R4776 (page 73)
2 இராஜாக்கள் 11:1-20
“அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.” (சங்கீதம் 119:2)
யேசபேலின் மகளாகிய அத்தாலியாள் தன் கணவன் மரித்தபோது, கணவனுடைய மரணம் காரணமாய் யூதேயாவின் இராஜ்யத்தினுடைய இராணியானாள் மற்றும் இவள் மகன் அகசியா இராஜாவானான். சீனாவில் போலக் கிழக்கத்திய தேசங்களில் இராஜாவின் தாய்க்கே இன்றும் இராஜ்யத்தில் உயர்ந்த அதிகாரம் காணப்படுகின்றது. இதுவே யூதர்களின் வழக்கமாகும். கணவனின் மரணம் காரணமாய் இராணியான அத்தாலியாள் உண்மை தேவனுக்கும், அவரைத் தொழுதுகொள்ளும் காரியத்திற்கும் எதிராகவும் மற்றும் பாகாலைத் தொழுதுகொள்ளும் காரியத்திற்கு ஆதரவாகவும் ஆற்றல்மிக்க மற்றும் நாசகரமான செல்வாக்கினைச் செயல்படுத்தினாள். இஸ்ரயேலின் இராஜாக்கள் அந்நிய இராஜ்யங்களின் குமாரத்திகளைக் கலப்புத் திருமணம் பண்ணிக்கொண்டதின் விளைவாய் மகாபாதகம் கொண்டுவரப்பட்டதற்கு இச்சம்பவம் ஒரே ஒரு உதாரணமல்ல. இவள் தாயாகிய யேசபேல் மற்றுமொரு குறிப்பிடத்தக்க உதாரணமாவாள். சாலொமோனுடைய அந்நிய மனைவிகளே அவரைக் கண்ணிக்குள்ளாக்கினார்கள் என்பதையும் நாம் நினைவுகூருகின்றோம்.
இவைகள் எல்லாவற்றையும் நாம் காண்கையில், யூதர்கள் மற்றத் தேசத்தாரோடு கலப்புத் திருமணம் செய்யக்கூடாது என்று, யூதர்கள்அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள திவ்விய கட்டளையை நாம் நினைவுகூருகின்றோம். திவ்விய பிரமாணத்தினின்றுள்ள ஒவ்வொரு மீறுதலும், அதன் கடுமையான தண்டனைகளைக் கொண்டுவந்ததாய் இருந்தது. இவ்விஷயங்களானது அந்த ஒரு ஜாதியாருக்கான தேவனுடைய ஏற்பாடு மாத்திரமே இவர்கள் அவருடைய விசேஷித்த சொந்த ஜனங்கள் ஆவார்கள்; மற்ற ஜாதியார் அவருடைய சொந்த ஜனங்களல்ல மற்றும் அவருடைய நியாயப்பிரமாணங்களுக்கு அவருடைய ஜனங்கள் கீழ்ப்படிவார்களானால், அது அவர்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவந்திடும் மற்றும் கீழ்ப்படியாமை என்பது துன்பங்களைக் கொண்டுவந்திடும். இந்தப் பிரமாணமும் இன்னமும் யூதர்கள் மீது காணப்படுகின்றது; ஆனால் மற்றவர்கள் மீதல்ல.
யூதருடைய இந்த நியாயப்பிரமாணத்தினுடைய நிஜம் அல்லது ஆவிக்குரிய அர்த்தமானது அனைவராலும் கைக்கொள்ளப்பட வேண்டும்; அது திவ்விய கண்ணோட்டத்தில் “பரிசுத்த, விசேஷித்த ஜனங்களாய்க்” காணப்படும் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்தும். கிறிஸ்தவர்கள் அந்நிய நுகத்தில் அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படக்கூடாது. கிறிஸ்தவர்கள் உலகத்தைவிட்டு வெளியே வந்து, பிரிந்திருக்க வேண்டும். ஆனால் இது [R4777 : page 74] பெயர்க்கிறிஸ்தவர்களுக்குப் பொருந்துகிறதில்லை மாறாக தங்களைக் கர்த்தருக்கு முழுமையாய் அர்ப்பணம் பண்ணியுள்ளதான ஆவியில் ஜெநிப்பிக்கப்பட்ட வகுப்பாருக்கு மாத்திரமே பொருந்துகின்றதாக இருக்கும். இவர்கள் “கர்த்தருக்குள் மாத்திரமே” – அர்ப்பணிக்கப்பட்டவர்களை மாத்திரமே விவாகம் பண்ணிடுவதற்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளனர். இந்தத் திவ்விய கட்டளையினை மீறுபவர்கள், தங்கள் சொந்த ஆவிக்குரிய வளர்ச்சியினைப் பாழாக்கிடும் அபாயத்திற்குள்ளாகுகின்றன்ர் மற்றும் தங்கள் சொந்தச் சந்தோஷத்தையும், தாங்கள் பிணைக்கப்பட்டுள்ளதான உலகப்பிரகாரமான நபரின் சந்தோஷத்தையும் பாழாக்கிடும் அபாயத்திற்குள்ளாகுகின்றனர்.