1HG650 – குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

1HG650

குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்

THE CHIEF CAUSE OF CRIMINALITY

“இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.” (சங்கீதம் 51:5)

நோய்க் கண்டறிதல் என்பது எந்த ஒரு நோயையும் குணமாக்குவதற்கு ஏறெடுக்கப்படும் முயற்சியில் மிக முக்கியமானதாகக் காணப்படுகின்றது. இது நோய் விஷயத்திலும், துர்நடத்தை விஷயத்திலும், மனுக்குலத்தின் எவ்வகையான மற்ற வியாதிகள் விஷயத்திலும் உண்மையாகவே காணப்படுகின்றது. பாவத்தின் ஆரம்பத்தையும், நம் மத்தியிலும், மற்றவர்கள் மத்தியிலும் பாவத்தின் செயல்பாட்டினுடைய வழிமுறையையும் நாம் நன்கு புரிந்துகொள்கையில், அதை நாம் நன்கு எதிர்த்துப் போராடுகிறவர்களாக
இருக்கமுடியும். இந்த வியாதியை அதிகரிக்கப்பண்ணுவது எது என்றும், எவை இந்த வியாதியை அழித்திடும் என்றும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

நம்முடைய முன்னோர்கள் “முழுமையான சீர்க்கேடு” ஏற்பட்டுவிட்டது என்று கூறி தவறு செய்துவிட்டனர். முற்றிலுமாகச் சீர்க்கெட்டுப்போன மற்றும் நீதி மற்றும் உண்மைமீதான விருப்பம் முற்றிலும் இல்லாத மற்றும் அனைத்து நல்செல்வாக்குகளுக்கும் உணர்வற்றுப்போன எந்த ஒரு மனுஷனையும் நாம் யாருமே சந்தித்ததில்லை. “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை” – அனைவரும் பாவிகளாய் இருக்கின்றனர் என்னும் வேதவாக்கிய அறிக்கைக்கு நம் அனுபவங்களும்கூடச் சாட்சி பகர்கின்றது. எனினும் வேதாகமமானது இக்காரியத்தினுடைய அடிவேர்வரையிலும் தெரிவிக்கின்றது; மேலும் பாவத்தின்மீதான மனப்பற்றுதலுடன், பாவ நிலைமையிலேயே நாமும், மனுக்குலம் அனைவரும் பிறந்துள்ளோம் எனும் நம்முடைய ஆதார வசனத்தினுடைய அறிக்கைக்கு, அனுபவமானது சான்றுபகர்கின்றது.

எனினும் தேவன் நம்மைப் பாவிகளாக்கிட்டார் என்றும் நாம் முடிவுபண்ணிடக்கூடாது; ஏனெனில் இக்கருத்திற்கு எதிராகவே வேதத்தின் கருத்துக் காணப்படுகின்றது; மேலும் “அவர் கிரியை உத்தமமானது/நிறைவானது” என்று வேதம் நமக்கு உறுதிப்படுத்துகின்றதாய் இருக்கின்றது (உபாகமம் 32:4; KJV / திருவிவிலியம்). வேதத்தின்படி நாம் நம்முடைய ஜீவன்களை நம்முடைய பெற்றோர்களிடமிருந்து பெற்றுக்கொண்டோம்; நம் பெற்றோர்கள் அவர்கள் பெற்றோர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள்; முதலாவதாகத் தகப்பனாகிய ஆதாமிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. நம் முதலாம் பெற்றோர்கள் பாவஞ்செய்து, திவ்விய தண்டனையாகிய மரணத்தின்கீழ் வந்தார்கள் என்று வேதம் நமக்குத் தெரிவிக்கின்றதாய் இருக்கின்றது; மேலும் இது மனதளவில், ஒழுக்க விஷயத்தில் மற்றும் சரீர அளவில் சீரழிவைச் சுட்டிக்காட்டுகின்றதாய் இருக்கின்றது. “இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்தில் பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று” (ரோமர் 5:12) என்று அப்போஸ்தலன் தெரிவிக்கின்றார்.

நம் சந்ததியின்மீது கடந்துவந்திட்டதான இந்த மரணசாபமும், அது பிறப்புமுதற்கொண்டு நம்மைப் பாதிக்கும் காரியமும் மிகமோசமான நோயாகும். இது நித்திய சித்திரவதையென்னும் சாபமென்று தவறுதலான விசுவாசப்பிரமாணங்களினால் தெரிவிக்கப்பட்ட சாபத்தைவிட மிகவும் நியாயமான சாபமாக இருப்பினும், தேவனுடைய இந்தச் சாபமானது மிகவும் பயங்கரமானதாகவும், உலகம் முழுவதும் காணப்படுகின்றது. “நித்திய சித்திரவதையில் நீ ஜீவிப்பாய்” என்று ஒருவேளை இருந்திருந்தால் இருக்கும் பயங்கரத்தைவிட, “சாகவே சாவாய்” எனும் தண்டனையானது குறைவான பயங்கரமுடையதாய் இருக்கின்றது.

ஆகையால் நம்மிலும், மற்றவர்களிலும் ஒழுக்கமற்றத் தன்மைகளையும், பாவகரமான தன்மைகளையும் நாம் காண்கையில், இவைகள் விழுகை மற்றும் சாபத்திற்கான சாட்சிகள் என்று புரிந்துகொள்கின்றோம்; மேலும் இத்தகைய செல்வாக்குகளின்கீழ்க் காணப்படும் அனைவர்மீதும் அனுதாபங்கொள்ளப்பட வேண்டும். உண்மை அனுதாபமானது பாவத்திற்காக அனுதாபங்கொள்ளாமல், மாறாக பாவநிலையினால் முடமாகியுள்ள பாவியின்மீது அனுதாபங்கொள்கிறது. பாவியின் விடுதலைக்காக வேண்டி, பாவத்தை ஒழிக்கத் தீவிர பிரயாசங்கள் அவசியமாகும்; எனினும் பாவம் மற்றும் மற்றவர்களின் விஷயத்தில் நம்மால் ஏறெடுக்கப்படும் நம்முடைய சிறந்த பிரயாசங்களானது, உண்மைகள்பற்றின அறிவின்மூலமாகவும், தகுதியான அனுதாபம் பாராட்டுதல்மூலமாகவும் பலனடையமுடியும். அனுதாபம் அல்லது மனதுருக்கமில்லாமல் வழங்கப்படும் ஈவிரக்கமற்ற நீதியினால் உதவப்படாமல், மாறாக அனுதாப உதவியில்லாமையின் காரணமாகவே அநேகம் ஜனங்கள் அநேகமாகப் பாதிப்படைந்துள்ளனர். இந்தப் படிப்பினையை நாம் மிகத் தாமதமாகக் கற்றுவருகின்றோம்.

பெற்றோரின் அனுதாபம் அவசியம்

மனுஷீக அனுதாபமானது காரியங்களினுடைய உண்மைப்பற்றின அறிவின் வாயிலாக விரிவடைகையில் சந்தேகத்திற்கிடமின்றி அந்தறிவு பெருக்கத்தினால் பெற்றோர்கள் மற்றும் பிள்ளைகள் இருவருமே ஆசீர்வதிக்கப்படுவார்கள். சரி அல்லது தவறின்மீதான தங்களது பற்றுகள் மற்றும் தங்கள் சொந்த மனநிலைகளானது தங்கள் பிள்ளைகளிடத்தில் ஒன்றில் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ, அவர்களது பிறப்பில் இயல்புகளைப் பதியப்பண்ணிட உதவிடும் என்று பெற்றோர்கள் கற்றுக்கொள்வது அவசியம். பொல்லாத பிள்ளைகளுடைய பெற்றோர்கள் பிள்ளைகளினுடைய இந்தப் பொல்லாப்பிற்குத் தாங்களே அதிகக் காரணம் என்று உணர்ந்துகொள்ள வேண்டும். முறையாய்த் தகவல் அறிந்த நிலையிலும், சரியாய் விருப்பங்கொண்டிருந்த நிலையிலும் இருந்திருப்பார்களானால் பெற்றோர்கள் மிக அதிக அநுகூலமுள்ள மனநிலையுடன் உள்ள பிள்ளைகளைப் பெற்றிருந்திருக்கமுடியும். பிள்ளையின் பிறப்பில் அதனிடம் பதியவைக்கப்பட்டிருக்கும் இயற்கையான இயல்புகளைச் சரிப்படுத்துவதற்கு அதிகளவிலான பயிற்றுவித்தல் அவசியம். உண்மையில் அந்தச் சரிப்படுத்தப்படவேண்டிய இயல்பில் மிகச் சிறுபாகம் மாத்திரமே இந்த ஜீவியத்தில் ஒழிக்கப்படமுடியும்.

“அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை” (யோபு 14 : 4 ) எனும் வேதவாக்கியத்தினை நாங்கள் மறந்துபோகவில்லை. இதை நாங்கள் நினைவில்கொண்டிருக்கின்றோம். மேலும் அபூரணப்பாவியும், துர்க்குணத்தில் உருவாகி, பாவத்தில் கர்ப்பம் தரிக்கப்பட்டதுமான பிள்ளையானது கொஞ்சமோ, அதிகமோ பாவகரமான இயல்புகளைப் பெற்றிருக்கக்கூடும் என்று மாத்திரமே நாம் கூறுகின்றோம். பிள்ளைப் பிறப்பதற்கு முன்னதாகச் செயல்படுத்தப்படும் செல்வாக்குகளின் விஷயத்திலும், பிள்ளைகள் பிறந்த பிற்பாடு அவர்கள் விஷயத்திலுள்ள பெற்றோருக்குரிய கடமைகள் விஷயத்திலும், பாரமான பொறுப்பானது பெற்றோர்கள்மீது காணப்படுகின்றது என்று நாம் தெரிவிக்கின்றோம்.

குழந்தையைப் பிறப்பித்திடும் ஆற்றல்களானது எத்தகைய ஜாக்கிரதையுடனும், தேவன் மற்றும் நீதிக்கான எத்தகைய உண்மையுடனும், இருதயத்தின் தூய்மையும், அருமையான குணலட்சணமும் தக்கவைக்கப்படுவதற்கான எத்தகைய வாஞ்சையுடனும் செயல்முறைப்படுத்தப்பட வேண்டும்! கர்ப்பக்காலத்தின்போது தாயானவளின் மனஅமைதிக்கு, சந்தோஷத்திற்கு, சமாதானத்திற்கு, நீதிக்கு, பயபக்திக்கு, அன்பிற்கு உதவிகரமாய் இருக்கும் நல்செல்வாக்குகளினால் தாயானவளைச் சூழ்ந்திருக்கப்பண்ணுவதில் தகப்பன் எத்துணை ஜாக்கிரதையாகக் காணப்பட வேண்டும்! இப்படிச் செய்தால், உலகமானது இன்னமும் அபூரண நிலையிலும், பாவத்தினால் கறைப்பட்ட நிலையில் தொடர்ந்து இருக்கின்ற நிலையிலும்கூட எத்தகைய நற்குணமுள்ள மனுஷர்கள் பிறப்பிக்கப்படுவார்கள்! ஒருவேளை பெற்றோர்கள் இந்தக் கொள்கைகளை அடையாளம் கண்டுகொண்டும், தங்கள் பொறுப்புகளை உணர்ந்துகொண்டும், அவைகளுக்கிசைவாய் ஜீவித்தும் இருப்பார்களானால், இப்பொழுது நாம் எத்தகைய வேறுபட்ட ஓர் உலகத்தில் ஜீவித்துக்கொண்டிருந்திருப்போம்! மரணமானது எல்லா வாய்ப்புகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்காததற்காய்த் தேவனுக்கு நன்றி! இக்காலத்தில் ஏமாற்றங்கள் மற்றும் கண்ணீர்கள் வாயிலாகக் கற்றுக்கொள்ளப்படும் படிப்பினைகளானது அநேக விதத்தில் எதிர்காலத்தில் பிரயோஜனமாய் இருக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

2HG 226 [தெரிந்தெடுக்கப்பட்ட பத்தி]

கர்த்தருடைய ஜனங்களில், குடும்பங்களின் தலைவர்களாகக் காணப்படுபவர்கள், தங்கள் குடும்பங்களில் தாங்கள் கர்த்தருடைய பிரதிநிதிகளாக அல்லது ஆசாரியர்களாக இருக்கின்றனர் என்றும், தினந்தோறும் குடும்ப ஜெபத்தில் தூபவர்க்கம் ஏறெடுப்பதற்குச் சிலாக்கியம் பெற்றிருக்கின்றனர் என்றும், ஜெபம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை உணரவும், ஜெபத்தின் சுகந்த வாசனையை இயேசுவின் புண்ணியத்தினால் தேவன் முன்னிலையில் எழும்பப்பண்ணுவது மாத்திரமல்லாமல், இப்படியாகக் குடும்பத்தின் அங்கத்தினர்களுக்கும் முன்னிலையில் தாங்கள் குடும்பத்தின் இயற்கையான தலைவர்களாய் இருக்கின்றனர் எனச் சாட்சி பகிரவும் சிலாக்கியம் பெற்றிருக்கின்றனர் என்றும் நினைவில்கொள்ள வேண்டும்; இன்னுமாகக் கர்த்தர் இவர்களின் தலையாய் இருக்கின்றார் மற்றும் கர்த்தரின் ஞானமும், மேற்பார்வையுமே ஜீவியத்தின் அனைத்துக் காரியங்களிலும் – பூமிக்கடுத்த மற்றும் ஆவிக்கடுத்த காரியங்களிலும் நாடப்படுகின்றது என முன்வைக்கவும் சிலாக்கியம் பெற்றிருக்கின்றனர் என்றும் நினைவில்கொள்ள வேண்டும். பெற்றோர் தங்களது சிலாக்கியங்களையும், வாய்ப்புகளையும் இப்படியாகப் பயன்படுத்துதலின்மூலம் ஆசீர்வாதமானது பெற்றோர்மீது மாத்திரம் கடந்துவராமல், இன்னுமாக ஒருவேளை திவ்விய ஆளுகையானது அங்கீகரிக்கப்பட்டு, அதற்கு அடிபணியப்படும்போது வீட்டாரின் அங்கத்தினர்களுக்கும் பிரதி ஆசீர்வாதமானது கடந்துவருகின்றது. இத்தகைய குடும்பங்களில் ஒழுங்கின்மையின் ஆவியானது மிகமிகக் குறைவாகக் காணப்படும் – அதாவது திவ்வியத் தலைமைத்துவமும், ஆளுகையும் அங்கீகரிக்கப்படாத குடும்பங்களில் காணப்படும் ஒழுங்கின்மையின் ஆவியானது இங்கு மிகமிகக் குறைவாகக் காணப்படும்.

2HG 765 [தெரிந்தெடுக்கப்பட்ட பத்திகள்]

நம்முடைய சக மனிதர்களை நாம் கையாளும் விஷயம் அனைத்திலும், நீதி அவசியமென்பது பகுத்தறிவுள்ள மனங்கள் யாவருக்கும் ஏற்புடையதாயிருக்கும். அது தேவனுடைய நியாயப்பிரமாணம் முழுவதையும் உள்ளடக்குகின்றதாய் இருக்கின்றது. அந்த நியாயப்பிரமாணத்தின் சுருக்கமாய்க் காணப்பட்டு, நமது கர்த்தரின் அங்கீகரிப்பைப் பெற்ற அந்த வார்த்தைகள், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக” (லூக்கா 10:27) என்பதேயாகும். இந்த இரண்டு கோரிக்கைகளிலும் நியாயப்பிரமாணமும், தீர்க்கத்தரிசிகளும் முழுமையாய் உள்ளடங்குகிறது. முதலாவதாக நமது சிருஷ்டிகரை நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்; நமக்கு ஜீவனையும், அதன் ஆசீர்வாதங்கள் யாவையும் கொடுத்தவரை நாம் மகிமைப்படுத்திட வேண்டும்; நமக்கும், மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியினை உண்டுபண்ணும் அவரது நீதியான கோரிக்கைகளுக்கு நாம் கீழ்ப்படிதல் உள்ளவர்களாய் இருக்க வேண்டும். மற்றவர்கள் நம் உரிமைகளை அடையாளம் கண்டுகொள்ள வேண்டுமென நாம் விரும்புவது போன்று, நாம் மற்றவர்களுடைய உரிமைகளையும் அடையாளம் கண்டுகொள்வது சரியே. பொன்னான பிரமாணம் என்பது வெறும் நீதியே ஆகும். “நியாயஞ்செய்யுங்கள்” எனும் நமது ஆதார வசனத்தில் இடம்பெறும் வார்த்தை முன்வைக்கும் காரியங்களுக்குக் குறைவானதைச் செய்யும்படிக்கு நாம் கொஞ்சம்கூட அனுமதிக்கப்படுகிறதில்லை. வாருங்கள் சேர்ந்து காரியங்களை நிதானித்துப்பார்க்கலாம். நம்மில் எத்தனை பேர்கள் ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும், நமது தேவன் மற்றும் நமது அயலார்கள் விஷயத்தில் – நீதி செய்திருக்கின்றோம்?
குடும்பத்திலிருந்து துவங்கலாம். ஒவ்வொருவனும் தன் பெற்றோர்களிடத்தில், தன் குழந்தைகளிடத்தில், தன் சகோதரரிடத்தில், தன் சகோதரிகளிடத்தில், தன் கணவனிடத்தில், தன் மனைவியினிடத்தில் தன்னால் பேசப்பட்ட வார்த்தைகளையும், தன்னால் செய்யப்பட்ட கிரியைகளையும் ஆராய்ந்துபார்ப்பானாக. ஜீவியத்தில் நமது உறவுகள் அனைவரின் விஷயத்திலும், இப்படி நமக்கு மிக நெருக்கமானவர்களாகவும், மிக அருமையானவர்களாகவும் காணப்படுபவர்களை நாம் நீதியினுடைய கொள்கைகளுக்கு ஏற்ப, பொன்னான பிரமாணத்திற்கு ஏற்ப நடத்துகின்றோமா? அவர்கள் நமக்குச் செய்ய வேண்டுமென்று நாம் விரும்புபவைகளை, நாம் அவர்களுக்கும் செய்கின்றோமா? ஒருவேளை இல்லையெனில், கர்த்தரோடு உறவுகொள்ள துவங்கின பிற்பாடு, அவருக்குக் கனத்தைக் கொடுக்கவும், அவருக்குக் கீழ்ப்படியவும் நாடினபிற்பாடு, குடும்பத்திலும், ஜீவிதத்திலும் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும், ஒவ்வொரு கிரியைகளையும் நாம் கூர்ந்து கவனிப்போமாக மற்றும் எந்தளவுக்கு அவைகள் சரிசெய்யப்படலாம் மற்றும் நீதியாய்க் காணப்படத்தக்கதாகக் கொண்டுவரப்படலாம் என்று பார்ப்போமாக. பெரும்பான்மையான ஜனங்கள் மாம்ச உறவுகளில் மிகவும் நெருக்கமானவர்களிடத்திலும், அருமையானவர்களிடத்திலும் தாங்கள் எவ்வளவு அநீதியாய் நடந்திருக்கின்றனர் என்று கண்டுபிடிக்கும் போது அதிர்ச்சியடைவார்கள் என்பதில் உறுதியே.

இதோடுகூட உங்கள் அயலார்களின் விஷயங்களில், உங்கள் கூட்டாளிகளின் விஷயங்களில் அன்றாட ஜீவியத்தில் உங்கள் வார்த்தைகள் மற்றும் கிரியைகள் நீதியாய் அல்லது அநீதியாய் இருந்துள்ளதாவெனக் கவனியுங்கள். ஒருவேளை அவர்கள் உங்கள் ஸ்தானத்திலும், நீங்கள் அவர்கள் ஸ்தானத்திலும் இருந்திருந்தால், அவர்கள் பேசியிருப்பது சரி என்று ஒருவேளை உங்களால் அங்கீகரிக்கப்படக்கூடிய அதே வார்த்தைகளை, அதே தொனியில் மற்றும் பாவனையில், நீங்கள் அவர்களிடம் பேசுகின்றீர்களா? தொழில் விஷயத்தில் மற்றவர்கள் உங்களிடம் செய்திட்ட எந்தளவுக்கான பேரம் நீதியானது என்று உங்களால் கருதப்படுமோ, அந்தப் பேரத்தைத்தான் நீங்கள் அவர்களிடம் பண்ணுகின்றீர்களா? இல்லையேல் ஒருவேளை நீங்கள் பொருள் வாங்குபவராகவும், அவர்கள் பொருள் விற்பவராகவும் இருந்தால், பொருட்கள் மற்றும் வேலைகளுக்குமான நீதியான கூலியென்று அவர்கள் கேட்க வேண்டுமென உங்களால் கருதப்படும் கூலியினைத்தான் நீங்கள் அவர்களிடத்தில் கேட்கின்றீர்களா அல்லது அதிகமான விலையினைச் சொல்கின்றீர்களா? ஒருவேளை உங்களுக்குத்
தோட்டம் ஒன்றிருந்தால், அதில் அயலானின் கோழி வந்து நாசம் செய்யாதபடிக்கு அவன் கவனமாயிருக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புவதுபோன்று, நீங்களும் உங்கள் கோழிகள் உங்கள் அயலானின் தோட்டத்தில் நாசம் செய்யாதபடிக்குக் கவனமாய்க் கவனித்துக்கொள்கின்றீர்களா? உங்கள் அயலான் உங்கள் முகத்தின் முன் புகையினை ஊதக்கூடாது என்று நீங்கள் விரும்புவது போன்று, நீங்களும் அயலானின் முகத்தில் புகை ஊதவே கூடாது என்றிருக்கின்றீர்களா? உங்கள் இல்லத்தில் அயலான் பிரவேசிக்கையில், அவன் காலைத் துடைத்துக்கொண்டு வரவேண்டும் என்று நீங்கள் விரும்புவது போன்று, நீங்களும் அயலானின் இல்லத்தில் பிரவேசிக்கையில் காலைத் துடைத்துக் கொண்டு செல்கின்றீர்களா? சகல மனுஷர்களையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும் மற்றும் விலங்குகளையும் அன்பாயும், கனிவாயும் நடத்துகின்றீர்களா? அதாவது அவர்கள் உங்கள் ஸ்தானத்திலும், நீங்கள் அவர்கள் ஸ்தானத்திலும் இருந்தால், அவர்கள் எப்படி உங்களை நடத்துவது நீதியாய், நியாயமாய் இருக்குமென நீங்கள் கருதிடும் தகுதியான விதங்களில், அவர்களை நீங்களும் நடத்துகின்றீர்களா? உங்கள் அயலான் உங்களைக் குறித்து இரக்கமாய்ப் பேசவேண்டும் என்று நீங்கள் விரும்புவது போன்று, நீங்களும் உங்கள் அயலானைக்குறித்து இரக்கமாய்ப் பேசுகின்றீர்களா? அல்லது உங்கள் குறைகளைக் குறித்து அயலான் ஏளனமாய்ப் பேசக்கூடாது என்று நீங்கள் விரும்புவது போன்று, நீங்களும் உங்கள் அயலானின் குறைவுகளைக் குறித்து ஏளனமாய்ப் பேசாமல் இருக்கின்றீர்களா? ஒருவேளை நீங்கள் உங்களது அயலானின் ஸ்தானத்திலும், அயலான் உங்கள் ஸ்தானத்திலும் காணப்பட்டிருந்தால், உங்களைக் குறித்து அயலான் எக்காரியங்களைப் பேசுவது தகுதியானது என்று நீங்கள் கருதுவீர்களோ, அக்காரியங்களையே உங்கள் அயலானின் விஷயத்திலும் நீங்கள் பேசத்தக்கதாக உங்கள் நாவுகளின் மீது கவனமாய் இருக்கின்றீர்களா?