R4097 – தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R4097 (page 360)

தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்

HONORING OR DISHONORING THE HEAD

““ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான். ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே. ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள்.”” (1 கொரிந்தியர் 11:3-6)

மேல் இடம்பெறும் வேதவாக்கியத்தில் ஏதோ ஒன்று கர்த்தருடைய அருமையான மந்தையிலுள்ள சிலரைக் காயப்படுத்துவது போன்று தோற்றமளிக்கின்றது. இது குறித்து நாம் பெரிதும் வருந்துகின்றோம்; ஆனால் அதற்காக வேதவாக்கியங்களைத் திருத்தம் அல்லது மாற்றம் செய்வதற்கான அதிகாரம் நம்முடையதல்ல. மாறாக எங்குக் கர்த்தர் தம்முடைய வார்த்தைகளில் வைத்துள்ள சில விதிமுறைகளின் நிமித்தம் இருதயம் புண்பட்டு, நம்முடைய அல்லது மற்றவர்களுடைய தவறான கண்ணோட்டங்கள் மற்றும் தவறான நடைமுறைப்படுத்துதல்களின் காரணமாய் அப்பாடப்பொருள் குறித்துச் சில தவறான கருத்துகள் காணப்படுகின்றதோ… அங்கு ஒரு வகையான மனநிலை உருவாகியுள்ளது என்றும், இந்தப் புண்படுதலின் காரணமாய் அம்மனநிலை நோய்வாய்ப்பட்ட மனநிலையாய் இருக்கின்றது என்றும் எங்களுக்குத் தெரிகின்றது. இந்தப் பாடப்பொருளின் விஷயத்தில் சிலர் மிகவும் உணர்ச்சிவசப் படுகிறவர்களாகவும், மிகவும் எளிதில் புண்படுகிறவர்களாகவும் காணப்பட்டு, வேதாகமப் பாடங்களினுடைய 6-ஆம் தொகுதியினுடைய இதழாசிரியர் மீது கசப்பு அடைந்துள்ளதையும்கூட நாங்கள் அறிவோம்; அவர் மீது கசப்பு அடைந்ததற்கான காரணம்… அவர் அப்புத்திகத்தில் அவ்வேதவாக்கியத்தினையும், அதன் சரியான அர்த்தத்தினையும் கவனத்திற்குக் கொண்டுவந்திருக்கின்றார் என்பதினாலாகும்.

ஏதேனும் வேதவாக்கியமானது நம்மைத் தொடுமானால், அவ்வேதவாக்கியத்திற்கு எதிர்க்கிற விதத்திலோ அல்லது அவ்வேதவாக்கியத்தினை நம் கவனத்திற்குக் கொண்டுவந்தவரை எதிர்க்கிற விதத்திலோ நம் மனோநிலையானது காணப்படக்கூடாது; மாறாக நம்முடைய பெலவீனம் மற்றும் புண்ணானது நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு, இப்படியாகப் புண்களின் காயத்திற்குத் தைலமாய்க் காணப்படும் உரிய மருந்தைப் போட்டுக்கொள்வதற்கு நாம் உதவப்பட்டிருப்பதற்காகவும், கர்த்தருடைய நுகம் நமக்கு எளிமையாகவும், அவரது பாரம் நமக்கு இலகுவாக்கப்பட்டதற்காகவும் நாம் நன்றியுடையவர்களாய்க் காணப்பட வேண்டும். அது நமது கர்த்தருடைய வார்த்தைகளல்ல, மாறாக அவரது அப்போஸ்தலனாகிய பரிசுத்த பவுல் அடிகளாரின் வார்த்தைகள் மாத்திரம்தான் என்று நாம் சொல்வதும் சரியல்ல; ஏனெனில் அந்தப் பன்னிரண்டு பேரையும், அவர்களது வார்த்தைகளையும் கர்த்தர் கனப்படுத்தியுள்ளார் மற்றும் அவர்கள் வாயிலாக நமக்கு ஆசீர்வாதம் வரும்படிக்கு ஜெபம்பண்ணியும் உள்ளார் – “”நான்; இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்”” (யோவான் 17:20). இன்னுமாக அவர்கள் பூமியில் கட்டுவது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும் என்றும், அவர்களால் பூமியில் கட்டவிழ்க்கப்படுவது எதுவோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றும் கர்த்தர் கூறி, அவர்களுடைய வார்த்தைகளானது விசேஷமான வழிகாட்டுதல் பெற்றிருந்தது என்று நமக்குப் புரியவைக்கின்றார்; ஆகையால் அவர்கள் கட்டளையிடும் எதையும் தெய்வீகக் கட்டளையாக நாம் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் கிறிஸ்துவுக்குள்ளான நம்முடைய சுயாதீனங்கள் குறித்து அவர்கள் நமக்குச் சொல்லிடும் எதுவும், தெய்வீகச் செய்தியாக நம்மால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இன்னுமாக இந்த ஆசீர்வாத கால்வாய்களை / பிரதிநிதிகளைத் தம்முடைய சபையினுடைய ஆறுதலுக்காகவும், பக்திவிருத்திக்காகவும் அவர் எவ்வளவு அதிகமாய்ப் பயன்படுத்தினார் என்பதையும் நாம் நினைவுகூர வேண்டும். இன்னுமாக அவர்கள் எப்படிப் பிதாவினால், கர்த்தருக்கு விசேஷமாய்க் கொடுக்கப்பட்டார்கள் என்பதையும் நாம் நினைவுகூர வேண்டும்; இது பற்றி அவர் கூறினதாவது: “”நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள்”” (யோவான் 17:6). யூதாசினுடைய விலகிச்செல்லுதலின் காரணமாய், இவர் இடத்தை நிரப்பும்படிக்கு, அப்போஸ்தலனாகிய பவுல் திவ்விய தெரிந்துகொள்ளுதலின்படியானவராய்க் காணப்பட்டார் என்று நாம் பார்க்கின்றோம் மற்றும் கர்த்தருடைய வழிநடத்துதலின் பேரில், புதிய ஏற்பாட்டினுடைய பெரும்பான்மையான செய்தியானது – ஒட்டுமொத்த தெய்வீகத் திட்டத்திற்கான விளக்கமானது, சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் வாயிலாகத் தேவனால் அனுப்பப்பட்டது. உண்மையாக நமது கர்த்தருடைய வார்த்தைகளும், மற்ற அப்போஸ்தலருடைய வார்த்தைகளும் சபைக்கு ஆசீர்வாதத்தினைக் கொண்டுவந்துள்ளது; எனினும் எண்ணிக்கை மற்றும் விளக்கத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, பரிசுத்த பவுல் அடிகளாருடைய வார்த்தைகளானது, மற்ற அனைவருடையவைகளைக் காட்டிலும் மேலோங்கிக் காணப்படுகின்றது. நாம் பார்த்திருக்கிறதுபோல, இது நமது கர்த்தருடைய வார்த்தைகளின் விஷயத்திலும் உண்மையே ஏனெனில் கர்த்தருடைய பிரசங்கித்தல்களானது பரிசுத்த ஆவி இறங்கிவருவதற்கு முன்பு காணப்பட்டது; ஆகையால் ஆவியினால் ஜெநிபிக்கப்படாதவர்களிடத்திலேயே பேசப்பட்டிருந்தது மற்றும் இதன் காரணமாய் ஆவிக்குரிய காரியங்களை உணர்ந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியாதவர்களாய் இருந்தனர். ஆகையால் நமது கர்த்தருடைய ஆழமான போதனைகளானது, உவமைகளாகவும், மறைபொருள்களாகவும் இருந்தது மற்றும் இவைகள் பெந்தெகொஸ்தே அனுபவத்திற்கு முன்னதாகப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களினாலும்கூடக் கொஞ்சமே புரிந்துகொள்ளப்பட்டிருந்தது என்பது உறுதியே.

இப்பாடப்பொருளை மீண்டும் கவனத்திற்குக் கொண்டுவருவதற்கான காரணம், இப்பாடப்பொருளுக்கு ஏற்கெனவே இருக்கும் கவனத்தைக் காட்டிலும் அதிகமான கவனம் காட்ட வைக்கப்பட வேண்டும் என்று விரும்புவதினால் இல்லை – அப்போஸ்தலரின் வார்த்தைகளை யார் மீதேனும் திணித்திட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் என்பதினால் இல்லை – யாரையேனும் குற்றப்படுத்திட நாங்கள் விரும்புகின்றோம் என்பதினால் இல்லை – மாறாக இக்கருத்துக்களுக்கான பொறுப்பானது எங்கே வைக்கப்பட வேண்டுமோ, அங்கேதானே வைத்திடுவதற்காக – அதாவது வேதாகமப் பாடங்களினுடைய (volumes) ஆசிரியர் மீது வைக்கப்படாமல், மாறாக அப்போஸ்தலன்மீதும், அவரை ஏவினதான பரிசுத்த ஆவியின் மீதும் வைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம். இப்பாடப்பொருள் விஷயத்தில் சண்டையிடுகிறவன், தான் யாரோடு சண்டையிட்டுக் கொண்டிருக்கின்றான் என்று அறிந்து கொண்டு, அதற்கேற்ப தன்னைக் காத்துக்கொள்வானாக. கர்த்தருடன் சண்டையிட்டு, யாரும் நன்மை பெற்றுக்கொள்வதில்லை. தங்களை ஞானவான்களாக்கிடும் தெளிவான / உறுதியான வார்த்தைகளைச் சாந்தத்தோடு ஏற்றுக்கொள்கின்றவர்கள், மாபெரும் ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்வார்கள். எழுதப்பட்டிருப்பவைகளைக் காட்டிலும் தங்களை ஞானவான்களென எண்ணிக்கொள்கிறவர்கள் மற்றும் தன்னிறைவுகொண்டவர்கள் அனைவரும், அபாயமான இடத்தில் காணப்படுகின்றனர். இத்தகையவர்கள் இக்காலம், சோதனைக்காலம் என்றும், கர்த்தர் நம் அனைவர்மீதும் அனுமதித்துக்கொண்டிருக்கும் பரீட்சைகளில் ஒன்று தாழ்மைக்கான பரீட்சை என்றும் புரிந்துகொள்ள வேண்டும். நமக்கான பரீட்சைகள் அனைத்தும் ஒன்றுபோல் இருப்பதில்லை என்றும், கர்த்தர் தாமே தம்முடைய வார்த்தைகளினுடைய பல்வேறு சாட்சியங்கள் வாயிலாக தமக்கு அர்ப்பண்ணினவர்களைச் சோதித்தறிவார் என்றும், அதுவும் அவர்களை [R4097 : page 361] இடறப்பண்ணுவதற்காய் இராமல், மாறாக அவர்களைப் பரீட்சிப்பதற்காகவே சோதிக்கின்றார் என்றும், ஒருவேளை சோதனையில் சரியாய்க் கடந்துசெல்லும் பட்சத்தில், அது அவர்களுக்கு மகா ஆசீர்வாதத்தினையும், திவ்விய கிருபையில் வளர்ச்சியையும் கொண்டு வருகின்றதாய் இருக்கும் என்றும் இவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த வேதவாக்கியத்தினை எதிர்க்க முற்படும் எவனும் அவ்வேதவாக்கிய முழுப்பகுதியையும், 16- ஆம் வசனம் உட்பட வாசிப்பானாக; 16-ஆம் வசனத்தில் அப்போஸ்தலன்: “”ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன்”” என்று கூறுகின்றார். இதுவே இப்பாடப்பொருளினுடைய விஷயத்தில் அப்போஸ்தலனுடைய இறுதி வார்த்தைகளாகும் – அப்போஸ்தலன் வாயிலான கர்த்தருடைய இறுதி வார்த்தைகளாகும். அப்போஸ்தலனுடைய வார்த்தைகளுக்கான அர்த்தம் பின்வருமாறு: “”இது விஷயத்திலுள்ள சத்தியத்தினை நான் உங்கள் முன் வைத்திருக்கின்றேன்; இதற்கு நீங்கள் கீழ்ப்படியும்போது, இதனால் உங்கள் குடும்பங்களில் மாத்திரமல்லாமல், சபை கூடுகைகளில் மாத்திரமல்லாமல், உங்கள் சொந்த இருதயங்களிலும், அனுபவங்களிலும்கூட அதிகளவிலாக தேவ ஆசீர்வாதத்தினைப் பெற்றுக்கொள்வீர்கள். இந்தப் பாதையை நீங்கள் பின்பற்றுவதினால், நீங்கள் நன்கு முன்னேற்றம் அடைவீர்கள் மற்றும் நிச்சயமாய் மகா பலனை அடைவீர்கள் மற்றும் “”நல்லது”” எனும் ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்பீர்கள். எனினும் நான் கூறினதை நீங்கள் சட்டமாகக் கருதிட வேண்டாம்; அதைச் சட்டம் எனும் விதத்தில் நான் பேசவில்லை. அதை நான் உங்களுக்குத் தனிப்பட்ட விதத்திலும், ஒட்டுமொத்தமாகவும் நன்மை பயக்கின்ற விதத்திலும் அறிவுரையாக வழங்கியுள்ளேன். நான் முன்வைத்துள்ள கருத்தின் நிமித்தம் யாரேனும் கோபம்கொண்டு, காரியம்குறித்து வாக்குவாதம் பண்ண மற்றும் வாதாட முற்படுவானானால், அது அமைதியாக விடப்படுவதாக. என் அறிவுரையை மதிக்கிறவன், அதைப் பின்பற்றி, ஆசீர்வாதம் அடைவானாக; அதை மதிக்காதவர்கள், இது விஷயத்தில் தங்கள் வழியினைப் பின்பற்றிடுவார்களாக – அது அவர்களை நான் பாதுகாக்க விரும்பிட்டதான அனுகூலமின்மைகளை அவர்களுக்குக் கொண்டுவருகின்றதாய் இருக்கும்; மேலும் இந்த அறிவுரையைப் பின்பற்றுவதன் மூலம் அவர்கள் அடையக்கூடும் என்று நான் கருதிடும் ஆசீர்வாதத்தினை இழந்துபோகின்றவர்களாய் இருப்பார்கள்”” என்பதேயாகும்.

தலையை மூடிக்கொள்வது மற்றும் மூடிக்கொள்ளாமல் இருப்பது தொடர்பான அப்போஸ்தலனுடைய அறிவுரையானது, குடும்பம் மற்றும் சபையினுடைய காரியங்களில் கணவன் மற்றும் மனைவிக்கான உறவுக்குறித்த அவரது பொதுவான போதனைகளிலுள்ள ஒரு பாகமேயாகும். ஆராதனைகளில் தன் தலையினை மூடிக்கொள்ளுகிற மனுஷன், இது விஷயத்திலுள்ள திவ்விய வார்த்தைகளை, தான் புரிந்துகொள்ளவில்லை என்று காண்பிப்பதன் மூலம் தன் தலையினைக் கனவீனப்படுத்துகின்றவனாய் இருப்பான். இல்லத்தில் குடும்பத்திற்கான தலைமைத்துவத்தின் ஸ்தானத்தினை எடுத்துக்கொள்ளாத கணவன், தன் தலைமைத்துவத்தினை மூடிக்கொள்கிறவராய் இருப்பார்; இல்லத்தில் மனைவியானவள் தன் கணவனுடைய தலைமைத்துவத்தினை அடையாளம் கண்டுகொள்ளாதபோது, அவள் கணவனைக் கனவீனப்படுத்துகிறவளாகவும், தன்னையும் கனவீனப்படுத்துகிறவளாகவும் இருந்து, குடும்பத்தின் தலைவன் எனக் கணவனை, தான் எண்ண வேண்டியிருக்க, குடும்பத்தின் தலைவன் என்று தன்னால் எண்ணமுடியாத ஒரு மனுஷனை ஞானமற்ற விதத்தில் தான் திருமணம்பண்ணியுள்ளதாகத் தெரிவிக்கிறவளாக இருப்பாள். இங்கு அப்போஸ்தலன் தெரிவித்துள்ள இந்தக் கொள்கையானது, தேவபக்தியுள்ளவர்களென்று தங்களைக்குறித்து அறிக்கைப்பண்ணுகிற ஆண்களினாலும், ஸ்திரீகளினாலும் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டால், அநேகமான குடும்பப் பிரச்சனைகளும், குடும்பத்தின் மகிழ்ச்சியின்மைகளும் சரியாகிடும் என்று நாங்கள் நம்புகின்றோம்; ஏனெனில் மனைவியானவள் கணவனையே எதிர்நோக்கி இருப்பாளானால், இப்படியாக அவள் குடும்பத்தினுடைய காரியங்களிலுள்ள பொறுப்புகளுடைய மகா பாரப்பளுவினைக் கணவன் மீது [R4098 : page 361] வைத்துவிடுபவளாக இருப்பாள் மற்றும் இப்படி இதற்கு அவள் பழகிவரும்போது, இது அவள் மனதிற்கு மிகுந்த விடுதலையைக் கொடுக்கிறதாகவும், பெண் இனத்தினை மிகவும் சோர்வுப்படுத்திடும் அழுத்தம் மற்றும் பதற்றத்தினைக் குறைத்துவிடுகிறதாகவும் இருக்கும். கணவன் தலைவனெனத் தன் சூழ்நிலையினையும், தன் பொறுப்பினையும் உணர்ந்துகொள்கையில், தன் மனைவி, தன் பிள்ளைகள் மற்றும் தன் பராமரிப்பின் கீழ்க்காணப்படுபவர்கள் அனைவரின் நலனுக்கடுத்த காரியங்களைக் கவனிப்பதில் மிகவும் ஜாக்கிரதைக்கொள்ள வேண்டும் – கணவன் இவர்களுடைய பூமிக்குரிய தேவைகளைச் சந்திப்பது மாத்திரமல்லாமல், இவர்களுடைய மேலான நன்மைகளுக்கடுத்த காரியங்கள், மனதிற்கடுத்த காரியங்கள், ஒழுக்கத்திற்கடுத்த காரியங்கள், ஆவிக்குரிய காரியங்களுக்கடுத்த காரியங்கள் தொடர்புடைய விஷயத்தில் அதிகளவிலான பொறுப்புத் தனக்கு இருக்கின்றது என்றும் உணர்ந்துகொள்ள வேண்டும். இது விஷயமான பொறுப்பினை அப்போஸ்தலன் கிறிஸ்துவின் சபையிலுள்ள ஒவ்வொரு மனுஷன் மற்றும் ஒவ்வொரு ஸ்திரீ மீது வைத்திருக்கின்றார் என்றும், சகோதரர் “”A”” அவர்கள் இது விஷயத்தில் சகோதரர் “”B””-யையோ அல்லது சகோதரி “”B””-யையோ விமர்சிக்க வேண்டிய காரியமாகவோ அல்லது சகோதரர் “”B”” அவர்களும், சகோதரி “”B””அவர்களும் இது விஷயத்தில் சகோதரர் “”A”” அவர்களை விமர்சிக்க வேண்டிய காரியமாகவோ, அப்போஸ்தலன் இக்காரியத்தினை வைக்கவில்லை என்றும் நாம் நினைவில்கொள்வோமாக. இம்மாதிரியான விஷயங்களிலும் மற்றும் வேறே விஷயங்களிலும் ஒவ்வொருவனும் நின்றாலும், விழுந்தாலும் தன் எஜமானுக்கே கணக்கு ஒப்புவிக்க வேண்டியவனாய் இருக்கின்றான். நாம் அதிகமாய்க் கீழ்ப்படிவோமானால், நாம் அதிகமாயும் ஆசீர்வதிக்கப்படுவோம் என்பதும், குறைவாய்க் கீழ்ப்படிவோமானால், நம் வளர்ச்சியும் மெதுவாகவே இருக்கும் என்பதும்தான் திவ்விய விதியாக இருக்கின்றது மற்றும் இதை நாம் அறிந்துகொள்வது என்பது, நாம் இந்த யுகத்தினுடைய முடிவை நெருங்கிக்கொண்டிருக்கையிலும், நம் ஓட்டத்தினை நிறைவேற்றி முடிக்கையிலும் மிகவும் முக்கியமானதாகும்.