R2885 – துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2885 (page 313)

துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்

IN THE SCHOOL OF ADVERSITY

ஆதியாகமம் 39:20-40:15

“தேவனோ யோசேப்போடுகூட இருந்து, அவருக்கு இரக்கம் பாராட்டினார்.”யாக்கோபினுடைய பிரியமான மனைவியாகிய ராகேலுக்குப் பிறந்த பிள்ளையாகிய அன்புக்குரிய யோசேப்பே, ஆபிரகாமின் வாக்குத்தத்தங்களுக்கான விசேஷித்த சுதந்தரவாளியாக யாக்கோபினால் பார்க்கப்பட்டார் என்பதில் ஐயமில்லை. தன்னையும் மற்றும் தனக்கு எவ்வாறு தெய்வீகத் தயவானது கடந்துவந்து, தன்னை அந்த வாக்குத்தத்தத்திற்கான சுதந்தரவாளியாக்கிற்று என்பதையும் யாக்கோபு நினைவில் கொண்டிருந்தார். யாக்கோபு இந்த நம்பிக்கைகளையும், வாக்குத்தத்தங்களையும் தனது குமாரர்கள் அனைவரிடமும், விசேஷமாக தனது அன்புக்குரிய யோசேப்பிடமும் ஏறக்குறைய பகிர்ந்திருப்பார் என்பதிலும் ஐயமில்லை. யோசேப்பின் சகோதரர்களை மிகவும் கோபப்படுத்தின யோசேப்பினுடைய சொப்பனங்களானது, யோசேப்பிற்கும், அவரது தகப்பனுக்கும், யோசேப்பு ஒப்புயர்வற்ற நிலையில் காணப்படப்போவதைத் தேவன் சுட்டிக்காட்டுவதாக இருந்தது. ஆகையால் யோசேப்பு படுகுழிக்குள் காணப்படும் போதும் மற்றும் அவரது பலத்த கூக்குரல்களும், கண்ணீர்களும் அவரது சகோதரர்களாலும், கர்த்தரினாலும் கேட்கப்படாமல் இருந்த போதும், அது அவருக்கு மாபெரும் ஏமாற்றமாகவும், மிகுந்த மன வருத்தமாகவும் காணப்பட்டிருக்க வேண்டும். தான் அடிமையாகும்படிக்கு, இஸ்மயேலர்களிடத்தில் விற்கப்பட்டதை யோசேப்பு கண்டபோது, அது அவருக்கு மிகுந்த கசப்பான ஏமாற்றமாகவும், மனவருத்தமாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்தச் சூழ்நிலைகள் எவ்வளவுதான் ஏமாற்றம் கொடுக்கின்றதாகக் காணப்பட்டாலுங்கூட, அவைகள் நன்மைக்கு ஏதுவான அனுபவங்களாகக் காணப்பட்டதை நாம் பார்க்கின்றோம்; அதாவது அவைகள் சரியாய் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், அவைகள் யோசேப்பிற்குள் சரியான / தகுதியான குணலட்சணங்களை, அதாவது பொறுமையை, கீழ்ப்படிதலை, விசுவாசத்தை வளர்த்துவதற்கு ஏதுவானதாகக் காணப்பட்டது. அதே ஆபிரகாமின் உடன்படிக்கையினுடைய ஆவிக்குரிய அம்சங்களுக்கான சுதந்தரவாளிகளாகும்படிக்கு, நமது கர்த்தராகிய கிறிஸ்துவுடன் உடன் சுதந்தரவாளிகளாகும்படிக்கு நம்பிக்கைக் கொண்டிருக்கும் அனைவருக்கும், யோசேப்பின் அனுபவங்களிலிருந்து, நல்லப் படிப்பினைகள் உள்ளது (கலாத்தியர் 3:29). வாக்குத்தத்தம் உறுதியே மற்றும் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும் சிலாக்கியம் நமக்குரியதாகும்; ஆனால் அந்த வேலைக்காகவும், அதன் பொறுப்புகளுக்காகவும் நாம் ஆயத்தமாகுவதற்கு, நாம் தாழ்மை, பொறுமை, விசுவாசம், சகிப்புத்தன்மை ஆகியவை பற்றின படிப்பினைகளைக் கற்றுக்கொள்வது அவசியமாகும். “ஆபிரகாமின் இந்தச் சந்ததியினுடைய” தலையாகிய நமது கர்த்தர், பாவிகளால் செய்யப்பட்ட விபரீதங்களையும், சோதனைகளையும் மற்றும் பரீட்சைகளையும் சகித்து, “பூரணமானவராகவும், பரிசுத்தராகவும், மாசில்லாதவராகவும், பாவிகளுக்கு விலகினவராகவும்” இருந்தபோதிலும், மரணம் வரையிலும் பிதாவின் சித்தத்திற்கான கீழ்ப்படிதலைக் கற்றுக் கொண்டவரானார். “அவரது சரீரத்தின் அங்கத்தினர்களாகும்படிக்கு” அழைக்கப்பட்டவர்களாகிய நாம், பின்வரும் மகிமைக்குத் தகுதியடைவதற்கும், ஆயத்தப்படுவதற்கும் என்று கடுமையான பரீட்சைகள் மற்றும் சோதனைகளுக்குள் கடந்து செல்வது மிகவும் அவசியமாய் உள்ளது.எகிப்திற்கு வந்த போதும், கர்த்தருடைய ஆசீர்வாதமானது யோசேப்பின் மீது குறிப்பிடத்தக்க விதத்தில் இருந்தது, அதாவது யோசேப்பு ஐசுவரியமுள்ள எஜமானிடத்திற்கு அடிமையாக [R2886 : page 313] விற்கப்பட்ட விதத்தில் கர்த்தருடைய ஆசீர்வாதமானது யோசேப்பின் மீது காணப்பட்டது. யோசேப்பினுடைய கடந்த கால வாழ்க்கை பற்றிக் குறைவான விவரங்களே இருக்கின்றது; ஆனால் பதினேழு வயதையுடையவராக யோசேப்பு போத்திபாரின் வீட்டில் பிரவேசித்தபோது, அவர் சிறந்த / கவனத்தை ஈர்க்கின்ற வாலிபனாகக் காணப்பட்டதாகத் தெரிகின்றது. யோசேப்பினுடைய மனஉறுதியும், நிதானமும், கடமையின் விஷயத்திலான உண்மையும், அறிவுக்கூர்மையும், யோசேப்பினுடைய பிறப்பை ஆவலாய் விரும்பினவரும், யோசேப்பின் பிறப்பை வேண்டுதலுக்கான பதிலாகப் பெற்றுக் கொண்டவருமான யாக்கோபிடமிருந்து யோசேப்பு சுதந்தரித்துக் கொண்ட நல்ல பண்புகளாகும். யோசேப்பு, தன்னுடைய தகப்பனுடைய விசுவாசத்தையும், பரந்த மனப்பான்மையையும், காரியங்களைச் செயல்படுத்துவதற்குரிய திறமையையும் கொஞ்சம் சுதந்தரித்தவராக இருந்தார் மற்றும் இதன் காரணமாக யோசேப்பு போத்திபாரின் வீட்டில் மாபெரும் பொறுப்புடைய ஸ்தானத்திற்கு, அதாவது தனது எஜமானுடைய காரியங்கள் அனைத்தின் மீதும் பொறுப்பைப் பெறும் ஸ்தானத்திற்கு உயர்த்தப்பட்டார். வாலிபனாகிய யோசேப்பின் மனமானது அடிக்கடி தனது தகப்பனிடத்திற்கும், சகோதரர்களிடத்திற்கும், தன்னுடைய சொப்பனங்களினிடத்திற்கும் மற்றும் ஆபிரகாமின் உடன்படிக்கையினிடத்திற்கும் திரும்பிக்கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதில் நமக்கு ஐயமில்லை. யோசேப்பு அந்த வாக்குத்தத்தங்களில் நம்பிக்கைக்கொண்டிருந்தார் என்பதில் ஐயமில்லை மற்றும் அந்த வாக்குத்தத்தங்கள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என்றும், தன்னுடைய காரியங்களில் தெய்வீக வழிநடத்துதல்கள் எப்படியாகக் காணப்படும் என்றும் யோசேப்பு யோசனைப் பண்ணிக்கொண்டிருந்திருப்பார் என்பதிலும் ஐயமில்லை. அவருடைய வாழ்க்கை திடீரெனக் கானானுடைய வயல் வெளிகளிலிருந்து, அக்காலத்தில் மாபெரும் பட்டணங்களில் ஒன்றாகவும், அந்நாட்களின் புகழ் பெற்ற தேசத்தின் தலைநகரமாகவும் விளங்கின பட்டணங்களுடைய பாவங்கள், களியாட்டுகள், சுகபோகங்கள் மற்றும் விறுவிறுப்பான சூழ்நிலைகளுக்குள் மாற்றப்பட்டபோது, தேவன் மீதான அவரது விசுவாசமும், வாக்குத்தத்தங்கள் மீதான அவரது நம்பிக்கையும், அவரைச் சூழ்ந்த தீமையான தாக்கங்களிலிருந்து, அவர் தன்னை விலக்கிக் கொள்ள உதவினது. இப்படியாகவே அனைவருடைய வாழ்க்கையின் விஷயத்திலும் காணப்படுகின்றது; தற்கால தீமையின் உலகத்தினுடைய பலவிதமான காற்றுகளின் மத்தியில் ஜீவியத்தைக் காத்துக்கொள்வதற்கும், ஜீவியம் சீராய் இருப்பதற்கும் ஒரு கொள்கை, ஒரு நம்பிக்கை, ஒரு நல் குறிக்கோள் அவசியமாய் இருக்கின்றது. தேவ பக்தியுள்ள பெற்றோர்களினால் பயிற்றுவிக்கப்பட்டுள்ள, அதிலும் விசேஷமாக நம் முன் வைக்கப்பட்டுள்ள சுவிசேஷத்தின் நம்பிக்கைகள் தொடர்புடைய விஷயத்தில் பயிற்றுவிக்கப்பட்டுள்ள வாலிபனோ (அ) வாலிப பெண்ணோ, மற்ற வாலிபர்களைக் காட்டிலும் அனைத்து விதங்களிலும் அனுகூலம் உடையவர்களாய் இருப்பார்கள்; இந்த மற்ற வாலிபர்களோ எவ்வித விசேஷித்த நோக்கமும், இலக்கும் ஜீவியத்தில் பெற்றிராதவர்களாகவும், வாழ்க்கையைச் சமநிலையில் கொண்டிருப்பதற்கான பாரமாகிய தெய்வீக வாக்குத்தத்தங்களைப் பெற்றிராதவர்களாகவும், பொதுவாக அறிவீனமான காரியங்களுக்கு நேராகவும், அடிக்கடி பாவத்திற்கு நேராகவும், அனைவரும் இச்சிக்கும் திருப்திகளை நாடுவதற்கு நேராகவும், மாறிமாறி வீசும் காலம் எனும் காற்றினால் இங்கும் அங்குமாக அலைக்கழிக்கப்படுகின்றார்கள். தங்கள் பிள்ளைகளிடத்திலான கடமையில் கவனமற்றுக் காணப்படுகின்ற பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் தவறுகளை உடனடியாகச் சரி செய்ய முடியாது மற்றும் உண்மையான சமாதானத்தையும், சந்தோஷத்தையும், திருப்தியையும், ஜீவியத்தின் புயல்களின் மத்தியில் தேவையான சமநிலையையும் கொண்டுவருகின்ற காரியங்கள் மீது பிள்ளைகளின் மனதை பதிய வைத்திடுவதற்கு உதவிட உடனடியாகவும் முடியாது. அனுபவ பாடங்கள் அனைத்தையும், தான் கற்றுவிட்டதாகவும் மற்றும் இனிமேல் தன்னுடைய பாதை செழிப்பின் பாதையாக இருக்கும் என்பதாகவும் ஒரு வேளை யோசேப்பு எண்ணியிருந்திருப்பாரானால், அது தவறாய் இருந்திருக்கும். பிரதானியாகிய போத்திபாரின் வீட்டுக் காரியங்கள் மீதும், தொழில் காரியங்கள் மீதும் பிரதான மேற்பார்வையாளராக இருக்கும் ஸ்தானத்தைக் காட்டிலும் உயர்வான ஒரு ஸ்தானத்தைத் தெய்வீக விவேகமானது, யோசேப்பிற்குத் திட்டமிட்டிருந்தது; யோசேப்பிற்கான ஸ்தானம் உயர்வானதாக இருக்கப்போகிறதென்றால், அவர் இன்னும் கடுமையான ஒரு பள்ளிக்கூடத்தில், ஏற்றகாலத்தில் இனிமேல் அவர் மிகுதியாய் உயர்த்தப்படும் நிலைமைக்கென்று ஆயத்தப்படத்தக்கதாக, இன்னும் படிப்பினைகளைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. யோசேப்பு தன்னுடைய எஜமானுடைய நம்பிக்கையையும், தனது எஜமாட்டியினுடைய தயவையும் அனுபவித்துக் கொண்டிருக்கையில், திடீரென அவர் மேல் பெருந்துன்பம் வந்தது; அதுவும் அவர் எந்தத் தவறும் செய்யாமலும், அவர் தன்னுடைய எஜமானுக்கு உண்மையாய் இருந்ததின் காரணத்தினாலும் அவர் மேல் வந்தது. யோசேப்பு போத்திபாருடைய குரோதம் கொண்ட மனைவியினால் தவறாய்க் குற்றம் சாட்டப்பட்டார். அவர் காவலில் வைக்கப்பட்டார்; ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் காணப்படும் சிறைச்சாலைகளிலிருந்து, எகிப்தின் காவல்கள் முற்றிலும் வேறுபட்டதாய் அப்பொழுதும், இப்பொழுதும் இருக்கின்றது. எகிப்தின் காவல்கள் / சிறைகள் இருட்டாகவும், வெறுக்கத்தக்கதாகவும், பயங்கரமான இடங்களாகவும் இருந்தன் அங்குக் கைதிகள் பெரும்பாலும் கொடூரமாய் நடத்தப்பட்டனர் மற்றும் இரும்புச் சங்கிலிகளினால் கட்டப்பட்டனர். யோசேப்பும் ஆரம்பத்தில் இப்படியாகத்தான் நடத்தப்பட்டார் என்பது சங்கீதம் 105:18-ஆம் வசனத்தின் வார்த்தைகள் மூலம் உறுதியாகுகின்றது; “அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது.” இது யோசேப்பிற்குக் கடுமையான சோதனையாக இருந்திருக்க வேண்டும்; மேலும் அவர் தெய்வீகத் தயவு மற்றும் எதிர்காலத்தில் உயர்த்தப்படுதல் குறித்த நம்பிக்கைகளைக் கொண்டிருந்ததின் காரணமாக, இந்த அனுபவங்கள் யோசேப்பிற்கு இரட்டிப்பான கசப்புடைய அனுபவங்களாக இருந்திருக்க வேண்டும்.இப்படியாகவே ஆபிரகாமின் வாக்குத்தத்தங்களுக்குரிய ஆவிக்குரிய சுதந்தரவாளிகளின் விஷயத்திலும் காணப்படும்; நம்மால் முடிந்த மட்டும் கடமைகளை நாம் நிறைவேற்றிக்கொண்டிருக்கும் போது, அதுவும் கர்த்தருடைய ஆசீர்வாதமும், தயவும் நம்மீதும், நம் காரியங்கள் மீதும் மிகவும் குறிப்பிடத்தக்க விதத்தில் பெற்றிருக்கும் சில தருணங்களில், திடீரெனப் பிரச்சனை எழும்புகின்றது, துன்பம் வருகின்றது மற்றும் இருளின் வல்லமைகள் மேற்கொள்கின்றது மற்றும் கொஞ்சம் நேரம் நம்முடைய சக மனிதர்களுடைய கணிப்பில் குற்றவாளிகள் போலும், தெய்வீகப் பராமரிப்பில்லாமல் / தேவனால் கைவிடப்பட்டது போலும் காணப்படுவோம். இம்மாதிரியான சூழ்நிலைகளில் நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல், நாம் “எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராக” இருப்பதேயாகும்; அதாவது தவறுதலாய்ப் பாடு அனுபவிக்கிறோம் என்பதாகும். இம்மாதிரியான அனுபவங்களானது, சந்தேகத்திற்கிடமின்றி நமக்கு அவசியமானவைகளாகும்; “தனிமையில் நான் வெளிச்சத்தில் நடப்பதைப் பார்க்கிலும், நான் இருளில் தேவனோடு நடந்திடுவேனே” என்று நாம் பாடினாலுங்கூட, நாம் கர்த்தருடைய கரத்தைப் பிடித்துக்கொள்ளும் அப்படியானதொரு விசுவாசத்தையும், அப்படியானதொரு நம்பிக்கையையும், இருளான வேளைகளில் தெய்வீக வழிநடத்துதல்கள் மீதான நம்பிக்கையையும் வளர்த்தக்கூடிய சோதனையான அனுபவங்களுக்குள் நாம் அனுமதிக்கப்படாதது வரையிலும், இப்படியான பாடல்கள் பயனில்லாத பெருமையடித்துக்கொள்ளுதல்களாகவே இருக்கும். நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடப்பதற்கும், கர்த்தரைக் காண முடியாத வேளைகளில் அவரை நம்புவதற்கும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். யோசேப்பினுடைய விசுவாசமானது, பரீட்சையில் நிலைநின்றது மற்றும் அவரது உயர்வான குணலட்சணங்களானது, அந்தத் துன்பமான சூழ்நிலைகளின் மத்தியிலும் பிரகாசித்தது; மேலும் இது கர்த்தர் யோசேப்போடே இருக்கின்றார் என்பதற்கும், அவர் தலைச்சிறந்த மாதிரியானவராகவும், ஞானமிக்க வாலிப புருஷனாகவும் இருக்கின்றார் என்பதற்குமான அடையாளமாக, சிறைச் சாலையின் தலைவனுக்குத் தோன்றியது; அப்போது யோசேப்பிற்கு இருபத்தேழு வயதாயிருந்தது. சிறைச்சாலையின் தலைவனோ, தன்னுடைய வேலையில், தனக்கு உதவியாய் இருப்பதற்கு (யோசேப்பைப்போன்ற) ஓர் உண்மையுள்ள ஊழியக்காரனைப் பெற்றிடுவதற்கு ஆவலாய் இருந்தார். திறமிக்க ஆண்களுக்கும், பெண்களுக்கும் உலகத்தில் எப்போதும் வாய்ப்புகள் உண்டு; மிகவும் திறமிக்கவர்களாய் இருப்பவர்கள், கர்த்தருடைய ஆவியை உடையவர்களாகவும், “சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும், சாந்தமும், இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறதான” பரத்திலிருந்து வருகிற ஞானத்தினை உடையவர்களாகவும் இருக்கின்றனர் (யாக்கோபு 3:17). சுயநலமான நோக்கங்களினாலேயே சிறையின் தலைவன் யோசேப்பிடம் தயவாய் இருந்தார் என்பதிலும், கைதிகளைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பினை யோசேப்பிடம் ஒப்புவித்தார் என்பதிலும் ஐயமில்லை. மேலும் யோசேப்பினுடைய திறமைகள் மாத்திரமே, அவரை உயர்வான ஸ்தானத்திற்கு உயர்த்திடவில்லை; தெய்வீக வழிநடத்தல்களே காரியங்களை இப்படியாக நிகழ்த்தியது. தேவன் விசேஷித்த தயவு பாராட்டுகிறவர்களிடத்திலும், அவர் விசேஷமாய்ப் பயன்படுத்துபவர்களிடத்திலும், குணலட்சணங்கள் காணப்பட வேண்டும் என்பதை நாம் கவனித்திட வேண்டும். மெருகிடப்படாத வைரத்தைக் காட்டிலும், சாதாரணமான கூழாங்கல்லானது நன்றாய்க் காணப்படும்; எனினும், சாதாரணமான கூழாங்கல்லிடம் இல்லாத உறுதியும், தூய்மையும் மெருகிடாத வைரத்திடம் காணப்படுவதினாலேயே, அது வெட்டப்பட்டு, மெருகிடப்பட்டு, மிக விலையுயர்ந்த கல்லாகப் பதிக்கப்படுகின்றது. நம்முடைய ஆசீர்வாதங்கள் அனைத்தும் தேவனிடமிருந்து, கிறிஸ்து மூலம் வந்ததாக இருப்பினும், நம்முடைய “அழைப்பையும், தெரிந்துகொள்ளுதலையும் உறுதிப்படுத்திக் கொள்ளும்” விஷயத்தில் நாம் செய்ய வேண்டிய விஷயங்கள் சில உண்டு என்பதையும், நாம் தேவனுக்காகவும், நீதிக்காகவும் அன்பும், பக்தியும், வைராக்கியமும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், இந்தக் குணங்கள் மாத்திரமல்லாமல், கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுக்கிற தன்மையையும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும், நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது வைரம் வெட்டப்படுகின்ற மெருகிடப்படும் அனுபவத்தை நாம் அனுபவிக்கத்தக்கதாக, தெய்வீக விவேகமானது நமக்கு அனுமதித்திடும் விசுவாசம் மற்றும் பொறுமையின் பல்வேறு சோதனைகளை ஏற்றுக்கொள்வதற்கும், அச்சோதனைகளிலிருந்து நன்மை அடைவதற்குமுரிய விதத்தில் கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுக்கிற தன்மையையும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.ஓர் அடிமையாகவும், ஒரு கைதியாகவும் யோசேப்பு பெற்றிருந்த அனுபவங்களானது, துன்பத்தில் இருப்பவர்கள் மீது அனுதாபங்கொள்ளும் தன்மையை மாத்திரம் ஏற்படுத்தவில்லை; இராஜாவாகிய பார்வோன் முன் நிற்பதற்கும், பார்வோனுடைய முக்கிய ஊழியக்காரனாகுவதற்கும் யோசேப்பை ஆயத்தப்படுத்துகின்ற, விஷயத்தில் அறிவுரையாயிருக்கின்ற ஞானம் மற்றும் அனுபவப் பாடங்களையுங்கூட யோசேப்பு கற்றுக் கொண்டிருந்தார். சிறைச் சாலையில் யோசேப்பு சம்பாதித்திட்ட அனுபவங்களில் சில இப்பாடத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் கைதிகள் அனைவரும் குற்றவாளிகளாக இருப்பதில்லை; சில சமயம் இராஜாவுக்கு ஏற்பட்ட கோபத்தின் காரணமாகவும், சிலர் கைதியாகக் காணப்படுவதுண்டு. பார்வோனின் வீட்டாரில் உயர் ஸ்தானம் வகித்த இரண்டு பேர், ஏதோ காரணங்களினால் இராஜாவுக்குக் கோபமூட்டினதின் காரணமாக, யோசேப்போடுகூட அதே சிறையில் தள்ளப்பட்டனர்; (இராஜாவுக்கான பானபாத்திரக்காரன் என்பவன் நம்பிக்கையிலும், கனத்திலும் உயர் ஊழியர்களாய் இருப்பவர்களில் ஒருவன் ஆவான்; சுயம்பாகி என்பவன் இராஜாவினுடைய சமையல் அறையின் நிர்வாகியும், வீட்டின் பொதுவான விசாரணைக்காரனுமாவான்); மேலும் இத்தருணத்தில் யோசேப்பு கைதிகளின் பிரதான பொறுப்பாளியாக இருந்தபடியால், யோசேப்பு, இராஜ்யத்தினுடைய காரியங்களை நன்கு அறிந்திருக்கும் இந்த மனிதர்களை அடிக்கடி சந்தித்தும், நெருக்கமாய்ப் பழகியும் இருந்திருப்பார். மேலும் யோசேப்பிடமும் அவர்கள் பேச்சுத் தொடர்பு வைத்திருக்க வேண்டும். ஏனெனில், யோசேப்பு அவர்கள் பேசுகின்ற காரியங்களுக்குக் கவனம் செலுத்துபவராக இருந்திருக்க வேண்டும். தங்கள் முகத்தில் வெளிப்பட்ட கவலை எனும் சிறு காரியத்தைக் கூடக் கவனித்து, அதைக் குறித்துத் யோசேப்பு விசாரித்தபடியால், அப்போதிருந்த கைதிகளிலேயே யோசேப்பு வித்தியாசமான கைதி என்று அவர்கள் எண்ணியிருந்திருக்க வேண்டும். இப்படியாகவே எதிர்கால மகிமைக்கென்று தாங்கள் ஆயத்தப்படுவதற்கும், மெருகிடுவதற்கும் அவசியமான சோதனைகள் மற்றும் பிரச்சனைகளுக்குள், ஆபிரகாமின் வாக்குத்தத்தத்திற்கான ஆவிக்குரிய சுதந்தரவாளிகள் அனைவரும் கடந்து செல்லுகையில், இரக்கமாயிருப்பதற்கும் கற்றுக்கொள்ள வேண்டும். “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்” (மத்தேயு 5:7). இவர்களது [R2886 : page 315] சொந்த அனுபவங்களானது, பிரச்சனையில் காணப்படும் அனைவரிடத்திலும், உருக்கமான இருதயத்தைக் கொண்டிருக்கத்தக்கதாக, இவர்களை மென்மைப்படுத்துகின்றது. கர்த்தருடைய ஜனங்கள் அனைவரும் “இரக்கத்தாலும், நற்கனிகளாலும் நிறைந்தவர்களாய்க்” காணப்பட வேண்டும். யோசேப்பினுடைய அனுதாபங்காட்டும் தன்மையானது, இரு கைதிகள் துக்கமாய் இருப்பதற்கான காரணத்தை வெளிக்கொண்டு வந்தது. இரு கைதிகளில் ஒவ்வொருவரும் முந்தின இரவில் சொப்பனங்கண்டு, அவரவர் தங்களது சொப்பனமானது, வரப்போகும் தீமையைக் குறித்து எச்சரிக்கின்றதாய் இருக்கின்றது என்று எண்ணி, கலங்கிபோய்க் காணப்பட்டார்கள். சொப்பனங்களைப் புரிந்துகொள்ளும் சில ஆற்றல்களினால், யோசேப்பு கர்த்தரினால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தபடியால், உடனடியாகச் சொப்பனத்திற்கான விளக்கத்தைக் கொடுத்தார்; அதாவது கைதிகள் இருவரில் ஒருவர் சீக்கிரத்தில் விடுதலை செய்யப்படுவார் என்றும் மற்றவர் தண்டிக்கப்படுவார் என்றும் விளக்கம் கொடுத்தார். தண்டிக்கப்படப் போகின்றவர் மீது அனுதாபம் காண்பித்து, விடுவிக்கப்படப் போகின்றவரை வாழ்த்தி, விடுவிக்கப்படப் போகின்றவனிடத்தில், அவனுக்கான சந்தோஷத்தின் நாட்களில் தன்னையும், தன்னுடைய இரக்கத்தையும் நினைத்துக்கொள்ளவும், கூடுமானால் இராஜாவிடம் இரக்கம் பெற்றுக்கொண்டு, தனக்கு விடுதலைப் பெற்றுத் தரவும் யோசேப்பு வேண்டிக்கொண்டார்.யோசேப்பினுடைய இரண்டு சொப்பனங்களும், பானபாத்திரக்காரன் மற்றும் சுயம்பாகியினுடைய இரண்டு சொப்பனங்களும், பின்னாட்களில் பார்வோனுக்கு வந்த இரண்டு சொப்பனங்களுமாகிய, அனைத்தும் தெய்வீக ஏவுதலினாலே உண்டானது என்பதிலும், சில விளைவுகளைக் கொண்டுவரத்தக்கதாக, சில தாக்கங்களை உண்டுபண்ணுவதற்கான நோக்கத்திற்காகவே இச்சொப்பனங்கள் கொடுக்கப்பட்டன என்பதிலும் உறுதியே. இவர்கள் அனைவருக்கும் வந்த சொப்பனங்களானது, கர்த்தரிடமிருந்து வந்தது என்று நாம் ஏற்றுக்கொள்கிறதினால், அனைத்துச் சொப்பனங்களும் கர்த்தரிடமிருந்து வருகின்றது அல்லது அனைத்துச் சொப்பனங்களுக்கு விசேஷித்த தீர்க்கத்தரிசன நிறைவேறுதல்கள் உண்டு என்று நாம் ஏற்றுக்கொள்வதாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது. மாறாக பெரும்பாலான சொப்பனங்களானது மனக் கற்பனைகளாக இருக்கின்றது, அதாவது வயிற்றுக் குழப்பத்தின் காரணமாகவும், மூளை பாதி உறங்கியும், பாதி விழித்தும் இருக்கும் காரணமாகவும், மனதில் ஏற்படுகின்ற பொருளற்ற, அர்த்தமற்ற உருவத் தோற்றங்களாக இருக்கின்றது; இச்சொப்பனங்களானது விசேஷித்த பொருளையுடையதாய் இராமல் மாறாக நாம் உணவு உட்கொள்ளும் விஷயத்தில் காட்ட வேண்டிய அக்கறைக் குறித்த எச்சரிக்கையாகவே இருக்கின்றது. மூன்றாம் வகையான ஒரு சொப்பனங்கூட உண்டு; இவ்வகையானது கர்த்தரினாலோ, அஜீரணத்தினாலோ ஏற்படாமல், மாறாக [R2887 : page 315] சொப்பனங்காணும் நபர்களைத் தவறாய் வழிநடத்துவதற்கான நோக்கத்திற்காக, பொல்லாத ஆவியினால் கொடுக்கப்படுகின்றதாய் இருக்கின்றது. நம்முடைய சொப்பனங்களானது, தீய ஆவிகளின் ஏவுதலால் ஏற்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு, நாம் பொல்லாங்கனின் பிள்ளைகளாய் இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்; மேலும் பாவத்தைத் துறந்து சுவிசேஷத்தில் நமக்கு முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்குள் தஞ்சம் புகுந்துள்ள நாம், நமது கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவின் மூலமான மீட்பின் காரணமாக தேவனுடைய குடும்பத்திற்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டு, தேவனுடனான உறவிற்குள் வந்து, பொல்லாங்கனுடைய வல்லமையிடமிருந்தும், நம்முடைய காரியங்கள் தொடர்புடைய விஷயத்திலான அவனது மாய்மாலங்களிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றுக்கொண்டவர்களாகவும், நாம் தேவனை அன்புகூருகின்றபடியாலும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டுள்ளபடியாலும், “அனைத்தும் நன்மைக்கு ஏதுவாய் நடக்கும்” என்ற கிருபையான வாக்குத்தத்தத்தின் கீழ் வந்தவர்களாகவும் இருக்கின்றோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இங்குச் சொப்பனம் கண்டுள்ள சுயம்பாகியும், பானபாத்திரக்காரனும் மற்றும் பார்வோனும் தேவனுடைய மனிதர்கள் அல்ல என்று நாம் கவனிக்க வேண்டும், ஆனாலும் இந்தச் சொப்பனங்கள் தேவனாலேயே உண்டானது மற்றும் இந்தச் சொப்பனங்களானது, சொப்பனம் கண்டவர்களின் நன்மைக்காக அல்லாமல், மாறாக யோசேப்பின் நன்மைக்காகவே விசேஷமாக அருளப்பட்டது. முன்புள்ள காலங்களைக் காட்டிலும் இன்றுள்ள கர்த்தருடைய ஜனங்களுக்குச் சொப்பனங்களுக்கான அவசியம் தேவையே இல்லை. நமக்கு அவசியமான ஒவ்வொரு காரியங்களையும் பற்றின தேவனுடைய சாட்சியாகிய தேவனுடைய வார்த்தையை நாம் பெற்றிருக்கின்றோம். இந்தத் தேவனுடைய வார்த்தைகளானது / செய்திகளானது பூரணமாய்க் காணப்படுவதினாலே, இதைக் குறித்து “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது” என்று அப்போஸ்தலன் குறிப்பிடுகின்றார் (2 தீமோத்தேயு 3:16, 17). இதற்கென்று சொப்பனங்கள் வரும் பட்சத்தில், அதுவும் அந்தச் சொப்பனம் தேவ வார்த்தைகளுடைய பரீட்சைகளில் நிலைநிற்குமாயின், அச்சொப்பனம் கர்த்தரிடமிருந்து வந்தது என்று அடையாளம் கண்டு கொள்வதற்கு நாம் தடைப்பண்ணப்படுவதில்லை; அதாவது அச்சொப்பனமானது வேதவாக்கியங்களில் தேவன் வெளிப்படுத்தியுள்ளவைகளுக்கு முரண்பாடாக இல்லாத பட்சத்தில், அது கர்த்தரிடமிருந்து வந்ததென அடையாளம் கண்டுகொள்வதற்குத் தடையில்லை. ஒருவேளை சொப்பனமானது, வேதவாக்கியங்களுக்கு முரண்பாடாய்க் காணப்படும் பட்சத்தில், நாம் சொப்பனத்தை நிராகரித்துவிட வேண்டும். ஒரு வேளை சொப்பனமானது, வேதவாக்கியங்களுக்கு இசைவாகக் காணப்படும் பட்சத்தில், அந்த இசைவினிமித்தம் நாம் அதை ஏற்றுக்கொண்டு, அச்சொப்பனம் இசைவாயிருக்கும் வேதவாக்கியங்களிடத்தில் குறிப்பாய் நமது கவனம் ஈர்க்கப்பட மாத்திரமே அச்சொப்பனத்தை நாம் அனுமதித்திட வேண்டும். சொப்பனத்தின் மூலமாகவோ அல்லது தரிசித்தலோ, சொப்பனமோ இல்லாமல் முழுக்க விசுவாசத்தினால் நடப்பதின் மூலமாகவோ, எப்படியாக இருப்பினும் தேவனுடைய உண்மையான பிள்ளையாகிய, ஆபிரகாமுக்குரிய ஆவிக்குரிய வாக்குத்தத்தங்களின் சுதந்தரவாளியானவன், யோசேப்பைக் குறித்து நம்முடைய ஆதார வசனமானது, “தேவனோ அவனோடுகூட இருந்து, அவனுக்கு இரக்கம் பாராட்டினார்” என்று தெரிவிப்பதைக் காட்டிலும் அதிகமாய் எதிர்பார்த்திட வேண்டும், கண்டடைய வேண்டும், உணர்ந்திட வேண்டும். தேவனும் நம்மோடுகூட இருந்து நம்மிடம் இரக்கத்தைக் காட்டுவாரானால், அதுவும் இதை அவர் எப்படிச் செய்தாலும் சரி, நாம் நன்றியுள்ள இருதயங்களுடன் அவரது தயவை ஏற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் இருளிலிருந்து தமது ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு அழைத்துக்கொண்டு வந்தவரும், இறுதியில் நம்மை மரணம் எனும் சிறைச்சாலையினின்று, நித்தியமான இராஜ்யத்தின் மகிமைகளிடத்திற்கும், அவரது குமாரனுடன் உடன் சுதந்தரத்துவத்திற்கும் கொண்டு வருபவருமானவரின் புண்ணியங்களை நாம் அறிவிக்க வேண்டும்.