(Q57:1)
கேள்வி (1910)-1- இந்த யுகத்தில் தங்கள் பிள்ளைகள் பூமிக்குரிய ஸ்தானங்களை அடையமுடியாது என்பதை பரிசுத்தவான்கள் அறிந்திருக்கிற நிலைமையில், இந்தக் காலங்களில் தங்கள் பிள்ளைகளைப் பூமிக்குரிய ஸ்தானங்களுக்கென்று முயன்று, படிக்கவைக்க வேண்டுமா? இத்தகைய (கல்லூரியிலோ அல்லது பல்கலைக்கழகத்திலோ பெறப்படும்) கல்விக்கு, ஆயிர வருஷயுகத்தில் மதிப்பு ஏதேனும் இருக்குமா?
பதில் – கல்வி என்பது மிகவும் அருமையான காரியம் என்று நான் பதிலளிக்கின்றேன்; மேலும் மேசியாவினுடைய இராஜ்யத்தின்போது சந்தேகத்திற்கிடமின்றி ஒட்டுமொத்த உலகத்திற்கும் அருமையான கல்வி வசதிகள் அருளப்பட்டிருக்கும்; ஆனால் அந்தக் கல்வி ஏற்பாடுகளானது வேறே மேற்பார்வையின்கீழ்க் காணப்படும் மற்றும் இப்பொழுது கொடுக்கப்படுகின்றதான கல்வியிலிருந்து அநேகம் விதங்களில் மிகவும் வேறுபட்டிருக்கும்.
கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளைக் கல்லூரிகளுக்கு அல்லது பல்கலைக் கழகங்களுக்கு அனுப்ப வேண்டாம் என்றுள்ள எனது அறிவுரையானது வாட்ச் டவர் பத்திரிக்கைமூலம் தெரிவிக்கப்படுகின்றது; ஏனெனில் பிள்ளைகளை அனுப்பி வைப்பார்களானால், அது பெருமளவில் பிள்ளைகளுக்கு அவநம்பிக்கையையும், நாத்திகத்தையும் கொண்டுவந்திடும் மற்றும் அது பிள்ளைகளுக்கு நிச்சயமாய்ப் பாதிப்பை ஏற்படுத்திடும்.
ஐந்து வருஷங்களுக்கு முன்னதாக தன் மகளைப் பெண்கள் கல்லூரிக்கு அனுப்புவது தொடர்பாக என்னிடம் விசாரித்த ஓர் அருமையான கிறிஸ்தவ சகோதரன்குறித்து எனக்கு ஞாபகம் வருகின்றது. மகளோ வேதத்தின்மீதான அவளது விசுவாசத்தினை அநேகமாக இழக்க நேரிடும் என்று நான் எதிர்மறையாய் அறிவுரை வழங்கினேன். தகப்பனோ நல்லதொரு கல்லூரியைத் தெரிவு செய்ய வேண்டும் என்று எண்ணி, சிறந்த ஒன்றைத் தெரிவு செய்தார். அது ஒரு மத ஸ்தாபனமாகவும், சபை பிரிவு சார்ந்த கல்லூரியாகவும் இருந்தது. கொஞ்சம் காலத்திற்குப் பிற்பாடு அவர் என்னிடம் தன் மகள் கல்வி பெற்றுக்கொண்டாள் என்றார்; ஆனால் அந்த மகளோ கிறிஸ்தவமார்க்கமற்றவளாகவும், வேதத்தின்மீதோ அல்லது இயேசு கிறிஸ்துவின்மீதோ விசுவாசமற்றவளாகவும் போய்விட்டாள்; தேவன்மீது கொஞ்சமாகிலும் அவளுக்கு விசுவாசம் இருக்கின்றதா என்பது உண்மையில் சந்தேகமே.
இந்தியாவிலிருந்து இந்த நாட்டிற்கு வந்த ஓர் இளைஞன்குறித்த மற்றுமொரு சம்பவம் வாட்ச் டவர் பத்திரிக்கையில் சமீபத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த இளைஞன் முன்னிலை வகிக்கும் பல்கலைக்கழகங்கள் ஒன்றில் பயின்று, நாத்திகனாகவும், அவிசுவாசியாகவும் வெளியே வந்தான். வேதாகமப் பாடங்களினுடைய ஆறு தொகுதிகளையும் வாசித்ததன்மூலம் தன் அவநம்பிக்கையிலிருந்து மீண்டுவந்த அந்த இளைஞன் இப்பொழுது இந்தியாவில் காணப்படுகின்றார் மற்றும் இப்பொழுது வேதத்தை முழுமையாய் விசுவாசிக்கும் விசுவாசியாகக் காணப்படுகின்றார். ஆகையால் உங்கள் பிள்ளைகளுக்குத் தொடக்கப்பள்ளி கல்வியைக் கொடுங்கள்… அவர்களை உயர்நிலைப் பள்ளிக்கூடத்திற்குக்கூட எடுத்துச்செல்ல முயற்சிக்காதீர்கள் என்பதே என் அறிவுரையாகும்; ஏனெனில் உயர்நிலை பள்ளிகளில் பிள்ளைகளுக்கு அவநம்பிக்கைகள் அநேகம் கற்றுக்கொடுக்கப்படுகின்றன மற்றும் சீக்கிரத்தில் இப்படியாகத் தொடக்கப்பள்ளிகளிலும்கூடக் கற்றுக்கொடுக்கப்படும்.