R3148 – தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R3148 (page 52)

தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல

NOTHING TOO GOOD FOR GOD'S SERVICE

“அதற்கு முடம் குருடு முதலான யாதொரு பழுது இருந்தால், அதை உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிட வேண்டாம்.” – ( உபாகமம் 15:21)

மோசேயின்கீழ்ப் பணிவிடை வீட்டாருக்காய்க் கொடுக்கப்பட்ட இத்தகைய கட்டளையானது, அநேகரால் கருதப்படுவதைப் பார்க்கிலும் கிறிஸ்துவின்கீழ்க் காணப்படும் புத்திரர் வீட்டாருக்கு அதிகம் அவசியமானதாய் இருக்கின்றது (எபிரெயர் 3:5-6). மற்ற அநேகம் விதங்களில் நன்மைக்கேதுவாய்ப் பயன்படுத்த வாய்ப்புள்ளதான சிறந்த காரியங்களைப் பலிசெலுத்துவது என்பது பரிதாபத்திற்குரியது என்று நம் கூடவே பிறந்துள்ள சுயநலமானது பொதுவாகவே யோசனை கொடுக்கின்றதாயிருக்கும். மேலும் இப்படி நம்மையும் அறியாமலேயே இன்று செய்யப்பட்டுவருவதினால், இவ்விஷயத்தைக்குறித்து – உண்மையுள்ள இருதயமுடையவர்களுக்கு இப்பிரச்சனையினின்று விடுதலைப் பெறத்தக்கதாக உதவும் கண்ணோட்டத்தில் இப்பொழுது நாம் இங்குக் கலந்துரையாடுகின்றோம். உண்மைதான் நம்முடைய இருதயங்கள் மகா திருக்குள்ளதாகவும், அவைகளின் உண்மையான நோக்கங்களைக்குறித்து, எப்போதும் கவனிக்க வேண்டியதாகவும் உள்ளது; சிலசமயங்களில் இருதயங்களானது அதன் உண்மையான நோக்கங்களை நேர்மையான இருதயங்கொண்டிருக்கும் தேவனுடைய புத்திரர்களிடமிருந்துகூட ஒளித்துவைத்துக்கொள்கின்றது.

கர்த்தரையும், அவரது நோக்கங்களையும் அன்புகூர்ந்திடும் கிறிஸ்தவ பெற்றோர்கள், கர்த்தருடைய ஊழியத்தில் சுறுசுறுப்பாய்ப் பங்கெடுப்பதற்கான தங்கள் சொந்த இயலாமைக்குறித்து அவ்வப்போது வருந்துகிறவர்களாய் இருக்கையில் – தொகுதி விநியோகிக்கும் வேலையில் சகோதர சகோதரிகளுடைய பலிகளைக்கண்டு ஆசைப்படுகிறவர்களாகவும், அதை மதிக்கிறவர்களாகவும் இருக்கையில், தங்களுக்கே பாதகமாய் அமையும் வகையில், தங்கள் சொந்தக் குமாரர்களையும், குமாரத்திகளையும் கொடுக்க தயங்குகிறதை நாம் அடிக்கடி காணமுடிகின்றது. இப்பெற்றோர்கள் சுவிசேஷகரென, தொகுதி விநியோகிப்பவரென வேலை செய்வது என்பது கல்வியறிவு இல்லாதவர்களுக்கு அல்லது திறமையற்றவர்களுக்குரிய வேலையென எண்ணுவதாகத் தெரிகின்றது; தங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியம்கொண்டிருக்கச் செய்கின்றனர்; இவர்கள் கர்த்தருடைய கொடைகளை ஏற்றுக்கொண்டு, அவற்றைப் பிள்ளைகள் கல்வி பெற்றுக்கொள்த்தக்கதாகப் பிள்ளைகளுக்காய்ச் செலவழிக்கின்றனர்; மேலும் பிள்ளைகளுக்கிருக்கும் திறமைகளுக்கும், கல்வியறிவிற்கும் மருத்துவத்துறையை அல்லது சட்டத்துறையை அல்லது இலக்கியத்துறையை அல்லது பள்ளிக்கூடத்தில் ஆசிரியத்துறையைக் கனமுள்ள மற்றும் இலாபகரமான துறைகளென அவர்களுக்குச் சுட்டிக்காண்பித்துக்கொடுக்கின்றனர்.

எவ்வளவு பெரிய தவறு! எத்துணைக் கவலைக்குரிய தவறு! இத்தகையவர்கள் ஒருவேளை எப்படியோ இராஜ்யத்திற்குள் பிரவேசித்து, தங்கள் பாதையைத் திரும்பிப்பார்ப்பார்களானால், இந்தத் தற்காலத்தில் தேவனுடன் உடன் வேலையாட்களாய் இருக்கும் அருமையான சிலாக்கியத்தினைத் தாங்கள் எத்தனை சாதாரணமாய்ப் பார்த்துள்ளனர் என்று கண்டுகொள்கையில் எவ்வளவு அவமானம் அடைவார்கள்! அக்காலங்களில் மருத்துவத்துறையின், சட்டத்துறையின், பள்ளிக்கூடங்களின், இலக்கியங்களின், திருமணத்தின் முக்கியத்துவம் குறித்த இவர்களது கண்ணோட்டங்களானது எவ்வளவாய்ப் பெரிதும் வித்தியாசப்பட்டுக் காணப்படும். நலிந்துபோனதும், ஊனமானதும், குறைவுள்ளதும் கர்த்தருக்குப் பலிசெலுத்திட போதுமானவைகள் என்று தாங்கள் எண்ணினது குறித்து – அதாவது “உலகப்பிரகாரமான வளமைக்குத்” திராணியில்லாதவர்கள் தவிர, வேறு எவருமே தொகுதி விநியோகிக்கும் ஊழியத்தைக்குறித்துச் சிந்தித்துப்பார்க்கவேகூடாது என்று தாங்கள் சிந்தித்தவைகள்குறித்து எவ்வளவு அவமானம் அடைவார்கள்.

அர்ப்பணம்பண்ணியுள்ளதான பெற்றோர்கள் தங்கள் முதற்பேறானவர்களை மாத்திரமல்லாமல், தங்கள் பிள்ளைகள் அனைவரையுமே கர்த்தருக்கென்று அர்ப்பணித்திட வேண்டும்; மேலும் திவ்விய ஊழியத்திற்கென்று கூடுமானமட்டும் அதிகளவில் தங்களை அர்ப்பணிப்பதே தேவனுடைய ஜனங்கள் அனைவருக்குமான ஏற்ற நடக்கையாய் இருக்குமெனப் பிள்ளைகளுடைய மனதிலும், இருதயத்திலும் குழந்தைப் பருவம் முதற்கொண்டு பதிய வைத்திட வேண்டும். தங்களுடைய அனைத்தையும் தங்களால் முடிந்த மட்டும் அவர் ஊழியத்தில் செலவிடும் கண்ணோட்டத்தில் ஜீவியத்தின் காரியங்கள் அனைத்தையும் பார்த்திட பிள்ளைகள் கற்பிக்கப்பட வேண்டும்; தங்கள் நேரம், திறமை, செல்வாக்கு ஆகியவற்றைக் கர்த்தர் ஏற்றுக்கொள்ளவும், இவை அனைத்தையும் அவர் ஊழியத்தில் – அதாவது கற்பனைபண்ணிப் பார்க்கமுடியாத அளவுக்கு மிகவும் கனமுள்ளவைகளாயிருக்கும் மற்றும் இறுதியில் உயர்வாய்ப் பலனளிக்கப்படப் போகின்றதுமான அவர் ஊழியத்தில் கர்த்தர் பயன்படுத்தவும் வேண்டி ஜெபிப்பதற்குப் பிள்ளைகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும். திருமணம் குறித்த அப்போஸ்தலனின் போதனைகளானது (1 கொரிந்தியர் 7:27-40), திருமணத்திற்கான கண்டனமாய் இராமல், மாறாக கர்த்தருடைய ஊழியத்தில் மிக முழுமையாகப் பயன்பட வேண்டும் என்று வாஞ்சிப்பவர்களுக்குரிய முக்கியமான பலிகளில் ஒன்று என்ற கருத்தினை உடையதாய் இருக்கின்றது என்று பிள்ளைகளுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

இதுமாத்திரமல்லாமல் தற்கால சத்தியத்தினை அறிந்துகொள்ளும் கிறிஸ்தவ பெற்றோர், மேற்கல்விக்காய் நாட வேண்டாம் என்று தன் பிள்ளையை ஊக்குவிக்கிறது மாத்திரமல்லாமல், இன்னுமாகப் பள்ளிப்படிப்புடன் மனநிறைவுகொள்ளவும் ஊக்குவித்திட வேண்டும்; ஏனெனில் (1) ஒரு துறைக்கென்று பிள்ளையைத் தகுதியாக்கிடுவது என்பது ஜீவியக்காலம் முழுவதும் அவனைச் சோதனைக்குள்ளாக்கும் திசையில் அவனை நிறுத்திடுவதாய் இருக்கும்; (2) கல்லூரிகள் அனைத்திலும் இன்றைய நாட்களில் வழங்கப்படுகின்றதான மேல்படிப்புகளானது அதிகமாய்ப் பரிணாமக் கோட்பாடுகளினாலும், நுட்ப பிழைக்காணும் திறனாய்வுகளினாலும் நிரம்பிக் காணப்படுவதால், பிள்ளைக் கர்த்தரிடத்தில் கொண்டிருக்கும் ஈடுபாட்டினைக் கொன்று போட்டுவிடும் சந்தேகங்களில் பிள்ளையானவன் விழுந்து போவான்; மேலும் ஒருவேளை கனமிக்க ஸ்தானமும், நல்லச் சம்பளமும் அவனுக்கு மத ஈடுபாட்டிற்குப்பதிலாக நல்லொழுக்கத்தைக் கொடுத்தாலும், அவனை வெளித்தோற்றத்திற்காகிலும் கர்த்தருக்கு ஊழியஞ் செய்திட தூண்டிடமுடியாது.

மாறாக தற்கால சத்தியத்தினை அறியும் வாய்ப்பினால் கர்த்தரிடமிருந்து கிருபைப் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொருவனும், ஒவ்வொருவளும் உடனடியாக [R3148 : page 53] உண்மை சூழ்நிலையினைக்குறித்து உணர்ந்துகொள்ள வேண்டும்; அதாவது மிகவும் திறமிக்ககவர்களும், மிகுந்த கல்வியறிவுள்ளவர்களும் கர்த்தருடைய பலிபீடத்திற்குப் பாத்திரமற்றவர்கள் என்றும், கர்த்தருடைய ஊழியம்புரிவதற்கென ஏற்றுக்கொள்ளப்படுவதற்குப் பாத்திரமற்றவர்கள் என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும்; இன்னுமாக ஒவ்வொருவனும் தன்னில் பெற்றிருக்கும் சிறந்தவற்றை, தன்னால் முடிந்ததை மிகுதியாகக் கர்த்தருடைய ஊழியத்திற்கென்று தினந்தோறும், மணிநேரங்கள் தோறும் அர்ப்பணித்திட வேண்டும், அதுவும் தேவனுடன் உடன் வேலையாட்களாக இருப்பது என்பது தேவதூதர்களுக்கு அல்லது மனிதர்களுக்கு அளிக்கப்படும் மாபெரும் சிலாக்கியமென உணர்ந்து அர்ப்பணித்திட வேண்டும். இப்படியாகக் காரியத்தினைச் சரியாய் உணர்ந்துகொள்ளும் சிலர் மருத்துவத்துறையினையும், வியாபாரத்தையும், பள்ளிக்கூடங்களையும் விட்டுவிட்டு, மிகவும் பிரம்மாண்டமான, மிகவும் முக்கியமான சுவிசேஷஊழியத்தில், தொகுதி விநியோகிப்பாளரென – சுவிசேஷகர்களென ஊழியம்புரிந்திடுவதற்கு – மகா சந்தோஷத்தின் நற்செய்தியின் அச்சடிக்கப்பட்ட பக்கங்களைக் கேட்கும் செவிகளுள்ள யாவருக்கும் சுமந்துசெல்வதற்கு வேண்டி கடந்துவருகின்றனர். இவர்கள் இராஜாதி இராஜனுக்கு ஸ்தானாபதிகளென ஊழியம்புரிவதாகிய மிகவும் கனம் பொருந்தின ஊழியத்திற்குத் தங்களுக்குப் போதுமான கல்வியோ, திறமைகளோ இல்லை என்றும், ஒருவேளை தாங்கள் எதையேனும் பெற்றிருந்தார்களானால், அது அவ்வேலைக்காகவே பயன்பட வேண்டும் என்றும் சரியாய் உணர்ந்துகொண்டிருப்பவர்களாய் இருக்கின்றனர்.

ஒரு வாலிபன் அல்லது வாலிபப் பெண்மணி தற்கால சத்தியத்தினை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்பதற்காகவும், அவர்கள் தொகுதி விநியோகிக்கும் வேலைக்கு வரத் தாங்கள் வலியுறுத்துவதற்காகவும் வேண்டி, தற்கால ஜீவியத்தின் இலட்சியங்கள் மற்றும் வாய்ப்புகள் அனைத்தையும் அவன் அல்லது அவள் தவிடுபொடியாக்கிப் போட்டுவிட்டு, தொகுதி விநியோகிக்கும் வேலைக்கு வந்துவிட வேண்டுமா என்று கேட்கின்றீர்களா? நிச்சயமாக இல்லை இத்தகைய எண்ணம் உடையவர் யாரும் இவ்வேலைக்குள் பிரவேசிக்க வேண்டாம். இத்தகையவர்களைத் தம்முடைய வேலைக்காகவும், தம் பிரதிநிதிகளாய் இருப்பதற்காகவும் கர்த்தர் நாடி தேடுவதில்லை ஆகையால் இத்தகையவர்களை நாங்களும் அவருடைய நாமத்தில் தேடுகிறதில்லை. அவருக்கு ஊழியஞ்செய்வதை, அதுவும் எதைப் பலிசெலுத்தியும் அவருக்கு ஊழியஞ்செய்வதைச் “சந்தோஷமாகக் கருதுபவர்களையே” கர்த்தர் தேடுகின்றார். தங்களுடைய சித்தத்திற்கு மாறாக / விருப்பமில்லாமல் ஊழியத்திற்கு வருபவர்கள், சந்தேகத்திற்கிடமின்றி ஆக்கப்பூர்வமாய் வேலை செய்யாதவர்களாய் இருந்து, சீக்கிரத்தில் சத்தியத்தினின்று விழுந்துபோய்விடுபவர்களாக இருப்பார்கள்.

ஆனால் ஒருவேளை போதுமானளவுக்குச் செல்வம் உடைய மனுஷன் – உதாரணத்திற்கு ஒரு வியாபாரியாக இருப்பவன், தன் சொந்த வியாபாரத்தினை விட்டுவிட்டு, தொகுதி விநியோகிக்கும் வேலைக்குச் செல்வதை – அதுவும் தன்னுடைய பணத்திற்கான வட்டியிலோ அல்லது அசலிலோ தன் தேவைகளைச் சந்தித்து இவ்வூழியத்திற்குச் செல்வதை நீங்கள் வரவேற்பீர்களா என்று கேட்கின்றீர்களா? நிச்சயமாக! “என் பிதாவுக்கடுத்தவைகளில் / mu father’s business நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா” என்ற நமது ஆண்டவரின் வார்த்தையில் வெளிப்படும் அவரது ஆவியினை நாம் அனைவரும் பெற்றிருக்க வேண்டுமல்லவா? கர்த்தருடைய உண்மையான பரிசுத்தவான்களுக்குச் சொந்தமாக வியாபாரம் இருக்கலாம், ஆனால் “சொந்தம்” என்று அதை உரிமைக்கொண்டாட எதுவும் அதில் இருப்பதில்லை ஏனெனில் அவர்கள் தங்கள் அனைத்தையும் கர்த்தருக்கென்று அர்ப்பணிப்பின்போது கொடுத்துவிட்டார்கள். இவர்கள் தங்கள் வியாபாரங்களை, கர்த்தருக்கான நிர்வாகிகளென நிர்வகிக்கின்றவர்களாய் இருக்கின்றனர் – இவர்கள் தங்கள் மரணத்தின்போது வளமையான நிலைமையில் வியாபாரத்தினைப் பிள்ளைகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ பாதகம் உண்டாக்கும் விதத்தில் பிள்ளைகளுக்கு அல்லது நண்பர்களுக்குக் கொடுப்பவர்களாய் இருப்பதில்லை. மரணத்திற்கு முன்னதாக இவைகள் பரிசுத்தவானால் நிர்வாகியென அவன் அறிந்திருக்கிற மட்டும் ஞானமாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும்; ஏனெனில் நிர்வகிக்கும் காலம் முடிவடைகையில், அவன் தன் கணக்கை ஒப்புவிக்க வேண்டியவனாய் இருப்பான் (மத்தேயு 25:14-30; லூக்கா 19:12-26). தன்னைச் சார்ந்து இருப்பவர்களுக்கு அவனால் தற்கால ஜீவியத்திற்கடுத்த சௌகரியங்களைக் கொடுக்க முடிகிறதென்றால், இதைக்காட்டிலும் அதிகமாய் அவர்களுக்கு அவன் ஏன் செய்திட வேண்டும்? அல்லது அவனுக்கு முன்பாக “இருளினின்று நம்மைத் தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்குக் கொண்டுவந்தவருடைய புண்ணியங்களை அறிவித்திடும் விஷயத்திற்கான” வாய்ப்புகளானது சிறந்த விதத்தில் திறந்திருக்க, வேறு ஏதேனும் காரணங்களுக்காய் அவன் ஏன் தாமதித்துக்கொண்டிருக்க வேண்டும்? அந்தோ தங்களிடத்தில் நிர்வாகம்பண்ண கர்த்தர் கொடுத்துள்ளதை அடையாளம் கண்டுகொண்டுள்ள சொற்பமான சிலபேர்களே, அதற்கு உண்மையுள்ளவர்களாய் இருந்து, சந்தோஷத்தோடு தங்கள் கணக்கை ஒப்புவிக்க முடிகிறவர்களாகவும், “நல்லது உண்மையும், உத்தமும் உள்ள ஊழியக்காரனே!” என்று கர்த்தர் சொல்வதைக் கேட்கமுடிகிறவர்களாகவும் இருப்பார்கள்!

“அறுப்புக்காலம் சென்று, கோடைக்காலமும் முடிந்தது” என்றாகுவதற்கு முன்னதாக, அருமையான சகோதர சகோதரிகளே நம்முடைய சிலாக்கியங்களுக்கும், வாய்ப்புகளுக்கும் நாம் விழித்துக்கொண்டு, இவைகளை நன்றியோடு பயன்படுத்திடுவோமாக. நடைமுறைக்குச் சாத்தியமாகாத கடினமான காரியத்தைச் செய்யும்படிக்கு நாங்கள் கட்டளையிடுவதாகத் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட வேண்டாம். தங்கள் சொந்தத் தேவைகளைச் சந்திப்பதற்கும் மேலாக அதிகமாய்ச் செய்திடுவது என்பது, அதாவது தொகுதி விநியோகிப்பாளர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள மிகவும் தாராளமான நிபந்தனைகளுக்கும் மேலாக அதிகமாய்ச் செய்திடுவது என்பது விதிவிலக்கான சிலரால் மாத்திரமே முடிகிற காரியமாகும்; “தன் சொந்த வீட்டாரை விசாரியாதவன் அவிசுவாசியிலும் கேடானவனாய் இருக்கிறான்” என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். குடும்பச் சூழ்நிலைகளினால் தடைப்பண்ணப்படுபவர்கள் தங்கள் அன்பையும், அர்ப்பணிப்பையும் வேறு ஏதேனும் விதமான பலியின்மூலம் காண்பித்திட வேண்டும்.

இந்த ஊழியத்தில் ஈடுபட்டிருக்கும் சில எளிமையான மற்றும் சிறு தாலந்துடையவர்களுக்குச் சிலவற்றைக் கூறி இங்கு நிறைவுசெய்கின்றோம். இத்தகையவர்கள் அநேகமாக நம்முடைய ஆதார வசனத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறப்படுகின்ற முடமான, பழுதுள்ள வகுப்பாரில் தாங்கள் அடங்குவதாக எண்ணிடக்கூடும். அன்புக்குரிய சகோதரரே அப்படியல்ல; இயேசு கிறிஸ்துவின இரத்தமானது நம்மைப் பாவங்கள் அனைத்தினின்றும் சுத்திகரித்து, நம் இயல்பான குறைகள் யாவற்றையும் மூடிப்போட்டு, நம்மைப் [R3149 : page 53] பிரியமானவருக்குள் தகுதியானவர்களாகவும், ஏற்றுக்கொள்ளப்படத்தக்கவர்களாகவும் ஆக்குகின்றது. பூஜ்யம் தனித்திருந்தால் அதற்கு மதிப்பில்லை ஆனாலும் அது ஒன்று எனும் எண்ணோடுகூட வருகையில், அதற்கு வல்லமை இருக்கின்றது; இப்படியே நாமும் இயேசுவோடுகூடக் காணப்படுகையில் இருக்கும் – அவரது புண்ணியமானது அவரோடுகூட நமக்கு உறவையும், கூட்டுறவையும் கொடுக்கின்றது; மேலும் தேவனுக்காகவும், அவரது நோக்கங்களுக்காகவும் நமக்கு மதிப்பையும், செல்வாக்கையும், வல்லமையையும் கொடுக்கின்றது. “அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாய் இருக்கிறீர்கள்;” “பிரியமானவருக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றீர்கள்.”