R3971 (page 106)
ஆதியாகமம் 37:5-28
“வைராக்கியமும், விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும், சகல துர்ச்செய்கைகளுமுண்டு.” ― யாக்கோபு 3:16
யோசேப்பு பற்றின வேதாகமக் கதையானது எந்த ஒரு காலப்பகுதியிலும், எந்த ஒரு மொழியிலும், இலக்கியத்தினால் அறியப்பட்டிருக்கும் மிகவும் சுவாரசியமானவைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. இப்பாடத்தில் நாம் பார்க்கயிருக்கின்ற பகுதியானது, (tragedy) துன்பியல் / சோக நிகழ்ச்சி என்று எளிதில் பெயரிடப்படக்கூடியதாகும். இது நல்ல மற்றும் கெட்ட மனித சுபாவத்தை விளக்குகின்றது மற்றும் அதன் பல்வேறு நிழல்களிலும், சம்பவங்களிலும் விலையேறப் பெற்ற பாடங்கள் காணப்படுகின்றது; மற்றும் அப்படிப்பினைகளில் முதன்மையானது பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுகின்றது மற்றும் ஆதார வசனத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது; அதாவது பொறாமை என்பது சீரழிந்த மனுஷீகத்தின், அதாவது சுயநலத்தின் பிரதானமான வேர்களில் ஒன்று என்பதும் மற்றும் இந்த வேரிலிருந்தே மனிதன் அறிந்திருக்கும் மிகப்பாதகமான சில தாக்கங்களும், அனுபவங்களும் அதாவது, “சகல துர்ச்செய்கைகளும்” தோன்றியுள்ளது என்பதுமாகும். இந்தக் கருத்தை நாம் தற்போது இப்பாடத்தைக் கற்கும்போது, நம் மனதில் கொண்டிருந்து, நாம் ஒவ்வொருவரும், நம்மில் நன்நெறியைச் செயல்படுத்துவோமாக. நம்முடைய விழுந்துபோன நிலைமையில் பொறாமையானது, இப்படிக் கொடூரமான பலனை உண்டுபண்ணக் கூடுமானால், கர்த்தருடைய உண்மையுள்ள பின்னடியார்கள் ஒவ்வொருவரும், இதற்கு எதிராக எவ்வளவாய் ஜாக்கிரதையுடன் காணப்பட வேண்டும். இந்த வேரிலிருந்து சிறு முளைகளைக்கூட அனுதின ஜீவியத்தில் வளருவதற்கு அனுமதிப்பது என்பது, புதுச் சிருஷ்டியாகிய தன்னை மிகவும் விபரீதமான, பின் விளைவுகளுக்கு நேராக வழிநடத்திவிடும் என்பதை ஒவ்வொருவரும் எவ்வளவாய் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதை உணர்ந்தவர்களாக, ஒவ்வொருவரும் இந்தக் களையைத் தங்களது சொந்த இருதயமாகிய தோட்டத்திலிருந்து வேரோடே அழிப்பதற்கு விழிப்பாய் இருந்திட வேண்டும். ஓர் எழுத்தாளர் பின்வருமாறு கூறியுள்ளார்…. “பொறாமை தன்னிடம் இல்லை என்று நம்புகிற ஒரு மனிதன் உண்டு; அவன் தன்னுடைய சொந்த இருதயத்தை ஒருபோதும் ஆராய்ந்து பார்க்காதவன் ஆவான்.” சுயநலத்தின் இந்தத் தீமையான வேர், ஆதாமின் பூரணமற்ற ஒவ்வொரு மகனிடத்திலும் மற்றும் மகளிடத்திலும் ஒருவேளை சாதகமான சூழ்நிலைகளில் தழைத்தோங்குகிறதாகவோ அல்லது சாதகமான சூழ்நிலை இல்லாமையினால் செயலில் அடங்கியிருக்கும் நிலையிலோ அல்லது கிருபையினுடைய வல்லமையினால் அடக்கப்பட்டதாகவோ காணப்படலாம், ஆனால் எப்படியாக இருப்பினும் சந்தேகத்திற்கிடமின்றி அது காணப்படும். தேவனுக்காக பிரதான அன்பினாலும், தன்னை அன்புகூருவது போன்று தன்னுடைய அயலானிடத்திலான அன்பினாலும் சுடர்விட்டெரியும் இருதயம் மாத்திரமே, பொறாமை தொடர்புடைய விஷயத்தில் மிகவும் வளமற்ற நிலையில் காணப்படுகின்றது மற்றும் இம்மாதிரியான இருதயத்தில் பொறாமையானது, வளருவதற்கு வாய்ப்பில்லை. தேவன் மற்றும் மனிதனிடத்திலான நம்முடைய அன்பு தணியும்போது, பொறாமையின் இந்த வேரும், மற்றும் இதனோடு இணைந்துவரும் கோபம், பகைமை, சண்டை மற்றும் சகல பொல்லாப்புகள், ஆம் கொலைப்பாதகம், அதாவது அப்போஸ்தலனால் மாம்சம் மற்றும் பிசாசின் கிரியைகள் என்றும், ஆண்டவருடைய அங்கீகரிப்பை இப்போதும், எப்போதும் பெற்றுக்கொள்ள விருப்பமுடையவர்கள் அனைவராலும் விட்டொழிக்கப்பட வேண்டுமென்றும் நமக்குக் கூறப்படுகின்றவைகள் அனைத்தும் வளர்வதற்குரிய சாதகமான சூழ்நிலையை அதிகரிக்கின்றதாய் இருக்கின்றது. நம்முடைய மாம்சத்தின் இயல்புகள் என்னவாக இருப்பினும், கர்த்தருடைய பரிசுத்த ஆவியினாலும், அன்பின் ஆவியினாலும் ஜெநிப்பிக்கப்பட்டுள்ளதான புதிய சுபாவமானது, ஆதிக்கம் செலுத்துவதையும், தேவனுடைய பிள்ளைகளென அவர் அடையாளங்கண்டு கொள்பவர்கள் மீது பொறாமை கொள்வதற்குரிய விஷயத்தில் நாம் பொறாமையை வளர்த்துவதற்கு செயலற்றவர்களாய் / வளமற்றவர்களாய்க் காணப்படுவதையும் பிதா எதிர்பார்க்கின்றார். “சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள்” (மத்தேயு 5:9).
நம்முடைய பாடத்தினுடைய சம்பவத்தின் போது, யோசேப்பு சுமார் 17-வயதை உடையவராகவும், யாக்கோபினுடைய குமாரர்களில் இளையவராகவும், தன்னுடைய தகப்பனாருக்குப் பிரியமானவராகவும் காணப்பட்டார். யோசேப்பு நற்குணமுள்ள / சாந்தமுள்ள மற்றும் யாக்கோபினால் விசேஷமாய் அன்புகூரப்பட்ட மனைவியுமான ராகேலின் குமாரனாவார். யோசேப்பின் சரித்திரமானது காண்பிப்பது போன்று, அவர் தனது தாயாருடைய நற்குணங்களையும், தனது தகப்பனாருடைய தைரியத்தையும் மற்றும் விசுவாசத்தையும் பெருமளவில் கொண்டவராகக் காணப்பட்டார். யோசேப்பினுடைய மூத்த சகோதரர்கள் கரடுமுரடானவர்கள் ஆவர்; ஆகையால் சூழ்நிலைகள் மற்றும் சந்தர்ப்பங்கள் அனைத்துமே, யோசேப்பிற்கு முன்னுரிமை கொடுக்கும் விஷயத்திலும், யோசேப்பைத் தனது பிரியமான குமாரன் என்று விசேஷமாய்க் கருதிக்கொள்ளும் விஷயத்திலும் யாக்கோபை நியாயப்படுத்தினதாகவே காணப்பட்டது. யோசேப்பிற்கு அவரது தகப்பனார் பலவருணமான அங்கியை முயன்று பெற்றுக் கொடுத்தார்; இது சில மொழிப்பெயர்ப்புகளில் பலவருணமான அங்கியென்றும், சில மொழிப்பெயர்ப்புகளில் நீளமான அங்கி (Revised Version) என்றும் வழங்கப்பெற்றுள்ளது. நீளமான அங்கிகள் என்று சொல்லும்போது, இது பல வருணங்கள் கொண்டதாக இராமல், மாறாக நீளமான கைப் பகுதியை உடைய, நீளமான அங்கியாகவும், வேலைபுரியும் ஜனங்கள் உடுத்திக்கொள்ளும் சாதாரணமான அங்கியிலிருந்து வேறுபட்டதாகவும், பிரபுக்கள் உடுத்திக்கொள்ளும் அங்கி போன்றதாகவும் கருதப்படுகின்றது. எனினும் இந்த அங்கிகள் பல வருணங்களைக் கூடப் பெற்றிருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது; ஏனெனில் எகிப்திலுள்ள சில முற்காலத்துக் கல்லறைகளில் இத்தகைய நீளமான அங்கிகளானது, பளபளக்கும் நிறங்களுள்ள பாகங்கள் ஒன்றாய் இணைக்கப்பட்டு உண்டாக்கப்பட்டத் தோற்றத்தைக் கொடுக்கின்றதாய் இருக்கின்றது; இவ்வாறாக இரண்டு மொழிப்பெயர்ப்புகளுமே சரியாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
எப்படியாக இருப்பினும் அந்த அங்கியானது தனிச் சிறப்புடையதேயாகும் மற்றும் யோசேப்பிற்கான யாக்கோபினுடைய அங்கீகாரமுடைய முன்னுரிமை தொடர்புடைய விஷயத்தில், இந்த அங்கியானது, அவரது சகோதரர்களின் பொறாமையையும் மற்றும் கசப்பையும் திடப்படுத்திட உதவினது; அவரது சகோதரர்களோ அந்த அங்கியின் மூலமாக, யோசேப்பு இறுதியில் தன்னுடைய சகோதரர்கள் மீது அதிகாரியாகவும், தனது தகப்பனாருக்குப் பின் வீட்டாரின், சந்ததியின் தலைவராகவும் காணப்படுவார் என்ற தங்களது தகப்பனாருடைய தீர்மானம் தெரிவிக்கப்படுவதை உணர்ந்தார்கள். இவ்வளவாக தெளிவாய் ஒரு தலைப் பட்சத்தை வெளிப்படுத்தின இந்தத் தகப்பன் சார்பிலான ஞானமற்றக் காரியத்தை விமர்சிப்பதற்கென்று நாம் இங்குக் கருத்துக்கள் தெரிவிக்க வேண்டாம். இப்படியாக யோசேப்பின் பட்சம் செயல்பட்டதையும், அவர் விசேஷமாய் அன்பு கூரப்பட்டதையும் நியாயப்படுத்துவதற்கு ஏதுவாக, அவரிடம் அப்பேர்பட்டதான சிறந்த பண்புகள் காணப்பட்டதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகின்றது. இந்த விஷயத்திலும், இன்னும் மற்ற விஷயங்களிலும், யோசேப்பு இயேசுவுக்கான நிழலாய் இருக்கின்றார் என்று வேத வாக்கியங்கள் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுகின்றன. இயேசு பரம பிதாவின் நேச குமாரனாகக் காணப்பட்டார் மற்றும் இயேசுவும் கூடத் தம்முடைய சகோதரர்களால் புறக்கணிக்கப்பட்டார் மற்றும் இயேசுவுங்கூட வெள்ளிக்காசுகளுக்காக விற்கப்பட்டார் மற்றும் இயேசுவுங்கூட விடுவிக்கப்பட்டார் என்று நாம் பார்க்கின்றோம்; அவர் மேல் பொறாமை கொள்ளப்பட்டது என்று நமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது (மத்தேயு 27:18; மாற்கு 15:10). இன்னுமாக யோசேப்பு, கிறிஸ்துவின் ஒட்டுமொத்த சரீரத்திற்கும் நிழலாய்க் காணப்படுகின்றார்; கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஒவ்வொரு அங்கத்தினனும், யோசேப்பின் அனுபவங்களில் அடையாளப்படுத்தப்படுகின்றனர்; மற்றும் ஒவ்வொரு அங்கத்தினனுக்கும், “பிதா தாமே உங்களைச் சிநேகிக்கிறார்” என்ற நமது கர்த்தருடைய வார்த்தைகளானது பொருந்துகின்றதாய் இருக்கின்றது (யோவான் 16:27).
கர்த்தரினால் அருளப்பட்டதாகவும், தீர்க்கத்தரிசனமானவைகளாகவும் காணப்பட்ட யோசேப்பு கண்ட சொப்பனங்களானது, அவருடைய சகோதரர்களை இன்னும் கசப்பிற்குள்ளாக்கிற்று மற்றும் அவர்களுடைய இருதயங்களில் காணப்பட்ட பொறாமை மற்றும் கசப்பின் வேர்களுக்கு உரமாகப் பயன்பட்டது. இந்தச் சொப்பனங்களில் ஒன்றில், ஒரு கோதுமை வயலில், 12 அரிக்கட்டுகள் காணப்பட்டது; அதிலொன்று நிமிர்ந்து நிற்க, அதனை சுற்றி மற்றக் கட்டுகள் மரியாதை செலுத்துவது போன்று, வணங்கி நின்றன. யோசேப்பு எவ்விதமான தீமையான எண்ணம் இல்லாமல், வெளிப்படையாகத் தன்னுடைய சகோதரர்களிடத்தில் சொப்பனத்தைக் கூறினார் மற்றும் அவர்களோ கர்த்தரிடத்தில் விசுவாசமற்றவர்களாகவும், தெய்வீகச் சித்தத்திற்கான கீழ்ப்படிதல் இல்லாதவர்களாகவும், தங்களது இளைய சகோதரன் தங்களுக்கு அதிகாரியாவது பற்றின கருத்துத் தெரிவிக்கப்பட்டதினிமித்தம் கோபமடைந்தார்கள்; “அவனை அவன் சொப்பனங்களினிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள்.” இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் “அவன் வார்த்தைகளினிமித்தம்” என்பது, யோசேப்பினுடைய சகோதரர்களில் சிலருடைய தவறான செய்கைகள் குறித்த, யோசேப்பினுடைய புகாரைக் குறிக்கின்றதாயிருக்கின்றது. நீதி, நியாயம் என்பவைகள் யோசேப்பினுடைய இயல்பான குணநலன்களில் முழுப்பங்கு வகிக்கின்றதாய்த் தோன்றுகின்றது மற்றும் அவர் தன்னுடைய சகோதரர்கள் குறித்துக் கொடுத்தப் புகாரானது, பழித்தூற்றுதலல்ல, மாறாக தன்னுடைய தகப்பனார் அவரது தொழில் இன்னவிதத்தில் நடைப்பெறுகின்றது என்பதைத் தெரிந்துகொள்வது ஏற்றக் காரியம் என்று கருதி மாத்திரம் யோசேப்பு புகார்க் கொடுத்தார் (ஆதியாகமம் 37:2).
யோசேப்பினுடைய மற்றொரு சொப்பனமானது, அவரது சகோதரர்களின் கோபத்தைத் தூண்டினது மற்றும் ஏதோ யோசேப்பினுடைய சொப்பனங்களின் பின்னாக, அவரது பேராசைக் காணப்படுவது போன்று, அவரது தகப்பனாரிடமிருந்தும் கூடக் கடிந்து கொள்ளுதலைக் கொண்டுவந்தது. எனினும் யாக்கோபு இந்தக் காரியங்களையெல்லாம் தன்னுடைய இருதயத்தில் சிந்தித்துக்கொண்டு, எதிர்க்காலத்தில் தன்னுடைய நேச குமாரன் எவ்வளவு மாபெரியவனாய் இருக்கப் போகின்றான் என்று வியந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. இந்த இரண்டாம் சொப்பனத்திலோ சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், ஒரு நட்சத்திரத்திற்கு வணங்கினது மற்றும் ஒரு நாளில் முழுக் குடும்பமுமே யோசேப்பைத் தங்களுடைய அதிகாரியாக ஒப்புக்கொள்வார்கள் என்பதாக இந்தச் சொப்பனம் புரிந்து கொள்ளப்பட்டது. இக்காரியமானது அனைவருக்கும் மற்றும் யோசேப்பிற்கும் எவ்வளவு ஒவ்வாத (இயற்கைக்கு மாறான) காரியமாகத் தோன்றியிருந்திருக்கும். பாவம் அந்த வாலிபன்! யோசேப்பினுடைய வாழ்க்கையில் பின்னர் [R3971 : page 107] அவருக்குக் கிடைத்திட்டப் படிப்பினைகளானது, இரகசியங்களை மறைத்துக்கொள்பவராக இருப்பதற்கும், அனைத்துச் சொப்பனங்களையும், நம்பிக்கைகளையும் சொல்லாமல் இருப்பதற்கும், தன்னுடைய முத்துக்களைக் குறித்துப் புரிந்து கொள்ள முடியாதவர்களும், அதினால் கோபமடைபவர்களுமானவர்கள் முன் தன் முத்துக்களைப் போடாமல் இருப்பதற்கும் அவருக்குக் கற்பித்துக் கொடுத்தது. இரகசியங்களை மறைவாய் வைத்துக்கொள்ளுதல் தொடர்புடைய விஷயத்திலுள்ள ஞானம் பற்றின படிப்பினையானது, நம் அனைவருக்கும் எத்துணை அவசியமானதாகக் காணப்படுகின்றது. இதற்கான உதாரணமாக, “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்;” என்று கூறின நமது கர்த்தர் காணப்படுகின்றார் (யோவான் 16:12). பேசுவதற்கு ஒரு காலமுண்டு மற்றும் பேசாமல் அடக்கிக்கொள்வதற்கு ஒரு காலமுண்டு; ஆகையால் நாம் அனைவரும் விழித்திருந்து, “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” என்று ஜெபம் பண்ணுவது அவசியமாகும் (சங்கீதம் 141:3).
தெய்வீக ஏவுதலினாலான சொப்பனங்கள் பற்றின வேத வாக்கியங்களின் பதிவுகளானது நம் முன் இருக்க, சொப்பனங்களைத் தாக்கிப் பேசுவதும், அவைகள் கவனம் செலுத்தப்படுவதற்குப் பாத்திரமற்றவைகள் என்று தெரிவிப்பதும் அறிவீனமான காரியமாக இருக்கும். யோசேப்பினால் அர்த்தங்கள் விவரிக்கப்பட்ட மற்ற அற்புதகரமான சொப்பனங்களையும், யாக்கோபு, பேதுரு, பவுல் முதலானவர்களின் சொப்பனங்களையும் நாம் நினைவுகூருகின்றோம். ஆனாலும் சொப்பனங்களுக்கு அளவு மீறிய முக்கியத்துவம் கொடுத்துவிடாதபடிக்கும் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். முற்காலங்களில் சொப்பனங்களுக்கான தேவை இருந்தது என்றும், அவ்விதமான தேவை தற்காலத்தில் இல்லையென்றும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்; அவ்விதமான தேவை தற்காலத்தில் இல்லாததற்கான காரணம் சுவிசேஷ யுக சபையானது, தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கும்படிக்கு எதிர்பார்க்கப்படுகின்றனர்; அதாவது நீதியின் பாதை சுட்டிக்காட்டப்படுவதற்கென ஓர் அற்புதத்தையோ (அ) சொப்பனத்தையோ அவர்கள் எதிர்ப்பார்க்காமல், தங்களுக்குப் பின்னாலே “வழி இதுவே” என்று சொல்லும் சத்தத்திற்குக் கவனமாய்க் கேட்பதே அவர்களிடம் எதிர்ப்பார்க்கப்படுகிறது. நமக்கான பாதையானது, தெய்வீக வார்த்தைகளில் சுட்டிக்காண்பிக்கப்பட்டுள்ளது மற்றும் நாம் சரியான வழிகாட்டுதலைப் பெற்றிருக்கத்தக்கதாக நம்முடைய இருதயங்களுடைய கவனிக்கும் தன்மையை நாம் வளர்த்திட வேண்டும். இதற்கு இசைவாகவே வேதவாக்கியங்களானது, “சொப்பனங்கண்ட தீர்க்கத்தரிசி சொப்பனத்தை விவரிப்பானாக என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக” என்று கூறுகின்றது (எரேமியா 23:28). சொல்வதற்கென்று மேலானதாய் நமக்கு வேறு எதுவும் இல்லையெனில், அதாவது நேரடியானதாகவும், அதிகாரப் பூர்வமானதாகவும் சொல்வதற்கு எதுவும் இல்லையெனில், சொப்பனமானது தெரிவிக்கப்படலாம்; ஆனாலும் நம்முடையதும், மற்றவர்களுடையதுமான சொப்பனங்கள் அனைத்திற்கும் மேலாக கர்த்தருடைய வார்த்தைகள், அவருடைய வெளிப்படுத்தல்கள், அவருடைய ஏவுதலின் பேரிலான சாட்சியங்களும் வைக்கப்பட வேண்டுமென்று மேற்கூறப்பட்ட வசனத்தில் கர்த்தர் தெரிவிக்கின்றார். ஒரு வேளை ஒரு சொப்பனமானது தேவனுடைய வார்த்தைகளின் தெளிவான காரியங்கள் எதையேனும் வலியுறுத்துகின்றதானால், அது ஒரு நிழல் பார்க்கப்படுவது போன்று, பார்க்கப்படலாம் மற்றும் பயன்படுத்தப்படலாம், அதாவது உபதேசத்தையோ அல்லது கடமையையோ போதிப்பதற்காக அல்லாமல், மாறாக வேதவாக்கியங்கள் மீது கவனத்தைத் திருப்புவதற்கும் மற்றும் தெளிவாக்குவதற்கும் பயன்படுத்தப்படலாம்.
உண்மைகள் பற்றின விவரம் / புகார் தெரிவித்ததிலுள்ள யோசேப்பினுடைய உண்மைத் தன்மையானது, அவரை யாக்கோபு மேற்பார்வையாளராக ஏற்படுத்துவதற்கு ஏதுவாக வழிநடத்தினது மற்றும் இதன் காரணமாகவே யோசேப்பு, மூன்று நாள் பயணமாக, தன்னுடைய சகோதரர்களுக்கு சில வீட்டு உணவுகளை எடுத்துச் செல்வதற்கும், அவர்களது நிலவரங்களைப் பற்றியும், மந்தைகளினுடைய வளமை பற்றியும், [R3972 : page 107] மேய்ச்சல் நிலவரங்கள் முதலியவைகள் பற்றியுமான மறு செய்தியினை யாக்கோபினிடத்திற்குக் கொண்டுவருவதற்குமெனச் சீகேமுக்கு யாக்கோபினால் அனுப்பி வைக்கப்பட்டார். சீகேமிலே தன்னுடைய சகோதரர்களைக் காணமுடியாததினாலே, யோசேப்பு தோத்தானுக்குப் போனார்; மற்றும் இவைகள் அனைத்திலும் யோசேப்பு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் உடையவராகவும், அக்கால வழக்கத்தின்படி இரவு வேளைகளில் திறந்த வெளியில் உறங்கினவராகவும், வழியிலுள்ள அபாயங்களை மனத்துணிவுடன் சந்தித்தவராகவும் காணப்பட்டது வெளிப்படுகின்றது. இதுவுங்கூட, யாக்கோபு தன்னுடைய நேசகுமாரனிடத்தில் கொண்டிருந்த அன்பானது, அவர் யோசேப்பை முற்றிலுமாகச் சீரழித்துப்போடுவதற்கு வழிநடத்தவில்லை என்பதையும், யோசேப்பு தன்னைத்தான் பராமரித்துக்கொள்ள முடிகின்றவராக யாக்கோபினால் நம்பப்பட்டார் என்பதையும் நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது. இன்றைய காலங்களில் அநேகமாக பெற்றோர்கள் ஞானமற்றவர்களாக நடந்துகொண்டு, தங்களின் அதிகப் பிரியத்திற்குரிய பிள்ளைகளிடத்தில் தைரியத்தையும், உறுதியையும் வளர்த்திவிடுவதற்குத் தவறிப்போய்விடுகின்றனர் மற்றும் பிற்காலங்களில் பிள்ளைகளுக்கு மிகவும் பாதகமாய்க் காணப்படத்தக்கதாக, சில சமயங்களில் பிள்ளைகளைச் சில சிரமங்களிலிருந்து மூடி மறைத்துக் காத்துவிடுகின்றனர்.
மேய்ப்பர்களாய் இருந்த சகோதரர்கள், மந்தைகளைத் தாக்குவதற்குரிய துஷ்டமிருகங்கள் வருகின்றதா என மிகவும் கவனமாய்ச் சுற்றி நோக்கும் பழக்கமுடையவர்களாய் இருந்தார்கள் மற்றும் தங்களது சகோதரனைத் தொலைவில் வரும்போதே அடையாளங்கண்டு கொண்டார்கள். உடனடியாக அங்கிருந்த சந்தர்ப்பங்களும், சூழ்நிலைகளும் அவர்களது பொறாமை மற்றும் கசப்பினுடைய வேரினை வேகமாய் முளைப்பதற்குப் பண்ணிற்று மற்றும் சில நொடிகளுக்குள்ளாக அது முளைவிட்டு அவர்களது இருதயங்களில் கொலைப் பாதகத்தின் ஆவியைக் கொண்டுவந்தது. பத்தில் ஒன்பது பேர், தங்கள் சகோதரனைக் கொல்வதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டார்கள். மறுப்புத் தெரிவித்தவரும் அதுவும் மறைமுகமாகத் தெரிவித்தவருமான ஒரே நபர் ரூபன் ஆவார் மற்றும் இவர் தன்னுடைய சகோதரர்களின் கசப்பினை நன்கு அறிந்தவராக இருந்தபடியால், அவர்களை எதிர்ப்பதற்குத் துணிந்தார் மற்றும் அவர்கள் யோசேப்பைக் கொல்லாமல், அப்பகுதிகளில் காணப்பட்ட வறண்ட குழிகளுள் ஒன்றில் போடும்படிக்கான மாற்று யோசனையையும் இவர் வலியுறுத்தினார்; இவர் பிற்பாடு வந்து இரகசியமாய் யோசேப்பை விடுவிக்கலாம் என்று தன் இருதயத்தில் திட்டம் பண்ணினவராகக் காணப்பட்டார்.
இந்தச் சகோதரர்களில், சுபாவ மனிதனுடைய இருதயம் விவரிக்கப்படுவதைக் காணமுடிகின்றது, அதாவது ஒரு சமயம் நீதிக்காகப் போராடுவதையும் மற்றும் கொஞ்சம் காலத்திற்குப் பிற்பாடு நீதியின் அனைத்துக் கொள்கைகளையும் மீறுவதையும் காணமுடிகின்றது. சகோதர சிநேகம் அனைத்தையும் இத்தருணத்தில் மீறி, தங்களது சகோதரனைக் கொன்று போடுவதற்குத் திட்டம் பண்ணின இதே மனிதர்கள்தானே, கொஞ்ச காலத்திற்கு முன்னதாக ஒரு முழு ஊரின் ஜனங்களைக் கொன்றுபோட்டதன் மூலம் தங்கள் சகோதரி அவமானப்படுத்தப்பட்டக் காரியத்துக்குப் பழித் தீர்த்தார்கள்? இப்படி அந்த ஊர் ஜனங்களைக் கொன்றுபோடுவதானது பாவத்திற்கு எதிரான நீதியான கோபம் என்று இதே மனிதர்கள்தானே கொஞ்சங்காலத்திற்கு முன்னதாக எண்ணினார்கள்? விழுந்துபோன மாம்சத்தினுடைய இம்மாதிரியான மூர்க்கத்தனமான நடவடிக்கைகளைச் சரிசெய்துகொள்வதற்குப் பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் ஏவுதல் / தாக்கம் அவசியமாய் உள்ளது; ஆகவே தான் பரிசுத்த ஆவியினால் மீண்டுமாக ஜெநிக்கப்பட்டவர்கள் மாத்திரமே “தெளிந்த புத்தியுள்ள ஆவியை” உடையவர்களாய் இருப்பார்கள் என்று வேதவாக்கியங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன (2 தீமோத்தேயு 1:7). உண்மையில் சுபாவபடியான மனுஷனிடத்தில் பெருமையானது முக்கியமானக் காரணியாகத் திகழ்கின்றது; நீதியைப் பாதுகாத்தல் எனும் வேடத்தில், ஆனால் உண்மையில் சுயநலத்தினுடைய ஓர் அம்சத்தைத் திருப்திப்படுத்துவதற்காகக் கொலைகள் புரிந்திடுவதற்குப் பெரும்பாலும் வழிநடத்துகின்றதாய் இருக்கின்றது. ஆகையால் சுயநலத்தினுடைய வேர்களில் ஒன்றாகிய பெருமையானது, சகோதரர்களை முந்தின தருணத்தின் விஷயத்தில் கொலைச் செய்திட வழிநடத்தினது. சுயநலத்தினுடைய மற்றும் ஒரு வேராகிய பொறாமையானது யோசேப்பை அவரது சகோதரர்கள் கொன்று போடுவதற்கு முயற்சிக்க இப்பொழுது வழிநடத்தினதாய் இருந்தது.
ரூபனுடைய பரிந்துபேசுதல் வெற்றிக் கண்டது. யோசேப்பு குழிக்குள் போடப்பட்டார் மற்றும் பரிதாபமான நிலையிலுள்ள யோசேப்பினுடைய கதறல்களும், கெஞ்சுதல்களும், மன்றாடுதல்களும் அச்சகோதரர்களுடைய செவிகளில் விழுந்துகொண்டிருக்கவே, அவர்கள் அப்பம் புசிப்பதற்கும், யோசேப்பு அவர்களுக்காக வீட்டிலிருந்து கொண்டுவந்த உணவுகளைப் புசிப்பதற்குமென்று கீழே உட்கார்ந்தார்கள். அவர்கள் கல் இருதயம் கொண்டவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும், அநீதியுள்ளவர்களாகவும் காணப்பட்டார்கள்; உண்மையில் சுபாவத்தின்படியான (விழுந்துபோன) இருதயமானது, பொதுவாக இரக்கமற்றதாகவே காணப்படுகின்றது. உலக ஜனங்கள் மத்தியில் வெட்கத்தின் காரணமாகவோ (அ) பயத்தின் காரணமாகவோ (அ) ஏதோ ஒரு திட்டத்தின் காரணமாகவோ, பொதுவாக இரக்கம் காணப்பிக்கப்படுகின்றது; ஆனால் அன்பின் அம்சமாக விளங்கும் இரக்கமானது, ஆதியில் மனித சுபாவத்திற்குச் சொந்தமானதாகக் காணப்பட்டிருந்தபோதிலும், மிகவும் பரவலாய்த் தொலைந்து போனதாகவும் மற்றும் தங்கள் கர்த்தரின் இருதயத்திற்கு ஒத்த சாயலில் மீண்டுமாக ஜெநிக்கப்பட்டவர்கள் மத்தியில் பிரதானமான ஆதாரமாகவும் காணப்படுகின்றது.
(குழிக்குள்) சிறைவைக்கப்பட்ட யோசேப்பினுடைய கதறல்கள், கெஞ்சுதல்கள் மற்றும் மன்றாட்டுகள் குறித்து நம்முடைய பாடம் குறிப்பிடுகிறதில்லை; ஆனால் மற்றொரு வேதவாக்கியமானது இதைத் தெரிவிக்கின்றது, அதாவது பிற்காலங்களில் “இந்தச் சகோதரர்கள்” பஞ்சத்தின் காரணமாகத் தானியங்கள் வாங்கும்படிக்குக் கானானிலிருந்து எகிப்துக்குப் போகும் நிலைக்கு ஆளானார்கள். எகிப்தில் அவர்களது சகோதரனாகிய யோசேப்பு அதிகாரியாக இருந்தார் மற்றும் அவர் அவர்களை வேவுக்காரர்கள் என்று கருதுவது போன்று நடித்து, அவர்களை மூன்று நாட்கள் சிறையிலடைத்தார். அவர்கள் அங்குக் காணப்பட்டபோது, தாங்கள் முன்பு செய்த தவறுகளினால் நினைப்பூட்டப்பட்டவர்களாகி, “நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள். அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான்” (ஆதியாகமம் 42:21,22). யோசேப்பு குழிக்குள் சிறைவைக்கப்பட்ட பிற்பாடு, அவரைப் பின்னர் வந்து விடுவிக்கலாம் என்ற நோக்கத்தில், ரூபன் [R3972 : page 108] அவ்விடத்தை விட்டுக் கடந்துபோயுள்ளதாக தெரிகின்றது; ஆனால் ரூபன் திரும்பிவந்தபோதோ, தன்னுடைய சகோதரர்கள் யோசேப்பை வணிகக் கூட்டத்தாரிடம் விற்றுப்போட்டுள்ளதையும், அந்த வணிகர்கள் யோசேப்பை அடிமையாக எகிப்துக்குக் கொண்டுபோயுள்ளதையும் அறிந்துகொண்டார்.