R4521 (page 355)
இந்த யுகத்தின் முடிவில் நிலவும் நிலைமைகள் என அப்போஸ்தலனால் சுட்டிக்காட்டப்பட்டவைகளில் பின்வருபவைகளும் இடம்பெறுகின்றன; அவை – தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாத நிலைமை, அடங்காததன்மை, சுகபோகப்பிரியம், துஷ்டத்தனம் முதலியவையாகும். இத்தருணத்தில் ஏனென்று ஆழமாய் ஆராய்ச்சி நாம் செய்யாமல், இந்த முன்னுரைத்தல்களில் அநேகம் நம் கண்களுக்கு முன்பாக நிறைவேறியுள்ளது என்ற உண்மையினை மாத்திரம் அடையாளம் கண்டுகொள்கிறோம். பெற்றோருக்கான பயபக்தியின்மை என்பது தேவனுக்கும்சரி, மனிதனுக்கும்சரி பயப்படாத அஜாக்கிரதையான நிலைமைக்கு, அதன் சுயநலமான, ஒழுக்கமற்றப் போக்கில் வழிநடத்துகின்றது.
The philadelphia Public அட்டவணையானது, பட்டணங்களில் தெருக்கலவரங்களில் சமீபக்காலங்களில் பங்கெடுத்தவர்களின் புகைப்படங்களானது பதினைந்துமுதல் இருபத்தொரு வயதிற்குள்ளான ஆண்பிள்ளைகளின் புகைப்படங்களாகப் பிரதானமாய்க் காணப்படுகின்றது என்ற உண்மையினைக் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளது. இதைப்போன்று Springfield / ஸ்பிரிங்பீல்டிலும், இரண்டு வருடங்களுக்கு முன்பு இரஷ்யாவிலும், சமீபத்தில் ஸ்பெயினிலும் நடந்த கலகங்களின் பதிவானது காணப்படுகின்றது.
இந்த ஆண்பிள்ளைகள் தவறாக கற்பிக்கப்பட்டிருக்கின்றனர் அல்லது நீதி, மற்றவர்களுடைய உரிமைகள் முதலியவைகள் குறித்துக் கற்பிக்கவே படவில்லை என்பதே பாடமாகும். உலகமானது சுயாதீனம் குறித்த புரிந்துகொள்ளுதலில் மங்கிக்கொண்டு போகின்றது என்று நாம் அஞ்சுகின்றோம். குரங்கிலிருந்து அல்லது ஜீவ அணுவிலிருந்து/ புரோட்டோபிளாசத்திலிருந்து மனிதன் பரிணாமித்தான் என்று போதிப்பதற்கு அதிகநேரம் எடுத்துக்கொள்ளப்படுகின்றது; மேலும் இளைஞர்களுக்கு அவர்களது சொந்த உரிமைகள், மற்றவர்களது உரிமைகள், சட்டம் மற்றும் ஒழுங்கின் அவசியம் முதலியவைகள் குறித்து அறிவுறுத்துவதற்குப் போதுமான நேரம் செலவிடப்படுகிறதில்லை.
[R4522 : page 357]
திவ்விய வழிநடத்துதலின்படி நம்மில் பள்ளிக்கூட ஆசிரியர்களாய் இருப்பவர்களைத் தவிர மற்றபடி நம்மீதோ, நம் வாசகர்கள்மீதோ பள்ளிக்கூடப் பொறுப்பானது காணப்படுகிறதில்லை. எங்கெல்லாம் நமக்குச் செல்வாக்கு இருக்கின்றதோ அச்செல்வாக்கானது நீதியின், நியாயத்தின், நேர்மையின், இரக்கத்தின் சார்பாகப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் நம்முடைய சொந்த இல்லங்களிலும் மற்றும் குடும்பங்களிலும் நம் ஒவ்வொருவருக்கும் மற்றும் அனைவருக்கும் இருபாலின வாலிபப் பிள்ளைகளிடத்தில் முக்கியமான கடமைகளைப் பெற்றிருக்கின்றோம். ஒவ்வொரு பெற்றோர்மீதும் தனது பிள்ளையைப் பராமரிக்கும் காரியமானது தலையாயக் கடமையாகவும், பொறுப்பாகவும் காணப்படுகின்றது. இந்த மாபெரும் பொறுப்பினைச் சரியாய் ஆற்றிடுவதற்கு ஜாக்கிரதையோடும், ஜெபத்தோடும் நாடப்பட வேண்டும் மற்றும் மகா ஞானத்தோடு செயல்படுத்தப்பட வேண்டும். ஒரு குழந்தையை உலகத்தில் கொண்டுவருகையில் பெற்றோர்கள் மாபெரும் பொறுப்பினை ஏற்றுக்கொள்கின்றனர். மேலும் இப்பொறுப்பினை ஒருவன் அலட்சியம்பண்ணுவானானால் “ஜெயங்கொள்ளுகிறவன்” ஆகிட அவன் எப்படி எதிர்பார்த்திடக்கூடும். ஒருவேளை நம்மால் செய்யமுடிந்த அனைத்தையும் நன்றாய்ச் செய்த பின்னரும்கூடப் பிள்ளையானவன் தவறான பாதைக்குச் சறுக்கிடுவானானால் அது மிகவும் வருத்தப்படத்தக்க மற்றும் ஜெபம் ஏறெடுக்கத்தக்கக் காரியமாகும். ஆனால் ஒருவேளை பெற்றோரின் சரியான அறிவுரைகள் இல்லாமையின் காரணமாகப் பிள்ளையானவன் தவறான பாதையில் போவானானால்… இந்தத் துன்பமானது நம்மைக் கண்ணீர் சிந்தவும், வேதனைப்படவும், தெய்வீக மன்னிப்புக்காக ஜெபங்கள் ஏறெடுக்கவும் நம்மை நடத்திட வேண்டும்.
காலை உணவை உண்ண மேஜையில் இருக்கையில் பரலோக மன்னாவை தினந்தோறும் பயன்படுத்திடவும், பிதாவாகிய தேவனிடத்தில் ஏறெடுக்கும் வாக்குறுதியை வாசித்திடவும் மீண்டுமாகக் காவல் கோபுர வாசகர்கள் அனைவருக்கும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்; ஒவ்வொரு நாளையும் துதியுடனும், ஜெபத்துடனும் துவங்கிடவும் நாம் வலியுறுத்துகின்றோம். இன்னுமாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் ஆவிக்குரியவற்றைப் போதிக்கவும் நாங்கள் வலியுறுத்துகின்றோம்.