R2782 (page 94)
கேள்வி: — மார்ச் 1-ஆம் தேதி, 1900 வருஷத்தின் வாட்ச் டவர் கட்டுரையில் “அர்ப்பணிக்கப்பட்ட இல்லம் கனப்படுத்தப்பட்டது” எனும் தலைப்பின் கீழ்க் குடும்பத்தின் தலைவனென ஒரு கணவன் மற்றும் தகப்பன் கொண்டிருக்கும் பொறுப்புகள் தொடர்புடைய உங்கள் கருத்தினை நான் வாசித்தேன். அந்தக் கட்டுரையில், தங்கள் குடும்பங்களினுடைய தலை ஸ்தானத்தினை நிறைவேற்றாதவர்கள்… தாங்கள் ஜெயம்கொண்டவர்களாக இருக்கின்றார்களா அல்லது இல்லையா முதலியவைக்குறித்துத் தங்களிடமே கேள்வி கேட்டுக்கொள்ள காரணமுண்டு என்று நீங்கள் தெரிவித்திருந்தீர்கள். தங்கள் சொந்தக் குடும்பங்களில் கொஞ்சமே செல்வாக்கு அல்லது கட்டுப்பாட்டினைக்கொண்டிருக்கும் அநேக சகோதரர்களை நான் அறிந்திருக்கின்றபடியால், அக்கேள்வியானது மிகவும் முக்கியமான ஒன்றாக எனக்குத் தோன்றுகின்றது. ஆகையால் நம்முடைய வீட்டார் யாவரும் அர்ப்பணிக்கப்பட நாம் எந்தமட்டும் எதிர்ப்பார்ப்பது நியாயமானதாக இருக்கும் என்று கேட்கின்றேன்?
பதில்: — நீங்கள் எங்களுடைய கருத்தினை முழுமையாகக் கிரகித்துக்கொள்ளவில்லை… குடும்பத்தின் அங்கத்தினர்கள் யாவரும் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்றல்ல, மாறாக குடும்பத்தின் தலை அர்ப்பணிக்கப்பட்டவராகவும், வீட்டின் தலைவனென அவர் கடமைகளையும், உரிமைகளையும் நிறைவேற்றி வருபவராகவும் இருப்பாரானால், இல்லமும், அதன் நிலைமைகளும் அர்ப்பணிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை குடும்பத்தினுடைய அங்கத்தினர்கள் அனைவருமே கிறிஸ்துவுக்குப் புறம்பேயும், கணவன் மற்றும் குடும்பத்தின் தகப்பனுடைய மத கண்ணோட்டங்களுக்கு இசைவற்றும் இருப்பினும்… இவரது பரிவுடன், அன்புடன்கூடிய, அதேசமயம் தன் வீட்டார் விஷயத்தில் வேதவாக்கியங்களின் அடிப்படையிலுள்ள இவரது உறுதியான நடக்கையினிமித்தம் – குடும்பத்தினுடைய அங்கத்தினர்கள் யாவரும் இவரது விருப்பங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்காதளவுக்கும், ஒத்துழைப்பதில் பிரியங்கொள்ளும் அளவுக்கும், இவர் தனது குடும்பத்தின் அங்கத்தினர்கள் யாவரிடமிருந்து அத்தகையதொரு மரியாதையினைச் சம்பாதித்து வைக்கின்றவராய் இருக்க வேண்டும். ஆகையால் ஒருவேளை கர்த்தரோ அல்லது சகோதரரில் ஒருவரோ, அவரது பிரதிநிதிகளோ வீட்டின் வழியே கடந்து செல்வாரானால் மற்றும் குடும்பத்தின் கணவரும், தகப்பனுமானவர் அவரை உபசரிக்க எண்ணினாரெனில், முறையே ஒழுங்குக்குள் காணப்படும் வீடானது தகப்பனாருடைய அர்ப்பணிக்கப்பட்ட மனதினுடைய கட்டுப்பாட்டின் கீழ்க் காணப்படுகையில் அது இவர் வரவேற்க விரும்பிடும் யாவரையும் மிகவும் வரவேற்று, இருதயப்பூர்வமாய் உபசரித்திடும் வீடாயிருக்கும். ஒருவேளை (மனைவியின் சார்பில்) ஏதேனும் அதிருப்தி அடைந்து, எதிர்ப்புத் தெரிவிப்பது என்பது குடும்பத்தினுடைய தெய்வீக நிறுவுதலுக்கு எதிரான குற்றமாய் இருக்கும்; ஏனெனில் எபேசியர் 5:23,24,29,33-ஆம் வசனங்களில் அப்போஸ்தலன் கூறியுள்ளதுபோன்று சபைக்குக் கிறிஸ்து தலையாயிருப்பது போன்று, கணவனும், தகப்பனுமானவரே குடும்பத்தின் தலைவராய் இருக்கின்றார்.
இதில் எதுவும் கணவனும், தகப்பனுமானவரின் சார்பில் தன்னிச்சையாய் நடந்துகொள்வதைக் குறிப்பதாகாது; மாறாக கூடுமானமட்டும் அவர் குடும்பத்தின் நலனுக்கடுத்த காரியங்களைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவும் மற்றும் குடும்பத்தினுடைய ஒவ்வொரு அங்கத்தினனுக்கும் மகிழ்ச்சியினைக் கொடுத்திடவும் அவர் விரும்புவதையே குறிக்கின்றதாயிருக்கும். எனினும் தேவனுடைய பிள்ளையென இவர் தனது குடும்பத்தினருடைய விருப்பங்களுக்கு மேலாக, கர்த்தருடைய விருப்பங்களை வைத்திடுவது, இவரது கடமையாகும் மற்றும் இதனால் இவர் கர்த்தருக்கான தனது மரியாதை மற்றும் அன்பிற்கான வெளிப்பாடாகக் கர்த்தரை அல்லது அவரது சகோதரரை தனது இல்லத்திற்கு உடனே வரவேற்பவராய் இருப்பார். மேலும் இந்த விஷயத்தில் தன் குடும்பத்தார் ஒத்துழைக்கும்படிக்கு அவர்களிடம் கேட்டுக்கொள்கையில், அவர்களால் புரிந்துகொள்ளப்படுகின்றதோ இல்லையோ, தான் அவர்கள் மீது ஆசீர்வாதம் ஒன்றைக்கொண்டு வருவதை இவர் உணர்ந்துகொள்வார்; மேலும் இப்படி நடந்துகொள்ள தவறுவது என்பது, இவர் கர்த்தருடைய மற்றும் தன்னுடைய விருப்பங்களுக்கு மேலாக தன் குடும்பத்திற்கும், அவர்களது விருப்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாகிடும் மற்றும் இப்படிச் செய்திடுவதற்கு எந்த ஒரு “ஜெயங்கொள்பவனும்” ஒரு கணம்கூடச் சிந்திக்கமாட்டான். எனினும் அனைத்தும் வற்புறுத்தல் மற்றும் கட்டாயம் முதலியவற்றின் அடிப்படையில் செய்யப்படாமல், கூடுமானமட்டும் அன்பின் அடிப்படையில் செய்யப்படுவதாக. அனைத்து விதங்களிலும் உங்கள் அன்பு வெளிப்படுவதைக் குடும்பத்தார் காண்பார்களாக மற்றும் கர்த்தருக்கான உண்மை அல்லது கொள்கை சம்பந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும், குணலட்சணத்திலுள்ள உங்களது உறுதியினையும்கூட அறிந்துகொள்வார்களாக.
ஆனால் அதற்கென்று விருந்தாளிகளுக்காய் மனைவியும், குடும்பத்தாரும் கட்டாயப்படுத்தப்பட வேண்டும் மற்றும் நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கப்பட வேண்டும் என்று அர்த்தமாகாது; மாறாக அவர்களைப் பராமரிப்பதும், அவர்களது சௌகரியமும்தான் கணவனுடைய முதலாம் காரியமாகும். குடும்பத்தின் தலைவன் தன்னை, தன் சௌகரியங்களை, சுகங்களைக் குடும்பத்தைப் பராமரிப்பதற்கெனப் பலிசெலுத்திட முடிகிற அளவுக்கு, தன் பராமரிப்பின் கீழ்க் காணப்படுபவர்களுடைய நலனுக்கடுத்த காரியங்கள் குறித்துக் கவனிக்கிறவராக இருக்க வேண்டும். ஆனால் தன்னுடைய புருஷத்துவத்தையே விட்டுக்கொடுத்துவிட்டு, குடும்பத்தில் சமாதானத்தை அடைய நாடுவது என்பது தவறாகும் மற்றும் இது சரியான பாதையில் தான் யாரை நடத்த நாடுகின்றாரோ, அவர்களில் தவறான ஆவியினை அவர் ஊக்குவித்துவிடுகிறதாக இருந்திடும்.
எனினும் எங்கு மேல்கூறப்பட்டுள்ள சரியான வழிப் பார்க்கப்படாமல் தவறான வழிப்பார்க்கப்பட்டு, அதுவே பழகிப்போய் வழக்கமாகியுள்ளதோ, அங்குச் சரியான வழியை மிகவும் கொடுமையான விதத்தில் கையில் எடுக்க நாடாமல், மாறாக மிகவும் தயவோடு நாடுவதும், மேலும் தாழ்மையாயும், பொறுமையாயும், தயவாயும் இருப்பதற்கும் – அன்பு, ஆம் அன்பு மாத்திரமே கட்டுப்பாட்டின் கடிவாளங்களைப் பிடிப்பதற்கும் வேண்டி ஜெபத்தோடு நாடுவதும் ஞானமான காரியமாய் இருக்கும்.