R2984 – முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்

ரீப்பிரிண்ட்ஸ் கட்டுரைகள்
R1554 - அந்நிய நுகத்திலே பிணைக்கப்படாதிருப்பீர்களாக
R1551 - ஸ்திரீ மனுஷனுக்கு உதவியாவாள், துணைவியாவாள்
R4854 - தன் சொந்த வீட்டாரை ஆதரித்தல்
R3088 - பூலோக மற்றும் பரலோக மணவாளன்களுக்கு உண்மையாய் இருத்தல்
R2984 - முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்
R4749 - சுவாரசியமான கேள்விகள்
R4097 - தலையைக் கனப்படுத்துதல் அல்லது கனவீனப்படுத்துதல்
R3826 - ஸ்திரீயானவளின் சரி மற்றும் தவறு
R4190 - கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை நிறைவேற்று
R4899 - அதிருப்தியின் ஆவி
R4458 - உங்களைக்குறித்தும், சபையைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள்
R2488 - கேள்வி, பதில்கள்
R2747 - கேள்வி, பதில்கள்
R2100 - பொதுவான ஆர்வத்தைத் தூண்டும் கேள்விகள்
R797 - குடும்ப ஜெபம்
R4977 - நீதியான கண்டித்தல் மற்றும் தவறை மன்னித்தல்
R5905 - பரத்துக்குரியவைகள்பால் நமது நாட்டங்களைப் பயிற்றுவித்தல்
R2590 - "இயேசு அவனை நோக்கி, எனக்குப் பின்சென்று வா என்றார்''
R5245 - பூரண அன்பு பயத்தை புறந்தள்ளும்
R3805 - ஆண்டவரே ஜெபம்பண்ண எங்களுக்குப் போதித்தருளும்
R3204 - தேவன் ஆச்சரியமான விதத்தில் செயல்படுவார்
R2345 - எலிசா திரும்பக்கொடுத்தலின் வேலையைச் செய்தல்
R4834 - தேவனுடைய ஏற்புடையதாயிருத்தல்
R4917 - அன்பைக் குறித்துச் சுயபரிசோதனை
R5954 - சுவாரசியமான கடிதங்கள்
R4019 - மற்றவர்களுக்கான நமது கடமைகள்
R1275 - அன்பு மற்றும் நீதியின் இனைந்த கோரிக்கைகள்
R940 - இவைகளுக்கும் அதிகமாகவா?
R934 - நான் என்ன செய்யத் சித்தமாயிருக்கிறீர்
R5186 - தேவாலயத்தில் கொண்டிருக்க வேண்டிய நல்லொழுக்கம்
R2688 - அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுகள்
R4093 - சில சுவாரசியமான கடிதங்கள்
R4115 - கர்த்தருடைய சம்பத்தைக் கண்டுபிடித்தல்
R4199 - நன்றி மறத்தல் பாவம்
R5093 - பரிசுத்த ஆவியினுடைய மறுரூபப்படுத்தும் தாக்கம்
R5555 - இராஜரிக அன்பின் பிரமாணம்
R5229 - ஒருமித்து வாசம்பண்ணுதல்
R4871 - ஜீவியத்தின் கடமைகள் விஷயத்தில் கிறிஸ்தவனின் மனோநிலை
R5498 - எப்படி மற்றும் எங்கு நான் ஊழியம் புரிந்திடலாம்?
R2665 - எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல, எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்
R5353 - விவாகம் கனமுள்ளதாகும்
R5900 - விவாகம் மீதான மேய்ப்பரது சில ஆலோசனைகள்
R3786 - வெற்றிக்கு இன்றியமையாதது விசுவாசம்
R5523 - யுரேக்கா டிராமா
R4776 - தன் பேரப்பிள்ளைகளைக் கொன்றாள்
R2068 - சாலொமோனின் பாவங்கள்
R5223 - சிலுவை சுமத்தலே வளருவதற்கான வழி
R3107 - என் உடன்படிக்கையை மீறாமல் இருப்பேன்
R4717 - சில சுவாரசியமான கேள்விகள்
R4959 - விவாகம் பண்ணவேண்டுமா அல்லது விவாகம் பண்ணவேண்டாமா?
R4823 - சிறுபிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்
R5613 - தாவீது இராஜாவின் கொள்ளுப்பாட்டி
R4697 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R4752 - வாட்ச் டவரிலிருந்து ஒரு பார்வை
R3607 - ஒரு துன்மார்க்கத் தகப்பனுடைய நல்ல குமாரன்
R3110 - உம்முடைய ஜனம், என்னுடைய ஜனம்
R2782 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதில்
R5903 / R4399 - மக்கெதோனியனின் வேண்டுகோள்
R5859 - முழுமையான சீர்க்கேடு எனும் உபதேசம் வேதவாக்கியங்களுக்கு முரணானது
R5650 - நாம் நம்மையே நியாயந்தீர்க்கக்கடவோம்
R5700 - நன்றியற்ற கலகவாதியான அப்சலோம்
R5612 - சிம்சோனின் சோகம்
R5571 - விவேகி ஆபத்தைக்கண்டு மறைந்துகொள்ளுகிறான்
R5475 - சித்தத்தில் சுயாதீனம்
R5487 - சுயக்கட்டுப்பாட்டின் அவசியம்
R4839 - திவ்விய நீதி மற்றும் இரக்கம்
R5250 - அழகுள்ள பிள்ளையாகிய மோசே
R4837 - தேவபக்தியுள்ள ஒரு வாலிப இராஜா
R5287 - எனக்குப் பிறன் யார்?
R5214 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R4521 - காவல் கோபுரத்திலிருந்து கண்ணோட்டங்கள்
R4090 - கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன்
R3921 - தேவனுடைய சாயலில் மனுஷன் சிருஷ்டிக்கப்பட்டான்
R3710 - பரிசுத்தர், குற்றமற்றவர், பூரணர்
R3598 - தன் தகப்பனுக்குப் கனவீனமாயிருந்தவன்
R3462 - என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நானும் கனம் பண்ணுவேன்
R3325 - விலை அதிகமுள்ள பேரம்
R3148 - தேவனுடைய ஊழியத்திற்கு எதுவுமே தகுதியானவையல்ல
R2991 - கேள்வி, பதில்கள்
R2558 - இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும் விருத்தியடைந்தார்
R2766 - சுவாரசியமான கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது
R2902 - அழகான குழந்தையாய் இருந்தார்
R2388 - அதை வெறுத்து, அதன் வழியாய்ப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்து போ
R2319 - இழிவான கிறிஸ்தவர்களும், நல்ல அவிசுவாசிகளும்
R2004 - நமது பிள்ளைகளுக்காய் ஜெபங்கள்
R2073 - அனைத்திலும் இச்சையடக்கம் உடையவர்களாய் இருங்கள்
R1963 - உபத்திரவ காலத்தின்போது நமது பிள்ளைகள்
R1142 - பிள்ளைகளுக்கான காவல் கோபுரங்கள்
R5908 - கடைசியாக, சகோதரரே... சிந்தித்துக்கொண்டிருங்கள்
R3267 - என் மகனாகிய அப்சலோமே, என் மகனே
R2279 - யோவான்ஸ்நானன் மற்றும் அவரது கொலையாளிகள்
R5296 - ஏலியின் வாழ்க்கையிலிருந்து நடைமுறை பாடங்கள்
R4942 - ஆலயத்தில் அர்ப்பணிப்பு
R3593 - நாட்கள் பொல்லாதவைகளானதால்
R4192 - இஸ்ரயேல் தவறான நடத்தை
R3393 - ஒரு நல்ல இராஜாவின் தவறு
R3093 - யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்
R2337 - சுவாரசியமான கேள்விகள்
R1882 - குழந்தையாகிய சாமுயேல்
R2365 - யோசபாத்தின் நல்ல இராஜ்யபாரம்
R2847 - ஆபிரகாம் மற்றும் லோத்தின் பரீட்சைகள்
R1671 - உன் வாலிபப்பிராயத்தில்
R2895 - சிறந்த ஒரு மனுஷனுடைய வாழ்க்கையின் முடிவு
R5167 - சொந்த அலுவல்களைப் பார்த்தல்
R2880 - முகாந்தரமில்லாமல் பகைக்கப்பட்டார்
R2885 - துன்பம் எனும் பள்ளிக்கூடத்தில்
R3971 - சகோதரர்களால் பகைக்கப்பட்டவர்
R4401 - பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம்
R5318 - யூகத்தினுடைய ஓட்டப்பந்தயமும்—அதன் மேகம்போன்ற திரளான சாட்சிகளும்
R1096 - தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே-பாகம்-3
R4268 - அன்புடன் கூடய இரக்கம், ஓ! எத்துனை மகத்துவமாய் உள்ளது
R4277 - துரோகம் புரிந்தவரிடத்தில் அன்பு பாராட்டப்பட்டது
பாஸ்டர் ரசல் அவர்களின் பதில்கள்
Q54:1 - பிள்ளைகள் - உபத்திரவ காலத்தின்போது பிள்ளைகள்மீது மேற்பார்வை
Q54:2 - பிள்ளைகள் - நடக்க வேண்டிய வழியில் நடத்தப்படுதல்
Q55:1 - பிள்ளைகளுக்கான ஆயிர வருஷகாலத்தின் ஆசீர்வாதங்கள்
Q55:2 - காலம் குறைவாயிருக்கையில் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கல்வியின் அளவு
Q57:1 - பிள்ளைகள் - கல்வி
Q58:1 - பிள்ளைகளுக்கான உயிர்த்தெழுதலின் தளம்.
Q59:1 - அர்ப்பணம்பண்ணியுள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் ஆவிக்குரிய சுபாவம் அடைதல்
Q59:2 - பிள்ளைகள் - முற்பிதாக்கள் மற்றும் உருவெடுத்துவரும் பிசாசுகள்
Q459:2 - விசுவாசிகளுக்கு - திருமணத்தின் ஏற்புடைமை
Q541:1 - ஜெபம் - நம்முடைய ஜெபங்கள் இல்லாமல் மற்றவர்களுக்கு ஆசீர்வாதங்கள் இல்லை என்பது தொடர்பாக
Q685:1 - ஞாயிறு பள்ளிகளில் சகோதரிகள் போதிக்கலாமா?
Q685:2 - ஞாயிறு பள்ளிகள் - தேவனால் அங்கீகரிக்கப்பட்டவையா?
Q685:3 - ஞாயிறு பள்ளி - சூழ்நிலைகள் வேறுபடலாம்
Q648:2 - துணிகரமான பாவம் - திருத்தப்பட்டன, மன்னிக்கப்பட்டன, மறக்கப்பட்டன
Q803:2; Q825:2 - திருமணம் - அவிசுவாசி விசுவாசியினால் பரிசுத்தமாக்கப்படுதல்
Q129:6 - தொகுதி விநியோகிக்கும் வேலையை, நம்மைச் சார்ந்திருக்கும் குடும்பத்தை வைத்துக்கொண்டு எப்படிச் செய்வது?
Q130:1 - தொகுதி விநியோகிக்கும் வேலை - திருமணம் பண்ணியுள்ளதான உடன் துணையைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்
Q459:1 - விவாகம் - கணவனின் பணத்தைச் செலவு செய்தல்
Q483:2 - கூட்டங்களின் எண்ணிக்கை
Q497:2 - பணம் - எப்படி முதலீடு செய்வது?
Q144:1 - அர்ப்பணிப்பு - சொத்துக்கள் மற்றும் பிள்ளைகள்
Q661:2 - சகோதரிகள் - உணவு அருந்தும் மேஜையில் காணப்படுகையில் ஆசீர்வாதத்திற்காய் ஜெபித்தல்
Q673:2 - உக்கிராணத்துவம் - கடமை மற்றும் சொத்து
Q673:3 - உக்கிராணத்துவத்தில் எதிர்ப்பார்க்கப்படுபவைகள்

பாஸ்டர் ரசல் அவர்களின் மற்றக் கட்டுரைகள்

OV212 - நீ அழாதபடிக்கு உன் சத்த்த்தை அடக்கி, நீ கண்ணீர்வீடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள்
OV229 - பொன்னான பிரமாணம்
1HG650 - குற்றத்தன்மைக்கான பிராதான காரணம்
3HG824 - இயற்கை விதியானது ஆவிக்குறிய தளத்தில் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது

R2984 (page 100)

முதலாவது தேவன் – பின்பு அவர் நியமனங்கள்

GOD FIRST – HIS APPOINTMENTS

இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்… அவரே சபையாகிய சரீரத்திற்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.”” (கொலோசெயர் 1:12-18)

“முதலாவது தேவன்”” என்னும் மேற்கோள் வாசகமே கர்த்தருடைய ஜனங்களுக்கு இந்த வருஷத்தில் பொருத்தமாய் இருக்குமென எங்களுக்குத் தோன்றுகின்றது. அவருக்கு ஒரு முழுமையான அர்ப்பணம், அவருடைய நியமனங்கள் யாவற்றிற்குமான முழுமையான அங்கீகரிப்பு என்பது நமது கர்த்தர் இயேசுவை அடையாளம் கண்டுகொள்கின்றதாய் இருக்கின்றது; நம்முடைய ஆதார வசனம் சொல்வது போன்று, அவரே முதல்வராவார் – அவரே அனைவர் மேலும் ஆண்டவராய் இருக்கின்றார். இந்த மேற்கோள் வாசகமானது, அலிகெனியாவிலுள்ள சபையாரால் இந்த வருஷத்திற்கான வாசகமாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது; தங்களால் இயன்றமட்டும் யார் இந்த மேற்கோள் வாசகத்திற்கு இசைவாய் ஜீவித்திட முயலுகின்றார்களோ, அவர்கள் அதிகமான திவ்விய தயவினை அனுபவிப்பார்கள் மற்றும் இடுக்கமான வழியில் நன்கு முன்னேற்றம் காண்பிப்பார்கள் என்பதும் உறுதியே.

ஆதார வசனமானது, தெய்வீக அரசாங்கம் என்பது ஏகாதிபத்திய / சர்வாதிகார அதிகாரமாக – “”மக்களால், மக்கள் மூலமாய், மக்களுக்காக”” செய்யப்படும் மக்களாட்சிக்கு நேர்மாறான ஒன்றாக தெரிவிக்கின்றது. நாகரிகமடைந்துள்ள நாடுகளினுடைய அரசாங்கங்களை நாம் பார்க்கையில், அரசாங்கம் அதிகம் எதேச்சதிகாரமாய் இருக்கையில், அது அறிவுள்ள ஜனங்களினால் அவ்வளவுக்கு ஆதரிக்கப்படுகிறதில்லை என்று காணலாம். உதாரணத்திற்கு ரஷ்யாவின் (Russian) அரசாங்கம் சர்வாதிகாரம் / எதேச்சதிகாரம் ஆகும்; அதிகாரமானது மன்னனிடம் பெரிதும் காணப்படுகின்றது – அதுவும் அவர் ஜனங்களின் பிரதிநிதியாகிய பாராளுமன்றத்திற்கோ அல்லது காங்கிரசிற்கோ பதில் கூறும் பொறுப்பற்ற விதத்தில் மன்னனிடம் அதிகாரம் காணப்படுகின்றது. பரந்த மனப்பான்மையுடன்கூடிய ஏகாதிபதி ஆட்சிக்கு அநேகமாகச் சிறந்த உதாரணம் – கிரேட் பிரிட்டன் ஆகும்; ஏனெனில் இங்கு மன்னரின் அதிகாரங்கள் வரையறைக்குட்பட்டவைகளாகவே இருக்கின்றது; உயர்க்குடி மக்களின் பிரதிநிதியாய் மேன்மக்கள் மாமன்றமும், பொதுமக்களின் பிரதிநிதியாய் மக்கள் சட்டமன்றமும் காணப்பட்டது; இந்த இரண்டு மன்றங்களும் மன்னரோடுகூட, அரசாங்கத்தினுடைய பொறுப்புகளைப் பங்கிட்டுக்கொள்கின்றது. சம நிலையில் காணப்படும் குடிமக்களைக்கொண்டிருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கத்தில்… குடிமக்கள் அனைவரையும் சமத்துவமானவர்களாய்த் தோற்றத்தில் பெற்றிருக்கும் மற்றும் இவர்களது தெரிந்துகொள்ளுதலின்படியான ஜனாதிபதி குடிமகனை, குடியரசு தலைவராகப் பெற்றிருக்கும் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கமானது… சிறந்த வகை மக்கள் அரசாங்கமாகப் [R2984 : page 101] பார்க்கப்படுகின்றது; இது ஜனங்களுக்கு மிகவும் ஆதரவான – குடியரசாக, மக்களாட்சியாக இருக்கின்றது.

அனுகூலமற்றதாகவும், அறிவுள்ளவர்களால் குறைவாய் மதிப்பிடப்படுகிறதாகவும் உள்ள பூமிக்குரிய அரசாட்சி வகையாகிய எதேச்சதிகாரமானது கிட்டதட்ட, சர்வ வல்லவரால் தம் முழுச்சிருஷ்டிகளின் மீதும் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிவகை போலிருக்கும் என்பது சிலருக்கு விநோதமாக முதலாவது தோன்றலாம். மனுஷீக சுதந்தரங்களுக்கும், மனுஷர் மத்தியில் முன்னேற்றத்திற்கும் மிகவும் சாதகமற்ற ஒன்றாக இப்பொழுது எதேச்சதிகாரம் நிரூபிக்கப்பட்டுள்ளதானால், இவ்வகையான அரசாங்கமானது அண்டசராசரத்திற்கு ஒட்டுமொத்தமாக, சதாகாலங்களிலும் சிறந்த ஓர் அரசாங்கமாக இருக்க வாய்ப்புள்ளதா? ஆம் எனில், வித்தியாசத்தினை எதில் கண்டறிவது? அனுபவம் ரீதியில் மனுஷர் மத்தியில் மோசமானதென நிரூபிக்கப்பட்டுள்ளதான ஒன்று, இறுதியில் சிறந்தது என்று நிரூபணமாகும் என்ற கூற்றினை எப்படிப் பகுத்தறிந்து புரிந்துகொள்வது? வித்தியாசம் என்னவெனில்… அனைத்து மனுஷரும் விழுந்துபோனவர்களாகவும், அபூரணர்களாகவும் காணப்படுகின்றனர்; ஆகையால் மனுஷர்கள் பாவம் மற்றும் சுயநலத்தினுடைய ஆளுகையின் கீழ் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ காணப்படுகின்றனர்; இன்னுமாக அனைவருடைய இருதயங்களும் ஒருவேளை நீதியைச் செய்ய முழுக்க விரும்பிட்டாலும்கூட, அறிவிலும், நிதானிப்பிலும் அபூரணர்களாகவே இருக்கின்றனர். ஆனால் சர்வவல்லவரோ தம் பண்புகளிலும், தம் அறிவிலும் பூரணராய்க் காணப்படுகின்றார்; மேலும் அவருடைய சொந்தப் பிரமாணமும், அவர் சாம்ராஜ்யத்திற்கான பிரமாணமும் – சுயநலத்திற்கு எதிர்மாறாக – அன்பின் பிரமாணமாய்க் காணப்படுகின்றது. நல்நோக்கம் உள்ள எந்தவொரு விழுந்துபோன, அபூரண ஜீவியினுடைய வல்லமையின் கீழ் ஜனங்கள் முழுமையாய்க் காணப்படுவது என்பது நிச்சயமாய் ஆபத்தானதே ஆனால் சகல அறிவும், நீதியும், அன்பும், வல்லமையுமுள்ள ஒரு பூரண ஜீவியினுடைய வழிநடத்துதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ்க்காணப்படுவது என்பது மிகவும் விரும்பத்தக்கக் காரியமாகும். இதுதான் விஷயம்; அதாவது நம்முடைய தேவனாகிய யேகோவா ஒரு சர்வாதிகாரியாவார்; அவரது பிரமாணங்கள் பூரணமானவைகள், நீதியானவைகள், நல்லவைகள் ஆகும் மற்றும் இந்தப் பிரமாணத்தின்கீழ்க் காணப்படும் அவருடைய சிருஷ்டிகள் யாவும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். இந்த ஒரு நிலைமைகளின்கீழ்ப் பரலோகத்தில் இப்பொழுது காணப்படும் எதேச்சதிகாரம், தேவனுடைய அரசாங்கமானது, இருக்கும் அனைத்திலும் பெரிதும் விரும்பப்படுகின்றதாகிவிடும்;; ஆகையால் நம் ஆண்டவர் கூறினது போலவே, “”உம்முடைய இராஜ்யம் வருவதாக; பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவதுபோன்று பூமியிலேயும் செய்யப்படுவதாக”” என்று கூறி இந்த அரசாங்கம் பூமியில் வருவதற்காக நாம் ஜெபிப்போமாக.

நம்முடைய சிருஷ்டிகராகிய யேகோவா தேவன், இந்தத் தம்முடைய ஸ்தானத்திற்குத் தெரிந்தெடுக்கப்படவில்லை என்றபோதிலும், தம் சிருஷ்டிகளுடைய சம்மதத்தின்பேரில் இந்த ஸ்தானத்தினை எடுத்துக்கொள்ளவில்லை என்றபோதிலும் . . . நீதியின் கொள்கைகளுக்கு இசைவாய்க் காணப்படும் அவருடைய சிருஷ்டிகள் அனைவரும், அவரைத் தங்கள் இராஜாவாக, ஆண்டவராக – தங்கள் மீது சர்வாதிகாரியாகப் பெற்றிருப்பதில் பிரியம் கொள்வார்கள் – இவரின் ஒவ்வொரு விருப்பங்களுக்குக் கீழ்ப்படிவது என்பது இவர்களது பிரியமாயிருக்கும். சர்வாதிகாரியென இவர், “”சரீரமாகிய சபைக்குத் தலையாய்”” இருக்கும்படிக்குக் கிறிஸ்து இயேசுவை நியமித்துள்ளார். சபையின் தலையாகக் கிறிஸ்து இருக்க வேண்டுமா அல்லது இல்லையா என்பது பற்றி, நாம் வாக்குகள் (vote) செலுத்தும்படிக்குக் கேட்டுக்கொள்ளப்படவில்லை என்றாலும், இது விஷயத்தில் இந்த ஏற்பாட்டினை ஏற்றுக்கொள்ளும்படிக்கு நாம் வற்புறுத்தப்படுவதில்லை எனும் அளவில், தேவன் நம் சுயாதீனத்தை மதிக்கின்றார். ஒருவேளை ஏற்றுக்கொள்ள நாம் மறுப்போமானால், நாம் சரீரமாகிய சபையின் அங்கத்தினர்களாய் இருப்பதில்லை ஏனெனில் சர்வவல்லமையுள்ளவர் தம் திட்டங்களின்படி செயல்படுகின்றார் மற்றும் அவருடைய திட்டத்திற்குள்ளாக வராதவர்கள், அருளப்பட்ட ஆசீர்வாதங்களைத் தங்களுக்கென்று சுதந்தரித்துக்கொள்ளத் தவறுகின்றவர்களாய் மாத்திரம் காணப்படுவார்கள்.

இதுபோலவே தேவதூதர்கள் மகிமையடைந்துள்ள இயேசுவைத் தங்கள் ஆண்டவராக ஏற்றுக்கொள்வார்களா அல்லது இல்லையா என்று சர்வ வல்லமையுள்ளவர், தேவதூதர்களிடமும் கேட்கவில்லை. தேவன் தம்முடைய விருப்பத்தின் பேரில் நமது கர்த்தராம் இயேசுவை உயர்த்தினார்; காரணம் மரணபரியந்தம், ஆம் சிலுவையின் மரணபரியந்தமுமான இயேசுவின் முற்றிலுமான கீழ்ப்படிதலாகும்; “”ஆதலால் (மரணபரியந்தமான இயேசுவின் கீழ்ப்படிதல் காரணமாய்) தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்”” (பிலிப்பியர் 2:9-11) என்று அப்போஸ்தலன் கூறுகின்றார்.

இதுபோலவே ஆதார வசனம் இடம்பெறும் அதிகாரமானது, நமது கர்த்தராம் இயேசு மனிதனாகுவதற்கு முன்னதாக… ஆரம்பம் துவங்கி… தம் பிதாவினுடைய சிருஷ்டிகள், கிரியைகள், ஏற்பாடுகள் அனைத்திற்கும் தலையாக, பிரதானமானவராக இருந்துள்ளார் என்று தெரிவிக்கின்றது. “”ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது”” (கொலோசெயர் 1:16,17). இது யோவான் எழுதின சுவிசேஷத்தினுடைய 1:1-ஆம் வசனத்தின் பின்வரும் வார்த்தைகளுக்கும் இசைவாகவே இருக்கின்றது: “”ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது”” (யோவான் 1:1).

இதிலிருந்து பரம பிதா துவக்கம் முதல் தமது எதேச்சதிகாரமுள்ள ஆளுகையையே செயல்படுத்தியுள்ளதால்… முழுச்சிருஷ்டிப்பினுடைய வேலையில் தம்முடைய பிரதிநிதியாகக் காணப்படும்படிக்குத் தம்முடைய முதற்பேறான குமாரனைத் தெரிந்தெடுத்துள்ளார் என்று பார்க்கின்றோம். இன்னுமாக இந்த முதற்பேறான குமாரனுக்குத்தான் மனுக்குலத்தின் மீட்பராகிடும் சிலாக்கியம் அல்லது வாய்ப்பு முதலாவதாக ஒரு சிலாக்கியமென அருளப்பட்டது என்றும் பார்க்கின்றோம்; ஏனெனில் மனிதனுடைய மீட்பின் காரியமானது, மனுக்குலத்திற்கான தம்முடைய நீதியை, அன்பை, தம்முடைய ஞானத்தினை மற்றும் தம்முடைய வல்லமையினை வெளிப்படுத்திக் காண்பிக்க வேண்டும் என்று மாத்திரம் இல்லாமல், இன்னுமாக இக்காரியமானது தம்முடைய முதற்பேறான குமாரனுடைய உண்மைக்குமான ஒரு பரீட்சையாக இருக்க வேண்டும் என்றும், இப்படி முதற்பேறான குமாரன் சார்பிலான உண்மையானது முழுமையாய் நிரூபிக்கப்படுவதன் மூலம், அவர் அனைத்திலும் முதல்வராய் இருப்பதற்குரிய பாத்திரவானாய்த் தம்மை நிரூபித்துள்ளப்படியால், தம்முடைய முதற்பேறான குமாரனை இன்னும் மேலான நிலைமைக்கு – அதாவது திவ்விய சுபாவத்திற்கு, “”மகிமை, கனம், அழியாமைக்குக்”” கொண்டு செல்வதற்குக் காரணமாகிடும் என்றும் சர்வவல்லமையுள்ளவர் தம்முடைய எதேச்சதிகாரத்தில் / சர்வாதிகாரத்தில் திட்டம்பண்ணியிருந்தார் என்று பார்க்கின்றோம்.

பிதாவாகிய யேகோவா தமக்கும் மேலாக, கர்த்தராம் இயேசுவை முதல்வராக்கினார் என்று அப்போஸ்தலன் கூறவில்லை. பிதா குமாரனின் கீழ்ச்சகலத்தையும் கீழ்ப்படித்தின பிற்பாடு, “”சகலத்தையும் (இயேசுவுக்கு) அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் (யேகோவா) கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது (சொல்லிக்கொடுக்கப்பட வேண்டியதில்லை)”” என்று அப்போஸ்தலன் கூறியுள்ளதை நாம் எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும் (1 கொரிந்தியர் 15:27). ஆகையால் தேவன் முதன்மையானவர் ஆவார் மற்றும் நமது கர்த்தராம் இயேசு நமக்குச் சபையின் தலையானவரென முதல்வராவார்; காரணம் தேவன் தாமே இந்த முதல்வர் நிலைமையினை அவருக்குக் கொடுத்திருக்கின்றார். இயேசுவின் முழுமையான அதிகாரத்தையும், சபையின் அவருடைய தலைமைத்துவத்தையும் அடையாளம் கண்டுகொள்கையில், இவரை இப்படிக் கனப்படுத்தினவரை நாம் கனப்படுத்துகின்றவர்களாய் இருப்போம்; இப்படியாக நாம் தேவனை முதன்மையாய் வைக்கின்றோம்; நமது கர்த்தர் தெரிவித்துள்ளது போன்று, “”குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்”” (யோவான் 5:23). மனுஷர் இவர்கள் இருவரையும் குழப்பிக்கொள்ளக்கூடாது, மாறாக பிதாவையும், குமாரனையும் தொழுதுகொள்ள வேண்டும், ஆராதிக்க வேண்டும் மற்றும் இவர்களுக்குக் கீழ்ப்படிந்திட வேண்டும்; ஏனெனில் குமாரன் தம்முடைய சொந்தச் சித்தத்தை நாடுகிறவரும், செய்கிறவரும் அல்ல, மாறாக இவரை அனுப்பினவரும், தம்முடைய சிருஷ்டிகள் சகலவற்றின்மீதும் இவரை முதல்வராக உயர்த்தினவருமான பிதாவின் சித்தத்தையே இவர் நாடிச் செய்கின்றார். இந்த உறவினை அப்போஸ்தலன் – ஸ்திரீக்குத் தலைப் புருஷன் மற்றும் புருஷனுக்குத் தலைக் கிறிஸ்து மற்றும் கிறிஸ்துவுக்குத் தலை யேகோவா தேவன் என்று கூறினபோது, முழுமையாகவும், அழுத்தம் திருத்தமாகவும் விவரித்துள்ளார் (1 கொரிந்தியர் 11:3).

மனுஷர்கள் மத்தியில் இன்று காணப்படும் கட்டுப்பாடுகளற்ற அரசாங்கங்களில் களிகூரப்படுகிறதைக் காண்கையில், பிரசித்திப்பெற்றுத் திகழும் அரசாங்கங்கள் தற்கால சூழ்நிலைகளின் கீழ் மிகவும் விரும்பப்படத்தக்கது என்று எண்ணப்படுவதைக் காண்கையில், காரியங்கள் இப்படியாக இருப்பதற்குக் காரணம்… தற்கால சூழ்நிலைகள் தீமையாய் இருப்பதினால் மாத்திரமே என்றும், [R2985 : page 102] சுயநலமே மனுஷர் மத்தியில் ஆளும் சட்டமாய் இருக்கின்றது என்றும், ஒரு நபருடைய அல்லது ஒரு வகுப்பாருடைய சுயநலமான சுபாவங்களைப் பார்க்கிலும், ஜனக்கூட்டத்தாரின் சுயநலமான விருப்பங்களும், சுபாவங்களும், ஒட்டுமொத்த ஜனத்திற்குப் பாதுகாப்பாய் இருக்குமென நம்பப்படலாம் என்றும் நாம் அடையாளம் கண்டுகொள்கின்றோம். ஆகையால் இந்தத் தேசங்களினுடைய அரசாங்கங்களிலும், இந்த அரசாங்கத்தின் கீழ் நமக்குக் கிடைக்கும் அனுகூலங்களிலும் நாம் களிகூருகிற அதே வேளையில், தேவன் வாக்களித்துள்ளதும், அவருடைய சித்தத்தை ஒரே சட்டமாகவும், அவருடைய பிரதிநிதியைப் பூமி எங்கும் இராஜாவாகவும் பெற்றிருக்கும் தேவனுடைய அந்த மகிமையான இராஜ்யத்திற்காகவே நாம் தொடர்ந்து ஜெபம்பண்ணிக் கொண்டிருக்கின்றோம்.

சபையில் தெய்வீகப் பிரமாணம் அல்லது தேவனுடைய ஆட்சியானது ஏற்கெனவே கொஞ்சம் நிறுவப்பட்டுள்ளது. நாம் மனுஷர்களால் ஸ்தாபிக்கப்பட்டு, சபைகள் என்று அழைக்கப்படுபவைகளைக் குறித்து இங்குப் பேசிடவில்லை, மாறாக “”பரலோகத்தில் பெயர்கள் எழுதப்பட்டவர்களும்”” மற்றும் சரீரமென அதன் அங்கத்துவத்தையும், தலைமைத்துவத்தையும், அவர்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள தலையாகிய கர்த்தர் இயேசுவினால் வழிநடத்தப்பெற்றவர்களுமான சபையைக்குறித்தே இங்குக் குறிப்பிடுகின்றோம். மனுஷர்கள் மத்தியில் காணப்படுகின்றதான மத அமைப்புகளைப் பொறுத்தமட்டில், நம் சந்ததியினருடைய பெலவீனம் காரணமாயும், சிறந்தவைகள் கூடச் சுயநலமான நோக்கங்களினால் அசுசிப்படுத்தப்பட்டுள்ள உண்மையின் காரணமாயும், பெயர்ச்சபை நிர்வாகங்களினுடைய சர்வாதிகார அமைப்பானது மிகவும் பொல்லாதவையாகவும், அந்தச்சபை நிர்வாகத்தினுடைய ஜனங்கள் அமைப்பானது கொஞ்சம் குறைவாய்ப் பொல்லாதவையாகவும், அதாவது அரசியல் அரசாங்கங்களைப் போன்றே காணப்படுகின்றது. தம்முடைய சபைக்கான கர்த்தருடைய ஏற்பாடானது, இரண்டு அமைப்புகளுடைய கூட்டமைப்பாகும். (1) வழிநடத்துபவர்களைத் தேர்ந்தெடுக்கும் காரியமானது அங்கத்தினர்களுடைய கணிப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றது என்ற விதத்தில் அது மக்களாட்சியாய் இருக்கின்றது. (2) அங்கத்தினர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் (வாக்குகள் / votes) விஷயத்தில் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளைச் செயல்படுத்தாமல், இது விஷயத்தில் தங்கள் தலையானவராகிய கர்த்தருடைய சித்தத்தை உறுதியாய் அறிந்துகொள்வதற்குத் தங்களது சிறந்த அறிவினைப் பயன்படுத்திட வேண்டும் என்ற விதத்தில் அது தேவனுடைய ஆட்சியாய் இருக்கின்றது. இது தற்கால சூழ்நிலைகளின் கீழ்க் காணப்படும் மற்றும் மிகவும் இணக்கமுள்ள, எளிமையுள்ள, கற்பனைப் பண்ணிப்பார்க்க முடிகிற அளவுக்கு நல்லதொரு ஏற்பாடாகும். சபையின் ஒவ்வொரு நபரும், கிறிஸ்துவின் “”சரீரத்திலுள்ள”” ஒவ்வொரு அங்கத்தினனும் தன் இருதயத்தில், “”முதலாவது தேவன் மற்றும் தம் மந்தைக்குக் கண்காணியாக அல்லது மேய்ப்பனாகத் தேவனால் கிறிஸ்து நியமிக்கப்பட்டுள்ளப்படியால், இவரும், இவர் சித்தமும் நம்முடைய சிந்தனைகளில், நம் இருதயங்களில், நம் வார்த்தைகளில், நம் கிரியைகளில் முதன்மையாகக் காணப்பட வேண்டும்”” என்று சொல்லிக்கொள்ள வேண்டும். நம்மால் முடிந்தமட்டும் அவர் சித்தத்தை அறிந்துகொண்டு, அதைப் பின்பற்றிட வேண்டும்; அவர் வார்த்தைகளை நம்மால் புரிந்துகொள்ள முடிகிற அளவிற்கேற்ப, நாம் அவர் வார்த்தைகளைப் பேசிட வேண்டும்; மேலும் வழிநடத்துபவர்களைத் தெரிந்துகொள்ளும் விஷயத்தில் நம்முடைய சொந்தச் சித்தமல்ல, அவர் சித்தமே கட்டுப்பாட்டினைப் பெற்றிருத்தல் வேண்டும். இப்படியாகவே சபையில் – சரீரத்தில் – அதன் நலனுக்கடுத்த காரியங்கள் மற்றும் விஷயங்கள் அனைத்திலும் – தேவன் முதன்மையானவராகவும், அவருடைய பிரதிநிதியாகிய கிறிஸ்து முதல்வராகவும் வரிசையில் காணப்பட வேண்டும் – அதுவும் இது கிருபையிலும், திவ்விய சித்தம் குறித்த அறிவிலும் ஒவ்வொரு அங்கத்தினனும் வளருவதற்கேற்ப ஆகும். இப்படியாகத் தேவன், தம்முடைய உண்மையுள்ளவர் வாயிலாக, தம்முடைய திருவுள சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சபையில் வைத்தார் (1 கொரிந்தியர் 12:18). இது கர்த்தருடைய ஜனங்கள் காணப்படும் ஒவ்வொரு சிறுசிறுக் கூட்டத்திற்கும், ஒட்டுமொத்த சபைக்கும் அவர்கள் அவருடைய சித்தம் மற்றும் வசனத்திற்கு இசைவாக – தேவனை முதன்மையானவராகவும், தலையாகிய கிறிஸ்துவை முதல்வராகவும் வைத்துக்கொள்வதற்கேற்ப பொருந்துகின்றதாய் இருக்கும்.

இதே கொள்கையானது, சபையையும் தாண்டி, கர்த்தருடைய ஜனங்களின் இல்லங்களுக்கும் பொருந்துகின்றதாய் இருக்கின்றது. இங்கும் தேவன் முதன்மையானவராகவும், அவரது பிரதிநிதியாகிய கிறிஸ்து பிரதானமானவராகவும் / முதல்வராகவும் காணப்பட வேண்டும். ஒருவேளை குடும்பத்தின் தலைவன், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஓர் அங்கமாய் இருப்பாரானால் மற்றும் இவர் கிறிஸ்துவை தன தலையாக அடையாளம் கண்டுகொள்வாரானால்… குடும்பத்திலும், சபையிலும் அவரது பிரமாணங்களை இவர் அடையாளம் கண்டுகொள்பவராய் இருத்தல் வேண்டும். கிறிஸ்துவின் பிரமாணங்களை அடையாளம் கண்டுகொள்ளும் குடும்பத்தலைவன், ஒழுங்கின்மைக்கு – அக்கிரமத்திற்கு ஏதுவான அனைத்தையும் எதிர்த்திட வேண்டும்; யேகோவா தேவனாகிய சர்வாதிகாரியை – நியாயப்பிரமாணிக்கரை – அவரது சர்வாதிகார பிரதிநிதியாகிய கிறிஸ்து இயேசுவை – அவருடைய சரீரத்தின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் அவர் முன்வைத்திடும் அன்பின் பூரண பிரமாணத்தினை – குடும்பத்திற்கு முன்பும், தனக்கு முன்பும் குடும்பத்தலைவன் நிலைநிறுத்திட வேண்டும்; இந்த அன்பின் பூரண பிரமாணமானது, அவர்களின் இருதயங்களைப் பூரணமாயும், அழிவுக்கேதுவான சரீரங்களையும், அவர்களால் அனுமதிக்க முடிகிற மட்டும் ஆளத்தக்கதாக, இந்த பிரமாணத்தினை அவருடைய சரீரத்தின் அங்கத்தினர்கள் அனைவருக்கும் கர்த்தர் முன்வைத்துள்ளார். ஒவ்வொரு குடும்பத்திலும் பிரமாணத்தினுடைய ஆளுகையானது, வார்த்தையினாலும், மாதிரியினாலும் செயல்படுத்தப்பட வேண்டும்; அன்பினால் ஏவப்படும், அன்பினால் செயல்படுத்தப்படும் மற்றும் கூடுமானவரை எல்லா அன்பு மற்றும் உதவிபுரியும் செல்வாக்கோடுகூட வரும் அன்பின் பிரமாணமாக அது காணப்பட வேண்டும் என்பது ஒருபோதும் மறந்துபோகப்படக்கூடாது.

இதன் அர்த்தமென்னவெனில், கிறிஸ்துவைத் தனது தலையாக அடையாளம் கண்டுகொண்டுள்ள சபையின் ஒவ்வொரு அங்கத்தினனும், கூடுமான மட்டும் தன் குடும்பத்திலும் தேவனுடைய சித்தத்தைச் செய்திட நாடிட வேண்டும்; இன்னுமாக ஒருவேளை அவன் ஏற்கெனவே குடும்ப ஜெப ஒழுங்கினை ஏற்படுத்திக்கொள்ளவில்லையெனில், கூடுமானமட்டும் விரைவாய் அதைச் செய்திடுவானாக. ஒருவேளை வேலை அல்லது தொழில் காரணமாக தினந்தோறும் குடும்ப ஜெபங்களை அவனால் பெற்றிருக்க முடியவில்லையெனில், அவற்றை வாரம் ஒருமுறை அவன் பெற்றிருக்கலாம் மற்றும் இப்படியாய் வெளிப்படும் நல்நோக்கங்களையும், சிறந்த பிரயாசங்களையும் கர்த்தர் ஏற்றுக்கொள்வார் என்று நாங்கள் நம்புகின்றோம். ஒருவேளை தேவனால் குடும்பத்தின் தலைவனாக நியமிக்கப்பட்டுள்ள புருஷன், கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினனாய் இல்லையெனில்… கிறிஸ்தவளாய் இருக்கும் மனைவியானவள் இது விஷயத்திலுள்ள திவ்விய பிரமாணத்தினை – அதாவது புருஷனே, மனைவி மற்றும் குடும்பத்திற்கான தலைவனாக இருக்கின்றார் என்றும், தனது கணவன் வெளிப்படுத்தியுள்ளதான விருப்பத்திற்கு எதிராக எந்த விதத்திலும் குடும்ப ஜெபத்தினை ஒழுங்குப்படுத்திடக்கூடாது என்றுமுள்ள திவ்விய பிரமாணத்தினை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். தனது கணவன், ஏற்பாட்டிற்கு ஒத்துக்கொள்வதற்கென, அவள் கர்த்தருடைய ஆசீர்வாதத்தினையும், வழிநடத்துதலையும் மற்றும் நன்மைக்கேதுவாய் மாற்றிடும் வழிநடத்துதலையும் நாடி எதிர்ப்பார்த்து, பலன்களுக்காய்க் காத்திருக்க வேண்டும். கிறிஸ்தவனாய் இராத கணவன், ஆனாலும் ஒழுக்க விஷயத்திலும், பக்தி விஷயத்திலும் ஈடுபாடுள்ள கணவன் இந்தச் சூழ்நிலைகளின் கீழ்த் தனது ஸ்தானத்தினுடைய பொறுப்பினை உணர்ந்துகொள்வார்; மனைவியின் ஞானமுள்ள மற்றும் தன்னடக்கமுள்ள மற்றும் சிறந்த நடக்கையானது கணவனால் பெரிதும் மதிக்கப்படும்; காரணம் இது விஷயத்திலுள்ள அவளது தன்னடக்கமாகும்; மேலும் இது அவளும், தானும் கீழ்ப்பட்டிருக்க வேண்டியதான மேலான பிரமாணத்திற்கும், நியாயப்பிரமாணிக்கருக்கும் அவள் கீழ்ப்பட்டிருக்கின்றாள் என்று கணவனுக்குக் கிடைத்திருக்கும் நிரூபணமாகும்.

தேவனை முதன்மையானவராகவும், அவரது பிரதிநிதியாகிய கிறிஸ்துவைப் பிரதானமானவராகவும் நாம் வைத்திருத்தல் என்பது, உலகத்தில் நாம் தொடர்புக்குள் வருகிறவர்களுடனான நம்முடைய தொழில் நடவடிக்கைகளிலும்கூடத் தாக்கத்தினைக் கொண்டிருக்க வேண்டும்; இதனால் நாம் வாங்கினாலும், விற்றாலும் அல்லது எதைச் செய்தாலும்… நாம் யாரைப் பிரியப்படுத்த நாடுகின்றோமோ அவருடைய பார்வையிலும், நம்முடைய இருதயங்களில் யாரைப் பிரதானமானவராய்க் கொண்டிருக்கின்றோமோ அவருடைய பார்வையிலும்… பிரியமாய் இருப்பவைகளையே செய்திட எப்போதும் நாடிக்கொண்டிருக்க வேண்டும் என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும். இது சுயநலம் குறைவடைகிறதையும் மற்றும் அன்பு அதிகரிக்கிறதையும், குறுகிய மனப்பான்மை குறைவடைகிறதையும், [R2986 : page 102] அனைவர்மீதும் பெருந்தன்மையின் பண்பு பெருகுவதையும் குறிக்கின்றதாய் இருக்கும் மற்றும் பலனானது நமது ஆண்டவர் கூறியிருக்கிறது போன்றிருக்கும் – அதாவது “”இவ்விதமாய் மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது”” (மத்தேயு 5:16).

தேவனை முதன்மையாக வைத்தும், ஜீவியத்தின் காரியங்கள் அனைத்திலும் அவரது நியமங்களை, பிரமாணங்களை, சித்தங்களை அடையாளம் கண்டுகொண்டும் இருக்கும் காரியமானது மேல்கூறப்பட்டுள்ள செல்வாக்குகளை / தாக்கங்களைச் சபையின் காரியங்களிலும், இல்லம் மற்றும் குடும்பத்தினுடைய காரியங்களிலும், தொழில் காரியங்களிலும், உலகத்தோடு உள்ள தொடர்பின் காரியத்திலும் செயல்படுத்திட்டாலும், பிரதான செல்வாக்கானது நம்முடைய சொந்த இருதயங்களிலும், ஜீவியங்களிலுமே நிச்சயமாய்க் காணப்பட வேண்டும். பொதுவாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டுள்ள காரியங்கள் யாவற்றிலும் கிறிஸ்துவின் சித்தமே பிரதானமாயிருக்க வேண்டும் என்ற எண்ணமும், நம்முடைய அன்பின் விஷயத்தில் தேவனுக்கே முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற எண்ணமும், நம்முடைய செல்வாக்கு, நம்முடைய சந்தோஷங்கள், நம்முடைய இன்பங்கள், நம்முடைய நம்பிக்கைகள், நம்முடைய இலட்சியங்கள் விஷயத்தில் அவரது ஆசீர்வாதம் காணப்பட வேண்டும் என்ற எண்ணமும் – எத்தகையதொரு ஆசீர்வாதத்தினைக் கொண்டு வருகின்றதாயிருக்கும்! எத்தகைய தேவபக்தியினையும், ஆவியினுடைய கனிகள் மற்றும் கிருபைகளினுடைய விஷயங்களில் எத்தகையதொரு வளர்ச்சியினையும் கொண்டுவருகின்றதாயிருக்கும்! கிறிஸ்துவைப் பிரதானமானவராய்க் கொண்டிருக்கும் காரியமானது, ஜீவியத்தின் கிரியைகளையும் மிகவும் விரைவாய்த் தாண்டி, நம்முடைய வார்த்தைகளிலும் அதன் தாக்கத்தினைக் கொண்டிருக்கின்றது. உண்மை கிறிஸ்தவன் என்பவன் தான் தயவுடன் நடந்துகொள்வதில் கர்த்தர் பிரியப்படுவார் என்று நம்புவது போன்று, தயவுடன் நடந்துகொள்ள மாத்திரம் நாடிடாமல், கூடவே தயவாயும், இரக்கமாயும், தன்னடக்கமாயும், தாழ்மையாயும் பேசிடவும் நாடி, இப்படியாக இருளினின்று ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு நம்மை வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கிறவனாயும் இருப்பான். கர்த்தருடைய போதனைகளை நம்முடைய வார்த்தைகளிலும், நம் ஜீவியத்தின் கிரியைகளிலும் மாதிரித்துவம் பண்ணுவதைவிட மனுஷர் மத்தியில் அவர் நாமத்திற்கு நம்மால் வேறு எந்தச் சிறந்த மரியாதையையும், துதியையும், மகா கனத்தினையும் செலுத்திட முடியாது.