R2895 – சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2895 (page 330)

சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு

THE CLOSE OF A NOBLE LIFE

ஆதியாகமம் 50:15-26

“நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும்.” சங்கீதம் 90:12.

எகிப்திலுள்ள யோசேப்பினுடைய மகத்துவம் பற்றின தகவல்களுடன், யாக்கோபின் குமாரர்கள் திரும்பி வந்தபோது, யாக்கோபுக்கு நூற்றி முப்பது வயதாயிருந்தது. தன்னுடைய குமாரன் இன்னும் உயிரோடிருக்கின்றார் என்றும், மகத்தான ஸ்தானத்தில் காணப்படுகின்றார் என்றும், கேள்விப்பட்டதில் அவருக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை, அவருடைய முதிர்வயதிற்குரிய இயல்பான பெலவீனங்களினால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகையால் யாக்கோபினுடைய குமாரர்கள், எவ்வாறு தாங்கள் யோசேப்பை அடிமைத்தனத்திற்குள் விற்றுப்போட்டார்கள் என்றும், எப்படி யாக்கோபை ஏமாற்றத்தக்கதாக, இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்னதாக யோசேப்பினுடைய மேலங்கியில் இரத்தத்தைப் பூசினார்கள் என்றும் விவரம் அறிந்தப்போதுங்கூட, யாக்கோபினால் காரியங்களை நம்பமுடியவில்லை. யாக்கோபின் குமாரர்கள் கொடுத்திட்ட தகவல்களுக்கு அத்தாட்சியாக, யோசேப்பு தந்தைக்கென அனுப்பி வைத்திட்ட இராஜரிகமான அன்பளிப்புகளும், மற்றும் யாக்கோபையும், குடும்பத்தாரையும் சௌகரியமாகப் பிரயாணத்தில் சுமந்துவரத்தக்கதாக அனுப்பப்பட்டு, வந்திருந்த எகிப்திய வண்டிகளும் காணப்பட்டன. இந்த வண்டிகள் என்பது, அந்நாட்களில் காணப்பட்ட வாகனங்களாய் இருந்தது. யாக்கோபு இணங்க வைக்கப்பட்டார் மற்றும் பிரயாணத்தை மேற்கொண்டார்; அப்போதுதான் அநேகமாக யாக்கோபு தன் மனதில் சில கேள்விகளைக்கொண்டிருந்து, தேவனுக்குப் பலிச்செலுத்தினார்; அதாவது வாக்களிக்கப்பட்ட தேசத்தை இப்படியாக விட்டுச்செல்வது ஞானமான காரியமாக இருக்குமா என்றும் இப்படி, தான் விட்டுச்செல்லும் காரியமானது, தன்னுடைய சிறு பிராயம் முதற்கொண்டு, தன்னுடைய ஜீவியத்தில் மையம் கொண்டுள்ளதும், வழிநடத்தியுள்ளதுமான ஆசீர்வாதங்களை, தான் உதறித்தள்ளிவிட்டதாக அல்லது தனது விசுவாசத்தை, தான் கைவிட்டுவிட்டதாக, தேவனால் கருதப்படுமோ என்றுமுள்ள கேள்விகளை மனதில் கொண்டவராக, யாக்கோபு பலிச்செலுத்தினார்.

[R2895 : page 331]

யாக்கோபினுடைய கேள்விக்கும், பலிக்கும் (அநேகமாகச் சொப்பனத்தின் வாயிலாக) தேவன் பதிலளித்து, யாக்கோபு எகிப்துக்குப் போகும் காரியம் சரியானது என்றும், இறுதியில் யாக்கோபின் சந்ததியார் மீண்டும் “வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு” திரும்ப வருவார்கள் என்றும் யாக்கோபுக்கு வாக்களித்தார். இப்படியாகவே ஆவிக்குரிய இஸ்ரயேலர்களும் அனைத்துச் சூழ்நிலைகளிலும் காணப்பட வேண்டும்; ஆவிக்குரிய இஸ்ரயேலன் பண்ணியுள்ள உடன்படிக்கையாகிய ஆபிரகாமின் உடன்படிக்கையும், அதிலுள்ள அவனது பங்கும், அவனது ஜீவியத்தின், அவனது இலட்சியங்களின், அவனது எதிர்பார்ப்புகளின், அவனது நம்பிக்கைகளின் மையமாகக் காணப்பட வேண்டும். உலக ஐசுவரியங்கள் மற்றும் உலக தயவுகளின் விஷயத்தில், எதிராளியானவனின் வஞ்சனை காணப்படுகின்றதா என ஆவிக்குரிய இஸ்ரயேலன் விழிப்புடன் காணப்பட வேண்டும். இவ்விதமான அபாயமானது உலகப்பிரகாரமான வளமையின் காற்று நம் திசையில் அதிகம் வீசும்போது அதிகமாய்க் காணப்படுகின்றது. இந்த அபாயமானது நாம் கஷ்டமான (அ) உபத்திரவமான நிலைமைகளுக்குள் கடந்துபோகையில், குறைவாகவே உள்ளது. இப்படியான (வளமையின் காற்று நம் பக்கத்தில் வீசும்) தருணங்களிளெல்லாம், நாம் கர்த்தரிடத்தில் அடிக்கடிச் செல்ல வேண்டுமென்றும், அவருடைய சித்தத்தை அறிந்துகொள்ளத்தக்கதாக முற்றும் முழுமையாக நாட வேண்டுமென்றும், நம்முடைய பூமிக்குரிய காரியங்கள் அனைத்திற்கும் மேலாக, நமது உடன்படிக்கையையும், அதன் முக்கியத்துவத்தையும் மனதில் கொண்டுவர வேண்டும் என்றும் நாம் நினைவில் கொள்வோமாக. மேலும் கர்த்தருக்கு உண்மையான பலியை ஏறெடுப்போமாக, அதாவது நமது ஏற்றுக்கொள்ளப்படுதலுக்கு ஆதாரமாய்க் காணப்படும் நமது அருமை மீட்பருடைய பலியின் புண்ணியங்களை முன்வைத்து, நமது இருதயங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பைத் திரும்பவும் கூறி, நமது உடன்படிக்கையைப் புதுப்பித்துக்கொள்வோமாக. இதுவே இந்த யாத்திரையில் நமக்கான ஒரே பாதுகாப்பான வழியாகும்.

யாக்கோபும், யோசேப்பின் சகோதரரும், பார்வோனுக்கு முன்பாகக்கொண்டு செல்லப்படுவதையும், பிற்பாடு அவர்கள் கோசேன் நாட்டில் குடியேறினதையும் நாம் விரிவாகப் பார்க்கப்போவதில்லை. இங்கு அவர்கள் குடியிருக்கையில் பதினேழு வருடங்களுக்குப் பிற்பாடு, யாக்கோபு மரிக்கின்றார் (ஆதியாகமம் 47:28) மற்றும் யாக்கோபு, பார்வோனின் பிரதிநிதியானவருடைய சொந்தக்காரராய் இருக்கின்றபடியால், யாக்கோபு எகிப்திய வட்டாரத்திற்குப் பொதுவான வழக்க முறையின் அனுசரிப்புகள் அனைத்துடன், அடக்கம் பண்ணப்பட்டார். இப்போதுதான் நமது பாடம் ஆரம்பமாகப் போகின்றது. யோசேப்பின் சகோதரர்கள், யோசேப்பு தங்களைப்போன்ற சுபாவம் கொண்டிருப்பார் என்று எண்ணினார்கள்; அவர்களால் யோசேப்பு தங்களை முற்றிலும் மன்னித்துவிட்டார் என்பதையும், யோசேப்பு மிகவும் தயவுள்ளவராய் இருக்கின்றார் என்பதையும் நம்ப முடியவில்லை; மேலும் யோசேப்பு தங்களிடத்தில் பாராட்டும் இரக்கத்தை அவர்கள் ஒத்துக்கொண்டாலும், அவர்கள் பின்வருமாறு தங்களுக்குள்ளாகக் கூறிக்கொண்டார்கள், “இந்த அனுகூலங்கள் அனைத்தும் நம்பொருட்டாக இல்லாமல், நமது தகப்பனாகிய யாக்கோபின் பொருட்டாக மாத்திரமே செய்யப்பட்டன் இப்பொழுது நமது தந்தை இறந்துவிட்டார்; இனிமேல் யோசேப்பு நம்மை வித்தியாசமாய்க் கையாளுவார்.” இப்படியான உணர்வுகளினால் தூண்டப்பட்டவர்களாக, அவர்கள் யோசேப்பினிடத்தில் இரக்கத்தைக் கேட்பதற்கும், தாங்கள் யோசேப்பினுடைய அடிமைகளாக இருக்க விருப்பம் கொண்டுள்ளதை அறிவிக்கிறதற்கும், முதலாவது ஒரு தூதுவனை யோசேப்பினிடத்திற்கு அனுப்பிவைத்தார்கள், பின்னர் அவர்களும் நேரடியாக யோசேப்பினிடத்திற்குச் சென்றார்கள்.

இக்காரியமானது, போதுமான விசுவாசமில்லாமல் கர்த்தரிடத்தில் வரும் அநேகருடைய நிலைமையைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. இப்படிப்பட்டவர்கள் தங்களிடத்திலான கர்த்தருடைய இரக்கத்தைக் குறித்து உணர்ந்திருந்தாலும், பயமும் கொண்டிருக்கின்றனர். உண்மையென்னவெனில், இவர்கள் அவரைப்பற்றி அறிந்துகொள்ளவில்லை; கர்த்தரும் தங்களைப்போன்று கோபத்தினால், பகைமையினால் இயக்கப்படுபவர் என்று இவர்கள் எண்ணிக்கொள்கின்றனர். நமது குற்றங்களையும், தெய்வீகத் தயவைப் பெறுவதற்கான நமது அபாத்திர நிலைமையையும் ஒப்புக்கொள்வதும், இன்னுமாக நமது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்றுள்ள கர்த்தருடைய வார்த்தைகளில், விசுவாசத்தின் முழு நிச்சயத்தைக் கொண்டிருக்குமளவுக்கு, நாம் கர்த்தருடன் நெருங்கிப் பழகிக் காணப்படும் நிலைமையை அடைவதும் என்பது கிருபையில் வளர்ந்திருப்பதற்கான சாட்சியே ஆகும். இப்படியாகக் கிருபையில் வளர்வதைக் குறித்து, “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்” என்று கர்த்தர் குறிப்பிடுகின்றார் (யோவான் 17:3). ஆனால் இத்தகைய அறிவு என்பது உடனடியாக வளரக்கூடியதல்ல, மாறாக இது கிருபையில் வளர்வதின் விளைவாக வரக்கூடியதொன்றாகும்; ஏனெனில் நாம் அறிவில் வளரும்போது, கிருபையில் வளருவோம் மற்றும் நாம் கிருபையில் வளரும்போது, அறிவிலும் வளருவோம்; நாம் இரண்டு பாதங்களை வைத்து நடப்பதுபோன்று, கிருபையும், அறிவும் இரண்டுமே ஒன்றையொன்று தொடர்ந்து காணப்படுகின்றது. கிறிஸ்துவின் நாமத்தைத் தரித்துக்கொண்டிருப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள், கிருபையிலும், அறிவிலும் வளராதப்படியினால், அப்போஸ்தலர் குறிப்பிடும், “விசுவாசத்தின் பூரண நிச்சயத்தை,” அதாவது கர்த்தரிலும், அவருடைய தயவிலும், அவருடைய ஞானத்திலும், அவருடைய அன்பிலும், மற்றும் தங்கள் ஜீவியத்தின் அனைத்துக் காரியங்களின் மேலுமுள்ள அவரது ஞானமான பராமரிப்பிலும் முழு நிச்சயத்தை அடைய தவறிவிடுகின்றனர். இப்படியான வளர்ச்சி குறைவுப்படுகின்றபடியால், இவர்கள் கர்த்தருக்குப் பலிகள் ஏறெடுப்பதற்கும், அவரிடத்தில் தங்கள் வழிகளையெல்லாம் ஒப்புக்கொடுப்பதற்கும் தவறிவிடுகின்றனர்.

யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குக் கொடுத்திட்ட பதிலானது மிகவும் பெருந்தன்மையுடையதாகவும்/சிறப்பானதாகவும், இன்னுமாக அவருடைய நடத்தையானது வெறுமனே வெளித்தோற்றமான அறிக்கையாக இல்லாமல், மாறாக உறுதியான குணலட்சணத்தின் விளைவே என்பதற்கான நற்சான்றாகவும் காணப்பட்டது. யோசேப்பு தனக்குள்ளாகப் பின்வருமாறு சொல்லிக்கொள்ளவில்லை அதாவது, “என்னுடைய சகோதரர்கள் என்னைத் தவறாய்ப் புரிந்துள்ளனர். நான் அவர்களை மனப்பூர்வமாய் மன்னித்தாலும், இந்த அவர்களது பயத்தை, நான் அவர்களுக்கு மேலாக அதிகமான அதிகாரம் கொள்ளத்தக்கதாகப் பயன்படுத்திக்கொண்டு, நான் அவர்களை நோக்கி, நான் உங்களுக்கு எந்தத் தீங்கும் செய்யமாட்டேன்; நீங்கள் எனக்கு முற்றிலும் கீழ்ப்படிதலோடு காணப்படுவதுவரையிலும், எனக்கு வருடந்தோறும் சன்மானங்கள் கொடுத்து (அ) உங்கள் பலனில் பத்தில் ஒரு பகுதி எனக்குக் கொடுத்து (அ) வருடந்தோறும் நீங்கள் என்முன் பணிவதற்கும், உங்கள் தவறுகளை மீண்டும் மீண்டுமாக ஒப்புக்கொண்டு, என்னுடைய தயாளத்தை அறிக்கையிடுவதற்கும் வந்துகொண்டு இருப்பதுவரையிலும், நான் உங்களை மிகுந்த இரக்கத்துடன் நடத்துவேன் என்று சொல்லப்போகிறேன்.” இல்லை; இப்படிச் செய்ய முடியாதளவுக்கு மிகச் சிறந்த குணலட்சணங்களை உடையவராகவும், சுயநலமேயற்றவராகவும் காணப்பட்டார். மாறாக யோசேப்போ, “பயப்படாதிருங்கள்நான் தேவனா?” என்றார். யோசேப்பு தன்னுடைய சகோதரர்களிடத்தில் சரியான விதத்தில் நடந்துகொள்வதற்கான இரகசியம், அவர் கொண்டிருந்த சரியான கண்ணோட்டமேயாகும்; யோசேப்பு தன்னுடைய சகோதரர்களைக் கையாளும் விஷயத்திலும், அனைத்து விஷயங்களிலும், தன்னைத் தேவனுடைய ஊழியக்காரனாக/ அடிமையாக மாத்திரமே கருதிக்கொண்டிருந்தார். தேவனுடைய வழிநடத்துதலே அனைத்துக் காரியங்களிலும் காணப்பட்டிருந்ததை யோசேப்பு கண்டார்; இப்படியல்லாமல் வேறு எவ்விதத்தில் யோசேப்பினால் எண்ணிக்கொள்ள முடியும். தெய்வீக ஏவுதலினால் தனக்கு வந்திட்ட சொப்பனங்களின் நிறைவேறுதலை, யோசேப்பு கண்டார்; தான் அடிமை நிலையிலிருந்து, எகிப்தின் அரியணைக்கு [R2896 : page 331] உயர்த்தப்படுவதற்கான வழிநடத்துதலினுடைய பல்வேறு படிகளில், தெய்வீகப் பராமரிப்பினுடைய அற்புதகரமான வழிநடத்துதலை யோசேப்பு கவனித்தார்; இன்னுமாக ஒருவேளை இப்பொழுது தான் தன்னுடைய சகோதரர்களுக்குப் பொல்லாப்புச் செய்தாலோ அல்லது அவர்களுக்கு எதிராக இரக்கமற்ற விதத்தில் சிந்தனைச் செய்தாலோ, இது தேவன் ஆசீர்வதிப்பதற்கெனப் பயன்படுத்தின கருவிகளுக்கு (தனது சகோதரர்களுக்கு) எதிராக களங்கம் விளைவிப்பதாகக் காணப்படும் என்று யோசேப்பு எண்ணினார். இதை யோசேப்பு செய்தாரானால் அவரால் தெய்வீக வல்லமைக்கு உண்மையாய் இருக்க முடியாது மற்றும் தெய்வீக வல்லமைக்குக் கனம் கொடுப்பவராகவும் காணப்பட முடியாது; யோசேப்பு தன்னுடைய சகோதரர்களை ஆறுதல்படுத்தி, உற்சாகமூட்டினார்; அவர்கள் பொல்லாப்பான நோக்கம் கொண்டிருந்து, தனக்குப் பொல்லாப்புச் செய்திருந்தபோதிலும், நடைபெற்றது உண்மையில் ஒரு நல்ல காரியமே என்றும், ஆனால் நடந்திட்ட இந்த நற்காரியத்திற்கு அவர்களுக்கு எந்தக் கீர்த்தியும் சேராமல் அவப்பெயரே உள்ளது மற்றும் தேவனுக்கே அனைத்துக் கனமும் சேரும் என்றும் யோசேப்பு விளக்கினார். இதன் அடிப்படையிலேயே அவர்களை, தான் கையாளுகின்றதாகவும், தான் கொஞ்சமும் பகைமைக்கொண்டிருக்கவில்லை என்பதாகவும், அவர்கள் செய்த காரியத்தின் வாயிலாக வந்த தெய்வீக ஆசீர்வாதத்தை முழுமையாய், தான் உணர்ந்துள்ளதாகவும், யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுக்குப் புரிய வைத்தார்.

இந்தப் படிப்பினையை, ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் அனைவரும் கற்றுக்கொண்டார்களானால், அது எத்துணை மாபெரும் ஆசீர்வாதமாகக் காணப்படும், அதாவது எந்த ஒரு காரியத்தினுடைய விளைவும் நன்மையானதாகக் காணப்படும் என்று நாம் ஏற்றுக்கொள்வோமானால் மற்றும் அந்த விளைவுகளுக்கு நேராக நாம் தெய்வீகப் பராமரிப்பினால் வழிநடத்தப்படுகின்றோம் என்று உணர்ந்துகொள்வோமானால், தெய்வீகப் பராமரிப்பினால் பயன்படுத்தப்பட்ட கருவிப் போன்றவர்களிடத்தில் நாம் மிகவும் தயாளத்துடனும், மிகுந்த இரக்கத்துடனும் நடந்துகொள்வோம், அதுவும் அந்தக் கருவியானவர்கள் வேண்டுமென்றே கருவியாகாதவர்களாய் இருந்தாலும் அல்லது யோசேப்பின் சகோதரர்கள் போன்று திட்டமிட்டுப் பொல்லாப்புச் செய்கின்றவர்களாய் இருந்தாலும், நாம் அவர்களிடத்தில் மிகுந்த தயாளமும், மிகுந்த இரக்கமும் உள்ளவர்களாய் நடந்துகொள்வோம். இப்படியாக ஜீவியத்தின் காரியங்களையும், தங்கள் அனுதின ஜீவியத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் சக்திகளையுங்குறித்து, மேற்கூறப்பட்டுள்ள கண்ணோட்டத்தின்படி பார்க்க முடிகின்றவர்களால், அப்போஸ்தலர் கூறுவதுபோன்று, “கர்த்தருக்குள் எப்பொழுதும் வெற்றி சிறக்கப்பண்ண” முடியும்; மேலும் இத்தகையவர்களிடத்தில், சாத்தானுக்கும், அவனுடைய ஊழியர்களுக்கும் எதிரான எந்தக் கசப்போ (அ) தூஷணங்களோ காணப்படுவதில்லை (2 கொரிந்தியர் 2:14; யூதா 9 (refs2)).
[R2896 : page 332]

இதன் அர்த்தமாவது இத்தகையவர்கள் தீமையான நடக்கைகளை நல்லவை என்று கருதுவார்கள் என்பதாக இல்லை; இன்னுமாக இத்தகையவர்கள் தீமையான நடக்கைகளை ஆதரிப்பதாகவோ அல்லது ஆதரிக்க வேண்டுமென்றோ, தீமையான நடக்கைகளைத் தூண்டும் தீமையான நோக்கங்களையும் ஆதரிப்பதாகவோ (அ) ஆதரிக்க வேண்டுமென்றோ, தீமையான நோக்கங்களுக்கும், தீமையான நடத்தைகளுக்கும் இசைவாகக் காணப்படும் தீமையான நபர்களையும் ஆதரிப்பதாகவோ (அ) ஆதரிக்க வேண்டுமென்றோ அர்த்தப்படுவதுமில்லை. மாறாக இதன் அர்த்தமாவது இத்தகையவர்களுடைய மனங்களானது, தங்களுடைய வாழ்க்கையிலுள்ள தெய்வீக மேற்பார்வைப்பற்றின எண்ணங்களினாலும், எவ்வாறு தாங்கள் எப்பொழுதும் சர்வ வல்லமையுள்ளவருடைய நிழலின் பாதுகாப்பான பராமரிப்பின் கீழ்க் காணப்படுகின்றார்கள் என்பது பற்றின எண்ணங்களினாலும், அனைத்துக் காரியங்களும் வெளிப்புறத்தில் எப்படியாகக் காணப்பட்டாலும், அனைத்தும் தங்களுடைய நன்மைக்கு ஏதுவாகவே நடக்கின்றது என்பது பற்றின எண்ணங்களினாலும் மிகவும் நிறைந்திருக்கும் என்பதேயாகும்; இன்னுமாக சர்வ வல்லமையுள்ளவரின் ஆற்றலினால் நன்மைக்கு ஏதுவாய் மாற்றப்பட்ட தீமையான நோக்கங்களையும், நடத்தைகளையும் உடையவர்கள் மீது, அதாவது தங்களுக்குத் தீமைச் செய்ய முயன்றவர்கள் மீதும், தீமையைப் பகீரங்கமாய் நடப்பித்தவர்கள் மீதும் இருதயத்திலோ (அ) வார்த்தைகளிலோ எவ்விதமான கசப்பும் கொண்டிருக்க மாட்டோம் என்றுள்ள எண்ணங்களினால், இத்தகையவர்களின் மனங்கள் நிறைந்திருக்கும் என்பதேயாகும். எந்தளவுக்கு கர்த்தருடைய ஜனங்கள் காரியங்களைப் பரந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதற்குரிய இந்த உயர்வான நிலையை அடைவார்களோ, அவ்வளவாய் இவர்கள் தங்களை எதிர்ப்பவர்களிடத்தில் கோபம், வன்மம், பகைமை, கொள்வதிலிருந்து விடுதலையாவதோடு மாத்திரமல்லாமல், “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானமானது,” இவர்களது இருதயங்களை ஆளுகை செய்து மற்றும், ஜீவியத்தின் சகல புயல்கள் மற்றும் சூழ்நிலைகள் மத்தியிலும் இவர்களைப் பாதுகாப்பாய்க் காத்துக்கொள்ளும், ஏனெனில் இவர்களது நம்பிக்கையானது திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்ம நங்கூரமாய் இருக்கின்றது. இவர்கள், “கர்த்தர் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்தியுள்ளார்கள்;” ஆகையால் இவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாய்க் காணப்பட முடியும்.

யோசேப்பினுடைய இந்த நடக்கையானது, தேவனுடைய பார்வையில் சரியான ஒன்றாகவும், சரியான மனநிலையில் காணப்படும் அனைவரின் பார்வையில் சிறந்த ஒன்றாகவும், யோசேப்பினுடைய சகோதரர்கள் தொடர்புடைய விஷயத்திலும், அவர்களுக்கான ஆறுதலின் விஷயத்திலும், அவர்களுக்கான சமாதானத்தின் விஷயத்திலும், அவர்கள் யோசேப்பினிடத்தில் அன்பு காட்டத்தக்கதாகவும், ஆசீர்வாதமான ஒன்றாகவும் காணப்பட்டதோடல்லாமல், யோசேப்பும் சமாதானம், சந்தோஷம், ஆசீர்வாதம் அடைவதற்கு ஏதுவான சரியான மற்றும் சிறந்த நடக்கையாகவும் காணப்பட்டது. யோசேப்பு தன்னுடைய சகோதரர்களுடைய பயங்களை அகற்றி, அவர்களை ஆறுதல்படுத்தி, அவர்களிடம் அன்பாய்ப் பேசி, தகப்பனாகிய யாக்கோபு உயிரோடிருந்தபோது, கொடுக்கப்பட்ட அதே பராமரிப்புக் கொடுக்கப்படும் என்று அவர்களுக்கும், அவருடைய குடும்பங்களுக்கும் வாக்களித்துக்கொடுத்தபோது, யோசேப்பு தன்னுடைய சொந்த இருதயத்திற்கும் மிகுந்த ஆசீர்வாதத்தையும், ஆறுதலையும் அடையப்பெற்றவராய்க் காணப்பட்டார். இதைப்பற்றி அனைவருக்கும் தெரியாது; ஒரு மனிதனால் செயல்படுத்த முடிகின்ற மிக உயரிய குணலட்சணமும், அதேசமயம் அதிகளவிலான ஆசீர்வாதங்களை அதனோடுகூடக்கொண்டு வருகின்றதுமான குணலட்சணமும் என்னவென்றால், தேவனுக்கொத்த குணலட்சணமாகிய இரக்கத்தையும், பரிவையும், பரந்த மனப்பான்மையையும் செயல்படுத்துவதேயாகும். ஆவிக்குரிய இஸ்ரயேலர்கள் மத்தியில் இப்படியான குணலட்சணங்களைச் செயல்படுத்தாதவர்கள், ஆவிக்குரிய வளர்ச்சியில் அதிகம் வளர்ச்சியடையாதவர்களாகவே காணப்படுகின்றனர் மற்றும் இப்படியான குணலட்சணங்களைச் செயல்படுத்தியுள்ளவர்கள், “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்றும், “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்” என்றுமுள்ள கர்த்தருடைய வார்த்தைகளின் உண்மையை உணர்ந்துகொண்டவர்களாகக் காணப்படுவார்கள்.

அடுத்துவரும் வசனப்பகுதிகளானது, யாக்கோபின் மரணம் துவங்கி, யோசேப்பின் மரணம் வரையிலான, ஐம்பத்தி நான்கு வருடங்களின் காரியங்களை உள்ளடக்கியதாக இருக்கின்றது. மேலும் இவ்வசனப்பகுதிகளானது, யோசேப்பினுடைய உறுதியான குணலட்சணத்திற்கும் மற்றும் அவரது அனுபவங்கள் வாயிலாக, அவரைப் பாதுகாப்பாய்ச் சுமந்துவந்த கொள்கைக்கு அவர் கொண்டிருந்த உண்மைக்கும் அஸ்திபாரமாகக் காணப்படுவது, தேவன் மீதும், ஆபிரகாமின் வாக்குத்தத்தத்தின் மீதும் அவர் கொண்டிருந்த விசுவாசமே என்ற சான்றுகளைத் தவிர, மற்றபடி சுருக்கமான தகவல்களையே கொடுக்கின்றதாய் இருக்கின்றது. இதை நாம் கடந்த காலங்களிலும், இன்றும் பார்க்க முடிகின்றது; கர்த்தருடைய உண்மையான ஜனங்களாய் இருந்தவர்கள், சுவிசேஷத்தில் நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையினாலேயே ஏவப்பட்டு, இயக்கப்பட்டவர்களாய்க் காணப்படுகின்றனர். இந்த நம்பிக்கையைக் குறித்துதான் அப்போஸ்தலர், “நிலையும், உறுதியுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது” என்று குறிப்பிடுகின்றார்; இந்த நம்பிக்கையானது ஜீவியத்தின் புயல்களிலும், துன்பங்களிலும் உறுதியாயும், நிலையாயும் நிற்கச் செய்கின்றது மற்றும் நமது ஜீவியங்களானது, பாவம், வஞ்சனை, சந்தேகம், சுயநலம் முதலிய பாறைகளில் மோதி, நொறுங்கிப்போய்விடாதபடிக்குத் தடுக்கின்றது (எபிரெயர் 6:19).

தெய்வீக வாக்குத்தத்தங்கள் மீது யோசேப்புக் கொண்டிருந்த மதிப்பே, அவர் போத்திபாரின் விசாரணைக்காரனாக இருந்தபோதும், சிறையில் இருந்தபோதும், மீண்டுமாக பார்வோனின் பிரதிநிதியாக, அரியணையில் இருந்தபோதும், உண்மையாய் இருக்க வைத்தது என்பதை யார்தான் ஒப்புக்கொள்ளாமல் இருப்பார்கள்? எந்தளவுக்குப் பரம வாக்குத்தத்தங்களானது, நமது மனங்களுக்கு முன்பாகக் காணப்படுகின்றதோ, அவ்வளவாய்ப் பூமிக்குரிய மற்றும் சுயநலமான இலட்சியங்களானது குன்றிப்போய், நம்மீது வைத்துள்ள ஆதிக்கத்தை இழக்கின்றது. தேவன் ஆபிரகாமுக்குப் பண்ணிய வாக்குத்தத்தத்தின் மீதும், கானான் தேசத்தின் மீதும் மையம் கொண்டுள்ள யோசேப்பினுடைய விசுவாசக் கண்களானது, ஆற்றல்மிக்க தாக்கத்தைக் கொண்டிருந்தது, ஏனெனில் தேவனுக்கு நண்பனாகவும், தேவனுடைய வாக்குத்தத்தத்திற்கான சுதந்தரவாளியாகவும் வேண்டுமெனில், தேவன் அங்கீகரிக்கத்தக்கதான தூய்மையை இருதயத்திலும், ஜீவியத்திலும் கொண்டிருக்க வேண்டுமென்று யோசேப்பு உணர்ந்திருந்தார். இந்த வாக்குத்தத்தங்கள் தனது தகப்பனாகிய யாக்கோபினிடத்திலும், தாத்தாவாகிய ஈசாக்கினிடத்திலும், கொள்ளுதாத்தாவாகிய ஆபிரகாமினிடத்திலும் கொண்டிருந்த தாக்கத்தை/ ஆதிக்கத்தை யோசேப்பு கண்டிருந்தார். மேலும் அதே வாக்குத்தத்தமானது யோசேப்பினிடத்திலும் ஆதிக்கம் கொண்டிருந்ததை நம்மால் காணமுடிகின்றது. ஐசுவரியங்கள், உயர் பதவிகள் மற்றும் அதிகாரத்தைச் சுயநலமாய் அடையத்தக்கதாக, நீதி மற்றும் சத்தியத்தின் கொள்கைகளைப் தியாகம் செய்திட விரும்புமளவுக்கு, இன்றைய காலங்களில், இந்த ஐசுவரியங்களினாலும், பதவிகளினாலும், அதிகாரங்களினாலும் மயக்கப்பட்டவர்கள், தங்கள் ஜீவியத்தின் மீது ஆதிக்கம் செலுத்தத்தக்கதான ஆபிரகாமுக்குரிய வாக்குத்தத்தம் மற்றும் சத்தியத்தின் ஆற்றலற்றுத் தாங்கள் காணப்படுகின்றார்கள் என்பதை நிரூபிக்கின்றவர்களாய் இருக்கின்றனர். ஒருவேளை ஆபிரகாமுக்கான வாக்குத்தத்தமானது, யோசேப்பினுடைய மனதில் அவ்வளவுக்குத் தாக்கம் கொண்டதாய் இருக்கவில்லையெனில், யோசேப்பு எகிப்தினுடைய அரியணையை அடைய திட்டம் தீட்டியிருப்பார் அல்லது தனது சகோதரர்கள் மீது அதிகாரம் கொண்டு, எஜமானாய் இருப்பதற்கான திட்டம் தீட்டியிருப்பார், மாறாக வாக்குத்தத்தத்திற்குப் பின்பாக தேவனே செயல்படுகின்றார் என்பதை உணர்ந்திருந்த யோசேப்பு, அதற்காகக் காத்திருந்தார்; அதை அவர் எண்ணிப்பார்க்க முடியாத மாபெரும் மற்றும் அருமையான ஆசீர்வாதமெனக் கருதி, அதற்காகக் காத்திருந்தார். எகிப்திலிருந்து கானான் தேசத்திற்குப் போய்விடலாம் என்றும் யோசேப்பு எண்ணிக்கொள்ளவில்லை; ஏனெனில் தேவன் ஆபிரகாமுக்குத் தரிசனமாகி, அவருடைய சந்ததியார் எகிப்திலே காணப்படுவார்கள் என்றும், அங்குத் துன்பப்படுவார்கள் என்றும், நானூறு ஆண்டுகள் காலம் எகிப்திலே குடியிருப்பார்கள் என்றும் கூறியிருந்ததை, யோசேப்பு நன்கு அறிந்திருந்தார்.

ஆகவே தேவன் மீதான மற்றும் ஆபிரகாமின் அந்த வாக்குத்தத்தத்தின் மீதான யோசேப்பினுடைய நம்பிக்கை என்பது, மரணத்திலிருந்துள்ள உயிர்த்தெழுதல் மூலமான நம்பிக்கையாகவே இருந்தது; இது அவருக்கு விலையேறப் பெற்ற படிப்பினைகளைக் கற்றுக்கொடுத்திருந்தாலும், உயிர்த்தெழுதல் பற்றியும், தேவனுடைய வல்லமைப் பற்றியுமான யோசேப்பினுடைய பூரணமற்ற புரிந்துகொள்ளுதலின் காரணமாகவே, தேவனுடைய தயவு இஸ்ரயேலர்கள் மீது கடந்துவந்து, இஸ்ரயேல் விடுதலையடையும்போது, இஸ்ரயேலர்கள் தன்னுடைய எலும்புகளை எகிப்திலிருந்து, கானானுக்கு எடுத்துச் செல்ல வேண்டுமென்று குறிப்பாய் யோசேப்பு கட்டளையிடுகின்றார். ஆவிக்குரிய இஸ்ரயேலனும் தற்காலத்தின் லௌகீக/உலகப்பிரகாரமான தாக்கங்களிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமாயின், கர்த்தருக்கு உண்மையுள்ளவனாய்க் காக்கப்பட வேண்டுமாயின், குணலட்சணம் தொடர்புடைய உயர்வான கொள்கைகளுக்கு உண்மையுள்ளவனாய்க் காக்கப்பட வேண்டுமாயின், அவன் மரணத்திலிருந்துள்ள உயிர்த்தெழுதலின் வாயிலாக, எதிர்காலத்தில் நிறைவேறக்கூடிய தெய்வீக வாக்குத்தத்தங்களில் தனது மனதை மையம் கொண்டிருக்கச் செய்ய வேண்டும். எதிர்க்கால இராஜ்யத்தின் மீதும், எதிர்க்கால கனம் மீதும், எதிர்க்கால மகிமையின் மீதும், எதிர்க்கால ஐசுவரியங்கள் மீதுமான இந்த விசுவாசம் என்பது, இந்தத் தற்காலத்தினுடைய கனம் மற்றும் மகிமை மற்றும் ஐசுவரியங்களின் முக்கியத்துவத்தைக் குறைத்துப்போடுகின்றதாய் இருந்து, உண்மையான அனைத்து விசுவாசிகளையும் கனம், மகிமை, ஐசுவரியம் தொடர்புடைய விஷயங்களில், உலகத்திலிருந்து பிரித்துவிடுகின்றது; மேலும் இவ்வாறாக அவர்கள் இந்தத் தற்காலத்தின் காரியங்களை நியாயமான மற்றும் உணர்ச்சிவசப்படாத கண்ணோட்டத்திலிருந்து சிந்தித்துக்கொள்ளத்தக்கதாக ஆயத்தப்படுத்தப்படுகின்றனர்; இன்னுமாக அவர்கள் மிகவும் ஆற்றலுள்ள சுயநலத்தினுடைய உடனடி தாக்கங்களிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர்; எனினும் வாக்குத்தத்தத்தில் தங்களுக்கு விசுவாசம் இருந்தபோதிலும், இன்னமும் சரீரத்தைக் கீழ்ப்படுத்தி வைப்பதின் அவசியத்தையும், சுயநலத்திற்கு நேரான சரீரத்தின் இயல்பான தன்மைகளை அழிப்பதின் அவசியத்தையும், அவர்கள் காண்கின்றனர்.
[R2896 : page 333]

நம்முடைய ஆதார வசனம், இப்பாடத்திற்குப் பொருத்தமானதாய்க் காணப்படுகின்றது மற்றும் ஆவிக்குரிய இஸ்ரயேலன் கவனிக்க வேண்டிய முக்கியமான காரியமாகவும் காணப்படுகின்றது. தற்கால ஜீவியம் தொடர்புடைய விஷயத்தில், நம்முடைய நாட்கள் எண்ணப்பட்டவைகளாகவே காணப்படுகின்றன. தற்கால சூழ்நிலைமைகளின் கீழ் நாம் நித்திய ஜீவனை எதிர்ப்பார்க்க முடியாது என்பதை நாம் அறிவோம்; இந்த அறிவு தொடர்புடைய விஷயத்தில், உலகமானது வெகுத் தொலைவில் காணப்படுகின்றது மற்றும் கிறிஸ்தவர்கள் சாதாரணமான நிலையில் காணப்படுகின்றார்கள்; கிறிஸ்தவர்கள் மத்தியில் ஒருவன் தனக்குள்ளாகக் கூறிக்கொள்வதாவது, “வாழ்க்கை என்பது குறுகிய காலம் உடையதாகும் மற்றும் நான் இந்த வாழ்க்கையைப் பற்றிப்பிடித்து, என்னால் முடிந்தமட்டும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்பதேயாகும். மற்றவனோ பரத்திலிருந்து வருகின்ற மேலான ஞானத்தை உடையவனாக, தனது சொந்த குறைவுகளையும், இயலாமைகளையும் உணர்ந்துகொண்டு, கல்லறைக்கும் அப்பாலுள்ள உயிர்த்தெழுதலின் ஜீவன், அதாவது நித்திய ஜீவன் தொடர்புடைய கர்த்தருடைய செய்திக்குச் செவிசாய்த்து, தற்போதுள்ள ஜீவியம் குறித்தும், எதிர்க்காலத்தில் வரவிருக்கும் ஜீவியம் குறித்துமுள்ள ஞானத்திற்குமான விண்ணப்பத்துடன் கர்த்தரிடத்திற்குச் செல்கின்றான்.

அவனுடைய விண்ணப்பத்திற்கு இணங்க, அவன் நித்தியமான ஜீவனைப்பற்றி அதிகமதிகமாய் உணர்ந்துகொள்ளுவதற்கும், சிருஷ்டிகருக்குப் பிரியமானதாகவும், நித்தியமான ஜீவனாகிய பலனை அடைவதற்குக் காரணமாகவுமுள்ள குணலட்சணங்களைக் கட்டியெழுப்புவதற்கென நேரத்தையும், பெலத்தையும் செலவிடுவதற்கும், வாழ்க்கையின் அனுபவங்கள் வாயிலாக தேவனால் கற்றுக்கொடுக்கப்படுகின்றான். கிறிஸ்தவன் தன்னுடைய நாட்களை உணர்ச்சிவசப்படாத நிலையில்/மனக்கலக்கமுறாமல் எண்ணிக்கொள்கின்றானே ஒழிய, கவலையுடனோ (அ) துக்கத்துடனோ தன்னுடைய நாட்களை எண்ணிக்கொள்வதில்லை. “இருளிலிருந்து, தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு நம்மை அழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிப்பதற்கும்,” இந்த இடுக்கமான வழியின் பிரயாணத்தில், நம்மோடுள்ள மற்றவர்களுக்கு உதவியளிப்பதற்கும், தேவனுடைய பார்வையில் மிகவும், பிரியமாய்க் காணப்படும் குணலட்சணங்களைத் தனக்குள் அதிகமாய் வளர்த்துக்கொள்வதற்கும், தேவனுடைய பிரியமான குமாரனுக்கு ஒத்தச் சாயலை அதிகமதிகமாய், தான் அடைவதற்குமான அநேகம் ஆசீர்வாதங்களாகவே, அநேகம் சிலாக்கியங்களாகவே, அநேகம் வாய்ப்புகளாகவே இருக்கின்றது எனக் கிறிஸ்தவன் தன்னுடைய நாட்களை எண்ணிக் கொள்கின்றான்/கணிக்கின்றான். இப்படியாக விரைவாகக் கடந்து போய்க்கொண்டிருக்கும் நாட்களை எண்ணிக்கொள்கின்றவனாகவும், அந்த நாட்களை தான் எவ்விதத்தில் தெய்வீக அறிவுரைகளுக்கு இசைவாகப் பயன்படுத்துகின்றான் என்பதைக் கூர்ந்து கவனிப்பவனாகவும் காணப்படும்போது, இறுதியில் இராஜ்யத்திற்காகவும், முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையும் போதுள்ள அனைத்து மகிமைகளின் முழுமையான நிறைவேறுதலுக்காகவும் ஏங்கும் இருதய நிலைக்கு வருவான். மேலும் இக்கண்ணோட்டத்தின்படி, அவன் மகிழ்ச்சிகரமாய்க் கடந்துபோகும் நாட்களை எண்ணுகிறவனாய் இருந்து, தனது தற்கால பிரயாணத்தினுடைய வருடங்கள் முடிவடைகையில் மகிழ்ச்சியடைவான். காரணம் கர்த்தரிடத்திலும், அவருடைய திட்டத்தின் மகிமையான அம்சங்களிலுமுள்ள, அவனது நம்பிக்கையானது, தினந்தோறும் பலமடைந்து வருகின்றது மற்றும் தெளிவடைந்து வருகின்றது மற்றும் பிரகாசமடைந்து வருகின்றது.