R2590 – “இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்”

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2590 (page 77)

"இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''

JESUS SAID UNTO HIM, FOLLOW ME

“மாற்கு 2:13-22

நமது கர்த்தர் பிரசங்கித்தும், நோய்களையும் சொஸ்தப்படுத்தியும் கொண்டிருந்த கப்பர்நகூம் பட்டணமானது, கலிலேயா கடலுக்கு அருகாமையில் காணப்பட்டது. இப்பட்டணமானது, வாணிபத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்பட்டது, விசேஷமாக மீன் தொழிலுக்குப் பேர்ப் பெற்றதாய்க் காணப்பட்டது. மேலும் இப்பட்டணத்தில் காணப்பட்ட இந்தக் கடற்கரையும் பேர்ப் பெற்றதாய் இருந்தது. நமது கர்த்தர் இக்கடற்கரையின் வழியாகத்தான் நடந்து போவதும், தாம் பேசுவதைக் கேட்கும்படிக்குக் குவிந்துக் காணப்படும் ஜனங்களுக்குப் பிரசங்கிக்கும்படி இக்கடற்கரையில் இங்கும், அங்குமாய் உட்காருவதும் வழக்கமாய்க் காணப்பட்டது. இப்படியாக அவர் பிரயாணித்துக் கொண்டிருக்கும் போதுதான், கர்த்தர் லேவி என்று அழைக்கப்படும் மத்தேயுவைக் கடந்து போனார்; இந்த மத்தேயு, ரோம அரசாங்கத்திற்குரிய சுங்கவரி துறையில் பிரதிநிதியாக இருந்தார், அதாவது வருவாய்த்துறை அதிகாரியாக மத்தேயு பணியாற்றிக் கொண்டிருந்தார்; இவரை நோக்கி, கர்த்தர், “”எனக்குப் பின்சென்று வா” என்று அழைக்க, இவரும் சீஷன் ஆகுவதற்கான அழைப்பிற்குக் கீழ்ப்படிந்தார்.

இச்சம்பவம் தொடர்பான பதிவுகள் சுருக்கமாக இருப்பதினால், சிலர் இந்த லேவி (மத்தேயு) இச்சம்பவத்திற்கு முன்பு வரையிலும் இயேசுவைக் குறித்துக் கேள்விப்பட்டதே இல்லை என்றும், நமது கர்த்தர், மத்தேயுவைக் கடந்து போனபோது, அவர், மத்தேயுவின் மேல் ஏதோ ஒருவிதமான மந்திரத்தைப் பயன்படுத்தினார் என்றும், இதன் காரணமாகவே மத்தேயு, புத்தித் திடீரென மழுங்கி [R2591 : page 77] போனது போன்று, திடீரென தனது தொழிலை விட்டு விட்டுப் போய்விட்டார் என்றும் தவறான கருத்துகள் கொண்டுள்ளனர். கர்த்தரைப் பற்றியும், அவருடைய சீஷர்கள் பற்றியும், இப்பகுதியில் இருந்தவர்கள் வருடக் கணக்காக நன்கு அறிந்திருந்தார்கள் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும்; அநேகமாக மத்தேயு நமது கர்த்தரை அறிந்துக் கொண்டிருந்தது மாத்திரமல்லாமல், அவர்தான் மேசியா என்று விசுவாசமும் வைத்திருக்க வேண்டும். ஆனால் இத்தருணத்தின் போதுதான், இயேசு இவரைத் தம்முடைய சீஷர்களில் ஒருவராக ஆகும்படிக்கு அழைத்தார். நமது கர்த்தருடைய பிரசங்கங்களை மீண்டும், மீண்டுமாக கேட்டவர்களில் அநேகர் அவருடைய நண்பர்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அனைவரும்இந்தப் பன்னிரெண்டு நபர்களைப் போன்று அவருடைய விசேஷித்த பின்னடியார்களாகவும், கூட்டாளிகளாகவும், சுவிசேஷத்தின் ஊழியத்தில் துணையாளர்களாகவும்/பங்காளிகளாகவும் அழைக்கப்படவில்லை.

மத்தேயு, வரிப்பணம் வைத்திருந்த மேஜைகளைத் திறந்த நிலையிலும், மற்றும் ஆண்டவரைப் பின்பற்றுவதற்காக, ரோம அரசாங்கத்துடன் தனக்கு இருக்கும் பணக்கணக்குகளைச் சரியாக ஒப்படைக்காத நிலையிலும், உடனே எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டுப் போய்விட்டார் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. மாறாக மத்தேயு தன்னிடத்திலுள்ள அனைத்துக் கணக்குகளை ஒப்படைப்பதற்கும், அப்போஸ்தலனாகும்படிக்குத் தனக்கு விடுக்கப்பட்ட அழைப்பிற்கு இணங்கி செயலில் இறங்குவதற்கும் சில நாட்கள், அநேகமாக சில வாரங்கள் கூட எடுக்கப்பட்டிருக்கலாம் என்றே நாம் அனுமானிக்கின்றோம். பல வருடங்களுக்குரிய வரலாறுகளும், பல பிரசங்கங்களும், சம்பாஷணைகளும், பல சம்பவங்களும், மிகச் சுருக்கமாக சுவிசேஷ பதிவுகளில் பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ளதை நாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கர்த்தரால், சீமோன் என்ற பெயர், பேதுருவாக மாற்றப்பட்டது போன்று, லேவி என்ற பெயரும், மத்தேயுவாக மாற்றப்பட்டிருக்க வேண்டும்; மத்தேயு எனும் பெயருடைய அர்த்தம், “”தேவனுடைய அன்பளிப்பு”/ஈவு (Gift of God) ஆகும். மத்தேயு ஓர் ஆயக்காரனாய் இருந்தார், அதவாது வரிகளை வாங்கும் நபர் ஆவார். “”ஆயக்காரன்” என்ற வார்த்தையும், இப்பணியும், யூதர்களால் மிகவும் வெறுக்கப்பட்ட விஷயமாகும். யூதர்கள் விருப்பமின்றி, ரோமர்களின் வரி செலுத்துவதற்கான விதிமுறைகளுக்கு இணங்கி, வரி செலுத்தினார்கள். ஆயக்காரர்கள் தேசப்பற்று இல்லாதவர்கள் என்று கருதப்பட்டார்கள்; மேலும் இவர்கள் அந்நிய (ரோம) அரசாங்கம் அளிக்கும் பணியை ஏற்றுக்கொண்டு, அநீதியான விதத்தில் வரி வசூலிப்பதற்கு உதவும்படி இவர்கள் தங்கள் நாடு மற்றும் ஜனங்கள் பற்றின அறிவை ரோமர்களுக்கு ஆதாயமாய்ப் பயன்படுத்தினதால் இவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கே உண்மையற்றுப் போனவர்கள் என்றும் கருதப்பட்டார்கள். வரி வசூலிக்கும் பணியானது, நேர்மையற்று இருப்பதற்கும், இலஞ்சம் வாங்குவதற்கும், கொள்ளையடிப்பதற்கும் அநேக வாய்ப்புகளை அருளக்கூடியது என்று நம்மால் எளிதில் உணர முடிகின்றது. ஆனால் அதற்கென்று லேவியும் நேர்மையற்ற ஆயக்காரர்களில் ஒருவன் என்று நாம் ஒரு கணம் கூட எண்ணிவிடக் கூடாது, ஏனெனில் லேவி, நேர்மையற்ற ஆயக்காரர்களில் ஒருவராக இருப்பாரானால், அவர் அப்போஸ்தலன் ஆகும்படிக்கும் அழைக்கப்பட்டிருந்திருக்க மாட்டார்; இன்னுமாக ஒருவேளை அழைக்கப்பட்டாலும், அழைப்புக்குச் செவிசாய்த்திருக்க மாட்டார், காரணம், “”இயேசுவை அனுப்பின பிதா, ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால், அவன் இயேசுவினிடத்தில் வரமாட்டான்” என்று எழுதியிருப்பதை நாம் மறந்து விடக்கூடாது (யோவான் 6:44).

“அர்ப்பணிக்கப்பட்ட இல்லம் கனப்படுத்தப்பட்டது”

மத்தேயு செல்வாக்குடைய மனுஷனாய் இருந்தார்; அவர் கர்த்தருடைய அழைப்பை ஏற்றுக்கொண்டு தன்னையும், தனக்குள்ள யாவற்றையும் அர்ப்பணித்ததின் மூலம் அவ்வழைப்புக்குச் செவிச்சாய்த்து, மற்றவர்களை, இரட்சகரிடம் இழுக்கத்தக்கதாக, தனது செல்வாக்கைப் பயன்படுத்த முடிவெடுத்தார். மற்றவர்களை ஆதாயப்படுத்தத்தக்கதாக, தான் எவ்வாறு இரட்சகரிடத்தில் ஈடுபாடு அடைந்தார் என்பதைப் பறைசாற்ற முடிவெடுத்தார். இந்நோக்கத்தை முன்னிட்டு, மத்தேயு தனது வீட்டில், கர்த்தருக்கும், அவருடைய சீஷர்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்பண்ணினார்; மேலும் இவ்விருந்தில் தன்னுடைய நண்பர்கள் மற்றும் தொழில் ரீதியிலான கூட்டாளிகள் பலருக்கு மத்தேயு அழைப்புக் கொடுத்திருந்தார். இந்த அவருடைய நண்பர்கள், நம்முடைய பாடத்தில் “”அநேக ஆயக்காரர் மற்றும் பாவிகள்” என்று அழைக்கப்படுகின்றனர் (மாற்கு 2:15).

பரிசேயர்களும், வேதபாரகர்களும், ஆயக்காரர்களைச் சமுதாயத்திலிருந்து விலக்கப்பட்டவர்களாக கருதுவதற்கான காரணம், அவர்கள் பொல்லாதவர்கள் என்பதினால் அல்லாமல், மாறாக ஆயக்காரருடைய தொழில் அவமதிப்புடையதாய் இருந்தது என்பதினாலேயே ஆகும் என்பதை நாம் பார்த்தோம்; மேலும் ஆயக்காரர்கள் இவ்விதம் சமுதயாத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்களாகவும், மிகவும் பக்தியுள்ள ஜனங்களிடமிருந்து துண்டிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றபடியால், இவர்கள் “”பாவிகள்” என்று அழைக்கப்படுகின்ற பக்தியற்ற ஜனங்களிடமே தங்களுடைய பெரும்பான்மையான சம்பாஷணைகளையும், உறவுகளையும் வைத்துக் கொள்ளும்படிக்குரிய நிர்ப்பந்தமான நிலையில் காணப்படுகின்றனர். “”பாவிகள்” என்ற வார்த்தையை முன்னிட்டு, இப்படி அழைக்கப்படுபவர்கள் பொல்லாங்குச் செய்கைக்காரர்கள் என்றும், பயங்கரமானவர்கள் என்றும் நாம் எண்ணிவிடக்கூடாது; மாறாக பரிசேயர்கள் சொல்லிக்கொள்ளும் விதமாக பரிசுத்தம் உடையவர்கள் என்று தங்களைக்குறித்து அறிக்கைப் பண்ணாதவர்களும், பரிசுத்தமாய் இருப்பதற்கு முயற்சிக்காதவர்களுமே இந்தப் “”பாவிகள்” ஆவர்; அதாவது தெய்வீக நியாயப்பிரமாணத்தை அப்படியே கைக்கொள்ளுகின்றோம் என்று தங்களைக்குறித்து அறிக்கைப் பண்ணாதவர்களே, இந்த “”பாவிகள்” ஆவர்; அதாவது இந்தப் “”பாவிகள்” என்பவர்கள், பாத்திரத்தின் வெளிப்புறத்தை முற்றிலும் சுத்தமாக வைத்திருக்கின்றோம் என்று அறிக்கைப் பண்ணாதவர்கள் ஆவார்கள் என்ற போதிலும் அநேக தருணங்களில், பூரணமான பரிசுத்தத்துடன் இருக்கின்றோம் என்று அறிக்கையிடுகின்ற பரிசேயருடைய இருதயங்களைக் காட்டிலும் இந்தப் பாவிகள் எனப்படுபவர்களின் உள்புறம் சுத்தமானதாகவே அல்லது அதிகம் சுத்தமானதாகவே காணப்படுகின்றது. இதைக்குறித்து நமது கர்த்தரே பல தருணங்களில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே நமது கர்த்தர், ஆயக்காரர்கள் மற்றும் பாவிகளுடைய நண்பர்கள் என்று நாம் வசனங்களில் வாசிக்கும்போது, கர்த்தர் ரவுடிகளுடன் அல்லது அவருடைய நாட்களில் காணப்பட்ட ஒழுக்க விஷயத்தில் குஷ்டரோகிகளாக இருப்பவர்களுடன் தோழமை வைத்து இருந்தார் என்று நாம் எண்ணிவிடக்கூடாது. மாறாக அக்காலக் கட்டத்தில் யூதர்களில் ஒரு வகுப்பார், பரிசுத்தமான ஜனங்கள் (பரிசேயர்) என்று அழைக்கப்படுவதும், மற்றொரு வகுப்பார் தங்களை முழுமையாய்ப் பரிசுத்தமுள்ளவர்கள் என்று அறிக்கைப் பண்ணாததினால் பாவிகள் என்று அழைக்கப்படுவதும் வழக்கத்தில் இருந்தது என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

மத்தேயு தனது நண்பர்களையும், தனது கூட்டாளிகளையும் கர்த்தரிடமும், அவருடைய போதனைகளிடமும் அறிமுகப்படுத்துவதற்கென எடுத்துக்கொண்ட பிரயாசம், பாராட்டப்பட [R2591 : page 78] வேண்டியதாகும். இன்னுமாக இக்கிரியைகள், கர்த்தருடைய மந்தைக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவரும், என்ன என்ன செய்ய வேண்டும் என்பதற்கான நல்ல மாதிரியாகவும் அமைகின்றது. ஒவ்வொருவனும் தன்னுடைய செல்வாக்கு எவ்விடத்தில் அதிகமாய்க் காணப்படுகின்றதோ, அவ்விடத்தில் அதைச் செலுத்துவதற்கு நாட வேண்டும்; அதாவது நமக்கு அறிமுகமானவர்கள் மத்தியிலும், நாம் அறிமுகமாய்க் காணப்படுபவர்கள் மத்தியிலும், நம்முடைய கடந்த கால வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள தீவிரமான மாற்றத்தை எளிதில் உணரவும், புரிந்துக்கொள்ளக் கூடியவர்கள் மத்தியிலும் நாம் நமது செல்வாக்கைப் பயன்படுத்த நாட வேண்டும். இங்குக் காணப்படும் மற்றுமொரு பாடம் என்னவெனில், சத்தியத்தைப் பிரகடனப்படுத்துவதற்காக, விருந்தோம்பல் பண்பைக் கருவியாகப் பயன்படுத்துவதாகும்; அதாவது யார் தங்களைக் கர்த்தருக்கென்று அர்ப்பணித்துள்ளார்களோ, அவர்களுடைய இல்லங்களும் கூட அர்ப்பணிக்கப்பட்ட இல்லங்களாகக் காணப்பட வேண்டும், மேலும் அது ஆண்டவருக்கு ஊழியம் செய்வதில் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது முதன்மை நோக்கமாகவும் இருக்க வேண்டும். இன்னுமாக நம்முடைய நண்பர்களும் கூடக் கர்த்தரால் போதிக்கப்படத்தக்கதாகவும், அவர்களைக் கர்த்தரிடத்தில் இழுக்கத்தக்கதாகவும், நம் அர்ப்பணிக்கப்பட்ட இல்லங்களின் மூலம் உண்டாகும் செல்வாக்குக் காணப்பட வேண்டும். ஆனால் பெரும்பாலும் இல்லங்கள் அர்ப்பணிக்கப்படுகின்ற விஷயங்கள், கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட தவறப்படுகின்றது; மேலும் இல்லத்திற்குள் எதிர்ப்புகள் அளிக்கும் நபர்களின் செல்வாக்குள் மேலோங்க அனுமதிக்கப்படுவதின் காரணமாக, அந்த அர்ப்பணிக்கப்பட்ட நபர்களின் இல்லங்களில் கர்த்தரும் சரி, கர்த்தருடைய ஜனங்களும் சரி வரவேற்கப்படாமலும், கர்த்தருடைய நோக்கங்களுக்காக இவர்களுடைய இல்லங்கள் பயன்படுத்தப்படாமலும் இருக்கின்றன. இப்படிப்பட்ட இல்லமும், இல்லத்தாரும் ஒரு மாபெரும் ஆசீர்வாதத்தை இழந்து வருகின்றனர்; மேலும் இப்படிப்பட்ட நிலையில் காணப்படும் இல்லத்தின் தலைவர், தான் ஜெயங்கொள்ளுகிறேனா அல்லது இல்லையா என்று நிதானித்துக்கொள்ள வேண்டும்; அல்லது தான் எதிர்ப்பின் செல்வாக்குகளினால் மேற்கொள்ளப்படுகின்றேனோ என்று நிதானித்துக்கொள்ள வேண்டும். “”ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு” மாத்திரமே பரிசு வாக்களிக்கப்பட்டுள்ளது.

கர்த்தர் தைரியமுள்ள ஜனங்களையே விரும்புகின்றார், அதாவது தம் மீது முழுமையான விசுவாசமும், தம் மீதும், தம்முடைவர்கள் மீதும் அன்பும் கொண்டு, மேலும் இதன் காரணமாக நீதியான விஷயங்களின் பொருட்டு எதிர்ப்பாய் உள்ள செல்வாக்குகளை ஜெயங்கொள்ளுகிறவர்களாய் இருப்பவர்களையே கர்த்தர் விரும்புகின்றார். ஒருவேளை மத்தேயு, கர்த்தரிடம் பின்வரும் காரியங்களைக் கூறியிருப்பாரானால், நாம் மத்தேயு குறித்து என்னவெல்லாம் எண்ணியிருப்போம்: “”ஆண்டவரே என்னுடைய வீட்டில் ஒரு விருந்தை ஆயத்தம் பண்ணி, அவ்விருந்தில் என்னுடைய நண்பர்களில் சிலரை வரவேற்று, உம்மை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்களும் சத்தியத்தின் தாக்கம் அடைவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகின்றேன்; ஆனால் இவைகளைச் செய்வதற்கு என்னுடைய சொந்த வீட்டிலேயே எனக்கு (இப்பொழுது) உரிமை இல்லை; நான் இப்படி விருந்து பண்ணினால், என்னுடைய மனைவி ஒரு நிமிடம் கூடப் பொறுத்துக்கொள்ள மாட்டாள்; ஏற்கெனவே மிகுந்த பணவருமானம் தரும் என்னுடைய தொழிலை நான் விடப்போகிறதினால் என்னுடைய பிள்ளைகள் மிகவும் கோபமடைந்தவர்களாகவும், முன்பிருந்த அந்தஸ்தில் அல்லது தாராளமாய்ச் செலவுகள் செய்யும் நிலையில் அவர்கள் என்னுடைய இந்த முடிவின் காரணமாக இனி இருக்க முடியாது என அச்சம் அடைந்தவர்களாகவும் இருக்க, உம்மைக் கனப்படுத்தும் வண்ணமாக நான் இல்லத்தில் விருந்து ஆயத்தம் பண்ணப்போகின்றேன் என்று நான் சொல்லிவிட்டாலே, அவர்கள் மிகுந்த இடஞ்சல்களை ஏற்படுத்திவிடுவார்கள்; இன்னுமாக என் பிள்ளைகள் மிகவும் ஒழுக்கமற்றவர்களாயும், பெற்றோருக்குரிய மரியாதையை எனக்கு தராதவர்களாயும் இருப்பதினால், நான் விருந்து ஆயத்தம் பண்ணினால் தொந்தரவு பண்ணுகிறவர்களாகவும் இருப்பார்கள்.”

இப்படி மத்தேயு கூறியிருந்திருப்பாரானால், இவர் அப்போஸ்தலன் ஆகுவதற்கோ, அல்லது அப்போஸ்தலர் பவுல் ஏற்படுத்தின நிபந்தனைகளுக்கு ஏற்ப சபையில் மூப்பர் (அ) உதவியாளன் ஸ்தானத்திற்குக் கூட மிகவும் பாத்திரமற்ற நபர் என்றே நாம் கருதியிருப்போம் (1 தீமோத்தேயு 3:4-5). மேலும் இவர் சபையில் எந்த ஒரு பொறுப்புள்ள ஸ்தானத்திற்கும் தகுதியற்றவர் என்றே நாம் எண்ணியிருப்போம்; இன்னுமாக இவர் ஜெயங்கொள்ளுகிறவர்களுக்கு அவசியமான பண்புகளில் மிகவும் குறைவுடன் காணப்படுகின்றார் என்றும், இவர் தனது பண்புகளைச் சீர்த்திருத்திக்கொள்ளவில்லை என்றால் இவர் பரிசை இழந்து போவதற்கான மிகுந்த அபாயத்தில் இருக்கின்றார் என்றும் நாம் எண்ணியிருந்திருப்போம். ஆனால் மத்தேயுவின் விஷயம் முற்றிலும் மாறுபட்டதாகவும், அவர் தைரியமுள்ள பாத்திரமாகவும் காணப்படுகின்றார். ஆண்டவரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்கு ஏதுவான பண்புகள் இவரிடத்தில் இல்லையெனில், இவரிடம், “”எனக்கு பின் சென்று வா” என்று நமது கர்த்தர் கூறுவார் என்று நாம் எதிர்ப்பார்க்க முடியாது. ஏனெனில் நமது கர்த்தர் இயேசு இரக்கமுள்ளவராகவும், மென்மையானவராகவும், அன்புள்ளவராகவும் இருந்தாலும் கூட அவர் ஒருபோதும் குணலட்சணங்களில் குறைப்பாடு உடையவராகவோ அல்லது கோழையாகவோ (தைரியமற்றவராகவோ) இருந்ததில்லை.

இன்னுமாக, மத்தேயுவின் மனைவியும், குடும்பத்தினரும் விருந்து ஆயத்தம் பண்ணுவதற்கு மறுப்புத் தெரிவித்திருப்பார்களானால், இவரது மனைவியையும், குடும்பத்தாரையும் குறித்து நாம் என்ன எண்ணியிருந்திருப்போம்? பரிசுத்தவான்கள் ஆகுவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு இல்லை என்றும், மனைவியானவள் புருஷனுக்கு உதவியாக இருக்க வேண்டும் என்ற மனைவிக்குரிய முதல் அம்சத்தையே இவரது மனைவி கற்றுக்கொள்ளவில்லை என்றும் அவள் உதவியாக இருப்பதற்குப் பதிலாக மத்தேயுவுக்கு தடையாக இருந்தாள் என்றும் புரிந்துக்கொண்டிருப்போம். நல்லபடி இவர்களெல்லாரும் இருந்திருப்பார்களானால் கர்த்தர் அவ்வில்லத்திற்குள் வந்தபோது, அவரோடு கூட ஒரு விசேஷித்த ஆசீர்வாதம் கடந்து வந்திருக்கும் என நாம் நம்புகின்றோம்.

“விருந்தில் ஆவிக்குரிய உணவு”

இவ்விருந்து குறித்த பல்வேறு பதிவுகளை வைத்துப் பார்க்கும்போது, விருந்தில் பங்குக்கொண்டவர்களைத் தவிர, இன்னும் அநேக திரளான ஜனங்களும் மத்தேயுவின் வீட்டில் கூடி வந்தது தெரிகின்றது. இன்னும் இச்சம்பவம் தொடர்பான விஷயங்களை வைத்துப் பார்க்கும்போது, இவ்விருந்தானது, பரிசேயர்கள் வழக்கமாக உபவாசம் பண்ணிக்கொண்டு வந்த நாட்களில், ஒருநாளில் நிகழ்ந்தது என்றும் தோன்றுகின்றது. இந்த விஷயங்கள் இரண்டு கேள்விகளுக்கு நேராக வழிநடத்திற்று. அவை பின்வருமாறு:

(1) பரிசுத்தம் இல்லாத இப்படிப்பட்ட ஜனங்களுடன் ஏன் உங்கள் போதகர் பழகுகின்றார்? என்பதே முதல் கேள்வியாகும். நமது கர்த்தரும் அவருடைய அப்போஸ்தலர்களும், தேவனுக்கு முழுமையாய், அர்ப்பணிப்புள்ள ஓர் ஜீவியத்தை ஜீவிக்கின்றார்கள் என்று பரிசேயர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். நமது கர்த்தர், ஆயக்காரர்களுடனும், பாவிகளுடன் கூட இருந்து புசிக்கும் காரியமானது, அவர்களையும் சரிசமமாகக் கருதுவதற்கு ஒப்பாக இருக்கும் என்பதினால், நமது கர்த்தர் அவர்களுடன் சேர்ந்துப் புசிக்கக்கூடாது என்பதே பிரச்சனையாய் இருந்தது தவிர அவர்களுக்குக் கர்த்தர் போதிப்பதில் பரிசேயர்கள் எந்த விதமான எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

இவர்களுடைய இக்கேள்விக்குப் பதில் கூறும் வண்ணமாகவே நமது கர்த்தர், “”நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை” என்று கூறினார் (லூக்கா 5:31 திருவிவிலியம்); அதாவது வைத்தியன் தான் சுகமளிக்க வேண்டும் என்று நாடுகிறவர்களிடத்திற்குச் செல்லவும், அவர்களோடு கலந்துப் பழகுவதற்கும், அதிலும் அவர்களைச் சுகப்படுத்துவதற்கு எவ்விதங்களில் எல்லாம் பழகுவது அனுகூலமாய் இருக்குமோ, அவ்விதங்களில் எல்லாம் பழகவும் உரிமை கொண்டிருக்கின்றார் என்ற அர்த்தத்தில் கூறினார். கர்த்தருடைய இவ்வார்த்தைகளானது, பரிசேயர்கள் நோயுற்றவர்கள் அல்ல என்பதினால், அவர்களுக்குக் கர்த்தருடைய ஊழியம் அவசியம் இல்லை என்ற அர்த்தத்தில் காணப்படவில்லை என்றாலும், அவர்கள் பாவ நோயுற்றிருந்தாலும், அவர் அளிக்கும் நல்ல மருந்தாகிய உபதேசத்தைப் பெற்றுக்கொள்ளும்படியான மனநிலையில், அவர்கள் காணப்படவில்லை என்ற உண்மையை அடக்கியுள்ளதாகவுமே காணப்படுகின்றது. இதே கருத்துதான், “”நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன்” என்ற வார்த்தைகளில் நமது கர்த்தர் கூறியுள்ளார் (லூக்கா 5:32). யார் ஒருவன் தன்னை நீதிமான் என்று எண்ணிக்கொள்கின்றானோ, அவனுக்கு மனம் திரும்புவதற்கான அழைப்பு அப்பாற்பட்டதாய்க் காணப்படும். ஒருவன் தான் நீதிமான் அல்ல என்றும், தான் பூரணன் அல்ல என்றுமுள்ள, முதல் பாடத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும்; ஆகவேதான் தங்களை நீதிமான்கள் அல்ல என்று ஒப்புக்கொண்டவர்களிடத்திலும் மற்றும் மற்றவர்களைக் காட்டிலும் சத்தியத்தைப் பெற்றுக்கொள்வதற்கு நல்ல நிலம் போன்ற இருதயம் உடையவர்களிடத்திலுமே நமது கர்த்தர் பிரதானமாய்ச் சென்றார். இதே கருத்தை நமது கர்த்தர், பரிசேயன் மற்றும் ஆயக்காரனுடைய ஜெபம் தொடர்பான தம்முடைய உவமையில் தெரிவித்துள்ளார்; அதாவது ஆயக்காரன் தான் பூரணமற்றவன் என்று ஒப்புக்கொண்டு, இரக்கத்திற்காக வேண்டினபடியால், தேவனுடைய பார்வையில், பரிசேயனைக் காட்டிலும், ஆயக்காரனே தயவு பெறுவதற்கு ஏற்ற நிலையில் காணப்படுகின்றான் என்று கர்த்தர் நமக்கு உறுதி அளிக்கின்றார்.

“”பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார்” (மத்தேயு 9:13). இவ்வார்த்தைகளை நமது கர்த்தர் ஓசியா 6:6- ஆம் வசனத்திலிருந்துதான் கோடிட்டுக் காட்டியுள்ளார் என்பதில் ஐயமில்லை. பலிகள் மற்றும் சுயத்தை வெறுத்தல் தொடர்பான விஷயங்களிலும் மற்றும் புதினா, சோம்பு, சீரகம் முதலியவைகளில் பத்தில் ஒரு பங்குச் செலுத்தும் விஷயங்களிலும், பரிசேயர்கள் கவனமாய் அனுசரித்தக் காரியங்களானது, தங்கள் பரிசுத்தத்திற்கான சான்றுகள் எனப் பெருமைப் பாராட்டும் விஷயத்தைத் தேவன், இரக்கத்தை அங்கீகரிப்பது போன்று, அங்கீகரிப்பதில்லை எனும் காரியத்தையே மேற்கூறிய வசனத்திலிருந்து பரிசேயர்கள் கற்க வேண்டியிருந்தது. பரிசேயர்கள் தங்களோடு கூடக் காணப்படும் உடன் யூதர்கள் மீது இரக்கம் கொண்டிருந்திருக்க வேண்டும், அதாவது பாவத்திலிருந்து அவர்களைத் தூக்கி, கர்த்தருக்கு அருகாமையிலும், நீதியின் செல்வாக்கினுடைய அருகாமையிலும் கொண்டு வருவதில் மகிழ்ச்சிக் கொள்ளத்தக்கதான இரக்கத்தின் உணர்வைப் பரிசேயர்கள் பெற்றிருந்திருக்க வேண்டும். தேவனுடைய பார்வையில் மிகவும் பிரியமானதும், தேவனுடைய இரக்கத்தைத் தாங்கள் பெற்றுக்கொள்வதற்குத் தங்களை ஆயத்தப்படுத்துகிறதுமான இரக்கத்தின் சிந்தையை இந்தப் பரிசேயர்கள் பெற்றுக்கொண்டிருப்பதற்குப் பதிலாக, மற்றவர்களை இழிவாய் வெறுப்பதற்கும், தங்களைக் குறித்தே பெருமையாய்ப் பேசுவதற்கும் ஏதுவான அன்பற்ற உணர்வுகளைப் பெற்றுக்கொண்டிருந்தனர்; அதாவது தெய்வீக இரக்கத்தினால் ஆசீர்வதிக்கப்படுவதற்கென ஆயத்தமற்றதாய்க்காணப்படும் இருதய நிலையில், அதாவது கர்த்தர் மிகவும் கண்டிக்கும் சுய திருப்தியுள்ள மனதையும், இருதயத்தையும் உடைய நிலையில் பரிசேயர்கள் காணப்பட்டார்கள்.
[R2592 : page 79]

“உபவாசமும், விருந்தும் – நிழலும், நிஜமும்”

(2) இரண்டாவது கேள்வி:- “”வாரத்திற்கு இருமுறை உபவாசத்தை” பரிசேயர்களாகிய நாங்கள் அனுசரிக்கையில் மற்றும் யோவான் ஸ்நானனுடைய போதனைகளைப் பின்பற்றுகிறவர்களும் உபவாசம் பண்ணுகையில், உங்கள் ஆண்டவரும், அவரோடு கூட உள்ள அனைவரும் விருந்துண்டு மகிழ்வது ஏன்?

இப்படி நீங்கள் நடந்துகொள்ளும் காரியமானது நீங்களும், உங்களுடைய ஆண்டவரும், நாங்கள் பக்தியாய் இருப்பது போன்று இல்லை என்பதைக் காண்பிக்கின்றது அல்லவா? (லூக்கா 18:12).

இக்கேள்விக்கான நமது கர்த்தருடைய பதிலை நாம் புரிந்துக்கொள்வதற்கு நன்கு ஆராய்ச்சி செய்ய வேண்டும்.

(a) தம்முடைய பின்னடியார்கள் இத்தகைய ஆச்சரியமான ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் போது, அவர்கள் கவலையுடனும், துக்கம் கொண்டாடிக் கொண்டிருப்பது சரியாக இருக்காது என்றார்; அதாவது மணவாளன் தாமே அவர்களோடு கூடக் காணப்பட்டு, அவர்களுடைய இருதயங்களை மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருக்கும் போதும், அவர்களுக்குப் புத்துணர்வு கொடுத்து, அவர்களைப் பலப்படுத்திக் கொண்டிருக்கும் போதும், அவர்களிடத்தில் வந்து கொண்டிருக்கிறதுமான தெய்வீகத் தயவை அவர்கள் புரிந்துக்கொள்வதற்காக அவர்களுக்குக் கேட்கும் செவிகளைக் கொடுத்து அவர்களுடைய புரிந்துக்கொள்ளுதலின் கண்களைத் திறந்து கொண்டிருக்கும் போதும் அவர்கள் கவலையுடனும், துக்கம் கொண்டாடிக் கொண்டிருப்பது சரியாக இருக்காது என்றார். இப்படிப்பட்ட காலம், உபவாசம் பண்ணுவதற்கும், துக்கம் கொண்டாடுவதற்குமான காலமாயிராது. ஆனால் மணவாளன் தூரதேசத்திற்குப் போன பிற்பாடு, மிகுந்த வேதனையும்/கவலையும், திகைப்பும், குழப்பமும் ஏற்படும்போது, உபவாசம் இருப்பது சரியாக இருக்கும். சுவிசேஷ யுகம் முழுவதிலும் கர்த்தருடைய ஜனங்கள் இருளின் வேளைகளிலும், எதிர்ப்புகள் நிறைந்த வேளைகளிலும், உபவாசம் மூலம் தங்கள் மாம்சத்தைத் தாழ்த்தி, கர்த்தரிடத்தில் மிகவும் நெருங்க நாடுவது அவசியமாய் இருந்ததை உணர்ந்துள்ளார்கள்எனும் காரியம் உண்மையாகவே இருந்துள்ளது.

ஆனால் உபவாசம் என்பது சுயத்தை வெறுக்கும் தன்மைக்கு அடையாளமாயும் காணப்படுகின்றது. ஆண்டவர், ஜனங்கள் மத்தியில் காணப்பட்டது வரையிலும், அதாவது திரளான ஜனக்கூட்டங்கள் மத்தியில் அவர் கனத்துக்குரியவராய் இருந்தது வரையிலும், அவருடைய பின்னடியார்களில் ஒருவராக இருப்பதற்குக் கொஞ்சமே சுயத்தை வெறுக்க அவர்களுக்கு வேண்டியிருந்தது; அநேக கோணங்களில் பார்க்கும் போது, அத்தருணத்தில் இயேசுவைப் பின்பற்றுகிறதற்கு அழைக்கப்பட்ட காரியமானது சீஷர்களுக்குக் கனத்துக்குரியதாய் இருந்தது; அவருடைய பின்னடியார் ஆகுவதற்கெனச் சில பூமிக்குரிய நன்மைகளைத் தியாகம் செய்வது கனத்துக்குரியதாய் இருந்தது; மேலும், பூமிக்குரிய நன்மைகளைத் தியாகம் செய்யும் இவ்வகையான சுயத்தை வெறுத்தல் அல்லது உபவாசங்கள், உண்மையில் சந்தோஷத்தின் விருந்தாகவே சீஷர்களுக்கு இருந்தது; ஆனால் பிற்பாடு சோதனைகள் வந்த போதோ, ஆண்டவர் அவருடைய சத்துருக்களின் உபத்திரவங்களுக்குள் காணப்பட்ட போதோ, அவருடைய நோக்கங்கள் பிரபலமற்றதாய் ஆன போதோ, திரளான ஜனக்கூட்டங்கள் அவர் மரிக்க வேண்டும் என்று கூக்குரலிட்ட போதோ, அப்போதுதான் அவரை அறிக்கைப்பண்ணுவதற்கும், அவரைப் பின்பற்றுவதற்கும் சுயத்தை வெறுத்தலாகிய நிஜமான உபவாசத்தின் தேவை ஏற்பட்டது; இது சுவிசேஷ யுகம் முழுவதும் பொருந்தும்; சுயத்தை வெறுத்தல் இல்லாமல், உபவாசம் இல்லாமல், மாம்சத்தின் விருப்பங்கள் மற்றும் ஆசைகளை மறுக்காமல் ஒருவராலும், ஆட்டுக்குட்டியானவருடைய பின்னடியார்கள் ஆக முடியாது; மாம்சத்தில் சிலவற்றைத் தியாகம் செய்கிறவர்களாகவும், இன்னும் மற்றவைகளைப் புதிய சிருஷ்டியின் நலன் கருதியும், அதன் ஆவிக்குரிய வளர்ச்சியை முன்னிட்டும் தள்ளிவைத்து, சாகடிக்கிறவர்களாகவும் கர்த்தருடைய பின்னடியார்கள் காணப்பட வேண்டும். கர்த்தருடைய இரண்டாம் வந்திருத்தலாகிய இப்பொழுது, அந்த விருந்து ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது என்று நாம் கூறுகின்றோம், அதாவது ஆவிக்குரிய கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது, மிக அதிகமாகவும், மிகப் பெரியதாகவும் ஆசீர்வாதங்கள் இப்பொழுது இருக்கிறபடியாலும், மேலும் ஆவிக்குரிய உணவும் அதிகமாயும், சுவையுள்ளதாயும் இருக்கிறபடியால், கர்த்தருடைய விருந்து சாலைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கும் மற்றும் புசிக்கும்படிக்கு அவர் அமர்த்தியுள்ளவர்களுக்கும் மற்றும் பழையதும், புதியதும், புத்துணர்வு அளிக்கக்கூடியதுமானவைகளை அவர் அளித்துள்ளவர்களுக்கும், உபவாசத்தின் நாட்கள் முடிந்து, விருந்தும், “”கர்த்தருடைய சந்தோஷங்களும்” ஆரம்பித்து விட்டது என்று நமக்குத் தோன்றுகின்றது. ஆனால் அதற்கென்று மாம்சத்தில் சோதனைகளும், கஷ்டங்களும், பரீட்சைகளும் இல்லாமல் இல்லை, மாறாக புதிய சிருஷ்டியாகிய அவருடைய ஜனங்கள் ஏற்றகால சத்தியங்களினால் மிகவும் புத்துணர்வும், மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைந்துள்ளப்படியால், அவர்கள் அடைந்துள்ள ஆவிக்குரிய புத்துணர்வுகளுக்கு முன்பு, இப்பொழுது இந்தச் சோதனைகளும், பரீட்சைகளும், கஷ்டங்களும் லேசானவைகள் என்று எண்ண முடிகின்றது: இந்த ஆவிக்குரிய புத்துணர்வுகள் சீக்கிரத்தில் அனுபவிக்கப் போகின்ற மாபெரும் கலியாண விருந்திற்குரிய மாதிரி அனுபவங்களே ஆகும்.

(b) நமது கர்த்தர் தம்முடைய சீஷர்களுடன் இருக்கும் காரியமானது, துக்கத்திற்கு மருந்தாக இருப்பதாகிய மற்றொரு உண்மையைக் குறித்தும் பரிசேயர்கள் புரிந்துக்கொள்ளவில்லை; அதாவது நமது கர்த்தருடைய வேலை, யோவான் ஸ்நானனுடைய வேலையைப் போன்றதல்ல் அதாவது யூத அமைப்பையும், ஒழுங்கையும் சீர்த்திருத்தம் பண்ணும் வேலை அல்ல என்று பரிசேயர்கள் புரிந்துக்கொள்ளவில்லை. சீர்த்திருத்தலாகிய இப்பணியை யோவானால் செய்ய முடியும் அளவுக்கு, அதைச் செய்யும்படிக்கு யோவான் நியமிக்கப்பட்டிருந்தார்; ஆனால் அவர் தோற்றுப் போயும் விட்டார், சிரைச்சேதமும் பண்ணப்பட்டு விட்டார்; ஆனால் இயேசு செய்த பணியோ முற்றிலும் வேறுபட்ட பணியாகும்; இயேசு தமது உபதேசங்களின் மூலம் யூத மார்க்கத்தைச் சீர்த்திருத்தம் பண்ணுவதற்கும், ஓட்டுப் போட்டுச் சீராக்கவும் முயற்சிக்கவில்லை; மாறாக முற்றிலும் ஒரு புதிய அமைப்பை நிறுவிகொண்டிருந்தார், ஒரு சபையைச் சேர்த்துக் கொண்டிருந்தார், அதாவது ஒரு யூத சபையையோ அல்லது சீர்த்திருத்தப்பட்ட யூத சபையையோ உண்டுபண்ணாமல், ஒரு கிறிஸ்தவ சபையையே நிறுவிக்கொண்டிருந்தார். இதன் காரணமாகவே பரிசேயர்களுடைய வழிமுறைகளில் உள்ள நல்லவைகளையும், தகாதவைகளையும் குறித்து அவர்களோடு கலந்து ஆலோசித்து, அவ்வழிமுறைகளைச் சரிச் செய்துகொள்வதற்குக் கர்த்தர் முயற்சிக்கவில்லை. ஏற்கெனவே பழையதாய்ப் போன பழைய வஸ்திரத்தை விலக்கி வைக்கப்படுவற்கு ஏதுவாக, அதைக் கர்த்தர் அப்படியே விட்டுவிட்டார். நியாயப்பிரமாணம் கோரும் சாத்தியமற்ற நீதியை அல்ல, மாறாக பாவங்களுக்கான கர்த்தருடைய பலியினால் உண்டாகும் புண்ணியத்தின் அடிப்படையிலும், விசுவாசத்தின் மூலமும் தரிப்பிக்கப்படும் நீதியாகிய புதிய வஸ்திரத்தைக் கர்த்தர் அருளுவார்.

ஒருவேளை இயேசு, கிறிஸ்தவ மார்க்கத்தையும், யூத மார்க்கத்தையும் சேர்க்க முற்பட்டிருப்பாரானால், அக்காரியமானது இரு மார்க்கத்திற்கும் மிகுந்த பாதகமான நாசத்தை ஏற்படுத்தியிருக்கும், ஏனெனில் இரண்டு மார்க்கங்களும் முற்றிலும் எதிர்மாறானவைகள் ஆகும்; யூத மார்க்கமானது முழுமையான நீதியின் செயல்பாடுகளை எதிர்ப்பார்க்கின்றது, ஆனால் இது பாவிகளுக்குச் சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. கிறிஸ்தவ மார்க்கமானது, ஒருவன் தன்னைத்தான் நீதிமானாக்கிக்கொள்வது சாத்தியமற்ற காரியம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதை எதிர்ப்பார்க்கின்றது, மேலும் மன்னிப்பு மற்றும் இரக்கம் பெற்றுக்கொள்வதற்கான ஒரே நிபந்தனையாக விசுவாசத்தை எதிர்ப்பார்க்கின்றது.

(c) இதே காரியமானது அக்காலத்தின் வழக்கத்தின்படி பயன்படுத்தப்பட்ட துருத்தியின் விஷயத்திலும் விவரித்துக் காட்டப்படுகின்றது. இக்காலத்தில் பயன்படுத்தப்படுகின்ற குப்பிகள் (bottle)) மற்றும் பீப்பாய்கள் (barrel) அன்று பயன்படுத்தப்படாமல், மிருகங்களின் தோலினால் உண்டுபண்ணப்பட்ட துருத்திகள் பயன்படுத்தப்பட்டது. இன்றும் கூட உலகத்தில் பல்வேறு பகுதிகளில் இப்படியான தோல் துருத்திகளே பயன்படுத்தப்பட்டு, குப்பிகள் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றன. இப்படிப்பட்ட துருத்திகளில் புதிய திராட்சரசங்கள் ஊற்றப்படுகின்றன் மேலும் ரசம் புளித்துப் பொங்குவதன் காரணமாக தோல் கிட்டத்தட்ட வெடித்துச் சிதறும் அளவுக்கு விரிந்துவிடுகின்றன் மேலும் ஒருமுறை பயன்படுத்தப்பட்ட துருத்திகள் மீண்டும் புதிய ரசம் ஊற்றுவதற்கென ஒருபோதும் பயன்படுத்த முடியாது, காரணம் துருத்தியின் சுருங்கி விரியும் தன்மை (elasticity) போய்விடுகிறபடியால், மீண்டும் அதில் புதிய ரசம் ஊற்றினால் அது புளிக்கும் போது, அது வெடித்து விடுகின்றது. யூத மார்க்கத்திற்குரிய நாட்கள் முடிவிற்கு வந்து விட்டது; அதன் நோக்கம் நிறைவேறிவிட்டது; பரிசேயர்கள் மற்றும் இயேசு பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் எதிர்ப்பார்த்த வண்ணம், தெய்வீக நோக்கமானது, யூதமார்க்கத்தைச் சீர்த்திருத்தம் பண்வதற்கு நோக்கம் கொண்டிருக்கவில்லை என்பதான காரியங்களையே நமது கர்த்தர் இங்குப் போதிக்கின்றார். யூத மார்க்கம் ஓய்ந்துபோக வேண்டியிருந்தது; மேலும் யூதமார்க்கத்திற்குள் புதிய உபதேசங்களை, அதாவது சுவிசேஷம் எனும் புதிய ரசத்தைப் ஊற்றுவது என்பது, இந்தப் புதிய உபதேசங்களின் ஆவியானது யூத தேசத்தை/ஜாதியாரைக் கலக்கி நாசமடைய செய்வதற்கு வழிநடத்துகிறதாய் இருப்பதோடல்லாமல் அந்த ஜாதியாரின் நாசத்தின் மத்தியில், இப்புதிய உபதேசங்களும் மறைந்து, மாய்ந்து போய்விடும். ஆகவேதான் ஒரு புதிய இஸ்ரயேல், அதாவது பரிசுத்த ஜாதி, விசேஷித்த ஜனங்கள் எழுப்பப்பட வேண்டும் என்பதும், இவர்கள் அப்போது வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தையும், புதிய கிருபையையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் தெய்வீகத் திட்டமாய்க் காணப்பட்டது.

சுவிசேஷ யுகத்தின் முடிவு பகுதியாகிய இப்போதுங்கூட, ஆண்டவர் இப்பொழுது கொடுத்துக் கொண்டிருக்கும் புதிய ரசத்தை, கிறிஸ்தவ மத பிரிவுகள் எனும் பழைய துருத்திக்குள் ஊற்றுவது கூடாத காரியமாகவே உள்ளது. இந்தக் கிறிஸ்தவ பிரிவினர்களும் கூட ஏற்றக்கால சத்தியங்கள் எனத் தங்களுக்கு முன் வைக்கப்படும் சத்தியங்களை ஏற்றுக்கொள்வது என்பது, தங்கள் அமைப்புகளுக்குள் மிகுந்த நாசத்தைக்கொண்டு வந்துவிடும் என்று உணர்ந்து கொண்டவர்களாகவே இருக்கின்றார்கள். தேவன் யூத யுக முடிவில் இந்த முழு அமைப்பிலிருந்து கபடற்ற உத்தம இஸ்ரயேலர்களை வெளியே வரும்படி அழைக்கின்றார்; அதாவது சமீபத்தில் [R2592 : page 80] உள்ள புதிய யுகத்திற்கான ரசத்தை (உபதேசத்தை) தம்முடைய கரங்களிலிருந்து பெற்றுக்கொள்ளும்படிக்கு இவர்களை வெளியே அழைக்கின்றார். பழைய அமைப்புகளைப் பொறுத்தமட்டில், அவர்கள் அவர்களுக்கென்று நியமிக்கப்பட்ட நோக்கத்தைப் பாதிச் சரியாகவும், பாதித் தவறாகவும் நிறைவேற்றி முடித்துவிட்டனர். தெய்வீகத் திட்டம் தொடர்புடைய இவர்களுடைய (பழைய அமைப்புகள்/யூத அமைப்பு) பணிகள் முடிவடைந்துவிட்டன. “”விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் புமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே” (வெளிப்படுத்தல் 18:23). ஆனால் இந்த அழைப்பை இவர்கள் கேட்பதற்கு, இவர்களைப் பாபிலோன் அனுமதிப்பதில்லை. தற்கால சத்தியத்தின் தொனி, அவளுடைய சுவர்களுக்கு அப்பாலேயே/வெளியே தொனித்துக் கொண்டிருக்கின்றது. சத்தியத்தைக் கேட்பதற்கான செவியை உடையவர்கள் எவர்களோ, மேலும் தற்கால சத்தியத்தினால் நிரப்பப்படுவதற்கு விருப்பம் உடையவர்கள் எவர்களோ, அவர்கள் ஆசீர்வாதத்தினால் நிரப்பப்படுவதற்கு முன்பும், மற்றவர்களுக்கு ஆசீர்வாதத்தைச் சுமந்துச் செல்லும் பாத்திரமாகப் பயன்படுத்தப்படுவதற்கு முன்பும், முதலாவது சபைப்பிரிவுகளாகிய அமைப்புகளிலிருந்து வெளியே வந்தாக வேண்டும், “”பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்.” “”விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் புமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே” (வெளிப்படுத்தல் 18:4,23. “