R4940 – மகா பெரிய தீர்க்கதரிசி

பொருளடக்கம்
இயேசுவின் ஊழியத்திற்கு முன்பு
R1915 - கிறிஸ்துவின் முன்னோடி
R 4939 - இராஜ்யத்திற்குரிய அயத்தங்கள்
R4940 - மகா பெரிய தீர்க்கதரிசி
R2408 - ஒவ்வொரு மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற மெய்யான ஒளி
R2555 - அந்த வார்த்தை மாம்சமாகி
R3700 - மகிமையான அறிவிப்பு
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3702 - நம்முடைய இராஜாவுக்கு அன்பளிப்புகள்
R1681 - எகிப்துக்கு தப்பி ஓடுதல்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2562 - யோவான்ஸ்நானனின் பிரசங்கம்
இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பம்
R2565 - அர்ப்பணிப்பைப் பின்தொடர்ந்த சோதனைகள்
R4112 - கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ணுதல்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R3484 - நிரப்பப்பட்டு மாற்றப்பட்டது
R1695 - இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்தல்
R4124 - மறுஜென்மகாலமும் இராஜ்யமும்
R4556 - கலிலேயாவின் தீர்க்கத்தரிசி
R2574 - மொண்டுகொள்ள பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே
R4130 - தாகத்துக்குத் தா
கலிலேயாவில் நடந்த இயேசுவின் மாபெரும் ஊழியம்
R2424 - விசுவாசத்திற்கான பலன் அளிக்கப்பட்டது
R3300 - போதகரும், அவருடைய செய்தியும் புறக்கணிக்கப்பட்டது
R3307 - மனுஷரைப் பிடிக்கிறவர்கள்
R3726 - வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூம்
R4979 - அவர் அவர்களுடைய வியாதிகளைச் சொஸ்தமாக்கினார்
R3728 - பாவமன்னிப்பு
R2590 - இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா
R3500 - இரக்கத்தின் வீடு
R2433 - இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகள்
R3752 - ஓய்வுநாளின் கடமைகளும், சிலாக்கியங்களும்
R1521 - பன்னிரண்டு அப்போஸ்தலர்கள்
R2585 - நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு
R2099 - உலகத்திற்கான உப்பும், உலகத்திற்கான வெளிச்சமும்
R3243 - உங்கள் நீதி
R4558 - உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிறதுபோல
R5021 - ஜெபம் ஒரு மாபெரும் சிலாக்கியமாகும்
R4566 - தகுதியான மற்றும் தகுதியில்லாத இலட்சியங்கள்
R2589 - ராஜரிகப் பிரமாணம்- பொன்னான சட்டம்
R3746 - நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்து, கவனியுங்கள்
R3754 - இயேசுவுக்குள் உயிர்த்தெழுதலின் வல்லமை
R2620 - நம்பிக்கை குலைந்துபோன தீர்க்கதரிசியினுடைய
R2623 - அறிவு, பொறுப்புகளை அதிகரிக்கின்றது
R2625 - இரண்டு விதமான பாவிகள்
R4608 - முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள்
R1937 - வார்த்தைகளில் நீதிமான் என்று தீர்க்கப்படுதல்; அல்லது வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுதல்
R943 - என் தாய் யார்? என் சகோதரர் யார்?
R4634 - நல்ல நிலத்திற்கான நல்ல விதைகள்
R4635 - கோதுமை மற்றும் களைகள்
R4636 - ராஜ்யத்தின் காட்சிகள்
R5047 - இராஜ்ஜியம் ஒரு பரிசு
R4577 - எதிராளியானவன் மீது வல்லமை /அதிகாரம்
R4588 - ஆசிர்வாதத்தின் கால்வாயாகிய விசுவாசம்
R2635 - அறுவடையோ மிகுதி வேலையாட்களோ குறைவு
R4593 - பரலோக ராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3779 - அவர் பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங்கொடுக்கிறார்
R4618 - ஆண்டவரே என்னை இரட்சியும் என்று பரிசுத்த பேதுரு கூப்பிட்டார்
R2651 - ஜீவ அப்பம் நானே
R611 - மாம்சம் மற்றும் இரத்தம்
R1710 - நித்திய ஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே
R5096 - தேவனுடைய வார்த்தைகளே தவிர, மனிதர்களுடையதல்ல
R3337 - கிறிஸ்து ஜீவனையும், அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்
R5103 - அவர் எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்
R5111 - வானத்திலிருந்து ஓர் அடையாளம்
R5120 - மாபெரும் கேள்வி
R1761 - மறுரூபம்
R5128 - எல்லாம் கூடும்
R2660 - இராஜ்யத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள்
R5134 - ஏழெழுபது தரம் மன்னித்தல்
R4701 - அக்கினியைக் கட்டளையிட உமக்குச் சித்தமா?
R5370 - அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவிப்பார்கள்
யூதேயாவில் நடந்திட்ட இயேசுவின் பின்நாள் ஊழியம்
R2437 - கூடாரப்பண்டிகையின் போது
R3508 - கூடாரப்பண்டிகை
R2438 - மெய்யாகவே விடுதலையாவீர்கள்
R4148 - நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்
R5362 - எழுபது ஊழியர்கள் நியமிக்கப்படுதல்
R3803 - எனக்கு பிறன் யார்?
HG80 - சிறந்த பங்கைத் தெரிந்துக்கொள்ளுதல்
R5377 - அந்தகாரத்தின் அதிபதி மற்றும் வெளிச்சத்தின் அதிபதி
R5389 - பரிசேயர்களே உங்களுக்கு ஐயோ!
R5390 - நல்ல அறிக்கை மற்றும் மோசமான அறிக்கை
R5396 - உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ
R3354 - எஜமானுக்கு காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாக
R748 - காவல் கோபுரத்தின் ஒரு கண்ணோட்டம்
R5405 - ஓய்வு நாளில் செய்யப்படக்கூடிய நியாயமானவைகள்
R4157 - மேய்ப்பன், வாசல், மந்தைகள்
R2441 - நல்ல மேய்ப்பன்-கிறிஸ்து
யோர்தானுடைய கிழக்குப் பகுதிகளில் உள்ள இயேசுவினுடைய பிந்தய ஊழியம்
R1951 - இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்
R3831 - பந்திக்கு முன்பாகவும் பின்பாகவும் சம்பாஷணைகள்
R2701 - ஏற்க மறுக்கப்பட்ட இராஜ விருந்து
R5425 - சீஷத்துவத்திற்கான விலை
R2706 - காணாமல் போனவர்களுக்கான தெய்வீக அக்கறை
R1459 - ஊதாரி மகனுடைய திரும்பி வருதல்
R2715 - அநீதியுள்ள உக்கிராணக்காரன்
R5444 - ஐசுவரியவான் நரகத்திற்கும்... ஏழை பரலோகத்திற்கும்
R5445 - நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர்
R4160 - நான் அவனை எழுப்பப்போகிறேன்
R5453 - ஒன்பது பேர் எங்கே?
R5455 - மேசியாவின் இராஜ்ஜியம் கண்ணுக்கு புலப்படாதது
R3841 - தாழ்மையுடன் இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள்
R4658 - ஒட்டகமும் ஊசியின் காதும்
R5473 - திராட்சைத்தோட்டத்தில் வேலைக்காரர்கள்
R4668 - பெரியவன் ஊழியக்காரன்
எருசலேமில் இயேசுவின் இறுதி ஊழியம்
R3534 - மிகவும் விலையேறப்பெற்ற தைலம்
R1794 - நமது கர்த்தருடைய நிழலான வெற்றி
R2757 - கிறிஸ்துவாகிய காந்தம் - நான் எல்லாரையும் இழுத்துக்கொள்ளுவேன்'
R4678 - தவறாய்ப் பயன்படுத்தப்பட்ட வாய்ப்புகள் எடுக்கப்பட்டன
R5510 - கலியான விருந்து
R4686 - சோதிக்கின்ற விதமான மூன்று கேள்விகள்
R5521 - பிரதான கற்பனைகள்
R3867 - புத்தியுள்ள மற்றும் புத்தியில்லா கண்ணீகைகள்
R2764 - அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக
R2606 - செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடு உவமை
R3363 - கடைசி இராபோஜனம்
R4711 - சுய /தன்நம்பிக்கை ஒரு பலவீனமாகும்
R2453 - நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்
R2455 - வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்
R3544 - மெய்யான திராட்சைச் செடி மற்றும் அதன் கனி
R4164 - வாக்களிக்கப்பட்ட பரிசுத்த ஆவி
R3551 - நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்
R5358 - கர்த்தருக்கு ஒத்தக்குணலட்சணத்தில் சாயல்
R2467 - கர்த்தர் காட்டி க்கொடுக்கப்பட்டார்
R2469 - மாபெரும் பிரதான ஆசாரியர் குற்றம் சாட்டப்பட்டார்
R5552 - உண்மையற்ற ஒரு பொருளாளரின் வீழ்ச்சி
R2470 - பிலாத்துவின் முன் நல்ல அறிக்கை
R1809 - பிலாத்துவுக்கு முன்பாக இயேசு
R1815 - கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார்
R3374 - இயேசுவினுடைய உயிர்த்தெழுதலின் முக்கியத்துவம்
R5587 - சபையின் ஏற்படுத்துதல்
R5588 - அவர் தாம் முன்னிருந்த இடத்திற்கு
R1415 - நமது கர்த்தருடைய பரமேறுதல்

R4940 (page 458)

மகா பெரிய தீர்க்கதரிசி

THE VERY GREATEST PROPHET

லூக்கா 1:57-80

“”இஸ்ரயேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக…தமது ஜனத்தை சந்தித்து, மீட்டுக்கொண்டு…” – லூக்கா 1:68,74

“”ஸ்திரீகளிடத்தில் பிறந்தவர்களில் யோவான் ஸ்நானனைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கத்தரிசி ஒருவனும் இல்லை. ஆகிலும் தேவனுடைய இராஜ்யத்தில் சிறியவனாய் இருக்கிறவன், அவனிலும் பெரியவனாய் இருக்கிறான்” என்று யோவான் ஸ்நானனைக் குறித்து இயேசு கூறினார் (லூக்கா 7:28). இந்த வார்த்தைகள் வரவிருக்கிற மேசியாவைக் குறித்தும், மீட்பரோடு அவருடைய ஆயிரவருட அரசாட்சியிலும், மகிமையிலும் பங்குக் கொள்வதற்கென ஓர் உண்மையுள்ள வகுப்பாரைப் பாவிகள் மத்தியிலிருந்து தெரிந்துக்கொள்ளும் மாபெரும் வேலையின் ஆரம்பத்தைக் குறித்தும், அறிவிக்கும் தீர்க்கத்தரிசிகளில், யோவானே கடைசியானவர் என்பதை நமக்கு காட்டுகின்றது. யோவான் ஸ்நானன் இராஜ்யத்தின் (ஆவிக்குரிய) வகுப்பாரில் ஒருவராக இருக்க முடியாது. மீட்பரின் பலிச் செலுத்தப்படுவதற்கு முன்பும், பெந்தெகொஸ்தேயின் ஆசீர்வாதங்கள் வந்து சிலரை இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்தில் அவரோடு உடன்சுதந்திரர்களாகும்படிக்கு ஏற்றுக்கொள்வதற்கு முன்பும், யோவான் ஸ்நானனின் மாபெரும் வேலை நிறைவேறி முடிந்துவிட்டது. யோவானே இவைகளைப் புரிந்துக்கொண்டிருந்தபடியால், “”மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அவர் அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக் குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்கு சம்பூரணமாயிற்று” என்று கூறினார் (யோவான் 3:29).

யோவான் – “தேவனுடைய தயவு”

காபிரியேல் தூதனின் தூது செய்திக்கு இசைவாக யோவான் ஸ்நானன் பிறந்தார். பிறந்த எட்டாம் நாளில் அவர் விருத்தசேதனம் பண்ணப்பட்டு, பெயரிடப்பட்டார். குடும்ப உறவினர்கள் குழந்தைக்கு தகப்பனுடைய பெயரைச் சூட்ட வேண்டும் என்று வலியுறுத்தியபோதும், குழந்தையின் தகப்பனும், தாயும் யோவான் என்றே பெயரிட்டார்கள். மேலும், உடனடியாகச் சகரியாவின் ஊமை நிலையும் மாறிவிட்டது. சகரியாவின் விசுவாசம் வலுவூட்டப்பட்டது. காபிரியேல் கூறிய பெயரைச் சகரியா கூறியதின் மூலம் தனது சகல சந்தேகங்களையும், தான் மேற்கொண்டுள்ளதை சகரியா வெளிப்படுத்தினார். யோவான் என்ற பெயர் அருமையான அர்த்தத்தைக் கொண்டுள்ளது; அதாவது “”தேவனுடைய தயவு” என்பதாகும்.

தேவனுடைய அபிஷேகம் பண்ணப்பட்டவரைக் குறித்து அறிவிக்கவும், மேசியா வெளிப்படும்போது கடுமையான சோதனைகளும், பரீட்சைகளும் ஏற்படும் என்று மல்கியா தீர்க்கத்தரிசி மூலம் அறிவிக்கப்பட்ட விஷயங்களுக்கு ஜனங்களை ஆயத்தமாக்கும் தேவனுடைய தூதனாய் இருக்கும் நோக்கம் தவிர, வேறு எவ்வித நோக்கமும் யோவான் கொண்டிராதது குறிப்பிடத்தக்கதாகும். மல்கியா தீர்க்கத்தரிசி கூறினது போல, மேசியா வெளிப்படும்போது, “”அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக் கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து… வெள்ளியைப் போலவும் புடமிடுவார்” (மல்கியா 3:3). ஆகையால்தான் யோவான் ஊழியம் புரிகையில், “” பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்றும், நற்செய்தியை நம்புங்கள் என்றும், மனந்திரும்புங்கள் என்றும், இராஜ்யத்தில் பங்கடையும் படிக்கு ஆயத்தமாகுங்கள் என்றும் அறிவித்தார்.

எதிர்ப்பார்க்காத வண்ணம் சோதனைகள் வந்தது. மேசியா பூமிக்குரிய ஆஸ்திகளுடையவராகவோ, பிரபலமானவராகவோ பிறக்கவில்லை. மேலும் மேசியாவின் அனுபவங்களும், போதனைகளும் நியாயப்பிரமாண வல்லுநர்கள் எதிர்ப்பார்த்த வண்ணமும் இருக்கவில்லை. இயேசுவின் காலக்கட்டத்தில் உள்ள மாய்மாலங்களையும், தப்பறைகளையும் இயேசு எதிர்த்த காரியம், சிலர் மேல் புடமிடும் நெருப்பின் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை நிஜமான லேவியர்களாக அதாவது, அர்ப்பணிக்கப்பட்ட ஜனங்களாக மாற்றிவிட்டது. அவர்களில் அநேகர் நிஜமான ஆசாரியர்களாக மாறி, மீட்பரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி நடந்து தங்களுடைய சரீரங்களை ஜீவப்பலியாக ஒப்புக்கொடுத்தார்கள்.

சகரியாவின் தீர்க்கத்தரிசனம்

“”தீர்க்கத்தரிசனமானது, தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டுப் பேசினார்கள்” என்று பழைய ஏற்பாட்டின் காலத்தில் வாழ்ந்த தீர்க்கத்தரிசிகளைக் குறித்துப் பரிசுத்தவானாகிய பேதுரு நமக்கு தெளிவாகக் கூறுகின்றார். மேலும் தீர்க்கத்தரிசிகள், தங்களால் கொஞ்சமாகப் புரிந்துக்கொள்ளப்பட்டதும், எதிர்க்காலத்தில் மாத்திரமே முழுமையாக வெளிப்படுகிறதுமான ஆழமான சத்தியங்களைக் கூறினார்கள் என்பதையும், பரிசுத்த பேதுரு குறிப்பிடுகின்றார். சகரியாவின் தீர்க்கத்தரிசனத்திலும் இது உண்மையே. “”இஸ்ரயேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி, உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும், நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கத்தரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே, தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும் படிக்கு, தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக்கொம்பை ஏற்படுத்தினார். நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கத்தரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய். அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்” (லூக்கா 1:68-80). 73 முதல் 75 வரையிலான வசனப்பகுதி, இத்தீர்க்கத்தரிசனத்தின் முதல் பகுதியாகும். நிறைவேறப் போகிற விஷயங்கள் நிறைவேறி விட்டது போன்ற பாணியில் இங்குத் தீர்க்கத்தரிசனத்தில் கூறப்பட்டுள்ளது. யோவான் ஸ்நானன் இயேசுவுக்கு ஆறு மாதம் முன்னதாகவே பிறந்துவிடுவதால், இந்தத் தீர்க்கத்தரிசனம் உரைக்கப்பட்ட காலத்தில் இயேசு ஏற்கெனவே கர்ப்பத்தில் உருவாகிவிட்டார் என்பதை நாம் அறிந்துக்கொள்கின்றோம். ஆரம்பித்துள்ள விஷயங்கள் இன்னும் நிறைவேறித் தீரவில்லை என்றபோதிலும், நிறைவேறிவிட்டது போன்ற பாணியில் பரிசுத்த ஆவியானது, இங்குக் கூறுகின்றது. அதாவது, “”அவர் தமது ஜனத்தை சந்தித்து மீட்டுக் கொண்டு” என்பதாகும். இங்கு வரும் மீட்பு என்ற வார்த்தையானது, இயேசு ஞானஸ்நானத்தில் தம்முடைய ஜீவனை அர்ப்பணித்தது முதல் கல்வாரியில் தமது பலியை நிறைவேற்றியது வரையிலான மீட்பின் வேலையை மாத்திரம் உள்ளடக்காமல், மனுக்குலத்தை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டுவரும் முழு வேலையையும் கூட உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது.

இந்தச் சுவிசேஷ யுகத்தில் நம்முடைய இனத்திலிருந்து ஒரு சிறு வகுப்பார் தெரிந்துக்கொள்ளப்பட்டுச் சீர்த்திருத்தப்பட்டுள்ளனர். ஆனால், மேசியாவின் ஆயிரவருட அரசாட்சி முழுவதுமே, ஆதாமும் அவருடைய சந்ததியும் தங்களுக்கு முன் வைக்கப்படும் தெய்வீகக் கிருபையை ஏற்க மனதாய் இருக்கும் பட்சத்தில் அவர்கள் பாவம் மற்றும் மரணத்தின் பிடியிலிருந்து/வல்லமையிலிருந்து மீட்டுக் கொண்டுவருவதற்கே பயன்படுத்தப்படும் என்று வேதவாக்கியங்கள் நமக்கு உறுதியளிக்கின்றது. ஆகவே, கர்த்தர் நீண்ட காலத்திற்கு முன்பு [R4940 : page 459] வாக்களித்துள்ள மகா பெரும் ஆசீர்வாதங்கள் ஆரம்பிக்கும் காலம் அப்போது வந்துவிட்டதால் கர்த்தரைத் துதிப்பதே, (சகரியாவின்) தீர்க்கத்தரிசனத்தின் முதலாம் பாகத்தினுடைய முக்கியத்துவமாகும்.

சத்துருக்களிடமிருந்து விடுதலை

தீர்க்கத்தரிசனத்தின் இரண்டாம் பாகம் 69,70,71,72,74-பிற்பகுதி ஆகிய வசனங்களில் காணப்படுகின்றது. இது தேவனுடைய ஜனங்கள் தங்களுடைய சத்துருக்களின் வல்லமையினின்று விடுவிக்கப்படுவதைக் குறிக்கின்றது. இங்கு மற்றவர்கள் அல்ல, தேவனுடைய ஜனங்களே சத்துருக்களிடமிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று வரும் கருத்து முக்கியமானது. வேண்டும் என்றே செய்யாமல் விழுந்துபோன மாம்சத்தின் இச்சை, ஐஸ்வரியத்தின் மயக்கம், இவ்வுலகத்தின் அதிபதியானவன் குருடாக்கி வைத்த நிலை போன்ற காரணங்களினால் பொல்லாங்குச் செய்கிற அநேகர் சத்துருக்களாக இன்று போல், கடந்த காலங்களிலும் இருந்துள்ளனர்.

மேசியாவின் ஆயிரவருட அரசாட்சியில் குருடாக்கப்பட்ட சகல கண்களும் திறக்கப்படும்போதும், செவிடாக்கப்பட்ட சகல காதுகளும் திறக்கப்படும்போதும், தேவனுடைய குணலட்சணங்களின் மகிமை குறித்ததான அறிவு தெளிவாக வெளிப்படுத்தப்படும்போதும், பாவத்தின் அகோரம் முழுமையாக வெளிப்படுத்தப்படும்போதும் இப்பொழுது சாத்தானின் விருப்பப்படி அடிமையாக்கப்பட்டவர்கள், இம்மானுயேலுக்கு முன்பாக முழங்காலிட்டு தேவனுக்கு மகிமை சேர்ப்பார்கள். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், தற்போதைய காலக்கட்டத்தில் இயேசுவின் அர்ப்பணிக்கப்பட்டுள்ள பின்னடியார்களே “”சிறுமந்தையாக” இருக்கின்றார்கள்; ஆனால், அவருடைய மகிமையான ஆளுகையின்போது, அவர் மற்றொரு மந்தையைச் சேர்த்துக் கொள்வார். “”இந்த தொழுவத்திலுள்ளவைகள் அல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவர வேண்டும்” என்று இயேசு கூறியுள்ளார் (யோவான் 10:16).

“”ஒரே (தொழுவமும்) மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும்” என்ற வார்த்தைகள் தொழுவத்திலுள்ள ஆடுகள் அனைத்தும் ஒரே சுபாவத்தில்தான் இருக்கும் என்று பொருள் படுவதில்லை. மாறாக பரலோகத்திலும், பூமியிலும் உள்ள சகலமும், இறுதியில் ஒரே தலையின் (மேய்ப்பனின்) கீழ்க் கொண்டுவருவதே தேவனுடைய திட்டமாக இருக்கின்றது என்று அப்போஸ்தலர் நமக்குக் கூறுகின்றார் (எபேசியர் 1:9). இந்தச் “”சகலமும்” என்பதில் மணவாட்டியாகிய சபை பிரதானமானவர்களாய், அதாவது திவ்வியச் சுபாவம் எனும் தளத்தில் காணப்படுவார்கள். இவர்களுக்கடுத்த வரிசையில், திரள் கூட்டத்தினரும், சேராபீன்களும், தேவதூதர்களும் வருவார்கள். மேலும் மீட்கப்பட்டு, மனுஷீகப் பூரணத்திற்குச் சீர்ப்பொருத்தப்பட்ட மனுக்குலம் தெய்வீகத் தொழுவத்தினுடைய கடைசி வரிசையில் இடம்பெறுவார்கள்.

கடைசியில் சகல தேவனுடைய ஜனங்களும் விடுவிக்கப்படும் சத்துருக்களைக் குறித்துப் பரிசுத்தவானாகிய பவுல் நமக்குக் கூறுகின்றார். சாத்தான் ஒரு சத்துரு ஆவார்; இவர் ஆயிரம் வருஷமளவும் கட்டி வைக்கப்பட்டு இறுதியில் அழிக்கப்படுவார். பாவமாகிய சத்துருவும், மேசியாவின் இராஜ்யத்தில் பல்வேறு கட்டங்களில் வெளியேற்றப்படும். “”பரிகரிக்கப்படும் கடைசி சத்துரு மரணம்” [R4941 : page 459] என்று நாம் வாசிக்கின்றோம். மரணம் கல்லறைக்குப் போகும். பிற்பாடு ஆதாமின் மரணம் என்ற ஒன்று இருப்பதில்லை. அதன் வல்லமையின் கீழ் எவரும் இருப்பதும் இல்லை. உயிர்த்தெழுதலின் வல்லமையானது அனைவரையும் விடுவித்துவிடும். வேண்டுமென்றும், துணிந்தும் பாவம் செய்கிறவர்களே இரண்டாம் மரணத்துக்கும் செல்வார்கள். இரண்டாம் மரணம் ஒரு சத்துரு அல்ல.

ஆயத்த வேலைகள்

இந்தத் தீர்க்கத்தரிசனத்தின் மூன்றாம் பாகமானது, சகல சத்துருக்கள் அழிக்கப்படுவதற்கு முன்பும், தகுதியுடையவர்கள் எனக் கருதப்பட்டவர்கள் தேவனுடைய புத்திரர்களாக உயர்த்தப்படுவதற்கு முன்பும், நிறைவேற்றப்பட வேண்டிய ஒரு வேலையைக் குறித்து நமக்குக் கூறுகின்றது. இது லூக்கா 1:76-79 வரையிலான வசனங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வசனங்கள் யோவான் ஸ்நானன் எவ்வாறு கர்த்தருடைய விசேஷித்த ஊழியக்காரனாகிய இயேசுவின் முன்னோடியாக இருப்பார் என்றும், எப்படி இயேசுவின் மாபெரும் வேலைக்கு வழியைச் செம்மையாக்குவார் என்றும் கூறுகின்றது. தேவனுடைய ஜனங்களாக ஏற்கெனவே காணப்படும் ஆயிரக்கணக்கானவர்களுக்கு, இரட்சிப்புப் பற்றின அறிவை வழங்குவதும், அத்தகையவர்களுக்கு இந்த யுகத்திற்கான “”பரம அழைப்பை” காட்டுவதுமே, இயேசுவின் மாபெரும் வேலையாகும். ஆகவே மேசியாவின் யுகத்தில், நீதியின் சூரியனானது மனுக்குலத்தின் மீதான இருளை அகற்றப் போவதற்கு முன்பு, சபை இப்பொழுது தேவனுடைய தயவினால் “”விடிவெள்ளி நட்சத்திரத்தை” கண்டு, அதனால் வெளிச்சமூட்டப்பட்டுள்ளனர். தற்காலத்திலுள்ள இந்தக் குறைவான வெளிச்சம்/சிறு வெளிச்சமானது, பரிசுத்தமாக்கும் வல்லமையுடன் விசுவாசிகளின் இருதயத்திற்குள் பிரகாசித்து, அவர்களுக்குள் ஏற்படுத்தும் சத்தியத்தின் பேரிலான பக்தி வைராக்கியம் எனும் நெருப்பை, பற்றி எரிய வைக்கின்றது. இவர்கள் தங்களிடத்தில் உள்ள இந்த ஒளியை மரணத்தின் நிழலின் கீழ் இருப்பவர்கள் மேல் பிரகாசிக்கின்றனர். புதிய யுகம் வருவதற்கு முன்பு வரையிலும், துன்பத்தின் காலத்தில் பரிசுத்தவான்கள் காணப்படுகையில், அவர்களுடைய பாதங்கள் இந்த “”விடிவெள்ளியினால்” சமாதானத்தின் பாதையிலேயே வழி நடத்தப்படுகின்றது.