R5353 (page 349)
மற்ற ஜனங்கள் எதையெல்லாம் சொன்னாலும் அல்லது செய்தாலும் சரி, கர்த்தருடைய ஜனங்களிலுள்ள ஒவ்வொருவனும் காரியங்களை நிதானிக்கும் விஷயத்தில் வேதாகமமாகிய தேவனுடைய வார்த்தையிலுள்ள எழுத்துக்களினாலும், ஆவியினாலும் வழிக்காட்டப்பட வேண்டும். “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக” என்று வேதம் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது (எபிரெயர் 13:4). கர்த்தருடைய ஜனங்களில் யார் திவ்விய ஊழியத்திற்கென்று தங்களை முழுமையாய்க் கொடுத்துவிட விரும்புவார்களோ, அவர்கள் திருமணமாகாமல் இருந்துவிடுவதன் வாயிலாய்ச் சந்தேகத்திற்கிடமின்றி சந்தோஷமாகத் தங்கள் பலியினை நிறைவேற்றி முடிக்க முடிகின்றவர்களாக இருப்பார்களெனப் பரிசுத்த பவுல் அடிகளார் பரிந்துரைத்துள்ளார். தன்னுடைய இக்கருத்திற்கான காரணத்தையும் அவர் தெரிவிக்கின்றார்; ஆனாலும் திருமணமாகும் நிலை என்பது பரிசுத்தமற்றது என்றோ, தூய்மையற்றது என்றோ, ஏதேனும் விதத்தில் தேவ பிரமாணத்திற்கு முரணானது என்றோ அவர் கூறிடவில்லை. திருமணமான புருஷன் இயல்பாகவே தன் மனைவியைப் பிரியப்படுத்திட நாடுவான் என்றும், திருமணமான ஸ்திரீ தன் கணவனை இயல்பாகவே பிரியப்படுத்திட நாடுவாள் என்றும், இது முறையானது என்றும் மாத்திரமே கூறியுள்ளார்.
ஒருவனைச் சரீரத்திலும், ஆவியிலும் தேவனுக்கு ஊழியம்புரிய வைத்திடுவதற்கு ஏதுவான ஒருமுகமான நோக்கத்தினின்று ஏறக்குறைய திசைத்திருப்புகின்றதாய், இந்தத் திருமணமான நிலைமைக் காணப்படும் (1 கொரிந்தியர் 7:32-35). துணைவியைப் பராமரிப்பதிலும், துணைவியாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்வதிலும் ஈடுபட்டிருக்கையில் தன்னால் ஒருவேளை செய்ய முடிவதைக் காட்டிலும், தனித்திருக்கையில், மணமாகாத நிலையில் இருக்கையில் தன்னால் அதிக ஊழியங்களை நிறைவேற்ற முடிகின்றது என்றும், மணமாகாத நிலைமையே அனுகூலமாய் உள்ளது என்றும் தான் கண்டறிந்ததாகப் பரிசுத்த பவுல் அடிகளார் சபைக்கு நினைப்பூட்டுகின்றார்.
ஆனால் கர்த்தருக்குள்ளான சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஒருவேளை தங்கள் கணிப்பில், தங்களுக்குத் திருமணம் அவசியம் என்று காண்பார்களானால் அல்லது அதை விரும்புவார்களானால் – ஒருவேளை திருமணமான நிலைமையிலேயே தங்கள் அர்ப்பணிப்பின் வாக்குறுதிகளை நன்கு நிறைவேற்ற முடியும் என்று நம்புவார்களானால்… அவர்களுக்குத் தடை விதிக்கும் எந்தத் தேவ பிரமாணமும் இல்லையெனப் பரிசுத்த பவுல் அடிகளார் தெளிவாய்ச் சுட்டிக்காட்டுகின்றார்.
இதை நாம் இங்குக் குறிப்பிடுவதற்கான காரணம் என்னவெனில்… சில சந்தர்ப்பங்களில் திருமணமாகாதவர்களுக்கு ஆலோசனை வழங்கிடும் சகோதர சகோதரிகள், எழுதப்பட்டவைகளுக்கு மிஞ்சிபோய், திருமணம் செய்துகொள்வது என்பது நமது பரம அழைப்பிற்கான பரிசினை இழக்கச் செய்திடும் என்று கூறுவதன் மூலம், கர்த்தர் ஒருபோதும் சொல்லிடாத பாரங்களை, ஆலோசனைக் கேட்பவர்கள் மீது சுமத்திவிடுகின்றனர். நல் நோக்கங்கள் என்று கூறி இப்படியான நடத்தைகளை நியாயப்படுத்திட முடியாது.
சமீபத்தில் சிறு குழந்தை ஒன்றைப் பெற்றிருக்கிறவர்களும், அக்குழந்தையை மிகவும் நேசிக்கிறவர்களுமான ஓர் அருமையான தம்பதிகளிடமிருந்துகூட நாம் சில காரியங்களைத் தகவலாக அறிந்தோம். சீக்கிரத்தில் சம்பவிக்க இருக்குமென நாம் எதிர்ப்பார்த்திருக்கும் மாபெரும் மாற்றங்களுடைய கண்ணோட்டத்தில் சில சகோதரிகள் அத்தாயாரிடம்… ஒரு தாயாக இருப்பது என்பது கனவீனமாய்க் கருதப்படவேண்டும் என்று கூறிய காரியமானது அத்தாயாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த அருமையான சகோதரிகள் தவறு செய்துள்ளனர் என்று நாம் நம்புகின்றோம். இவர்கள் தங்களுக்காகச் சிந்தித்துக்கொள்வதற்கும், கர்த்தருடைய சித்தம் குறித்த தங்களது சிறந்த கணிப்புகளுக்கு ஏற்ப, தங்கள் ஜீவியத்தின் காரியங்களை வனைந்துகொள்வதற்கும் உரிமை பெற்றிருக்கின்றார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் இது விஷயத்தில் மற்றவர்கள் வேறுபட்ட கண்ணோட்டம் கொண்டிருப்பதினால், அவர்களைக் கண்டனம் பண்ணிடுவதற்கு இச்சகோதரிகளுக்கு உரிமை இல்லை. ஒவ்வொரு ஊழியக்காரனும் நின்றாலும், விழுந்தாலும், அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி. தகப்பன் ஸ்தானத்தையோ அல்லது தாய்மையையோ வேதாகமம் அவமதித்து ஏதும் கூறுகிறதில்லை இதற்கு மாறாகவே கூறுகின்றது.
ஒருவேளை அப்போஸ்தலன் கருத்துரைத்திருப்பது போன்று கர்த்தருடைய ஜனங்களில் சிலர் துறவற ஜீவியம் ஜீவிப்பதற்குப் பரஸ்பரமாய் முடிவெடுப்பார்களானால், அது அவர்களுடைய சொந்தக் காரியமாகும். தேவனுக்கடுத்த ஊழியங்களில் செலவிடத்தக்கதாக அதிகம் வாய்ப்புகளும், ஆற்றல்களும், வழிவகைகளும் தங்களுக்குக் கிடைக்கத்தக்கதாக, கர்த்தருக்காக அண்ணகர்களாய் வாழ்வதற்கு அவர்கள் இப்படியாய் முடிவெடுப்பார்களானால், இது அவர்களது தெரிவின் / விருப்பத்தின்படியான அவர்களது பலியாகும் மற்றும் கர்த்தர் நலமென்று காணும் பலன்களுக்காய், அவர்கள் கர்த்தரை நோக்கிப்பார்க்க வேண்டும். அவர்களது தெரிவு இதுவாக இருந்தால், அவர்கள் இதற்கான பலனை அடைவார்கள்; நாமோ மற்றவர்களுக்கும்கூட அவர்களுக்கான விருப்பத்தெரிவு இருக்கின்றது என்றும், ஒருவேளை அவர்கள் சரியாய்ச் சிந்தித்து வேறுவழியைத் தெரிவு செய்வார்களானால், அவர்களை நாம் கண்டனம்பண்ணக்கூடாது என்றும், அவர்களது சமூக உரிமைகள் மற்றும் சிலாக்கியங்கள் விஷயத்தில் குறுக்கிடுவதற்கு நமக்கு உரிமை இருக்கின்றதென நாம் எண்ணிடக்கூடாது என்றும் நினைவில்கொள்ள வேண்டும்.
சகோதர சகோதரிகளைக் கையாளும் விஷயத்திலும், உலகத்தைக் கையாளும் விஷயத்திலும், பொன்னான பிரமாணமானது நமக்கு மிகவும் உதவிகரமாய் இருக்கும். மற்றவர்கள் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று நாம் விரும்புவோமோ, அதையே நாம் மற்றவர்களுக்கும் செய்திட வேண்டும். நமக்குத் தகுந்தது என்று நாம் கருதிடும் அதே சுயாதீனங்களை நாம் மற்றவர்களுக்கும் அருளிட வேண்டும்.
இது விஷயமான வேதாகமப் பாடங்களினுடைய ஆறாம் தொகுதியின், ஏழாம் அத்தியாயத்திற்கு நம் வாசகர்களில் சிலர் போதுமான கவனம் கொடுக்கவில்லை என்று நாம் அஞ்சுகின்றோம்.