R5245 (page 159)
“பூரண அன்பு பயத்தைப் புறந்தள்ளும்”” எனும் கொள்கையானது, கணவன்-மனைவிக்கு இடையிலும், பெற்றோர்-பிள்ளைகளுக்கு இடையிலும் செயல்பட வேண்டும். ஒருவேளை பூரண அன்பிருந்தால் எப்படி மகிழ்ச்சி இருக்குமோ, அதுபோலக் கணவனைக் கண்டு அஞ்சும் மனைவியினால் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது; இதுபோலவே பெற்றோரில் யாரேனும் ஒருவரையோ அல்லது இருவரையோ கண்டு பெரிதும் பயப்படும் பிள்ளைகளாலும்கூடப் பெற்றோர் மீதான உண்மையான பாசத்தோடு, அவர்களை அன்புகூர்ந்திட முடியாது. ஒருவரையொருவர் காயப்படுத்திடக்கூடாது அல்லது புண்படுத்திடக்கூடாது என்று ஒவ்வொருவரும் அச்சங்கொள்ள வேண்டும் மற்றும் தம் அறிவுள்ள சிருஷ்டிகள் யாவும் காண்பிக்கும்படியாகத் தேவன் பிரியப்படுகின்றதான அந்தப் பூரண அன்பினை அடைய நாடிட வேண்டும்.