R5905 (page 163)
“பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள்.”” (கொலோசெயர் 3:2)
நம்மால் பகுத்தறியவோ அல்லது விவரிக்கவோ முடியாதபோதிலும், மனுக்குலத்தினுடைய இயல்பான அமைப்பியலில், நம் அனைவராலும் மனதினுடைய சீர்க்குலைவு என்று அடையாளம் கண்டுகொள்ளப்படும் ஒருவகையான மனப்பாங்கு காணப்படுகின்றது. நாம் மனுஷர்களாகவும், ஸ்திரீகளாகவும் காணப்படுவதினால் நமக்கு மற்றச் சிருஷ்டிகள்மீது, மற்றப் பொருட்கள்மீது ஈர்க்கப்படும் நாட்டத்தின் சில ஈர்ப்புகள், சில ஆற்றல்கள் காணப்படுகின்றன; அவைகள் எதன்மீது ஈர்க்கப்படுகின்றது என்பதைப் பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமான காரியமாகும்; இல்லையேல் அவை விக்கிரக ஆராதனைக்கு வழிநடத்திவிடும். திராட்சச்செடியின் சிறு கொடிகள் அதன் அருகில் உள்ள எதன்மேலும் படர்ந்து பற்றிக்கொண்டிருப்பது போன்று, நம்முடைய ஆர்வங்களும் / நாட்டங்களும் பல்வேறு பூமிக்குரிய காரியங்கள்மீது பற்றிக்கொள்கின்றன் மேலும் எப்படித் திராட்சக்கொடிகளுக்கு அவசியப்படுகின்றதோ, அப்படியே நம்முடைய நாட்டங்களும்கூடக் கிள்ளிவிடப்பட வேண்டும் மற்றும் பயிற்றுவிக்கப்பட வேண்டும். உங்கள் திராட்சச்செடியை ஒரு குறிப்பிட்ட திசையில் வளர்த்திட நீங்கள் விரும்புவீர்களானால், அதை நீங்கள் சரியான திசையில் திருப்பிவிடுவீர்கள்; தேவைப்பட்டால் கட்டிவைப்பீர்கள் மற்றும் அதன் தளிர் இலைகள் சரியான கம்புகளைப் பற்றிக்கொள்ளத்தக்கதாகப் பார்த்துக்கொள்வீர்கள்.
இப்படியாகவே நம் ஒவ்வொருவரின் விஷயத்திலும் காணப்படுகின்றது. இந்த நாட்டங்கள் தகுதியானவைகளாகவும், நல்லவைகளாகவும் இருக்கின்றன; ஆனால் அவைகள் வழிகாட்டப்பட வேண்டும், பயிற்றுவிக்கப்பட வேண்டும். ஒருவேளை இந்த நாட்டங்கள் நமக்கு இல்லையெனில், நம்மால் தேவனை அன்புகூரமுடியாது. சமச்சீரான குணலட்சண நிலைமையினை அடைவதற்கு நமக்கு அவை அவசியமாகும். இந்த நாட்டங்கள் இல்லையெனில் நம்மால் ஒன்றிணைந்து வாழமுடியாது. ஒரு பெண்மணி தனது பாசத்தினை / நாட்டத்தினை ஒரு சிறு நாய்க்குட்டியின்மீது பெற்றிருந்து, அதற்கு அதிக நேரம் செலவிடுவதையும், அதிக கவனம் அதன்மீது செலுத்துகிறதையும், தெரிவுசெய்து கவனமாய் உணவுகொடுக்கிறதையும் நாம் காண்கையில், நாட்டங்களுக்கான சரியான வழிகாட்டுதலின் அவசியத்தினைக் காணலாம். சில ஐசுவரியவான்கள் பூடில்வகை நாய்கள்மீதும், புல்வகை நாய்கள்மீதும், வேட்டை நாய்கள்மீதும் அல்லது அங்கோரா பூனைகள்மீதும் தங்கள் நாட்டத்தினைப் பெற்றிருக்கின்றனர். சிலர் கேனரி பறவைகள், முயல்கள், வெள்ளை எலிகள் முதலானவைகளைச் செல்லப் பிராணியாக வைத்துக்கொள்கின்றனர். இவர்கள் மற்ற விதங்களில் சிறப்பாய்ச் செலவிடப்பட வேண்டிய மிகவும் விலையேறப்பெற்ற நேரத்தையும், சிந்தனையையும், பராமரிப்பையும் இந்தச் செல்லப்பிராணிகளுக்காய்க் கொடுக்கின்றனர் . . . ஏதோ அப்பிராணிகளைக் குழந்தைகள்போன்று பெரும்பாலும் நடத்துகின்றனர் மற்றும் ஏதோ அவைகளை மனுஷர்போன்று நினைத்து, [R5906 : page 163] அவைகள்மீது அதிகப்படியான பாசத்தினைக் குவிக்கின்றனர். சிலர் இப்படியாக மலர்களிடம் செய்கின்றனர்.
வாய்ப்பேசாத பிராணிகள்மீது எங்களுக்கு அன்பான உணர்வுகள் இருக்கின்றபோதிலும்… மலர்களை நாங்கள் வெகுவாய் இரசிக்கின்றபோதிலும்… கர்த்தருடைய ஜனங்களாகிய நாம் இவைகளில் எதையும், ஏதோ அவைகளை மனித ஜீவிகள்போன்ற விதத்தில் நடத்திடக்கூடாது என்றும், நமக்குப் பாதகமான விதத்திலும், மிகவும் முக்கியமான காரியங்களைப் புறக்கணித்துவிடும் விதத்திலும் அவைகள்மீது நாம் நாட்டம் வைத்திடக்கூடாது என்றும் நாங்கள் கருத்துப் பெற்றிருக்கின்றோம். பராமரிக்கப்படுவதற்கு அநேகம் பிள்ளைகள் இருக்கின்றனர்; மற்றும் இவர்களுடைய இடத்தில் நாம் மலர்களை, நாய்களை, விளையாட்டுப்பொருட்களை வைத்துவிடக்கூடாது. இவைகளை எல்லாம் நம்முடைய சந்தோஷத்திற்காகக் கொடுத்த நமது பரம பிதா எவ்வளவு நல்லவர் என்று நாம் சிந்திப்பது சரியே எனினும் அவைகள்மீது நமது நாட்டங்களை வைத்துவிடாதளவுக்கும், அவைகளுக்கு நம்முடைய இருதயங்களில் மிக அதிகமான இடம்கொடுத்துவிடாதளவுக்கும் நாம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். இப்படி ஜனங்கள் எங்கு இடம் கொடுத்துவிடுவார்களோ, அங்கு விலையேறப்பெற்ற ஏதோ ஒன்றினை அவர்களுடைய ஜீவியங்களில் அவர்கள் தொலைத்திருப்பார்கள். ஒருவேளை இப்படிச் செய்பவர்கள் வளர்ந்தவர்களாய் இருப்பார்களானால், இவர்கள் தங்கள் அன்பினை நாய்கள், பூனைகள் மீது வைத்து, அவைகளுக்காக விலையேறப்பெற்ற நேரத்தினை வீணடிப்பதற்குப் பதிலாக, இவர்கள் பிள்ளைகள் பெற்றுக்கொள்வது நலமாயிருக்கும்.
மனுக்குலத்தின் உலகத்தை நாம் பார்க்கையில் சிலர் மற்றச் சிலரைக்காட்டிலும் சீரான மனநிலை உடையவர்களாய் இருக்கின்றனர் என்பதை நாம் காண்கின்றோம். நாங்கள் உலகத்திற்காக அனுதாபம்கொள்கின்றோம்; ஏனெனில் பெரும்பாலானோர் கர்த்தரை அறியார்கள். அவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. அவர்களில் அநேகர் ஏழைகளாகவும், தங்கள் இருதயங்களை நிரப்பிடுவதற்கும், தங்கள் மனதின் எல்லையை விரிவாக்கிடுவதற்கும், மனதினைப் பிரகாசிப்பிப்பதற்கும் கொஞ்சமே உள்ள, பற்றாக்குறைவுள்ள ஜீவியமே ஜீவிப்பவர்களாகவும் இருக்கின்றனர். செல்லப்பிராணிகளுடன் கொஞ்சம் நேரம் செலவிடுபவர்கள் அல்லது இவைகளுடன் நேரம் செலவிடாதவர்கள் – தங்கள் நாட்டங்களையும், எண்ணங்களையும் வீட்டின்மீது பெற்றிருக்கின்றனர். “”எனக்கென்று நல்லதொரு வீடு உள்ளது”” என்று கூறுவதில் இவர்கள் பெரும் மகிழ்ச்சிக்கொள்கின்றனர். வீட்டிற்கான இந்த ஏக்கம் என்பது மனித ஜீவிகளுக்கு இயல்பான ஓர் ஆசைதான். இந்த இயல்பான பண்பினை மண்டையோட்டின் வெளி அமைப்புமூலம் ஒருவருடைய பண்புகளை ஆராயும் நிபுணர்கள் / phrenologists… குடியிருப்பிற்கான ஆசை என்கின்றனர். ஆனால் இதன்மீதுகூட நம்முடைய நாட்டங்களை நாம் மையங்கொள்ளச் செய்திடக்கூடாது. தேவனுடைய பிள்ளைகளாயிருக்கும் நாம் உலகம்கொண்டிருப்பதைக் காட்டிலும் மிக மேலான இலட்சியங்களைக்கொண்டிருக்க வேண்டும்.
வங்கிக்கணக்கில் அதிகமான பணம் வைத்திருக்க வேண்டும் என்று அநேகர் தங்களுடைய இருதயங்களில் இலட்சியம்கொண்டிருக்கின்றனர். வங்கிக்கணக்கில் கணிசமாகப் பணம் காணப்படத்தக்கதாக எதையும் செய்துவிடும் அளவுக்குச் சீரற்ற மனநிலையினை உடைய ஜனங்களை நாம் அறிந்தவர்களாய் இருக்கின்றோம். இந்த இலட்சியம் நிறைவேறினாலும், அவர்கள் இன்னும் திருப்தியடைகிறதில்லை. தங்கள் ஆசையைப் பூர்த்திச் செய்யும்வண்ணமாய் இவர்கள் தொடர்ந்து பணத்தைப் பெருக்கிக்கொண்டே இருப்பார்கள் மற்றும் இதற்காக நேர்மையற்ற முறைகளையும் கையாளுவார்கள். இத்தகையவர்கள் மனரீதியிலும், ஒழுக்க ரீதியிலும் ஒழுங்கற்றவர்களாய் / தாறுமாறானவர்களாய் இருப்பார்கள். மனிதக் குடும்பமானது, விழுந்துபோன நிலைமையில் ஏறக்குறைய ஒழுங்கற்ற நிலையிலேயே இருப்பார்கள் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். முற்றும் முழுமையான மற்றும் தீவிரமான சீர்த்திருத்தமே இவ்விடர்பாட்டினை மாற்றிட முடியும். முழு மனித சந்ததியையும் பாதித்துள்ள நோயினைக் கர்த்தரினால் மாத்திரமே குணப்படுத்திட முடியும்.
சரியாய்ப் பயிற்றுவிக்கப்பட்டு, வழிகாட்டப்படவில்லையெனில் மிகவும் அபாயகரமாகிவிடும் என்று நாம் மேலே பட்டியலிட்டவைகளைக் காட்டிலும், இன்னும் மேலான அன்புகள் / நாட்டங்கள் காணப்படுகின்றன. அவை மனுஷன் ஸ்திரீக்காகவும், ஸ்திரீ மனுஷனுக்காகவும், மனுஷன் மனுஷனுக்காகவும், ஸ்திரீ ஸ்திரீக்காகவும் கொண்டிருக்கும் அன்புகள் / நாட்டங்கள் ஆகும். இவை அனைத்தும் தகுதியானவைகளே ஆனாலும் நாம் அளவுக்கு மீறின நாட்டங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் மற்றும் சாதாரண – அதாவது நியாயமான, தகுதியான / உரிய நாட்டங்களை / அன்புகளை மாத்திரமே பெற்றிருக்க வேண்டும். மிதமிஞ்சி செல்லாதபடிக்கு நாம் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும். தேவன் தம்முடைய வார்த்தைகளில் தம்முடைய பிள்ளைகளுக்கான முறையான நடக்கைக்குரிய வரையறைகளைக் கொடுத்திருக்கின்றார் மற்றும் இவைகளை நாம் அவரது வழிகாட்டுதல்களைக் கற்கும்போது மாத்திரமே அறிந்துகொள்ள முடியும். இல்லையேல் நிச்சயமாய் நாம் தவறான வழிமுறையைப் பின்பற்றிடுவோம். “”பூமியிலுள்ளவைகள்மேல் அன்புகூராதிருங்கள்.””
கணவன்மார்களும், மனைவிமார்களும்கூட ஒருவர் ஒருவரின்மீது மிக அதிகமாய்த் தங்கள் நாட்டங்களை/ பற்றாசைகளை வைத்துக்கொள்ளக்கூடாது என்பது தேவ ஏற்பாடாய் இருக்கின்றது. ஆகையாலே அப்போஸ்தலனாகிய பவுல்: “”இனி வரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும் இருக்க வேண்டும்”” என்கிறார் (1 கொரிந்தியர் 7:29). நாம் நமது பூமிக்குரிய உறவுகளை அனைத்திலும் சிறந்ததெனவும், உயர்ந்ததெனவும் கருதிடக்கூடாது என்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜீவியத்தின் சோதனைகள் மற்றும் பிரச்சனைகளில் ஒருவர் இன்னொருவருடைய ஆதரவைப் பெற்றிருப்பது பெரிய காரியமே. இந்தப் பாக்கியமான (விவாக) பந்தத்தினைப் பெலவீனப்படுத்திவிடும் எதையும் சொல்லிவிடுவதற்கு நாங்கள் விரும்புகிறதில்லை. ஆனாலும் அது தேவ வசனத்திற்கு இசைவாகவும், தேவ வசனம் பற்றின அறிவின்படியும் காணப்பட வேண்டும். அது எவ்விதத்திலும் பரலோக ஓட்டப்பந்தயத்தில் நாம் வெற்றிகரமாய் ஓடிடுவதற்குத் தடையாய் இருக்கத்தக்கதாக நாம் அனுமதித்துவிடக்கூடாது. அது பிதாவின் முகத்தையும், அங்கீகரிப்பையும் நமக்கு மறைத்திடும் பூமிக்குரிய மேகத் திரையாகிடக்கூடாது.