(Q55:1)
கேள்வி(1909)-1-ஆயிர வருஷயுகத்தின்போது பிள்ளைகள் எந்த ஸ்தானங்களில் காணப்படுவார்கள் மற்றும் அவர்கள் என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வார்கள்?
பதில் – பிள்ளைகள் மிகவும் சிறியவர்களாய் இருப்பார்களானால் அவர்கள் மடியில் காணப்படுவார்கள் என்று நான் எண்ணுகின்றேன். ஒருவேளை அர்ப்பணிக்கப்பட்டவர்கள் யாரேனும் பிள்ளைகள் உடையவர்களாய் இருப்பார்களானால், அவர்களின் பிள்ளைகளின் நிலைமை என்ன என்று கேட்கின்றீர்கள் என்று நான் எண்ணுகின்றேன். ஐயத்திற்கிடமின்றி அப்போது அநேகம் அன்புள்ள இருதயம்கொண்ட ஜனங்கள் ஜீவிப்பார்கள்; மேலும் இப்பிள்ளைகள் மகிமையடைந்து போனவர்களின் பிள்ளைகள் என்று இவர்கள் அறிகையில், அப்பிள்ளைகளைப் பராமரித்திடுவதில் இவர்கள் மகிழ்வார்கள். இன்னுமாகத் திரைக்கு அப்பக்கத்தில் காணப்படும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை இப்பக்கத்தில் இங்கு இருந்து பராமரிப்பதைப் பார்க்கிலும், மிக அதிகமாய்ப் பராமரிக்க முடிபவர்களாய் இருப்பார்கள் என்பதிலும் நமக்கு நிச்சயமே.
பிள்ளைகள் என்ன ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வார்கள்? கிறிஸ்து யாருக்காக மரித்து, தேவன் தம்மைக்குறித்து அறியப்பண்ணுவதற்காய் யாருக்காக திரளான ஏற்பாடுகள்பண்ணினாரோ, அந்தப் பூமியின் குடிகளிலுள்ள மீதமானவர்களோடுகூட, இந்தப் பிள்ளைகளும் ஒரே ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வார்கள்.