R4130 – தாகத்துக்குத் தா

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4130 (page 41)

தாகத்துக்குத் தா

GIVE ME TO DRINK

யோவான் 4:19-29

“”ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன்.” – யோவான் 7:37

“”அவர் பெருகவும், நான் சிறுகவும் வேண்டும்” என்று இயேசுவைக் குறித்து யோவான் ஸ்நானன் சாட்சியளித்தார் (யோவான் 3:30). இதற்கிசைவாகவே, இயேசு (தம்முடைய சீஷர்களின் கைகளின் மூலம்) யோவான் மற்றும் யோவானுடைய சீஷர்களைக்காட்டிலும் அநேகம் பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார் என்று வாசிக்கின்றோம் (யோவான் 4:1). இயேசுவைக் குறித்த பிரபலம் பெருகினபோது, இது பரிசேயர் மற்றும் வேதபாரகர் மத்தியில் கசப்பையும், எதிர்ப்பையும் உண்டுபண்ணினதினிமித்தம், அவரைக் கொன்றுபோட அவர்கள் வகைத்தேடினார்கள். இதன் காரணமாகவே அதாவது, “”யூதர்கள் இயேசுவைக் கொலை செய்ய வகைத்தேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல், கலிலேயாவிலே சஞ்சரித்து வந்தார்” என்று நாம் வாசிக்கின்றோம் (யோவான் 7:1). மதத்தலைவர்கள் யோவானைப் பார்க்கிலும் இயேசுவிடமே அதிகம் வன்மமும், விரோதமும் கொண்டிருந்தனர். காரணம், அவர் தங்களிலும் அதிகமாய்மேம்பட்டிருப்பதைக் கண்டார்கள். மேலும், கல்வியறிவு இல்லாத பொது ஜனங்கள் அவர் (இயேசு) கூறுவதை மகிச்சியுடன் கேட்டு, “”இந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை” என்றார்கள். ஆகவே, விசேஷித்தப் பண்டிகைகளில் நியாயப்பிரமாணத்தின்படி திரளான ஜனங்கள் எருசலேமில் கூடியிருக்கும் நாட்கள் தவிர மற்றபடி இயேசு எருசலேமில் இருந்ததாக நாம் அதிகம் வாசித்ததில்லை.

அவருடைய அப்போஸ்தலர்களில் பெரும்பாலானவர்களின் சொந்த ஊராகிய கலிலேயாவுக்குப்போக வேண்டுமெனில், சமாரியரின் பட்டணங்கள் வாயிலாகவே பிரயாணம் பண்ண வேண்டியிருந்தது. இந்தச் சமாரியர்களைக் குறித்துத்தான் நமது கர்த்தர் இட்டக் கட்டளையானது, “”இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரயேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள்” என்பதாக இருந்தது (மத்தேயு 10:5-6. சமாரியர்கள், இஸ்ரயேலர்களின் காணியாட்சிக்குப் புறம்பான அந்நியர்களாகவும், புறஜாதியாராகவும் கருதப்பட்டனர். சமாரியர்களின் வரலாறு குறித்து நாம் சற்றுப்பார்க்கலாம். பாபிலோனியர்களின் இராஜா, இஸ்ரயேலர்களைப் பாபிலோனுக்கு அடிமைகளாகக் கொண்டுபோன காலகட்டத்தில் அவர் சில புறஜாதிகளை இஸ்ரயேல் தேசத்தில் குடியேற்றினார். இந்தப் புறஜாதியினர் தங்களுடைய கடந்த கால விக்கிரக அனுபவங்களிலிருந்து துண்டிக்கப்பட்டதால், இவர்கள் தங்களின் புதிய நாடாகிய இஸ்ரயேலின் மீதும், அதன் மத நம்பிக்கைகள், கோட்பாடுகள் மற்றும் ஆச்சாரங்கள் மீதும் விருப்பங்கொள்ள ஆரம்பித்தனர். இப்படியாக இருக்கையில், யூதர்கள் மத்தியில் காணப்பட்ட சில கவனமற்ற, அறிவற்ற, ஒழுக்கக்கேடான யூதர்கள், தங்களின் தெய்வீக நியாயப்பிரமாணங்களையும், கலப்பின திருமணம் பற்றின அதன் பிரமாணங்களையும் புறக்கணித்தவர்களாக, சமாரியர்களோடு திருமண உறவை வைத்துக்கொண்டார்கள். இவ்விதமாக, அவர்கள் (அந்தப் புறஜாதிகள்) மத்தியில் கொஞ்சம் யூதர் இரத்தம் கலந்தது. இவர்கள் தங்களைத் தாங்களே யாக்கோபின் பிள்ளைகள் என்று அழைத்துக்கொண்டனர். மேலும், இப்படி அழைப்பதினால் தங்களுக்குச் சில ஆசீர்வாதங்கள் சேரும் என்ற நம்பிக்கைக் கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.

இந்தச் சமாரியர்களுக்கும் மற்றும் யாக்கோபின் வம்சம் வழியாக வந்த யூதர்களுக்கும் இடையில் மத சம்பந்தமான வேற்றுமைகள் காணப்பட்டது. மோசேயின் மூலம் கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுகிறவர்களாகிய யூதர்கள், எருசலேமையும், ஆலயத்தையுமே தேவனை வழிபடுவதற்கான, ஏற்கத்தக்க மையம் என்று புரிந்துக்கொண்டிருந்தனர். ஆனால், சமாரியர்களோ தங்களிடத்தில் மேன்மையான ஒன்று இருப்பதாகக் கூறிக்கொண்டனர்; அதாவது, தங்களுடைய சொந்த நாட்டிற்குள்ளாகவே, யாக்கோபு தேவனைத் தொழுது கொண்ட மலையைப்பெற்றிருந்தனர். ஆகவே, அவர்கள் அம்மலையை மாபெரும் ஆலயம் என்றும், பூமியிலுள்ள யாவற்றைக்காட்டிலும் அம்மலை மேன்மையானது என்றும் உயர்வாக எண்ணி, அம்மலைக்குச் சென்று தேவனைத் தொழுதுகொண்டிருந்தனர். மேற்கூறியவைகள்தான், இராஜ்யத்திற்கான அழைப்பை விசேஷமாக யூதர்களுக்குக் கொடுக்கையில், நமது கர்த்தர் புறஜாதிகளையும், சமாரியர்களையும் தவிர்த்ததற்கான காரணங்களை நமக்குக் காட்டுகின்றது. யூதர்கள் தங்களுடைய வாய்ப்பை நிராகரித்துபோட்டு, பிற்பாடு இராஜ்யத்திற்கான விசேஷித்த சிலாக்கியங்கள் அவர்களிடமிருந்து எடுக்கப்படும்போதே, பூமியின் சகல பாஷைக்காரர், ஜாதிகள், தேசங்கள், ஜனங்கள், கோத்திரங்கள் மற்றும் சமாரியர்கள் உட்பட இவர்கள் மத்தியில், கேட்கும் செவியுடையவர்களுக்கு வாய்ப்பானது கடந்து வரும்.

தாகத்துக்குத் தா

கலிலேயாவுக்குப்போகும் சாலையானது, யாக்கோபின் கிணறு இருக்கும் ஸ்தலத்தில் பிரிந்தது; உணவு வாங்கும்படி சீஷர்கள் அருகாமையிலிருந்த சமாரியாவின் கிராமமாகிய சீகாருக்குப் போயிருக்க, இயேசு கிணற்றண்டையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார்; அந்தக் கிணறு 75 அடி ஆழமும், அதன் வாய்ப்பகுதியில் வட்ட இருக்கை வடிவில் சுவர் எழுப்பப்பட்டதாயும் காணப்பட்டது. அருகாமையிலுள்ள வயலில் பணிபுரிந்து கொண்டிருந்த ஒரு சமாரிய ஸ்திரீ, தண்ணீர் மொண்டுக்கொள்ளும்படிக்கு (கிணற்றண்டையில்) வந்தபோது, இயேசு தண்ணீர் தந்து உதவும்படிக் கேட்ட காரியமானது அவளை அதிகமான ஆச்சரியத்திற்குள்ளாக ஆழ்த்தியது. ஒரு யூதனானவர், சமாரியரிடம் எவ்விதமான உதவியும், அதிலும் விசேஷமாகக் குடிப்பதற்குத் தண்ணீர் கூடக் கேட்கக்கூடாது என்று, கடுமையாக (யூதர்) சமுதாய விதிமுறைகள்/கட்டுபாடுகள் காணப்பட்டது. அந்நாட்களில் உணவு அல்லது தண்ணீர் கொடுக்கப்படுவதோ அல்லது வாங்கப்படுவதோ, ஐக்கியம்கொள்வதையும், உடன்படிக்கைப் பண்ணுவதையும் அடையாளப் படுத்துகின்றதாகக் காணப்பட்டது. இப்படிப்பட்டச் சூழ்நிலையில், இப்படி விநோதமாக நமது கர்த்தர் நடந்து கொண்டதற்கான காரணத்தை அவள் கேட்டபோது, அவர் அதற்குப் பதிலளிக்கவில்லை. முழுச் சுவிசேஷப் புத்தகப்பதிவுகளிலுமே நமது கர்த்தரின் தாழ்மையை நம்மால் காணமுடிகின்றது; அதாவது, எந்த வகுப்பாருடனும் பழக அவர் விருப்பமுடனும், தயக்கமில்லாமலும் இருப்பதை நம்மால் காண முடிகின்றது; அதாவது, எவ்வகுப்பாராய் இருப்பினும், அது ஆயக்காரரோ அல்லது பாவிகளோ, எவராய் இருப்பினும், அவர்களுக்கு நன்மை செய்வதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கும் போதெல்லாம், அவர் ஒரு வாய்ப்பையும் தவறவிட்டதில்லை என்பதை நம்மால் காண முடிகின்றது; மேலும், வேதபாரகர் மற்றும் பரிசேயரின், பாவிகளை/பிறரை ஒதுக்கி வைக்கும் தன்மையை அவர் கடிந்து கொண்டதையும் நம்மால் காண முடிகின்றது. வெளிப்புறமாக மிகுந்த சீர்க்கேட்டுடன் காணப்பட்ட ஒருவரின் வஸ்திரத்தைக்கூடத் தொட அஞ்சும், சுயநீதி தொடர்பான எண்ணங்களைக் குறித்து அவருடைய உவமைகளில் ஒன்றில் அவர் பேசியுள்ளார். நமது கர்த்தர் வெளிப்புறமான சீர்க்கேட்டை அங்கீகரிக்கவில்லை. அதேசமயம் தேவன் இருதயத்தைப் பார்க்கின்றார் என்றும், மனுஷரால் இழிவாகக் கருதப்படும் சிலரைப் பார்க்கிலும், மனுஷரால் மிக உயர்வாக அங்கீகரிக்கப்படும் சிலர், தேவனுடைய பார்வையில் மிகத் தீட்டானவர்களாக இருக்கின்றார்கள் என்றும் எடுத்துக்காட்டினார்.

திறமை / சாமார்த்தியம் பயன்படுத்துவதற்கான மாதிரி

நமது கர்த்தர் மாபெரும் திறமையை இவ்விடத்தில் காட்டுகின்றார். அந்த ஸ்திரீயின் கேள்விக்குப் பதிலளிப்பதற்குப் பதிலாக, ஓர் ஆழமான சத்தியத்தின் மீது அவளது கவனத்தைத் திசை திருப்புகின்றார். இந்தத் திறமை குறித்ததான பாடத்தை அநேக கர்த்தருடைய ஜனங்கள் கற்க வேண்டியது அவசியமாயுள்ளது. திறமையைப் பயன்படுத்தக்கூடாது என்றும், அப்படிப் பயன்படுத்துவது நேர்மையற்ற காரியம் என்றும் சிலர் தவறாகப் புரிந்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பதை நாம் அறிவோம். இவ்விதம் தவறான எண்ணம் கொண்டிருப்பதினால் இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துமளவு மடத்தனமாக (அறிவு மழுங்கிய) தவறிழைத்து [R4130 : page 42] விடுகின்றனர். மேலும், தாங்கள் பயன்படக்கூடியதற்கான வாய்ப்புகளைத் தாங்களாகவே தடுத்தும் விடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் நமது கர்த்தருடைய சாமார்த்தியம் குறித்ததான இந்தப் பாடத்தைக் கவனிக்க வேண்டும். அந்த ஸ்தீரியின் கேள்விக்குத் தாம், பதிலளிக்க வேண்டியது அவசியம் என்று கர்த்தருக்குத் தோன்றவில்லை. மாறாக, அவர் “”நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார்” என்றார் (யோவான் 4:10). இவ்வாறே, நாமும் வாழ்க்கையின் சகல விஷயங்களிலும், நாம் தொடர்புகொள்ளுகிறவர்களின் கவனத்தை பரத்திற்கும், ஆவிக்குரிய காரியங்களுக்கும் நேராக திசை திருப்ப முயற்சிப்போமாக. ஆனால், அதற்கென்று அனைத்துத் தருணங்களிலும், மத ரீதியான விஷயங்களைக் குறித்தே பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்றில்லை; நமது கர்த்தரும் இப்படியாக எல்லாவற்றிலும் செய்திருப்பார் என்று நாமும் எண்ணிக்கொள்கிறதில்லை. நமது கர்த்தர், தாம் பேசின ஸ்திரீயிடம் ஏதோ சில நேர்மையின் பண்புகளை அநேகமாகக் கண்டிருந்திருக்க வேண்டும்; இல்லையேல் அவளிடத்தில் அவர் பேசியிருந்திருக்கமாட்டார். நாமும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும், கர்த்தரைக் கனப்படுத்துவதற்கும் ஏதுவாக ஏற்றவேளையில் வார்த்தைகளைப் பேசுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் கண்ணோக்கினவர்களாக இருக்க வேண்டும்.””

“ஜீவத்தண்ணீர்” என்பது புதிய தண்ணீர் என்றும், அது தேங்கி நிற்கும் தண்ணீரிலிருந்து வேறுபட்டது என்றும் ஸ்திரீயானவள் புரிந்துக்கொண்டாள். நமது கர்த்தரிடம் தண்ணீர் மொண்டு கொள்வதற்கான பாத்திரமும், ஒட்டக மையிரினால் உண்டான கயிறும் இல்லை என்று ஸ்திரீ அறிந்துக்கொண்டு, எனக்குத் தண்ணீர் கொடுக்க நீர் ஒருவேளை மிகவும் விருப்பம் கொண்டிருந்தாலும் கூட, இந்தக் கிணறு மிகவும் ஆழமாக இருப்பதாலும், உம்மிடத்தில் மொண்டெடுப்பதற்கு எதுவுமில்லாமல் இருப்பதாலும், இக்கிணற்றில் இருக்கும் [R4131 : page 42] தண்ணீரைக்காட்டிலும் வேறெங்கும் உம்மால் நல்ல தண்ணீர் கிடைக்கும் என நீர் எதிர்ப்பார்க்க முடியாததாலும், தண்ணீர் தாருங்கள் என்று நான் உம்மிடத்தில் கேட்பதினால் எனக்குப் பிரயோஜனமில்லை என்றாள். “”பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும், அவர் பிள்ளைகளும், அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள்” (யோவான் 4:11,12). ஸ்திரீயை ஏமாற்றுவதற்காக அல்லாமலும், தாம் (இயேசு) தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாமலும் மாறாக, ஸ்திரீயினுடைய நலம் கருதி, மீண்டுமாக நமது கர்த்தர் சாமார்த்தியமாக அவளுடைய கேள்விக்குப் பதில் கொடுக்கவில்லை. அவர், அவளுக்குப் போதித்துக் கொண்டிருந்தார். மேலும், அவர் அவளது மனதை இயற்கையான (சொல்லர்த்தமான) தண்ணீரிலிருந்து, ஆவிக்குரிய தண்ணீருக்கு நேராகவும், இயற்கையான ஊற்றிலிருந்து, ஆவிக்குரிய ஊற்றிற்கு நேராகவும் வழிநடத்திக் கொண்டிருந்தார். “”நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக்கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்” (யோவான் 4:14).

நமது கர்த்தர் சாதாரணமான ஸ்திரீயிடம் பேசவில்லை என்பது, அவள் உடனடியாக கர்த்தரின் வார்த்தைகளைப் புரிந்துக்கொண்டதிலும், அவர் கூறின ஜீவத்தண்ணீரைப் பெற்றுக்கொள்வதற்கென அவள் வெளிகாட்டின உண்மையான விருப்பத்திலும் நம்மால் காணமுடிகின்றது. “”அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள்” (யோவான் 4:15). மீண்டுமாக, நமது கர்த்தர் சாமார்த்தியத்தைப் பயன்படுத்துவதைப் நாம் பார்க்கலாம். ஸ்திரீயானவள், தான் ஒரு பாவி என்பதையும், தான் மரணத் தீர்ப்பின் கீழ்க் காணப்படுகின்றாள் என்பதையும், தேவனால் மாத்திரமே அளிக்கப்படும் ஜீவத்தண்ணீரை, தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும், அந்த ஜீவத்தண்ணீரானது ஊற்றாகிய இயேசுவினிடத்திலேயே தேவன் அளித்துள்ளார் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டியது அவசியமாய் இருந்தது. “”போய் உன் புருஷனை அழைத்துக் கொண்டு வா” என்று கூறி, நமது கர்த்தர் உடனடியாக அவளுடைய எண்ணங்களை, அவளுடைய இருதயத்திற்குள்ளாகத் திருப்பினார். “”எனக்கு புருஷன் இல்லை” என்று அவள் பதிலளித்தபோது, அவளுக்குள் எண்ணங்கள் வெள்ளம்போல எழும்ப, நமது கர்த்தர் அவைகளை அவளுக்கு ஒருமுகப்படுத்தி, “”எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய்” என்று கூறினார். இப்பொழுது ஸ்திரீ உணர்வடைந்தாள். தன்னுடைய இருதயத்தின் ஆழமான இரகசியங்களை அறிந்த ஒருவரின் முன்னிலையில் தான் இருப்பதாக ஸ்திரீ உணர்ந்துகொண்டாள். எனினும், அவரைக் கண்டு அவள் பயப்படவில்லை. அவரை விட்டு அவள் விலகி ஓடவுமில்லை. அவருடைய இரக்கம், அவருடைய கனிவு மற்றும் ஒரு சமாரியா ஸ்திரீயிடம் பேச அவர் கொண்டிருந்த விருப்பம் ஆகியவைகள் எல்லாம், அவளுக்கு, தான் ஒரு நண்பனைக் கண்டடைந்ததைக் காட்டினது. “”ஆண்டவரே, நீர் தீர்க்கத்தரிசி என்று காண்கிறேன்” என்றாள் (வசனம் 19).

தனக்கு மிகவும் இரகசியமாய் இருந்தவைகளையும், விவாதித்தால்/பேசினால் தனக்கு மிகவும் கவலைக்கொடுக்கக்கூடியதும், தன்னை மிகவும் புண்படுத்தக் கூடியதுமான காரியங்களை சம்பாஷணைப் பண்ணுவதிலிருந்து ஸ்திரீ, விவேகத்துடன் பேச்சை மாற்றிவிட்டாள். மேலும், நமது கர்த்தரும் அக்காரியத்தைக் குறித்து மீண்டும் பேசாமல் அப்படியே விட்டுவிட்டார். இப்படிப்பினையை, அவருடைய அனைத்துப் பின்னடியார்களும் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். அதாவது, ஒருவரிடம் பேசும்போது, முதலாவது பாவத்தைக் குறித்த உணர்வை அவர்களுடைய மனதில் உணர்த்திவிட்டு, பின்னர் அவர்களே அவர்களுக்குரிய நேரங்களில் (பாவங்களைக் குறித்து) கவலைக்கொண்டு, மனம்வருந்தி, சீர்த்திருத்தம் பண்ணிக்கொள்ளத்தக்கதாக அவர்களை விட்டுவிட வேண்டும். நம்மைச் சுற்றியிருப்பவர்களின் இருதயங்களை நொறுக்குவது நமது வேலையாயிராமல், நொறுங்குண்ட இருதயம் உடையவர்களைக் கண்டுபிடிப்பதே நமது வேலையாகும். “”நொறுங்குண்டவர்களுக்குக் காயம் கட்டுங்கள்” என்பதே நமக்கான கட்டளையாகும். “”கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும்” (ஏசாயா 61:1). இந்தச் சம்பவத்தைப் போன்றே அநேக சந்தர்ப்பங்களில், நொறுங்குண்டவர்களின் இருதயமானது, சத்தியம் மற்றும் கிருபை எனும் சுகமாக்கும் தைலத்தினால் கட்டப்பட வேண்டும். ஆனால், நொறுங்குண்ட இருதயங்களைக் கட்டுவதற்கு நாம் தொடும்பொழுது, நம்முடைய தொடுதல் மென்மையாக/கனிவாக இருக்க வேண்டும். இருதயத்தை இன்னும் நொறுக்க வேண்டுவது அவசியப்படுமாயின் அதைச் செய்வது நமக்கான வேலை அல்ல.

யூதர்களின் இரட்சிப்பு

அந்த ஸ்திரீயானவள், தன்னுடைய தனிப்பட்ட குணங்கள் மற்றும் குடும்ப காரியங்கள் குறித்ததான சம்பாஷணையிலிருந்து விலகி கொண்டதோடல்லாமல், மாபெரும் தீர்க்கத்தரிசியாக அவள் கண்டவரிடம், தன்னுடைய இருதயத்தில் நீண்ட காலமாய்க் காணப்பட்ட கேள்விக்கு விடையை அவருடைய உதவியினால் கேட்டறிந்துகொள்ளத்தக்கதாக அந்த வாய்ப்பைப் பயன்படுத்தினவளாகவும் இருந்தாள். மதம் மற்றும் (தேவனை) தொழுதுகொள்ளும் விஷயத்தில் யூதர்களின் முறைமைகளா அல்லது சமாரியர்களின் முறைமைகளா சரி? என்ற கேள்வியே அவளுக்குள் காணப்பட்டது. அவர் தீர்க்கத்தரிசி என்று அவள் உறுதியடைந்ததினிமித்தமாகவும், அவருடைய வார்த்தைகளின் பேரில் அவளுக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தபடியாலுமே, அவளுடைய கேள்வி… எங்கள் பிதாக்கள் இந்த மலையே தொழுதுகொள்வதற்கான இடம் என்கிறார்களே, ஆனால் யூதர்களாகிய நீங்களோ, எருசலேம் மாத்திரமே தேவனைத் தொழுதுகொள்ளுவதற்கான இடம் என்கிறீர்களே, இதில் யார் சரியாகப் பின்பற்றுகிறார்கள்? என்று கேட்டாள். அவளை யூதமார்க்கத்தமைந்தவளாக (யூதர் மதத்திற்குள் மதம் மாற்ற) மாற்றுவது நமது கர்த்தரின் நோக்கமாக இல்லை; ஏனெனில் அதற்கான காலம் கடந்து போய்விட்டது. அறுவடை காலமும் வந்துவிட்டது. அவளுக்கு நன்மையாக இருக்கப்போகும் ஒரு காரியத்தையே அவளிடம் கூறுபவராக இயேசு காணப்பட்டார். மேலும், தேவனுடைய தயவு குறித்த விஷயத்தில், யூதர்களை மற்றவர்களிடமிருந்தெல்லாம் பிரித்து வைத்திருந்த தடையாகிய மதிற்சுவர் உடைக்கப்படும்போது, எதிர்க்காலத்தில் இந்த ஸ்திரீ மூலம் மற்றவர்களுக்கும் நன்மையாக இருக்கப்போகும் ஒரு காரியத்தையே அவளிடம் கூறுபவராக இயேசு காணப்பட்டார். சுவிசேஷ யுகத்தைக் குறித்த பொதுவான விளக்கமே, அவருடைய பதிலாகக் காணப்பட்டது. இந்தச் சுவிசேஷ யுகமானது சில யூதர்கள் பொருட்டு ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் சமாரியர்களையும், சகல புறஜாதிகளையும் சென்றடையக்கூடியதாய் இருக்கும். “”அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலுமாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங் காலம் வருகிறது” (யோவான் 4:21).

புதிய யுகமானது ஆரம்பித்த பிற்பாடு, யூதர்களின் குடியிருப்புப் பாழாகிப்போன பிற்பாடு, அந்த வேளையானது ஆரம்பித்தது. மேலும், அது நீடித்துக்கொண்டிருக்கின்றது. விசுவாசிக்கிறவர்கள், ஒரு குறிப்பிட்ட மலைக்கோ, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கோ, ஒரு குறிப்பிட்ட வீட்டிற்கோ செல்ல வேண்டிய அவசியமில்லை. மாறாக, எவ்விடத்திலேயும், மாபெரும் மீட்பர் மூலம் ஜீவனுள்ள தேவனை அணுகலாம், கண்டடையலாம். “”காலம் வருகிறது” என்று சொன்ன காலமானது, ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது. நமது கர்த்தர் தாமே ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்களில் முதலாவது ஆவார். மேலும், அவருடைய சீஷர்கள் அவர் மூலமாகப் பிதாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். மேலும், இவர்கள் ஜெபிக்கவும், தேடவும், தட்டவும், கண்டடையவும் கற்பிக்கப்பட்டார்கள். இந்த ஆவிக்குரிய யுகத்தின் கீழ்த் தேவனைத் தொழுதுகொள்பவர்கள், முந்தின தொழுகை முறையின் அடிப்படையில் (அ) ஜாதியாரின்/தேசத்தாரின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவர்கள் தனித்தனி நபர்களாகவே ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். இவர்கள் பிதாவினால் நியமிக்கப்பட்ட வழியாகிய, மீட்பர் மூலமாய், “”ஆவியோடும், உண்மையோடும்” பிதாவை அணுகுகின்றார்கள். மேலும், இவர்கள் இவ்விதத்திலேயே தம்மைத் தொழுதுகொள்ள வேண்டுமெனப் பிதாவும் விரும்புகின்றார். “”உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் [R4131 : page 43] தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார்” (யோவான் 4:23). முற்காலங்களில் தேவன், சில வழிபாடு முறைமைகளையும், நேரங்களையும், இடங்களையும் உத்தரவிட்டிருந்தார். ஆனால், இப்பொழுதோ கிறிஸ்துவின் வழியாக “ஆவியோடும், உண்மையோடும்” பிதாவினிடத்தில் வருபவர்களே ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர்.

சம்பிரதாயங்களும், சடங்குகளும் கட்டளையிடப்படாமல், இருதயப்பூர்வமான உண்மையான தொழுதுகொள்ளுதலே கட்டளையிடப்பட்டுள்ளது என்பது முற்றிலும் உண்மையாக இருப்பினும், சிலர் இன்னமும் சம்பிரதாயம் மற்றும் சடங்குகள் மீது அதிகம் கவனம் செலுத்தி, ஈடுபடுகிறவர்களாக இருப்பதை நம்மால் காண/உணர்ந்துகொள்ள முடிகின்றது. மேலும், இப்படிப்பட்டவர்கள், ஜெபம் மற்றும் ஐக்கியத்தின் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை அதிகம் இழந்து போகிறவர்களாகக் காணப்படுகின்றனர். ஆனால், வேறொரு விதத்திலும் கர்த்தருடைய அன்பார்ந்த சில ஜனங்கள் விழுந்துபோவதற்கான அபாயத்தையும் நம்மால் காண முடிகின்றது. அதாவது, ஜெபத்திற்கான சகல ஒழுக்கமுறைகளையும் புறக்கணித்துவிடுவதும், சில சமயம் பரலோக இரக்கத்தின் சிங்காசனத்தை அணுகும்போது, சிறிதளவே ஒழுக்கமுறைகள் நம்மில் இருப்பதும், நம்மை அவருடைய சந்நிதானத்தில் ஏற்றுக்கொண்டு, நம்முடைய விண்ணப்பங்களுக்குச் செவிசாய்க்கும் மாபெரும் தயவை வழங்கினவரை அணுகும்போது, சில சமயம் அவருக்கென்று, போதுமானளவு பயபக்தியும், தாழ்மையும் நம்மிடத்தில் இல்லாமலிருப்பதுமே அந்த அபாயமாகும். எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் நாம் கர்த்தரை அழைக்க முடியும் என்பதற்கு நாம் நன்றியுணர்வு தேவனிடம் கொண்டிருந்தாலும், அதே சமயம், அவருடைய பிரகாரங்களுக்குள் நாம் பயபக்தியுடனும், அவருடைய உயர்வான ஸ்தானத்திற்கு முன்பு, நமக்கு இருக்கவேண்டிய தாழ்மையான உணர்வு கொண்ட இருதயத்துடனும் பிரவேசிப்போமாக. இவ்விதமாக, சர்வவல்லமையுள்ளவரின் மகத்துவம் மற்றும் அவர் மீது நாம் முற்றிலும் சார்ந்திருக்கும் உணர்வுடன் கூடிய, ஜெபத்தின் உண்மையான ஆவிக்குள்/அனுபவத்திற்குள் பிரவேசிக்கிறவர்களாக இருப்போம்.

நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்

“”நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால், இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது” என்ற உண்மையை/சத்தியத்தை ஸ்திரீயிடம் அறிவித்த நமது கர்த்தருடைய விதத்தில் எவ்விதமான முரட்டுத்தனமும் இல்லை என்பதில் நமக்கு உறுதியே (வசனம் 22). சமாரியர்கள், இஸ்ரயேலர்களாக இராதபடியினால், இவர்கள் எவ்விதத்திலும் ஆபிரகாமின் உடன்படிக்கையினுடைய சுதந்தரவாளிகளல்ல. இந்த அடிப்படையான சத்தியத்தை, அதற்கே உரிய உண்மையான வெளிச்சத்தில் சமாரியர்கள் பார்க்காததினால், இவர்கள் தெய்வீகத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சத்தைக் குறித்தும் தெளிவற்றவர்களாக/குழப்பமடைந்தவர்களாகக் காணப்பட்டார்கள். மாறாக யூதர்களோ, தாங்கள்தான் ஆபிரகாமின் மாம்சீகத்தின்படியான சந்ததி என்றும், மாபெரும் மேசியாவானவர் தங்கள் வழியாகவே வர வேண்டும் என்றும், இறுதியில் அவர் மூலமும், தங்கள் தேசத்தாரிலுள்ள சிலர் மூலமும், பூமியின் சகல குடிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் அறிந்திருந்தார்கள். “”இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது” என்று நமது கர்த்தர் சொன்னாரேயொழிய இரட்சிப்பு யூதர்களுக்காக என்று அவர் கூறவில்லை. யூதர்கள் வழியாய் என்று சொல்வதற்கான காரணம், ஆண்டவர், மாம்சத்தின்படி அந்தத் தேசத்தைச் சார்ந்தவராய் இருக்கிறபடியினாலே ஆகும். மேலும், யூதர்கள் வழியாய் என்று சொல்வதற்கான காரணம், வாக்குத்தத்தங்களானது விசேஷமாக இந்தத் தேசத்தாருக்கு உரியதாய் இருந்தபடியால், மேசியாவானவர் வேறெந்த தேசத்திலும் பிறந்து அந்த வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக்கொள்ள முடியாது. இந்தத் தேசத்திலிருந்தே அதாவது, இந்த ஜனங்கள் மத்தியிலிருந்தே நமது கர்த்தர், தமது சரீரமாகிய சபையின் ஆதி அங்கங்களைத் தெரிந்துக்கொண்டார். மேலும், இவர்கள் மூலமே அந்தச் சரீரத்தின் அங்கமாகுவதற்கான அழைப்பானது சகல தேசம், ஜனம், கோத்திரத்தார் மற்றும் பாஷைக்காரர் மத்தியில் கொண்டுப்போகப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட ஜனங்களுக்கு, சமாரியர்கள் இங்கு நிழலாக/அடையாளமாக இருக்கின்றார்கள் என்று நாம் கூறுவதில்லை. இங்கு நிழல் என்பது மிகக் பலமான வார்த்தையாகிவிடும். எனினும் நாம் பார்க்கலாம். நிழலில், உண்மையான (மாம்சீக) இஸ்ரயேலர்களும் இருந்தார்கள்; அதேசமயம் இஸ்ரயேலுக்குக் கொஞ்சம் ஒப்பாகவும் ஆனால், இஸ்ரயேலுடையவர்கள் அல்லாததுமான ஒரு வகுப்பாரும் (சமாரியரும்) காணப்பட்டதுபோன்று, ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் மத்தியிலும், ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் அல்லாதபடியினால், உடன்படிக்கை மற்றும் வாக்குத்தத்தங்களுக்கு அந்நியரான சமாரியர்கள் போன்றவர்களை நம்மாலும் காணமுடிகின்றது; அதாவது, பரிசுத்த ஆவியினால் மீண்டும் ஜெநிப்பிக்கப்படாதவர்களை நம்மால் காணமுடிகின்றது. இப்படிப்பட்டவர்களில் சிலர் கனம் பொருந்தினவர்களாகவும், மதிப்பிற்குரியவர்களாகவும், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்துக்கொண்டும், அதை மறுதலிக்கிறவர்களாகவும் காணப்படுகின்றனர். உண்மையான இஸ்ரயேலர்கள் மத்தியிலும், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்ட சகலர் மத்தியிலும், கர்த்தருடைய வாக்குத்தத்தங்களுக்குத் தொடர்புடையவர்கள் மத்தியிலும், இரண்டு வகுப்பார் காணப்படுகின்றனர்: உத்தம இஸ்ரயேலர்களாகிய சிறுமந்தையினர்; இவர்களுடைய அன்பையும், வைராக்கியத்தையும் கர்த்தர் அங்கீகரிக்கின்றார்; மற்றும் திரள்கூட்டத்தார் மற்றும் இவர்கள் ஜெயங்கொண்டவர்களாகிய உடன் சுதந்திரர்கள் என்ற நிலையை அடைவதற்குப்போதுமான அன்பிலும், வைராக்கியத்திலும் குறைவுப்பட்டவர்கள்.

சமாரியர்கள் போன்றவர்களிடத்திலான நம்முடைய மத ரீதியிலான சம்பாஷணையின்போது, “”நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்கின்றீர்கள்” என்பதான வார்த்தைகள் உண்மையாக இருப்பினும், இவ்வார்த்தைகளைப் பயன்படுத்துவது என்பது சர்ப்பத்தினுடைய ஞானமாக இருக்காது. எனினும், இவ்வகுப்பார் சத்தியத்தை அறிந்துக்கொள்வதற்கான விருப்பத்தைக் காட்டுவார்களெனில் அவர்களுக்கு அன்பாக விளக்க முற்படுங்கள், அதாவது அவர்கள் அதுவரையிலும் அறிந்ததும், எண்ணிக்கொண்டிருந்ததுமான காரியங்களிலிருந்து, ஆவிக்குரிய இஸ்ரயேலரின் அர்ப்பணிக்கப்பட்ட பரிசுத்தவான்களுக்குப் பொருந்தக்கூடிய வாக்குத்தத்தங்கள், நம்பிக்கைகள் மற்றும் நோக்கங்கள் எவ்வளவு வேறுபட்டதாக இருக்கின்றதென அன்பாக எடுத்துக்காட்ட முற்படுங்கள். இஸ்ரயேலர்களிடமும் சரி, மற்றவர்களிடமும் சரி, நம்முடைய சகல கையாளுதல்களிலும், “”பாம்புகளைக் போல் முன்மதி உடையவர்களாகவும், புறாக்களைப்போல கபடு அற்றவர்களாகவும் இருங்கள்” என்ற ஆண்டவரின் வார்த்தைகளை நினைவுகூருவோமாக (மத்தேயு 10:16; திருவிவிலியம்).

மேசியா வரும்போது

சமாரியா ஸ்திரீயின் மனதில் எண்ணங்கள் அலைமோதின. அவள் தன்னுடைய ஜனங்கள் மற்றும் யூதர்களின் எதிர்ப்பார்ப்பாகிய தேவன் அனுப்பும் மாபெரும் மேசியா குறித்து அதாவது, அபிஷேகம் பண்ணப்பட்டவர் குறித்து, அதாவது, சகல குழப்பங்களையும் முடிவிற்குக் கொண்டுவருவதற்கும், சகல இடர்பாடுகளையும் மாற்றிப்போடுவதற்கும், சகல வல்லமைகளையும் கொண்டுள்ள மாபெரும் மேசியா குறித்து நினைவுகூர்ந்தாள். தான் பேசிக்கொண்டிருக்கும் தீர்க்கத்தரிசியைக்காட்டிலும், மேசியாவானவர் ஆச்சரியப்படும் விதத்தில் மிகுந்த ஞானமுடையவராக இருப்பாரோ என்று ஸ்திரீ (தனக்குள்) எண்ணினாள். இக்கேள்வியை அவள் நேரடியாகக் கேட்க விரும்பாமல் மறைமுகமாக, “”கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார்” என்ற வார்த்தைகளின் பின்னாக மறைத்துக் கேட்டாள் (யோவான் 4:25). அவளுடைய மனதின் ஆயத்தத்தைக் கண்ட நமது கர்த்தர், [R4132 : page 43] தமது ஊழிய நாட்களில் மற்ற எவரிடமும் வெளிப்படுத்தியதைக் காட்டிலும் மிகத் தெளிவாக, “”உன்னுடனே பேசுகிற நானே அவர்” என்று வெளிப்படுத்தினார் (வசனம் 26).

அத்தருணத்தில் திரும்பி வந்த சீஷர்கள் இயேசு, ஸ்திரீயுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். எனினும், அவர்மேல் அவர்கள் கொண்டிருந்த மிகுந்த மரியாதையினிமித்தமாக, அவரிடம் அவர்கள் கேள்வி கேட்கவில்லை. இச்சம்பவத்தைக் குறித்து, வாசித்த சுவிசேஷ யுகத்திலுள்ள பலர், ஆண்டவரிடம் (இவ்விடத்தில்) வெளிப்பட்டுள்ள தாழ்மையைக் குறித்து ஆச்சரியப்பட்டுள்ளனர். இது கர்த்தருடைய பின்னடியார்களுக்கு ஒரு படிப்பினையைக் கொடுக்கின்றதாய்க் காணப்படுகின்றது. அதென்னவெனில், பின்னடியார்களானவர்கள் தாங்கள் பிரசங்கிப்பதைக் கேட்க ஒரு நபர்தான் இருக்கிறார் என்றாலும், சத்தியம் பிரசங்கம் பண்ணுதல் மற்றும் ஊழியம் புரிவதற்கான வாய்ப்பைக் குறைவாக எண்ணிவிடக்கூடாது என்பதேயாகும். ஆயிரமாயிரமான செவிக் கொடாத ஜனங்கள் கூட்டத்திற்கு (சத்தியத்தின்) ஊழியம் புரிவதைப்பார்க்கிலும், உண்மையாய்ச் செவிக் கொடுத்துக்கேட்கும் ஒரு நபருக்குச் சத்தியம் பேசுவதற்கான வாய்ப்பானது மிக மிக மேன்மையானதாகும். நமது கர்த்தர் ஸ்திரீயினிடத்தில் செலவிட்ட நேரம் மற்றும் ஆற்றலானது, (energy) அவளிடம் நேரத்தைச் செலவழிக்கத்தக்கதான ஏதோ சிலவற்றை அவர் அவளிடத்தில் கண்டிருக்கின்றார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.

எனினும் வேறு கோணத்தில் பார்க்கும்போது அவளிடத்தில் என்ன தகுதி காணப்பட்டது? மாம்சத்தில் நமக்கு என்ன தகுதி உள்ளது? விழுந்துபோனவர்களும், பூரணமற்றவர்களுமாகிய நம்மிடத்தில், கர்த்தருக்குப் பிரியமானதென்று சொல்லத்தக்கதாக மீதி காணப்படக்கூடிய ஒரே காரியம் நமது இருதயத்தின் உண்மையாகும். இந்த ஸ்திரீயினிடத்தில் உண்மை காணப்பட்டது [R4132 : page 44] என்பது உறுதியே. ஆகவே, அவள் தயவு பெற்றவளானாள் என்று நாம் நம்புகின்றோம். மேலும், இவ்வுண்மை தன்மையினாலேயே இன்றளவும் அநேக கர்த்தருடைய அருமையான ஜனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர். இங்கு மீண்டுமாக, நமக்குவரும் ஒவ்வொரு வாய்ப்பைப் பயன்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மாதிரியைக் காண்கின்றோம். இச்சம்பவத்தைப் போன்று, தகுதியுள்ள எவருக்கேனும் உதவியாகச் செலவிடப்படும் நேரம் மற்றும் சக்தி/ஆற்றல்/பெலனானது, அநேகரிடத்தில்தாக்கத்தை உண்டாக்கத்தக்கதாகப் பயன்படுகின்றது. (பின்னாட்களிலே) நித்திய காலங்களில் மாத்திரமே இந்தச் சிறு சிறு காரியங்களின் முக்கியத்துவமும், கர்த்தரின் நாமத்தில் ஏறெடுக்கப்பட்ட எளிமையான/குறைவான/சிறிய பிரயாசங்களின் முக்கியத்துவமும் வெளியரங்கமாகும். மேலும், இது நம்முடைய பெரிய சாதனைகளைப் பார்க்கிலும், சிறு வாய்ப்புகள் மற்றும் சிறு காரியங்களில் நாம் காட்டும் உண்மையின் அடிப்படையிலேயே நமது கர்த்தர் நம்மை நியாயந்தீர்க்கின்றார் என்பதையும் நமக்கு நினைப்பூட்டுகின்றது. “”கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான். கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்” (லூக்கா 16:10). இவைகளை நாம் நினைவில் கொண்டவர்களாக, கர்த்தருக்காகவும், அவருடைய நோக்கத்திற்காகவும் நம்முடைய வைராக்கியத்தைக் காண்பிப்பதற்கு ஏதுவாகவும், இதன்விளைவாக அவரிடத்திலிருந்து தற்கால ஆசீர்வாதங்களையும், இறுதியில் அவருடைய அங்கீகரிப்பையும் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவாகவும், நாம் சிறு காரியங்களிலும், சிறு வாய்ப்புகளிலும், கண நேரங்களிலும், மணி நேரங்களிலும் (hours) கவனமாய் இருக்கக்கடவோம்.

ஊழியச் சிந்தை (Missionary Spirit)

இந்தச் சமாரியா ஸ்திரீயானவள் தனது தண்ணீர் குடத்தை விட்டுவிட்டு, தன்னுடைய நண்பர்கள் மற்றும் அயலகத்தாரிடம், தான் ஒரு மாபெரும் போதகரைக் கண்டதாகவும், அவர்தான் மேசியா என்று அறிவிக்கவும், அவரிடத்தில் வந்து அவர் பேசுவதைக் கேட்கும் சிலாக்கியத்தை அடையத்தக்கதாக அவர்களை வரச் சொல்லவும் கருதி, அவள் ஊருக்குள் துரிதமாகச் சென்ற காரியமானது, இன்னுமாக அவளுடைய குணலட்சணங்களைப் படம் பிடித்துக்காட்டுகின்றது. இயேசுவுடன் ஏற்பட்ட சம்பாஷணையைக் குறித்த விஷயத்தை, அவள் சுயநல ஆவியுடன் தனக்குள் மறைத்து வைத்திருப்பாளானால் அல்லது அவள் தனக்குள்… என்னுடைய நண்பர்கள் இவைகளையெல்லாம் அறிந்தார்களானால், நான் மகிழ்ச்சியடைவேன். ஆயினும், நானாக எவ்வித முயற்சியும் எடுக்கமாட்டேன் என்று சொல்லத்தக்கதாக, அவளுக்குள் சோம்பல் மற்றும் அஜாக்கிரதையின் ஆவிக் காணப்படுமாயின், இவைகள் இரண்டில் எவையேனும் அவளிடத்தில் காணப்பட்டிருந்திருக்குமாயின், அவள் கர்த்தருடைய தயவைப்பெறத் தகுதியற்றவள் என்பதைக் காட்டியிருக்கும்; மேலும், இப்படியான (சுயநலம் மற்றும் சோம்பல்) பண்புகள் அவளிடத்தில் காணப்பட்டிருக்குமாயின் இப்படிப்பட்ட ஸ்திரீயிடம் கர்த்தர் ஒருவேளை பேச முற்பட்டிருக்கமாட்டார் என்று நாம் எண்ணுகின்றோம். இப்படியாகவே, ஏற்றக்கால சத்தியத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் காணப்பட வேண்டும். அதாவது, நாம் உண்மையும், நேர்மையுடனும் இருப்பதோடு, பரந்த மனப்பான்மையுடையவர்களாகவும் இருக்க வேண்டும். அதாவது, நம்முடைய அயலார்களுக்கு நற்செய்தியை வழங்குவதில் பிரியம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்; அதாவது, மனுஷகுமாரனுடைய இரண்டாம் வருகை குறித்தும், ஸ்தாபிக்கப்படபோகும் இராஜ்யத்தைக் குறித்தும், இப்பொழுது கேள்விப்படுகிறவர்களும், முன்பில்லாதளவு இன்று தெய்வீகத் திட்டத்தின் சத்தியம் குறித்த தெளிவான அறிவிற்கும் வருகிறவர்களாகிய நாம், சத்தியத்தின் ஊழியத்திற்காகவும் அதாவது, சகல ஜனங்களுக்கும் மிகுந்த சந்தோஷத்தைக்கொடுக்கும் நற்செய்தியைப் பலர் அறிய செய்வதற்காகவும், நம்முடைய ஜீவனைக்கொடுப்பதில் களிகூர வேண்டும். இதுவே உண்மையான ஊழியனின் ஆவியாகும். மேலும் (சொந்த) வீட்டிற்குள்ளான (home) ஊழியமே வரிசையில் முதலாவதாக இடம் பெறுகின்றது.

என்னிடத்தில் வந்து, பானம் பண்ணக்கடவன்

ஒருவன் கர்த்தரிடத்தில் வருவதற்கு முன்னதாக, அவன் தாகங்கொள்ள வேண்டும்; கர்த்தர் கொடுக்கப் போகிறதான ஜீவத்தண்ணீரைக் குறித்ததான, ஜீவனைக் குறித்ததான புரிந்துக்கொள்ளுதலும் அவனிடம் காணப்பட வேண்டும். அதாவது அவன், தான் ஒரு பாவி என்றும், தான் மரணத் தீர்ப்பின் கீழ்க்காணப்படுகின்றான் என்றும், கிறிஸ்து மூலம் அல்லாமல், எதிர்க்காலத்தைக் குறித்ததான எவ்விதமான நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் அவன் அறிந்துக்கொள்ள வேண்டும். கர்த்தரிடத்தில் வருவது என்பது விசுவாசத்தில் அணுகுவதாகும். நம்முடைய தாகமே நம்முடைய வாஞ்சை/விருப்பமாகும். நாம் நமக்குள்ளாக தெய்வீகச் செய்தியை ஏற்றுக்கொள்ளுகிறவர்களாக அல்லது பானம் பண்ணுகிறவர்களாக இருக்கின்றோம். “”உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும் உம்முடைய வசனமே சத்தியம்” (யோவான் 17:17). தண்ணீர், சத்தியத்திற்கு அடையாளமாக இருக்கின்றது. இதற்கு இசைவாகவே, “”நீதியின்பால் பசிதாகம் உள்ளவர்களுக்கான” ஆசீர்வாதம் தொடர்புடைய வாக்குத்தத்தம் காணப்படுகின்றது. “”அவர்கள் திருப்தியடைவார்கள்” என்பதே அந்த வாக்குத்தத்தமாக இருக்கின்றது (மத்தேயு 5:6). இதுவும், நம் பாடத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளுக்கு இசைவாகவே காணப்படுகின்றது. அதாவது, “”நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது” என்பதே (யோவான் 4:14).

தற்காலத்திலுங்கூட ஒரு கோணத்தில் பார்க்கையில், நம்முடைய தாகமானது தணிக்கப்பட முடியாததாகும். அதாவது, தற்காலத்தில் நாம் ஒருபோதும் திருப்திபடுத்தப்பட முடியாது. அதாவது, கர்த்தருடைய ஆசீர்வாதங்கள் மகா பெரியவைகளும், மகா நன்மையானவைகளுமாய் இருக்கிறபடியினால், நம்மால் தற்காலத்திலும், தற்கால சூழ்நிலைகளிலும் அவைகளைப் (ஆசீர்வாதங்களை) போதுமானளவு பெற்றுக்கொள்ள முடியாது. நாம் அவருக்கு ஒப்பான சாயலில் விழிக்கையிலேயே நாம் முழுமையாய்த் திருப்தியடைவோம். “”நானே நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன் நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்” (சங்கீதம் 17:15). அதாவது, கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாகத்தக்கதாக, நம்முடைய புதுச்சிருஷ்டியானது மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிற காரியமானது, முதலாம் உயிர்த்தெழுதலில் நிறைவடையும்போது நாம் முழுமையாய்த் திருப்தியடைவோம். “நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோல கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்” (2 கொரிந்தியர் 3:18). எனினும், தற்காலத்திலும் பானம்பண்ணுகிற நமக்கும் கூட ஓரளவு திருப்திக் காணப்படுகின்றது. அதாவது, தண்ணீர் ஊற்றண்டையில் தாகமுடன் காணப்படுகின்ற ஒருவன் மகிழ்ச்சியுடனும், உணர்வு புர்வமாகவும், திருப்தியுடனும் அதிகமதிகமாகவே பானம் பண்ணுகின்றான். இப்படியாகவே, கர்த்தருடைய ஜனங்கள் விஷயத்திலும் காணப்படுகின்றது. அவர் அவர்களுடைய பாத்திரத்தில் ஐஸ்வரியமும், திருப்தியளிக்கிறதுமான ஆசீர்வாதங்களை ஊற்றுகின்றார். மேலும், அவர்கள் இந்தத் தற்கால கூடாரத்தில் காணப்பட்டாலும், அவர் அவர்களின் பாத்திரத்தை மீண்டும் மீண்டுமாக நிரப்புகின்றார். சத்தியத்தை, ஜீவத்தண்ணீரை நாம் அதிகமதிகமாக ஏற்றுக்கொள்வோமாக மேலும், தூய்மையான தண்ணீரின் ஊற்றிலிருந்துதான், தண்ணீரைச் (சத்தியத்தைப்) பெற்றுக்கொள்கின்றோமா என்றும் பார்க்கக்கடவோம். மேலும், கர்த்தர் இயேசு அல்லாத எந்த நீரூற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளாதிருப்போமாக அதாவது, மற்றக் கால்வாய்கள் (channels) எவ்வளவு அதிகமாக நமக்குத் தண்ணீர் தருகின்றதாய் இருக்கின்றது என நாம் கண்டாலும், நாம் அவைகளை ஏற்காமல், கர்த்தர் இயேசுவிடமிருந்து வருவதையே ஏற்றுக்கொள்வோமாக.”