R5487 (page 195)
“தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.” (நீதிமொழிகள் 25:28)
தன் சொந்த ஆவியைக் கட்டுப்படுத்துவதைக் கிறிஸ்தவனால் எந்த விதத்தில் வளர்த்திடமுடியும்? ஆரம்பத்தில் ஒரு நபர் எல்லாவற்றிலும் தன்னைக் கட்டுப்படுத்திடும் ஆற்றல் அற்று இருப்பான்; ஆனால் சிறு காரியங்களில் சுயத்தைக் கட்டுப்படுத்திட அவன் கற்றுக்கொள்கையில்… இப்படிச் சிந்தையிலும், வார்த்தையிலும், கிரியையிலும் அவன் அதிகமதிகமாய்ச் செய்துவருகையில் குணலட்சணத்தில் அவன் பலம் அடைவான். தன் தசைகளை வளர்த்திட விரும்பின மனுஷடைய கதையினை நாம் நினைவில்கொள்ள வேண்டும்; தசைகளை வளர்த்திடுவதற்கு வேண்டி அவன் ஒவ்வொரு நாளும் ஒரு கன்றுக்குட்டியைத் தூக்கிப் பயிற்சிக்கத் துவங்கினான். கன்று மிகவும் குட்டியாக இருக்கும்போது இப்படிப் பயிற்சியைத் துவங்கினான் மற்றும் இப்படித் தினந்தோறும் வாரக்கணக்காகவும், மாதக்கணக்காகவும் தூக்கிப் பயிற்சி செய்தான். குறிப்பிட்ட காலத்தில் கன்றுக்குட்டி எருதுமாடு ஆனது மற்றும் அவன் எருதைத் தூக்கமுடிகிறவனுமானான். அவனது அன்றாட பயிற்சியானது படிப்படியாக அவன் தசைகளை வலுப்படுத்தினது; அவன் முழுவளர்ச்சியடைந்த எருதைத் தூக்குவதற்குப் பலம் உள்ளவனாகும்வரை… விலங்கினுடைய எடை அதிகரித்து வர, அவன் தசைகளின் பலமும் அதிகரித்து வந்தது.
இப்படியாகவே கிறிஸ்தவனுக்கும், அவனது குணலட்சணத்தினுடைய வளர்ச்சியின் விஷயத்திலுமாகும். நாம் தினந்தோறும் சுயக்கட்டுப்பாட்டினைப் பயிற்சி செய்துவந்தால் இது விஷயத்தில் நாம் படிப்படியாக பலமான குணத்தையடைவோம்; மேலும் இது நம்முடைய கிறிஸ்தவ போராட்டத்தில் சொல்லிமுடியாத அளவிற்கு நன்மையாகக் காணப்படும். சுயக்கட்டுப்பாட்டின் வளர்ச்சி என்பது, ஒருவர் பிறப்பதற்கு முன்னாகவே – ஆம் கருத்தருத்தலின் காலத்தின்போதே துவங்குவது ஏற்றதாக இருக்கும். தாயானவள் இதுவரை பிறக்காத தன் பிள்ளையின் மனதில் சுயக்கட்டுப்பாடு எனும் பண்பினைப் பதிய வைத்திடவும், இப்படியாகக் குழந்தைப் பிறந்து உலகத்திற்கு வருகையில் அவன் சுயக்கட்டுப்பாட்டு விஷயத்தில் மிக அதிக அனுகூலமான நிலைமையில் காணப்படவும் வேண்டி, தாயானவள் (கர்ப்பக்காலத்தில்) சுயக்கட்டுப்பாட்டினைப் பயிற்சி செய்திட வேண்டும். மேலும் குழந்தைப் பிறந்த பிற்பாடு, சுயக்கட்டுப்பாட்டின் இந்த ஆவியானது பெற்றோரின் முறையான பயிற்சியின் கீழ்ப் பிள்ளையினிடத்தில் வளரும்; மேலும் இப்படியாகப் பிள்ளை, புருஷன் நிலையை அடைகையில் அவன் இயல்பாகவே அதிகம் சுயக்கட்டுப்பாட்டைப் பிரயோகிக்க முடிகிறவனாய் இருப்பான். இப்படிப்பட்டவன் தேவ பிள்ளையாகிடும்போது உண்மையில் அவன் மிகச் சிறந்த கிறிஸ்தவனாய் இருப்பான்; அவன் கர்த்தரில் பலமுள்ளவனாகவும், மற்றவருக்கு உதவிசெய்ய முடிகிறவனாகவும் இருப்பான். ஆனால் அனைவருக்குமே இப்படியாக இந்த இயல்பான அனுகூலம் இருப்பது இல்லை மேலும் இதன் காரணமாய் மிகவும் உறுதியாகப் போராட வேண்டியவர்களாய் இருக்கின்றனர்.