(Q54:1)
கேள்வி (1906)-1- அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களை உடையவர்களாகவும், உபத்திரவ காலத்திற்குள் பிரவேசிக்கப்போகிறவர்களாகவும், பொறுப்பாய் நடந்துகொள்ளும் வயதை அடையாதவர்களுமான பிள்ளைகள் விஷயத்தில், தேவ வசனத்தில் ஏதேனும் அறிவுரையாகவும், ஆறுதலாகவும் விசேஷமாகக் காணப்படுகின்றதா?
பதில் – இத்தகைய பிள்ளைகளைக்குறித்து நேரடியாய்ப் பேசப்பட்டுள்ள எவ்வார்த்தைகளையும் நாங்கள் அறியோம் என்றபோதிலும், நாம் பின்வருபவற்றை அறிவோம்: அதாவது கர்த்தருடைய கண்ணோட்டத்தில் அவருடைய ஜனங்கள் அனைவரும் விலையேறப்பெற்றவர்கள் ஆவார்கள்; அவர்களுடைய நலனுக்கடுத்தவைகள் அனைத்தும் விலையேறப்பெற்றவையாகும்; இவர்கள் மாத்திரமல்லாமல், இவர்களது சிறுபிள்ளைகளும், இவர்கள் சம்பந்தப்பட்ட அனைத்துமே கர்த்தருடைய பார்வையில் நிச்சயமாய் விலையேறப்பெற்றதாகக் காணப்படும். இது நிதரிசனமான உண்மை மற்றும் இதற்கான வேத ஆதாரங்கள் ஏதும் உண்மையில் அவசியப்படுகிறதில்லை. விசுவாசிகளினுடைய பிள்ளைகள் அனைவரும், பிள்ளைகள் தனிப்பட்ட பொறுப்புணர்வினை அடைவதுவரையிலும், அதாவது தங்களுக்கென்று பொறுப்பினைப் பெற்றவர்களாகுவதுவரையிலும் கர்த்தருடைய விசேஷித்த பாதுகாப்பு மற்றும் பராமரிப்பின்கீழ்க் காணப்படுகின்றனர் என்று நான் சொல்லிடுவேன்; இப்படியான சிறுபிள்ளைகள் அனைவரும் கர்த்தருடைய தூதனின் விசேஷித்த மேற்பார்வையின்கீழ்க் காணப்படுவார்கள் என்று நாம் நிச்சயமாய் எண்ணிக்கொள்ளலாம்.