R2004 (page 161)
R2009 : page 170
தங்களுடைய பிள்ளைகளின் விஷயத்தில், அர்ப்பணம்பண்ணியுள்ளதான பெற்றோர்கள், ஆயிர வருஷயுகத்தினுடைய விடியலின்போதாகிய இப்பொழுது, ஜெபங்களில் தங்களுக்கு விசேஷித்த சிலாக்கியங்கள் இருப்பதாக உணர்கின்றனர்; ஏனெனில் அனைத்து வகுப்பார்களில் பிள்ளைகள்வகுப்பார் மிக நிச்சயமாகவே திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்களுக்கான சுதந்தரவாளிகளாய் இருக்கின்றனர். விசுவாசிகள் அனைவரின் பிள்ளைகளும், அவர்களது பெற்றோர்களுடைய விசுவாசத்தின் காரணமாய், பகுத்தறிவின் வயதை அடைவதுவரையிலும் நீதிமான்களாக்கப்பட்டிருக்கின்றனர் (1 கொரிந்தியர் 7:14). ஆகையால் இவர்கள் பூமிக்குரிய ஆசீர்வாதங்கள், திரும்பக்கொடுத்தலின் ஆசீர்வாதங்கள் முதலானவைகளின் சுதந்தரவாளிகளாய் இருக்கின்றனர். மேலும் இப்பொழுது திரும்பக்கொடுத்தலின் காலங்கள் நம் மத்தியில் கடந்துவந்திருக்க, இத்தகையவர்களுக்காய் ஆரோக்கியம், பலம் மற்றும் ஜீவனைக் கேட்டுக்கொள்வதில் நாம் மிகுந்த நம்பிக்கை உடையவர்களாய் இருக்க வேண்டும். இப்பொழுது வாழும் விசுவாசிகளின் பிள்ளைகளானவர்கள், வெளிச்சம் மற்றும் தயவிற்கு எதிரான துணிகரமான பாவத்தினால் தவிர மற்றப்படி எவருக்கும் மரணம் சம்பவியாத ஆயிர வருஷசூரிய ஒளியின் மகிமை மற்றும் ஆசீர்வாதத்தின்கீழ்க் கடந்துசெல்வார்கள் என்பதாகத் தெரிகின்றது. எனினும் நம்முடைய அனைத்து விண்ணப்பங்களில், நம் எஜமானர் போலவே “என் சித்தமல்ல, உம் சித்தம் ஆகக்கடவது” என்றே நம்மால் கேட்கமுடியுமே ஒழிய மற்றப்படியல்ல. புத்தியுள்ள ஆராதனையாய்க் காணப்படும் முழுமையான அர்ப்பணிப்பு எனும் சரியான கட்டத்திற்கு நேராக தன்னால் இயன்ற மட்டும், தன் பிள்ளையைக் கொண்டுவந்திடுவதே ஒவ்வொரு பெற்றோரின் இலட்சியமாகவும், பொறுமையுடன்கூடிய பிரயாசமாகவும் காணப்பட வேண்டும்.