R1142 (page 8)
“பிள்ளைகளுக்கு உதவியாய் இருக்கும் ஏதேனும் புத்தகங்கள் இருக்கின்றதா? பிள்ளைகளால் புரிந்துகொள்ளமுடிகிற காவல்கோபுர வெளியீடு ஒன்று காணப்பட வேண்டும் என்று நான் வாஞ்சிக்கின்றேன்” என்று சிலர் கேட்கின்றனர், சிலர் கூறுகின்றனர்.
பிள்ளைகள் வாசிப்பதற்கென்று தயாரிக்கப்பட்ட கட்டுரைகள் எதுவும் நம்மிடம் இல்லை மேலும் பிள்ளைகளுக்குப் புரியும் விதத்தில் தேவனுடைய திட்டத்தை முன்வைத்திடும் எந்த ஒரு புத்தகத்தையோ அல்லது பக்கங்களையோ நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைத்திட முடியாது. இப்படிச் செய்வதும் சாத்தியமாகாத காரியமாகும். பிள்ளைகளுடைய மனங்களானது, தவறான அபிப்பிராயங்கள் அற்றதும், சத்தியத்திற்கு விசேஷமாய் இணங்குகின்றதாய் இருப்பினும்; இன்னுமாக அவர்கள் இயேசுவையும், அவரது அன்பையும், அவரது மீட்பின் வேலையையும், திரும்பக்கொடுத்தலின் வேலையையும் குறித்த அருமையான கதையை விரும்பி உள்வாங்கிக்கொள்கின்றவர்களாய் இருப்பினும் . . . எனினும் பிள்ளைகளுக்குத் தனிப்பட்ட போதித்தல்களும், ஜீவனுள்ள முன்மாதிரியும் அவசியமாயிருக்கின்றது. நீங்கள் தெய்வீகத் திட்டத்தைப் படித்து, அதை அதிகமதிகமாய்ப் புரிந்துகொள்ளும் நிலைக்கு வருகையில், உங்கள் ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் புரியத்தக்கதாக அதன்படி ஜீவியுங்கள் மற்றும் படிப்படியாக அதை எளிமையாகவும் மற்றும் மிதமாகவும் கற்பியுங்கள் – உங்கள் சின்னஞ்சிறு குழந்தையினுடைய கண்கள்கூட – அதாவது ஆயிர வருஷஅரசாட்சியின் திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்கள்குறித்த பிரம்மாண்டமான காரியங்கள் பற்றிக் கேள்வி எழுப்புகையில் குழந்தையினுடைய கண்கள்கூட வியப்பில் அகலமாய் விரியும்.
தெய்வீகச் சித்தத்தினுடைய கொள்கைகளைக் கற்றுக்கொண்டு, அவற்றை உங்கள் வார்த்தை மற்றும் முன்மாதிரியின் மூலமாய், எப்படி ஜீவியத்தின் அன்றாட காரியங்கள் ஒவ்வொன்றிலும் செயல்படுத்திடலாம் என்று பிள்ளைகளுக்குக் காண்பித்துக்கொடுங்கள். பெற்றோர்களே பிள்ளைகளுக்கான மிகச் சிறந்த ஆசிரியர்களாய்க் காணப்படுகின்றனர்; மேலும் மதசம்பந்தமான பயிற்சி அளிக்கப்படத்தக்கதாகப் பிள்ளைகளை ஞாயிறு பள்ளிகளினிடத்தில் ஒப்புக்கொடுப்பது என்பது மிகவும் தவறாய்ப் புரிந்துகொள்ளப்பட்ட கருத்தாகும்; இந்த ஞாயிறு பள்ளிகளில் பிள்ளைகள் உண்மையில் கொஞ்சமே நன்மை அடைகின்றனர், மாறாக பெருமையையும், விளம்பரமாகிடுவதற்கான விருப்பத்தையும் தோற்றுவிப்பதற்கும், வளர்த்துவதற்கும்தான் மிக அதிகமாய் ஏதுவாகுகின்றனர்.
குழந்தைகளுக்கான சில புத்தகங்களும், கட்டுரைகளும் இருக்கின்றன, மேலும் அவை கவனமாய்த் தெரிந்தெடுக்கப்பட்டால், ஒழுக்கம் வளர்வதற்கு உதவியாகக் காணப்படலாம். பொதுவாகவே வாசிப்பதற்கான விருப்பம் உருவாகுவதுவரையிலும், பிரயோஜனமான, உபயோகமான புத்தகங்களைப் பிள்ளைகளால் புரிந்துகொள்ள முடியாது எனும் அனுமானத்தினால், நலமானதையும், ஆரோக்கியமானதையும் தவிர்த்த நிலையில், எளிமையான புத்தகங்களானது பிள்ளைகளுடைய கரங்களில் கொடுக்கப்படுகின்றது. அவர்களால் நன்கு படித்து வாசிக்க முடிகிறபோது, அவர்கள் பிரயோஜமான / வாசிப்பதற்குத் தகுதியான புத்தகங்களைப் புரிந்துகொள்ள முடிகின்றவர்களாய் இருப்பார்கள்.
ஆகையால் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பலத்தின் கோபுரங்களாகவும், ஒழுக்கம் மற்றும் தேவன்பற்றிக் கற்றுக்கொடுக்கும் விஷயத்தில் பிள்ளைகளுக்கு ஆசிரியர்களாகவும் இருப்பார்களாக; மேலும் தேவனும் உங்களது உண்மையான பிரயாசங்களுக்குத் தமது ஆசீர்வாதத்தினை அருளுவார். உங்கள் பிள்ளைகள் மாத்திரம் ஆசீர்வதிக்கப்படாமல், நீங்களும்கூட இவ்விஷயத்திலுள்ள உண்மையின் நிமித்தமும் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். உங்கள் பிள்ளைகளிடத்தில் நீங்கள் பெற்றிருக்கின்றதும், அவர்களைத் தேவ வசனத்தின் ஆவிக்கு இசைவாக உபதேசத்திலும், நடைமுறையிலும் பயிற்றுவிப்பதுமாகிய பொறுப்புகளை ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியர்மீதோ அல்லது வேறு யார்மீதோ நீங்கள் மாற்றிவிட முடியாது. நீங்கள் உலகத்திற்குள்ளாய் பிள்ளைகளைக் கொண்டுவந்திருக்கின்றீர்களானால், அவர்கள் பகுத்தறிவின் வயதை அடைவது வரையிலும் தேவன் முன்னிலையில், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கடமை ஒன்றினைப் பெற்றிருக்கின்றீர்கள்; பெரியவர்களாகிய மற்றவர்களுக்குச் சத்தியத்தைப்
போதிக்கும் மற்றும் பிரசங்கிக்கும் மகிமையான மற்றும் முக்கியமான வேலையில் பங்கெடுப்பதற்காகக்கூட, மேற்கூறிய கடமையானது ஒதுக்கிவைக்கப்படக்கூடாது.
சமீபத்தில் ஒரு சகோதரன் பின்வருமாறு கவலையுடன் தெரிவித்ததாவது: யுகங்களுக்கடுத்த தேவனுடைய திட்டம் குறித்த சத்தியத்தினைக் கண்டுகொள்வதற்கு முன்னதாக, அவர் தனது ஞாயிற்றுக்கிழமையைச் சபை வேலைகளிலும், YMCA வேலைகளிலும் காலைமுதல் இரவுவரை செலவிடுவாராம்; மற்ற வேலைகள் அனைத்தையும்விட முதலாவதாகத் தன்னால் நிறைவேற்றப்பட வேண்டிய கடமையாகிய – தன் சொந்தக் குடும்பத்தின் ஆவிக்குரிய காரியங்களைப் பார்த்துக்கொள்ளும் காரியத்திற்கு எவ்விதமான கவனமும் காட்டாமல் இருந்தாராம். இதில் மற்றவர்களைப்போல இவரும் தவறான இறையியல் கோட்பாடுகளினால் தவறாய் வழிநடத்தப்பட்டிருந்திருக்கின்றார்; அதாவது நித்திய சித்திரவதையினின்று “ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளும்படிக்கு” தேவன் தன்னை அனுப்பியுள்ளார் எனும் தவறான கருத்தினால் வழிநடத்தப்பட்டிருந்திருக்கின்றார்.
இப்பொழுதும் வைராக்கியத்துடன் காணப்படும் இச்சகோதரன், தவறான அபிப்பிராயங்கள் ஏதும் இல்லாமல், தேவ வசனத்தின்மீது பண்ணின ஆராய்ச்சியின் விளைவாய்ப் பெற்றுக்கொண்ட “தெளிந்த மனதின் ஆவியினால்” மிகவும் சரியாய் வழிக்காட்டப்பட்டுள்ளார். இப்பொழுது கிறிஸ்துவின் மரணமானது அனைவரையும் மரணத்திலிருந்து மீட்டுள்ளது என்பதையும், தேவனுடைய “ஏற்ற காலத்தில்”
– ஆயிர வருஷயுகத்தில் —
“சாபங்களை அகற்ற தம் ஆசீர்வாதங்கள்தனை
புரண்டோடப்பண்ண வருகின்றார்”
என்பதையும் அச்சகோதரன் காண்கின்றார்.
கிறிஸ்துவைக் கண்டுகொண்டு, அவரது தயவுகளைச் சுவைத்துள்ள தான், இந்த நற்செய்திகளைக் கேட்கும் செவிகள் உடையவருக்கு – தன் சொந்த வீட்டாருக்கு முதலாவதாகச் சொல்லும் சிலாக்கியம் தனக்கு இப்பொழுது இருக்கின்றது என்று அச்சகோதரனால் காணமுடிந்தது; மேலும் நற்செய்திக்குக் கேட்கும் செவிகள் பெற்றிராதவர்களைப் பொறுத்தமட்டில், இவர்களுக்காய்த் தான் துக்கப்பட வேண்டியதில்லை, காரணம் இவர்கள் அனைவரும் தம்முடைய தயவு குறித்தும், இவர்களுக்கான தம்முடைய அநேகம் ஏற்பாடுகள் குறித்துமான சத்திய அறிவிற்குள்ளாக வர வேண்டும் என்றும், அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் என்றும், சித்திரவதைகளிலிருந்து அல்ல, மாறாக இரண்டாம் மரணத்தினின்று – அழிவினின்று தப்பி நித்திய ஜீவினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தேவன் ஏற்கெனவே ஏற்பாடுபண்ணியுள்ளர் என்று அச்சகோரனால் இப்பொழுது காணமுடிகிறது. அச்சகோதரன் இப்பொழுது நல்லத் தேவனுடைய நல்ல வார்த்தைகளினுடைய நியாயமான போதனைகளின் அடிப்படையில் நியாயமான சந்தோஷம், சமாதானத்தையும் கொண்டவராகவும், புத்தியுள்ள ஆராதனை ஏறெடுக்கின்றவராகவும் காணப்படுகின்றார்.
தேவன் அன்பு குழந்தைகளை ஆசீர்வதிப்பாராக; அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களானவர்கள் தேவனால் போதிக்கப்பட்டவர்களாகவும், பக்குவமாக்கப்பட்டவர்களாகவும் காணப்படுவார்களாக; பிள்ளைகள் பகுத்தறிவின் வயதை அடைவதுவரையிலும், தங்கள் பிள்ளைகள்மீது நீதியான, அன்பினால் ஏவப்பட்ட அதிகாராம் கொண்டிருப்பார்களாக; பிள்ளைகளுக்கான பெலத்தின் கோபுரங்களாக இருப்பார்களாக; தங்கள் பிள்ளைகள் தங்கள் வாயிலாக ஆண்டவரின் மாபெரும் வேலையில பங்கெடுக்கத்தக்கதாகப் பலமுள்ள இருதயங்களையும், ஆயத்தமான கரங்களையும், அர்ப்பணிக்கப்பட்ட சித்தங்களையும் உடைய இளைஞனாகவும், வாலிபப் பெண்ணாகவும் வளர்ந்து வருவதுவரையிலும், பிள்ளைகளைக் கர்த்தருக்கேற்ற சிட்சையிலும், போதனையிலும் வளர்ப்பார்களாக.
பரிசுத்தவான்களின் பிள்ளைகள் சத்தியத்தினை ஏற்றுக்கொண்டு வருகின்றனர் என்றும், அதன் ஆவியினைக் கிரகித்துக்கொண்டு வருகின்றனர் என்றும், பத்து, பன்னிரண்டு வயதுள்ள சில பிள்ளைகள் அவர்களால் இயன்றமட்டும் சுறுசுறுப்பான missionaries / ஊழியக்காரர்களாய்க் காணப்படுகின்றனர் என்றும் அநேகம் திசைகளிலிருந்து கேள்விப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். வேறு ஒரு காவல்கோபுர கட்டுரையில் எவ்விதங்களில் பிள்ளைகள் அறுவடை வேலையைப்பண்ணிடலாம் என்பதற்கான யோசனைகளை நீங்கள் காணலாம்; இப்படியாகப் பிள்ளைகள் / பதிலாள்கள் மூலம், நேரம் இல்லாத (busy) தாய்மார்கள் சில அறுவடைப் பணிகளையும் பண்ணிடலாம்.
– திருமதி C.T. ரசல்.