்) காணப்படுவார்கள். மேலும், அப்பொழுது அவர்களுக்குரிய மகா சுதந்தரத்தில் பூமியும் ஒரு பாகமாகக் காணப்படும். மேலும், இவர்கள் ஆயிரம் வருஷத்தின் இறுதியில், ஆயிரம் வருஷத்தின் பரீட்சைகளை வெற்றிகரமாகக் கடந்து, நித்திய ஜீவனுக்குப் பாத்திரவான்களாகக் காணப்படும் உலகத்தின் மனுக்குலத்திற்குப் பூமியைக்கொடுப்பார்கள்.
தேவனுடைய ஜனங்கள் இப்பொழுதே ஆறுதல்படுத்தப்படுகின்றார்கள் என்ற விஷயம் இருப்பதுபோன்று, தேவனுடைய ஜனங்கள் இப்பொழுதே விசுவாசத்தின் மூலமாக பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்ற விஷயமும் இருக்கின்றது. “”இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக எல்லாம் உங்களுடையதே; பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும் ஜீவனாகிலும், மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது; நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்” (1 கொரிந்தியர் 3:21-23). சரியான மனத்தாழ்மையிலும், தெய்வீகச் சித்தத்திற்குக் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுக்கும் நிலையிலும் காணப்படுபவர்கள், உலகத்தாரைக்காட்டிலும் தற்காலத்தின் காரியங்களிலிருந்து அதிகமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்கின்றனர். ஏனெனில், ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்வதற்குரிய மனநிலையில் இவர்களுடைய இருதயங்கள் காணப்படுகின்றது. சுயநலமான பேராசைகளினால் நிறைந்து காணப்படும் உலகமானது, ஒருபோதும் திருப்பதியடைவதில்லை, ஒருபோதும் மனநிறைவும் கொள்வதில்லை. தேவனுடைய பிள்ளையோ தெய்வீகச் சித்தத்திற்குப் பொறுமையுடன் கீழ்ப்படுத்தி, தங்களை ஒப்புக்கொடுத்து எப்போதும் திருப்தியாய் இருப்பார்கள்.
நான்காம் குணலட்சணம் என்பது நீதியின் மீது பசி மற்றும் தாகம் கொண்டிருப்பதாகும். முந்தைய (மூன்று) குணலட்சணங்களைப் போதுமானளவுக்குக் கொண்டிராத எவராலும் இவ்விதமான பசியையும், தாகத்தையும் கொண்டிருக்கமுடியாது. ஒருவேளை கிறிஸ்தவனிடம் மனத்தாழ்மை இல்லையெனில், அவனால் அவனுடைய தாழ்வான நிலைக்கு மேலாகப்பார்க்க முடியாமலும், தெய்வீகப் பூரணத்தின் உயரத்தையும், மகத்துவத்தையும் புரிந்துக்கொள்ள முடியாமலும், நீதி தொடர்பான விஷயங்களில், தான் எட்டியுள்ள நிலையிலேயே திருப்தியடைந்தவனாக இருந்துவிடுவான். அவன் ஓரளவாகிலும் அறிந்திராத காரியத்தின்மேல் அவனால் பசி மற்றும் தாகங்கொள்ள முடியாது. மேலும், தற்காலத்தின் தவறுகள் மற்றும் அநியாயங்களைப் புரிந்துக்கொள்வதற்கு உதவக்கூடிய அனுதாபத்தின் ஆவியைக் கிறிஸ்தவன் ஒருவன் பெற்றிராதவரையிலும் அவனால், வேத வாக்கியங்கள் சுட்டிக்காண்பிக்கும் மேசியாவின் ஆயிரம் வருஷம் அரசாட்சியில் மாத்திரம் நிறுவப்படும் மேம்பட்ட சூழ்நிலைகள்/காரியங்கள் மீது ஏக்கம் கொள்ளமுடியாது. ஆகவே, ஒருவேளை நம்முடைய இருதயங்கள் நீதிக்காகவும், நியாயத்திற்காகவும், சத்தியத்திற்காகவும் பசி மற்றும் தாகம் கொள்கின்றது என்றால், எல்லா விதத்திலுமுள்ள அசத்தியத்தையும், அனைத்து அநீதியையும், அநியாயத்தையும் வெறுக்கின்றது என்றால், அதிலும் முக்கியமாக, வரிசையில் மூன்றாவதாகவரும் பொறுமையுடன் தெய்வீகச் சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தல் எனும் குணலட்சணத்தினால் இந்த வெறுப்பு வரையறுக்கப்பட்டு, தாக்கம் ஏற்படுத்தப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு இருக்கின்றது என்றால், இது ஆசீர்வாதமான அறிகுறியாகும். இந்த மூன்றாம் குணலட்சணம் செலுத்தும் கட்டுப்பாடுதான் அப்போஸ்தலரால் பிலிப்பியர் 4:5-ஆம் வசனத்தில் குறிப்பிடப்படுகின்றது. “”உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.” இந்த மூன்றாம் குணலட்சணம் உள்ளே புகுவதின் காரணமாகத்தான், நாம் எந்த விதத்திலும் குழப்பவாதிகளாகவோ (அ) மதவெறிக்கொண்டவர்களாகவோ ஆகாதபடிக்கு நீதியின் மீதான நம்முடைய பசி மற்றும் தாகமும், (சத்தியம் மற்றும் அதை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான) நம்முடைய வைராக்கியமும் கட்டுப்படுத்தித் தடைப்பண்ணப்படுகின்றது. நீதியின் மீதான இந்தப் பசி மற்றும் தாகம் எனும் தன்மையானது ஆவியின் மற்றத் குணலட்சணங்களால் கட்டுப்படுத்தப்படாதக் காரணமாகத்தான், அநேக உலகப்பிரகாரமான மனிதர்களை வரம்பு மீறின சீர்த்திருத்தவாதிகளாக மாற்றியுள்ளது; தேவனுடைய பிள்ளைகளோ மற்றவர்களைக்காட்டிலும் நீதியின் மீதான இதே பசி தாகத்தை அதிகளவில் கொண்டிருந்து, தெளிந்தபுத்தியுள்ள ஆவியின் கட்டுப்பாட்டிற்குள் காணப்படுவதினாலும், கர்த்தருடைய வார்த்தைகளினால் (இவர்கள்); போதிக்கப்பட்டிருப்பதினாலும், இவர்கள் அவருடைய வாக்குத்தத்தங்களில் இளைப்பாறி, அவ்வாக்குத்தத்தங்களின் நிறைவேறுதலுக்காகக் காத்திருந்து பொறுமையுடன் தங்களைக் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுத்துக் காணப்பட்டு, தேவனுடைய ஏற்றவேளையில், நீதி ஜெயங்கொள்ளும் என்ற நிச்சயத்துடன் காணப்படுகின்றார்கள்.
நீதியின்மேல் பசிதாகம் என்னும் பாக்கியமான குணலட்சணத்தை உடையவர்களும், அதனை விருத்திச் செய்பவர்களும் திருப்தியடைவார்கள். போகப்போக பின்னர் தேவனுடைய இராஜ்யமானது ஸ்தாபிக்கப்படும்போது, இந்த இராஜ்யத்தின் விளைவாக சகல பொல்லாப்பும், சகல பாவங்களும், சகல (அக்கிரமங்கள்) அநியாயங்களும் அடக்கப்பட்டு, தேவனுடைய பரிசுத்தமான சித்தம், “”பரமண்டலத்தில் செய்யப்படுவதுபோல, பூமியிலும் செய்யப்படும்” போது அதிகமாய்த் திருப்தியடைவார்கள். நீதியின் மீதான நம்முடைய பசி மற்றும் தாகம் அழிக்கப்படுவதில்லை. மாறாக, நமது கர்த்தர் வாக்களித்துள்ள பிரகாரம் திருப்திப்படுத்தப்படும். சத்தியம் மற்றும் நீதியின் மீதான விருப்பம் இன்னமும் தொடர்ந்து காணப்படும். ஆனால், சத்தியம் மற்றும் நீதி நடைமுறையில் காணப்படும்போது திருப்தி நிலவும்.
மற்றக் குணலட்சணங்கள் போன்று இந்தக் குணலட்சணத்தின் (நீதியின்மேல் பசிதாகத்தின்) விஷயத்திலும், விசுவாசத்தின் வாயிலாக ஓரளவுக்கு திருப்தி (இப்பொழுதே) காணப்படுகின்றது. இந்தத் திருப்தியடைதல் ஒரு முன்சுவைப்போன்று காணப்படும். ஆவியின் மற்றக் குணலட்சணங்களோடுகூட, நீதியின் மீதான பசி, தாகத்தையும் கொண்டிருப்பவர்கள், கர்த்தருடைய கிருபையான வாக்குத்தத்தங்களில் தற்காலத்திலும் கூட விசுவாசத்தின் மூலம் ஆறுதலையும், தேறுதலையும் கண்டடைகின்றார்கள். மேலும், கர்த்தருடைய கிருபையான வாக்குத்தத்தங்கள், “”விசுவாச வீட்டாருக்கு ஏற்ற கால சத்தியமாக” இருந்து, விசுவாச வீட்டாரைப் பெலப்படுத்துகின்றதாகவும், ஆறுதல்படுத்துகின்றதாகவும், தாங்குகின்றதாகவும் இருந்து, இவர்கள் தாங்கள் எதிர்ப்பார்த்தது (அ) வேண்டிக்கொண்டதைக்காட்டிலும், தெய்வீக ஏற்பாட்டின்படியான நித்தியக்காலத்திற்கும் நிலைக்கும் நீதியானது, மிக அதிகமாய்க் காணப்படும் என்று உணர்ந்துகொள்ளும் மாத்திரத்தில் இந்த வாக்குத்தத்தங்கள் இவர்களுடைய பசியையும், தாகத்தையும் பகுதியாகிலும் திருப்திப்படுத்துகின்றன.
ஐந்தாம் பாக்கியமான காரியம், இரக்கம் கொள்ளுதல் ஆகும். நீதியைக்குறித்து புரிந்துக்கொள்வதினாலும், புதுப்பிக்கப்பட்ட இருதயங்களுக்குள் இந்த நீதியின்மேல் பசி, தாகம் ஏற்படுவதினாலும், வெளியே வெளிப்படுகின்ற காரியமே இரக்கமாகும். இந்த இரக்கத்தை சக மனிதர்களால் காணமுடியும். முந்தின அடிகளையெல்லாம் நாம் எடுத்துவைத்த பிற்பாடு, தற்காலத்தின் அநியாயங்களைக் குறித்தும், நம்முடைய பூரணமற்ற நிலமைகளைக் குறித்தும் (அநீதிகள்) மற்றும் மற்ற மனுஷர்களுடைய பூரணமற்ற தன்மைகளைக் குறித்தும் உணர்ந்துக்கொள்ள கற்றுக்கொண்ட பிற்பாடு, தேவன் மாத்திரமே காரியங்கள் அனைத்தையும் முழுமையாகச் சரிப்படுத்தக்கூடியவர் என்று நாம் கற்றுக்கொண்ட பிற்பாடு, எல்லா தவறுகளையும் சரிப்பண்ணுவதற்கும், கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய கிருபையை ஏற்றுக்கொள்கிறவர்கள் அனைவரையும் தமது தயவிற்குள் கொண்டுவருவதற்கும் தேவன் ஏற்பாடு பண்ணியுள்ளார் என்றும், அதை அவர் ஏற்றவேளையில் வெளிப்படுத்துவார் என்றும் கற்றுக்கொண்ட பிற்பாடுதான், [R2587 : page 70] மற்றவர்கள் மீது நமக்கு இரக்க உணர்வு ஏற்படுகின்றது. அதாவது, இதுவரையிலும் உணர்ந்துக்கொள்ளாத அளவுக்கு இரக்கத்தின், அன்பின் உணர்வைப்பெற்றிருப்போம். இக்குணலட்சணங்களின் ஆசீர்வாதங்களை அறியாத நிலையிலும், இக்குணலட்சணங்களை வளர்த்துக்கொள்ளாத நிலையிலும் காணப்படுகின்ற உலகத்தாரால், கர்த்தரின் ஜனங்கள் செய்யும் அளவுக்கு, மற்றவர்கள் மீது ஆழ்ந்த அனுதாபமோ (அ) இரக்க உணர்வையோ கொண்டிருக்க முடியாது.
நாம் என்னதான் அறிவில் அல்லது கிருபைகளில் அநேக காரியங்களை அடைந்திருந்தாலும், ஒருவேளை இந்தக் குணலட்சணம் நம்மிடத்தில் இல்லையெனில், நாம் ஒருபோதும் தேவனால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என்றும், ஒருவேளை நாம் நம்முடைய அயலார் மீது இரக்கம் கொள்ளவில்லையெனில், நம்முடைய பரம பிதாவும், நம்மேல் இரக்கம் கொள்ளமாட்டார் என்றும் தெரிவிப்பதின் மூலம், இரக்கம் எனும் இக்குணலட்சணம் மிகவும் முக்கியமானது என்று கர்த்தர் வலியுறுத்துகின்றார். மேலும், மன்னிப்பு மற்றும் பரந்த மனப்பான்மைக்கான வெளித்தோற்றமான வெளிப்பாடாக மாத்திரம், நாம் இரக்கத்தைக் கருதிக்கொள்ளாதபடிக்கு, நமது கர்த்தர் மத்தேயு 18:35-ஆம் வசனத்தின் வார்த்தைகளைக் குறிப்பிட்டுள்ளார். “”நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்புர்வமாய் மன்னியாமற்போனால், என் பரம பிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.” இரக்கம் உண்மையான இரக்கமாக இருக்கவேண்டுமே ஒழிய, போலித்தனமான இரக்கமாக இருக்கக்கூடாது. நாம் காட்டக்கூடிய இரக்கமானது, மற்றவர்கள் விஷயத்தில் அவர்களுடைய பெலவீனங்களையும், குறைவுகளையும், நம்முடைய பார்வையிலிருந்து திரையிட வேண்டும்/மறைக்க வேண்டும்; இல்லையேல், நம்முடைய நீதியின் மீதான பசி தாகத்தினால் நமக்கு வெளிப்பட்டுள்ள நம்முடைய சொந்த பெலவீனங்களுக்காக, நாம் மன்னிப்பையும், பாவ நிவிர்த்தியையும் அடையலாம் என நாம் எதிர்ப்பார்க்க முடியாது. இரக்கமுள்ளவர்கள் மாத்திரமே இரக்கத்தைப் பெற்றுக்கொள்வார்கள். ஒருவேளை, நாம் தேவனுடைய கரங்களிலிருந்து இரக்கம் பெற்றுக்கொள்ளவில்லை என்றால் எல்லாம் முடிந்துவிடும்.
நாம் மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும், நாம் இரட்சிக்கப்படுவதற்கும் அவசியமாய் இருப்பதினால் மாத்திரம், இரக்கம் காட்டுவதும், பரந்த மனப்பான்மையுடன் காணப்படுவதும், மன்னிப்பதும் ஆசீர்வாதமானவைகளாகக் காணப்படாமல் மாறாக, மற்றவர்களுடைய பெலவீனங்கள் மற்றும் தவறுதல்கள் மீது அனுதாபங்கொள்ளும் இருதயத்தின் இந்த இரக்கமான நிலையானது, மாம்சம் மற்றும் பிசாசின் சில குறிப்பிட்ட கிரியைகளை நம்முடைய இருதயங்களிலிருந்து வெளியேற்றுவதற்கும் உதவி செய்கின்றது. அதாவது, கர்த்தருடைய ஜனங்கள் விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்கப்பட்டு, நீண்ட காலம் ஆன பிற்பாடும் மற்றும் கர்த்தருக்கென்று தங்களை முழுமையாய் அர்ப்பணித்து, “”மாம்சத்தின்படி நடவாமல், ஆவியின்படி நடப்பதற்கும்” நாடின பிற்பாடும், இவர்களிடத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் மாம்சம் மற்றும் சாத்தானின் சில குறிப்பிட்ட கிரியைகளை நம்முடைய இருதயங்களிலிருந்து வெளியேற்றுவதற்கும் உதவி செய்கின்றது.
கர்த்தரைப் பின்பற்றுவோம் என்று நாம் முழுமையாய் ஒப்புக்கொடுத்த பிற்பாடும், நாம் வெளியேற்ற வேண்டிய மாம்சத்தின் கிரியைகளான கோபம், வன்மம், பகை, சண்டைச்சச்சரவு, பொறாமை ஆகியவைகளை அப்போஸ்தலர் குறிப்பிகின்றார். சுயநலத்தின் இந்த அனைத்துப் பண்புகளும், இரக்கம் எனும் பண்பினால் எதிர்க்கப்பட்டு, இவைகள் நம்முடைய இருதயங்களில் ஆழமாய்க் காணப்பட்ட பகுதிகளிலிருந்து அதிகமாக வெளியேற்றப்படுகின்றது. பாக்கியமான குணலட்சணமாகிய இந்த இரக்கம், அன்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகும். ஏனெனில், நாம் எந்தளவுக்குத் தேவனுடைய அன்பின் ஆவியைப் பெற்றுக்கொள்கின்றோமோ, அந்தளவுக்கு நாமும் மற்றவர்களிடத்தில் இரக்கத்தை வெளிப்படுத்துகின்றவர்களாய் இருப்போம். கிறிஸ்துவுக்குள்ளாக நமக்கு அளிக்கப்பட்ட இரக்கத்தின் வாயிலாக, தேவன் நம்மீதான அவருடைய அன்பை வெளிப்படுத்தினார். அன்பு, இரக்கம் மற்றும் மற்றவர் நலன் கருதுவது என்பதான குணலட்சணங்கள், பொறாமையை வெளியேற்றுவதற்கும் மிகவும் உதவியாக இருக்கின்றது. நாம் உண்மையாய் அன்பு செய்பவர்கள் மீது, நம்மால் எப்படிப் பொறாமை கொள்ளமுடியும்? நம்முடைய சத்துருக்களை நாம் நேசித்து, அவர்கள் மீது இரக்கமும், பரிவும் கொண்டிருந்து, அவர்களை இருதயப்பூர்வமாக மன்னித்துவிட்டோமென்றால், அவர்களுக்கு எதிராக நம்மால் எப்படி வன்மம் கொண்டிருக்க முடியும்? நம் சத்துருக்கள் மீது நாம் இரக்கம் கொண்டு, அவர்களிடத்தில் நமக்கு மன்னிப்பின் ஆவிதான் காணப்படுகின்றது என்றால், அவர்கள்மேல் நமக்கு எப்படிப் பகை/வெறுப்புக் காணப்படும்? தெய்வீகப் பிரமாணங்களுக்கு எதிரான நம்முடைய மீறுதல்களுக்கு, நாம் மன்னிப்பை எதிர்ப்பார்க்கின்றதின் காரணமாக, நமக்கு எதிராய்ச் செய்யப்பட்ட பாவங்களை உடனடியாக மன்னிப்பதற்கான இரக்கமுள்ள மன்னித்துவிடும் ஆவி நமக்குள் காணப்படும் பட்சத்தில், சண்டை இடுகிறவர்களாய் நம்மால் எப்படி இருக்க முடியும்?
“”ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்” (யாக்கோபு 2:13). தெய்வீக இரக்கமானது, தெய்வீக நீதியை திருப்திப்படுத்தி, இப்படியாக நீதியின் தீர்ப்பினின்று நம்முடைய இனமாகிய மனுக்குலம் காப்பாற்றப்படுவதற்கான வழியை ஆயத்தப்படுத்திற்று. ஆகவே, தெய்வீக ஆவியின் பங்காளிகளாகவும், அதனை ஓரளவிற்கு தங்களுக்குள் வளர்த்துக்கொண்டவர்களாகவும் இருப்பவர்கள் நீதி குறித்ததான தங்களுடைய கருத்தைவிட, இரக்கமானது தங்களுக்குள் மேலோங்கும்படி அனுமதித்துவிடுவார்கள்; ஏனெனில் தெய்வீக இரக்கமானது, தெய்வீக நீதியை திருப்திச் செய்துவிட்டபடியால், இவர்களுக்கு சக மனிதர்கள் விஷயத்தில் திருப்திபடுத்துவதற்கென்று வேறெந்த நீதியின் பிரமாணமும் இருப்பதில்லை.
தேவனுடைய ஜனங்களிடம் காணப்படும் நீதியானது குருட்டுத் தன்மையுடையதாக இல்லாவிட்டாலும், இவர்களால் மற்றவர்களுடைய தவறுகளை மிகத் தெளிவாகப் புரிந்துக்கொள்ள முடிந்தாலும், மேலும், இவர்கள் தங்களுடைய சொந்த வார்த்தைகள், சிந்தைகள் மற்றும் கிரியைகள் தொடர்பான அனைத்திலும், நீதியை ஆளுவதற்கு அனுமதிக்க நாடினாலும், இவர்களுக்கு எதிராக பாவம் செய்கிறவர்களின் விஷயத்தில், இவர்கள் தங்களுடைய இருதயங்களில் இரக்கத்தை, நீதியின்மேல் ஜெயங்கொண்டு மேலோங்கிக் காணப்படச்செய்ய வேண்டும். மேலும், இவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தினவர்களுக்கு எதிராக, இவர்கள் கோபம் கொண்டிருக்கவுங்கூடாது, அல்லது, தாங்களே அவர்களைப் பழிவாங்க முற்பட்டு, அவர்கள் மீது நீதியைச் செலுத்தவுங்கூடாது. மாறாக, இவர்கள் சொல்ல வேண்டியது என்னவெனில், “”தேவனே நீதியுள்ளவர், சுதந்தரித்துள்ள பெலவீனங்கள் நிமித்தமாக பூரணமான நீதிக்கு எதிரான மீறுதல் பண்ணினவனாகக் காணப்படும் நான், என்னைப்போல் சுதந்தரித்துக்கொண்டும், வித்தியாசமான பெலவீனங்களை உடையவர்களுமாய்க் காணப்படும் என்னுடைய சக மனிதன்மேல் நான் பரிவு கொண்டவனாக இருக்க வேண்டும்; மேலும் தெய்வீகக் கட்டளையின்படி நான் பாக்கியமான குணலட்சணங்களாகிய இரக்கம், பரிவு, மன்னிப்பு ஆகியவைகளைச் செயல்படுத்துகின்றவனாகவும் நான் காணப்பட வேண்டும்.” இப்படியாக செய்கின்றவர்கள் உலகம், மாம்சம் மற்றும் பிசாசினுடைய பொல்லாத கிரியைகளையும், உணர்வுகளையும் தங்களிடத்திலிருந்து வெளியேற்றுவதோடல்லாமல், அன்பு, நிதானம் மற்றும் தெய்வீகச் சித்தத்திற்குப் பொறுமையுடன் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுத்தலின் ஆவியினால் அதிகமதிகமாய் நிரப்பப்பட்டு, இவ்விதமாய்த் தற்காலத்திலேயே, இரக்கமுள்ளவர்களாய் இருப்பதின் நிமித்தம் பாக்கியவான்களாய்க் காணப்படுவார்கள்.
பாக்கியம் அடைவதற்கான ஆறாம் படிநிலை இருதயத்தில் சுத்தமாயிருப்பதாகும். அதாவது, நோக்கத்தில் சுத்தம், விருப்பத்தில் சுத்தம், பிரயாசத்தில் சுத்தம், சித்தத்தில் சுத்தமாகும். அதாவது, உண்மையாய் இருப்பது, ஒளிவுமறைவின்றி இருப்பது, நேர்மையாய் இருப்பது என்றவிதத்தில் சுத்தமாகும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், நேர்மையான இருதயம் கொண்டவர்கள் அதாவது, முற்றிலும் சரியான நோக்கம் கொண்டவர்கள் பாக்கியவான்களாய் இருப்பார்கள். உலக ஜனங்களிலும் கூட சிலர் நேர்மையான இருதயம் கொண்டிருப்பதாகவும், நேர்மையான நோக்கம், விருப்பம் கொண்டிருப்பதாகவும் தங்களைக்குறித்துக் கூறிக்கொள்வது உண்மையாகவே இருந்தாலும் கூட, இவர்கள் கிறிஸ்துவுக்குள்ளான தெய்வீக ஏற்பாட்டிற்குள் வராததுவரையிலும், இவர்கள் விசுவாசத்தின் மூலம் கிறிஸ்துவினுடைய பின்னடியார்களாக அர்ப்பணம் பண்ணுவதுவரையிலும், பாக்கியமாய் இருப்பதற்கான படிகளை இவர்கள் அடியெடுத்து வைக்காததுவரையிலும், இவர்களை “”இருதயத்தில் சுத்தமுள்ள” வகுப்பாரின் அங்கங்களாக நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.””
“இருதயத்தில் சுத்தம்” என்ற வார்த்தைகளை அநேகர் தவறாய்ப் புரிந்துள்ளனர். அதாவது, இருதயத்தில் சுத்தம் என்பது வெளியில் மாத்திரமல்லாமல், உள்ளேயும் முற்றிலுமாகப் பூரணமாய் இருத்தலைக்குறிக்கின்றது என்றும், வார்த்தைகள் மற்றும் கிரியைகளில் மாத்திரமல்லாமல், எண்ணங்களிலும் கூட முற்றிலுமாக பூரணமாய் இருத்தலைக்குறிக்கின்றது என்றும் எண்ணிவிடுகின்றனர். இப்படியான கண்ணோட்டமானது, “”நான் கிரியையிலும் சரி, வார்த்தையிலும் சரி, எண்ணத்திலும் சரி பூரணமாய் இல்லை; பின்னே எப்படி இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள என்ற நிலையின் கீழ் நானும் ஒருவன் என்று என்னைக் குறித்துச் சொல்ல முடியும்?” என்று தங்களைக்குறித்து நேர்மையாய்ச் சொல்லக்கூடியவர்களைச் சோர்வடைய செய்துள்ளது. இந்தக் கண்ணோட்டம் ஒரு தவறான புரிந்துக்கொள்ளுதல் என்று நாம் கூறுகின்றோம். நம்முடைய மாம்சத்தில் எவ்விதமான பூரணமும் இல்லை, என்பதைச் சொல்லப்போனால் நம்மை விட கர்த்தர் நன்கு அறிந்துள்ளார். மேலும், விழுகையின் காரணமாக, ஆதாமின் பிள்ளைகள் அனைவரின் பற்களும் பாவம் என்னும் புளிப்பினால் கூசிப்போயின என்ற காரணத்தினால், ரோமர் 7:16-18-ஆம் வரையிலான வசனத்தின் காரியங்களைச் செய்கின்றோம் என்றும் கர்த்தர் அறிந்துள்ளார், “இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. ஆதலால் நான் அல்ல எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மைவாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன். நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை” (எரேமியா 31:29,30).
யூத ஜனங்களுக்கு, நியாயப்பிரமாணத்தையும், அதனோடுகூட ஜீவனுக்கான வாக்குத்தத்தத்தையும் அளித்ததின் மூலம், அவர்களுக்கு யூத யுகத்தில் ஒரு மாபெரும் படிப்பினையைத் தேவன் அருளினார். ஆனாலும், தேவன் இஸ்ரயேலர்களுக்கு [R2587 : page 71] நியாயப்பிரமாணத்தை அருளினபோதிலும் கூட, “”எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை” என்பதை தேவன் முன்கூட்டியே அறிந்தவராகவே இருந்தார் என்று அப்போஸ்தலர்கள் நமக்கு உறுதியளிக்கின்றனர். “”எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.” மாறாக, நியாயப்பிரமாணம் மிகத் தெளிவாக புரிந்துக்கொள்ளப்படும்போது, பாவம், பூரணமற்றநிலை தொடர்பான அறிவு மிகத் தெளிவாக புரிந்துக்கொள்ளப்படும். துணிகரமான பாவங்களையல்ல, ஆதி பாவத்தையும், அதன் விளைவாக ஏற்பட்டுள்ள பெலவீனங்களையும், பூரணமின்மையையும் மன்னிப்பதே கிறிஸ்துவுக்குள்ளான தேவனுடைய ஏற்பாடாகும். துணிகரமில்லாமல், வேண்டுமென்றே இல்லாமல் காணப்படும் மீறுதல்கள் தொடர்பான விஷயங்களில் அவருடைய இரக்கம் கடந்துவருகின்றது. மனிதனுடைய பூரணமற்ற தன்மையை நமது கர்த்தர் இயேசு கருத்தில் கொண்டுள்ள காரியமானது, “”இரக்கமுள்ளவர்கள் இரக்கம் பெறுவார்கள்” என்ற அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுகின்றது. அதாவது, நமக்கு இரக்கம் அவசியம் என்பதை அவர் குறிப்பிடும்போது, அவர் மனிதனுடைய பூரணமற்ற தன்மைகளைக் கருத்தில் கொண்டுள்ளது வெளிப்படுகின்றது. நாம் இரக்கம் பெற்றுக்கொள்வோம் என்பதை நமக்கு உறுதிப்படுத்தின பிற்பாடு, ஆறாம் மலைப்பிரசங்கத்தின் கருத்தானது, நாம் எண்ணங்களிலும், வார்த்தைகளிலும், கிரியைகளிலும் முழுமையான பூரணத்துடன் காணப்பட வேண்டும் என்பதாக இடம்பெறுவதில்லை. ஏனெனில், ஒருவேளை நாம் பூரண நிலையை அடைந்திருப்போமானால் (அ) அடையக்கூடுமானால், கிறிஸ்துவின் பலியின் மூலம் நமக்கு இரக்கமும், பாவங்களுக்கான மன்னிப்பும் தேவன் அளிப்பதற்கு அவசியமே ஏற்பட்டிருக்காது.
“”இருதயத்தில் சுத்தம்” என்பது நடக்கையிலோ, வார்த்தையிலோ, எண்ணத்திலோ பூரணத்தைக்குறிப்பிடாமல் மாறாக, இவைகள் தொடர்பான அனைத்திலும் பூரணமான நோக்கம் இருக்க வேண்டும் என்பதையே குறிக்கின்றது. எண்ணத்திலும், வார்த்தையிலும், கிரியையிலும் நாம் பூரணம் அடைவதே நம்முடைய விருப்பமாகவும், பிரயாசமாகவும் காணப்பட வேண்டும். நம்முடைய இருதயங்களும், நம்முடைய சித்தங்களும் இசைவுடன் காணப்பட வேண்டிய தெய்வீக நியமமானது, “”பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்”; என்பதேயாகும் (மத்தேயு 5:48). இந்த முழுமையான பூரணத்திற்குக் கீழான, எந்த ஒரு நியமத்தையும் தேவன் நியமிக்கவில்லை. தேவன் கிறிஸ்துவின் மூலமாக கிருபையை, இரக்கத்தை மற்றும் சமாதானத்தை நமக்கு ஏற்படுத்தியுள்ளார். ஒருவேளை, நாம் கிறிஸ்துவின் அடிச்சுவடுகளில் நடக்கின்றவர்களாய் இருப்போமானால், இந்த இருதயத்தின் சுத்தம் என்பது இடுக்கமான வழியிலுள்ள முக்கியமான படிகளில் ஒன்றாய் இருக்கின்றது.
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் மாத்திரமே, தேவனைத் தரிசிப்பார்கள் என்ற வாக்குத்தத்தத்தைப் பெற்றுள்ளார்கள். இவர்கள் இருதயத்தில் சுத்தம் விஷயத்திலும், நோக்கத்தில் சுத்தம் விஷயத்திலும், தேவனிடத்திலும், மனுஷரிடத்திலுமாக தங்களுடைய பிரயாசத்தில் நேர்மையுடன் காணப்படும் விஷயத்திலும் தற்கால ஜீவியத்திலேயே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒப்பான சாயலை அடைந்து, தங்களுடைய ஓட்டத்தின் இறுதிவரையிலும் உண்மையுடன் காணப்பட்டு, இறுதியில் கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின்படி, இவர்கள் முதலாம் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் பூமிக்குரிய நிலையிலிருந்து, பரலோக ஆவிக்குரிய நிலைக்கு மாற்றப்படுவார்கள். “”பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம்;” “”இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்;” “”கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்;” “”மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” (1 யோவான் 3:2; எபிரெயர் 1:3; எபேசியர் 5:27; கொலோசெயர் 2:10).
முந்தினவைகள் போன்று, இக்குணலட்ணத்திற்குரிய ஆசீர்வாதத்தின் ஒருபங்கு, ஒரு முன்சுவைப்பு, தற்காலத்திலேயே கடந்துவருகின்றது. கிறிஸ்துவினுடைய அன்பை அறிந்துக்கொள்வதற்கும், அதன் நீளம், அகலம், உயரம், ஆழம் புரிந்துக்கொள்வதற்கும் ஏதுவாக அதாவது, அனைத்துப் பரிசுத்தவான்களோடுங்கூட புரிந்துக்கொள்வதற்கு ஏதுவாக, நம்முடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்கள் திறக்கப்படுகின்ற காரியம் ஒன்றுள்ளது (எபேசியர் 3:18). அனைவருக்கும் புரிந்துக்கொள்ளுதலின் (மன) கண்கள் திறப்பதில்லை. பிதாவாகிய தேவனுடைய குணலட்சணங்கள் எல்லாம் இசைவுடன் காணப்படுவதின் மகிமைகளைப் பார்ப்பதற்கான சிலாக்கியம் அனைவருக்கும் உரியதல்ல. அதாவது, தெய்வீக நீதி, ஞானம், அன்பு மற்றும் வல்லமை, உலகத்தோற்றத்திற்கு முன்னதாகவே தேவன் திட்டமிட்டபடியே அவருடைய அனைத்துச் சிருஷ்டிகளுக்கான ஆசீர்வாதத்திற்காக ஒத்திசைந்து செயல்படுவதின் மகிமைகளைப் பார்ப்பதற்கான சிலாக்கியம் அனைவருக்கும் உரியதல்ல.
ஆனால், மேற்கூறின இந்த ஆசீர்வாதத்தை அதாவது, இந்தத் தெளிவான பார்வையை/புரிந்துக்கொள்ளுதலை யாரால் அனுபவிக்க முடியும்? யார் புரிந்துக்கொண்டு அந்த மகிமையான பூரணத்திற்கு ஒப்பாக அதிகமதிகமாக வளர்வதற்கு உதவப்படுவார்கள்? “”இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள்” மாத்திரமே! உண்மையும், நேர்மையுமுள்ள இருயமுடையவர்கள் மாத்திரமே! ஆகும். இருமனமுள்ளவர்கள், இரண்டு சித்தம் கொண்டவர்கள், வேதவாக்கியங்களின்படி இரட்டைப்பார்வை, இரட்டைகண்கள் உடையவர்களாய் இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் ஆவிக்குரிய காரியங்களை ஓரக்கண்ணினால் பார்த்து, காரியங்களை இரட்டைப்பார்வை உடையவர்கள் போன்று பார்க்கின்றனர்; மேலும், தெளிவில்லாமலும் காண்கின்றனர். தேவனுடைய ஜனங்களில் அநேகர் கிறிஸ்துவுக்குள் அனைத்துக் காரியங்களிலும் வளரத்தவறி, அனைத்தையும் இரட்டையாகவும், குழப்பத்துடனும் பார்க்கின்றனர். இவர்கள் கொஞ்சம் ஆவிக்குரியவைகளையும், கொஞ்சம் பூமிக்குரியவைகளையும் பார்க்கின்றனர். இவர்கள் தெய்வீகக் குணலட்சணத்தை மங்கலாகவும், தெளிவில்லாமலும் பார்க்கின்றனர். மேலும், இவர்கள் தெய்வீகக் குணலட்சணத்தை மங்கலாகப்பார்ப்பதற்கு ஏற்ப, அக்குணலட்சணத்திற்கு ஒப்பாக மாறுவதற்கு ஆற்றல் அற்றவர்களாய் இருக்கின்றனர். கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துள்ள அனைவரும், ஓர் ஆண்டவரை உடையவர்களாகவும், அவருடைய மகிமை மற்றும் அவருக்கான ஊழியம் தொடர்பான விஷயத்தில் [R2588 : page 71] தெளிவான பார்வையுடைவர்களாகவும் இருப்பதற்கு அதாவது, சுத்தமான, நேர்மையான, உண்மையுள்ள இருதயம் கொண்டவர்களாக இருப்பதற்கு அதிகமதிகமாக நாடுவோமாக.
ஏழாவது மலைப்பிரசங்கமானது, ஆறாவதினுடைய வெளிதோற்றமான வெளிப்படுத்தல் ஆகும். மற்றவர்களுடைய கண்களுக்கு புலப்படாத தேவனிடத்திலான இருதயத்தின் சுத்தமானது, (பாக்கியம் அடைதல் மற்றும் வளர்ச்சியிலுள்ள) ஏழாம் குணலட்சணத்தில் வெளிப்படுகின்றது. அதாவது, மற்றவர்கள் மத்தியில் சமாதானத்தை உண்டுபண்ணுவதற்கான நம்முடைய சமாதானத்திற்கேதுவான விருப்பங்களில் மற்றும் பிரயாசங்களில் வெளிப்படுகின்றது. தேவனுடைய விஷயங்களில் சுத்தமான இருதயத்தை ஏற்கெனவே அடைந்து, மற்றும் தாழ்மை, அனுதாபம், பொறுமையுடன் கீழ்ப்படுத்தி ஒப்புக்கொடுத்தல், நீதியின் மீதான பசி தாகம், மற்றவர்கள் மீது அன்பு (அ) இரக்கங்கொள்ளுதல், உண்மையான/தூய்மையான இருதயமுமாகிய குணலட்சணங்களை அடையாதவரையிலும், தெய்வீக நியமத்தின்படி ஒருவரால் சமாதானம் பண்ணுகிறவராக இருக்க முடியாது. யாரொருவர் இந்தக் குணலட்சணங்களையெல்லாம் ஒரு குறிப்பிட்ட அளவு வளர்த்தியுள்ளார்களோ, அவர்கள் தங்களுக்குள் சமாதானத்தைப் பெற்றவர்களாயிருந்து, மற்றவர்களிடத்தில் சமாதானம் பண்ணுகின்றவர்களாய் இருப்பார்கள்.
கர்த்தருடைய ஜனங்களிலேயே மிகவும் சொற்பமானவர்களே, இந்தச் சமாதானம் பண்ணும் குணலட்சணத்தைக் குறிப்பிடத்தக்க விதத்தில் வளர்த்துக்கொண்டு, தங்களுடைய ஜீவியத்தில் எடுத்துக்காட்டியும் உள்ளனர். பெரும்பான்மையானவர்கள், அதிலும் கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக்கொண்டவர்களிலும்கூட, அநேகர் எதிர்மாறான போக்கைத் தெரிந்துக்கொண்டுள்ள காரியமானது, இவர்களுடைய இருதயங்கள் சுத்தமுள்ளதாகவும், இவர்களுக்குள் அனுதாபங்கள் நிறைந்திருந்தாலுங்கூட, இவர்கள் கிறிஸ்துவின் பள்ளிக்கூடத்தில் இன்னும் கற்றுக்கொள்வதற்கு அதிகமுள்ளது என்பதைச் சுட்டிக்காண்பிக்கின்றது. ஏனெனில், இவர்கள் சமாதானத்தைத் தூண்டுகிறவர்களாக இருப்பதற்குப்பதிலாக இவர்கள் விரோதத்தைத் தூண்டுகிறவர்களாக இருக்கின்றனர். இதை இவர்கள் தீய நோக்கத்தினால் செய்யவில்லை; மாறாக, இது இவர்களுடைய பழக்கவழக்கத்தினாலும், அன்பின் தெய்வீகப் போக்கிற்கும், உலகத்தில் காணப்படும் சயநலத்தின் எதிர்மறையான போக்கிற்கும் இடையேயுள்ள மாபெரும் வித்தியாசத்தைத் தெளிவாகப் புரிந்துக்கொள்ள தவறுவதினாலும், அறியாமையினாலும் செய்யப்படுகின்றது. விரோதம், பார்வையினால் அல்லது கைகளினால் தூண்டப்பட்டாலுங்கூட, அது பிரதானமாக நாவினால் தூண்டப்படுகின்றது. இதுபோலவே, சமாதானத்தைத் தூண்டுவதுங்கூட பார்வையினால் ஏற்பட்டாலுங்கூட, இது பிரதானமாக நாவினாலேயே செய்யப்படுகின்றது. விரோதத்தைத் தொடர்ச்சியாக தூண்டும் நாவுகளையுடைய எத்தனையோ கிறிஸ்தவர்களை நாம் பார்த்திருக்கின்றோம்! இவர்கள் எதிராளியானவனுடைய பிடியிலிருந்து அநேகவிஷயங்களில் தப்பிச்சென்ற பிற்பாடுங்கூட, அவன் இவ்விதத்தில் இவர்களைப்பிடித்து தனது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பான். ஏனெனில், இவ்விதத்தில் தாங்கள் சாத்தானுடைய ஊழியக்காரர்களாக வேலைச்செய்கின்றனர் என்பதை இவர்கள் கண்டுபிடிப்பதில்லை. அதாவது, தாங்கள் விரோதம், பகை, வைராக்கியம், வன்மம் ஆகியவைகளைத் தூண்டிவிடும் கலகக்காரர்களாய் இருக்கின்றார்கள் எனவும், அநேகரைத் தீட்டுப்படுத்துவதற்கு ஏதுவான கசப்பின் வேர்களை நடுகிறவர்களாய் இருக்கின்றார்கள் எனவும் இவர்கள் கண்டுபிடிப்பதில்லை.
“”ஒருவனையும் தூஷியாமலும், சண்டைபண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்புட்டு” என்றும், “கெட்ட [R2588 : page 72] வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்த புறப்படவேண்டாம். பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால், அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்” என்றும் உள்ள புத்திமதிகளின் நீளத்தையும், ஆழத்தையும், அகலத்தையும் கிறிஸ்தவர்கள் என்றுதான் கற்றுக்கொள்ளப் போகின்றார்களோ? (தீத்து 3:2; எபேசியர் 4:29). தீமையான ஒரு காரியத்தைப் பேசுவதின் மூலம் (ஒருவேளை அக்காரியம் உண்மையென அவர்கள் எவ்வளவுதான் உறுதிகொண்டிருந்தாலும்) தாங்கள் ஒரு பெரிய தீமையைச் செய்கின்றார்கள் என்று தேவனுடைய உண்மையான பிள்ளைகளில் சிலர் கற்றுக்கொள்வதற்கு எத்தனை காலம்தான் எடுத்துக்கொள்வார்கள்? மற்றவர்களுடைய பக்திவிருத்திக்கே அல்லாமல், எப்போதும் மற்றவர்களுடைய தப்பிதங்கள் குறித்தே (உண்மையான காரியங்களையே) பேசிக்கொண்டிருப்பது அவசியமில்லை என்பதை தேவனுடைய உண்மையான சிலர் கற்றுக்கொள்வதற்கு எத்தனை காலம்தான் எடுத்துக்கொள்வார்கள்? மற்றவர்களுடைய காரியங்கள் குறித்த வீண்பேச்சுகள், குறை கண்டுபிடிக்கும் பேச்சுகள் மற்றும் சந்தேக பேச்சுகள் தவிர்க்கப்பட வேண்டியுள்ளது; இவர்களிடத்தில் அன்பும், கிறிஸ்துவுக்கு ஒத்தசாயலும், சமாதானம் பண்ணுகிறதற்கான பண்புகளும் குறைவுப்பட்டிருப்பதையும், இவர்கள் பரலோக இராஜ்யத்தில் இடம் பெற்றுக்கொள்ளத்தக்கதாக தங்கள் அழைப்பையும், தெரிந்துக்கொள்ளுதலையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு ஏதுவாக இந்தக் குறைவுகளை, உண்மையுடன் எதிர்த்து நிவர்த்தி செய்யப்பட வேண்டியதையும், இவர்கள் புரிந்துக்கொள்ளத்தக்கதாக இவர்களுக்கு எத்தனை பாடங்கள்தான், வரிக்கு வரியாகக்கொடுக்கப்பட வேண்டும்?
“”கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்” என்ற அப்போஸ்தலனுடைய வார்த்தைகளை, ஓ! அனைவரும் மனப்பாடமாய் படித்து, தங்களுடைய ஜீவியத்தில் வெளிக்காட்டுவதற்குத் தொடர்ந்து நாடுவார்களாக (பிலிப்பியர் 4:8). யாரெல்லாம் உண்மையானவைகளையும், நல்லவைகளையும், அருமையானவைகளையும் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கின்றார்களோ, அத்தகையவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போது, இவைகளைக்குறித்தே பேசிக்கொள்வார்கள். ஆகையால், கர்த்தர் அங்கீகரிக்கத்தக்கதாகவும், கேட்கிறவர்களுக்கு ஆசீர்வாதம் உண்டாகுவதற்கு ஏதுவாகவும், நம்முடைய இருதயத்தின் நிறைவினால் நமது வாய் தொடர்ந்து நன்மையான காரியங்களைப் பேசத்தக்கதாக, நம்முடைய இருதயங்கள் நன்மையான காரியங்களினால் நிரப்பப்பட்டிருப்பது எவ்வளவு அவசியமாய் உள்ளது (லூக்கா 6:45).
இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் விலையேறப்பெற்ற வாக்குத்தத்தம் உள்ளது; அதாவது, “”அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” என்பதாகும். இவர்கள் தேவனுடைய ஆவியைப் பெற்றிருக்கின்றனர். மேலும், தேவனுடைய அருமையான குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக தடயங்களைத் தங்களுடைய இருதயத்தில் பெற்றிருக்கின்றனர். இவர்கள் சத்தியத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இறுதியில், “”ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைய” தகுதியானவர்கள். இப்படிப்பட்டவர்களை மாத்திரமே தேவன் தமது புத்திரர்களாகவும், தமது மாபெரும் குமாரனும், நம்முடைய கர்த்தருமானவருடன் இராஜ்யத்தின் உடன் சுதந்திரர்களாகவும் ஏற்றுக்கொள்வார். இக்காரியமானது, நம்முடைய விஷயத்திலும், மற்றவருக்கும் நமக்குமான விஷயத்திலும், தேவனுடைய பிள்ளைகளாக நாமும், எல்லாரும் எவ்வளவாக வளர்ந்துள்ளோம் என்பதற்கான பரீட்சையாகக் கூடக் காணப்படுகின்றது. அதாவது, நம்முடைய சமாதானத்திற்கு ஏதுவான பண்புகளுக்கும், சமாதானத்திற்கு ஏதுவான ஓர் ஜீவிய போக்கை/வாழ்க்கையை எடுப்பதற்குரிய நம்முடைய ஜாக்கிரதை தன்மைக்கும் பரீட்சையாகக் கூடக் காணப்படுகின்றது.
கர்த்தருடைய ஜனங்களில் சிலர் இயல்பாகவே சண்டையிடுகின்ற ஆவியை உடையவர்களாகவும், சமாதானத்திற்குச் சாதகமற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். உலகம், மாம்சம் மற்றும் எதிராளியானவனுக்கு எதிராக போராடுவதற்கும், “”விசுவாசத்திற்காக தைரியமாய்ப் போராடுவதற்கும்” இந்தப் போராடும்/சண்டையிடும் தன்மை கொஞ்சம் அவசியமாகத்தான் உள்ளது. ஆகவே, இயல்பாகவே போராடுகின்ற/சண்டையிடுகின்ற மனப்பான்மை உடையவர்கள், ஏதாவது ஒருவிஷயத்தில் மற்றவரை எதிர்த்துக்கொண்டே இருப்பார்கள். எனினும், இதனிமித்தம் இவர்கள் சோர்வடைய வேண்டாம். ஏனெனில், இந்தப் போராடும்/சண்டையிடும் மனப்பான்மை சரியான திசையில் வழிநடத்தப்பட்டால், அம்மனப்பான்மையானது மிக உபயோகமான வேலையாளாகவும், போர் வீரனாகவும் காணப்படும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய சொந்த பூரணமற்ற தன்மைகளையும், அனைவருடைய பூரணமற்ற தன்மைகளையும் உணர்ந்தவர்களாக, இவர்கள் இந்தப் போராடும் மனப்பான்மையை இரக்கத்தினால் வரையறுத்து, மற்றவர்களின் விஷயத்தில் செயல்படுத்துகின்றவர்களாய்க் காணப்பட வேண்டும். சத்தியத்திற்காகவும், சத்தியத்தின் அனைத்து ஊழியர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்காகவும், மற்றும் தப்பறைகளுக்கு எதிராகவும் போராடும்படிக்கு இந்தப் போராடும் மனப்பான்மையானது அன்பு மற்றும் இரக்கத்தின் வரையறையை கொண்டு போராடுவதற்குப் பயிற்றுவிக்கப்பட வேண்டும். தப்பறைகளுக்கு எதிராகப் போராடலாம் ஆனால், தப்பறையில் குருடாக்கப்பட்ட மற்றும் அறியாமையினால் காணப்படும் ஊழியர்களுக்கு எதிராக போராடுதல்கள் காணப்படக்கூடாது. சொந்த சுபாவத்தினுடைய பூரணமற்ற தன்மைகள் மற்றும் பெலவீனங்களுக்கு எதிராக போராடுவதில் நம்முடைய இந்தப் போராடும் மனப்பான்மையை நாம் ஈடுபடுத்தலாம். மேலும், இவ்விதமாய் இம்மனப்பான்மையானது இத்ததைகய நல்ல பணியில் சுறுசுறுப்பாய்க் காணப்படும் பட்சத்தில், மற்றவர்களைக் காயப்படுத்துவதற்கு இம்மனப்பான்மைக்கு நேரம் இராது. மேலும், நம்முடைய சுயத்தை கைப்பற்றி கீழ்ப்படுத்துவதிலுள்ள கஷ்டங்களை (நம்முடைய இந்த) மனப்பான்மையானது உணரும்போது, மற்றவர்களுடைய பெலவீனங்கள் குறித்து அதிகம் அனுதாபங்கொள்ளும்.
துன்பப்படுத்துதலின் வாயிலாக வரும் ஆசீர்வாதம் எட்டாவது மலைப்பிரசங்கத்தினுடைய கருத்தாகும். கர்த்தருடைய ஜனங்கள் முந்தின பாக்கியமான காரியங்களையெல்லாம் அடையாதது வரையிலும், அப்போஸ்தலர் பவுல் கூறினது போன்று, “”உபத்திரவத்தில் மேன்மை பாராட்டும்” நிலையை அடையமுடியாது. ஆனால், நமது கர்த்தரோ பல்வேறு விதமான துன்பப்படுதல்களுக்கு இடையேயுள்ள வித்தியாசத்தைக் கவனத்துடன் வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றார். அதாவது, பாக்கியமான துன்பப்படுதலிலிருந்து, மற்ற வேறுவிதமான துன்பப்படுதல்களைக் கவனமாக வித்தியாசப்படுத்திக் காட்டுகின்றார். அதாவது, மற்றவர்கள் மீது குறை கண்டுபிடிப்பதின் மூலமாகவும், தீயக்குணலட்சணங்கள் மூலமாகவும், எல்லாரையும், எல்லாவற்றையும் எதிர்த்துச் சண்டையிடுதல் மூலமாகவும் நாம் துன்பங்களை வருவித்துக்கொள்ளக்கூடாது. அதேசமயம், மதவெறி காரணமாகவும் நாம் துன்பங்களை வருவித்துக்கொள்ளக்கூடாது. மாறாக நாம், “”தெளிந்த புத்தியுள்ள ஆவியை” விருத்திச்செய்து, கர்த்தருடைய தெளிந்தபுத்தி எப்படியாக இருந்தது என வேதவாக்கியங்கள் சுட்டிக்காட்டியுள்ள காரியங்களைப் படிப்படியாகக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படியாக, நாம் கற்றுக்கொண்டு நடந்த பிற்பாடுங்கூட நாம் “”மதவெறி” கொண்டுள்ளதாக உலகம் நம்மை தவறாய்க் குற்றஞ்சாட்டும். ஏனெனில், தேவனுடைய ஞானமானது, மனுஷனால் முட்டாள்தனம் என்று கருதப்படுகின்றது. ஆனால், மனுஷனுடைய ஞானமோ தெய்வீகக் கண்ணோட்டத்தின்படி முட்டாள்தனமாகவே கருதப்படுகின்றது.
எப்போதாவது ஒருவிதமான நடத்தை (அ) கிரியை, மதவெறி போன்றும், நியாயமற்றது போன்றும் நமக்குத் தோன்றுமாயின், அந்த நடத்தையில்/கிரியையில் வெளிப்படும் ஆவியானது, நம்முடைய கர்த்தர் மற்றும் அப்போஸ்தலர்களுடைய போதனையிலும், மாதிரியிலும் காணப்படுகின்றது என்று நாம் உறுதி அடைவது வரையிலும், நாம் அக்கிரியை நடப்பிக்க தயக்கம்கொள்ள வேண்டும். பின்னர், நமக்கு உறுதி கிடைக்கும் பட்சத்தில் உலகம் நம்முடைய அக்கிரியைக்குறித்து என்னதான் எண்ணினாலும் (அ) பேசினாலும், அதைப் பொருட்படுத்தாமல், அக்கிரியையை நாம் பாதுகாப்பாய்த் தொடரலாம். உதாரணத்திற்கு, தெய்வீகக் கண்ணோட்டத்தின்படி, ஒரு மனுஷன் தனது மரணத்திற்குப்பிற்பாடு, தன் பிள்ளைகள் ஜீவிப்பதற்கென, மில்லியன் கணக்காக பணத்தைக் குவித்துச் சேர்க்க, இரவும் பகலும் வேலை புரிவது என்பது பைத்தியமான காரியமாகும். ஆனால், மனுஷனுடைய கண்ணோட்டத்தின்படி, மேற்கூறியபடி வேலை புரிவது நியாயமான நடத்தையாகும். இன்னுமாக, தெய்வீகக் கண்ணோட்டத்தின்படி, அப்போஸ்தலர்கள் சத்தியத்திற்கான ஊழியத்திற்கெனத் தங்களுடைய ஜீவியத்தையே செலவிடுவதும், மேன்மையான உயிர்த்தெழுதலையும், நித்திய மகிமையையும், கனத்தையும், அழியாமையையும் பெற்றுக்கொள்வதற்கெனத் தங்களுடைய பூமிக்குரிய நலனை, பெயரை, அந்தஸ்தை, கீர்த்தியைத் தியாகம் செய்வதும் ஞானமான காரியமாகும். ஆனால், இப்படியாகச் செய்வது என்பது, உலகத்திற்குரிய கண்ணோட்டத்தின்படி முட்டாள்தனமாகவும், மதவெறியாகவும் காணப்படும்.
கர்த்தரையும், அப்போஸ்தலர்களுடைய போதனைகளையும், மாதிரிகளையும் பின்பற்றுவதின் காரணமாக நமக்குத் துன்பங்கள் வந்தால், அவரோடு நாம் பண்ணியுள்ள அர்ப்பணிப்பின் உடன்படிக்கைக்கு நாம் காட்டும் உண்மையினிமித்தம் நமக்கு எதிராக பலவிதமான தீமைகளும், தவறாய்க் கூறப்படுவதினிமித்தம் நமக்குத் துன்பங்களும் வந்தால் நாம் களிக்கூர வேண்டும். ஏனெனில், இதுபோலவே தீர்க்கத்தரிசிகளும், நமது கர்த்தரும், அப்போஸ்தலர்களும், ஆதிமுதல் உண்மையுள்ளவர்களாய்க் காணப்பட்ட அனைவரும் துன்பப்படுத்தப்பட்டார்கள். இப்படியான ஒரு நல்ல கூட்டத்தாரோடு நம்முடைய அனுபவங்கள் காணப்படும் காரியமானது, கர்த்தர் தம்முடைய சம்பத்தைக் கூட்டிச்சேர்க்கும் நாளில், இந்த நல்ல கூட்டத்தாரோடு நாமும், அவர்களைப்போன்று (மகிமையில்) காணப்படுவோம் என்பதற்கான சாட்சியாக விளங்குகின்றது.
இப்படியான அனுபவங்கள் உடையவர்கள் அனைவரும் களிக்கூரக்கடவர்கள். மேலும், இப்படியான அனுபவங்கள் நமக்கு அதிகமாய்க் கிடைக்கும் பட்சத்தில், பரலோகத்திலுள்ள பலன் மிகுதியாய் இருக்கும் என்று கர்த்தருடைய வார்த்தைகள் தெரிவிக்குமானால், அப்பொழுது நாம் இப்படியான அனுபவங்களில் அதிகமாய்க் களிக்கூர வேண்டும். மேலும், ஒருவேளை நமக்கு இப்படியான அனுபவங்கள் இல்லையெனில், சுயத்தைப் பலிச் செலுத்துவதற்கான இடுக்குமான வழியில் நடப்பதில் நாம் உண்மையற்றவர்களாகக் காணப்படுகின்றோமா என நம்மை ஆராய்ந்து பார்ப்பதற்குரிய எச்சரிப்பாக விளங்கும் அல்லது நம்முடைய கைக்கு வருவதை நாம் முழுப் பலத்தோடு செய்கிறவர்களாயிராமல், நம்முடைய பலியைச் செலுத்தாமல், வைத்துக்கொள்கின்றோமா என நம்மை ஆராய்ந்து பார்ப்பதற்குரிய எச்சரிப்பாக விளங்கும். இப்படியான நிலையில் காணப்படுவதை ஆராய்ந்து கண்டறிந்த நிலையில் இருப்பவர்கள் [R2588 : page 73] சோர்ந்துபோக வேண்டாம். மாறாக, அன்பு மற்றும் பக்திவைராக்கியம் எனும் புதிய கயிறுகளினால் தங்கள் பலிகளைப் பலிப்பீடத்தின் கொம்புகளில் கட்டி, அப்பலியைத் தேவன் ஏற்றுக்கொள்ளும்படியாக ஜெபம்பண்ணி, மேலும் தேவனுக்காகவும், தேவனுடைய நோக்கத்திற்காகவும், சத்தியத்திற்காகவும் வேலைகள் புரிவதற்கும், பாடுகள் படுவதற்குமான வாய்ப்புகளைத் தர வேண்டும் எனவும் ஜெபம் பண்ணுவார்களாக (சங்கீதம் 118:27).
இந்த அனைத்துக் குணலட்சணங்களின் ஒட்டுமொத்த கூட்டுருவம், அன்பு ஆகும். மேலும், இந்த அனைத்துக் குணலட்சணங்களையும் உடையவர்கள் அன்புடையவர்களாய்/ அருமையானவர்களாய் இருப்பார்கள். மேலும், போகப்போக இவர்கள் முற்றிலும் அன்புள்ளவருடைய சாயலுக்கு ஒப்பாகவும் மாறி, அவரோடுகூட, முற்றிலும் அன்புடையவர்களாகக் காணப்படுவார்கள். இந்தப் பாக்கியமான குணலட்சணங்களை அடைந்து இராஜ்யத்தில் காணப்படுவதே நமக்கான அழைப்பாகும்.”