R3393 – ஒரு நல்ல இராஜாவின் தவறு

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R3393 (page 205)

ஒரு நல்ல இராஜாவின் தவறு

A GOOD KING'S ERROR

2 நாளாகமம்19:1-11

“நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை.” ( 2 நாளாகமம் 19:11 )

யூதாவின் சரித்திரத்தில் யோசபாத் சிறந்த இராஜாக்களில் ஒருவராகக் காணப்பட்டார். இவர் ஆசாவின் குமாரனாவார். இப்பாடத்தில் பார்க்கப்படும் சம்பவங்கள் நடைபெற்ற காலத்தில் இவர் இருபது வருஷங்கள் அரசாண்டவராகக் காணப்பட்டார். இவர் தன் தகப்பனாகிய ஆசாவைக்காட்டிலும் மிகவும் ஆற்றல்மிக்க சீர்த்திருத்தவாதியாகக் காணப்பட்டார் – இவர் விக்கிரக ஆராதனைச் செய்யப்பட்டிருந்த தோப்புகள் அனைத்தையும் முழுமையாய் அழித்துப்போட்டார்; இவ்விஷயம் இத்தோப்புகளில் சில அழிக்கப்படாமல் காணப்படும்படியாக இவர் தகப்பனார் அனுமதித்திருந்ததைச் சுட்டிக்காட்டுகின்றது. இன்னுமாக இவர் தம்முடைய இராஜ்யம் எங்கும் உண்மை தெய்வ வணக்கத்தை ஸ்தாபித்தார் மற்றும் எல்லா விதத்திலும் நீதிக்காய் வைராக்கியம்கொண்டிருந்தார். இவரைக்குறித்தப் பதிவானது மிகவும் அநுகூலமான வெளிச்சத்தில் இவரது ஆளுகையை எடுத்துக் காட்டுகின்றது.

இவர் பேராசையின் காரணமாய்த் தவற்றிற்குள் விழுந்தார். பத்துக் கோத்திரங்களாகிய இஸ்ரயேலின்மீது காணப்பட்ட ஆகாப் மற்றும் யேசபேலின் மகளோடு இவர் தன் குமாரனுக்குத் திருமண ஒப்பந்தம்பண்ணிக்கொண்டார். இந்த ஒன்றிணைதலின் வாயிலாக இறுதியில் இந்த இரண்டு தேசத்தாரும், தன் குமாரனின் கீழ் மறுபடியுமாய் ஒன்றாக இணைந்துகொள்வார்கள் என்பது இவரது ஆசையாகக் காணப்பட்டது என்பதில் ஐயமில்லை. அந்தோ பரிதாபம்! எத்தனை நல்லப் புருஷர்களும், நல்ல ஸ்திரீகளும் பேராசையினாலும், வேகத்தினாலும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். பிள்ளைகளுடைய உண்மையான சந்தோஷம் மற்றும் ஆவிக்குரிய வளமையைவிட, பிள்ளைகளுடைய பூமிக்குரிய வளமைகள்குறித்து அதிகம் சிந்திப்பவர்களாக எத்தனை பெற்றோர்கள் காணப்படுகின்றனர்! இத்தகைய பெற்றோர்கள் எவ்வளவு நல்லவர்களாகவும், சிறந்தவர்களாகவும், உயர் நோக்கமுடையவர்களாகவும் காணப்பட்டாலும்கூட, இம்மாதிரியான காரியங்களிலுள்ள இவர்களது நடத்தையானது, இவர்கள் தேவனிடத்தில் கொண்டிருக்கும் விசுவாசமின்மையைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது; அல்லது அவரது ஏற்பாடுகளுக்கு உண்மையாய் இணங்கிச் செயல்பட்டால், அது மற்ற அனைத்தையும் காட்டிலும் மகா ஆசீர்வாதத்தைக்கொண்டுவரும் என்று உணராமல், இவர்கள் அவர் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து ஒப்புக்கொடுக்காததைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது.

தீமையுடன் கூட்டணி என்பது அபாயகரமானதாகும்

இஸ்ரயேலின் இராஜ குடும்பத்தினரோடு கலப்புத் திருமணம்பண்ணிடுவதற்கு வழிநடத்தின பேராசையானது, இரண்டு இராஜ குடும்பங்களுக்கிடையே ஐக்கியமும், தோழமையும் ஏற்படுவதற்கும் வழிநடத்தினதாய் இருந்தது; மேலும் இதன் விளைவு எதிர்ப்பார்க்கப்பட்டது போலப் பொல்லாப்பானதாகவே காணப்பட்டது. “ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்” என்று அப்போஸ்தலன் கூறுகின்றார். ஒருமுறை மகன் ஒருவன் தன் தாயிடம், ஏன் அயலகத்தார் மத்தியிலுள்ள சில சிறுவர்களுடன் [R3394 : page 205] விளையாடிடுவதற்குத் தன்னை அவள் அனுமதித்திடவில்லை? என்று கேட்டான். அச்சிறுவர்களுடைய செல்வாக்கானது அவன்மீது தீமைக்கேதுவானதாய்க் காணப்படும் என்று அஞ்சுவதாக அத்தாய்ப் பதிலளித்தாள். அச்சிறுவர்களின் மாதிரியானது தன்மீது சாதகமற்றச் செல்வாக்கினைக்கொண்டிருக்கும் என்பதைவிட, தன்னுடைய நல் உதாரணமானது, அயலகத்தார் மத்தியில் காணப்படும் அச்சிறுவர்கள்மீது நல்தாக்கம்கொண்டிருக்குமே என்று ஏன் அவள் எதிர்ப்பார்த்திடவில்லை என்று கேட்டான். தனது கருத்தினை விவரிக்கும்படியாக, தனக்குச் சுத்தமான தண்ணீருள்ள டம்ளர் / tumbler ஒன்றையும், மை / ink உள்ள குப்பியையும், பேனாவையும் கொண்டுவரும்படியாகத் தன் குமாரனிடத்தில் கேட்டுக்கொண்டாள். அவன் இவைகளைக் கொண்டுவந்தபோது, மையில் ஒரு துளியைத் தண்ணீருள்ள டம்பளரில் போடும்படியாகக் கூறினாள். அவனும் செய்தான்; ஒரு துளி மையினால் உண்டாகும் விளைவினைக் கவனிக்கும்படியாகக் கூறினாள்; பின்னர் ஒரு துளி தண்ணீரை எடுத்து, மைக்குப்பியில் போடவும், அதில் எவ்வித மாற்றமும் ஏற்படாததைக் கவனிக்கவும் கூறினாள். இப்படிப்பினை அருமையானதாகும்; தீமையில் சீரழிக்கும் வல்லமையும், நீதியைப் பொருட்படுத்தாத எதிர்மறையான கீழ்நோக்கிய தன்மையுமே காணப்படுகின்றது.

நமக்கான பாடம் என்னவெனில், “நாம் உலகத்தால் கறைப்படாதபடிக்கு நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும்;” இன்னுமாக இப்படிச் செய்கையில் தேவ வசனத்தினுடைய அறிவுரைகளுக்கு, ஊக்குவித்தல்களுக்கு, கடிந்துகொள்ளுதல்களுக்கு மற்றும் புத்திமதிகளுக்கு நம்மை இசைவாய்க்கொண்டு வந்திடுவதற்குத் தெய்வீக உதவியை நாம் நாடிட வேண்டும் என்பவைகளேயாகும். பாவத்தின் சிறு புளிப்பினால் ஒட்டுமொத்த சமுதாயத்தினையே பாதித்திட முடியும்; பாவமானது விழுந்துபோன மனித சுபாவத்தில் சுயமாய் / தானாகவே வளர்ந்திடும் ஆற்றல் பெற்றதாகும்; ஆனால் இப்படித் தானாகவே வளரும் இயல்பினை நீதியானது பெற்றிருப்பதில்லை. இதை நாம் அதிகமதிகமாய் உணருகையில், உலகத்திற்கு அவசியமானதாய்க் காணப்படும் மாபெரும் சகாயத்திற்காய் நாம் கர்த்தரை ஏறெடுத்துப்பார்க்கின்றவர்களாய் இருப்போம்; கர்த்தருடைய இராஜ்யம் வருவதாக என்றும், இந்த இராஜ்யத்தின் வாயிலாக உலகில் நீதி ஸ்தாபிக்கப்படவும், பரலோகத்தில் செய்யப்படுவதுபோல இறுதியில் பூமியிலும் தெய்வீகச் சித்தம் செய்யப்படுவதாக என்றும் நாம் அதிகமதிகமாய் ஜெபம்பண்ணுகிறவர்களாகவும், ஊழியம்பண்ணுகிறவர்களாகவும் காணப்படுவோம்.

யூதாவின் இராஜாவுக்கும், இஸ்ரயேலின் இராஜாவுக்கும் இடையிலான தோழமையின் காரணமாக, யூதாவின் இராஜா, இஸ்ரயேலின் இராஜாவைச் சந்தித்தார் மற்றும் இம்மாதிரியான தருணத்தில், இஸ்ரயேலுக்கு ஒருகாலத்தில் சொந்தமாயிருந்த ஒரு குறிப்பிட்ட பட்டணத்தை, சீரியா இராஜாவின் கையிலிருந்து கைப்பற்றிட தான் முயற்சிக்கப்போவதாக இஸ்ரயேலின் இராஜா தெரிவித்தார். மேலும் வெற்றிகரமாய் முடியும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றதான யுத்தத்தில் தன்னோடுகூட யூதாவின் இராஜா வரும்படியாக வேண்டிக்கொண்டான். மரியாதையின் நிமித்தமாகவும், ஆகாபின் நட்பை வளர்த்திட வேண்டும் என்ற விருப்பத்தின் நிமித்தமாகவும், யோசபாத் ஒத்துக்கொண்டு, அவனோடு யுத்தத்திற்குப் போனார்; அந்த யுத்தம் மோசமாகிப் போக, யூதாவின் இராஜா எப்படியோ தப்பித்துக்கொள்கின்றார். யூதாவின் இராஜா யுத்தத்திலிருந்து திரும்பி வருகையில் கர்த்தர் தீர்க்கத்தரிசியாகிய யெகூ மூலமாய்க் கூறினதாவது: “துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் [R3394 : page 206] சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது” (2 நாளாகமம் 19:2) – இது தேவனுடன் இசைவில் காணப்படுவதுவரையிலும் யூதாவின் இராஜாக்களோடு காணப்படும் என்று விசேஷமாய் வாக்களிக்கப்பட்டிருந்த தெய்வீகத் தயவிற்கான எந்த நிரூபணம் இல்லாமல் அவமானத்தோடே இராஜா திரும்பி வந்ததில் சுட்டிக்காட்டப்படுகின்றது.

விட்டுப்பிரிந்திருங்கள் என்கிறார் ஆண்டவர்

இந்த முழுக்காரியமும் கர்த்தருடைய ஜனங்களுக்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொடுக்கின்றது; அதென்னவெனில்: எல்லாக் காரியங்களில் முதலாவதாகக் கர்த்தருடைய சித்தத்தை நாடுவதும், நம் காரியங்கள் மற்றும் நலனுக்கடுத்த விஷயங்களை அவர் வழிநடத்திடும்படியாக விட்டுவிடுவதும் நமது காரியமாகும். துன்மார்க்கருடன் ஒன்றிணைவதற்கு எதிராய் நாம் விசேஷமாய் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும் – அவர்களுக்கும், நமக்கும், நம் குடும்பங்களுக்கும் இடையில் ஐக்கியங்கள், விவாக ஒப்பந்தங்கள் முதலானவைகள் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராய் நாம் விழிப்புள்ளவர்களாய் இருக்க வேண்டும். யூதாவின் இராஜாக்களில் சிறந்தவர்களாய் இருப்பவர்களில் ஒருவர் இப்படியான தவறு செய்துவிட்டாரே என்று மிக அதிகமாய் எண்ணிக்கொண்டிருக்க வேண்டாம்; ஆனாலும் இராஜரிக ஆசாரியக்கூட்டத்தின் அங்கத்தினர்கள், பரிசுத்த ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள்… கர்த்தரிடத்திலுள்ள அவர்களது உறவின் விஷயத்திலும், தங்களுடைய மற்றும் தங்கள் பிள்ளைகளின் காரியங்களிலுள்ள பொறுப்பின் விஷயத்திலும் மிகவும் அலட்சியம்கொண்டிருந்து, ஏதேனும் விதத்தில் யோசபாத்தின் நடக்கையைப் பின்பற்றிடுவார்களானால், அதைக்குறித்தே நாம் ஆச்சரியப்பட வேண்டும்; எனினும் இப்படியாகத் தங்கள் காரியங்களையும், தங்களுடைய பிள்ளைகளின் காரியங்களையும் வழிநடத்திடும் விஷயத்தினைத் தங்கள் சொந்தக் கைகளில் எடுத்துக்கொள்ள முயற்சித்து, இவ்விஷயத்தில் கர்த்தரைப் புறக்கணிப்பவர்களாய் இருப்பவர்கள் அநேகர் இருக்கின்றனர் என்பதை நாங்கள் நன்கு அறிவோம். நாம் கிருபையிலும், அறிவிலும் வளர்கையில், சிலசமயங்களில் நம்முடைய தவறுகள் வாயிலாக நாம் சிலவற்றைக் கற்றுக்கொள்கின்றோம்; நாம் தவறுகளிலிருந்து அதிகமதிகமாய் விடுதலையடைந்து, அதிகமதிகமாய்க் கர்த்தருக்குப் பிரியமாகிட வேண்டும்.