R4834 (page 179)
“துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப் போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்”” (சங்கீதம் 1:1-3). தேவனுடைய வார்த்தைகளைத் தொடர்ச்சியாய் நம் தியானத்திற்கான பாடப்பொருளாயக் கொண்டிருப்போமானால், அதன் கொள்கைளானது சீக்கிரமாய் நம்மிடத்தில் ஒன்றிப்போய், நம்முடைய மனதினுடைய அமைப்பின் பாகமாகிவிடும் மற்றும் நம் குணங்களை மிகவும் அழகாக்கிடும் மற்றும் தேவனுடைய, நம் சக மனிதர்களுடைய பாராட்டுதலுக்கு ஏதுவாகிடும்; மேலும் மனதினுடைய இந்த வழக்கத்தினால், ஜீவியத்தினுடைய கிரியைகள் பேசுகின்றதாய் இருக்கும்.
தூய்மையாக்கப்பட்ட நீரூற்றானது, முன்பைக் காட்டிலும் தித்திப்பான தண்ணீர்களைக் கொணர்ந்து, அதனிடத்திற்கு வரும் அனைவருக்குமே புத்துணர்வும், மகிழ்ச்சியும் கொடுக்கின்றதாய் இருக்கும். இது – சந்தோஷமான இல்லங்களை உருவாக்கிடும் – சிறந்த கணவன்மார்களை, சிறந்த மனைவிமார்களை மற்றும் சிறந்த பிள்ளைகளை உருவாக்கிடும். இது மனநிலையினை இனிமையானதாக்குகின்றது, தொனியை மென்மையானதாக்குகின்றது, மொழியினைப் பெருந்தன்மையுள்ளதாக்குகின்றது, நற்பழக்கவழக்கங்களை வளர்த்துகின்றது, உணர்வுகளைக் கண்ணியப்படுத்துகின்றது மற்றும் அழகான அலங்கரிப்பினை ஒவ்வொரு எளிமையான கடமை விஷயத்திலும் கொடுக்கின்றதாய் இருக்கின்றது. இது அன்பின் கொள்கையை உள்ளே கொண்டுவந்து, சுயநலத்தின் சச்சரவான அம்சங்களைப் புறம்பே தள்ளிடும். இப்படியாய் இது இல்லத்தைத் தோட்டமாக மாற்றுகின்றது; இங்கே ஒவ்வொரு பண்பும், ஒவ்வொரு இயல்பும் – வளர்வதற்கும், விருத்தியாகுவதற்கும் தாராளமான வாய்ப்புகள் இருக்கும்.
இது தனிப்பட்ட நபரையும், இல்லத்திலுள்ள அவனது ஜீவியத்தையும் மாத்திரம் அனுகூலமாய்த் தாக்கத்திற்குள்ளாக்காமல், இது வியாபாரத்தின் விஷயத்திலும்கூடத் தாக்கத்தை ஏற்படுத்துகின்றதாய் இருக்கும்; உண்மையும், நியாயமான கையாளுதலும் அனைத்து வியாபார விஷயங்களிலும் காணப்படும்; இப்படியாகத் தேவனுடைய நாமத்தைத் தரித்துக்கொண்டிருப்பவர்களாலும், அவரது பாக்கியமான ஆவியைப் பெற்றிருப்பவர்களாலும், தேவன் கனப்படுத்தப்படுவார். “