R3921
ஒருவேளை நம்முடைய ஆதிபெற்றோர்கள் தேவனுக்கு உண்மையாய் இருந்து, சாபமில்லாமல் இருந்து, தெளிந்த புத்தியுள்ள மனதின் ஆவியினை அதிகமதிகமாய் உடையவர்களாய் இருந்திருப்பார்களானால், கர்த்தருடைய ஆசீர்வாதத்தின்கீழ், அவர்கள் குடும்பத்தினை வளர்த்திக்கொண்டுவருவது என்பது குடும்பத்திற்கு மாத்திரமல்லாமல், அவர்களுக்கும்கூட நன்மை பயக்கின்றதாய் இருந்திருக்கும். தற்போதைய விழுந்துபோன நிலைமைகளின்கீழ்க்கூட, எங்குத் தெளிந்த மனதின் ஆவியானது ஆளுகை செய்கின்றதோ, அங்கும் பிள்ளைகள் தங்களுக்கும், தங்கள் பெற்றோர்களுக்கும், தங்கள் அயலகத்தாருக்கும் தொல்லையாயிருப்பதற்குப் பதிலாய் மிகப் பெரிய அளவில் விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்களாகிடுவார்கள். கர்த்தருடைய வசனத்தின் கட்டளைகளுக்கு இசைவாய்ப் பிள்ளைகளுக்கு அறிவுரை வழங்குவதன்மூலம், அவர்களைக் கட்டுப்படுத்துவதன்மூலம், அவர்களுக்கு வழிகாட்டுவதன்மூலம் தன் கடமையினைச் செய்திடும் பெற்றோர், தன் பிள்ளைக்கு மாத்திரம் பெரிதளவில் நன்மைபண்ணுகிறவனாய் இராமல், இன்னுமாக தனக்கும்கூட ஐசுவரியமான அனுபவ ஆசீர்வாதத்தினைக் கொண்டுவருபவனாய் இருப்பான்; ஏனெனில் தன் பிள்ளைகளுக்குக் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும் வழிகாட்டியாகவும், ஆசிரியராகவும் இருக்க முற்படுவதன்மூலம் – அவன் தன் சொந்தக் குணலட்சண வளர்ச்சிக்கு உதவிகரமாயிருக்கும் மற்றும் கர்த்தருக் கொத்த குணலட்சண சாயலில் தன்னை அதிகமாய் வழிநடத்திடுவதற்கு ஏதுவாயிருக்கிறதுமான விலையேறப்பெற்ற படிப்பினைகளைத் தனக்குத் தானே கற்பித்துக் கொண்டிருப்பதை எப்போதும் கண்டுகொள்வான்.