R2068 (page 279)
“இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:12)
(R2069 : page 280)
சாலொமோனுடைய வீழ்ச்சி பற்றின கவலைக்கிடமான பாடத்திலிருந்து, ஜீவியத்தினை ஞானமாக, தேவனுக்கு இசைவான நிலைமையில் துவங்கிடுவது மாத்திரம் முக்கியமானதாய் இராமல், அதனை அப்படியே தொடர்வதும், அப்படியே முடித்துக்கொள்வதும் அவசியமானதாகக் காணப்படுகின்றது என்று பார்க்கின்றோம். ஜீவியத்தின் சோதனைகளும், பரீட்சைகளும் வாலிபர்கள்மீது மாத்திரம் கடந்துவராமல், நாமும் ஜீவியத்தில் வளர்ந்து காணப்படுகையில் நம்மீதும் பலமான சோதனைகள் வரவாய்ப்புள்ளது; மற்றும் இவைகளுக்காக, நன்கு நாம் துவங்கின குணலட்சணத்தினை, வளர்த்தி, விருத்தியாக்கி, அனுபவங்களினாலும், சகிப்புத்தன்மையினாலும் வலுப்படுத்திடும் ஆயத்தம் அவசியமாகும்.
நாம் கற்றுக்கொள்ளும் மற்றுமொரு பாடம் திருமணம் பற்றியதாகும் மற்றும் விவாகம் கனமுள்ளதாக இருப்பினும், அது “கர்த்தருக்குள்ளாக மாத்திரம் காணப்பட வேண்டும் என்ற அப்போஸ்தலனுடைய வார்த்தைகளுக்கு முழு இசைவாகக் காணப்படுகின்றது. இந்த அறிவுரையினை அலட்சியம்பண்ணியுள்ள யார் ஒருவனும், தன் அலட்சியம்குறித்து வருந்துகிறவனாய் இருப்பான் அல்லது இதன் காரணமாய் மிகவும் வழித்தவறிப் போனவனாகி, தேவபக்தியினின்றுள்ள தன் வீழ்ச்சியினை உணரமுடியாதவனாய் இருப்பான். தேவையின்போது உதவிசெய்யும் கிருபை உண்டு என்ற கர்த்தருடைய வாக்குத்தத்தத்தினை ஒவ்வொரு கிறிஸ்தவனும் பெற்றிருந்தாலும், வெளியிலிருந்து வரும் சோதனைகளுக்குள் அவன் தானாய்ச் சிக்கிக்கொள்வது ஒருபக்கமிருக்க, அவனது சொந்த அவயங்களிலேயே எதிர்த்துப் போராடிடுவதற்குரிய நிறைய கீழான சுபாவங்களை உடையவனாய் இருப்பான். ஒருவேளை கர்த்தருடைய அறிவுரையை அசட்டைப்பண்ணி, கர்த்தருக்குள் இல்லாத ஒரு கணவனையோ அல்லது மனைவியையோ விவாகம்பண்ணி, ஒருவன் கூடுதலான கீழான சுபாவங்களினால் தன்னைச் சூழப்பண்ணிடுவானானால் – தேவனுடைய இராஜ்யத்தினைப் பிரதானமாய் நாடாமல், பரத்திற்கடுத்தவைகள் மீது தன் கவனத்தை வைக்காமல், பூமிக்கடுத்தவைகள் மீது கவனம் வைத்தானானால் – அவன் இவைகள் தனக்கு மிகவும் பாதகமாய் இருப்பதை நிச்சயமாய்க் கண்டுகொள்ளுவான் – அதாவது இஸ்ரயேலுடைய காணியாட்சிக்கும், திவ்விய வாக்குத்தத்தங்களுக்கும் மற்றும் ஆசீர்வாதங்களுக்கும் அந்நியர்களாய்க் காணப்பட்ட அந்நிய ஸ்திரீகளை மனைவிகளாக்கிக்கொண்ட சாலொமோனுக்குப் பாதகமாய் இருந்தது போல் பாதகமாய் இருப்பதைக் கண்டுகொள்ளுவான்.