(Q55:2)
கேள்வி (1910)-2- இக்காலத்திற்கும், உபத்திரவ காலத்திற்கும் இடையிலான காலம் குறைவாய் இருக்கின்றது என்பதை அறிந்திருக்கும் நிலைமையிலும், இன்னுமாக எந்தவிதமான மேற்கல்வியிலும் தேவன்மீது நம்பிக்கையின்மை ஏற்படுவதற்கு, வேதத்தின்மீது சந்தேகம் ஏற்படுவதற்கு, எதிர்ப்பதற்கு ஏதுவான இயல்பு உருவாகிவிடும் நிலைமையிலும் – சத்தியத்திலுள்ள ஜனங்கள், அதாவது வேத மாணவர்கள் எந்தமட்டிலும் தங்கள் பிள்ளைகளைக் கல்வி கற்க வைக்க வேண்டும்? இசைக்கலையின் அடிப்படைகளைக் கற்பிப்பதற்கு நீங்கள் பரிந்துரைப்பீர்களா?
பதில் – என் அருமையான நண்பர்களே, பெரும்பான்மையான பிள்ளைகள் பொதுக்கல்வி படிப்பைத் தாண்டி அல்லது இதற்கும் அதிகமாய்த் தாண்டிச் செல்லாமல் இருந்தால் நலமாயிருக்கும் என்பது என் கருத்தாய் இருக்கின்றது. உண்மையில் ஏதேனும் நன்மையினை உண்டுபண்ணும் விதத்திலுள்ள எந்த ஒரு கல்லூரியையும் நான் அறியேன். இந்தியாவிலிருந்து வந்திருந்த ஓர் இளைஞனைக்குறித்து நான் உங்களுக்குக்கூற வேண்டும். அந்த இளைஞனின் தகப்பன் இந்தியாவைச் சேர்ந்தவரும், கிறிஸ்தவத்தை நேசித்தவருமாவார்; மேலும் அந்த இளைஞனுடைய வாக்கின்படி, அவரது தந்தை ஓர் உண்மையுள்ள கிறிஸ்தவன் ஆவார்; மேலும் இந்த இளைஞன் அமெரிக்காவிற்கு வந்து, தனது படிப்பைப் படிக்க மிகவும் ஆசைக்கொண்டிருந்தான். அவரது தந்தைக்கு இந்தியாவிலுள்ள மெத்தடிஸ்ட் சபை மிஷனுடன் தொடர்பு இருந்தது. அந்த இளைஞன் இங்குள்ள மெத்தடிஸ்ட் கல்லூரியில் சேர்ந்தார். படிப்பைப் படித்துக்கொண்டிருந்த நான்கு வருஷங்களில் அந்த இளைஞன் தனது கிறிஸ்தவத்தின் ஒவ்வொரு காரியத்தையும் இழந்துபோனான்; வேதத்தின்மீதான தன் ஒவ்வொரு விசுவாசத்தையும் இழந்துபோனான்; மெத்தடிஸ்ட் கல்லூரியில் படிப்பை முடித்த போதோ வேதத்தைச் சந்தேகிக்கிறவனாய், முற்றிலும் ஓர் அவிசுவாசியாய் வெளியேறினான். பிற்பாடு ஒருமுறை இந்த இளைஞனை வேத மாணவர்களில் ஒருவர் சந்தித்தார் மற்றும் வேத மாநாடுகள் ஒன்றில் கலந்துகொள்ளுமாறு இளைஞன் அழைக்கப்பட்டான். தன்னிடம் பணம் இல்லை என்று இளைஞன் கூறியுள்ளான். அச்சகோதரர்கள் இளைஞனின் (மாநாட்டிற்கு வருவதற்கான பயண) செலவுக்குப் பணம் கொடுத்திருக்கின்றனர். இளைஞன் மாநாட்டில் கலந்துகொண்டான் மற்றும் மிகவும் கவரப்பட்டிருக்கின்றான்… ஆனாலும் இளைஞன் முழுமையாய்த் திருப்தியாகிடவில்லை, காரணம் அந்தளவுக்குத் தன் விசுவாசத்தினை இளைஞன் இழந்துபோயிருந்தான். இளைஞன் இன்னுமாகப் படிக்க வேண்டும் என்றும், வேதாகமப் பாடங்களினுடைய ஆறு தொகுதிகளையும் வாசித்திட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டது. இளைஞன் ஆறு தொகுதிகளையும் வாசித்தான் மற்றும் வாசித்து முடிக்கையில், தான் மறுபடியுமாகத் தேவனையும், வேதாகமத்தையும் கண்டுபிடித்ததற்காகவும், கர்த்தராம் இயேசு கிறிஸ்துவை, தன் இரட்சகராகப் பெற்றதற்காகவும் களிகூருவதாகத் தெரிவித்தான். இளைஞன் இந்தியாவிற்குத் திரும்பிப்போய், அங்குக் கிறிஸ்துவைப் பிரசங்கித்துக்கொண்டிருக்கின்றான்; உண்மையான கண்ணோட்டத்திலிருந்து அவரைக்குறித்துப் பிரசங்கித்துக்கொண்டிருக்கின்றான். இப்பொழுதும் நான் அன்புகூர்ந்திடும் எந்தப் பிள்ளையையும் இழக்க நான் தயாராக இல்லை – என்னுடைய எந்தப் பிள்ளையையும் நான் அன்புகூர்ந்திடுவேன்; ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளையை அன்புகூர்ந்திட வேண்டும் – பிள்ளைப் பெற்றிருக்கும் சிறந்த காரியமாகிய அவனது விசுவாசத்தை இழந்துபோகச் செய்திடும் எதையும் பிள்ளைக்குச் செய்திட நான் விரும்பமாட்டேன். என்னுடைய பிள்ளை உயர்நிலை பள்ளிக்குக்கூடச் செல்வதற்கு நான் சம்மதம் தெரிவிக்கமாட்டேன்; ஏனெனில் கல்லூரிகளில் மாத்திரம் இல்லாமல், சாதாரண உயர்நிலைப் பள்ளிகளிலும்கூட இப்பொழுதுதெல்லாம் வேத விமர்சனங்கள் காணப்படுகின்றது. மனுஷன் குரங்காய் இருந்தான், பின்னர் அவனுக்கு வால் போய்விட்டது என்பது போன்றவைகள் அறிவியல் பாட நூல்கள் என்று அழைக்கப்படும் புத்தகங்களில் காணப்படுகின்றது.
இசைக் கற்கும் விஷயமானது பெற்றோரின் சூழ்நிலையினையும், பிள்ளையினுடைய திறமையையும் சார்ந்துள்ளது என்று நான் எண்ணிடுவேன். பிள்ளைக்கு இசைக்கடுத்த திறமை இல்லையெனில், அப்பிள்ளையை இசைக் கற்க வைக்க முயற்சிப்பது என்பது நேரத்தை வீணடிப்பதாக இருக்கும்; ஆனால் ஒருவேளை பிள்ளைக்கு இசைக்கடுத்த விஷயங்களில் நல்ல திறமைகள் இருக்குமானால்… மேலாக இசை விஷயத்தில் அதிகம் கற்றுக்கொடுப்பது தகுதியாய் இருக்குமா அல்லது இல்லையா என்று நீங்கள் சிந்தித்துக்கொண்டிருந்தாலும், திறமையிருக்கும் காரியமானது, பிள்ளைக்கு இசைக்கடுத்த அடிப்படைகளையாகிலும் கற்றுக்கொடுப்பதற்கு ஏற்றக் காரணமாய் இருக்கும். ஆனால் ஒருவேளை பிள்ளைக்கு இசையில் உண்மையாய்த் திறமையிருக்குமானால் மற்றும் நீங்களும் அடிப்படைகளைக் கற்றுக்கொடுத்திருக்கின்றீர்கள் என்றால்… பிள்ளையின் திறமையானது மீதியைப் பார்த்துக்கொள்ளும். அநேகம் ஜனங்களின் பிரச்சனை என்னவெனில், அவர்களிடம் தாலந்து / திறமை ஏதும் இருப்பதில்லை மேலும் திறமையை உற்பத்திச் செய்வது என்பது மிகவும் பயிற்சி எடுக்கப்பட வேண்டிய காரியமாய் இருக்கும் மற்றும் இப்படிப் பயிற்சி எடுப்பது பெரும்பாலும் அயலார்களுக்கு மிகவும் தொந்தரவாயும் இருக்கும்.